சனி, 30 செப்டம்பர், 2017

ஆயுதபூஜை கொண்டாட்டத் தில்
முதலிடம் பெறுகிறார்
செயல் தலைவரின் வலது கரமான
அன்பில் பொய்யாமொழி.
2ஆம் பரிசு அனிதா ராதாகிருஷ்ணன்

இதுதான் திராவிட இந்துத்துவம்!

சிவாஜி கணேசன் சிலையைத் திறந்தால்  
பதவி பறிபோகும் என்ற சோதிடரின் கணிப்பால்
சிலை திறக்க மறுத்த எடப்பாடி!
திராவிட இந்துத்துவம்!


இந்த ஆண்டு ஆயுத பூஜை உள்ளிட்ட தசரா
கொண்டாட்டத்தில், வெகு சிறப்பாகக்
கொண்டாடியவர்களில் முதல் 10 இடம்
பெற்றுள்ளவர்களின் பட்டியல்!
-------------------------------------------------------------------------
1) அன்பில் மகேஷ் பொய்யாமொழி ( திமுக இளைஞர் அணி)
2) அனிதா ராதாகிருஷ்ணன் திமுக MLA
3) துர்கா ஸ்டாலின்
4) ராஜாத்தி அம்மாள்
5) தயாளு அம்மாள்
6) பிரேமலதா விஜயகாந்த்
7) TTV தினகரன்
8) ஸ்வர்ண மால்யா
9) எடப்பாடி
10) ஓ பன்னீர் செல்வம்.

முக்கிய குறிப்பு: முதல் 10 இடத்தில் பாஜகவினர்
எவரும், ஹெச் ராஜா உட்பட, இல்லை.
***************************************************************   
திராவிட இந்துத்துவம் பாஜகவின் இந்துத்துவத்தை
தோற்கடித்து விட்டது!
=======================================================
விடையும் விளக்கமும்
----------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------
விடை: கொடுக்கப்பட்ட விவரங்களை வைத்துக்கொண்டு
ஆடு மேய்ப்பவனின் வயதைக் கணக்கிட இயலாது.
இதுவே சரியான விடை.
விளக்கம்:
------------------
1) இந்தக் கணக்கை நியூட்டன் அறிவியல் மன்றம்
உருவாக்கவில்லை. இது உலகப் புகழ் பெற்ற ஒரு
கணக்கு.1990களில் இந்தக் கணக்கை உருவாக்கிய
பேராசிரியர், எட்டாம் வகுப்பில் பயிலும் பள்ளிச்
சிறுவர்களிடம் இக்கணக்கைக் கொடுத்தார்.
**
2) இந்தக் கணக்கிற்கு எண்களில் விடை கிடையாது.
அதாவது no numerical solution. என்றாலும் மாணவர்களில்
90 சதத்திற்கும் மேற்பட்டோர் எண்களில் விடை
எழுதி இருந்தனர். ஆடு மேய்ப்பவனின் வயதாக
25, 45, 60,90, 120 என்று பல்வேறு விடைகளை எழுதி
இருந்தனர்.
**
3) ஒரு கணக்கு என்றால், அதற்கு numerical answer
கண்டிப்பாக இருக்கும் என்ற சிந்தனை
மாணவர்களிடம் மேலோங்கி நிற்பதை கணக்கை
உருவாக்கிய பேராசிரியர் கண்டார். இது ஒரு
arithmetic சிந்தனை ஆகும். கால்குலஸ் போன்ற
உயர் கணிதம் பயின்ற மாணவர்களிடம் இக்கணக்கு
எடுபடாது.
**
4) மாணவர்களின் உளவியலை பரிசோதனை
செய்வதற்காக இந்தக் கணக்கு கொடுக்கப்பட்டது.
இது சமீபத்தில் செய்தியில் அடிபடக் காரணம்,
தற்போது இந்த 2017ஆம் ஆண்டிலும் இதே கணக்கு
ஒரு பள்ளிச் சிறுவர்களுக்கு கொடுக்கப்பட்டபோது,
முன்பு போலவே 90 சதத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள்
numerical answers எழுதி இருந்தனர்.
**
5) arithmetic சிந்தனை இளவயதுச் சிறுவர்களிடம்
வலுவாக வேரூன்றி இருப்பதை இம்முடிவுகள்
காட்டுகின்றன.
**
6) விடையளித்தோர் அனைவருக்கும் நன்றி.
உலகப்புகழ் பெற்ற இந்தக் கணக்கை நமது
வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கிலேயே
இக்கணக்கை இங்கு கொடுத்துள்ளோம். 
-------------------------------------------------------------------------------

ஐன்ஸ்டின் கூறிய புலச் சமன்பாடுகளும்
(Einstein's Field Equations)
முகப்பருக்கள் நிறைந்த இளம்பெண்ணின் முகமும்!
----------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------------------
1) வெளி (space) அதாவது அண்ட வெளியானது வளைந்து
இருக்கிறது என்றார் ஐன்ஸ்டின். மிகுந்த நிறையுள்ள
பொருட்கள் தாங்கள் இருக்கும்  இடத்தில் வெளியை
வளைத்து விடுகின்றன என்று மேலும் கூறினார்
ஐன்ஸ்டின்.

2) வெளி என்பது தனித்த ஒன்றாக இல்லை என்றும்
அது காலத்துடன் பின்னிப் பிணைந்து கிடக்கிறது
என்றும் கூறிய ஐன்ஸ்டின் "வெளி-கால வளைவு"
(space time curvature) என்றே வெளியைக்  குறிப்பிட்டார்.

3) வெளி என்பது நாம் நினைப்பது போல, ஒரு சமதளப்
பரப்பாக இல்லை. குண்டும் குழியுமாக, மேடும்
பள்ளமுமாக, ஏகப்பட்ட முடிச்சுகளுடனும்
திருகல்களுடனும் இருக்கிறது.

4) முகப்பருக்கள் நிறைந்த  அழகிய பெண்ணின்
முகம் போல வெளி இருக்கிறது.

5) ஈர்ப்புப் புலம் (gravitational field) என்பது ஓர்
வெக்டர் புலம் (vector field) என்று கருதினார் நியூட்டன்.

6) ஆனால், ஈர்ப்புப் புலம் என்பது ஒரு டென்சார் புலம்
(tensor field) என்று கருதினார் ஐன்ஸ்டின்.

7) ஐன்ஸ்டினின் கொள்கைகளை அறிய அவரின்
புலச் சமன்பாடுகளைக் கற்க வேண்டும்.
இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும்
ஐன்ஸ்டினின் புலச் சமன்பாடுகளைக் கற்றவர்களும்
குறைவு; புரிந்து கொண்டவர்களோ மிகவும் குறைவு.

8) வெளி வளைந்து இருக்கிறது என்பதன் பொருள்
என்ன என்று புரிந்து கொள்ளாமல் ஐன்ஸ்டினின்
புலச் சமன்பாடுகளைப் புரிந்து கொள்ள இயலாது.

9) இவற்றை  புரிந்து கொள்ள வேண்டுமெனில்,
டென்சார் பற்றிய புரிதல் தேவை. டென்சார் அல்ஜீப்ரா
பற்றிய அறிவு தேவை.

10) எமது பரிசீலனையில் அறிவியல் படித்தவர்களிலேயே
டென்சார் பற்றி அறிந்தவர்கள் மிகவும் குறைவு.
மொத்த சமூகத்தின் புரிதல் மட்டத்தை
(level of understanding) இந்த லட்சணத்தில் வைத்துக் கொண்டு
ஐன்ஸ்டினின் பொதுச் சார்பியல் கோட்பாட்டை
யாருக்கும் புரிய வைக்க இயலாது. பொதுச் சார்பியல்
கோட்பாட்டின் நூற்றாண்டும் வந்து போய் விட்டது.

11) எனவே டென்சார் பற்றி அறிய விரும்புவோருக்காக
வகுப்புகள் நடத்த நியூட்டன் அறிவியல் மன்றம்
உத்தேசித்துள்ளது. பண்டிகைக் கால விடுமுறைகள்
முடிந்தபின், வகுப்புகள் நடத்த இருக்கிறோம்.

12) குறைந்தது 10 பேர் முன்வந்தால் டென்சார்
பற்றிய அறிமுக வகுப்புகள் நடத்தப்படும்.

