செவ்வாய், 31 மே, 2016

திசைவேகத்தை கிடைமட்டத் திசைவேகம் என்றும்
செங்குத்துத் திசைவேகம் என்றும் இரண்டாகப்
பிரிக்கிறோம். இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில்
ஒரு கணக்கை முன்பே பார்த்தோம்.
**
வட்டப்பாதையில் செல்லும் ஒரு புள்ளி
accelerationஐப் பெறுகிறது. இந்த accelerationஐ
radial acceleration என்றும் tangential acceleration என்றும்
இரு கூறுகளாகப் பிரிக்க மாணவர்கள் கற்றுக்
கொள்ள வேண்டும். இதை வலியுறுத்தவே
இந்தக் கணக்கு.   
(5) நீட் தேர்வுக்கு தயார் ஆவோம்!
இயற்பியல், XI PORTION, (circular motion)
எளிய கேள்வி! காரின் முடுக்கம் என்ன?
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------- 
A car is travelling on a circular road of radius 500 m. At some instant
its speed is 30 m/s and is increasing at the rate of 2 m/ second squared.
Find its acceleration.

500 மீ ஆரமுள்ள ஒரு வட்டச் சாலையில் ஒரு கார் செல்கிறது.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில், அதன் வேகம் வினாடிக்கு 30 மீ
ஆகவும் 2m/second squared என்ற வீதத்தில் அதிகரிப்பதாகவும் 
இருந்தது. எனில், அக்காரின் முடுக்கத்தைக் காண்க.
****
விடைகள் தெரிந்தோர் எழுதலாம். எமது விடை
பின்னர்  வெளியிடப்படும்.
இக்கணக்கு IIT தேர்வின் முந்தைய வினாத்தாளில்
இருந்து எடுக்கப் பட்டது. Please note: English version of the
question is official and authentic.
***************************************************************
(4) நீட் தேர்வுக்கு தயார் ஆவோம்!
இயற்பியல், XI PORTION, (collissions, conservation of momentum)
மோதும் பந்துகள்! மோதலின் பின் வேகம் என்ன?
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------
A steel ball of radius 2 cm is initially at rest on a horizontal
frictionless surface. It is struck head on by another steel ball of
radius 4 cm, travelling with a velocity of 81 cm/s. Determine
the velocity of the first ball (of radius 2 cm) after the collision.
Assume the collision to be elastic.

2 செ.மீ ஆரமுள்ள ஒய்வு நிலையிலுள்ள ஒரு
எஃகுப் பந்து உராய்வு ஏதுமற்ற ஒரு கிடைமட்ட
மேற்பரப்பில் உள்ளது. இந்தப் பந்துடன்
4 செ,மீ ஆரமுள்ளதும், வினாடிக்கு 81 செ.மீ
திசைவேகம் உள்ளதுமான இன்னொரு எஃகுப்
பந்து நேருக்கு நேர் மோதுகிறது. இந்த மோதலுக்குப்
பின், முதல் பந்தின் (2 செ.மீ ஆரமுள்ளது) திசைவேகம்
என்ன? இந்த மோதல் மீள்தன்மை கொண்டதாகக்
(elastic) கருதவும்.
***********   
விடைகள் தெரிந்தோர் எழுதலாம். எமது விடை
பின்னர்  வெளியிடப்படும்.
இக்கணக்கு IIT தேர்வின் முந்தைய வினாத்தாளில்
இருந்து எடுக்கப் பட்டது. Please note: English version of the
question is official and authentic.
***************************************************************

திங்கள், 30 மே, 2016

உள்ளாட்சித் தேர்தலில் புதிதாக எந்தக்
கட்சியையும் சேர்ப்பதில்லை என்ற கலைஞரின்
முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை. உள்ளாட்சித்
தேர்தல் இன்னும் நாலைந்து மாதங்களில்
அக்டோபரில் வரும். இந்தப் பதிவு 2019
நாடாளுமன்றத் தேர்தல் பற்றிப் பேசுகிறது.
**
காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கும்
விஜயகாந்த்-பிரேமலதாவுக்கு 2 எலும்பு,
போலிக் கம்யூனிஸ்ட்களுக்கு தலா ஒரு எலும்பு,
என்று மொத்தமே 4 எலும்பு கொடுக்க்கலாமே.
(எலும்பு என்பது தொகுதியைக் குறிக்கும்)
 வெற்றி வாய்ப்பு குறைவான தொகுதிகளாகப்
பார்த்து இவர்களுக்கு ஒதுக்கினால் வாலாட்டி
விட்டுப் போவார்கள். இதில் தவறு என்ன?

யார் வந்தாலும் ஒரு தொகுதிதான்.
மன்னிப்புக் கேட்டால்தான் அதுவும்.

மன்னிப்புக் கேட்டுக் காலில் விழுந்து கதறும்
இவர்களை மன்னித்து, இவர்களை
அடிமையாக்குவதில் என்ன தவறு?

மன்னிப்பதில் தவறில்லை. அதுவே சிறந்த
ராஜதந்திரம். ஆனால் கொடுக்கும் எலும்புகளைக்
கறாராகக் குறைத்துக் கொடுக்க வேண்டும்.
இது அவர்களை அழிப்பதற்கு ஒரு நல்ல வழி.
விஜயகாந்துக்கு மொத்தமே 2 எலும்பு கொடுத்து
அவனை அழிப்பதில் என்ன தவறு?


ethiryai mandiyida vaippathuthaan sirantha raajathanthiram.

எதிரியை மண்டியிட வைப்பதுதான் சிறந்த ராஜதந்திரம்.
கோமாளி விஜயகாந்தும் பிரேமலதாவும் கலைஞர்
காலடியில், ஸ்டாலின் காலடியில், துரைமுருகன் காலடியில்
விழுந்து சேவிப்பதில் உங்களுக்கு என்ன வருத்தம்?


தீண்டாமை என்பது மன உணர்வில் செயல்படுகிறது
என்றார் அண்ணல் அம்பேத்கர் ஓரிடத்தில். அதை
வைத்துக் கொண்டு தீண்டாமை என்பது மனம்
சார்ந்தது என்று முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
அதைத்தான் மிகவும் கொச்சையாக தீண்டாமை
என்பது வெறும் கருத்துமுதல்வாதம் என்கிறார்கள்.
இது உண்மையல்ல.

காலில் விழுந்து வணங்கும் விஜயகாந்தை விரட்டி
விட்டால், அவனை பாஜக சேர்த்துக் கொண்டு,
அவனை வைத்து ஆதாயம் அடையப் பார்ப்பார்கள்.
ஆனால் கோமாளிக்கு பாஜகவுடன் சேர்ந்தால் பயனில்லை.
எனவே கலைஞரிடம்தான் வருவான். வந்தாக
வேண்டும். வந்தவனை மன்னித்து 2 எலும்பு கொடுத்தால்
போதுமே. காலத்துக்கும் அவன் அடிமையாகத்தானே
வாழ்ந்தாக வேண்டும். இங்கு விவேகம் தேவை.
 

நீங்கள் சொல்வது சிறந்த ராஜதந்திரம் என்று
நிரூபியுங்கள். நான் ஏற்றுக் கொள்கிறேன்.
இங்கு விவேகம் முக்கியம்: வேகம் அல்ல.
மன்னிப்புக் கேட்டு திமுக கூட்டணியில்
சேர்ந்த மறு கணமே, அந்தக் கோமாளியின்
கட்சி அழிந்து விடும் என்ற உண்மையைப் பார்க்க
ஏன் மறுக்கிறீர்கள்? தரகன் தமிழ்க் கிருமியைப்
போல, இந்தக் கோமாளி எங்காவது ஓட வேண்டிய
நிலை வரும். 2021 தேர்தலுக்கு கோமாளியின்
கட்சியே இருக்காது.
**
உலக வரலாறு கண்டும் கேட்டும் இராத
சாணக்கியரான கலைஞர் கோமாளியையும்
அவன் கட்சியையும் 2021 தேர்தலுக்குள்
அழித்து விடுவார்.


தாங்கள் இடித்துரைத்தது சரியே; நியாயமே.
ஏற்கிறேன். வெறுப்புச் சொற்கள் நிறைந்த
மொழிநடையை மாற்றுகிறேன்.
தவிர்க்க வேண்டியது தவிர்க்கப் படும்.
சமயங்களில் நான் காலரிக்கும் வாசிக்க
வேண்டியுள்ளது. அதனால்தான் இப்படி.
**
எப்போதுமே ராஜமேளம் வாசித்துக் கொண்டிருந்தால்
எல்லோருக்கும் ஏற்புடையாதாகுமோ? எனவே
அவ்வப்போது நையாண்டி மேளம் வாசிக்க
வேண்டிய தேவை நேரிட்டு விடுகிறது. என்றாலும்



வம்பதாங் களபம் என்றேன் பூசும் என்றாள்
மாதங்கம் என்றேன் நாம் வாழ்ந்தோம் என்றாள்.
 
இது தவிர்க்கப் படும். உறுதி அளிக்கிறேன்.

மன்னிப்புக் கேட்டால் மட்டுமே கூட்டணி!
---------------------------------------------------------------------------
2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி
வைக்காத கட்சிகள், தற்போது மாறிய சூழ்நிலையில்,
திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்புகின்றன.

அப்படிக் கூட்டணி சேர விரும்பும் கட்சிகள்
திமுகவிடம் மன்னிப்புக் கேட்டால் மட்டுமே
அவர்களைக் கூட்டணியில் சேர்த்துக் கொள்வது
பற்றி திமுக பரிசீலிக்கும் என்று திமுக தலைமை
முடிவு எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அப்படி முடிவு எடுக்கப் பட்டிருக்குமேயானால்,
அது வரவேற்கத்தக்கது என்ற கருத்தே திமுகவின்
அணிகள் ஆதரவாளர்கள் மத்தியில் நிலவுகிறது.

கோமாளி விஜயகாந்தும் பிரேமலதாவும்
கோபாலபுரம் வந்து கலைஞரிடம் மண்டியிட்டு
மன்னிப்புக் கேட்கும் நாள் வெகுதொலைவில்
இல்லை என்கிறார்கள் திமுக இரண்டாம்நிலைத்
தலைவர்கள்.
*************************************************************  
வின் டி.வி.யில் விவாதம்!
---------------------------------------------
நாள்: செவ்வாய் 31.05.2016 காலை 11 மணி to 12.
மறு ஒளிபரப்பு: 31.05.2016 இரவு 8 to 9.
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் பங்கேற்பு!
பொருள்:
-------------------
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டமும்
அகில இந்தியத் தேர்வுகளில் தோல்வியுறும்
தமிழக மாணவர்களும்.
**************************************************************
திரு பிரகாஷ் பொற்செழியன், வீரராகவன், ஜான் ஆகியோரின் 
கருத்துகள்/விவாதங்கள் கணக்கைச் செம்மைப் படுத்தி 
உள்ளன. இந்தக் கணக்கு மிகவும் புகழ் பெற்ற கணக்கு.
வகுப்பில் பாடம் எடுக்கும்போது இந்த portion எல்லாம் 
மிகவும் dry ஆக இருக்கும் என்று மாணவர்களில் பலரும் 
கருதுவார்கள். இது போன்ற கணக்குகள் இந்த வறண்ட 
பாடத்துக்குச் சுவை ஏற்றுபவை. 


மொத்தமே தேர்வு நேரம் என்பது 3 மணி நேரம்தான். 
அதாவது 180 நிமிடம்தான். 180 கேள்விகள் இருக்கும்.
ஒரு கேள்விக்கு 1 நிமிடம் என்பது சராசரியாகக் 
கிடைக்கும் நேரம். ப்ளஸ் டூ தேர்வு மாதிரி எழுதிய 
விடையை சரிபார்க்க என்று 5 நிமிடம் ஒதுக்க முடியாது.
நெகடிவ் மதிப்பெண் உண்டு. எனவே தீர்மானமாக 
முடிவு எடுத்த பிறகே  விடை எழுத வேண்டும்.
**
கணக்குகள் கொடுப்பதே conceptஐப் புரிந்து கொள்ளத்தான்.
இதில்  practice makes a man perfect என்பதுதான் வெற்றிகரமான பாதை.

சரியான விடையும் விளக்கமும்:
---------------------------------------------------------------

பையன் பந்தைப் பிடித்து விடுவான். இதுவே சரியான விடை.
பந்தின் திசைவேகம் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட வேண்டும்.
செங்குத்துக்கூறு, கிடைமட்டக்கூறு என்று.
செங்குத்துக்கூறு பற்றிக் கவலயில்லை. 
கிடைமட்டக்கூறின் வேகம் = 0.5 (cos 60=0.5)
பையனின் வேகம்= பந்தின் பாதி வேகம்= 0.5
**
கிடைமட்டக்கூறின் வேகமும் பையனின் வேகமும் சமம்.
எனவே பையன் பந்தைப் பிடித்து விடுவான்.
**  
பின்னூட்டங்கள் வாயிலாக இக்கணக்கிற்கு 
செழுமையான விளக்கம் அளித்த அனைவருக்கும் நன்றி. 
இந்தக் கணக்கில் angle of inclination with the horizontalஐ 30, 45
என்று மாற்றினால் வேறு விடை கிடைக்கும். அதே போல்
பையனின் வேகத்தையும் மாற்றினால் கிடைக்கும்
விடை மாறுபடும். 
(3) நீட் தேர்வுக்கு தயார் ஆவோம்!
இயற்பியல், XI PORTION, (projectile motion)
பையன் பந்தைப் பிடிப்பானா?
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
தரையின் ஓர் இடத்தில் இருந்து ஒரு பந்தை
கிடைமட்டமாக வீசுகிறார் ஒருவர். பந்து
கிடைமட்டத்தோடு 60 டிகிரி கோணத்தை
ஏற்படுத்துகிறது. அதே கணத்தில் ஒரு பையன்
பந்தின் வேகத்தில் பாதியுடன் பந்தைப் பிடிக்க
ஓடுகிறான். பையன் பந்தைப் பிடிப்பானா?
**
At a point on the ground a man throws a ball horizontally
with an inclination 60 degrees to the horizontal. At the same
instant a boy starts running with half the speed of the ball
to catch it. Will the boy catch the ball?

