செவ்வாய், 22 அக்டோபர், 2013

WORLD CHESS CHAMPIONSHIP MATCH IN CHENNAI

இதுதான் ஹியாத் ரிஜென்சி ஓட்டல் 

உலக சதுரங்கப் போட்டி!
முதல் முதலாக இந்தியாவில்!!
அதுவும் சென்னையில்!!!
---------------------------------------------------
இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்தும் (43) 
நார்வேயின் மக்னஸ் கார்ல்சென்னும் (22)
மோதும் உலக சதுரங்க சாம்பியன் போட்டி 
முதல் முதலாக இந்தியாவில், அதுவும் சென்னையில் நடக்க இருக்கிறது.

நவம்பர் 6 முதல் நவம்பர் 26 வரை இப்போட்டி நடைபெறும்.
போட்டி நடைபெறும் இடம், சென்னை தேனாம்பேட்டையில் 
(அண்ணா  சாலை) உள்ள ஹயாத் ரிஜென்சி  ( HYATT REGENCY)
எனப்படும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் இப்போட்டி நடைபெற உள்ளது.

83 கிரவுண்டு பரப்பளவில் அமைந்த இந்த ஓட்டல்/விடுதியில் 
327 அறைகள் உள்ளன. சதுரங்க உலகமே போட்டியின் போது
இந்த ஓட்டலில் திரளும். 

இந்தியாவில் சதுரங்க விளையாட்டை முன்னேற்ற, 
இப்போட்டிசென்னையில் நடப்பது பெரிதும் உதவும்.   

கார்ல்சென்னா, ஆனந்தா?
பொறுத்திருப்போம்!

SCIENCE MEETING... PLEASE ATTEND.

NEWTON SCIENCE CLUB
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------------------------------------------ 
தொடர்புக்கு: ilangophysics@gmail.com
----------------------------------------------------------------------------------------------------------------------------------
அறிவியல் கூட்டத்துக்கு வருக!
-------------------------------------------------------------------------------- 
இடம்: அன்னை மணி அம்மையார் அரங்கம்,
             பெரியார் திடல், தினத்தந்தி அலுவலகம் அருகில்,
              வேப்பேரி, சென்னை 007

நாள்: 24/10/2013 வியாழன் 
நேரம்:மாலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை.

பொருள்: பிரபஞ்சம் தோன்றியது எப்படி? 
                   ஓர் அறிவியல் விளக்கம்.

சொற்பொழிவாளர்: 

பி. இளங்கோ சுப்பிரமணியன் 
இயக்குனர்,
நியூட்டன் அறிவியல் மன்றம்,
சென்னை.

கூட்ட ஏற்பாடு: பெரியார் நூலக வாசகர் வட்டம் 

குறிப்பு:
 இது முற்றிலும் அறிவியல் சொற்பொழிவு.
              இது முழுமையான ஒரு மணி நேர உரை. 
              மாலை 6.45 மணி முதல் 7.45 மணி வரை 
              தோழர் இளங்கோ பேசுவார்.

பேசுபொருள்:

பெருவெடிப்புக் கொள்கை என்றால் என்ன?
ஹிக்ஸ் புலம், ஹிக்ஸ் துகள் என்றால் என்ன?
ஸ்டாண்டர்ட் மாடல் என்றால் என்ன?
குவார்க்குகள், குளுவான்கள் முதலிய துகள்களின் பண்பு என்ன? 
பொருள்கள் நிறையைப் பெறுவது எப்படி?
நடப்பாண்டின் இயற்பியல் நோபல் பரிசு
பிரபஞ்சம் தோன்றியது எப்படி?
இயங்குவது எப்படி?
பிரபஞ்சத் தோற்றத்தில் கடவுளுக்கு
ஏதேனும் பங்கு உண்டா?

அனைவரும் வருக!
நேரத்துடன் வருக!!

அன்புடன் அழைக்கும்,
 நியூட்டன் அறிவியல் மன்றம் 
பெரியார் நூலக வாசகர் வட்டம்  
                             

வியாழன், 17 அக்டோபர், 2013

DEATH PENALTY COMMUTTED TO LIFE IN NAINA SAHANI CASE

தலைவாழை இலையில்
லட்டும் ஜிலேபியும் பாதாம் அல்வாவும்!
-------------------------------------------------------------------- 

கொடுத்து வைத்தவர்கள்தான் அவர்கள்!
யார்? மரண தண்டனை எதிர்ப்புப் போராளிகள்!


