http://www.indiantelevision.com/iworld/social-media/facebook-s-free-basics-in-a-pinch-in-india-zuckerberg-comes-to-rescue-with-op-ed-151230
வியாழன், 31 டிசம்பர், 2015
தர்மப் பிரபு 'மார்க் சக்கர்பெர்க்'கின் Free Basics திட்டமும்
எருமை மாட்டின் மீது பெய்த மழையும்!
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------------
முகநூல் நிறுவனத்தின் அதிபர் மார்க் சக்கர்பெர்க்
ஏழை இந்தியர்கள் மீது பெருங்கருணை கொண்டு
தமது உலகளாவிய திட்டமான Free Basics திட்டத்தை
இந்தியாவில் செயல்படுத்த முன்வந்துள்ளார்.
ஆனால் இந்தியாவின் அறிவுஜீவிகளும் விழிப்புணர்வு
மிக்க இணையக் குடிமக்களும் (netizens) Free Basics திட்டம்
இணைய நடுநிலைக்கு எதிரானது என்று கண்டனம்
தெரிவிக்கிறார்கள். இதனால் தர்மப் பிரபுவான மார்க்
சஞ்சலம் அடைந்துள்ளார். இந்தியத் தொலைதொடர்பு
ஆணையம் (TRAI) Free Basics திட்டத்துக்குத் தடை விதித்து
விடுமோ என்று மார்க் அஞ்சுகிறார்.
எனவே தமது திட்டத்தின் மேன்மையை விளக்கியும்
அதனால் விவசாயிகள் உட்பட ஏழை இந்தியர்கள்
எப்படியெல்லாம் பயன் அடையப் போகிறார்கள் என்பதை
விளக்கியும் ஆங்கில நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரம்
கொடுத்துள்ளார். TRAI தலைவர் ராம் சேவக் சர்மா
அவர்களுக்கும் தமது திட்டத்தை அனுமதிக்குமாறு
கோரி இணையக் கையெழுத்து இயக்கமும் நடத்தி
உள்ளார்.
Free Internet வழங்கினால் மட்டுமே அது இலவசம் என்று
பொருள்படும்.Free Basics என்பது Free Internet அல்ல. மார்க்
வழங்கும் இலவசத்தில் வீடியோ தளங்கள் கிடையாது.
VoIP கிடையாது (Voice over Internet Protocol). இன்னும் நிறைய
தளங்கள் அல்லது சேவைகள் கிடையாது. எனவே இதை
எப்படி இலவசம் என்று சொல்ல முடியும்? "இலவசம்"
என்ற பெயரில் எதைத் தருவது என்பதையும்
எதை எல்லாம் மறுப்பது என்பதையும் முகநூல்
நிறுவனம் முடிவு செய்யும். எனவே இதில் FREE என்பது
இல்லை. FRAUD மட்டுமே இருக்கிறது.
TRAI நிறுவனம் மார்க்கின் Free Basics என்னும் மோசடித்
திட்டத்தைத் தடை செய்ய வேண்டும். தடை செய்யாமல்
அனுமதித்து விட்டால் என்ன ஆகும்? Digital Divide என்னும்
மாபெரும் சாதிப்பிரிவினை உருவாகும். இணையத்தைப்
பயன்படுத்துவோர் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்
படுவர். கட்டணம் செலுத்துவோர், இலவசமாகப்
பெறுவோர் என்று இரு பிரிவினர் உருவாகி விடுவர்.
வர்க்க பேதம், சாதி பேதம் போல இணையப் பயனாளிகள்
இரண்டாகப் பிரிந்து விடுவர். இந்தப் பிரிவினை சமூக,
அரசியல் தளங்களில் பெரும் பிளவை உண்டாக்கும்.
எனவே மார்க்கின் Free Basic திட்டத்தை உறுதியுடன் போராடி
முறியடிக்க வேண்டும். ஹைதராபாத் நகரில் ஆயிரத்திற்கும்
மேற்பட்ட நெட்டிசன்கள் பொறியியல் மாணவர்கள்,
மென்பொருள் பணியாளர்கள் உட்பட. டிசம்பர் 29, 2015
அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி
மார்க்கைக் கதிகலங்கச் செய்தனர்.
மென்பொருள் தலைநகரான பெங்களூருவில் நெட்டிசன்கள்
மார்க்கிற்கு எதிராக கண்டன இயக்கத்தை நடத்தி
வருகின்றனர். பல்வேறு ஐ.ஐ.டி.களைச் சேர்ந்த
பேராசிரியர்களும் மாணவர்களும் இணைய நடுநிலையைப்
பாதுகாக்கக் கோரியும், மார்க்கின் இலவச மோசடித்
திட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரியும் இயக்கம்
நடத்தி வருகின்றனர்.
ஆனால், அடையாள அரசியலின் தலைமைச் செயலகமாகத்
திகழும் தமிழ்நாட்டில், எப்போதும் போலவே எருமை
மாட்டின் மீது மழை பெய்தது போல, தமிழக இணையப்
பயனாளிகளில் பலரும் இருக்கின்றனர். சாதிய, மத,
தேசிய இன அடையாள அரசியலையும் போலித் தமிழ்ப்
பற்றையும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் தமிழ்
மூடர்களுக்கு இணைய நடுநிலை பற்றியெல்லாம் எந்தக்
கவலையும் கிடையாது.
நன்று அறிவாரில் கயவர் திருவுடையார்
நெஞ்சத்து அவலம் இலர். ----திருக்குறள்-------
*********************************************************************
.

புதன், 30 டிசம்பர், 2015
நாய்ப் பொறையும் சரவண பவன் சாப்பாடும்!
முகநூல் நிறுவனத்தின் Free Basics திட்டத்தை ஏன்
எதிர்க்க வேண்டும்?
-----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------
இந்தியாவின் இணையச் சந்தை உலகின் பல கார்ப்பொரேட்
நிறுவனங்களின் கண்ணைப் பறிக்கிறது. இந்தச் சந்தையை
எப்படியேனும் வசப் படுத்தி விட வேண்டும் என்று உலகின்
முன்னணி கார்ப்பொரேட் நிறுவனங்கள் காய் நகர்த்தி
வருகின்றன.
உலக அளவில் அமெரிக்கா சீனாவை அடுத்து
இணையப் பயன்பாட்டில் இந்தியா மூன்றாம் இடத்தில்
உள்ளது. எவ்வளவு குறைத்து மதிப்பிட்டாலும், இந்தியாவின்
இணையக் குடிமக்கள் (netizens), அதாவது இணையத்தைப்
பயன்படுத்துவோர் எண்ணிக்கை 10 கோடி என்பது அனைவரும்
ஏற்றுக் கொண்ட ஒரு கணக்கு.
மோடி அரசு டிஜிட்டல் இந்தியா என்னும் திட்டத்தைச்
செயல்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறது. இத்திட்டம்
டாக்டர் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, ஐ.மு.கூ-2
ஆட்சிக் காலத்திலேயே கொண்டு வரப்பட்ட திட்டம் ஆகும்.
இந்தியாவின் கிராமப் புறங்களுக்கு பிராட்பேண்ட்
விரிவாக்கத்தின் மூலம் இணையதள சேவை வழங்கும்
திட்டம் ஆகும் இது.
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருந்த பல
கார்ப்பொரேட் கொக்குகள், டிஜிட்டல் இந்தியா என்னும்
உறுமீனைக் கொத்திக் கொண்டு செல்ல முயல்கின்றன.
முகநூல் அதிபர் மார்க் சக்கர்பெர்க் புதுடில்லி வந்து மோடியைச்
சந்தித்தார். தொலைதொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தைச்
சந்தித்தார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் தமது
நிறுவனத்துக்குப் பங்குண்டு என்ற உறுதியை இந்திய
அரசிடம் இருந்து பெற்றார்.
"இணையதளத் தொடர்பைப் பெறுவது என்பது ஒரு சிலருக்கான
சலுகை அல்ல; மாறாக அது மக்களின் அடிப்படை உரிமை"
(Internet connectivity is not the privilege of a few but a fundamental right)
என்ற விஞ்ஞான சோஷலிசக் கருத்தை மார்க் முன்வைத்தார்.
பேசுவது 'மார்க்'கா அல்லது மார்க்ஸா என்ற ஐயத்தை
எழுப்பினார்.
தற்போது டிஜிட்டல் இந்தியா திட்டத்தில், தமது நிறுவனம்
வழங்கும் Free Basics என்ற திட்டம் மூலமாக இணைந்து கொள்ள
முயற்சி செய்கிறார் மார்க்.
முகநூல் நிறுவனம் அனுமதிக்கும் ஒரு சில இணைய
சேவைகளை, அதாவது மிகவும் அடிப்படையான இணைய
சேவைகளை மக்கள் இலவசமாகப் பெறலாம் என்பதுதான்
Free Basics திட்டமாகும்.
இதன் பொருள், அடிப்படை அல்லாத (non basic) சேவைகளைக்
கட்டணம் செலுத்தித்தான் பெற முடியும் என்பதாகும். இங்கு
"அடிப்படை" என்பதன் மெய்யான பொருள் "குறைந்தபட்சம்"
என்பதுதான். அதாவது குறைந்தபட்சமாக(minimum) ஒரு சில
சேவைகளை வழங்குவதுதான் Free Basics திட்டம்.
இத்திட்டம் ஏற்கனவே கொண்டு வந்த internet.org திட்டத்தின்
புதிய பதிப்புத்தான். internet.org திட்டம் இணைய
நடுநிலையைப் பாதிக்கிறது என்பதால் கடும் எதிர்ப்புக்கு
இலக்கான திட்டம். எனவே எதிர்ப்பைக் குறைக்கும்
பொருட்டு, இலவசம் என்ற போதை ஊட்டப்பட்டு
புத்தம் புதிய திட்டம் போன்ற தோற்றத்துடன், முகநூல்
நிறுவனம் Free Basics திட்டத்தை அறிமுகம் செய்கிறது.
Free Basics வழியாக டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் நுழையும்
முகநூல் நிறுவனம், இந்தியத் தொலைதொடர்பு
நிறுவனங்களைத் தன் கூட்டாளியாகச் சேர்த்துக்
கொள்ளும். இந்தியத் தொலைதொடர்பு மாபியா
நிறுவனமான ஏர்டெல் இதில் பிரதான பங்கு வகிக்கும்.
இது சோற்று மூட்டைக்குள் பெருச்சாளியை வைத்துக்
கட்டிய கதையாகும்.
இணையமும் முகநூலும் Free Basics திட்டமும்
உலகம் தழுவியவை. Free Basics திட்டத்திற்கான எதிர்ப்பும்
உலகளாவியது. எனினும் இக்கட்டுரை இந்தியச் சூழலை
மையப்படுத்தி எழுதப் படுகிறது.
இலவசம் என்ற அடைமொழியைக் கொண்டுள்ள முகநூலின்
இத்திட்டம் ஒரு சமூகநலத் திட்டம் அல்ல.
( Not a social welfare measure). மாறாக, ஒரு வணிகத் தந்திரம் ஆகும். எலிப்பொறியில் மசால் வடையை வைப்பது போன்ற தந்திரம்.
இத்திட்டம் இணைய நடுநிலையைப் பாதிக்கிறது. ஒரு சில
லாபம் கருதும் நிறுவனங்கள் இணையத்தை ஆக்கிரமிக்க
வழி வகுக்கிறது. எனவே இத்திட்டம் முறியடிக்கப்
படுவதன் மூலமே இணைய நடுநிலையைப் பாதுகாக்க
இயலும்.
இணையம் என்பது ஆகாயம் போன்றது. தெருவுக்கு வந்து
ஒரு குன்றின் மேலேறி அண்ணாந்து பார்த்தால் கண்ணுக்கு
எட்டிய தூரம் வரை நம்மால் ஆகாயத்தைப் பார்க்க முடியும்.
இதுபோன்ற நிலையைத் தான் இணைய நடுநிலை என்கிறோம்.
"வாருங்கள், நாங்கள் அமைத்திருக்கும் உயரத்தின் மீதேறி,
ஆகாயத்தைப் பாருங்கள்; ஆனால் தென்மேற்குத் திசையை
மட்டும்தான் நாங்கள் காட்டுவோம்" என்று நிபந்தனை
விதித்தால் அது எப்படி இருக்குமோ, அதைப் போன்றதுதான்
முகநூலின் Free Basics திட்டம்.
முகநூல் அதிபர் மார்க் அன்னதானம் செய்வதாக அறிவிக்கிறார்
என்றால், சரவண பவன் தரத்தில் இல்லாவிடினும்,
முழுச் சாப்பாடு கிடைக்கும் என்று நம்பித்தான் மக்கள்
அன்னதானத்திற்குச் செல்வார்கள். ஆனால், அன்னதானப்
பிரபுவான மார்க் அவர்களோ, "முழுச் சாப்பாட்டுக்குக்
கட்டணம் உண்டு. ஆனால், ஏழைகளின் பசிபோக்கும்
தொண்டாக, நாங்கள் அடிப்படை உணவான
நாய்ப்பொறையை இலவசமாகத் தருகிறோம்" என்று
கூறினால் அதை ஏற்க முடியுமா? அதைப் போன்றதுதான்
Free Basic திட்டமும். (நாய்ப்பொறை = உலர்ந்த ரொட்டி)
இணைய நடுநிலையைப் பாதுகாப்பது என்பது ஒரு
கன்னிப் பெண் தன கற்பைப் பாதுகாத்துக் கொள்வது போன்றது.
தொடர்ந்து தாக்குதல்கள் வந்துகொண்டே இருக்கும்.
தொடர்ந்து போராடிக் கொண்டேதான் இருக்க வேண்டும்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கும் Free Basics திட்டத்திற்கும்
வேறுபாடு தெரியாமலும், அறிவியல்-தொழில்நுட்பம்
பற்றிய பரிச்சயம் இல்லாமலும் உள்ள சிலர் Free Basics
திட்டத்துடன் டிஜிட்டல் இந்தியா திட்டத்தையும் சேர்த்து
எதிர்க்கின்றனர். இது முற்றிலும் தவறு. குழந்தையைக்
குளிப்பாட்டிய பின், வாளித் தண்ணீரோடு சேர்த்து
குழந்தையையும் வீசி எறிவது போன்றது இது. டிஜிட்டல்
இந்தியா திட்டம் இந்திய நாட்டின் திட்டம். இது இந்திய
மக்களுக்கான திட்டம். இத்திட்டம் மக்களுக்குப் பயனுள்ளதாக
அமைந்திட ஒரு நெடிய போராட்டம் தேவைப் படுகிறது.
அது பற்றி வேறு இடத்தில் காணலாம்.
Free Basics திட்டத்தை எதிர்ப்பவர்கள் டிசம்பர் 30, 2015
தேதிக்குள் தொலைதொடர்பு ஒழுங்குமுறை
ஆணையத்திடம் (TRAI) தங்கள் கருத்தைத் தெரிவித்து
இருக்க வேண்டும்.
***********************************************************************