விடைகள் தெரிந்தோர் எழுதலாம். எமது விடை
இன்று இரவு வெளியிடப்படும்.
Please note: English version of the
question is official and authentic.
***************************************************************

(2) நீட் தேர்வுக்கு தயார் ஆவோம்!
இயற்பியல், XI PORTION, (projectile motion)
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------
1960 மீ உயரத்தில் கிடை மட்டமாகப் பறக்கும்
ஒரு விமானத்தின் வேகம் மணிக்கு 600 கி.மீ.
தரையில் உள்ள A என்ற புள்ளிக்கு நேர்செங்குத்தாக
விமானம் வரும்போது, விமானத்தில் இருந்து
ஒரு பொருள் கீழே போடப்படுகிறது. அந்தப் பொருள்
தரையில் B என்ற புள்ளியில் விழுகிறது என்றால்,
A,Bக்கு இடையிலான தொலைவு என்ன?
**
An aeroplane is flying horizontally with a speed of 600 kmph
at a height of 1960 m. When it is vertically above the point A on
the ground, a body is dropped from it. The body strikes the ground
at point B. Calculate the distance AB.
**
விடைகள் தெரிந்தோர் எழுதலாம். எமது விடை
பின்னர் வெளியிடப்படும்.
Please note: English version of the
question is official and authentic.
***************************************************************

1960 மீ என்பதில் வியப்படைய என்ன உள்ளது?
ஒரு விமானம் எப்போதும் 36,000 அடி உயரத்தில்தான்
பறக்க வேண்டுமா? Gaining as well as losing the altitude is natural.
பயணிகள் விமானம் பறக்கும் உயரம் வேறு. ஜெட்
விமானங்கள் பறக்கும் உயரம் வேறு. போர் விமானங்கள்
தாழப் பறக்கும். தாழப் பறக்கும்போதுதான் இலக்கைத்
துல்லியமாக  அடையாளம் கண்டு குறி தவறாமல்
குண்டு வீச முடியும்.


தோல்வியின் உளவியல்!
-------------------------------------------------
இதுவரை நடைபெற்ற வேறு எந்தத் தேர்தலையும் விட
2016 சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள்
மிகவும் அதிகம். இது arithmetic கணக்கு அல்ல.

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே
வென்று இருக்கின்றன. மற்றவர்கள் ஒரு
அடையாளத்துக்குக் கூட வெல்லவில்லை.

மூன்று முதலமைச்சர் வேட்பாளர்கள் படுதோல்வி!
அதிலும் இருவருக்கு டெப்பாசிட் கந்தல்!
நிதியமைச்சராக அறிவிக்கப் பட்டவர்,
கல்வி அமைச்சராக அறிவிக்கப் பட்டவர்
(கவனிக்கவும்: அறிவிக்கப் பட்டவர்)
மதுரையில் பதவிப் பிரமாணம் எடுக்கக்
காத்திருந்தவர் என்று மிகப் பலரை
செல்லாக்காசாக்கி விட்டனர் மக்கள்.
இதில் ஒருவர் சாகும்வரை அரசியலுக்கு வரமாட்டேன்
என்று ஓடிப்போய் விட்டார்.

எனவே, தோல்வியின் துக்கத்தில் இவர்கள்
அதீதமாக உளறக்கூடும். அவ்வாறு உளறுவதற்கு
அவர்களுக்கு முழு உரிமை உண்டு.

நாம் செய்ய வேண்டுவதெல்லாம் அவர்களின்
உளறலைப் பொருட்படுத்தாமல் இருப்பதுதான்.
எனவே, தோற்றுப் போனவர்கள், வீடுகளில்
இழவு   விழுந்தவர்கள், பகல் கனவு கண்டவர்கள்
இத்தியாதி நபர்கள் இத்தருணத்தில் தங்களின்
துக்கத்துக்கு வடிகால் தேடுவார்கள்.

ஒரு பூகம்பம் வராதா, பாக்கிஸ்தான்காரன்
அணுகுண்டு போடமாட்டானா என்றெல்லாம்
அவர்கள் மனம் ஏங்கக் கூடும். பித்துப் பிடித்த
இந்த மனநிலையில் இருந்து அவர்களால்
மிக மெதுவாகத்தான் வெளியேற முடியும்.

இதை உணருங்கள். தோற்றுப் போனவன், அவனை
ஆதரிப்பவன் இத்தியாதி ஆட்கள் என்ன
வேண்டுமானாலும் பேசி விட்டுப் போகட்டும்.
கண்டு கொள்ளாதீர்கள். குறிப்பாக தேமுதிக, பாமக
ஆட்களிடம் வாதம் செய்ய வேண்டாம்.

அதே நேரத்தில், பாஜக நண்பர்களிடம் பேசலாம்.
அதில் தவறில்லை. ஏனெனில் தாங்கள் வெற்றி
பெறுவதாக அவர்களுக்கு கனவுகூட வந்ததில்லை.
ஹெச், ராஜாவைப் பாருங்கள். வெற்றி பெற்றவர்களை
விட அதிக மகிழ்ச்சியாக இருக்கிறார். அவர்
எதிர்பார்த்ததை விட 13 வாக்குகள் அவருக்கு
அதிகமாக விழுந்திருக்கிறதாமே!
********************************************************************
  
இது டாக்டர் அன்புமணி அவர்களுக்கு எதிரான
பின்னூட்டமோ அல்லது அன்புமணி அவர்களைக்
குறைத்து மதிப்பிடும் பின்னூட்டமோ அல்ல. இது
மோகன்ராஜ் அண்ணாச்சி அவர்களுக்கு ஒரு
விஷயத்தைக் கூறுவதற்காக எழுதப்பட்டது.
**
எவரேனும் ஒரு மின்னணுப் பொறியாளரிடம்
கருத்தைப் பெற்று, அதன் அடிப்படையில்
நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம்
என்ற நோக்கத்தில் கூறப்பட்டது.
**
அன்புமணி அவர்கள் ஒரு அரசியல்வாதி. அதிலும்
முதலமைச்சர் வேட்பாளராக இருந்தவர். எனவே
அவர் உள்ளிட்ட எல்லா விதமான அரசியல்வாதிகளின்
கருத்தைத் தவிர்த்து விட்டு, துறை சார்ந்த
நிபுணர்களின் கருத்தைப் பெற்று, தேர்தல்
ஆணையத்திலோ நீதிமன்றத்திலோ அண்ணாச்சி அவர்கள் வழக்குத் தொடுக்கலாம் என்ற நோக்கத்தில்
எழுதப்பட்டது.
**
அன்புமணி அவர்கள் உட்பட எந்த ஒரு அரசியல்வாதிக்கும்
எதிரான பதிவு அல்ல இது. 
  

ஞாயிறு, 29 மே, 2016

பத்து நூல்கள் வெளியீடு!
பத்தும் காத்திரமான இடதுசாரி நூல்கள்.
வெளியீடு: புதுமைப் பதிப்பகம்.
நாள்: 21.05.2016 சென்னை மாலை 6 மணி
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றத் தலைவர்
தோழர் பி இளங்கோ அவர்கள்
நூல் வெளியீட்டு விழாவுக்குத் தலைமை
ஏற்றார்.
உடன் பங்கேற்பு:
தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு
தோழர் வழக்கறிஞர் சங்கரசுப்பு.
மற்றும் பலர்.
புதுமை பதிப்பகம் தொடர்புக்கு:
திரு பிரதீப்: 72002 60086.
---------------------------------------------------------------------------------------


விடையும் விளக்கமும்
==========================
சரியான விடை= 3333.33 மீட்டர்.
திரு வேல்முருகன் சுப்பிரமணியன், திரு ஜான் ரூபர்ட்
ஆகிய இருவரும் சரியான விளக்கம் அளித்துள்ளனர்.
இயற்பியல் கணக்குகளில் units மிகவும் முக்கியம்.
kmph இலுள்ள வேகத்தை கணக்கின் தேவைக்கு ஏற்ப
meter per second என மாற்ற வேண்டிய தேவை வரும்.
**
இங்கு இந்த இடத்தில்,
தொலைவு = வேகம் * காலம்
= 600 *1000/3600 * 20
= 120000/36 = 3333.3 மீட்டர்
1000/3600 என்று unit conversion செய்யாமல் இக்கணக்கைச் 
சரியாகச் செய்ய முடியாது. வழக்கமாக இந்த இடத்தில் 
1000/3600க்குப் பதிலாக, நாம் 5/18ஐப் போடுவோம்.
இந்த இடத்தில் கவனம் தேவை.
5/18 என்ற conversion factorஐ இயல்பாகப் பயன்படுத்தும் 
கலை கைவர வேண்டும். மற்றப்படி, இந்தக் கணக்கில் 
மூளைக்கு வேலை எல்லாம் எதுவும் இல்லை. 


விடையும் விளக்கமும் 
------------------------------------------
சரியான விடை: கயிறு அறுந்து விடும்.
விளக்கம்:
------------------
குரங்கின் மீது இரண்டு விசைகள் செயல்படுகின்றன.
குரங்கின் எடை மற்றும் கயிற்றின் விறைப்பு.
எனவே, T-Mg = Ma
which implies, T = Mg+Ma
= (40x 9.8)+ (40X6)
= 632 N
But the rope can withstand only  550 N. So the rope will break.


அண்ணாச்சி,
அன்புமணி ஒரு மருத்துவரே தவிர மின்னணுப் பொறியாளர் அல்ல.
இரத்த ஓட்டம் பற்றியோ எலும்புத் தேய்மானம் பற்றியோ 
அவர் கூறினால் அது மதிக்கப்படும். மின்னணு EVM குறித்து 
அவர் கூறினால் அது ஏற்கப்படாது. உங்களுக்கு இதில் 
ஆர்வம் இருந்தால் தகுதி வாய்ந்த மின்னணுப் பொறியாளரை 
அணுகுங்கள்.
**
இரண்டாவது, அண்ணாச்சி வெறும் 60 ஓட்டும் 77 ஓட்டும் 
வாங்கி இருக்கிறீர்கள். உங்கள் திறமையை உழைப்பை 
தேர்தலில் வீணடிக்காமல் உருப்படியான வேலைகளைச் 
செய்து வரலாற்றில் இடம் பெறுங்கள். 



கமல் ரஜனி அரசியலுக்கு வருவதாக இல்லை.
அடுத்து அஜித் விஜய்தானே. இந்த இரண்டு விரலில்
ஒன்றைத் தொட வேண்டியதுதானே.
நடிகர் அஜித்துக்கு லெனின் விருது!
சீத்தாராம் எச்சூரி வழங்குகிறார்!
-------------------------------------------------------------------
தகுதியானவர்களை அடையாளம் கண்டு
அவர்களுக்கு மார்க்ஸ் லெனின் விருதுகளை
வழங்குவதன் மூலம் கம்யூனிசத்தை வளர்க்கலாம்
என்ற உயர்ந்த நோக்கம் மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ
தலைவர்களுக்கு உண்டு. இந்த அடிப்படையில்தான்
தளி ராமச்சந்திரனுக்கு காரல் மார்க்ஸ் விருது
வழங்கப்பட்டது.

நடிகர் அஜித் தமது படங்களில் புரட்சிகர மற்றும்
மார்க்க்சியக் கருத்துகளைப் பரப்பி வருகிறார் என்று
மார்க்சிஸ்ட் அறிஞர்கள் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

அஜித் நடித்த ரெட் (RED) திரைப்படம் கம்யூனிசக்
கொள்கைகளை மக்களிடம் பரப்புவதில்
முதலிடம் வகிக்கிறது என்று பொலிட்பீரோ கருதுகிறது.

அந்த வகையில் நடிகர் அஜித்துக்கு லெனின் விருது
வழங்கி கௌரவிக்க பொலிட்பீரோ முடிவு செய்துள்ளது.
இது விஷயமாக நடிகர் அஜித்திடம் தேதி வாங்க
ஜி ராமகிருஷ்ணன் முடிவு செய்துள்ளார். அஜித்
தேதி கொடுத்த பின்னர் நேரு உள்விளையாட்டு
அரங்கில் வைத்து அஜித்துக்கு லெனின் விருது
வழங்கப்பட உள்ளது என்று இடதுசாரி அன்பர்கள்
தெரிவிக்கின்றனர்.

ஜிந்தாபாத் ஜிந்தாபாத்
நடிகர் அஜித் ஜிந்தாபாத்!
இன்குலாப் ஜிந்தாபாத்!
**********************************************************************


சனி, 28 மே, 2016

பொருள் உற்பத்தி சார்ந்த அனைத்துச் சொற்களும்
ஆங்கிலத்தில்தான் உள்ளன. ஏனெனில் சமூகத்தின்
மொத்தப் பொருள் உற்பத்தித்துறையில் தமிழ்
இல்லை.
**
வீரவநல்லூரில் உள்ள எங்கள் மக்களை விட
தமிழ்ப்பற்று மிகுந்தோர் உலகில் யாரும் இல்லை.
அவர்களின் பேச்சு வழக்கில் மிக இயல்பாக,
வாஷிங் மெசின், லேத், டயர், டியூப்பு, லைட்டு,
டி.வி., ஃபோன், பிரிச்சு (Refrigerator), சுச்சு  (switch)
குக்கர், விசில், ஃபேன் (fan), மில்லு (mill), பேட்டரி லைட்டு
(கஞ்சிக்கு லாட்டரி, கையிலே பேட்டரி என்று
பழமொழியே உண்டு)...... இவ்வாறு பல சொற்கள்
புழக்கத்தில் உள்ளன.
**
இதில் மக்களைக் குறை சொல்ல என்ன இருக்கிறது?
சமூகத்தின் பண்ட உற்பத்தியில் இடம் பெற இயலாத
மொழி வழக்கு வீழ்ந்து போவது இயற்கையே.         
மருத்துவ நுழைவுத் தேர்வும்
சிவில் சர்வீஸ் தேர்வும்!
----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------
1) சிவில் சர்வீஸ் தேர்வு வேலைக்கான தேர்வு. இதில்
தேறியவுடன் வேலை கிடைக்கும்.
2) படித்துப் பட்டம் பெற்ற பட்டதாரிகள் மட்டுமே
சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்க முடியும்.
3) சிவில் சர்வீஸ் தேர்வு என்பது ஒற்றைத் தேர்வு அல்ல.
priliminary, main, interview என்று பல தேர்வுகளின் தொகுப்பு.
4) சிவில் சர்வீஸ் தேர்வு வயது வந்தோருக்கு (adults)
நடத்தப் படும் தேர்வு.
**
மாறாக, மருத்துவ  நுழைவுத் தேர்வு என்பது
(NEET அல்லது CET,அல்லது தமிழ்நாட்டில்
முன்பிருந்த TNPCEE)
1) வேலைவாய்ப்புக்கான தேர்வு அல்ல. படிப்பதற்காக
நடத்தப்படும் தேர்வு.
2) இது ADULTக்கானது அல்ல. குழந்தைகளுக்கானது.
மருத்துவ சேர்க்கை எந்த ஆண்டு நடைபெறுகிறதோ,
அதற்கு முந்திய ஆண்டு டிசம்பர் 31இல் 17 வயது (பதினேழு)
கடந்துள்ள குழந்தைகள் மட்டுமே இத்தேர்வை எழுத
முடியும்.
3) இது படிப்பதற்கான வெறும் நுழைவுத் தேர்வு
என்பதால், மாணவனின் ஆளுமையோ IQவோ
சோதிக்கப் படுவதில்லை. அதற்குத் தேவையும் இல்லை.
4) எனவே இது ஒற்றைத் தேர்வாக, மூன்று மணி
நேரத்தில் சகலமும் முடிந்து விடுவதாக மட்டுமே
இருக்கிறது. இருக்க வேண்டும்.
5) படிக்கப் போகிறவனைத் தேர்வு செய்வதும்,
படித்து முடித்தவனைத் தேர்வு செய்வதும் ஒன்றல்ல.
இரண்டின் அடிப்படையும் கோட்பாடும் வேறானவை.