ஒன்றல்ல, இரண்டல்ல;
16 மரண தண்டனைகளை
பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்து இருக்கிறது.
தூக்கில் தொங்கி, நாக்கு வெளித்தள்ளிச்  
செத்துப் போய் இருக்க வேண்டிய

16 குற்றவாளிகள்
தப்பித்து விட்டார்கள். 

சிறையில் இருந்து விடுதலை ஆன
அத்தனை பேரும் உயர் நீதிமன்றம் வழங்கிய
நிரபராதிகள் என்ற பட்டத்துடன்

தெருக்களில் திமிருடன் நடந்து செல்கிறார்கள்.
58 தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட
லட்சுமண்புர் பதே வழக்கில் பாட்னா உயர்நீதிமன்றம்
குற்றவாளிகள் அனைவரையும்

 விடுதலை செய்து
வழங்கிய தீர்ப்பை ஒட்டி 

நமக்கு ஒரு சந்தேகம் எழுகிறது.

ஒருவேளை 58 தலித்துகளும் கொல்லப்படவில்லையோ?
உயிருடன்தான் இருக்கிறார்களோ!
எங்கேனும் தலைமறைவாக வாழ்கிறார்களோ?


எது எப்படி இருப்பினும், கொடுத்து வைத்தவர்கள்
மரண  தண்டனை எதிர்ப்புப் போராளிகள்(!!!)தான். 
ஒரு தீர்ப்பா,  இரண்டு தீர்ப்பா?
எல்லாத் தீர்ப்புகளுமே
மரண தண்டனை எதிர்ப்புப்  போராளி(!!!)களுக்குச் சாதகமாக அல்லவா
வந்து கொண்டு இருக்கின்றன!


நைனா சஹானி கொலை வழக்கிலும்
மரண தண்டனையை  ரத்து செய்து
உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

பந்தியில் உட்கார்ந்து இருக்கிறார்கள் 
மரண தண்டனை எதிர்ப்புப் 'போராளிகள்'.
அவர்களுக்கு முன் விரித்து இருக்கிற 

தலை வாழை இலையில்
லட்டு, ஜிலேபி, பாதாம் அல்வா, முந்திரி கேக்
என்று இனிப்புகளாகப் பரிமாறப் படுகிறது!


நைனா சஹானி ஒரு இளம் பெண். 
இளம் மனைவி. வயது 29.
இவள் கணவன் சுசீல் சர்மா இவளைச் சுட்டுக்கொன்று,
பிரேதத்தை கண்டம் துண்டமாக வெட்டி
தந்தூரி அடுப்பில் நெய்யை விட்டு எரித்தவன்.
சுசீல் சர்மா ஒரு இளைஞர் காங்கிரஸ் தலைவர்.
இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருப்பதற்கு
அருகதை உள்ளவர். இல்லாவிடில் மனைவியைக் கொன்று
தந்தூரி அடுப்பில் வைத்து எரிக்க முடியுமா?   


இச் சம்பவம் நடந்தது ஜூலை 2, 1995 அன்று. அதாவது,
18 ஆண்டுகளுக்கு முன்பு.

புதுடில்லி செசன்சு நீதிமன்றம்
சுசீல்  சர்மாவுக்கு மரண தண்டனை விதித்தது. (தீர்ப்பு நாள்: நவம்பர் 7, 2003)
புதுடில்லி உயர்நீதிமன்றம் மரண தண்டனையை
உறுதிபடுத்தியது.

(தீர்ப்பு நாள்: பெப்ரவரி 19, 2007)

உச்ச நீதி மன்றம் மரண தண்டனையை
ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது.

( தீர்ப்பு நாள்: அக்டோபர் 8, 2013)
தீர்ப்பு வழங்கிய மூவர் அமர்வில் 

( 3 member division bench )   
தலைமை நீதியரசரான 

மேதகு தமிழர் சதாசிவம் அவர்களும் அடக்கம்.