கேப்டன் மீதான அதிமுகவின் வன்முறை!
------------------------------------------------------------------------------------------
கேப்டன் செய்திகள் டி.வி.யில் விவாதம்!
-----------------------------------------------------------------
29.12.2015 செவ்வாய் இரவு 9 டு 10 மணி

நியூட்டன் அறிவியல் மன்றம் பங்கேற்பு.
****************************************************
மறு ஒளிபரப்பு: 29.12.2015 இரவு 12 to 1.00 மணி --
-----------------------------------------------------------------------------

செவ்வாய், 29 டிசம்பர், 2015
கேட்பது யார்? டி.வி நெறியாளரா? அவருக்கு என்ன
வாசிப்பு உண்டு? தமிழ் சானல்களில் உள்ள சுமார்
நூறு நெறியாளர்களும் (anchor) இலக்கிய மேதைகளா?
இந்த நூறு நெறியாளர்களுக்கும் IQ என்பது அதிகம்
போனால் 98, 99 இருக்கலாம். Most of these anchors...
no, no, almost all of these anchors are mediocre fellows.
In fact, they are not even mediocre level people, they are of
sub-mediocre level.
**
சராசரிக்கும் கீழான அறிவும் வாசிப்பும் உடைய
தமிழ் சானலின் நெறியாளர்களை, இலக்கியப்
பேராசிரியர்கள் ரேஞ்சுக்கு நீங்கள் கற்பிதம்
செய்வது ஏற்கத் தக்கது அன்று.
அத்தகைய எதிர்பார்ப்புகள் யதார்த்தத்தை உணராமல்
எழுபவை. தங்களின் எதிர்பார்ப்புகள் இலக்கியத்
திறனாய்வாளர்கள் மீது எழ வேண்டியவை.
வெகுஜன அபிப்பிராயம் என்பது ஒரு நூலை
முழுவதும் படிக்காமலே, அந்த நூலின் ஆட்சேபகரமான
பகுதிகளைப் பற்றி மட்டும் அறிந்த கொண்ட மாத்திரத்தில்
எழுபவை.
மன்னிக்க வேண்டும் திரு அபிலாஷ் சந்திரன், அய்யா!
குட்டி முதலாளித்துவ நிலைபாட்டில் இருந்து கொண்டு
தங்களின் குட்டி முதலாளித்துவக் கருத்துக்களை
முன்வைக்கும்போது, இந்த உரையாடல் பொருளற்றதாக
பயனற்றதாக ஆகிவிடும் ஆபத்து உள்ளது.
**
இலக்கியத் திறனாய்விற்கும் இலக்கியம் குறித்த
வெகுஜன அபிப்பிராயத்திற்கும் இடையிலான
பாரதூரமான வேறுபாட்டை தாங்கள் அங்கீகரிக்க
மறுக்கும் நிலையில், இந்த உரையாடல் அர்த்தம்
இழந்து விடும் என அஞ்சுகிறேன்.

திரு அபிலாஷ் சந்திரன் அவர்களுக்கு,
------------------------------------------------------------
மறைந்த எழுத்தாளர் சுஜாதா பல ஆண்டுகளுக்கு முன்பு,
குமுதத்தில் ஒரு தொடர்கதை எழுதினர். சிப்பாய்க் கலகம்
(1857) என்று அழைக்கப் படும் முதலாம் இந்திய சுதந்திரப் போர்
பற்றிய தொடர்கதை அது. அதில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரைக்
குறிக்க மக்கள் மத்தியில் புழங்கும் ஒரு வழக்குச் சொல்லைப்
பயன்படுத்தி இருந்தார். இதில் எவ்விதத் தவறும் இல்லை.
எந்த இலக்கியக் கோட்பாட்டால் அளந்தாலும் இதில்
எவரும் தவறு காண முடியாது.
**
ஆனால் அந்த சமூகப் பிரிவினர் பெரும் எதிர்ப்பைக்
காட்டினர். குமுதம் தொடரை நிறுத்தி விட்டது. அப்போது
சுஜாதா பெங்களூரில் இருந்ததால் அவரின் தலை தப்பியது.
சுஜாதாவுக்கு என்ன நீதி கிடைத்தது அன்று? Nothing!
**
சுஜாதாவை எதிர்த்து, வீதிக்கு வந்து கலவரம் விளைத்த
அந்தக் குழுவினர் எவரேனும் சுஜாதா எழுதிய அறிவியல்
கட்டுரைகளை, நூல்களை வாசித்து இருப்பார்களா?
இல்லை. a plus b whole squared என்றால் கூட என்னவென்றே
பரம்பரை பரம்பரையாகத் தெரியாத கூட்டம்தான் அன்று
ரணகளப் படுத்தியது.
**
ஆக, ஒரு நூலுக்கு எதிரான வெகுஜன அபிப்பிராயத்தை
ஏற்படுத்துவது எளிது. அது எவ்விதத்திலும் நூல் திறனாய்வு
ஆகாது. " இந்தியாவில் 200 ரூபாய் ஒருவனிடம் இருந்தால்
போதும்; அவன் நினைத்தால் மதக் கலவரத்தை உண்டாக்கி
விடலாம்"என்றார் மார்க்கண்டேய கட்ஜு. அது எவ்வளவு
கச்சிதமாகப் பொருந்துகிறது பாருங்கள்.