எனவே, எந்த நிலையிலும் ஒரு மருத்துவ நுழைவுத்
தேர்வானது சிவில் சர்வீஸ் தேர்வு போன்று
இருக்கக் கூடாது. குருவி தலையில் பனங்காயை
வைக்கக் கூடாது.        
நடிகர் அஜித்தைச் சந்திக்க
சென்னை வருகிறார் சீத்தாராம் எச்சூரி!
--------------------------------------------------------------------------
இனி விஜயகாந்த் போணியாக மாட்டார் என்று
ஏகமனதாகத் தீர்மானித்து விட்டது மார்க்சிஸ்ட்
பொலிட்பீரோ. டெப்பாசிட் இழந்து கந்தலாகிப்
போன விஜயகாந்தை இனிமேலும் ஆதரித்துக்
கொண்டிருந்தால், பாடை உறுதி என்று தெளிவாக
உணர்ந்து கொண்டனர் பொலிட்பீரோ தலைவர்கள்.

பூர்ஷ்வா கட்சிகள் எல்லாம் நிகழ்காலத்தைப் பற்றி
மட்டுமே சிந்திக்கும். ஆனால் மார்க்சிஸ்ட்
சித்தாந்தவாதிகளான பொலிட்பீரோ அறிஞர்கள்
எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்க
தரிசனத்துடன் தான் நிகழ்காலத்தை அணுகுவார்கள்.

அந்த வகையில், இன்னும் 5 ஆண்டுகள் கழித்து
வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில்
யாரையாவது சினிமா பிரபலத்தை முன்னிறுத்தி,
அவரை முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்கி
அதன் மூலம் கட்சியையும் கம்யூனிசத்தையும்
வளர்க்க முடிவு செய்துள்ளனர் பொலிட்பீரோ
தலைவர்கள்.

அந்த வகையில் தமிழில் முன்னணி ஹீரோவாக
இருக்கும் நடிகர் அஜித் மீது பொலிட்பீரோ
அறிஞர்களின் பார்வை விழுந்துள்ளது. முன்னதாக
அஜித் நடித்த பல்வேறு படங்களின் சி.டி.க்களைப்
போட்டுப் பார்த்துள்ளனர் பொலிட்பீரோ மேதைகள்.
இதில் அஜித் நடித்த வாலி படம் மிகவும் பிடித்துப்
போய் விட்டதாம் பிருந்தா காரத்துக்கு. அஜித் தான்
தமிழக முதல்வர் என்று ஒரே போடாகப் போட்டு
விட்டாராம் பிருந்தா. 

இதைத் தொடர்ந்து நடிகர் அஜித்தை 2021இல்
தமிழக முதல்வராக ஆக்குவதற்கு உடல் பொருள்
ஆவியை அர்ப்பணிக்கத் தயாராகி விட்டனராம்
பொலிட்பீரோ மேதைகள்.

2020இல் அஜித் கட்சி ஆரம்பிப்பது என்றும் 2021இல்
அஜித் முதல்வர் ஆவது என்றும் புரட்சிகர
அஜண்டாவை உருவாக்கி உள்ளனர் பொலிட்பீரோ
மேதைகள். இதைத் தொடர்ந்து நடிகர் அஜித்தைச்
சந்தித்துப் பேச சென்னை வருகிறாராம் சீத்தாரம்
எச்சூரி.

இன்குலாப் ஜிந்தாபாத்!
*********************************************************************** 
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உடைகிறது!
தா பாண்டியன் தனிக்கட்சி தொடங்குகிறார்!
தளி ராமச்சந்திரனுக்கு முக்கியப் பொறுப்பு!
------------------------------------------------------------------------------------
1) மீண்டும் UCPI (United Communist Party of India) கட்சியைத்
தொடங்குகிறார் தா பாண்டியன்.

2) நல்லகண்ணு, சுப்பராயன், தளி ராமச்சந்திரன்
ஆகியோர் தா.பாண்டியனுடன் இணைகிறார்கள்.

3) தமிழ் மாநிலச் செயலாளராக தளி ராமச்சந்திரன்
பொறுப்பு ஏற்க இருக்கிறார். இவர் முத்தரசனுக்குச்
சரியான போட்டியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்
படுகிறது. 

4) புலிகள் நிரம்பிய கானகத்தில் புள்ளிமான் போல
வென்றவர் ஜெயலலிதா என்று தா பாண்டியனால்
பாராட்டப்பட்ட ஜெயலலிதா புதுக் கட்சியின்
தொடக்க விழாவில் முதன்மை விருந்தினராக
(Chief Guest) கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்.

5) மேற்கு வங்கம், கேரளத்தில் உள்ள சீட்டுக் கிடைக்காத
சில அதிருப்தியாளர்களுடன் தா.பா தொடர்பில் உள்ளார்.
அவர்களும் இந்த UCPI கட்சியில் இணைவார்கள்
என்று தா.பா நம்பிக்கை கொண்டுள்ளார்.

6)அடுத்து வரும் ராஜ்யசபா தேர்தலில், தற்போதைய
டி ராஜாவின் பதவிக்காலம் முடியும் தருவாயில்,
அந்த இடத்தை ஜெயலலிதா தமக்கு வழங்குவார்
என்று தா.பா மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளார்.

7) புதிய கம்யூனிஸ்ட் கட்சி UCPI ஜிந்தாபாத்!
இன்குலாப் ஜிந்தாபாத்!!
ஜெயலலிதா ஜிந்தாபாத்!!
*********************************************************************
தேமுதிக கிச்சன் காபினெட் அதிரடி முடிவு!
சுத்தீஷின் கொழுந்தியாள் ஆவேசம்!!
------------------------------------------------------------------
1) நம்ப வைத்துக் கழுத்தறுத்த வைகோவின் சகவாசம்
வேண்டவே வேண்டாம் என்றும்,
2) மக்கள் நலக் கூட்டணியை விட்டு உடனே
வெளியேற வேண்டும் என்றும்,
3) கலைஞரிடம் மன்னிப்புக் கேட்டு, திமுக
கூட்டணியில் சேர வேண்டும் என்றும்,
4) கலைஞர் சேர்க்க மறுத்தால், பாஜகவுடன்
கூட்டணி வைக்க வேண்டும் என்றும்

தேமுதிக கிச்சன் காபினெட் ஏகமனதாக முடிவு
எடுத்துள்ளது. காபினெட் கூட்டம் சுத்தீஷின்
மாமியார் தலைமையில் நடந்தது. சுத்தீஷின்
மைத்துனி, கொழுந்தியாள் உட்பட கட்சியின்
முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். சுத்தீஷின்
கொழுந்தியாளின் ஆவேசப் பேச்சு எல்லோரையும்
கவர்ந்தது.  தம் பேச்சின் இடையே வைகோவை
அடித்துக் கொல்ல வேண்டும் என்று சுத்தீஷின்
கொழுந்தியாள் ஆவேசப் பட்டதாக தகவலறிந்த
வட்டாரங்கள் தெரிவித்தன.
************************************************************************* 

வெள்ளி, 27 மே, 2016

ஞானி ஒரு சவுண்டிப் பார்ப்பனர். பார்ப்பன
விழுமியங்களைத் தூக்கிப் பிடிப்பவர். கடந்த 2014
நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஆம் ஆத்மி
வேட்பாளராகப் போட்டியிட்டு டெப்பாசிட் இழந்தவர்.
கேஜ்ரிவாலுடன் பேரம் படியாததால் ஆம் ஆத்மியை
விட்டு விலகியவர். கோமாளி விஜயகாந்தை
அவர் ஆதரிப்பதன் ஒரே புனித நோக்கம் திமுக
ஆட்சிக்கு வந்துவிடாமல், அதிமுகவின் B Team ஆக
மநகூ செயல்படும் என்பதால்தான்.
**
நுனிப்புல் மேய்கிற குட்டி முதலாளித்துவ சிந்தனைக்
குள்ளர்களை மட்டுமே ஞானி சங்கரனால் ஏமாற்ற
முடியும்.  எனவே புழுவினும் கீழான ஈனப் பயலான
ஞானியின் சாக்கடைக் கருத்துக்களை இங்கு
கொண்டு வந்து கொட்ட வேண்டாம்.
**
உங்கள் கருத்து எதுவானாலும் சொல்லுங்கள்.
வரவேற்கிறோம். சாக்கடைப் புழுவும் அற்பப்
பதருமான சவுண்டி ஞானியின் மலத்தை
சந்தனமாகப் பூச வேண்டாம். 
தா பாண்டியன் நீக்கப் படுவாரா?
CPI இளைஞர்கள் போர்க்கொடி!
-----------------------------------------------------------
வரிசையாகவும் தொடர்ந்தும் டெப்பாசிட்
இழந்து கேவலமான தோல்விகளை கம்யூனிஸ்ட்
கட்சி சந்தித்துக் கொண்டு வருகிறது.

இவ்வளவு கேவலமான தோல்விகளுக்கு மூத்த
தலைவர் தா பாண்டியனின் ஜெயா விசுவாசம்
ஒரு காரணமாக அமைந்துள்ளது. இதனால் 
கம்யூனிஸ்டுகள் என்றாலே ஊர் சிரிப்பாய்ச்
சிரிக்கிறது. 

இதற்கெல்லாம் காரணமான தா பாண்டியனைக்
கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று சில
இளைஞர்கள் கட்சித் தலைமைக்குக் காரசாரமாக
கடிதம் எழுதி உள்ளனராம்.

தா பாண்டியனை மட்டுமல்ல, நல்லகண்ணுவையும்
சுப்பராயனையும் கூடக் கட்சியை விட்டு நீக்க
வேண்டும் என்கிறாராம் மகேந்திரன். சுப்பராயன்
முன்பு தா.பா.வுடன் UCPIக்குப் போனவர்.

மகேந்திரனின் யோக்கியதை தெரியாதா? ஈழப் பெண்
ஒருத்தியைக் கற்பழித்தும் பணமோசடி செய்தும்
உள்ள வழக்கு அவர் மேல் இருக்கிறதே என்று
தா பாண்டியன் தரப்பு பதிலடி கொடுத்ததும்
வாயடைத்துப் போனாராம் மகேந்திரன்.

மொத்தத்தில் இந்தப் போலிகளால் CPI கட்சி
சிரிப்பாய்ச் சிரிக்கிறது!
*******************************************************************
   
வைகோவுக்கு ஒபாமா பாராட்டு!
கம்யூனிசத்துக்குக் கொள்ளி வைத்த வைகோ வாழ்க!
-----------------------------------------------------------------------------------------------
அமெரிக்கா என்பது உலக முதலாளித்துவத்தின்
தலைமைச் செயலகம். அமெரிக்காவில் பல கட்சிகள்
உண்டு. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் கிடையாது.
உலகத்தின் எந்தப் பகுதியில் கம்யூனிசம் தோல்வி
அடைந்தாலும், அதற்கு மகிழ்கிற நாடு அமெரிக்கா.

தற்போது 2016 சட்ட மன்றத் தேர்தலின் முடிவில்,
தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கட்சி டெப்பாசிட்
இழந்து துடைத்து எறியப் பட்டுள்ளது.

இதன் விளைவாக, மார்க்சிஸ்ட் கட்சிக்கு இதுவரை
இருந்து வந்த தேசியக் கட்சி என்ற அந்தஸ்து
பறிபோய் விட்டது.

தேசியக் கட்சி அந்தஸ்தைப் பெற, ஒரு கட்சியானது
நான்கு மாநிலங்களில் 6 சதம் வாக்குகளைப் பெற்று
இருக்க வேண்டும். (அல்லது நாடாளுமன்றத்தில்
மக்களவையில் 11 எம்.பி.க்களைப் பெற்றிருக்க வேண்டும்).

கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மூன்று
மாநிலங்களில் மட்டுமே தற்போது மார்க்சிஸ்டு
கட்சிக்கு 6 சதம் வாக்கு உள்ளது. தமிழ்நாட்டில்
சட்ட மன்ற இடங்களும் இல்லை.வாக்கு 0.7 சதம்
மட்டுமே. எனவே மார்க்சிஸ்ட் கட்சி, தமிழ்நாட்டில்
கிடைத்த தோல்வியின்  விளைவாக தனது தேசியக்
கட்சி அந்தஸ்தை இழந்தது.

இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் துடைத்து
எறியப் படுவதற்கு மூல காரணமாக இருந்த,
வைகோவின் சேவையைக் கண்டு ஒபாமா
மகிழ்கிறார். எனவே அவர் வைகோவைப் பாராட்டிச்
செய்தி அனுப்பி உள்ளார்.

கம்யூனிசத்துக்கு கொள்ளி வைத்த வைகோவே,
உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை என்று
அந்த வாழ்த்துச் செய்தி கூறுவதாக, தாயக
அன்பர்கள் பெருமை அடைகிறார்கள்.
***************************************************************  
மன்னிக்க முடியாத தவறுகள்!
-------------------------------------------------------
தரகர் தமிழருவி மணியன் 2014 தேர்தலில்
பெரிய அளவிலான தரகு வேலை பார்த்தார்.
மோடி பிரதமராக வேண்டும் என்ற ஒரே
நோக்கத்திற்காக கடுமையாக உழைத்தார்.
முரண்பட்டும் சண்டையிட்டுக் கொண்டும்
இருந்த பாமக, தேமுதிக, மதிமுக  ஆகிய
கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தார்.
**
இந்த வேலையை வெற்றிகரமாக முடித்தாலும்,
அதன் ஊடாக, விஜயகாந்தின் மச்சான் சுத்தீஷ்
என்பவராலும் ராமதாசாலும் பலமுறை அவமானப்
படுத்தப் பட்டார்.
**
இவ்வளவு கச்தப் பட்டு, தரகு வேலை பார்த்தது
எதற்காக? மோடியைப் பிரதமர் ஆக்குவதற்காக.
**
இந்த வேலையை எல்லாம் காந்திய மக்கள் இயக்கம்
என்ற பெயரில் இந்தத் தரகர் செய்தார். இது மோசடி.
இது பித்தலாட்டம். இது கயமை.
**
மோடியை ஆதரிக்க தரகருக்கு உள்ள உரிமையை
நாம் மறுக்கவில்லை. ஆனால் காந்தி, காமராசர்
பெயரை உச்சரித்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ்
வேட்பாளர் மோடியை ஆதரித்தது மன்னிக்க
முடியாத குற்றம்.
**
தரகரைப் போன்ற பித்தலாட்டப் பேர்வழிகள்
நேர்மையாளர் வேடம் தரிக்கலாம். அது நிமிடத்தில்
கரைந்து விடும். எனவேதான் அவர் அரசியல்
துறவறம் பூண நேர்ந்தது.  