13) விரும்பத்தக்க தகுதி (eligibility: desirable):
டென்சார் வகுப்புக்கு வருவோர் குறைந்த பட்சமாக
B.Sc Physics B.E, B.Tech படித்தவர்களாக இருப்பது நல்லது.

14) கணிதத்தில் Matrix பகுதியில் eigen value கண்டுபிடிக்கத்
தெரிந்திருக்க வேண்டும். வலுவான physics அடிப்படை
இருத்தல் வேண்டும்.

15) மெய்யான ஆர்வமும் தகுதியும் உடையவர்கள்
முன்வந்தால், வகுப்புகள் சென்னையில் நடத்தப்படும்.
கட்டணம் எதுவும் கிடையாது.இல்லையேல் கைவிடப்படும்.
******************************************************************      

.

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

https://www.youtube.com/watch?v=7BK166SL-ig


https://www.youtube.com/watch?v=f5liqUk0ZTw&t=312s

புதன், 27 செப்டம்பர், 2017

1) இது நேற்றைய கதை. நல்வாய்ப்பாக வதந்தி
முடிவுக்கு வந்து விட்டது. என்னுடைய அனுபவத்தில்
கலைஞர் பற்றிய வதந்தியைக் காண்பது இது
முதல் முறையன்று.
2) 200 ரூபாய் இருந்தால் போதும்; இந்தியாவில் எவர்
வேண்டுமானாலும் மதக்கலவரத்தை உண்டு பண்ணி
விடலாம் என்னு ஒரு முறை கூறினார் திரு மார்க்கண்டேய
கட்ஜு. கலவரங்களின் மூலத்தை ஆராய்ந்தால், அவை
எல்லாமே வதந்தியால் உருவானவை என்று தெரியவரும்.
3) வதந்திகளால் சட்டம் ஒழுங்கு குலைகிறது. பொது அமைதி
கெடுகிறது. பெண் குழந்தைகளை பள்ளி, கல்லூரி,
அலுவலகம் அனுப்பிஇருக்கும் பெற்றோர்கள் வயிற்றில்
நெருப்பைக் கட்டிக் கொண்டு பதைபதைப்புடன்
இருக்க நேர்கிறது.
4) எந்தச் சூழ்நிலையிலும் வதந்திகளால்
நற்பயன் எதுவும் விளையப் போவதில்லை.எனவே
வதந்திகளை மூர்க்கத்தனமாகவும் முரட்டுத் தனமாகவும்
அணுக வேண்டியதும் நம் கடமையாக உள்ளது.
5) கலைஞர் சாகாவரம் பெற்றவர் அல்லர். தம் அந்திம
காலத்தில் உள்ளார் என்பது உண்மையே. அதற்காக
சமூக விரோதிகள் வதந்தியைக் கிளப்ப அனுமதிக்க
முடியாது. வதந்திகள் முளையிலேயே கிள்ளப்பட
வேண்டும். So ZeroTolerance towards roumours is a must.
6) அறிவியல் பாடத்திலோ கணக்கிலோ ஒரு மாணவன்
எழுப்பும் சந்தேகத்தை அணுகுவது போல,
மென்மையாக வதந்திகளை அணுக முடியாது.        
எல்லாம் இரட்டை இரட்டையாக இருப்பதில்லை!
Everything is not BINARY!
---------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------
1) இயற்கையிலும் சமூகத்திலும் இருமைகள் (binaries)
உண்டு. 

2) பகல்-இரவு, வெளிச்சம்-இருட்டு ஆகியன இருமைகள்.
நன்மை-தீமை, இன்பம்-துன்பம், உண்மை-பொய்
ஆகியன சமூகத்தில் காணும் இருமைகள்.

3) உலகில் இருமைகள் உண்டு. ஆனால், உலகில்
இருமைகள் மட்டுமே உண்டு என்று கருதுவது பேதைமை.

4) இயற்கையிலும் சமூகத்திலும் ஒருமையும் உண்டு,
இருமையும் உண்டு, மும்மையும் உண்டு, பன்மையும்
உண்டு. ஆதிசங்கரரின் அத்வைதம் ஒருமையைச் சுட்டுகிறது.
ஒருமை மட்டுமே என்கிறது. மத்வாச்சாரியாரின் துவைதம்
இருமையைச் சுட்டுகிறது. சீனத்தில் உள்ள யிங்-யாங்
கோட்பாடு ஓர் இருமைக் கோட்பாடு ஆகும்.

5) ஆனால் நுனிப்புல்லர்கள், எதையும் மேம்போக்காக
மட்டுமே அறிய முடிந்தவர்கள், எந்த ஒன்றின்
அடியாழம் வரையிலும் சென்று பார்த்து அறிய
இயலாதவர்கள் ஆகியோர் சமூகத்தில் 98 சதம்
உள்ளனர். இவர்களுக்கு இருமை மட்டுமே புரியும்.
இருமைக்கு மேற்பட்ட எதையும் இவர்களின் மூளை
விளங்கிக் கொள்ளாது.

6) கணிதமானது ஒருமை இருமையுடன் நின்று
விடுவதில்லை. எந்த ஒன்றிலும் n வரை (n = any number)
அல்லது infinity வரை கண்டறிய வேண்டியது
கணிதத்தின் பொறுப்பு.

7) ஆக, அறிவியலானது இருமையே விஷயங்களின்
எல்லை என்ற மூடத்தனத்தை ஏற்பதில்லை. மாறாக
அறிவியலானது பன்மைத்துவத்தை ஏற்கிறது.

8) இதுதான் தத்துவம். அதாவது ஒரு தத்துவக்
கோட்பாட்டை இங்கு எளிய முறையில் விளக்கி
இருக்கிறேன். இதை அன்றாட வாழ்க்கையில்
வாசகர்கள் பொருத்திப் பார்க்க வேண்டும்.

9) ஜெயலலிதா மரணம், மோடியின் புல்லட் ரயில்,
நடிகர் கமலஹாசனின் இன்றைய (26.09.2017) பேட்டி,
நீட் தேர்வு இப்படி எந்த ஒன்றுடனும் நீங்கள் மேற்கூறிய
தத்துவத்தைப் பொருத்திப் பார்க்கலாம். அப்படிப்
பார்க்கிற போது, மேற்கூறிய எந்த ஒன்றும்
எந்த இருமைக்குள்ளும் ( சரி-தவறு, நன்மை-தீமை
முதலியன) அடங்கி விடுவதில்லை என்பதை
உணர்வீர்கள்.
******************************************************************** 
ராஜபக்சே செய்தது இனப்படுகொலை அல்ல!
ஈழத்தமிழனை இனப்படுகொலை செய்ததில்
இந்தியாவுக்கு எந்தப் பங்கும் இல்லை!
இதுதான் ராஜபக்சே கையாள் திருமுருகனின் நிலை!
-----------------------------------------------------------------------------------------------
2009இல் ஈழத்தில் சிங்கள ராஜபக்சே அரசுதமிழர்களை
இனப்படுகொலை செய்தது. சர்வதேச சமூகத்திற்கு
இந்த உண்மையை அறியச் செய்வதும், இனப்படுகொலை
செய்த குற்றவாளிகளை நீதியின் முன்னிறுத்தி
தண்டனை பெற்றுத் தருவதும் ஈழ ஆதரவாளர்கள்
மற்றும் ஜனநாயக சக்திகளின் கடமை ஆகியது.

இனப்படுகொலைக் குற்றங்களை விசாரிக்க சர்வதேச
அளவில் மக்கள் தீர்ப்பாயங்கள் (Peoples'Tribunals)
ஏற்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்று 2010இல் உருவான
டப்ளின் தீர்ப்பாயம்.

பின்னர் 2013இல் ஜெர்மனியில் உள்ள பிரேமன் (Breman)
என்ற ஊரில் ஏற்படுத்தப்பட்ட தீர்ப்பாயம். இந்த
பிரேமன் தீர்ப்பாயத்தில் பங்கேற்று இனப்படுகொலை
குறித்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு மே 17
இயக்கத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான
திரு உமர் என்பவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு
இருந்தது.