ஆயர்கள் கடும் உடல் உழைப்பாளர்கள். இயற்கையோடு இயைந்த
வாழ்வு வாழ்ந்தவர்கள். எஃகு நிகர் உடல் வலிமை வாய்ந்தவர்கள்.
ஒரு குடம் பாலை இயல்பாக அருந்தக் கூடியவர்கள்.
இலைச்சோற்றை மூடும் அளவுக்கு நெய் பெய்து உண்பது
அன்று இயல்பு. இதில் மிகை எள்ளளவும் இல்லை. ஆண்டாளின்
படைப்புகள் உலகப் பெரும் இலக்கியங்களில் இடம் பெற்றவை.
பெரிய புராணம் காவியம் அன்று. கம்ப ராமாயணம்
ஒரு காவியம் ஆகும். தமிழ்நாட்டில் வள்ளுவர்,
இளங்கோ, கம்பன், ஆண்டாள் போன்று சேக்கிழார்
(பெரியபுராணம்) பரவலாகப் படிக்கப் படவில்லை.
தோழரே, பானு அம்மையார் அன்று பொய் சொல்லவில்லை.
பேசப்பட்ட பொருளைப் பற்றி அவருக்குத் தெரிந்தது
அவ்வளவுதான். அவர் தமது அறியாமையை வெளிப்படுத்தி
உள்ளார். சட்டியில் இருப்பதுதானே அய்யா அகப்பையில்
வரும். தங்களைப் போன்றவர்கள் அவரைப் பெரிய
அறிவாளி என்று கருதுவதற்கு அவர் எங்ஙனம் பொறுப்பாவார்?
பொதுவாக புத்தகங்களைப் படிப்போரை மூன்று பிரிவினராகக்
கருதலாம்.1) திறனாய்வு நோக்குடன் படிக்கும் திறனாய்வாளர்,
ஆய்வாளர் ஆகியோர். 2) முதிர்ந்த வாசகர்கள் 3) எளிய வாசகர்கள்.
இவற்றில் (1) மற்றும் (2) பிரிவுகளில் உள்ளோர் மட்டுமே
பதிப்பாளர் யார் என்பதையும் தெரிந்து கொள்வதில் ஆர்வம்
உடையவர்களாய் இருப்பர். எளிய வாசகர்களிடம் போய்,
பதிப்பாசிரியர் யார் என்றெல்லாம் கேட்டால் அவர்களிடம்
பதில் இருக்காது. இது மிகவும் இயல்பான ஒன்றே.
**
ஒரு புத்தகத்தை ஆதரிப்பதற்கோ எதிர்ப்பதற்கோ பதிப்பகம்
பற்றிய அறிவைப் பெற்று இருக்க வேண்டும் என்று
முன்நிபந்தனை விதிப்பது ஏற்கத் தக்கதன்று. டி.வி
விவாதத்தில் பங்கேற்போர் இலக்கியத் திறனாய்வாளர்களாக
இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பே அபத்தமானது.
**
ஒரு புத்தகம் பற்றிய திறனாய்வு வேறு. அப்புத்தகம்
பற்றிய வெகுஜன அபிப்பிராயம் வேறு.
**
நிகழ்ச்சியின் நெறியாளர் விவாதிக்க வந்துள்ளோரிடம்
புத்தகத்தைப் பற்றிப் பல கேள்விகள் கேட்டு, அவர்களை
அம்பலப் படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கி
உள்ளீர்கள். இதில் எவ்விதமான அம்பலப்படுத்தலுக்கும்
அவசியமே இல்லை. விவாதிக்க வந்துள்ளோர் யாரும்
தங்களை இலக்கியத் திறனாய்வாளர் என்றோ, ஏன்,
இலக்கிய வாசகர் என்றோகூட உரிமை கோரவில்லை.
**
When they unhesitatingly plead their ignorance, where is the need for an
exposure?
**
அடுத்து, பல கேள்விகளைக் கேட்டு, விவாத நெறியாளர்
அவர்களை அம்பலப் படுத்த வேண்டும் என்கிறீர்களே,
அய்யா, விவாத நெறியாளர்கள் எல்லோரும்
இலக்கியங்களைக் கற்றுத் துறை போகிய அறிஞர்களா?
அப்படி ஒருவரைக் காட்ட இயலுமா தங்களால்?
**
நெறியாளர்களில் தோழர் நிஜந்தன் மட்டுமே இலக்கியவாதி.
மற்ற அனைவருக்கும் இலக்கிய வாசிப்பு என்பது சராசரிக்கும்
வெகு குறைவே.

திங்கள், 28 டிசம்பர், 2015
அழித்தொழிப்பைச் செய்தவர்கள் நக்சல்பாரிகள் மட்டுமே!
--------------------------------------------------------------------------------------------
1) பண்ணையார் கோபால கிருஷ்ண நாயுடுவை அழித்தொழித்தது
நக்சல்பாரி எனப்படும் மார்க்சிய லெனினிய இயக்கமே.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மா-லெ (வினோத் மிஸ்ரா)
கட்சியே இந்த அழித்தொழிப்பைச் செய்தது.
**
2) திராவிடர் கழகத்திற்கும் இந்த அழித்தொழிப்பிற்கும்
எவ்வித சம்பந்தமும் இல்லை.
3) வர்க்க எதிரிகளை அழித்தொழிப்பது என்பதை ஒரு
கோட்பாடாகக் கொண்டு அதை செயல்படுத்தி வந்தது
நகசல்பாரிகளே. திராவிடர் கழகம் போன்ற முற்போக்கான
அமைப்புகள், பண்பாட்டுத் தளத்தில் மட்டும் செயல்படும்
சட்டபூர்வமான அமைப்புகள். அழித்தொழிப்பு என்பது
அவர்களின் சிந்தனையிலோ செயல்திட்டத்திலோ
கிடையாது.ஏன், கற்பனையில் கூடக் கிடையாது.
**
4) மா-லெ கட்சியினர், கோபாலகிருஷ்ண நாயுடுவை
அழித்தொழிப்பது என்று கட்சிரீதியாக முடிவு எடுத்தனர்.
பின்னர் இம்முடிவை நிறைவேற்றுவதற்காக, கொரில்லா
குழுக்களைக் கட்டி அமைத்தனர். திட்டத்தைச் செயல்படுத்த
தகுந்த நாளுக்காகக் காத்திருந்தனர்.
**
5) அந்த நாளும் வந்தது. எப்போதும் தன்னிடம் வைத்திருக்கும்
துப்பாக்கியை லைசென்ஸ் புதுப்பிக்க வேண்டி, நாயுடு
காவல் துறையிடம் ஒப்படைத்து இருந்தார். அந்தத் தகவலை
உறுதி செய்து கொண்ட கொரில்லா குழுவினர் அன்றைய நாளில்
அவரை அழித்தொழிப்புச் செய்தனர்.
**
6) அழித்தொழிப்பு முடிந்ததும் கட்சியின் கட்டளைப்படி,
அனைவரும் தலைமறைவு ஆயினர். காவல்துறையும்
உளவுத் துறையும் அவர்களைப் பிடிக்க முடியாமல்,
அந்தப் பகுதியில் உள்ள, அழித்தொழிப்பில் ஈடுபடாத
சாதாரண ஆதரவாளர்களைப் பிடித்துச் சிறையில்
அடைத்தனர். தகுந்த சாட்சியம் இல்லை என்பதால்,
பின்னர் அனைவரும் விடுதலை ஆயினர்.
**
7) ஒரு மூன்றாம் மனிதனாக இருந்து கொண்டு நான் இதைச்
சொல்லவில்லை என்றும் அழித்தொழிப்பு நடைபெற்ற அந்த
1980ஆம் ஆண்டில், அமைப்பில் தீவிரமாகப் பணியாற்றியவன்
என்ற அடிப்படையிலும், நாயுடுவின் அழித்தொழிப்பை
நக்சல்பாரி இயக்கம் மட்டுமே செய்தது என்று உறுதிபடக்
கூறுகிறேன்.
**
8) பொதுவெளியில் இடப்படும் ஒரு பதிவு அல்லது
பின்னூட்டத்தில், இதற்கு மேல் சொல்ல முடியாது
என்பதையும் நக்சல்பாரிகள் அறிவார்கள்.
9) அழித்தொழிப்பு என்பதெல்லாம் இரும்பு அடிக்கிற
இடம். அங்கே திராவிடர் கழகம் போன்ற ஈக்களுக்கு
என்ன வேலை?
**
10) பெரியாரைப் போற்றுவோம்! வணங்குவோம்! அதே
நேரத்தில் பெரியா வெறும் பண்பாட்டுத் தளச்
செயல்பாட்டாளர் மட்டுமே. பெரியாரியம் மானுட
விடுதலையைப் பெற்றுத் தராது. அதை மார்க்சிய
லெனினியம் மட்டுமே பெற்றுத் தரும்.