பரபரப்பான சூழ்நிலையில் தேமுதிக கிச்சன்
காபினெட் இன்று கூடுகிறது. இன்று சஷ்டி திதி,
நல்ல நாள் என்பதால் சுத்தீஷின் மாமியார்
இன்று கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.

இது குறித்த அரிய தகவல்கள் அடங்கிய
ஆய்வுக் கட்டுரை இன்று இரவு வெளியாகும்.
படிப்பதற்கு முன்பதிவு செய்யுங்கள்.
**************************************************   
உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக போட்டியில்லை!
வைகோ முடிவு?!
---------------------------------------------------------------------------------------------
தேர்தல்களில் போட்டியிடாமல் புறக்கணிப்பது
வைகோவுக்கு கைவந்த கலை.
1) 2011 சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிடாமல்
மதிமுகவை முடக்கியவர் வைகோ.
2) 2016இலும்  கோவில்பட்டியில் போட்டியிடப்
போவதாக அறிவித்து விட்டு, தோல்வி பயத்தால்
போட்டியிடாமல் ஒதுங்கினார் வைகோ.

3) 2016 அக்டோபர்-நவம்பரில் தமிழ்நாட்டில்
உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
மாநகராட்சி மேயர் முதல் கிராமப் பஞ்சாயத்து
உறுப்பினர் வரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

4) இதில் போட்டியிட்டால் கட்சி சுத்தமாக அழிந்து
போய் விடும் என்று வைகோ கருதுகிறாராம்.
எனவே போட்டியிட வேண்டாம் என்று முடிவு
எடுத்துள்ளாராம் வைகோ.

5) வைகோவின் நல்ல முடிவை வரவேற்போம்!
********************************************************************** 
ஐயா,
இது மார்க்சியத்தில் ஆழமான பரிச்சயத்துடன்
மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, அதைச் சார்ந்த காத்திரமான
விவாதம் ஆகியவற்றைக் கோருகிறது.

ஐயா, அருள்கூர்ந்து சிறிது நேரம் பொறுத்திருக்கவும்.
இப்பொருள்  குறித்த கட்டுரைகள் பிரசுரிக்கப் படும்.
ஊழியர் சங்கங்களின் நீண்ட காலக் கோரிக்கையை
ஏற்றும், மத்திய அரசு ஊழியர் ஊதியக் குழுவின்
(Central Pay Commission) பரிந்துரைகளை ஏற்றும்,
தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தை-
போராட்டங்களின் கோரிக்கையை ஏற்றும்தான்
ஓய்வு பெறும் வயது 60 என்று அறிவிக்கப் பட்டது.
**
மாநில அரசு ஊழியர்களின் தொழிற்சங்கங்கள்
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்,
படிகள், சலுகைகள் ஆகியவற்றைக் கோரி வருகின்றன.
அக்கோரிக்கைகளில் மாநில அரசு (தமிழ்நாடு உட்பட)
ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது மத்திய அரசில்
உள்ளதுபோல 60 வயதாக உயர்த்தப்பட வேண்டும்
என்பது ஒரு பிரதான கோரிக்கை. Raising the retirement age
at par with CG employees என்பதே கோரிக்கை சாசனத்தில் உள்ள
வாசகம். இது சமச்சீர்மையைக் கோருகிறது.
**
இக்கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற மாநில
அரசு ஊழியர்களின் அறப்போராட்டங்கள் பலவற்றில்
பங்கேற்று உரை நிகழ்த்தியவன் என்ற அடிப்படையில்
தமிழ் மாநில அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை
60 ஆக்க விரும்புகிறார்கள் என்பதை அனைவருக்கும்
உணர்த்த விரும்புகிறேன். 
**
58 வயதாக மத்திய அரசு ஊழியருக்கும் குறைக்க
வேண்டும் என்ற கருத்து கடைந்தெடுத்த
பிற்போக்கானது. மத்திய அரசு மற்றும் மத்தியப்
பொதுத்துறைகளில் பணியாற்றும் 50 லட்சம்
தொழிலாளர்களின் உணர்வுக்கு எதிரானதாகும். 
கோடிக்கணக்கான மத்திய மாநில அரசு ஊழியர்கள்
இதை ஒருநாளும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.    
மதமாற்றம் எந்த விதத்திலும் பட்டியல் இனத்தவரின்
முன்னேற்றத்திற்குப் பயன்படாது. இதை திருமாவளவன்
அனுபவங்களின் அடிப்படையில் உணர்ந்து இருக்கிறார்.
இந்து மதத்தில் இருந்து விலகுவது இடஒதுக்கீட்டுப்
பயனை உதறித் தள்ளுவது ஆகும். எனவே மதமாற்றம்
வேண்டாம் என்ற திருமாவின் நிலைப்பாடு சரியானதே.
இதில் அவர் ஊன்றி நிற்க வேண்டும்.
**
அடுத்து, அகமணமுறைதான் சாதியை
உருவாக்கியது என்ற கருத்தும் சரியல்ல.
சாதியின் உருவாக்கத்தில் உள்ள பொருளியல்
காரணிகளைக் கணக்கில் கொள்ளாமல் விடுவதால்
நிகழும் தவறு இது.
**
ஒரு சமூகத்தில், பல்வேறு விஷயங்களில், நமது
கருத்தும் நமக்கு எதிரான நிலை எடுப்பவர்களின்
கருத்தும் சில நேரங்களில் ஒத்துப் போகும். இது
இயல்பே. எனவே மதமாற்றம் குறித்த திருமாவின்
கருத்தும் இந்துத்துவவாதிகளின் கருத்தும் ஒத்துப்
போவதால் எந்தத் தவறும் இல்லை.
மிகை மதிப்பீடு செய்யும் திருமாவளவனார்!
-------------------------------------------------------------------------------------
சுரேஷ் கண்ணனார் அவர்களின் பரிந்துரையை ஏற்று
திருமாவளவன் அவர்களின் ஒரு மணி நேர உரையைக்
கேட்டேன். சாரமற்ற உரை. தேர்தல் தோல்வியின்
காயங்கள் ஆறாத மனநிலையில் இருந்து பேசியுள்ளார்.
அனுதாபம் தேடல் என்ற நோக்கத்துடன் பேசிய பேச்சு
அவருக்கு அவர் விரும்பிய அனுதாபத்தைத் தேடித்
தந்துள்ளது. நிற்க.
**
சமூக வலைத் தளங்களில் கருத்து உருவாக்கம்
செய்வோரின் பங்கை (the role of opinion makers) மிகை
மதிப்பீடு செய்கிறார் திருமா. விஜயகாந்துக்கு ஒரு
கோமாளி பிம்பத்தை இவர்கள் (opinion makers)
உருவாக்கினர் என்கிறார். அதுவும், மநகூ இவருடன்
கூட்டணி வைத்த பிறகு விஜயகாந்தின் கோமாளி
பிம்பம் பெரிதாகக் கட்டப்பட்டது என்கிறார். இதில்
உண்மையில்லை.
**
விஜயகாந்தின் கோமாளி பிம்பம் இன்று இந்தத்
தேர்தலை ஒட்டி உருவானது அல்ல. 2011 சட்ட மன்றத்
தேர்தலின் பரப்புரையின்போது, இந்த பிம்பத்தை
விஜயகாந்தே உருவாக்கினார் என்பதுதான் உண்மை.
தனது கட்சி வேட்பாளரின் பெயரைத் தப்பாகச்
சொல்வதும், அதைத் திருத்த முயன்ற வேட்பாளரை
அடித்து உதைப்பதும் விஜயகாந்த் நிகழ்த்திய
கோமாளித் தனங்கள்.
**
இது குறித்துப் பலரும் கேள்வி எழுப்பியபோது,
"என்னிடம் அடி வாங்கியவன் பெரிய ஆளாக வருவான்"
என்றார். வடிவேலுவின் எதிர்ப் பிரச்சாரம் மூலம்
விஜயகாந்தின் கோமாளித் தனங்கள் 2011
தேர்தலிலேயே வெளிப்பட்டு விட்டன.
**
சட்ட மன்றத்தில் ஜெயாவைப் பார்த்து, நாக்கைத்
துருத்திக் காட்டியது போன்ற செயல்கள் மூலம்
விஜயகாந்த் ஒரு கோமாளி என்பது 2011ஆம்
ஆண்டிலேயே தமிழகம் நன்கறிந்த விஷயம் ஆகும்.
**
காணாக்குறைக்கு, பத்திரிகையாளர்களின்
முகத்தில் த்த்தூ என்று காறித் துப்பி தான் ஒரு
well established clown என்று நிரூபித்தவர் விஜயகாந்த்.
**
"எக்காரணம் கொண்டும்  ஒரு விலைமாது குடியிருந்த
வீட்டில் குடியேற வேண்டாம்; வழக்கமாக வருபவன்
கதவைத் தட்டாமல் விட மாட்டான்" என்பார் புதுமைப்
பித்தன். அதுபோல் ஏற்கனவே கோமாளி என்று
நிறுவப்பட்ட விஜயகாந்திடம் கூட்டணி வைத்தால்
அதன் பின்விளைவுகள் தவிர்க்க இயலாதவை.
**
எனவே, மநகூ விஜயகாந்துடன் கூட்டணி வைப்பதற்கு
முந்திய நிமிடம் வரை, விஜயகாந்த் சீரியசான
மனிதராக இருந்தார்; கூட்டணி வைத்த அந்த நொடி
முதல் opinion makers எல்லாரும் சேர்ந்து அவரைக்
கோமாளி ஆக்கி விட்டனர் என்று திருமாவளவன்
கூறுவது உண்மையல்ல. தோல்வியில் இருந்து
படிப்பினை பெற வர இவர் இன்னமும்
முன்வரவில்லை என்பதையே இது காட்டுகிறது.
**
ஒரே ஒரு உதாரணம் மட்டுமே இங்கு கூறியுள்ளேன்.
மேலும் வைகோவின் கோமாளி பிம்பமும் அவரே
ஏற்படுத்திக் கொண்டதுதான். opinion makers உருவாக்கிய
பிம்பம் அல்ல அது. At the most, opinion makers can MAGNIFY things;
but they can't create a new one.      
      
சமச்சீர் கல்வியை எதிர்த்த போலிக் கம்யூனிஸ்டுகள்
சட்டமன்றத்துக்குள் செல்ல முடியவில்லை!
-----------------------------------------------------------------------------------------------
ஜூன் மாதம் தமிழக சட்ட மன்றம் கூடுகிறது.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு, இதே போல், ஜூன் 2011இல்
தமிழக சட்ட மன்றம் கூடியது.

தற்போது மரணப் படுக்கையில் கிடக்கும் பார்ப்பன
சோவின் ஆலோசனையின் பேரில், சமச்சீர் கல்வியை
ஒழித்துக் கட்டும் மசோதாவை அதிமுக அரசு
கொண்டு வந்தது.

அப்போது, சமச்சீர் கல்வியை எதிர்த்து வீராவேசத்துடன்
வலது இடது போலிக் கம்யூனிஸ்ட்களான CPI,CPM
சட்ட மன்ற உறுப்பினர்கள் பேசினார்கள் ராஜனை
மிஞ்சிய ராஜ விசுவாசியாக போலிகள் சமச்சீர்
கல்விக்குக் கொள்ளி  வைத்தார்கள்.

இன்று,  சட்டமன்றத்துக்கு  உள்ளே இந்தப் போலிகளால்
போக முடியவில்லை. மக்களால் காயடிக்கப் பட்ட
இந்தப் போலிகள் சட்ட மன்றத்துக்கு வெளியே நின்று
ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் மட்டுமா? மனித நேய மக்கள் கட்சி
என்ற பெயரிலான ஜவஹரில்லா தலைமையிலான
முஸ்லிம் பிழைப்புவாதக் கட்சியும் இம்முறை
சட்ட மன்றத்துக்குள் போக முடியவில்லை.
இவர்களும் ஜெயாவுடன் சேர்ந்து கொண்டு சமச்சீர்
கல்வியை எதிர்த்தவர்கள்.

காலம் இவர்களின் தவறுக்கு தண்டனை
வழங்கி விட்டது.
********************************************************************* 
1) சமச்சீர் கல்வி என்பது 1 முதல் 10 வகுப்புகளுக்கு
மட்டும்தான். 11, 12 வகுப்புகளில் சமச்சீர் கல்வி கிடையாது.
11,12 வகுப்புகளில் மாநிலப் பாட வாரியத்தின்
பாடத் திட்டம்தான்.
2) சமச்சீர் கல்வி என்பது தமிழ் மீடியத்துக்கு மட்டும்
உரியது அல்ல. தமிழ் மீடியம், ஆங்கில மீடியம் என்று
எந்த மீடியத்தில் கற்றாலும் 1 முதல் 10 வகுப்புகள் வரை
சமச்சீர் கல்விதான். அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என
எல்லாப் பள்ளிகளிலும் 1 முதல் 10 வரை சமச்சீர்
கல்விதான். 
கணக்கு வராது என்பது பிரமையே!
---------------------------------------------------------------------
எனக்கு MATHS வராது என்று குழந்தைகள் நினைப்பதும்,
என் பையனுக்கு MATHS வராது என்று பெற்றோர்கள்
நினைப்பதும் ஒரு பிரமையே (ILLUSION). இந்த சமூகம்
இதுபோன்ற பிரமைகளுக்கு தீனி போட்டு வளர்க்கிறது.
கணக்கு வராது என்பதில் உண்மையில்லை; நாமாக
ஏற்படுத்திக்கொண்ட ஒரு மனத்தடை தான்.
**
எனவே எந்த ஒரு மாணவனும் கணக்குப் பாடத்தில்
ஒரு PRACTICAL WORKING KNOWLEDGE பெற முடியும்.
தேற முடியும். 60 சதம் வரை மதிப்பெண்களைப் பெற
முடியும். இப்போது கூறியது CBSE பாடத்திட்டத்தைப்
பொறுத்துச் சொல்லப் படுவது. TN STATE BOARD என்றால்
எவர் ஒருவரும் 80 சதம் பெற முடியும்.
**
Core Mathsஐ விட Business Maths இன்னும் எளிது. டீன் ஏஜ்
குழந்தைகளுக்கு formal educationதான் சிறந்தது. khan academy
போன்ற informal sources மூலம் கல்வி பெறுவதை விட,
முறையான கல்வி பெறுதல் வேண்டும்.
**
எனவே எமது பரிந்துரை:
First option: Maths, Physics, Chemistry, Biology
Second option: Maths,Physics,Chemistry,Statistics
Third option: Business Maths, Statistics, Commerce, Accountancy
எமது வலியுறுத்தல்:
------------------------------------
Maths அல்லது Business Maths இல்லாமல் எந்த ஒரு
Groupஐயும்  எடுக்க வேண்டாம்.
................நியூட்டன் அறிவியல் மன்றம்................
பின்குறிப்பு: 12ஆம் வகுப்பு வரை கணிதம் (core maths)
கட்டாயப் பாடம் என்று சட்டம் போட்டு அதை
நடைமுறைப் படுத்தாமல் இந்தியாவுக்கு விடிவு இல்லை.