நன்கு கவனிக்கவும். மே 17இன் தலைவரான திருமுருகன்
காந்தி அழைக்கப்படவில்லை. இனப்படுகொலை
குறித்து சாட்சியம் அளிக்க அருகதை உள்ளவர் என
திருமுருகன் காந்தி சர்வதேச சமூகத்தால் மதிக்கப்
படவில்லை. மாறாக, மே 17இன் இரண்டாம் இடத்தில்
இருந்த தலைவரான திரு உமர் மட்டுமே, அவரின்
சிறப்புத் தகுதி காரணமாக, அழைக்கப்
பட்டிருந்தார்.

உமருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவருடன்
திருமுருகனும் பிரேமன் தீர்ப்பாயத்திற்குச் சென்றார்.
அங்கு சென்றதும்தான் திருமுருகனின் உண்மையான
கோரமுகம் வெளிப்பட்டது. அவர் இந்திய
உளவுத்துறையின் கையாள் என்பது நிரூபணம் ஆனது.

இனப்படுகொலையில் அமெரிக்கா, பிரிட்டன்
மட்டுமல்ல, இந்தியாவும் குற்றவாளியே என்ற
உண்மையை பிரேமன் தீர்ப்பாயத்தில் முன்வைக்க
வேண்டும். ஆனால் இந்த நோக்கத்திற்குப் பெரிதும்
தடையாக இருந்தவர் திருமுருகன். சர்வதேச
சமூகத்திற்கு ஈழத்தமிழர்களின் வேண்டுகோளை
 எடுத்துச் சொல்லும் "தமிழர் தீர்மானம்" என்ற
ஆவணம் வெளிப்பட்டு விடாமல் தன்னால்
இயன்ற அளவு தடுத்தார் திருமுருகன்.

மேலும் ஐ.நா சபையில் பேசும் வாய்ப்பை
ஈழ ஆதரவாளர்கள் இவருக்குப் பெற்றுத் தந்தனர்.
கிடைத்த வாய்ப்பில் இனப்படுகொலையில்
இந்தியாவின் பங்கு என்று பேசவேண்டிய
நேரத்தில், அதைப்பற்றியே பேசாமல் தவிர்த்து
இந்திய உளவுத்துறையின் கையாள் என்பதை
நிரூபித்தார் திருமுருகன். இதன் மூலம்
இனப்படுகொலைக்கு ஆளான ஒரு லட்சம் ஈழத்து
தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தார்.

திருமுருகன் என்பவர் ஈழ ஆதரவாளர் அல்ல.
மாறாக இந்திய உளவுத்துறையின் கையாள்.
இவரை இயக்கியவர் அன்றைய மத்திய அமைச்சர்
ப சிதம்பரம்.

திரு உமர் தமது 400+ பக்க ஆவணத்தில் திருமுருகனை
தோலுரித்துள்ளார். அந்த ஆவணத்தை வாசகர்கள்
படிக்க வேண்டும். அது ஒரு ஆதாரம் ஆகும்.

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!
சொந்த நாட்டிலே!
*************************************************************   
 
 

      
    

திங்கள், 25 செப்டம்பர், 2017

பெண் எழுத்தாளர் மீனா கந்தசாமியை
அடித்து உதைத்த மே 17 ஒருங்கிணைப்பாளர்!
இந்த ஆணாதிக்க வெறி பிடித்த கயவனுக்கு
வக்காலத்து வாங்கிய திருமுருகன் காந்தி!
-----------------------------------------------------------------------------
1) மீனா கந்தசாமி என்னும் பெண் எழுத்தாளரை
வாசகர்களில் சிலரேனும் அறிவார்கள். IITயில்
பேராசிரியராகப் பணிபுரிந்த வசந்தா கந்தசாமியின்
மகள் இவர். மீனா கந்தசாமி ஆங்கிலத்தில்
எழுதும் எழுத்தாளர் என்பதால் தமிழ் வாசகர்கள்
மத்தியில் இவருக்கு அறிமுகம் குறைவு.

2) 2011 அக்டோபரில் மீனா கந்தசாமிக்கும் சார்லஸ்
அந்தோணி என்பவருக்கும் திருமணம் நடந்தது.
கணவருடன் குடித்தனம் நடத்த கர்நாடக மாநிலம்
மங்களூருக்கு கணவரின் வீட்டுக்குச் சென்றார் மீனா.

3) ஆனால் மீனா-சார்லஸ் அந்தோணியின் இல்லறம்
மிக விரைவிலேயே முடிவுக்கு வந்தது. சந்தேகப்
பேர்வழியாகவும் தொட்டதற்கெல்லாம்  மனைவியை
அடித்து உதைக்கும் ஆணாதிக்க கொடூரனாகவும்
இருந்தார் சார்லஸ். அடி உதை காயங்களால்
உடம்பு புண்ணாகிப்போன மீனா உயிரைக் காப்பாற்றிக்
கொள்ள, வீட்டை விட்டு வெளியே வந்து, பின்னர்
கணவரை விவாகரத்து செய்தார் மீனா.       

4) யார் இந்த சார்லஸ் அந்தோணி? இவர்தான் மே 17
இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர். 2011இல் மே 17இன்
ஒருங்கிணைப்பாளராக இருந்தவர். மார்க்சியம்,
பெரியாரியம் எல்லாம் படித்த அறிவுஜீவியாம். இந்த
வெளிப்பூச்சில் ஏமாந்து போய் மீனா கந்தசாமி
தன் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டார்.

5) நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் என்று ஒன்று
இருக்கிறது தெரியுமா? (Govt in exile). இதன் பிரதமர்
திரு உத்திரகுமாரன் அவர்கள். மே 17இயக்கத்தின்
பிரதிநிதியாக, ஆணாதிக்கக் கயவன் சார்லஸ்
அந்தோணியை, நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தில்
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக (MP) நியமித்தனர்
யார் தெரியுமா? வேறு யாருமல்ல, திருமுருகன்தான்.

6) மீனா கந்தசாமி தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை
ஆங்கில ஏடு அவுட்லுக்கில் (Outlook) ஒரு கட்டுரையாக
எழுதி இருந்தார். அதற்கான லின்க் இக்கட்டுரையுடன்
(அல்லது கமென்ட் பகுதிலயில்) கொடுத்துள்ளேன்.
ஆங்கிலப் புலமையுள்ள வாசகர்கள் அதைப் படிக்கலாம்.

7) 19 மார்ச் 2012 Outlook ஆங்கில ஏட்டின் கட்டுரையில்
மீனா கந்தசாமி இவ்வாறு குறிப்பிடுகிறார்:
"Married to a violent man who treats me with nothing but distrust;
my skin has enough hurt to tell its own story."

8) அவுட்லுக் கட்டுரையைத் தொடர்ந்து. கயவன்
சார்லஸ் அந்தோணிக்கு எதிராக கடுமையான
கண்டனங்கள் எழுந்தன. மே 17 இயக்கத்திலும்,
சார்லஸ் அந்தோணிக்கு எதிரான இப்போக்கு
தீவிரமாக எதிரொலித்தது. சார்லஸ் மீது நடவடிக்கை
எடுக்கக்கோரி திருமுருகன் மீது நிர்ப்பந்தங்கள்
ஏற்பட்டன. ஆனால் திருமுருகன் சார்லசுக்கு எதிராக
ஒரு துரும்பைக் கூடத் தூக்கவில்லை. சார்லஸின்
தனிப்பட்ட வாழ்க்கையில் (personal life) தலையிட
முடியாது என்று ஆணாதிக்கத்துக்கு வக்காலத்து
வாங்கினார் திருமுருகன்.

9) வெளிநாட்டு கிறிஸ்துவ மத நிறுவங்களிடம் இருந்து
பெரும்பணம் பெறும் பொன்முட்டையிடும்
வாத்தான சார்லஸ் அந்தோணியை திருமுருகன்
எப்படி பகைத்துக் கொள்வார்?