பகுத்தறிவும் கடவுள் மறுப்பும்!
------------------------------------------------
மனிதர்களை இரண்டு பெரும் பிரிவினராகக் கருதலாம்.
1) கடவுள் ஏற்பாளர்கள் (Theists)
2) கடவுள் மறுப்பாளர்கள் ( Atheists). எவர் ஒருவரும்
கடவுள் ஏற்பாளராகவோ (அல்லது) கடவுள் மறுப்பாளராகவோ
இருக்கலாம்.
தமிழ்ச் சூழலில், பகுத்தறிவாளர் என்ற ஒரு சொல்
பொருள் மயக்கம் தருகிற ஒரு சொல்லாக ஆகிவிட்டது.
ஒட்டுமொத்த மனிதர்களுமே பகுத்தறிவு உடையவர்கள்தாம்.
பகுத்தறிவு என்பது அறிவியல் ரீதியாக ஆறாம் அறிவு
ஆகும். இது விலங்குகளுக்கு இல்லை. ஏனெனில் அவை
ஐந்தறிவு மட்டுமே கொண்டவை. எனவே ஆறாம் அறிவைக்
கொண்டிருக்கிற மனிதர்கள் அனைவருமே
பகுத்தறிவாளர்கள்தான்.
கடவுள் மறுப்பாளராகிய ஒருவர் தம்மைப் பகுத்தறிவாளர்
என்று அடையாளப் படுத்திக் கொள்ளும்போது, அவரின்
அடையாளம் முழுமையாகச் சுட்டப் படுவதில்லை. ஒரு
போதாமை அங்கு வந்து விடுகிறது. எனவே தெளிவு கருதி,
கடவுள் மறுப்பாளர்கள் தங்களை கடவுள் மறுப்பாளர்கள்
என்றே அடையாளப் படுத்துவது நல்லது.
எனினும் கடவுள் மறுப்பாளர்கள் தங்களைப்
பொருள்முதல்வாதிகள் (materialists) என்று அடையாளப்
படுத்திக் கொள்வது சாலச் சிறந்தது.
----------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 27 டிசம்பர், 2015
ஆண்டாளும் நெய்யுடை அடிசிலும்
-----------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
---------------------------------------------------------------
நெய்யுடை அடிசில் பேறு பெற்றவர்க்கே வாய்க்கும்.
உடைப்பருஞ் செல்வர் ஆயினும், இனிப்பும்
கொழுப்பும் ( SUGAR AND CHOLESTROL )அண்டுமானால்,
நெய்யுடை அடிசில் வாய்க்காமலே போம்.
எம் பள்ளிப் பருவத்தில், வீட்டில் அனைவரும்
அமர்ந்து உண்ணும்போது, இலைச் சோற்றில்
எம் அன்னை நெய் ஊற்றும்போதெல்லாம்
எம் தந்தை "மூட நெய் பெய்து, முழங்கை வழிவார"
என்பார்.
பலமுறை இவ்வாறு சொல்லக் கேட்டபின், எனக்கு
அத்தொடரின்பால் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. எனினும்,
"மூட நெய்" என்பதன் பொருள் எனக்கு விளங்கவில்லை.
மூட நம்பிக்கை என்றால் தெரியும். அது என்ன
மூட நெய்? மூடத்தனமான நெய் என்பது
பொருந்தவில்லையே! தந்தையிடம் கேட்கத்
தோன்றவும் இல்லை. அக்காலச் சூழலில் கேட்டு
விடவும் முடியாது.
சிறிது காலத்திலேயே, வானொலியில் திருப்பாவை
விளக்கத்தை நான் கேட்கத் தொடங்கினேன். அப்போது
புரிந்தது மேற்கண்ட தொடர் ஆண்டாளின் பாசுரத்தில்
வருகிறது என்று. பொருளும் புரிந்தது.
"ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்."
மூட நெய் என்பதை அதற்கு முந்திய சீரான
பாற்சோறு (பால்ச்சோறு) என்பதுடன் கொண்டுகூட்டிப்
பொருள் காண வேண்டும்.
பாற்சோறு (பால்ச்சோறு) மூட நெய் பெய்து என்றால்,
இலையில் இடப்பட்ட சோறு முழுவதையும் மூடும்
அளவுக்கு நெய் ஊற்றுவது என்று பொருள். சோற்றின்
நடுவில் சிறிது நெய் ஊற்றி உண்பவர்கள் அல்ல ஆயர்கள்.
ஆயர் சமூகம் சுரண்டலற்ற சமூகம்; சமத்துவச் சமூகம்.
ஆயர்குடியினரின் நிறைவாழ்வை "மூட நெய் பெய்து
முழங்கை வழிவார" என்ற தொடரால் ஆண்டாள்
உணர்த்துகிறாள்.
உலகம் முழுவதும் நிலையாக ஓரிடத்தில் தங்கி வாழ்ந்த
தொல்குடிச் சமூகத்தினர் ஆயர்களே என்பது வரலாறு.
மானுட வரலாற்றில் இச் சமூகம் மேய்ச்சல் சமூகம்
( PASTORAL SOCIETY ) என்று அழைக்கப் படுகிறது.
உலகில் முதன் முதலில் தோன்றிய இலக்கியங்கள் யாவும்
ஆயர் குடியைச் சிறப்பித்துக் கூறுகின்றன. தமிழ் நிலத்தின்
நால்வகைப் பிரிவுகளைக் கூறவந்த தொல்காப்பியர்,
"மாயோன் மேய காடுறை உலகமும் " என்றுதான்
தொடங்குகிறார். இங்கு மேய என்பது விரும்பிய என்று
பொருள்படும். திருமால் விரும்பிய காட்டு நிலம் என்பது
பொருள்.
கிறித்துவ சமயமும் ஆயர்களைச் சிறப்பிப்பதில்
தவறியதில்லை. தங்கள் கடவுளையே ஒரு ஆயனாக,
மேய்ப்பனாக வரித்துக் கொண்ட மாண்பு கிறித்துவத்துக்கு
உண்டு.
"கர்த்தர் என் மேய்ப்பராக இருக்கிறார்;நான் தாழ்ச்சி
அடையேன். அவர் புல் உள்ள இடங்களில் என்னை
மேய்த்து அமர்ந்த தண்ணீர் அண்டை இளைப்பாறச்
செய்கிறார் " என்கிறது விவிலியம்.
வேட்டுவச் சமூகமும் தொன்மையானதுதான் எனினும்
அங்கு கருணைக்கு இடமில்லை. அச்சமூகத்து மனிதன்
விலங்கோடு விலங்காக, சற்று மேம்பட்ட விலங்காக
வாழ்ந்தவன். அவ்வளவுதான்.
ஆயர் சமூகம்தான் நாகரிகம் எய்திய
முதல் சமூகம். வேட்டுவச் சமூகம் போலன்றி,
இங்கு விலங்குகளோடு மனிதன் இயைந்து வாழ்ந்தான்.
திருப்பாவையில், ஆண்டாள் விலங்குகளையும்
பறவைகளையும் சிறப்பித்துப் பாடுவதை நாம்
காணலாம்.
"புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ"
என்றும் ( பாசுரம்: 6 ),
"கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து"
என்றும் ( பாசுரம்: 7)
ஆண்டாள் பறவைகளை மாண்புறுத்துகிறாள்.
'கனைத்திளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால் சோர
நனைத் தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்"
என்ற ஆண்டாள் பாசுரத்தைக் காட்டிலும் வேறு எதில்
எருமைகள் சிறப்பிக்கப் படுகின்றன?
ஆயர் சமூகத்தில், விலங்குகளுக்கும் குடியுரிமை உண்டு.
மனிதனுக்குச் சமமான குடியுரிமை. அங்கு பசுக்களே
வள்ளல்களாக இருப்பதால், மானுட வள்ளல்கள் இல்லை.
ஆயர் குடியில் மனிதர்களை வாழ வைப்பவை
விலங்குகளே! மாடு எனில் செல்வம்! மாடு எனில் வாழ்வு!
எனவே,
"வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் "
நிறைந்த ஆயர் குடியில், சோற்றை மூடும் அளவுக்கு
நெய் பெய்து உண்பதில் வியப்பில்லை அல்லவா!
"நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்"
என்று இரண்டாம் பாசுரத்தில் நோன்பு வினைகளைக்
கூறிய ஆண்டாள், நோன்பு நிறைவுறும் முன்னே,
இருபத்தேழாம் பாசுரத்தில் (கூடாரை வெல்லும்)
"மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந் தேலோர் எம்பாவாய்"
என்கிறாளே, இதன் விளக்கம் என்ன என்று சில
வாசகர்கள் எண்ணக் கூடும்.
நோன்பின் இறுதியில் நோன்பு நோற்ற பெண்களுக்கு
கோவிந்தன் வழங்கும் சன்மானங்களை எல்லாம் பெற்று,
புத்தாடை உடுத்தி அணிகலன்கள் பூண்டு அனைவரும்
கூடியிருந்து உண்டு மகிழும் காட்சியை ஆண்டாள்
உரைக்கிறாள். இது நோன்பின் பயனுறுத்தல் ஆகும்.
ஆண்டாளைப் படிக்கப் படிக்க அவளில் நான் மூழ்கிப்போய்
விடுகிறேன். கன்னங்களில் தாரை தாரையாகக் கண்ணீர்
வழிய வழிய அவளில் நான் திளைத்து விடுகிறேன்.
திகட்டுதல் கண்டேனில்லை!
"ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்"
என்று அரச போகம் துறந்து சென்ற குலசேகர ஆழ்வார்
போல, நானும் அனைத்தையும் துறந்து, ஆண்டாளின்
திருவில்லிபுத்தூர் ஆய்ப்பாடியில் ஓர் ஆயனாக வாழும்
வாழ்க்கைக்கு ஏங்குகிறேன்.
வள்ளுவர் நம் மூளையை வென்று விட்டார் எனில்,
ஆண்டாளோ நம் இதயத்தை வென்று விட்டாள்!
வாழிய ஆண்டாள்!
பின்குறிப்பு:
------------------
1) இப்பதிவு இலக்கிய மாணவர் மற்றும் ஆர்வலர்க்கு
மட்டுமேயானது. ஏனையோர்க்கு அன்று.
2) உரிமை; ஆசிரியருக்கு.
3) ஆண்டாள் இரண்டு பிரபந்தங்களைப் பாடினாள்.
முதல் பிரபந்தம் திருப்பாவை. இரண்டாவது,
நாச்சியார் திருமொழி. இவற்றுள் பிந்தியது
குறித்து அடுத்துக் காண்போம்.
*************************************************************************
*************************************************************