ஆக, மரண தண்டனை எதிர்ப்புப் போராளிகள்
ஆனந்தக் கூத்தாடி வருகிறார்கள்.
குற்றவாளிகளுக்குத் தண்டனையே 

விதிக்கப் படக்கூடாது
என்ற தங்களின் லட்சியம் கைகூடி வருவது கண்டு 
களிப்பும்  எக்களிப்பும் அடைகிறார்கள்!


*****************************************************************************************************
 

புதன், 16 அக்டோபர், 2013

DALIT MASSACRE CASE: ALL 26 ACCUSED ARE ACQUITTED

மரண தண்டனை எதிர்ப்பாளர்களுக்கு 
பால் பாயாசம் வழங்கிய தீர்ப்பு!
--------------------------------------------------------
மரண தண்டனையை எதிர்க்கும் 
மனித உரிமைப் போராளி (!!!)களின்
காட்டில் மழை!
பாட்னா உயர்நீதி மன்றம் 
கடந்த அக்டோபர் 9, 2013 அன்று 
வழங்கிய தீர்ப்பு மேற்படி மனித நேயப் போராளிகளின் வயிற்றில் 
பால் பாயாசத்தை வார்த்திருக்கிறது.

 கீழமை நீதிமன்றம் வழங்கிய
 ( 16 பேருக்குத் தூக்கு, 10 பேருக்கு ஆயுள்)
தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்து, 
26 பேரையும் விடுதலை செய்து 
தீர்ப்பளித்து இருக்கிறார்கள் பாட்னா உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சின் 
நீதியரசர்கள் வி.என்.சின்ஹா மற்றும் ஏ.கே.லால் ஆகிய இருவரும்.
58 தலித்துகளைப் படுகொலை செய்த, லட்சுமணபூர் பதே வழக்கு 
( LAXMANPUR BATHE   MASS MASSACRE CASE OF 58 DALITS ) என்று
அறியப்படும் வழக்கில்தான் இந்தத் தீர்ப்பு.

வழக்கின் வரலாறு
------------------------------  
பீகார் மாநிலம், லட்சுமண்பூர்   பதே என்ற கிராமம் தற்போது ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ளது.டிசம்பர் 1, 1997 அன்று,
( 16 ஆண்டுகளுக்கு முன்பு)
நள்ளிரவில் ரன்வீர் சேனா என்ற 
பூமிஹார் சாதி நிலப்பிரபுக்களின் படை 
மேற்படி கிராமத்துக்குள் நுழைந்து
58 தலித்துக்களைச்  சுட்டுக் கொன்றது.

தமிழ்நாட்டில் கீழவெண்மணியில் கூலி உயர்வு கேட்ட 44 தலித்துக்களை 
உயிரோடு தீ வைத்துக் கொளுத்திய கோபாலகிருஷ்ண நாயுடுவின் 
வடஇந்தியப் பங்காளிகள்தான் ரண்வீர் சேனாவினர்.

பாட்னா செசன்சு நீதிமன்றத்தின் 
நீதியரசர் விஜய் பிரகாஷ் மிஸ்ரா 
கடந்த ஏப்ரல் 7, 2010 அன்று,
16 பேருக்குத் தூக்குத் தண்டனையும்,
10 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தார்;
19 பேர் நிரபராதிகள் என்று கூறி 
அவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
ஆக, மொத்தம் குற்றம் சாட்டப் பட்டவர்கள்
45 பேர்.இதில் 19 பேர் விடுதலை ஆகி விட 
மீதி 26 பேருக்கு மட்டுமே தண்டனை!

தற்போது பாட்னா உயர்நீதிமன்றம் மேற்குறித்த 26 பேரையும் நிரபராதிகள் என்று தீர்ப்பளித்து விடுதலை செய்து விட்டது.  
ஆக, 58 பேரைப் படுகொலை செய்த வழக்கில் 
( 26 பெண்கள்,16 குழந்தைகள் உட்பட) 
யாருக்கும் தண்டனை இல்லை!

மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்று உச்சி மோந்து கொண்டாடுகிறார்கள்! இனிப்புப் பரிமாறி மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறார்கள்!

மரண தண்டனை எதிர்ப்புப் போராளி (!!!)களும் மனித உரிமைப் போராளி(!!!)களும் 
இந்தத் தீர்ப்பால் பெருத்த உற்சாகம் அடைந்து இருக்கிறார்கள். இந்தியாவில் குற்றவாளிகள் தண்டிக்கப் படவே கூடாது என்ற தங்களின் லட்சியம் இத்தகைய தீர்ப்புகளால் 
நிறைவேறி வருவது கண்டு அவர்கள் குதூகலிக்கிறார்கள்.