10) எமது குற்றச்சாட்டுகளை திருமுருகனின் பழைய கூட்டாளி
திரு உமர் அவர்களும் உறுதி செய்கிறார். பார்க்க:
திரு உமரின் 400+ பக்க ஆவணம், பக்கம்-247,
பத்தி-556,557).
******************************************************************
பின்குறிப்பு: மீனா கந்தசாமியின் போராட்டத்தால்,
வெள்ளமென எழுந்த கண்டனங்களால், வேறு வழியின்றி
மே 17 இயக்கத்தை விட்டு வெளியேறினான் சார்லஸ்.
கயவன் சார்லஸ் அந்தோணி தன்னை ஒரு மார்க்சிஸ்ட்
என்று கூறிக் கொண்டு, படித்த அறிவுள்ள எழுத்தாளராக
இருக்கிற பெண்ணான மீனா கந்தசாமியை எப்படி
ஏமாற்றி இருக்கிறான் பாருங்கள். இந்த ஆணாதிக்க
வெறி நாய்க்கு திருமுருகன் வக்காலத்து.
---------------------------------------------------------------------------------------


KFC சிக்கனை எதிர்த்த திருமுருகன்!
திருமுருகன் நடத்திய போராட்டங்களின் மாய்மாலம்!
ஆஸ்திரேலிய போட்டி கம்பெனியிடம்
காசு வாங்கிக் கொண்டு செய்த புரட்சி!
------------------------------------------------------------------------------------------------
1) KFC என்பது வறுத்த கோழி இறைச்சியை விற்கும்
கடை ஆகும். KFC என்றால் கென்டகி வறுத்த கோழி
(Kentucky Fried Chicken) என்று பொருள். இந்நிறுவனத்தின்
தலைமைச் செயலகம் அமெரிக்காவில் உள்ளது.

2) உங்களுக்கு நினைவு இருக்கிறதா? 2013 ஜூலை மாதம்
முதல் தொடர்ச்சியாக மே 17 இயக்கம் நடத்திய
KFC எதிர்ப்புப் போராட்டம். திருமுருகன் தலைமையில்
கென்டகி வறுத்த கோழி இறைச்சிக் கடைகளை
முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

3) உலகத்தில் உள்ள மக்களின் துன்பத்திற்குக் காரணமே
KFC சிக்கன்தான் என்ற தொனியில் BAN KFC,  NO NO KFC,
INDIANS ARE NOT FOOLS TO EAT KFC  என்றெல்லாம் எங்கு
நோக்கினும் திருமுருகனின் பதாகைகள்! முகநூல்
முழுவதும் திருமுருகனின் KFC எதிர்ப்புக் கருத்துக்கள்.
"KFC உண்ணாதே! புற்றுநோயை வரவழைக்காதே"என்று
திடீர் டாக்டராக மாறினார் திருமுருகன்.

4) ஏன் இந்தப் போராட்டத்தை நடத்தினார், திருமுருகன்? 
இதன் உள்மர்மம் என்ன? உண்மையில் KFC சிக்கனைச்
சாப்பிட்டால் புற்று நோய் வருமா? விடை காண்போம்!

5) வறுத்த கோழி இறைச்சி விற்பனையில்
அமெரிக்காவின் KFC நிறுவனம் சர்வதேச அளவில்
முன்னணியில் இருந்து வருகிறது. என்றாலும் இதற்குப்
போட்டியாகவும் சில நிறுவனங்கள் உண்டு. அவற்றுள்
ஆஸ்திரேலியாவில் உள்ள "COUNTRY FRIED CHICKEN" என்னும்
நிறுவனம் பிரபலமானது.

6) ஜாலி பேனர்ஜி என்பவர் ஒரு பெரு வணிகர். இவர்
2013இல் ஆஸ்திரேலியா சென்று, கண்ட்ரி ஃபிரைடு
சிக்கன் (CFC) நிறுவன அதிபரைச் சந்தித்துப் பேசி,
தென்னிந்தியா முழுவதுக்குமான CFC விற்பனை
உரிமையைப் பெற்றார். இதை அறிந்து கொண்ட
திருமுருகன் ஜாலி பேனர்ஜியை சந்தித்து, CFC
சிக்கனுக்கான விளம்பர வேலைகள் மொத்தத்தையும்
தென்னிந்தியா முழுமைக்குமாக தானே ஏற்றுக்
கொள்வதாக வேண்டினார். ஆங்கிலம், இந்தி
மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு போன்ற பிராந்திய
மொழிகளிலும் விளம்பரங்கள் அமையும்.

7) ஜாலி பேனர்ஜி திருமுருகனின் கோரிக்கையை ஏற்று,
விளம்பரப் பணிகளை திருமுருகனுக்கு வழங்கினார்.
உரிய ஒப்பந்தம் போடப்பட்டது. லட்சங்கள் கைமாறின.

8) இப்போது கவனியுங்கள். திருமுருகன் ஆஸ்திரேலிய
போட்டி  நிறுவனத்தின் (Country Fried Chicken) விளம்பரதாரர்.
இதன் போட்டி நிறுவனம் அமெரிக்க கென்டகி (KFC).
எனவே தன்னுடைய போட்டி நிறுவனத்தை எதிர்த்து,
சந்தையில் அதற்கு இருக்கும் மதிப்பைக் குறைக்க
வேண்டிய வணிகத் தேவை திருமுருகனுக்கு இருக்கிறது.
எனவேதான், போட்டி நிறுவனத்தை அழிக்க,
அமெரிக்க கென்டகி சிக்கன் புற்றுநோயை
உண்டாக்குகிறது என்று ஒரு கருத்து உருவாக்கம்
செய்தார். இதற்காகவே KFC கடைகளை முற்றுகை
இடும் போராட்டத்தை நடத்தினார்.

9) திருமுருகனின் இந்தப் போராட்டத்தில் ஏதேனும்
சமூக நன்மை உள்ளதா? ஒரு ரோமமும் இல்லை.
சொந்த சுயநல வணிக ஆதாயம் மட்டுமே உள்ளது.

10) திருமுருகனின் புரட்சிகர அறைகூவலை ஏற்று,
KFC கடைகளை முற்றுகையிட்ட அப்பாவி
இளைஞர்களுக்கு, திருமுருகன் தன் சொந்த வணிக
நலனுக்காகவே இப்படி மோசடி செய்தார் என்பது
தெரியுமா? இதுவரை தெரியாது. இனியாவது தெரிய
வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.

11) திருமுருகனின் முன்னாள் கூட்டாளி திரு உமர்
அவர்களும் இந்த மோசடியை அம்பலப் படுத்தியுள்ளார்.
அவருடைய 400+ பக்க ஆவணத்தில், பக்கம்-394,
பத்தி-865இல் எமது குற்றச்சாட்டுகளை உறுதி
செய்கிறார். அதையும் வாசகர்கள் படிக்கலாம்.
----------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
அசைக்க முடியாத ஆதாரங்களுடன் திருமுருகனின்
பித்தலாட்டங்கள் தொடர்ந்து அம்பலமாகும்.  
********************************************************    
     
தந்தை பெரியார் காமவெறி பிடித்தவர்!
அடுத்தவன் பொண்டாட்டியின் தொடையைப்
பார்க்க விரும்பியே அவர் பெண்ணுரிமை பேசினார்!
திருமுருகனின் கூட்டாளி ஹரிஹரன் அருள்வாக்கு!
--------------------------------------------------------------------------------------------
பெரியார் என்ன பெரிய மயிரா? அந்த ஈ வெ ராமசாமியை
பெரியார்னுதான் கூப்பிடணுமா? பெரியார் என்ற
பட்டத்தை காமவெறி பிடித்த அந்தக் கிழவனுக்கு
கொடுத்தது யார்?

இப்படிக் கேட்பது யார்? ஆர் எஸ் எஸ் ஆளா? இல்லை.
திருமுருகன் காந்தியின் வலது கரமாக இருக்கும்
ஹரிஹரன் என்ற இழிந்த நபர்தான் இப்படிப் பேசியும்
எழுதியும் வருபவர். அடுத்தவன் பெண்டாட்டியின்
தொடையைப் பார்க்க ஆசைப்பட்டு இந்த ஈ வே ராமசாமி
பெண்ணுரிமை பேசுகிறான் என்று தந்தை பெரியாரை
அவமானப் படுத்தி வருபவர்தான் இந்த ஹரிஹரன்.