சனி, 26 டிசம்பர், 2015
ஆண்டாள் திருப்பாவை விளக்கவுரை!
-----------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
-----------------------------------------------------------------
பாசுரம்-8
--------------------
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்.
---------------------------------------------------------------------------------
விளக்கவுரை:
ஆண்டாள் தன் தோழியருடன் ஆய்ப்பாடியில் உள்ள
பிற பெண்களைத் துயில் எழுப்பச் செல்கிறாள். இப்போது
பொழுது நன்கு புலர்ந்து விட்டது. கருக்கலுக்கே உரிய இருட்டு
மறைந்து கீழ்வானம் நன்கு வெளுத்து விட்டது. இதற்கு முந்திய
பாசுரத்தில் இருள் பிரியவில்லை. ஆறாம் பாசுரத்தில்
"புள்ளும் சிலம்பின காண்" என்கிறாள். ஏழாம் பாசுரத்தில்
"கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின
பேச்சரவம்" பற்றிக் கூறுகிறாள்.
உயிரினங்களில் பொழுது புலர்வதை முதலில்
உணர்வன பறவைகளே. பின்னரே விலங்குகளும்
மனிதர்களும் உணர்கின்றனர். சேவல்தான் முதலில்
கூவிப் பொழுது விடிவதை இன்றும் அறிவிக்கிறது.
ஆறாம் பாடலை விட, ஏழாம் பாடலில் மேலும்
நேரம் கூடிவிட்டது என்பதை உணர்த்துகிறாள் ஆண்டாள்.
ஆறாம் பாடலில் புள்ளும் சிலம்பின காண் என்பதன் மூலம்
ஒரு சில பறவைகள் ஓசை எழுப்பின என்ற ஆண்டாள்,
ஏழாம் பாடலில் கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன்
கலந்து பேசின பேச்சரவம் என்பதில், "எங்கும்" என்ற
சொல்லால் எல்லா இடங்களிலும் பறவைகள் ஓசை
எழுப்பத் தொடங்கி விட்டன என்று கூறுவதன் மூலம்
ஆய்ப்பாடியின் மொத்தப் பறவைக் கணமும் கூடு
துறந்து வெளியில் பறந்து விட்டன என்று உணர்த்துகிறாள்.
இந்த எட்டாம் பாசுரத்தில் பொழுது மேலும் அதிகரித்து
விட்டது. பறவைகளுக்கு அடுத்து எருமைகளும்
தொழுவம் நீங்கி மேயச் சென்று விட்டன. பசும்புல்
தரை முழுவதும் எருமைகள் பரவி நின்று மேய்கின்றன.
சிறுவீடு என்பதில் வீடு என்றால் தொழுவத்தில் இருந்து
விடுதலை என்று பொருள்படும். ஆயின், வீடு என்று
சொன்னால் போதுமே, சிறுவீடு என்று ஆண்டாள் சொன்னது
ஏன்? ஆண்டாள் காலத்தில் கறவைகள் ஒரு நாளில்
இருமுறை (அல்லது பலமுறை) மேயச் செல்லும்.
அதிகாலையில் சிறிது மேய்ந்த பின்னர் தொழுவம்
திரும்பும். பால் கறந்த பின்னர் மீண்டும் மேயச் செல்லும்.
எனவே கறவைகளுக்கு அதிகாலையில் கிடைத்த
இந்த விடுதலையை சிறுவீடு என்கிறாள் ஆண்டாள்.
இந்தப் பாடலில் ஆண்டாள் எழுப்பச் செல்லும் பெண்
ஒரு கோதுகலமுடைய பாவை. எந்நேரமும் மனம் நிறைந்த
மகிழ்ச்சியுடன் இருப்பவள். தான் இருக்கும் இடத்தை
மகிழ்ச்சியால் நிரப்பி விடுபவள் இவள் எனவே இவள்
இல்லாமல் ஆண்டாள் செல்ல விரும்பவில்லை.
ஏற்கனவே நமது தோழியரில் பலர் நீராடச் சென்று
விட்டார்கள். மீதியிருப்பவர்களும் நீராட .விரைகிறார்கள்.
அவர்களை இழுத்துப் பிடித்து நிறுத்தி விட்டு உன்னைக்
கூப்பிட வந்திருக்கிறேன், எழுந்து வா என்கிறாள் ஆண்டாள்.
குதிரை வடிவில் வந்த அசுரனின் வாயைப் பிளந்து
கொன்றவனும், கம்சனின் அரசவை மல்லர்களை
மற்போரில் வென்றவனும் ஆகிய, தன் வீரத்தால்
தலைவர்க்கெல்லாம் தலைவன் ஆகிய கண்ணனை
வணங்கச் செல்வோம், வா.
நம்மைக் கண்டு கண்ணனே வியந்து நிற்பான். நம்மில்
எவர் எவர்க்கு என்ன வேண்டும் என ஆராய்ந்து அருள்
புரிவான், எனவே விரைந்து வா பெண்ணே என்கிறாள்
ஆண்டாள்.
இப்பாசுரத்தில் வரும் மேய்வான், போவான், கூவுவான்
ஆகிய சொற்கள் எதிர்கால வினைமுற்றுகள் அல்ல.
அவை ஆண்டாள் காலத்துத் தமிழில் பயின்ற வினையெச்ச
வாய்பாடுகள். தமிழ் இலக்கணம் கற்றோர் "வான், பான்,
பாக்கு" என்னும் வினையெச்சங்கள் பற்றிக் கற்றதை
ஈண்டு நினைவு கூர்க.
------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: 1) இலக்கிய மாணவர் ஆர்வலர்க்கானது இப்பதிவு.
2) இதன் உரிமை ஆசிரியர்க்கானது.
3) பதினோரு வயது முதல் ஆண்டாளுடன் விடுதல் நீங்கா
விருப்புடன் உள்ளேன். திருப்பாவையின் கணக்கற்ற உரைகள்
விளக்கங்கள் படித்துள்ளேன். அவற்றில் முழுநிறைவு
காணாமையால் இவ்விருத்தியுரையினை யானே எழுதி
உள்ளேன்.
******************************************************************************************************
ஒருவர் இருவர் அல்ல, லட்சக் கணக்கானோர் மீது
பாசிச ஜெயா அரசு வழக்குப் போட்டது. என்றாலும்
ஒருவரைக் கூட விட்டு விடாமல் லட்சக் கணக்கான
போரையும் அரசால் சிறையில் அடைத்து விட முடியாது
என்பதை எவரும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
நான் இங்கு குறிப்பிடுவது சிறையில் அடைக்கப்
படாமல் இருக்கும் எளிய மக்களை அல்ல. மாறாக,
தலைமைப் பொறுப்பில் இருக்கும் திரு உதயகுமாரை.
**
உதயகுமாரைக் கைது செய்வது பற்றி அல்ல, அவருக்கு
எல்லா வழக்குகளிலும் சம்மன் கூட அனுப்பப் படவில்லை.
இது ஏன்?

வெள்ளி, 25 டிசம்பர், 2015
வாழ்க நீ எம்மான்!
-----------------------------
தெலுங்கானா மாநிலத்தில் நிலவும் வறட்சியைப் போக்க
ரூ 20 கோடி சொந்தச் செலவில் மாபெரும் யாகம் நடத்தும்
தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ்! வறட்சி நீங்கி
வளம் கொழிக்க இறைவன் அருள் புரிவானாக!
---------------------------------------------------------------------------------------
இறைவனிடம் போதிய அளவு அருள் ஸ்டாக் இருக்கும்
என நான் நம்புகிறேன். அருள் பற்றாக்குறை ஏற்படுமானால்,
தேவையான அளவு வழங்கத் தயாராக உள்ளேன்.

மார்கழியும் ஆண்டாளும்
----------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
--------------------------------------------------
மார்கழி முழுவதும் ஆண்டாள் செல்வாக்குச் செலுத்துகிறாள்.
ஆண்டாள் இன்றி இலக்கியமும் இல்லை; தமிழும் இல்லை.
முகநூல் பக்கங்களில் ஆண்டாளைக் காண்பது இதம் தருகிறது.
என் சிறுவயது முதலே ஆண்டாள் எனது மர்கழிகளை
ஆக்கிரமித்து இருந்தாள் . நான் வைணவனும் இல்லை ;
இறைப் பற்றாளனும் இல்லை . எனினும் தமிழ்ப் பற்றாளன்.
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள். எனவே
என்னையும் ஆண்டாள்.
தொலைக்காட்சியும் இல்லாத இணையமும் இல்லாத
என் குருத்திளமைக் காலத்தில், வானொலி வாயிலாக
ஆண்டாளை நான் அடைந்தேன். அப்போதெல்லாம் மஹா
வித்துவான் ஐயம் பெருமாள் கோனார் அவர்கள்,
வானொலியில் திருப்பாவை விளக்கம் அளித்து வந்தார்.
( இவர்தான் கோனார் உரைநூல்களின் தந்தை.)
நெல்லை மாவட்டம் பாவூர்ச்சத்திரம் என்ற ஊரில்
உள்ள பள்ளியில் நான் ஆறாம் வகுப்பு படித்துவந்த
காலம் அது.தென்காசி, குற்றாலம், இலஞ்சி ஆகிய ஊர்களுக்கு
அருகில் உள்ள ஊர் பாவூர்ச் சத்திரம். சன்னல் மேடையில்
கண்ணாடி பாட்டிலில் வைத்த தேங்காய் எண்ணெய்
உறைந்து விடும் அளவு பனியின் ஆதிக்கம் அங்கு உண்டு.
பனி பெய்யும் ஒரு மார்கழிக் கருக்கலில், என் தந்தையார்
ஆழ்துயிலில் இருந்த என்னை எழுப்பி, வானொலியில்
ஒலிபரப்பப் பட்ட திருப்பாவை விளக்கத்தைக் கேட்குமாறு
பணித்தார்.கேட்கத் தொடங்கினேன், எரிச்சலுடன். முதலில்
புரியவில்லை; போகப் போகப் புரிந்தது; ஈர்த்தது.
அன்று தொடங்கி இன்று வரை ஆண்டாளைப் பிரிந்திலேன்.
முந்தைய வாக்கியத்தில் நான் கூறிய கருக்கல்
என்பது புலர்ந்ததும் புலராத விடிகாலைப் பொழுது.
"விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த
கலை அன்னமே" என்ற கவியரசரின் வரிகள்
கருக்கல் என்பதற்கு விளக்கம் தருபவை.
இன்றும் "பனித்தலை வீழ நின் வாசல்கடை பற்றி" என்ற
ஆண்டாளின் வரிகளைக் கேட்கும் போதெல்லாம்,
அன்று, பாவூர்ச் சத்திரத்தில் பனி பெய்யும் கருக்கலில்
தலையெல்லாம் பனி வீழ நான் வெளியே சென்று வந்த
பொன் பொழுதுகள் நினைவில் மின்னலாடும்.
ஆண்டாள் காலத்துப் பனிக்காலம் மறைந்து விட்டது.
அதற்கும் முந்தைய சங்க காலத்து நெடுநல்வாடை
குறிப்பிடும் வாடைக்காலமும் இன்று தமிழ்நாட்டில் இல்லை.
நல்ல வேளையாக, 10 (அல்லது 11,12) வகுப்புகளுக்கான
நெடுநல்வாடை செய்யுள்களுக்கான விளக்கத்தில்
கோனார் உரைநூலில், "நக்கீரர் குறிப்பிடும் வாடைக்காலம்
இன்று தமிழ்நாட்டில் எங்கணும் இல்லை என்பதை
மாணவர்கள் உணர வேண்டும்" என்று குறிப்பிடப் பட்டு உள்ளது.
இதுதான் உண்மை; இன்றைய மெய்நிலை.
நாம் இயற்கையையும் இழந்து விட்டோம். இன்றைய
மார்கழியில் விடியக் கருக்கலில் சென்னை நகரத்
தெருக்களை வலம் வருகிறேன். ஒரு துளிப்பனி கூட
என் தலையில் வீழக் காணேன்.
நீதியரசர் மு. மு. இசுமாயில் அவர்கள் எழுதிய
திருப்பாவை விளக்க உரையினை புதிய வாசகர்கள்
படிக்கலாம்.(வானதி வெளியீடு என்று நினைவு)
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய
ஆண்டாள் குறித்த கட்டுரைகளைப் படிக்கலாம்.
வலம்புரி ஜான் அவர்கள் எழுதிய திருப்பாவை
விளக்கத்தையும் படிக்கலாம். இவர்கள் எல்லாம் வேற்று
மதத்தைச் சார்ந்தவர்கள் என்ற போதும், அவர்கள்
ஆண்டாளைக் காதலித்தார்கள். அதாவது, தமிழைக்
காதலித்தார்கள். ஆண்டாளைக் காதலிப்பதும்
தமிழைக் காதலிப்பதும் வேறு வேறு அல்ல.
நிற்க. முகநூலில் திருப்பாவை எழுதும் அன்பர்களை
நான் மதிக்கிறேன். அவர்கள் அன்றைய பாசுரத்தை
அன்று காலையிலே, கருக்கல் பொழுதிலேயே எழுதி
விடுவது நல்லது. தங்களுக்கு நேரம் வாய்க்கிற பொழுதில்,
அதாவது முன்னிரவில் அல்லது பின்னிரவில் அன்றைய
பாசுரத்தை எழுதுவதால் பின் விளையாது. திருப்பாவைப்
பாசுரங்கள் இயற்கையோடு இயைந்தவை; கருக்கல்
பொழுதுகளுக்கு உரியவை.
மேலும் திருப்பாவைப் பாசுரங்கள் வாய்விட்டுப்
பாடுவதற்கு ஆனவை. ஆடியோ வீடியோ காசெட்டுகளின்
மூலம் பாசுரங்களைக் கேட்பது மட்டுமே போதுமானது அன்று.
வாய்விட்டுப் பாடக் கற்க வேண்டும். காலப் போக்கில்
மனப்பாடம் ஆகிவிடும்.மேலும் பொருள் உணர்ந்தும்
படிக்க வேண்டும். அப்போதுதான், தமிழும் வசப்படும்.
இப்போது திருப்பாவை அன்பர்களுக்கு எளிய ஒரு கேள்வியை
முன் வைக்கிறேன். "மாயனை மன்னு வடமதுரை
மைந்தனை" என்று தொடங்கும் ஐந்தாம் பாசுரத்தில்
"தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை"
என்ற அடியைக் கருதுங்கள். இங்கு ஆண்டாள் குறிப்பிடும்
தாய் யார்? தேவகியா, யசோதையா? தேவகி கண்ணனைப்
பெற்ற தாய். யசோதை வளர்த்த தாய்என்பதை வாசகர்கள்
அறிந்து இருக்கக் கூடும்.
விடையை எதிர்பார்ப்பதற்கில்லை. எனவே யானே
விடை கூறி விடுகிறேன்.
"தாயைக் குடல் விளக்கம் செய்தல்" என்ற தொடருக்கு,
தாயின் பெருமையை ஊர் அறியச் செய்தல் என்று பொருள்.
"பெற்ற வயிறு விளங்க வைத்தல்" என்ற ஒரு தொடர்
வழக்கில் இருப்பதை இங்கு நோக்கவும். குடல் விளக்கம் என்ற
சொல்லுக்கு முன்னுரிமை தருபவர்கள், ஆண்டாள் இத்தொடரில்
கண்ணனைப் பெற்ற தாயான தேவகியையே குறிப்பிடுகிறாள்
என்று உரை காண்கின்றனர்.
ஆனால், இங்கு "தாமோதரன்" என்ற சொல்லும் கருதத் தக்கது.
குறும்பு செய்யும் குழந்தை கண்ணனை அடக்க, யசோதை
அவனை உரலில் கட்டி விடுவாள்.கயிற்றால் கட்டிக் கட்டி
கண்ணனின் வயிற்றில் தழும்பு உண்டாகி விடும். எனவேதான்
தாமோதரன் என்றும் கண்ணனுக்குப் பெயர்.
தாமம்+உதரன் = தாமோதரன். இச்சமன்பாட்டை நன்கு கருதவும்.
உதரம் என்றால் வயிறு. தாமம் என்றால் கயிறு, கயிற்றால்
விளைந்த தழும்பு. தாமோதரன் என்றால் வயிற்றில் தழும்பு
உடையவன் என்று பொருள். இடுப்பில்தானே கயிற்றைக்
கட்டினாள் யசோதை, இடுப்பு எவ்வாறு வயிறு ஆகும் என்று
ஐயம் கொள்ளும் வாசகர்கள் "இடுப்பு என்பது வயிற்றின்
கீழ்ப்பகுதி" என்பதை உணரவும்.
எனவே, தாமோதரன் என்ற சொல் மூலம் ஆண்டாள் இங்கு
குறிப்பிடுவது யசோதையைத் தான் என்று கருத இடம் உண்டு.
ஆண்டாள் தன்னை ஒரு இடைச்சியாகவே மாற்றிக் கொண்டாள்
என்று கவிக்கோ அப்துல் ரகுமான் கூறுவார். இடைச்சிகளின்
உடலில் வீசும் பால்-தயிர் வாசனை ஆண்டாளின் உடலிலும்
வீசும் வண்ணம் ஆண்டாள் தன்னை மாற்றிக் கொண்டாள்
என்பார் கவிக்கோ.
எனவே, மேற்கூறியவற்றின் மூலம், ஆண்டாள்
"தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரன்" என்ற
தொடரில் யசோதையையே குறிப்பிடுகிறாள் என்பது
அடியேனின் துணிபு.
****************************************************************
பின்குறிப்பு: இப்பதிவு தமிழ் இலக்கிய மாணவர்கள்
ஆர்வலர்களுக்கானது. ஏனையோர்க்கன்று.