    
    

வியாழன், 26 மே, 2016

இன்று நீ நாளை நான்!
தரகர் மணியனிடம் வைகோ கூற்று!
----------------------------------------------------------------------
 2014 சட்ட மன்றத் தேர்தல் முடிவுக்குப் பின்,
தரகர் தமிழ்க்கிருமி அரசியலை விட்டு விலகினார்.
நல்ல முடிவு.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் டெப்பாசிட் இழந்து
துடைத்தெறியப்பட்ட உடன், இதே நல்ல முடிவை
வைகோவும் எடுப்பார்.

இன்று நீ, நாளை நான் என்று தமிழ்க்கிருமி
மணியனிடம் வைகோ கூறி உள்ளார்.
**********************************************************

அரசியலில் யாரையும் நம்ப முடியாது ஐயா.
இவரைப் போன்றவர்கள் பார்ப்பனீயத்துக்குத் தேவை.
எனவே பார்ப்பனீயம் இவரை உயிர்ப்பிக்க முயலும்.
அதற்கு இடம் கொடாமல், செத்த பாம்பாக இருந்தாலும்
உருத் தெரியாமல் சிதைக்க வேண்டும். தரகரின் நோக்கம்
இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டால், அதற்கு என்ன
RESPONSE வருகிறது என்று பார்ப்பதுதான். சாதகமான
RESPONSE வந்தால், மீண்டும் அரசியலில் இறங்குவார்.
அதற்கு இடம் கொடுக்க கூடாது.  
ஒழிந்தான் ஒரு கயவன்!
தரகர் தமிழ்க்கிருமி மணியன் தற்கொலை!
-----------------------------------------------------------------------------------
டாக்டர் மு வரதராசனாரின் கயமை நாவலைப்
படித்து இருக்கிறீர்களா? அந்த நாவலின் கடைசி
வாக்கியம் இப்படி அமைந்திருக்கும். "ஒழிந்தான்
ஒரு கயவன்".

தமிழ்க்கிருமி மணியன் அரசியலை விட்டு
விலகுவதாக அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்பைக்
கேட்டதும் மு.வ.வின் வாக்கியம்தான் நினைவுக்கு
வந்து மகிழ்வூட்டுகிறது.

ஆங்கிலத்தில் GOOD RIDDANCE என்று ஒரு தொடர்
உண்டு. சனியன் தொலைந்தது என்று இதை மொழி பெயர்க்கலாம். தரகர் தமிழ்க்கிருமியின் விலகலும்
GOOD RIDDANCE தான்.

தரகர் தமிழருவி  மணியன் ஒரு பாஜக அனுதாபி.
அது மட்டுமல்ல அவர் அதிமுகவின் நலம் விரும்பியும் கூட.
பாஜக, அதிமுக கட்சிகளின் மீதான தமது பரிவை
வெளிக்காட்டிக் கொள்ளாமல் மாறுவேடம் பூணுவதில்
வல்லவர் இந்தத் தரகர்.

காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்.சின் வேட்பாளர்
மோடியை 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தரகர்
ஆதரித்தார். அதற்காக, பல்வேறு அவமதிப்புகளையும்
தாங்கிக் கொண்டு கூட்டணி அமைப்பதில் வெற்றி
பெற்றார். மோடியை  ஆதரிப்பது தரகரின் பிறப்புரிமை.
ஆனால் காந்தியின் பெயரால் இயக்கம் நடத்திக்
கொண்டு, மோடியை ஆதரித்தது மன்னிக்க முடியாத
பித்தலாட்டம்.

எனவே இவரைப் போன்ற நேர்மை சிறிதுமற்ற
மோசடிப் பேர்வழிகள் அரசியலை விட்டு
விலகும் நாளே தமிழனுக்கு நன்னாள்.
****************************************************************
தரகர் விலகினார்!
-----------------------------------
அரசியலில் இருந்தும் பொது வாழ்வில் இருந்தும்
முற்றாக விலகுவதாக அறிவித்த தரகர்
தமிழருவி மணியன் அவர்களின் முடிவை
வரவேற்று, அந்த முடிவில் உறுதியாக நிற்குமாறு
வலியுறுத்தி யான் எழுதிய பின்னூட்டத்துடன்,
அவரின் பதிவை ஈண்டு பகிர்ந்துள்ளேன். 
-----------------------------------------------------------------------------
தகைமை சான்ற ஐயா,
அரசியலில் இருந்து முற்றாக விலகிக் கொள்கிறேன்
என்ற தங்களின் முடிவு ஆகச் சிறந்த முடிவு. இந்த முடிவில்
ஊசலாட்டம் எதுவும் இன்றி உறுதிபட நில்லுங்கள்.
தரகர் என்றும் புரோக்கர் என்றும் தங்கள் மீது படிந்துள்ள
அழியாத கறையை, தங்களின் இந்த விலகல் முடிவு
மட்டுமே அழிக்க வல்லது. தங்கள் முடிவை எந்த
நிலையிலும் மாற்றிக் கொள்ளாமல் உறுதிபட நிற்பது
ஒன்றே தங்களுக்குப் பெருமை சேர்க்கும்.
**
சரியான நேரத்தில் விலகல் முடிவை அறிவித்தீர்கள்.
இன்னும் சற்றுத் தாமதம் ஆகி இருந்தாலும், தங்களை
விலகச் சொல்லியும் சொன்ன சொல்லைக் காப்பாற்றக்
கோரியும் கடுமையான நிர்ப்பந்தங்கள் வந்திருக்கும்.
அதற்கு இடம் கொடாமல் சரியான நேரத்தில் தங்களின்
விலகல் முடிவை அறிவித்துள்ளீர்கள். இதில் உறுதியாக
நில்லுங்கள்.
**
தாங்கள் தங்களின் விலகல் முடிவில் எஃகுப் பாறை
போன்று உறுதியுடன் நிற்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்
தங்களை வணங்கி மகிழ்கிறேன். 
உள்ளபடியே நண்பர் கூறியதன் பொருள் என்ன என்று
தெரியாமல்தான் விளக்கம் கேட்டுள்ளேன்.  "சீமான்" என்ற சொல்லில் உள்ள "கால்" தமிழில் தொன்றுதொட்டு இருந்து
வருகிறது. எனவே அதில் எவ்வாறு பெரியாரைத் தொடர்பு
படுத்துகிறார் என்பது புலப்படவில்லை.
**
எம்.ஜி ராமச்சந்திர மேனன் அரசாணை வெளியிடுவதற்கு
முன்னரே, நான் புகுமுக வகுப்பு படித்த காலந்தொட்டே
லை, னை, றா, னோ ஆகியவற்றைப் பயன்படுத்தி
வருகிறேன். நிற்க. இதில் அவரைக் குற்றவாளிக்
கூண்டில் நிறுத்துவது என்ற கற்பனைக்கே இடமில்லை.
"அருள்கூர்ந்து விளக்கவும்" என்ற தொடரால் எவரையும்
குற்றவாளிக் கூண்டில் நிறுத்த இயலாது. விபரீதக்
கற்பனைகளைத் தவிர்க்கவும். 
**
துணையெழுத்து, கொம்பு, கால் ஆகியவை குறித்த
இந்த நிகழ்வுடன் பொருத்தப்பாடு உடைய, சுவை
மிகுந்த ஒரு பழம்பாட்டை  இங்கு நினைவுறுத்துகிறேன்.
**
சென்னிமலை வேலவர்க்குச் சேர்ந்தகொம்பி ரண்டுண்டு
கன்னிகுற வள்ளிக்குக் காலில்லை முன்னமே
ஆட்டுக்குக் கொம்பில்லை ஆனைக்குக் காலில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்.
**
இது ஓர் அற்புதமான வெண்பா. சுவைக்கவும்.


ஐயா,
தங்கள் மகள் கண்டிப்பாக XIIஇல் வணிகக் கணிதம்
(Business Maths) எடுத்துப் படிக்க வேண்டும் என்று நியூட்டன்
அறிவியல் மன்றம் வலியுறுத்துகிறது. CA படிப்பது
என்பது நோக்கமானால் கண்டிப்பாக BUSINESS MATHS
எடுக்க வேண்டும். அப்போதுதான் CA படித்துத் தேறுவது
சுலபமாக இருக்கும். COMPUTER SCIENCE பாடத்தை
எப்போது வேண்டுமானாலும் தனியாக APTECH, NIIT
வாயிலாகக் கற்றுக் கொள்ள முடியும். எனவே XI, XII
வகுப்புகளில்  BUSINESS MATHS படிக்கத் தவறினால்,
பின்னர் வருந்த வேண்டியது நேரும்.
**
இளமையில் கல் என்பது அறிவியல் பாடங்களுக்கு
மட்டுமே பொருந்தும். 60 வயதுப் பெரியவர்கூட
எம்.ஏ ஆங்கில இலக்கியம், வரலாறு ஆகியவற்றில்
பட்டம் பெற முடியும். ஆனால் படிக்க வேண்டிய அந்த
TEEN AGEஇல் கணிதமும் அறிவியலும் படிக்கத் தவறினால்
பின்னர் வாழ்நாள் முழுவதும் படிக்க இயலாமல் போகும்.
படிக்க முயன்றாலும் கடினமாக இருக்கும்.
**
பன்னிரண்டாம் வகுப்பு வரை கணக்கு அறிவியல்
பாடங்கள் கட்டாயமாக்கப் பட வேண்டும் என்ற
கருத்தை நியூட்டன் அறிவியல் மன்றம் தொடர்ந்து
வலியுறுத்தி வருவதைத் தாங்கள் அறிவீர்கள்.

தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
தலைவர் நியூட்டன் அறிவியல் மன்றம்
   
தா பாண்டியன் அதிமுகவில் சேர முயற்சி!
ராஜ்யசபா எம்.பி.ஆகிறார்!!
அதிமுக வேட்பாளர் பட்டியலில் விஜயகுமார் நீக்கம்?!!
----------------------------------------------------------------------------------------------------
கடைசி நேரத்தில் கட்சி மாறி அத்திமுகவில் சேர்ந்த
வாசனின் கூட்டாளி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணினுக்கு
ஜெயலலிதா ராஜ்யசபா எம்.பி. பதவி அளித்துள்ளார்.

இதனால் மிகவும் தூண்டப்பட்ட தா பாண்டியன்
(இது ஒரு induction effect) அதிமுகவில் சேர
விரும்புவதாகக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து
அதிமுக அறிவித்துள்ள ராஜ்யசபா வேட்பாளர்
பட்டியலில் இருந்து விஜயகுமார் நீக்கப் படுவார்
என்றும் அந்த இடம் தா பாண்டியனுக்கு வழங்கப்
படும் என்றும் அதிமுக வட்டாரம் தெரிவிக்கிறது.

ஓ பன்னீர்செல்வம் இதற்கான முயற்சிகளை
மேற்கொண்டு வருவதாகவும் அம்மா அவர்களின்
ஒப்புதலுக்குக் காத்திருப்பதாகவும் தகவலறிந்த
வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

தா பாண்டியன், தளி ராமச்சந்திரன் போன்ற
கம்யூனிசப் புரட்சியாளர்கள் நாடாளுமன்ற
சட்டமன்ற இருக்கைகளில் அமர்வதன் மூலமே
இந்தியப் புரட்சி விரைவு படுத்தப்படும் என்று
வலது கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள்
தெரிவிக்கின்றனர்.

ராஜ்யசபா எம்.பி. தா பாண்டியன் ஜிந்தாபாத்!
இன்குலாப் ஜிந்தாபாத்!!
புரட்சித் தலைவி அம்மா ஜிந்தாபாத்!
**************************************************************
 
போலிக் கம்யூனிஸ்டுகளின் மரணம் ஏன்?
தா பாண்டியனின் ஜெயா விசுவாச அரசியலும்
தளி ராமச்சந்திரனின் ஊழல்-கொலைகார
அரசியலும்தான் மாற்று அரசியலா?
------------------------------------------------------------------------------------------
தா பாண்டியனின் ஆதரவாளர்கள் இந்தத்
தேர்தலில் அதிமுகவுக்குத்தான் வாக்களித்தனர்
என்ற உண்மை கசியத் தொடங்கி விட்டது.

முத்தரசனுக்கு ஜெயா பதவியேற்பு விழாவுக்கு
அழைப்பு இல்லை. ஜி ராமகிருஷ்ணனுக்கு
அழைப்பு இல்லை. அகில இந்தியத் தலைவர்கள்
சுதாகர் ரெட்டிக்கோ எச்சூரிக்கோ அழைப்பு
இல்லை. ஆனால் தா பாண்டியனுக்கு மட்டும்
அழைப்பு! இது எதைக் காட்டுகிறது?

"புலிகள் நிரம்பிய கானகத்தில் புள்ளிமான் வென்றது
போல வெற்றி பெற்றார் ஜெயலலிதா" என்று திருவாய்
மலர்ந்து அருளியுள்ளார் தா பாண்டியன்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக் குழுவின்
அறிக்கையோ இதற்கு நேர்மாறாக இருக்கிறது.

போலிக் கம்யூனிஸ்டுகள் முன்வைக்கிற மாற்று
அரசியல் என்பது தா பாண்டியனின் ஜெயா விசுவாச
அரசியலே. தளி ராமச்சந்திரனின் ஊழல் கொலைகார
அரசியலே.

மக்கள் இந்தக் கயவர்களை நம்பவில்லை. தமிழக
சட்ட மன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத
அளவுக்கு, ஒரு போலிக் கம்யூனிஸ்ட் கூட சட்ட
மன்றத்துக்குள் போக முடியவில்லை! இந்தப்
போலிகளை இகழ்ச்சியுடன் நிராகரித்தார்கள் மக்கள்!
************************************************************************  

புதன், 25 மே, 2016

கணக்கு, அறிவியல் பாடங்களில் மிகச் சிறந்த விடையை 
(The best answer) எளிதில் அடையாளம் காண இயலும். 7 செ.மீ
ஆரமுள்ள வட்டத்தின் பரப்பு என்ன என்ற கேள்விக்கு
154 சதுர செ.மீ என்று எழுதும் எல்லா மாணவர்களுக்கும்
முழு மதிப்பெண் வழங்கப் படுகிறது. ஏனெனில் இந்த எல்லா
விடைகளும் மிகக் சிறந்த விடைகளே.
**
மொழிப்பாடங்களில் மிகச் சிறந்த விடையை (The best answer)
எளிதில் கண்டறிய இயலாது. எழுதப்பட்ட எந்த
விடையையும் விட மிகச் சிறந்த விடை இருக்கக் கூடும்.
எனவே முழு மதிப்பெண் வழங்குவதில்லை.
**
காலப் போக்கில் மொழிப்பாடங்களிலும் முழு
மதிப்பெண் வழங்கலாம் என்று விடைத்தாள்
திருத்துவோருக்கு உத்தரவு இடப்பட்டது. ஸ்பெல்லிங்
மிஸ்டேக் இல்லாமலும் இலக்கணப் பிழை
இல்லாமலும் கேள்விக்கு உரிய விடை அளித்து
இருந்தால் முழு மதிப்பெண் வழங்கலாம் என்று
உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.  
**
அதற்கு முன்பு சிறந்த மொழிநடை இருந்தால் மட்டுமே
முழு மதிப்பெண்  வழங்கப்படும். தற்போது மொழிநடை
ஒரு காரணியாக இருப்பதில்லை. அதனால்தான்
மொழிப்பாடங்களிலும் 100/100 எடுக்கிறார்கள். 