மே 17 இயக்கத்தில் உள்ளவர்கள் திருமுருகனின்
பாசத்துக்குரிய ஹரிஹரன் என்னும் இந்தக் கபோதி
பற்றி அறிவார்கள். ஒண்ணாம் நம்பர் மோசடிப் பேர்வழி
இந்த ஹரிஹரன். உங்களின் ஸ்கூட்டரை அவசரத்துக்கு
வாங்கும் இவன் அதை அடகு வைத்துக் குடித்து விடுவான்.
OLD MONK, MAC DOWL போன்ற மலினமான சரக்கு அல்ல
இவன் குடிப்பது. ஒரு FULL ரூ 20,000 விலையுள்ள ஃபாரின்
சரக்கு. மொடாக்குடியன் இந்த ஹரிஹரன்.

மே 17 இயக்கத்தின் ATM கார்டைப் பயன்படுத்துபவன்
இவனே. ஏகப்பட்ட பண மோசடி செய்துள்ளான்.
இயக்கத்துக்கு வரும் நன்கொடையை தான்
அபகரித்துக் கொள்ளும் ஊழல் வியாதி இவன்.
இவன் திருமுருகனுக்கு ஒரு அடியாள்.

மே 17 இயக்கத்தின் அலுவலகத்தில் இருந்து கொண்டு
அலுவலகக் கணினியில் இவன் பார்ப்பது ஆபாசப்
படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் (Blue Film) 

தந்தை பெரியாரைப் பற்றி, திருமுருகனின்
கூட்டாளியான ஹரிஹரன் எழுதி உள்ளதைப்
பாருங்கள்:
" பெரியார்: இந்தப் பெயரை யார் கொடுத்தார்கள் என்று
தெரியாது. இவரைப் பற்றிப் பேசும்போது பெண்கள்
விடுதலையை முக்கியமாகச் சொல்லுவார்கள்.
இவருக்கு இரண்டு மனைவி இருந்தபோதும், யாரையும்
ஆண்களைப்போல் வேட்டி கட்டச்  சொல்லவில்லை.
ஆனால், அடுத்த வீட்டுப் பெண்களை அணியச்
சொல்லுவார். எதற்கு? வேட்டி விலகினால் தொடையைப்
பார்க்கும் ஆசையில்."

இப்படித் தொடர்ந்து எழுதிக் கொண்டே போகிறான்
ஹரிஹரன். இவன் மீது பலரும் புகார் கூறிய போதும்
எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இவனைப்
பாதுகாத்தவர்தான் திருமுருகன். உண்மை என்ன
தெரியுமா? இது திருமுருகனின் கருத்துத்தான். அவரால்
எழுத முடியாத கருத்தை ஹரிஹரன் மூலமாக
எழுதுவார் திருமுருகன்.

ஆதாரம்: மேற்கூறிய அனைத்துக்கும் ஆதாரம் உள்ளது.
திரு உமர் எழுதிய 400+ பக்க ஆவணத்தைப் படிக்கவும்.
(பார்க்க: மேற்படி ஆவணம், பக்கம்-285, பத்தி-638)

இவ்வளவு மோசமான திருமுருகன் பெரியார் சிலைக்கு
மாலை போடுவது யாரை ஏமாற்ற? வேட்டி விலகினால்
பெண்களின் தொடையைப் பார்க்கலாம் என்பதாலேயே
பெரியார் பெண்களை ஆண்களைப் போல் உடை
அணியாகி செய்தார் என்பதை பெரியாரியவாதிகள்
ஏற்றுக் கொள்கிறார்களா? இவ்வளவு மோசமான
திருமுருகனை புரட்சியாளன் என்று முட்டுக்
கொடுக்கும் போலி முற்போக்குகளை முறியடிப்போம்!
***********************************************************      



ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

லாட்டரி ஊழல் பணத்தில்
மார்ட்டின் தன் மகன் டைசன் மூலமாக
ரூ 50 லட்சம் திருமுருகனுக்கு நன்கொடை!
--------------------------------------------------------------------------
லாட்டரி ஊழல் பேர்வழி மார்ட்டின் கோடிக்கணக்கில்
மக்களின் பணத்தைச் சுருட்டியவர். இதன் மூலம்
கோடீஸ்வரர் ஆனவர். பல்வேறு இடங்களில் நிலங்களை
வளைத்துப் போட்டிருப்பவர்.

இவரின் மகன் மேதகு டைசன் அவர்கள் ஒரு கணினி
நிறுவனத்தின் அதிபர். Tamilsnow.com என்பது மேதகு
டைசனின் நிறுவனம். இவர் மே 17 இயக்கத்தில்
பணியாற்றி, பின்னர் திருமுருகனின் ஆலோசனையின்
பேரில் தமிழர் விடியல் என்ற பெயரில் ஒரு பெயர்ப்பலகை
அமைப்பை நடத்தி வருபவர். இவரிடம் பணமும்
காசும் பொங்கி வழிவது இயற்கையே.

மே 17 இயக்கத்துக்கு ஒரு பதிப்பகம் வேண்டும் என்றும்
ஒரு தொலைகாட்சி ஆரம்பிக்க வேண்டும் என்றும்
திருமுருகன் பணம் திரட்ட முற்பட்டார். மார்ட்டின்
மகனான டைசன் ரூ 50 லட்சம் பணத்தை
திருமுருகனுக்கு நன்கொடையாக (கடனாக அல்ல)
அளிக்க முன்வந்தார்.

இந்த உண்மையை திருமுருகனின் முன்னாள் கூட்டாளி
திரு உமர் அம்பலப் படுத்துகிறார். திரு உமர் எழுதிய
400  பக்கங்களுக்கு மேற்பட்ட ஆவணத்தில் இந்த
உண்மை கூறப் பட்டுள்ளது. அதைப் படியுங்கள்.
(பார்க்க: மேற்படி ஆவணம், பக்கம்-278, பத்தி-623)

மே 17 இயக்கம் என்பது ஒரு கோடீஸ்வர இயக்கம்.
இதன் தலைவர்களை கோடீஸ்வரர் ஆக்குவதே இந்த
இயக்கத்தின் லட்சியம். இங்கு பெரும் கோடீஸ்வர்களே
தலைமைக்கு வர முடியும். இது போன்ற ஒரு
இயக்கம், சதா சர்வ காலமும் வெளிநாட்டுப் பயணமும்,
உயர்ந்த மது வகைகளும், நட்சத்திர ஓட்டல்களில்
வாசம் செய்வதுமான பணக்கார இயக்கம்
இந்தியாவிலேயே மே 17 இயக்கம்தான்.

சென்னை பாரிமுனை குறளகத்தில் உள்ள தொழிலாளர்
நல அதிகாரியின் அலுவலகத்திற்கு என்றாவது சென்று
இருக்கிறீர்களா? தொழில் தகராறுச் சட்டத்தின் 2C, 2D
பிரிவுகளின் கீழ் தொழில்தாவா (industrial dispute) ஏற்படுத்தி
வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு
ஆதரவாக வாதாட ஒரு தொழிற்சங்கவாதியாக
மிகப் பலமுறை அங்கு சென்று இருக்கிறேன். இது
நீதிமன்றம் அல்ல; சமரச மன்றம். இங்குள்ள
அதிகாரியான Labour Conciliator நிர்வாகத்தரப்புக்கும்
தொழிலாளர் தரப்புக்கும் இடையே சமரசம்
செய்து வைப்பவர்.

அன்றாடங்காய்ச்சிகளான ஏழைத் தொழிலாளர்கள்
இங்குள்ள நீண்ட தாழ்வாரத்தில் காத்துக் கிடப்பார்கள்.
அவர்களின் சார்பாக வாதாடும் AITUC, CITU, AICCTU
போன்ற கம்யூனிஸ்ட் சங்கங்களின் முழுநேர
ஊழியர்களும் கூடவே காத்துக் கிடப்பார்கள்.

பொன்னேரி, திருவள்ளூர் போன்ற ஊர்களில் இருந்து
ஒரு வாய்தாவுக்காக சென்னைக்கு வந்து போக
அன்று குறைந்தது ரூ 500 செலவாகும். குறைந்த
சம்பளம் என்பதால் ஓவர்டைம் செய்து (8 மணி நேரம்
டியூட்டி+ 4 அல்லது 6 மணி நேரம் OT) வருமானம்
பெறும்  அத்துக்கூலிகளான அந்த ஏழைத்
தொழிலாளர்கள் ஒவ்வொரு வாய்தாவுக்கும்
ரூ 500 வீதம் செலவழிக்க முடியாது. கம்யூனிஸ்ட்
சங்கங்களில் முழுநேர ஊழியர்களுக்கு போதிய
சம்பளம் கொடுப்பது இல்லை. எனவே  வழக்காட வந்த
தொழிலாளியே முழுநேர ஊழியரின் சாப்பாடு
மற்றும் போக்குவரத்துக்கு செலவு செய்ய வேண்டும்.