58 தலித்துகள் செத்ததில் 
அவர்களுக்கு வருத்தம் இல்லை!
ஆனால் 45 ACCUSEDகள் விடுதலை ஆகி விட்டதில் அவர்களுக்கு 
சந்தோசம்! 
அவர்களின் மனித உரிமை (!!!)
 நிலைநாட்டப் பட்டு விட்டதில்
மனித உரிமை மற்றும்
மரண தண்டனை எதிர்ப்புப் போராளிகள் (!!!)
ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்.

     மக்களே போல்வர் கயவர்  அவரன்ன 
    ஒப்பார் யாம்கண்ட(து) இல்.  
******************************************************
 

   

திங்கள், 14 அக்டோபர், 2013

WATCH WIN TV PROGERAM

WATCH WIN TV
----------------------- 
WIN TV வின் தொலைக்காட்சியில் 
எதிரும் புதிரும் நிகழ்ச்சியைப் 
பாருங்கள்! நிகழ்ச்சியில் பங்கேற்று 
போலிச்சாமியார்களின் 
முகத்திரையைக் கிழிக்கிறார் 
தோழர் இளங்கோ 
(இயக்குனர், நியூட்டன் அறிவியல் மன்றம்).

நாள்: செவ்வாய் 15/10/2013
நேரம்: இரவு 9 மணி முதல் 9.30 வரை.  
 ***************************************************

சனி, 12 அக்டோபர், 2013

RESPONSE FROM READERS ARE INVITED


தேவை எதிர்வினை!
--------------------------------  
நெல்லை இளவரச வேலனின் 
தான்சேனும் குளியலறைப் பாடகர்களும் 
என்ற கட்டுரைக்கு
ஒரு நீண்ட பின்னூட்டம் வந்துள்ளது.
முக்கியத்துவம் கருதி 
அப்பின்னூட்டத்தை நமது வலைப்பூவில் 
தனியாகப் பிரசுரித்துள்ளோம் .(கீழே காண்க.)
 இப் பின்னூட்டத்தின் மீதான எதிர்வினைகள் 
வரவேற்கப் படுகின்றன.



                     பின்னூட்டமும் விளக்க வரைபடமும் 





இந்துக்களிடமிருந்து பறிபோகும் இந்தியா

-------------------------------------------------------------------------------  
இந்தியாவும் பாகிஸ்தானும் தனி நாடாக பிரிக்கப்பட்ட பிறகு 1951 
மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்களாதேசில் (கிழக்கு பாகிஸ்தான்)இந்துக்களின் எண்ணிக்கை 22 சதவீதம்.பாகிஸ்தானில்(மேற்கு பாகிஸ்தான்) 20 சதவீதம். 

அதன் பிறகு 1961 கணக்கெடுப்பின் போது பங்களாதேசில் (கிழக்கு பாகிஸ்தான்)இந்துக்களின் எண்ணிக்கை 18 சதவீதமாக குறைந்தது.பாகிஸ்தானில் (மேற்குபாகிஸ்தான்)அது 15 சதவீதமானது.

1974 ல் பாகிஸ்தான் -பங்களாதேஷ் போர் ஏற்பட்டது.அந்த காலத்தில் பல லட்சம் இந்துக்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக்கொன்றது. அதன்பின் பங்களாதேசில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்துக்களின் மக்கள் தொகை 13 சதவீதம்
பாகிஸ்தானில் 10 சதவீதமாக குறைந்தது.

2001ல் எடுக்கப்ட்ட கணக்கெடுப்பில் பங்களாதேசில் இந்துக்களின் எண்ணிக்கை 10 சதவீதம்.பாகிஸ்தானில் 3 சதவீதம்

தற்போது பங்களாதேசில் இந்துக்கள் 9 சதவீதம். பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்கள் 1.7 சதவீதம் பேர்.