செவ்வாய், 24 மே, 2016

ஜெயலலிதா பழி வாங்குவார் என்று அச்சம்!
மக்கள் நலக் கூட்டணியை விட்டு விலக
பிரேமலதா முடிவு!
--------------------------------------------------------------------------------
1) போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும்
விஜயகாந்த் உட்பட டெப்பாசிட் இழந்து,
2) கட்சி அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம்
ரத்து செய்து.
3) முரசு சின்னத்தையும் இழந்து

குஷ்டரோகப் பிச்சைக்காரனை விடக் கேவலமாக
நடுத்தெருவில் அனாதையாக நிற்கும் இந்த
மோசமான நிலையில்தான் பிரேமலதாவுக்கு
புத்தி வந்திருக்கிறது.

ஜெயலலிதா நினைத்தால் விஜயகாந்தையும்
தன்னையும் அவரின் செருப்புக் காலால்
ஒரு புழுவை நசுக்குவது போல நசுக்கி விடுவார்
என்ற உண்மை உறைத்ததும் அஞ்சத் தொடங்கி
விட்டார் பிரேமலதா.

இந்த இக்கட்டான நிலையில் மக்கள் நலக்
கூட்டணியாலும், மக்கள் மத்தியில் செல்லாக்
காசாகிப்போன அதன் தலைவர் வைகோவாலும்
தன்னைக் காப்பாற்ற இயலாது என்ற உண்மை
உறைக்கிறது பிரேமலதாவிற்கு.

எனவே தன்னையும் தன் குடும்பத்தையும்
காப்பாற்றிக் கொள்ள என்ன செய்வது என்று
தீவிர ஆலோசனை செய்து வருகிறார் பிரேமலதா.

பாஜக மத்தியில் ஆளும் கட்சி என்பதால், மநகூவில்
இருந்து விலகி, பாஜக அணியில் சேரலாமா
என்று யோசித்து வருகிறார் பிரேமலதா.

கூடிய விரைவில் ஹெச் ராஜாவின் காலில் விழுந்து
வணங்கி, பாஜகவில் தேமுதிக சேரும் என்பது
தெளிவாகப் புலப்படுகிறது.
****************************************************************    

    
மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு (NEET)
நடப்பாண்டில் இல்லை! அவசரச் சட்டத்தின் விளைவு!
-----------------------------------------------------------------------------------------------------
நடப்பாண்டான 2016-17 கல்வியாண்டுக்கு மட்டும்
மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு இல்லை என்ற
மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு ஜனாதிபதி
ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன் விளைவாக, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு
முன்பிருந்த நிலை மீட்கப் பட்டுள்ளது.
(Status quo ante is restored).

அதாவது இந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வு இல்லை.
தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு என்பதே இல்லை
என்பதால்,  ப்ளஸ் டூ மதிப்பெண்களின் அடிப்படையிலேயே
மருத்துவப் படிப்புக்கான இடங்கள் நிரப்பப்படும்.
***********************************************************************

திங்கள், 23 மே, 2016

தேர்தல் பரப்புரையின்போது பேசப்பட்ட ஒவ்வொரு
விஷயத்தையும் எடுத்துக் கொண்டு விமர்சிப்பது
நமது நோக்கம் அல்ல. அது தேவையும் அல்ல.
ஆனால், விஜயகாந்தை அம்பேத்கருடன் ஒப்பிட்டது
அவ்வளவு சுலபமாகக் கடந்து செல்கிற விஷயம் அல்ல.
**
கலைஞர் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க
விரும்பினார்  என்பது ரகசியம் அல்ல. அதற்காக
விஜயகாந்தை புரட்சிப் பெரியார் என்று கலைஞர்
முகஸ்துதி செய்யவில்லை. இன்னும் சொல்லப்
போனால், ஆட்சியில் பங்கு கேட்ட விஜயகாந்துக்கு
இல்லை என்று கலைஞர் மறுத்த காரணத்தால்தான்
அக்கூட்டணி உருவாகவில்லை.
**
திருமாவளவன் விஜயகாந்துடன் கூட்டணி வைத்தது 
தவறு என்று நாம் சொல்லவில்லை. அவரை முதல்வர்
வேட்பாளராக ஆக்கியதையும் நாம் விமர்சிக்கவில்லை.
இவை திருமாவின் அரசியல் தேவையில் இருந்து
செய்யப்படும் செயல்கள். ஆனால், விஜயகாந்தை
அம்பேத்கருடன் ஒப்பிடுவதற்கான எந்த அரசியல்
தேவையும் திருமாவுக்கு இல்லை. அதனால்தான்
இதைக் கண்டிக்க நேர்கிறது. இது இடித்துரைத்தல்
என்ற திணையில் வரும். திணை என்பது ஒழுக்கம்
என்று பொருள்படும்.
**
நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு
என்கிறார் வள்ளுவர். அதற்கு இணங்க,
திருமாவளவனின் மிகுதிக்கண் மேற்சென்று
இடிக்கிறேன் நான். இதில் எவரேனும் குறை காண
இயலுமோ?
திருமாவளவனுக்கு மன்னிப்பே கிடையாது!
விஜயகாந்த் உருவில் அம்பேத்கரைக் கண்டேன்!
---------------------------------------------------------------------------------------
தேர்தல் அரசியல் என்றாலே கொள்கைகளைச்
சவக்குழிக்கு அனுப்பி விட்டு, தரம் தாழ்ந்து
 இழிவின் எல்லைக்குச் செல்வதுதான் என்று
திருமாவளவன் எண்ணியுள்ளார்.

"விஜயகாந்த் உருவில் நான் அம்பேத்கரைப்
பார்க்கிறேன்" என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது
பேசி, இழிவின் உச்சத்தைத் தொட்டார் திருமா.

புழுவினும்  கீழான ஒரு ஈனப்பயலுக்கு, கோமாளிக்குப்
பல்லக்குத் தூக்குவது திருமாவளவனின் உரிமை.
ஆனால், அதற்காக விஜயகாந்தை அம்பேத்கருடன்
ஒப்பிட திருமாவளவனுக்கு உரிமை கிடையாது.
இதை விட யாரும் அம்பேத்கரை அவமானப்
படுத்தி விட முடியாது.

காட்டுமன்னார் கோவிலில் போட்டியிட்ட இவர்
87 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோற்றுப்
போனார். மக்கள் நலக் கூட்டணியின் மற்ற
வேட்பாளர்களைப் போல இவரும் அதிகமான
வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போய்
இருப்பார்.

ஆனால், தொகுதியில் உள்ள திமுக சிந்தனைக்
குள்ளர்கள் இவருக்கு வாக்களித்தனர். மேலும்
இவரை எதிர்த்து திமுக வேட்பாளரை கலைஞர்
நிறுத்தவில்லை. காங்கிரசுக்கு இத்தொகுதியைக்
கொடுத்தார் கலைஞர்.

காங்கிரசுக்கு வாக்களிப்பதை விட, திருமாவுக்கு
வாக்களிக்கலாம் என்று கருதிய கணிசமான
திமுக சிந்தனைக் குள்ளர்கள் இவருக்கு
வாக்களித்தனர். இதனால்தான் இவர் குறைந்த
வாக்கு வித்தியாசத்தில் தோற்று சிலரின் 
அனுதாபத்தைப் பெற  முடிந்தது.

எனினும், விஜயகாந்தை அம்பேத்கருடன் இவர்
ஒப்பிட்டது என்றும் நீங்காத ஒரு கரும்புள்ளியாகவே
இருக்கும்.
******************************************************************
தளி ராமச்சந்திரனின் தனிப்பெருமை!
கம்யூனிஸ்டுகள் பெருமிதம்!
காரி உமிழும் மக்கள்!
---------------------------------------------------------------------
திமுக அதிமுகவைத் தவிர்த்து, மீதியுள்ள
எல்லாக் கட்சிகளின் வேட்பாளர்களையும்
சேர்த்துப் பார்த்தால், அவர்களில் அதிக
வாக்குகளைப் பெற்றவர் என்ற பெருமையை
கம்யூனிஸ்ட் வேட்பாளர் தளி டி ராமச்சந்திரன்
பெறுகிறார்.

இதோ இந்தவாக்குகள் பட்டியலைப் பாருங்கள்:
---------------------------------------------------------------------
பாமக வேட்பாளர் அன்புமணி  : 58402
தொல் திருமாவளவன் விசிக .....: 48363
தளி ராமச்சந்திரன் கம்யூனிஸ்ட்.: 68184

மக்கள் நலக் கூட்டணி மட்டுமின்றி, பாமக, பாஜக,
நாம் தமிழர், சுயேச்சைகள் ஆகிய அனைத்து
வேட்பாளர்கள் எல்லோரையும் விட, காரல் மார்க்ஸ்
விருது பெற்ற கம்யூனிஸ்ட் வேட்பாளர் தளி
ராமச்சந்திரனே முதல் இடத்தில் உள்ளார்.

தீக்கதிரிலும், PEOPLES DEMOCRACY ஆங்கில ஏட்டிலும்
இந்தச் செய்தியைப் பிரசுரிக்க இருந்த நிலையில்
சீத்தாராம் எச்சூரி தலையிட்டுத் தடுத்து விட்டதாகக்
கூறப் படுகிறது.

மக்கள் நலக் கூட்டணி முன்வைத்த மாற்று அரசியல்
என்பது தளி ராமச்சந்திரனின் கொலைகார அரசியலே.
மூன்று கொளைகளிச் செய்த கொலைகாரனும்
கிரானைட் கொள்ளையனும் ஆகிய தளி
ராமச்சந்திரன் வாழ்க!

இன்குலாப் ஜிந்தாபாத்!
*********************************************************************        
தூக்குக் கயிறு இங்கே!
பிரேமலதா எங்கே?
தேசிய முட்டாள்தன தில்லுமுல்லு கட்சி!
-------------------------------------------------------------------------
தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுக  தொண்டர்கள்
இந்தக் கேள்வியை எழுப்புகின்றனர். தேமுதிகவின்
ஒரே பிரச்சார பீரங்கி என்று போற்றப்பட்ட பிரேமலதா
தமிழ்நாடு முழுவதும் சூறாவளியாகச் சுழன்று
பிரச்சாரம் செய்தார்.

திமுக என்றால் தில்லுமுல்லு கட்சி என்றார்.
அதிமுக என்றால் அனைத்திந்திய தில்லுமுல்லுக்
கட்சி என்றார்.

தேர்தல் முடிவு வந்த நாள் காலையில் இருந்து
ஆளைக் காணவில்லை. மக்களைச் சந்திக்கும்
துணிவும் திராணியும் இல்லாமல் கோழையைப்
போல் ஓடி ஒளிந்து கொண்டார்.

மக்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் பதில்
சொல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும்
அவருக்கு இருக்கிறது. என்றாலும் ஒரு கேடுகெட்ட
கோழையிடம் அதை எதிர்பார்க்க முடியாது.

அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரைகளை
விழுங்கிய நிலையில் மருத்துவமனையில்
அனுமதிக்கப் பட்டிருக்கிறார் என்று ஒரு செய்தி
வாட்சப் போன்ற சமூக வலைத் தளங்களில்
தீயாகப் பரவியது. தற்போது அது உண்மைதானோ
என்று தோன்றுகிறது.

பிரேமலதாவின் வாய்க்கொழுப்பு சீழாய் வடிந்து
போனது. இனி தேமுதிக கட்சியானது தேசிய
முட்டாள்தன தில்லுமுல்லு கட்சி என்று தமிழ்
மக்களால் அழைக்கப் படும்.

எட்டுக்கோடித் தமிழ் மக்களும் தேசிய முட்டாள்தன
தில்லுமுல்லுக் கட்சிக்கு இத்தேர்தலில் கருமாதி
செய்துள்ளனர்.
*****************************************************************   

ஞாயிறு, 22 மே, 2016

ஜெயலலிதா அமைச்சரவையில்
ஒரு முஸ்லிம்கூட இல்லை!
கண்டிக்கத் திராணியற்ற அதிமுக ஆதரவு
முஸ்லிம் இயக்கங்கள்!
-----------------------------------------------------------------------------------
29 பேர் கொண்ட அமைச்சரவையை ஜெயலலிதா
அமைத்துள்ளார். அதில் ஒரு முஸ்லிம் அமைச்சர்கூட
இல்லை.

இருப்பினும், அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநித்துவம்
அளிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கக் கூட
அதிமுகவை ஆதரித்த எந்த ஒரு முஸ்லிம் அமைப்பும் முன்வரவில்லை. காரணம் பெருவாரியான முஸ்லிம்
அமைப்புகள் ஜெயலலிதாவிடம் பணம் வாங்கிக்
கொண்டு சோரம் போனவை.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பாக்கர் அவர்கள்
ஜெயாவை ஆதரித்தார். முஸ்லிம் சமூக வாக்குகளை
அதிமுகவுக்குத் திருப்பி விட்டார்.

திருமதி பாத்திமா அம்மையார் ஜெயாவை வலியச்
சென்று சந்தித்து ஆதரவை வழங்கினார்.
முஸ்லிம்களின் குறிப்பாக முஸ்லிம் பெண்களின்
ஆதரவை அதிமுகவுக்குப் பெற்றுத் தந்தார்.

இத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துப்
போட்டியிட்ட முஸ்லிம் கட்சிகள் இரண்டு.
1) கடையநல்லூரில் போட்டியிட்டுத் தோற்ற
ஷேக் தாவூது நடத்தும் ஒரு முஸ்லிம் கட்சி.
2) நாகப்பட்டினத்தில் போட்டியிட்டு வென்ற
தமீமுன் அன்சாரி தலைமையிலான மனித
நேய மக்கள் ஜனநாயகக் கட்சி. இவர்கள்
இருவரில் எவருக்கேனும் முஸ்லிம் அமைச்சர்
ஒருவர்கூட இடம் பெறாத ஜெயாவின்
அமைச்சரவையைக் கண்டித்துக் குரல் கொடுக்க,
இல்லை, இல்லை, முனகக் கூட தைரியம் கிடையாது.
    