நான் அரசு வேலையில் இருப்பதாலும், வீட்டில் இருந்து
சாப்பாடு கொண்டு வந்து விடுவதாலும் (இல்லாவிடினும்
அலுவலக கேன்டீனில் ரூ 5க்கு மதிய உணவு கிடைக்கும்)
அலுவலக நண்பர்கள் யாராக இருந்தாலும் தங்களின்
ஸ்கூட்டரில் என்னை குறளகத்தில் இறக்கி விட்டு
விடுவார்கள் என்பதாலும், இந்த ஏழைத்
தொழிலாளர்களுக்கு என்னால் செலவு எதுவும் கிடையாது.

தோழர்களே, திருமுருகன் நடத்தும் மே 17
மேட்டுக்குடி இயக்கத்தையும் எங்களைப்போன்ற
தொழிற்சங்கத்தினர் நடத்தும் பாட்டாளி வர்க்க
இயக்கத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.உண்மை புலனாகும்.

திருமுருகனை எதிர்த்து நிற்பது எளிதல்ல. அது சர்வ
வல்லமை வாய்ந்த இந்திய உளவுத்துறையை
எதிர்த்து நிற்பதாகும். திரு உமர் அவர்களைக் கொல்ல
நடந்த முயற்சி பற்றியும் அவர் எழுதியுள்ளார்.
வாசகர்கள் அவரின் 400+ பக்க ஆவணத்தைப்
படிப்பது நல்லது. இதற்கு திருமுருகன் தரப்பில்
இருந்து இன்று வரை பதில் இல்லை. இதுவே எது
உண்மை என்பதை உணர்த்தும்.
*******************************************************
பின்குறிப்பு: திருமுருகனின் குட்டி முதலாளித்துவ எடுபிடிகள் நம்மிடம் வாலாட்டினர். அவர்களை மன்னித்தேன். என்றாலும்
தொடர்ந்து மன்னிக்கும் உத்தேசம் இல்லை. சிறைக்கு
அனுப்பவே உத்தேசம். ஜாக்கிரதை!
***********************************************************



     
நான் இங்கு குறிப்பிடுவது மஜஇக என்னும்
மார்க்சிய லெனினிய அமைப்பை.
மஜஇக = மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்.
திமுக ஆதரவு அமைப்புகளைப் பற்றி நான்
இங்கு பேசவில்லை. மஜஇக ஒரு நக்சல்பாரி
அமைப்பு. நான் மிகத்தெளிவாக நக்சல்பாரி
அமைப்பான மஜஇகவைப் பற்றிப் பேசுகிறேன்.
திமுக ஆதரவு, பழ கருப்பையா ஆதரவு
அமைப்புகளைப் பற்றி இங்கு பேசவில்லை.
யாரும் பேசவும் அனுமதி இல்லை. இது இரும்பு
அடிக்கும் இடம். இங்கு ஈக்கு என்ன வேலை?       
1) எல்லா வகையான சமூகத் தீமைகளுக்கும்
எதிர்வினை ஆற்றுவது என்பது எம்மால்
இயலாதது. காரணம் என்னவெனில் அந்த அளவு
நேரம் முகநூலில் செலவழிக்க இயலாது.
**
2) எமது பதிவுகளில் பாதி அறிவியல்; பாதி அரசியல்.
பாதி அளவு பதிவுகள் நியூட்டன் அறிவியல் மன்றத்தின்
பதிவுகளாக இருப்பதை எவரும் அறியலாம்.
**
3) பெட்ரோல் விலையேற்றம், பணமதிப்பு நீக்கம்,
GST வரி ஆகிய தலைப்புகளில் கடந்த ஓராண்டில்
மொத்தமே இரண்டு பதிவுகள் மட்டுமே எழுதி உள்ளேன்.
காரணம்: இவை பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள்.
இதில் எமக்கு அக்கறை இல்லை. தினமும் ECONOMIC TIMES
படித்தால், பொருளாதாரம் பற்றி எழுதலாம். நான்
ECONOMIC TIMES படிப்பதே இல்லை. எனவே எழுதுவதும்
இல்லை.
**
4) எமது முகநூல் பக்கம்  பிரதானமாக, அறிவியல்,
கல்வியியல் (academic), தத்துவம், மார்க்சியம் ஆகியவற்றுக்கு
மட்டுமே முன்னுரிமை தருவது.
**
5) கூத்தாடிகள் மேனன், சிவாஜி கணேசன், குடிகார
விஜயகாந்த், ரஜனி, கமல், சீமான்,விஜய் ஆகியோர் மிகச்
சிறந்த நடிகர்களாக இருக்கலாம். ஆஸ்கார் உள்ளிட்ட
விருதுகளை அவர்கள் பெறட்டும். எனக்கு ஆட்சேபணை
இல்லை. ஆனால் அவர்களின் அரசியல் எனக்கு
ஏற்புடையது அல்ல. அவர்களை நான் அங்கீகரிக்கவே
இல்லை. எனவே அவர்களைப் பற்றி பதிவு எழுத இயலாது.
பிக் பாஸ் பற்றி என்னால் எழுத இயலாது. அதை
இங்கு எதிர்பார்க்க வேண்டாம்.
**
6) சங்கராச்சாரி ஜெயேந்திரர் பற்றி ஏராளமான
பதிவுகள் எழுதப் பட்டுள்ளன. அவற்றைத் தேடி
எடுத்துப் படிக்கவும்.
**
7) எனக்கு அக்கறையும் ஆழ்ந்த புலமையும் உள்ள
விஷயங்களில் மட்டுமே கட்டுரைகள் (பதிவுகள்)
எழுதப்படும். ஆழ்ந்த புலமை இல்லாத விஷயங்களில்
பதிவு எழுதுவது இல்லை. பொருளாதாரம், வணிகம்,
சந்தை, வரியியல் ஆகியவை குறித்து எழுதுவது இல்லை.  
பல குட்டி முதலாளித்துவ ஆசாமிகள் தங்களுக்கு
ஆனா ஆவன்னா தெரியாத விஷயங்களில் கூட
பதிவுகளை எழுதி தங்களின் அரிப்பைத்  தீர்த்துக்
கொள்வார்கள். அந்த நடைமுறை (practice) எம்மிடம் இல்லை.
 


  
மேட்டுக்குடி அஜீரணப் புரட்சி இயக்கமே மே 17!
பாம்பையும் திருமுருகனையும் கண்டால்
பாம்பை விட்டு விடு! திருமுருகனை அடி!
----------------------------------------------------------------------------------------
1) திருமுருகன் காந்தியின் மே 17 இயக்கம் படு மோசமான
ஒரு குட்டி முதலாளித்துவ இயக்கம். அகந்தை (ego)
நிறைந்த, எந்தத் தத்துவத்தையும் ஏற்றுக் கொள்ளாத
குட்டி முதலாளித்துவ புகழ் விரும்பிகள் நிறைந்த ஒரு
அற்பமான .சிறிய இயக்கம் அது.

2) இவர்கள் வேலை செய்யும் களம் முகநூல், டிவிட்டர்,
மின்னஞ்சல் ஆகியனவே. முகநூலே மே 17ன் பலம்
என்கிறார் திரு உமர். இவர் திருமுருகனின் முன்னாள்
கூட்டாளி ஆவார்.மெய்யான போராட்டக் களங்களில்
மக்களோடு மக்களாக நிற்பது என்ற சிந்தனையே
 திருமுருகனுக்கும் அவரின் இயக்கத்திற்கும் கிடையாது.

3) கூடங்குளம் உதயகுமாரை நாம் அறிவோம். அவரின்
நிலைபாடுகளுடன் நாம் முரண்பட்டாலும், ஆண்டுக்
கணக்கில் இடிந்தகரையில் மக்களோடு மக்களோடு
களத்தில் காலூன்றி நின்றவர் அவர்.
உதயகுமாரைப்போல், களத்தில் மக்களோடு
மக்களாக நிற்பவர் அல்லர் திருமுருகன்.
மாறாக மேனாமினுக்கி அரசியலில் திளைப்பவர். .