நவீன அறிவியலின் தந்தை நியூட்டன் பிறந்தார்!
டிசம்பர் 25, 1642
இன்று 373ஆவது பிறந்த நாள்!
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------
இங்கிலாந்து நாட்டில் பிறந்த இயற்பியல் மற்றும் கணித
அறிஞரான சர் ஐசக் நியூட்டன் நவீன அறிவியலின் தந்தை
என்று போற்றப் படுகிறார். இன்றைக்கு 373 ஆண்டுகளுக்கு
முன்பு, 1642இல் டிசம்பர் 25 அன்று பிறந்த நியூட்டனின்
கோட்பாடுகள் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன.
ஜூலியஸ் சீசரின் பெயரால் வழங்கப் படும் ஜூலியன்
காலண்டர் எனப்படும் காலக் கணித முறையே நியூட்டன்
காலத்தில் இங்கிலாந்தில் பின்பற்றப் பட்டது. டிசம்பர் 25இல்
நியூட்டன் பிறந்தார் என்பது ஜூலியன் காலண்டர்
அடிப்படையில் அமைந்தது. இது பழைய பாணி (Old Style)
நாட்குறிப்பு முறை என வழங்கப் படுகிறது.
தற்போது உலகெங்கும் பின்பற்றப்பட்டு வரும் காலக்
கணக்கு முறை "கிரகோரி காலண்டர்" முறை ஆகும்.
இது அக்டோபர் 15, 1582 முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
போப்பாண்டவர் பதின்மூன்றாம் கிரகோரி (Pope Gregory XIII)
காலத்தில் இது அறிமுகப் படுத்தப் பட்டது. இது புதிய பாணி
நாட்குறிப்பு முறை (New Style) எனப்படுகிறது.
கிரகோரி காலண்டர் முறைப்படி, நியூட்டனின் பிறந்தநாள்
ஜனவரி 4, 1643 ஆகும். நியூட்டன் 84 ஆண்டுகள் வாழ்ந்து
மார்ச் 20, 1726இல் மறைந்தார். கிரகோரி காலண்டரின்படி,
நியூட்டனின் மறைவு 31 மார்ச் 1727 அன்று நிகழ்ந்தது.
நியூட்டன் பரிசோதனை இயற்பியலாளர் (experimental physicist)
மட்டுமின்றி கோட்பாட்டு இயற்பியலாளரும் (theoretical physicist)
ஆவார். மேலும் நியூட்டன் ஒரு மகத்தான கணித அறிஞரும்
ஆவார். கால்குலசை முதன்முதலில் கண்டு பிடித்தவர்
நியூட்டனே. பின்னரே, ஜெர்மன் அறிஞர் காரல் லீபிநிட்ஸ்
கால்குலசைக் கண்டு பிடித்தார். இருவரும் ஒருவரை
ஒருவர் சாராமல் சொந்த முறையில் கால்குலசைக்
கண்டுபிடித்தனர். முதலில் கண்டுபிடித்த நியூட்டன்
தாமதமாகப் பிரசுரித்தார். பின்னர் கண்டுபிடித்த
லீபிநிட்ஸ் முன்னரே பிரசுரித்தார்.
நியூட்டனின் இயக்க விதிகள் (laws of motion), ஈர்ப்புவிசைக்
கோட்பாடு ஆகியவை இன்று உலகில் ஒவ்வொரு
பள்ளி மாணவனாலும் படிக்கப் படுகின்றன. எனவே,
மறைந்த பின்னும் நியூட்டன் வாழ்கிறார். என்றென்றும்
வாழ்வார்.
பின்வரும் எளிய இயற்பியல் கணக்கைச் செய்து,
நியூட்டன் அறிவியல் மன்றத்துடன் இணைந்து,
நியூட்டனுக்கு அஞ்சலி செலுத்த முன்வருக!
2 கி.கி நிறையுள்ள ஒரு பொருளின் மீது செயல்படும் ஒரு
விசையால், அப்பொருள் 1 மீ/second squared என்ற
முடுக்கத்தைப் பெறுகிறது என்றால் அதே விசையானது
10 கி.கி நிறையுள்ள பொருளின்மீது ஏற்படுத்தும்
முடுக்கம் என்ன?
A certain force gives a 2 kg object an acceleration of 1 meter per second squared.
What acceleration would the same force give a 10 kg object?
இது மிகவும் எளிய மனக்கணக்கு. பள்ளி மாணவனால்
செய்ய இயலும்.
******************************************************************

1) ஜெயா அரசு போட்ட வழக்குகள் பொய் வழக்குகள். எனவே
அவற்றைச் சட்ட ரீதியாக எதிர்கொள்வதன் மூலம் உடைத்து
எறிய முடியும் என்பதே எல்லா சட்ட நிபுணர்களின்
கருத்தாக இருக்கிறது. இதன் பேரிலேயே முகிலன் சிறைக்குச்
சென்றுள்ளார்.
2) முகிலன் இதற்கு முன்னரும் ஜெயா அரசால் சிறையில்
அடைக்கப் பட்டுள்ளார், இதே கூடங்குளம் விவகாரத்தில்.
போராட்டக் காரர்கள் பலரும் சிறையில் அடைக்கப் பட்டு
உள்ளனர். தற்போது பிணையில் வெளிவந்துள்ளனரே தவிர,
வழக்கில் இருந்து விடுதலை ஆகவில்லை.
3) ஆனால் திரு உதயகுமார் மட்டிலும் ஒரு நாள் ஒரு பொழுது
கூட சிறைக்குச் சென்றதில்லை. இது பொதுவான தன்மை
அல்ல. உதயகுமாருக்கு மட்டுமே உள்ள "சிறப்பு".
4) பெப்ரவரி 2014இல் இடிந்தகரையில் இருந்து வெளியேறிய
போது, உதயகுமார் கூடங்குளம் போராட்டத்தைக் கைவிட்டு
விட்டார். அவருக்கு ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக எம்.பி
ஆகி விட வேண்டும் என்ற மயக்கம் இருந்தது. எனவே
போராட்டத்தையும், போராட்டக் காரர்களையும் அந்தரத்தில்
விட்டு விட்டு எம்.பி கனவில் மூழ்கிப் போனார்.
5) அணுஉலை எதிர்ப்புப் போராளியான உதயகுமார்
அணுஉலைகளை ஆதரிக்கும் கேஜ்ரிவாலின் கட்சியில்
ஐக்கியமானதை எப்படி நியாயப் படுத்துவது?
6) உதயகுமார் கைவிட்ட போராட்டத்தை முகிலன் ஏற்று
நடத்தினார்.
இவையெல்லாம் அனைவரும் அறிந்த வரலாறே ஆகும்.
மக்களின் போராட்டங்களை மார்க்சிய லெனினியப்
பார்வையில் அணுக வேண்டும். தனிமனிதன் மீதான
குருட்டு விசுவாசத்தின் அடிப்படையில் விஷயங்களைப்
பார்ப்பது மார்க்சிய லெனினிய அணுகுமுறை ஆகாது.