தமிழக சட்ட மன்றத்தில் தற்போதுள்ள
232 உறுப்பினர்களில் மொத்தம் நான்கு பேர்
முஸ்லிம்கள். அதிமுக கூட்டணியில் 2 பேர்
மற்றும் திமுக கூட்டணியில் 2 பேர் என்று
மொத்தம் நான்கு பேர்.

1) திருமதி டாக்டர் நிலோபர் கபில், அதிமுக,
வாணியம்பாடி.
2) தமீமுன் அன்சாரி, மமஜக, நாகப்பட்டினம்.
இவ்விருவரும் அதிமுக தரப்பு முஸ்லிம்கள்.

டி.பி.எம். மைதீன் கான், திமுக, பாளையங்கோட்டை
முகமது அபூபக்கர், IUML, கடையநல்லூர்
ஆகிய இருவரும் திமுக தரப்பு முஸ்லிம்கள்.

ப்ர்ர்பட்டோர் நலம், சிறுபான்மையினர் நலம்
ஆகிய இரு துறைகளையும் அமைச்சர் ஸ்ரீரங்கம்
வளர்மதிஇடம் கொடுத்துள்ளார். சிறுபான்மையினர்
நலத்துறைக்கு, சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த
ஒருவரை அமைச்சராக்க ஜெயா முன்வரவில்லை.
இருப்பினும், பணம் வாங்கிக் கொண்டு, ஜெயாவிடம்
சோரம் போன முஸ்லிம் அமைப்புகள் எதுவும்
ஜெயாவைக் கண்டிக்க முன்வரவில்லை.
****************************************************************    

  

  
மதிமுகவுக்கு திதி!
----------------------------------
தேமுதிக இந்தத் தேர்தலில்தான் (2016) உயிரை
விட்டது. எனவே  நேற்று அதற்குக் கருமாதி
செய்தார் ராஜேஷ் லக்கானி.

ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலிலேயே மதிமுக
இறந்து விட்டது. அதன் பிறகு 2014 நாடாளுமன்றத்
தேர்தலில் ஏழு இடங்களில் போட்டியிட்டு எல்லா
இடங்களிலும் தோற்றது. வைகோவும் தோற்றார்.
மதிமுக ஏழு தொகுதிகளிலும் சேர்த்துப்  பெற்ற
வாக்குகள் 3.6 சதம் மட்டுமே (14,16,035 வாக்குகள்)

அங்கீகாரம் பெறுவதற்கு 2 நாடாளுமன்ற இடங்களில்
வெற்றி பெற்றிருக்க வேண்டும் அல்லது 6 சதம்
வாக்குகள் பெற்று இருக்க வேண்டும். இந்த இரண்டில்
ஒன்றைக் கூடப் பெறாததால் 2014 தேர்தலில்
மதிமுக அங்கீகாரம் இழந்தது.

தற்போது 2016 தேர்தலிலும் அங்கீகாரம் இழந்தது.
அங்கீகாரம் இழந்த காலத்தில் இருந்து ஆறு
ஆண்டுகளுக்கு பழைய சின்னத்தை வைத்துக்
கொள்ளலாம் என்ற தேர்தல் ஆணைய விதிப்படி,
மதிமுக 2017 வரை (2011 முதல் 2017 வரை ஆறு ஆண்டுகள்)
பம்பரம் சின்னத்தை வைத்துக் கொள்ளலாம்.

சான்றாக, 2017 டிசம்பரில் ஒரு இடைத்தேர்தல் வந்தால்,
அதில் மதிமுக போட்டியிட்டால், அக்கட்சிக்கு
பம்பரம் சின்னம் கிடைக்காது. அது சுயேச்சை
சின்னங்களில் இடம் பெரும். அதாவது, பம்பரம்
சின்னத்தை ஒரு சுயேச்சை வேட்பாளரும்
மதிமுகவும் கேட்கிறார்கள் என்றால், சீட்டுக்
குலுக்கிப் போட்டு பம்பரம் யாருக்கு என்று
முடிவு செய்யப்படும்.

ஆக, மதிமுக இறந்து ஐந்து ஆண்டுகள் முடிந்து
விட்டன. ஏற்கனவே மதிமுகவின் கருமாதி
2011ஆம் ஆண்டிலேயே முடிந்து விட்டது. தற்போது,
2016இல் மதிமுகவுக்கு திதி (திவசம்) நடக்கிறது.
அய்யரைக் கூப்பிட்டு பச்சரி, வாழக்காய்,
தட்சணை எல்லாம் கொடுத்து மிகவும்
சிறப்பாக மதிமுகவுக்கு திதி கொடுத்து
முடித்து விட்டார் ராஜேஷ் லக்கானி.
*************************************************************     

சனி, 21 மே, 2016

தேமுதிகவுக்கு கருமாதி செய்தார் ராஜேஷ் லக்கானி!
------------------------------------------------------------------------------------------------
தமிழகத் தேர்தல் ஆணையம் இன்று (21.05.2016)
வெளியிட்ட அறிவிப்பின்படி, தேமுதிக கட்சியின்
அங்கீகாரம் ரத்து செய்யப் பட்டது. மேலும்
அக்கட்சியின் தேர்தல் சின்னமாகிய முரசு சின்னமும்
தேர்தல் ஆணையத்தால் பறிக்கப் பட்டது.

இந்த அறிவிப்பின் மூலம் தேமுதிகவுக்கு கருமாதி
செய்தார் தமிழகத் தேர்தல் ஆணையர்
ராஜேஷ் லக்கானி.

அ) சட்டமன்றத் தேர்தல் என்றால், 30 தொகுதிகளுக்கு
ஒன்று என்ற வீதத்தில் எட்டு இடங்களைப் பெற்றிருக்க
வேண்டும்.
ஆ) அல்லது பதிவான வாக்குகளில் 6 சதம் பெற்றிருக்க
வேண்டும்.

இந்த இரண்டு நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றை
நிறைவு செய்தால் மட்டுமே ஒரு கட்சி அங்கீகாரம்
பெற முடியும். தேமுதிக சட்ட மன்றத்தில் பூஜ்யம்
இடங்களையும், 2.4 சதம் வாக்குகளையும் மட்டுமே
பெற்று, தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளை
நிறைவு செய்ய இயலவில்லை.

எனவே, தேமுதிக மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை
இழந்து விட்டது. முரசு சின்னத்தையும் இழந்து
விட்டது.

போட்டியிட்ட 104 இடங்களிலும் டெப்பாசிட் இழந்தது
தேமுதிக. உச்சகட்ட அவமானமாக, முதலமைச்சர்
வேட்பாளர் என்று வறட்டு ஜம்பம் அடித்த விஜயகாந்த்
உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் டெப்பாசிட் இழந்தார்.

தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே தேமுதிக போல
எந்தக் கட்சியும் இவ்வளவு கேவலத்தைச் சந்தித்தது
இல்லை. இனி பேச வேண்டிய அவசியமே இல்லை.
தேமுதிக செத்துப் போய் விட்டது. பிணத்துக்குக்
கொள்ளி வைத்தாகி விட்டது. இன்று ராஜேஷ்
லக்கானி கருமாதியும் செய்து விட்டார்.
*************************************************************************** 
       
நான் கொத்தடிமைகளை மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
கொத்தடிமைகள் படுதோல்வி!
---------------------------------------------------------
தொலைகாட்சி விவாதங்களின் தரத்தைத்
தாழ்த்திய அதிமுக கொத்தடிமைகளில்
மிக மோசமான கொத்தடிமைகள் இருவர்
இத்தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர்.

1) கொத்தடிமை செ கு தமிழரசன் அதிமுக
சின்னத்தில் போட்டியிட்டார். இவர் இந்தியக்
குடியரசுக் கட்சியின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்.
2011 தேர்தல் முடிவில் அமைக்கப்பட்ட சட்ட
மன்றத்தில் இவர் தற்காலிக சபாநாயகராக
இருந்து எல்லோருக்கும் பதவிப் பிரமாணம்
செய்து வைத்தார்.

இத்தேர்தலில் மதுராந்தகம் (தனி) தொகுதியில்
இவர் 70736 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
இவரை திமுக வேட்பாளர் எஸ் புகழேந்தி 73693 வாக்குகள்
பெற்று, 3000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இன்னொரு கொத்தடிமை கடையநல்லூர் தொகுதியில்
போட்டியிட்டுத் தோற்ற ஷேக் தாவூது ஆவார்.
*******************************************************************
போலி செக்ஸ் வீடியோவில் சிக்கிய
திமுக வேட்பாளர் பெரிய கருப்பன் வெற்றி!
-----------------------------------------------------------------------------------
முன்னாள் அமைச்சரும் திருப்பத்தூர் தொகுதி
திமுக வேட்பாளரும் ஆகிய பெரிய கருப்பன்
நாப்பதாயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி
அடைந்துள்ளார்.

திருப்பத்தூர் வாக்கு விவரம்:
----------------------------------------------------
பெரிய கருப்பன் திமுக = 1,10,719
அசோகன் அதிமுக...........= 68715
சாத்தய்யா கம்யூனி ஸ்ட் = 7380
நாப்பதாயிரம் வாக்குகலுக்கும் மேலான வித்தியாசத்தில்
பெரிய கருப்பன் வென்றுள்ளார்.
வாக்கு வித்தியாசம் = 42004
**************************************************************
வைகோ அமெரிக்கா பயணம்!
அமெரிக்கத் தேர்தலில் மூன்றாவது அணி அமைக்கிறார்!
------------------------------------------------------------------------------------------------------
அமெரிக்க அதிபர் தேர்தல் இவ்வாண்டு இறுதியில்
(2016 நவம்பர் 8) நடைபெற உள்ளது. பாரக் ஒபாமா
இரு முறை அதிபராக இருந்து விட்டார். மூன்றாவது
முறை அதிபராக இருக்க அமெரிக்கச் சட்டத்தில்
இடம் இல்லை.

இதுவரை அமெரிக்காவில் குடியரசுக் கட்சி,
ஜனநாயகக் கட்சி என்ற இரண்டு கட்சிகளே
மாறி மாறி அதிபர் பதவியைப் பிடிக்கின்றன.
தமிழகத்தில் திமுக அதிமுக மாறி மாறி
ஆட்சியைப் பிடிப்பது போல.

இது நியாயாம் அல்ல என்று கருதுகிறார் வைகோ.
எனவே அமெரிக்கத் தேர்தலில் மூன்றாவது அணி
அமைத்து அந்த அணியின் சார்பாக ஜனாதிபதி
வேட்பாளரை அறிவித்து, அவரை வெற்றி பெறச்
செய்வதற்கு வியூகம் அமைக்க, அமெரிக்கா
புறப்படுகிறார் வைகோ.

மக்கள்நலக் கூட்டணியின் மூலம் மாற்று
அரசியலை உருவாக்கி, "வெற்றி" பெறச் செய்த அனுபவம்
அவருக்குக் கைகொடுக்கும் என்கிறார்கள்
தாயகத்துத் தோழர்கள்.  

வைகோவின் அமெரிக்கப் பயணம் வெல்லட்டும்!
*******************************************************************

வெள்ளி, 20 மே, 2016

விஜயகாந்தின் கின்னஸ் சாதனை!
------------------------------------------------------------------
போட்டியிட்ட 104 தொகுதிகளிலும் டெப்பாசிட்
இழந்து கின்னஸ் சாதனை புரிந்தது தேமுதிக.
கட்சி தொடங்கிய நாள் முதல் இப்படிப்பட்ட
அவமானகரமான தோல்வியை தமிழ்நாட்டில்
எந்தக் கட்சியும் சந்தித்தது இல்லை.

போட்டியிட்ட இடங்கள்= 104
படுதோல்வி...........................= 104
டெபாசிட் இழப்பு................= 104

1) தேமுதிக கட்சித் தலைவரும்
2)கழிந்த சட்டமன்றத்தின்
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவரும்
3) கிங் மேக்கராக இருக்க மாட்டேன்; நான்
கிங்காகத்தான் இருப்பேன் என்று
தலைக்கனத்துடன் கூறிய மூடரும்
4) முதலமைச்சர் வேட்பாளர் என்று
சுயஇன்பம் அடைந்தவரும் ஆகிய

கோமாளி விஜயகாந்த், சகுனி வைகோவின்
துர்போதனையால் தானும் உழுந்தூர்ப்
பேட்டையில் கேவலமாக டெப்பாசிட் இழந்து
கட்சி மொத்தத்தையும் டெப்பாசிட் இழக்க வைத்து
கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.
**************************************************************
    
20 கோடி ரூபாய் செலவழித்தும் தோல்வி அடைந்த
கம்யூனிஸ்ட் வேட்பாளர் தளி ராமச்சந்திரன்!
---------------------------------------------------------------------------------------
தமிழகத்திலேயே இத்தேர்தலில் அதிகமான
தொகையைச் செலவு செய்தவர் என்ற
பெருமையைப் பெறுகிறார்
தளி தொகுதி கம்யூனிஸ்ட் வேட்பாளர்
"தோழர்" தளி ராமச்சந்திரன்.

முதல் கட்டத் தகவலின்படி, தளி தொகுதியில் மட்டும்
20 கோடி ரூபாய் செலவழித்துள்ளார் ராமச்சந்திரன்.
இருப்பினும், இவரை திமுக வேட்பாளர் பிரகாஷ்
(74429 வாக்குகள்) காயடித்தார். இரண்டாம் இடத்தில்
தங்கிய தளி ராமச்சந்திரன் 68184 வாக்குகள் பெற்று
தோல்வி அடைந்தார்.

அதிமுக கூட எந்த ஒரு தொகுதியிலும் 20 கோடி ரூபாய்
செலவழிக்கவில்லை என்று தெரிய வருகிறது.
********************************************************************


தேர்தலுக்குப் பின் மும்முனைப் போட்டி!
-----------------------------------------------------------------------------
தேர்தல் முடிவுகள் வந்த பின் 234 தொகுதிகளிலும்
மும்முனைப் போட்டி நடைபெற்று வருகிறது.

1) நாம் தமிழர் கட்சி
2) பாரதிய ஜனதா கட்சி
3) நோட்டா
இம்மூவருக்கும் இடையில் மும்முனைப் போட்டி
நிலவுவதை முடிவுகள் காட்டுகின்றன.