4) மே 17 இயக்கம் ஒரு குடிகார இயக்கம். அங்குள்ள
அனைவருமே (அநேகமாக ) குடிகாரர்கள்தான்.
ஆண் பெண் வேறுபாடின்றி குடிப்பது இவ்வியக்கத்தின்
பண்பாடு. இதற்கு அவ்வியக்கத்தின் முக்கியப்
பிரமுகரான திரு உமர் அளித்த ஒப்புதல் வாக்குமூலமே
சான்று.

5) திரு உமர் கூறுகிறார்:
"ஜெர்மனியில் இருந்து நாங்கள் திரும்பி வரும்போது,
வளர்மதிக்கு சாராயம் வாங்க வேண்டி, வளர்மதியை
அழைத்து, ஒவ்வொரு சாராய பாட்டிலையும் படித்துக்
காண்பித்து, எதை வாங்க வேண்டும் என்று கேட்டு,
வளர்மதி சொன்ன சாராயத்தை வாங்கி வந்தார்
திருமுருகன்.பிறகு 2013இல் நாங்கள் டெல்லியில்
தங்கி இருந்தபோது, வளர்மதியும் அறையில் தங்கி
இருந்தபோது, வளர்மதி குடித்திருந்தார்."
(ஆதாரம்: திரு உமர் எழுதிய 423 பக்க கடிதம்;
நான் ஏன் மே 17 இயக்க உறுப்பினர் இல்லை?
பக்கம்-18. பத்தி-43) (நன்கு கவனிக்கவும்: திரு உமர்
குறிப்பிடும் குடிகார வளர்மதி மே 17 )இயக்கத்தவர்)

6) ஆக மே 17 இயக்கம் ஒரு மேட்டுக்குடி இயக்கம்.
அடிக்கடி விமானத்தில் வெளிநாட்டுப் பயணம்,
வெளிநாட்டில் தங்குவது, வெளிநாட்டு மதுவகைகளை
அதிக விலை கொடுத்து வாங்கி, இந்தியாவுக்குக்
கொண்டு வந்து, புது டில்லியில் ரூம் போட்டு,
ஆணும் பெண்ணும் சேர்ந்து தண்ணி அடிப்பது
ஆகியவையே மே 17 இயக்கத்தின் புரட்சிகரச்
செயல்பாடுகள்.

7) இவ்வியக்கத்தின் முக்கியப்
பெருந்தலைகளான அ) லேனா ஆ) வளர்மதி
இ) மனோஜ் ஆகியோர் பெருங்குடிகாரர்கள்.
இங்கு கவனிக்க வேண்டியது: ஓல்ட் மான்க் அல்லது
Mc (மாக் ட்வெல்) போன்ற மட்ட ரகமான சரக்கை
வாங்கி, சைட் டிஷ் வாங்க காசு இல்லாமல்,
50 பைசா ஊறுகாயை நாக்கில் தடவிக் கொண்டு,
90ஐ அடிக்கும் (குவார்ட்டரில் பாதி 90 என்று அறிக)
ஏழை எளிய மக்கள் குடிப்பதைப் போன்றதல்ல
திருமுருகன் வகையறாக்கள் குடிப்பது.
இவர்கள்  வாங்கும் ஒரு FULL பாட்டிலின் விலை
குறைந்தது ரூ 20,000 இருக்கும். மே 17ன் புரட்சி
என்பது மேட்டுக்குடியின் அஜீரணப் புரட்சி.

8) திரு உமர் மேலும் கூறுகிறார்:
"இனி குடிப்பதைப் பற்றி, குடிக்க வேண்டியதன்
அவசியத்தைப் பற்றி, எப்படிக் குடிக்க வேண்டும்
என்பது பற்றியும் பல்வேறு கட்டுரைகள்
வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை."
(ஆதாரம்: மேற்படி ஆவணம், பத்தி-41, பக்கம்-18).

9) உண்டியல் குலுக்கி, அதில் வருகிற காசில்
1க்கு 8 பிட் நோட்டிஸ் போட்டு தெருமுனைக் கூட்டம்
போடுகிற மஜஇகவினரை நான் அறிவேன்.
(மஜஇக என்பது நக்சல்பாரிகளின் வெகுஜன அமைப்பு).
கைநிறையச் சம்பளம் வாங்கும் அரசு உத்தியோகத்தில்
இருந்தும், கட்சி வேலைக்காக, LOSS OF PAYயில் லீவு
எடுத்து, பசி வயிற்றைக் கிள்ள, உண்டியல் குலுக்கி
கிடைத்த காசில், தெருவோரக் கடையில், இட்லி
வாங்கிப் பசியாறிய பல்வேறு மார்க்சிய
லெனினிஸ்டுகளின் பெயர்களை, இக்கட்டுரையாளர்
உட்பட.என்னால் பட்டியலிட முடியும்.

10) நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் கண்ணாமணியை
மேனனின் போலீசு போலி என்கவுண்டரில் கொன்றபோது,
திருப்பரங்குன்றத்தில் வக்கீல் அய்யாத்துரையை
மேனனின் போலிசு அடித்தபோது, 1980 அல்லது 1981ல்)
"திருப்பத்தூரில் இருந்து திருப்பரங்குன்றம் வரை"
என்ற தலைப்பில், கட்சிக் ,கட்டளைப்படி, நான் ஒரு
அறிக்கை தயாரித்தேன். அதை அச்சடித்துக் கொடுக்க
எந்த அச்சகமும் முன்வராத நிலையில், தொழிற்சங்கப்
பயன்பாட்டுக்காக என்னிடம் இருந்த, கையால்
உருட்டும் சைக்ளோஸ்டைல் எந்திரத்தில் அதை
அச்சடித்தேன். அதற்கு பேப்பர் வாங்க காசில்லாமல்,
என் கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை
மார்வாடியிடம் அடகு வைத்து ரூ 20 வாங்கி, அந்தக்
காசில் பேப்பர் வாங்க நேர்ந்தது. இதுதான் பாட்டாளி
வர்க்கச் செயல்பாடு. (அப்போது மார்வாடிகள்
கைக்கடிகாரத்தை அடகு பெற்றுக் கொள்வார்கள்) 

11)சர்ரு புர்ரென்று நினைத்த நேரத்தில் ஜெட்
விமானத்தில் பறக்க வேண்டும்; டெல்லியில்
 உயர்ந்த ரக விடுதியில் ரூம் எடுத்துத் தங்க
வேண்டும் (கரோல்பாக்கில் கூட சிங்கிள் ரூம்
ஒரு நாளைக்கு ரூ 10,000), வெளிநாட்டு மது பானம்
அருந்த வேண்டும். இவையெல்லாம் மேட்டுக்குடி
மே 17 இயக்கத்தின் செயல்பாடுகள்.

12) திருமுருகன் புரட்சியாளர் என்றால், மார்க்சிஸ்டு
லெனினிஸ்டுகள் எல்லாம் யார்? அவர்கள் என்ன
பூர்ஷ்வாக்களா?

13) 2014 நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவை எதிர்த்து
தேர்தல் பரப்புரை செய்வது என்ற முடிவை திருமுருகன்
எப்படி செயல்படுத்தினார் என்று தெரியுமா?
பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிட்ட கன்னியாகுமரி
தொகுதி பக்கமே திருமுருகனோ மே 17 ஆசாமிகளோ
தலைகாட்டவில்லை. அணுஉலை எதிர்ப்புப்
போராளியாக தன்னைச் சித்தரிக்கும் திருமுருகன்
கூடங்குளம் உதயகுமார் போட்டியிட்ட அதே கன்னியாகுமரி
தொகுதியில் உதயகுமாரை திருமுருகன் ஆதரித்தாரா?
இல்லை. திருமுருகன் பாஜக பொன்னார்ஜியின் கையாள்.
திருமுருகனுக்கு வர வேண்டிய பணத்திற்கு
ஏற்பாடு செய்து கொடுத்தவரே பொன்னார்ஜிதான்.
இதுதான் திருமுருகனின் பாஜக எதிர்ப்பின் லட்சணம்.