உதயகுமாரின் ஆதரவாளர்கள் இந்தக் கேள்விக்குப்
பதில் தேட முயற்சி செய்தால் நல்லது. 124A உட்பட
பல்வேறு சட்டப் பிரிவுகளில், நூற்றுக் கணக்கான
வழக்குகள் உதயகுமார் மீது போடப் பட்டு இருந்த போதிலும்,
ஒன்றில் கூட அவர் இதுவரை கைது செய்யப்படவில்லையே,
ஏன்? ஜெயா அரசுக்கு எதிராக அவர் ஒரு சிறு பெருமூச்சுக் கூட
விட்டதில்லையே ஏன்?
**
ஜெயா அரசு பாசிச அரசு என்பதை அறியாதோர் யாருமில்லை.
ஆனால் உதயகுமாரைப் பொறுத்தமட்டில் மட்டும் ஜெயா
அரசு அப்படி இல்லையே, அது ஏன்?

உச்சநீதிமன்றம் வரை சென்ற பின்னும் பாதி வழக்குகளே திரும்பப் பெறப்பட்டன. மீதி 100க்கு மேல் உள்ள வழக்குகளை ரத்து செய்ய
ஜெயா அரசு மறுக்கிறது. வழக்கு வாய்தா என்று
போராட்டக் காரர்களின் பிழைப்பும் வாழ்வாதாரமும்
நீதிமன்றங்களில் ஆஜர் ஆவதில் பறிபோய் விடுகிறது.
எனவே சட்ட நிபுணர்களின் கருத்துப்படி இந்த முடிவு
எடுக்கப் பட்டுள்ளது. இது முகிலனின் சொந்த முடிவு அல்ல.
உதயகுமாரைப் போல முகிலன் தேர்தலில் நிற்கவில்லை.
அவர் தேர்தல் அரசியலில் நம்பிக்கையற்ற மா-லெ
இயக்கத்தில் பணியாற்றியவர்.
**
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தை, ஆரம்பம்
முதலே கவனித்து வருகின்ற வாசகர்களை மனதில்
இருத்தி இந்தப் பதிவு எழுதப் பட்டுள்ளது. இதில் பல
விஷயங்கள் (உதயகுமாரின் பாத்திரம் பற்றி)
சொல்லப்படவில்லை. எல்லாவற்றையும் சொல்ல
வேண்டுமெனில் தனிப்பதிவு தேவை.
**
முகிலன் செய்தது சரி என்றால், உதயகுமார் செய்ய மறுப்பது
தவறுதானே!

தோழர் தியாகுவை நன்கு அறிவேன். அவர் மூத்த
மார்க்சிய லெனினியத் தோழர். சாறு மஜும்தார் காலத்திலேயே
இயக்கத்தில் இருந்தவர். நாங்கள் எல்லாம் சாருவின் மறைவுக்குப்
பின்னரே இயக்கத்தில் சேர்ந்தோம். அவர் தூக்குத் தண்டனையில்
இருந்து மீண்டவர்.
ஆம்
தனிப்பட்ட பகையினால் அவர் கொலை செய்யவில்லை.
நக்சல்பாரி இயக்கமானது மக்களின் எதிரிகளைக்
கொலை செய்வது என்று கட்சி ரீதியாக முடிவு
எடுத்தது. கல்லூரி மாணவராக இருந்த தியாகு
நக்சல்பாரி இயக்கத்தில் சேர்ந்து இருந்தார். கட்சி
முடிவின்படி, ஒரு கொடிய பண்ணையாரை கட்சியின்
ஆயுதக் குழு கொன்றது. அதில் அவரும் ஈடுபட்டார்.
மரண தண்டனை பெற்றார். கலைஞர் அவருக்கு
மரண தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்தார்.
கீழைக்காற்று பதிப்பகத்தில் இருந்து நூல் பட்டியல்
கேட்டிருக்கிறேன். அனுப்பி வைக்கிறேன்.
கவலைப் பட வேண்டாம். நான் நாளை மறுநாள் பட்டியல் தருகிறேன்.
தாமதத்திற்கு மன்னிக்கவும்.
தமிழ் நம் தாய். பிறந்தவை அனைத்தும் ஒருநாள்
அழிந்துதான் தீர வேண்டும். ஆனால், தமிழ் சாகும் முன்னால்
நான் செத்து விடுவேன்.
தமிழின் வாழ்நாளை நீட்டிக்கும் விதத்தில்
உறுதியாக எழுதுவேன்.
லெனின்: அரசும் புரட்சியும்
என்ன செய்ய வேண்டும்?
பிளகானவ்: வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம்
ஸ்டாலின்: இயக்கவியல் பொருள்முதல்வாதம்
எங்கல்ஸ்: குடும்பம் தனிச் சொத்து அரசு இவற்றின் தோற்றம்
இவை மூல நூல்கள். இவற்றை விளக்கி ஜார்ஜ் தாம்சன்
எழுதிய மார்க்சிய மெய்ஞானம் படிக்கவும்.
மக்கள் நலக் கூட்டணி மிகவும் தற்காலிகமானது.
தங்களின் பேர சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டி
கம்யூனிஸ்டுகளும் வி.சி.கவும் அதில் இருக்கிறார்கள்.

வியாழன், 24 டிசம்பர், 2015
இந்தப் பதிவு எவ்விதத்திலும் அணுஉலைக்கு ஆதரவாகவோ
எதிர்ப்பாகவோ இல்லை. அப்படி எவ்விதத் தொனியும்
இதில் இல்லை. அணுஉலை ஆதரவு-எதிர்ப்பு என்பது
முற்றிலும் வேறுபட்ட விஷயம்.
**
இந்த வழக்குகள் குறித்தும் மக்களின் அலைக்கழிப்பு
குறித்தும் நான் நிரம்பவே அறிவேன். தோழர் முகிலனையும்
நான் நன்கறிவேன். திடீரென்று அவர் முடிவு எடுக்கவில்லை.
இரண்டு மூன்று மாதங்களாகவே அவர் இந்த வழக்குகள்
குறித்து தொடர்புடைய அனைவரிடமும் பேசி வந்தார்.
அவரின் முடிவு ரகசிய முடிவல்ல.
**
மக்களுக்காக ஒரு முடிவு எடுத்து சிறை சென்று இருக்கக் கூடிய
தோழர் முகிலன் பாராட்டுக்கு உரியவர்.
**
முகிலன் மா-லெ இயக்கத்தில் எங்களைப் போன்ற பலருடன்
தம்மையும் இணைத்துக் கொண்டவர். ஆனால் உதயகுமாரோ
தீவிர கம்யூனிச எதிர்ப்பாளர். இந்த முரண்பாடு முக்கியமானது.
சாதாரண குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினரால்
இதைப் புரிந்து கொள்ள முடியாமல் போகக்கூடும்.
**
மாதம் ஓரிரு முறை நான் நெல்லை செல்லக் கூடியவன்.
ஏனெனில் அது என்னூர்.

இந்தப் பதிவுக்கான தங்களின் தலைப்பு THIRD ROW என்று
ஆங்கிலத்தில் உள்ளது. இதற்கான பல்வேறு பொருட்களைத்
தாங்களும் அறிவீர்கள். தாங்கள் இடம் பெற்றிருப்பது
அந்த THIRD ROWவில் என்று நான் எடுத்துக் கொள்ளலாமா?
அவையடக்கம் கருதியும் தன்னடக்கம் கருதியும் கூறப்
படுகிறவற்றை அப்படியே நேரடிப் பொருளில் தாங்கள்
எடுத்துக் கொள்வது குறித்து நான் வியப்படைகிறேன்.
நன்றி

தங்களின் பதிவு உதயகுமாரின் கள்ள மௌனம் குறித்து
எதுவும் குறிப்பிடாமல் இருப்பது வருத்தம் தருகிறது.
வாய்தா வாய்தா என்று மாதத்தில் 20 நாட்கள் கூடங்குளம்
போராட்டக்காரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆக நேரிடுகிறது.
இதனால் அவர்களின் பிழைப்பு பாதிக்கப் படுகிறது.
ஆனால், போராட்டத் தலைமையில் உள்ள உதயகுமாரும்
பாதிரியார் மை பா ஜெசுராஜனும், மக்களைப் பற்றிக்
கவலை கொள்ளாமல் அலட்சியமாக இருக்கிறார்கள்.
**
தோழர் முகிலன் முன்பு மார்க்சிய லெனினிய இயக்கத்தில்
பணியாற்றியவர். எனவே அவர் சிறை செல்ல அஞ்சியதில்லை;
அஞ்சுவதும் இல்லை. ஆனால் உதயகுமாரோ தொடக்கம்
முதலே கம்யூனிச எதிர்ப்பாளர். சொகுசு வாழ்க்கையில்
இருந்து அவரால் விடுபட முடியாது.
**
"கஷ்ட ஜீவிகள் நாங்கள் கம்யூனிஸ்ட்டுகள்
மார்க்சிஸ்டுகள் நாங்கள் லெனினிஸ்டுகள்"
என்ற மார்க்சிய-லெனினிய இயக்கப் பாடலை
இப்பொழுதில் நினைவுபடுத்திப் பார்க்கலாம்.