பல தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியை
வீழ்த்தி வெற்றி பெறுகிறது நோட்டா.
வேறு பல தொகுதிகளில் பாஜகவை
வீழ்த்துகிறது நோட்டா.
***************************************************************** 

சரியாக வந்திருக்கிறது. எல்லா அம்சங்களும்
உள்ளடங்கி உள்ளன. அதே நேரத்தில் 
சமூக சமத்துவப் படை சிவகாமி தோல்வி!
---------------------------------------------------------------------------------
சிவகாமி அம்மையார் ஒரு ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்
அதிகாரி. சமூக சமத்துவப்படை என்ற அமைப்பை
வைத்திருக்கிறார். இவரைக் கூட்டணியில் சேர்த்து
பெரம்பலூரில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட
வைத்தார் கலைஞர். ஆனால் அம்மையார் குறைந்த
வாக்குகளில் தோல்வி அடைந்தார்.

பெரம்பலூர் வாக்கு விவரம்:
--------------------------------------------------
தமிழ்ச்செல்வன் அதிமுக =1,01,073
சிவகாமி திமுக .......................= 94,220
கே ராஜேந்திரன் தேமுதிக=11,482
சத்தியசீலன் பாமக ..........=4222
அருண்குமார் நாம் தமிழர் =2521
கலியபெருமாள் பாஜக......= 1981
மற்றும் சுயேச்சைகள்
நோட்டா.......................................= 3040

நாம் தமிழர் (2521) மற்றும் பாஜக (1981)
இருவரும் நோட்டாவை விடக் குறைவு.
*********************************************************** 
அதிமுக அடித்துத் துரத்தியதால்
தனித்துப் போட்டியிட்ட
வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் தோல்வி!
-----------------------------------------------------------------------------
நெய்வேலி தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக்
கட்சியின் சார்பில் போட்டியிட்டார் திரு வேல்முருகன்.
மூன்றாம் இடம் கிடைத்தது. இத் தொகுதில் திமுக
வென்றது. வேல்முருகன் போன்ற வீணர்களைக்
காயடித்த திமுக வேட்பாளர் சபா ராஜேந்திரன் வாழ்க!

வாக்கு விவரம்:
------------------------------
சபா ராஜேந்திரன் திமுக = 54299
ஆர்.ராஜசேகர் அதிமுக = 36508
டி வேல்முருகன்  தவாக = 30528
கே ஜகன் பாமக ................= 19749
ஆறுமுகம் மார்க்சிஸ்ட் = 12674
கலைச்செல்வன் நாம் தமிழர் =1557
நோட்டா = 1710
மற்றும் ஐந்து சுயேச்சைகள்.

நோட்டா = 1710
நாம் தமிழர் = 1557
************************************************************************* 
வஞ்சப் புகழ்ச்சி இல்லை. ஏழை எளிய மக்கள்
தங்கள் பிழைப்பை விட்டு விட்டு வாக்களிக்க
வருவது என்பது 1952இல் கற்பனையிலும்
நினைத்துப் பார்க்க இயலாத ஒன்று. எனவே
பெருந்தலைவர் காமராசர் "இன்று நீங்கள் வயல்
வேலைக்குச் செல்ல விட்டாலும் பரவாயில்லை;
ஓட்டுப் போத வாருங்கள்; வேலைக்குப் போனால்
என்ன கூலி கிடைக்குமோ அதை உங்களுக்கு
நான் தந்து விடுகிறேன்" என்று கூறி ஒரு ரூபாய்
கொடுத்த் வாக்களிக்க வைத்தார்.  1962இல்
நெல்லை மாவட்டத்தில் எங்கள் ஊரில்
ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் செயலை
"நடுகைச் சம்பளம் போடுவது"என்றுதான்
குறிப்பிடுவார்கள். இதையெல்லாம் கண்ணால்
பார்த்தவன் நான்.   


கல்வியாளர் வசந்திதேவியை அவமானப் படுத்திய
மக்கள் நலக் கூட்டணி! 4000 வாக்குகளே பெற்றார்!
--------------------------------------------------------------------------------------------
ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து
பிரபல கல்வியாளர் வசந்தி தேவி அம்மையாரை
நிறுத்தினார் திருமாவளவன். தமது கட்சியில்
உள்ள ஒருவரை நிறுத்தாமல், அரசியலில் இல்லாத
ஒரு கல்வியாளரை, தம் கட்சியில் மட்டுமல்ல, எந்தக்
கட்சியிலும் உறுப்பினராக இல்லாத  வசந்திதேவி
அம்மையாரை ஜெயலலிதாவை எதிர்த்து நிறுத்தினார்
திருமாவளவன்.

வசந்திதேவி அம்மையார் வெறும் 4000 வாக்குகள்
மட்டுமே பெற்று (நாலாயிரம்) படுதோல்வி அடைந்து
டெப்பாசிட்டையும் பறிகொடுத்தார்.

வசந்திதேவிக்கு ஆதரவாக, திமுக தன் வேட்பாளரை
வாபஸ் பெற வேண்டும் என்று முகநூலில் பல
குட்டி முதலாளித்துவக் கோமாளிகள் தாண்டவம்
ஆடினார். அவ்வாறு ஆடிய ஒரு கோமாளிப் பயலையும்
இன்று எங்கு தேடியும் காணவில்லை.

இதோ வாக்கு விவரம் பாருங்கள்:
----------------------------------------------------------------
ஜெயலிதா அதிமுக =97218
சிம்லா முத்துச் சோழன் திமுக =57673
வசந்திதேவி விசிக = 4195
திமுக வேட்பாளர் தவிர அத்தனை வேட்பாளர்களும்
டெப்பாசிட் இழந்தனர்.

அரசியலை கேலிக் கூத்தாக்கியது மநகூ.
*******************************************************************

தேர்தல் முடிவுக்குப் .பின்
உயிரோடு இருக்கப் போகும்  கட்சிகளும்
சாகப் போகும் கட்சிகளும்!
----------------------------------------------------------------------------------
 திமுக அதிமுக ஆகிய கட்சிகள்
பெருவாழ்வு வாழும் கட்சிகள். அவற்றின்
களஞ்சியங்கள் நிரம்பி வழிகின்றன. அவர்களின்
பிரகாரங்களில் மக்கள் வெள்ளம். இந்தத் தேர்தலில்
மக்கள் அவற்றின் வாழ்வுக்கு வளம் சேர்த்துள்ளனர்.
திமுக அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகளும்
அவற்றை அண்டிப்பிழைக்கும் காங்கிரஸ் முதலிய
கட்சிகளும் தங்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கிக்
கொண்டன.

எனவே வாழ்வாதாரத்தை இழந்த, ஒப்பாரிச் சத்தம்
தொடர்ந்து கேட்கிற மக்கள் நலக் கூட்டணியையும்
பாஜக, பாமக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளைப்
பரிசீலிப்போம்.

1) முதலில் நாம் தமிழர் கட்சி. முதன் முதலாக
இந்தத் தேர்தலில்தான் போட்டி இடுகிறது. இக்கட்சி
அரசியலில் எல்.கே.ஜி. எனவே இக்கட்சி எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாதது இயல்பே. இக்கட்சிக்கு
வயது வந்த பிறகு இதைப் பற்றிப் பரிசீலிக்கலாம்.

2) பாமக: கட்சி ரீதியாக அதிமுக, திமுக, காங்கிரஸ்
ஆகிய கட்சிகளுக்கு அடுத்து ஐந்து சதம் வாக்கு
வங்கியுடன் நான்காவது இடத்தில் உள்ள கட்சி.
தனித்துப் போட்டியிட்டு இதைப் பெற்றுள்ளது.
சாதிய ரீதியான அடையாள அரசியல் கட்சி.
தேர்தல் தோல்வி இக்கட்சியைப் பாதிக்காது.
இது தொடர்ந்து வாழும்.

3) பாஜக: இது சித்தாந்தத்தின் அடிப்படையில்
இயங்கும் கட்சி. தொடர்ந்து டெப்பாசிட் இழந்தாலும்
இக்கட்சி தொடர்ந்து இயங்கும். தனித்து நின்று
இத்தேர்தலைச் சந்தித்து உள்ளது. தற்போதைய
சூழலில் இக்கட்சிக்கு மரணம் இல்லை. தொடர்ந்து வாழும்.

4) தமாகா(மூப்பனார்): கட்சி இப்போதுதான்
பிறந்துள்ளது. உடனடி மரணம் இல்லை. வாழ்வும் இல்லை.
மரணம் நெருங்குமேயானால் மீண்டும் காங்கிரசுடன்
2019 தேர்தலின் போது சேர்ந்து விடும். இதன் மூலம்
மரணத்தில் இருந்து தப்பிப் பிழைத்து விடும்.

5) விடுதலைச் சிறுத்தைகள்: அடையாள அரசியல் கட்சி.
பாமக போன்ற கட்சிகளின் இருப்பு இக்கட்சியின்
இருப்புக்கான நியாயத்தை வழங்குகிறது. எனவே
தொடர்ந்து இக்கட்சி இயங்கும். வாழ்வு இல்லாவிடினும்
சாவு இல்லை.

6) போலிக்கம்யூனிஸ்ட்  கட்சிகள்: CPI, CPM போலிக்
கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து இயங்கும்.
சித்தாந்தத்தின் அடிப்படையில் இயங்கும் கட்சிகள்
இவை. எனவே செங்கொடியும் அரிவாள் சுத்தியல்
சின்னமும் இருக்கும் வரை இக்கட்சிகள் தொடர்ந்து
0.5 வாக்கு சதத்துடன் குற்றுயிரும் குலையுயிருமாகத்
தொடர்ந்து வாழும். மரணம் இல்லை.

7) மதிமுக: நோட்டாவை விடக் குறைவாக, 0.7 சதம்
பெற்று இறுதி மூச்சை விட்டுக் கொண்டு
கொண்டிருக்கும் கட்சி மதிமுக. 2021 தேர்தலில்
இக்கட்சி உயிரோடு இருக்காது. நீத்தார் நினைவில்
இக்கட்சி இடம் பெறுகிறது.

8) இறுதியாக தேமுதிக: இத்தேர்தலில் இக்கட்சி சரிவில்
இறங்கி விட்டது. கிங்கா  கிங் மேக்கரா என்றெல்லாம்
தலைக்கனத்தை வெளிப்படுத்தி வெறும் 2.3 சதம்
வாக்கு வங்கியை மட்டுமே பெற்றுள்ளது. விஜயகாந்த்
பிரேமலதா சுத்தீஷ் ஆகிய மூவரைத் தவிர அடுத்த
தலைவர் இக்கட்சிக்கு இல்லை. குடும்பக்கட்சியான
இது இம்மூவருக்குள் நெத்திலிக் கருவாடாகச்
சுருங்கி விட்டது.

பாஜகவைத் தவிர வேறு எக்கட்சியும் இனி இதனுடன்
கூட்டு வைக்க முயலாது. கூட்டணி பேரத்தில்
இக்கட்சி இனி பெரிதும் பலவீனப்பட்டு விடும்.
எந்தவித எதிர்காலமும் இக்கட்சிக்கு இல்லை.
கூடிய விரைவில் மரணம் நிச்சயம்.

9) சுருங்கக் கூறின், இத்தேர்தல் முடிவின் பின்,
மதிமுக மரணத்தை நோக்கி வேகமாகச் செல்கிறது,
தேமுதிக மெதுவாகச் செல்கிறது. 2021இல்
இவ்விரு கட்சிகளும் நீத்தார் நினைவுப் பட்டியலில்
இடம் பெற்று விடும்.
****************************************************************************
.
    
ஆடத் தெரியாத நாட்டியக்காரி
தெருக்கோணல் என்றாளாம்!
----------------------------------------------------------------
தேர்தலில் தோற்றுப்போனவர்கள் வழக்கமாக
வைக்கும் ஒப்பாரிதான் "பணநாயகம் வென்றது;
ஜனநாயகம் தோற்றது" என்பது.

இது முட்டாள்தனமான கூற்று. இதில் உண்மை
இல்லை; நேர்மையும் இல்லை.

வறுமையும் அறியாமையும் நிரம்பிய ஒரு நாட்டில்
அன்றாடங்காய்ச்சிகளும் நடைபாதைவாசிகளும்
நிரம்பிய ஒரு நாட்டில், அடுத்த வேளை உணவுக்கு
வழியில்லாமல் இருக்கும் மக்களையும் தேர்தல்
நடைமுறையில் ஈடுபடுத்தும் பொருட்டு, பிரதான
அரசியல் கட்சிகள் அன்றையச் செலவுக்குப் பணம்
கொடுக்கின்றன. இதெல்லாம் லஞ்சம் என்ற
வகைமையில் வராது.

இந்தியாவில் எப்போது வயது வந்தோர் வாக்குரிமை
(adult franchise) வந்ததோ, அதாவது 1952இன் முதல்
பொதுத் தேர்தலில் இருந்தே இவ்வாறு ஏழை எளிய
மக்களுக்குச் செலவுக்குப் பணம் கொடுப்பது என்ற
நடைமுறை வந்தது.

தமிழகத்தில் இவ்வாறு ஏழை மக்களின் செலவுக்குப்
பணம் கொடுப்பது என்ற நடைமுறையை  பகிரங்கமாகத்
தொடங்கி வைத்தவர் ஏழை பங்காளர் என்று
போற்றப்பட்ட காமராசர். அவர் அதை ரகசியமாகச்
செய்யவில்லை.

அதற்கு முன்பு, 1947க்கு முன் பணம் உள்ளவனுக்கும்
படித்தவனுக்கும் மட்டுமே வாக்குரிமை இருந்தது.
நமக்கென்று ஒரு அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு
அனைவருக்கும் வாக்குரிமை (சர்வஜன  ஓட்டுரிமை)
வந்தபோது, தாங்களும் வாக்களிக்கலாம் என்றே
அறியாத ஏழை எளிய மக்களையும் வாக்களிக்க
வைக்கும் பொருட்டு தலைக்கு ஒரு ரூபாய் நாணயம்
கொடுத்து இந்த நடைமுறையைத் தொடங்கி
வைத்தார் காமராசர். அவர் செய்ததில் எவ்விதத்
தவறும் இல்லை. இதன் மூலம் ஏழை எளிய
மக்களை அவர் வாக்களிக்க வைத்தார்.

அந்தப் பழக்கம் சற்று அதிகரித்த அளவில் இன்றும்
தொடர்கிறது. வட இந்தியாவில் லல்லு பிரசாத் யாதவ்
தாமே முன்னின்று ஏழை மக்களுக்குப் பணம்
வழங்கும் காட்சிகலின் வீடியோக்கள் ஆயிரக்
கணக்கில் உள்ளன.

தற்போது தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால்,
இவ்வாறு பணம் வழங்கும் செயல்கள் ரகசியமாக
நடக்கின்றன. அவ்வளவே,

தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் தங்கள்
தோல்விக்கான மெய்யான காரணத்தைக் கண்டறிய
முயல வேண்டும். அதை விட்டு, பணம்தான் காரணம்
என்று கூறுவது ஆடத் தெரியாத நாட்டியக்காரி
தெருக்கோணல் என்று கூறுவது போலத்தான் ஆகும்.
**********************************************************************