இனிவரும் காலத்தில் இது இந்துக்கள் இல்லாத நாடாக மாறிவிட வாய்ப்புள்ளது.
------------------------------------------------------------------------------------
ஆனால் இந்தியாவில் சுதந்திர காலத்திற்கு பின் முஸ்லீம்களின் எண்ணிக்கையை பாருங்கள்
------------------------------------------------------------------------------------  
முஸ்லீம்களுக்கு தனிநாடு பிரிக்கப்பட்ட பின் 1951ல் இந்தியாவில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 9 சதவீதம்.

2001ல் இந்தியாவில் முஸ்லீம்கள் எண்ணிக்கை 14 சதவீதம்.

2011ல் இந்தியாவில் முஸ்லீம்களின் மக்கள் தொகை 18 சதவீதம்.

அடுத்த 50 ஆண்டுகளில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தை எட்டும் வாய்ப்புள்ளது. அப்போது இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை 40 முதல் 45 சதவீதமாக இருக்கும்.

இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் அதிக சுதந்திரத்தையும்.வசதியாள வாழ்க்கையையும் அனுபவிக்கிறார்கள்.ஆனால் பாகிஸ்தானிலும்,பங்களாதேசிலும் வாழும் இந்துக்கள் சுதந்திரம் இன்றியும்,பாதுகாப்பான வாழ்க்கை இன்றியும் பல்வேறு நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.என்று வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

வியாழன், 10 அக்டோபர், 2013

இயற்பியல் நோபல் பரிசு!
-------------------------------------------  
2013-ஆம் ஆண்டுக்கான இயற்பியல் 
நோபல் பரிசு 
பிரான்கோய்ஸ் இங்க்லெர்ட் ( பெல்ஜியம் )
பீட்டர் ஹிக்ஸ் ( இங்கிலாந்து)
ஆகிய இருவருக்கும் பகிர்ந்து 
வழங்கப் படுகிறது!    

திங்கள், 7 அக்டோபர், 2013

rasheed masood jailed

குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவரின் யோக்கியதை!

-----------------------------------------------------   

ரசீத் மசூது! 
அண்மையில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை 
பெற்றவர். புது தில்லி திஹார் சிறையில் 
கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும்
இவர் நாட்டிலேயே முதல் முதலில் 
எம்.பி பதவியை இழக்கப் போகிறார். 
( உபயம்: குற்றவாளி சட்ட மன்ற நாடாளுமன்ற 
பதவிகளில் தொடரக் கூடாது என்ற 
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு )

இவர் நாட்டின் குடியரசுத் துணைத்தலைவர் 
பதவிக்குப் போட்டி இட்டவர். ஹமீத் அன்சாரி 
காங்கிரஸ் சார்பிலும், நஜ்மா ஹெப்துல்லா 
பாஜக சார்பிலும் போட்டி இட்ட போது   ,
மூன்றாவது அணி சார்பில், இவர் போட்டியிட்டுத் 
தோற்றார். இவர் பெற்ற வாக்குகள் 75 மட்டுமே.
சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் 
மூன்றாவது அணி சார்பாக 
இவரை நிறுத்தி இருந்தன.

உயர்ந்த பதவிக்குப் போட்டி இட்ட இவர் 
தற்போது திஹார் சிறையில்!

ஓம் பிரகாஷ் சவுதாலா , லாலு பிரசாத் யாதவ் 
வரிசையில் இவர் தண்டிக்கப் பட்ட
மூன்றாவது குற்றவாளி!

அடுத்து கம்பி எண்ணுபவர் 
தமிழ் நாட்டில் இருந்தா?

***********************************       

வியாழன், 3 அக்டோபர், 2013

laloo in prison

உப்பைத் தின்றவன் 
தண்ணீர் குடிப்பான்!
-----------------------------------------------------------------------------------------------
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் 
லாலு பிரசாத் யாதவ் 
5 ஆண்டுகள் சிறைத தண்டனை பெறுகிறார்!

மகிழ்ச்சியாக இருக்கிறது!

இனிப்பு வழங்கிக் கொண்டாடுவோம்!

ஏற்கனவே ஓம் பிரகாஷ் சௌதாலா 
ஆசிரியர் நியமன ஊழலில் 
தண்டனை பெற்று 
சிறையில் கம்பி எண்ணிக் கொண்டு 
இருக்கிறார்.

தொடர்ந்து ஒவ்வொரு பயலாகக் 
கம்பி எண்ணட்டும்!