முகிலன் சிறை சென்றார்!
கூடங்குளம் உதயகுமார் சிறைசெல்ல மறுக்கிறார்!
-----------------------------------------------------------------------------------
கூடங்குளம் அணுஉலையை எதிர்த்துப் போராட்டங்கள்
நடந்தன. போராடிய மீனவ மக்கள் மீதும் ஆதரவளித்த
பிறர் மீதும் ஜெயா அரசு வழக்குத் தொடர்ந்தது. கூடங்குளம்
மற்றும் அருகிலுள்ள ஊர் மக்கள் மீது நூற்றுக் கணக்கான
வழக்குகளைத் தொடர்ந்து, கோர்ட், வாய்தா என்று
அலைக்கழிக்கிறது ஜெயா அரசு.
உச்சநீதி மன்றம் போராட்டக் காரர்கள் மீதான வழக்குகளை
திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டது. அதன் பேரில், ஜெயா அரசு
பல வழக்குகளைத் திரும்பப் பெற்றது. ஆனால் இன்னமும்
நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் போராட்டக் காரர்கள்
மீது நிலுவையில் உள்ளன.
மாதத்தில் இருபது நாட்கள் எளிய மக்கள் வாய்தா போடப்பட்ட
வழக்குகளில் நீதிமன்றங்களில் ஆஜர் ஆகிறார்கள். இந்த
அலைக்கழிப்பினால் யாரும் தங்கள் பிழைப்பைப் பார்க்க
முடியவில்லை. இதற்கு முடிவுதான் என்ன? எத்தனை
வருடங்கள் வாய்தாவுக்காக அலைய முடியும்?
உழைக்கும் மக்களை இந்த அலைக்கழிப்பில் இருந்து விடுதலை
செய்ய வேண்டும்; தங்கள் பிழைப்பைப் பார்க்க முடியாமல்,
நீதிமன்றங்களின் நெடிய தாழ்வாரங்களில் தங்களின்
வாழ்வாதாரமான உழைப்பை இழக்கும் எளிய மக்களுக்கு
நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை
மேலெழுந்தது. இது எளிய மக்களின் நியாயமான கோரிக்கை.
ஆனால் போராட்டக் குழுவின் தலைமையில் இருக்கும்
உதயகுமாரும் பாதிரியார் மைபா ஜேசுராஜனும் இந்த
மக்களின் கோரிக்கை குறித்துத் துளியும் அக்கறை
காட்டவில்லை.
எனவே தோழர் முகிலன் அவர்கள் சட்ட நிபுணர்களையும்
மக்களையும் தொடர்புடைய அனைவரையும் கலந்து
ஆலோசித்தார். நீதிமன்றத்தில் சரண் அடைந்து வழக்குகளைச்
சந்திப்பதன் மூலமே, வழக்குகளில் இருந்து விடுதலை
பெற முடியும் என்ற ஏகமனதான முடிவு எடுக்கப் பட்டது.
அந்த முடிவைச் செயல்படுத்தும் நோக்கில், தோழர் முகிலன்
நேற்று (23.12.2015) திருச்சி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
ஆனால், மக்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்திய உதயகுமாரும்
மை பா ஜேசுராஜனும் மக்களின் துன்பதுயரங்களின் மீது
பாராமுகமாக இருக்கிறார்கள். அவர்கள் சொகுசுவாசிகள்.
அவர்கள் ஒருநாளும் சிறைக்குச் செல்ல மாட்டார்கள்.
அமெரிக்க மற்றும் சி.ஐ.ஏவின் ஆதரவு இருப்பதால்
சர்வ வல்லமை வாய்ந்த ஜெயாவே உதயகுமாரைக்
கைது செய்ய முடியாது. கூடங்குளம் போராட்டம்
வருடக் கணக்கில் நடந்த போதும், உதயகுமார்
ஒருநாள் கூடக் கைது செய்யப் படவில்லை என்பதை
வாசகர்கள் நினைவு கூரவும்.
தற்போது முகிலன் முடிவெடுத்து சிறைக்குச்
சென்று விட்டார். உதயகுமார் ஜேசுராஜன் மீது
மக்களின் நிர்ப்பந்தம் வலுத்து வருகிறது. ஆனால்
என்ன நடந்தாலும் இருவரும் சிறை செல்ல மாட்டார்கள்.
மக்களைக் காட்டிக் கொடுப்பார்கள்.
***************************************************************

பெரியாரை விமர்சித்து திரு ஜெயமோகன் முன்பே எழுதிய
ஒரு கட்டுரை, தற்போது பெரியாரின் நினைவுநாளை ஒட்டி
மீண்டும் சமூக வலைத் தளங்களில் வலம் வருகிறது.
தங்களைப் போன்ற இலக்கிய ஆளுமைகள் அதற்கு
வலுவான மறுப்பு எழுதுவீர்கள் என்பது எங்களின்
எதிர்பார்ப்பு. ஆனால் தாங்கள் அந்த நியாயமான
எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது குறித்துத் துளியும்
அக்கறைப் படவில்லை என்பது துரதிருஷ்ட வசமானது.
**
எங்களைப் போன்றவர்கள் பெரியார் செயல்பட்ட
காலத்தில் வாழ்ந்தவர்கள். எனவே பெரியாரை நாங்கள்
நேரடியாக அறிவோம். பெரியாரின் செயல்களால்
எங்கள் தலைமுறை பயன் அடைந்தது. எனவே நாங்கள்
பெரியாருக்கு நன்றிக் கடன் பட்டவர்கள்.
**
ஆனால், பெரியாரை அறியாத தலைமுறை இன்று
வந்துவிட்டது. அவர்களிடம் ஜெயமோகனின் கட்டுரைகள்
தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஜெயமோகனின்
கருத்துப் பிடியில் இருந்து, இளைய தலைமுறையை
மீட்க, தங்களைப் போன்ற எழுத்துலக ஆளுமைகள்
பங்களிக்க வேண்டும்.
**
ஆனால், அய்யா, ஜெயமோகனைக் குறித்து எழுத
நேர்கிற போதெல்லாம், தங்களிடம் இருந்து கருத்தியல்
ரீதியிலான மறுப்புகளுக்குப் பதிலாக வெறும் வசவுகளே
வெளிப் படுகின்றன. வசவுகள்! வசவுகள்!! வசவுகள்!!!
**
எனவே "இலக்கியச் சிம்பு" என்ற பட்டம் தங்களுக்குத்தான்
பொருத்தமாக அமைகிறது என்பதை ஆழ்ந்த
வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
**
ஜெயமோகனுக்கு மறுப்புத் தருகிற, சிறந்த இலக்கிய
ஆளுமைகளைத் தேடி நான் அலைகிறேன். ஜெயமோகன்
ஆயுதபாணியாக இருக்கிறார். என்னைப் போன்ற
எளியவர்கள் நிராயுத பாணியாக இருக்கிறோம்.
தாங்கள் ஆயுதம் தருவீர்கள் என்று எதிர்பார்த்து
தொடர்ந்து ஏமாற்றம் அடைகிறோம்.
**
காரித் துப்புவதற்கும் திட்டுவதற்கும் என்னைப்
போன்ற பாமரர்கள் போதுமே அய்யா! அதற்கு
தங்களைப் போன்ற இலக்கிய ஆளுமைகள் எதற்கு?

தமிழகத்தில் இயங்கும் உண்மையான இடதுசாரிக் கட்சிகளான
மாவோயிஸ்டு கட்சி, போல்ஷ்விக் கட்சி, இன்ன பிற
மார்க்சிய-லெனினியக் கட்சிகள் எவையும் தேர்தல் அரசியலில்
பங்கேற்பது இல்லை. தேர்தல் அரசியலில் பங்கேற்கும்
CPI, CPM கட்சிகள் யாவும் போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளே.
இவர்கள் அன்று எம்.ஜி.யாருக்கு முட்டுக் கொடுத்தார்கள்.
இன்று ஜெயாவுக்கு முட்டுக் கொடுக்கிறார்கள். இவர்கள் மீது
மக்கள் எப்படி அய்யா நம்பிக்கை வைப்பார்கள்? சாட்சிக்காரன்
காலில் விழுவதை விட, சண்டைக்காரன் காலில் விழுவதே
நல்லது என்றுதானே மக்கள் நினைப்பார்கள்.
ஒரு அரசியல் பதிவு என்பது பெரும்பாலோரால் படிக்கப் படுவது.
எனவே அப்பதிவு எளிய தமிழில் எழுதப் பட வேண்டும்.
"பொருதுதல்" போன்ற சொற்கள் இலக்கியப் பதிவுக்கானவை.
தமிழ்ச் சூழலில் நாத்திகர் என்பவர் கடவுள் மறுப்பைப்
பிரச்சாரம் செய்பவர். அதாவது நாத்திகர் என்பது நாத்திகப்
பிரச்சாரகர் என்றே நடைமுறையில் பொருள் கொள்ளப் படுகிறது.
ஆனால் ராமானுஜன் அப்படி எந்தப் பிரச்சாரத்தையும்
மேற்கொண்டதில்லை. அவ்வாறு மேற்கொள்ளும்
எண்ணமும் அவருக்கு இருந்ததில்லை. அவரைப்
பொறுத்த மட்டில் தொடக்க காலத்தில் இறையருளால்
தமது மேதைமை உருவாகியதாகக் கருதினார்.
பின்னாளில், இறையருளால் உண்டாவது அல்ல
மேதைமை என்று அவர் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கக் கூடும்.
இறுதிக்கும் இறுதியில் அவர் இறைவன் என்பது ஒரு
கற்பிதமே என்று உணர்ந்து இருக்கக் கூடும்.
மக்கள் திமுகவை நான் நன்கறிவேன். அதன் தொடக்க
விழாக் கூட்டத்துக்கு நான் சென்றிருந்தேன். மிகுந்த
முற்போக்குக் கொள்கைகளைச் சொன்னார்கள். எந்தத்
தலைவரின் பெயரோடும் அவருக்குள்ள பட்டத்தைப்
போடக்கூடாது என்றார்கள். அதன்படியே நாவலர் பட்டம்
நீக்கப் பட்டு இரா நெடுஞ்செழியன் என்றே சுவரொட்டிகளில்
அச்சடிக்கப் பட்டது. ஊழல் குற்றச்சாட்டுக்கு இலக்கான
ப உ சண்முகத்தையும் மக்கள் திமுகவில் சேர்த்துக்
கொண்டனர். இறுதியில் ராமச்சந்திர மேனனின்
திருவடியில் சரண் அடைந்து அவரை மூச்சுக்கு
முன்னூறு தரம் புரட்சித் தலைவர் என்று அழைத்து
கொள்கைக்குக் கொள்ளி வைத்தனர்.