14) இக்கட்டுரையில் கூறப்பட்ட உண்மைகளை
 எவராலும் மறுக்க இயலுமா? ஒருபோதும் இயலாது.
(தொடரும்)
****************************************************************** 
  
            
                       

    

வியாழன், 21 செப்டம்பர், 2017

NGO போராளி திருமுருகன் யார்?
ராவுக்கும் NIBக்கும் இவருக்கும் என்ன உறவு?
-----------------------------------------------------------------------------------
1) சில பல மாதங்களுக்கு முன்பு, சென்னை சென்ட்ரல்
ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு ரயில்
என்ஜினை யாரோ ஒருவர் ஓட்டிக் கொண்டு சென்றார்
என்ற செய்தி உங்களுக்கு  நினைவு வருகிறதா?

2) அந்தக் குற்றவாளியைப் பிடித்து விட்டார்களா?
இல்லை. இனிமேலாவது பிடிப்பார்களா? மாட்டார்கள்.
ஏன்? அந்த ரயில் என்ஜினை ஓட்டிச் சென்றவர் ஒரு
ரா (RAW) அதிகாரி. ரயில்வே போலீஸ்
அந்த வழக்கின் கோப்பை (FILE) மூடிவிட்டது என்ற
உண்மை மக்கள் அறியாதது. இவையெல்லாம்
ராவின் ரகசிய நடவடிக்கைகள். மக்களால் எளிதில்
புரிந்து கொள்ள முடியாது.

3) NGO புரட்சியாளர் திருமுருகன் காந்தி இரண்டு உளவு
அமைப்புகளுக்கு நெருக்கமானவர். ஒன்று ரா. இது
இந்திய உளவு அமைப்பு. இன்னொன்று NIB. இது
இலங்கையின் உளவு அமைப்பு.
(NIB =National Intelligence Bureau).

4) இவ்விரு உளவு அமைப்புகளின் ஈழம் குறித்த
செயல்திட்டத்தை நிறைவேற்றித் தருவதே
திருமுருகன் காந்தியின் அரசியல். இவ்விரு உளவு
அமைப்புகளின் முகவர் மற்றும் சேவகரே திருமுருகன்.

5) ஈழத்தில் இனப்படுகொலை உச்சத்தில்
இருந்தபோதெல்லாம் ஐநா மனித உரிமை கவுன்சிலில்
(UNHRC) கண்டனங்கள் எழும். மனித உரிமை
கவுன்சில் இலங்கை அரசுக்கு அறிவுறுத்தல்களை
வழங்கும். அப்போதெல்லாம் ராஜபக்சே ஆதரவு
சிங்கள புத்த பிக்குகள் UNHRC அறிக்கையை
தீ வைத்துக் கொளுத்தும் போராட்டத்தை நடத்துவார்கள்.
மறுநாள் அதே போராட்டத்தை (UNHRC அறிக்கை எரிப்பு)
திருமுருகன் தமிழ்நாட்டில் நடத்துவார். இது சர்வதேசப்
பத்திரிகைகளில் UNHRC அறிக்கைக்கு இந்தியா
இலங்கையில் எதிர்ப்பு என்று செய்தியாக வெளிவரும்.
(விரிவான விளக்கம் தனிக் கட்டுரையில்).

6) ஈழ அரசியல் அறிந்தோர் வெளிநாட்டில் வாழும்
நெடியவனை அறிவார்கள். மே 17 இயக்கத்திற்கு
தேவையான நிதியை வழங்கியது ஆரம்பத்தில்
நெடியவனே.

7) லண்டனில் உள்ள TTC  மற்றும் BTF அமைப்புகளுடன்
நெருங்கிய உறவு கொண்டவர் திருமுருகன். BTF அமைப்பு
(BTF = British Tamil Forum) ராஜபக்சேவுடன் சமரசம்
செய்து கொண்டதை அடுத்து அதன் மீதான தடையை
ராஜபக்சே அரசு நீக்கியது. இந்த அமைப்பு தற்போது
சிங்கள இனவெறி ராஜபக்சே/மைத்திரிபால அரசின்
அரவணைப்பைப் பெற்ற அமைப்பு. திருமுருகனின்
மே 17 இயக்கமும் BTF அமைப்பும் சிங்கள இனவெறி
அரசுக்குச் சாதகமாக ஈழப் பிரச்சினையைக்
கையாளும் அமைப்புகள்.

8) தோழர் உமர் அவர்களை உங்களில் எவருக்கேனும்
நினைவு இருக்கிறதா? மே 17 இயக்கத்தில் திருமுருகன்
காந்தியுடன் இணைந்து செயலாற்றியவர் தோழர் உமர்.
திருமுருகனின் பித்தலாட்டங்களை அறிந்ததும் அவர்
கடுமையாகச் சண்டையிட்டார். விளைவு: மே 17இல்
இருந்து வெளியேற்றப் பட்டார். அவர் திருமுருகனின்
சிங்கள ஆதரவு மற்றும் நிதி மோசடிக் குற்றங்களை
விளக்கி 450 பக்க அளவிலான ஒரு ஆவணத்தை
வெளியிட்டார். இந்த ஆவணம் அவரின் வலைப்பூவில்
(blog) இப்போதும் உள்ளது. வாசகர்கள் அருள்கூர்ந்து
அந்த ஆவணத்தைப் படிக்கவும்.

9) இன்னும் திருமுருகனின் பித்தலாட்டங்கள் குறித்து
நிறையவே சொல்ல வேண்டும். ஒரே கட்டுரையில்
எல்லாவற்றையும் சொல்லி விட முடியாது. தீக்குளித்து
உயிரை மாய்த்துக் கொண்ட செங்கொடி என்னும்
இளம் பெண்ணின் இறுதிச் சடங்கின்போது,
திருமுருகன் எவ்வளவு அட்டூழியமாக நடந்து கொண்டார்
என்பதை ஈழ ஆதரவாளர்கள் அறிவார்கள்.
அது பற்றி அடுத்துப் பார்ப்போம்.

10) மறைந்த திரைப்பட இயக்குனர் மணிவண்ணன்,
எழுத்தாளர் பாமரன், நடிகர் சிவகுமார் ஆகியோர்
பல்வேறு காலக்கட்டங்களில் திருமுருகனின் மோசடிகளை 
அம்பலப் படுத்தியும், வன்மையாகக் கண்டித்தும்
மேடைகளில் பேசி உள்ளனர்.அவற்றையும் அடுத்துக்
காண்போம்.
**********************************************************   
 
       

   
பாஜக பிரமுகரின் மகனை உளவு அமைப்பு ரா
குண்டர் சட்டத்தில் கைது செய்தது ஏன்?
திருமுருகன் காந்தி அம்பலப் படுகிறார்!
---------------------------------------------------------------------------------
லாட்டரி அதிபர் மார்ட்டின் என்ற ஊழல்
பேர்வழியை உங்களுக்கு நினைவு இருக்கிறதா?
இவரின் மனைவி பாஜகவில் ஒரு முக்கிய பிரமுகர்.

இந்தத் தம்பதியரின் மகன்தான் டைசன். எந்த டைசன்?
NGO புரட்சியாளர் திருமுருகன் காந்தியுடன் குண்டர்
சட்டத்தில் கைதாகி தற்போது விடுதலையாகி
வெளியே வந்துள்ளாரே அதே டைசன்தான்.

பாஜக பிரமுகரின் மகனை குண்டர் சட்டத்தில் கைது
செய்ய வேண்டிய அவசியம் மத்திய மாநில அரசுகளுக்கு
என்ன வந்தது? ஒன்றும் இல்லை.

அப்பன் ஊழல் பேர்வழி! ஊரை அடித்து உலையில்
போடுகிறவர்? மகன் புரட்சியாளர்???? என்ன உங்களின்
லாஜிக்? திருமுருகன்-டைசன் கைது ரா அமைப்பு
நடத்திய நாடகம் என்று இன்னுமா உங்களுக்குத்
புரியவில்லை? தங்களின் கையாள்களான
திருமுருகன் போன்றவர்களுக்கு ஒரு போராளி
பிம்பத்தை உருவாக்கித் தருவதற்கே இந்தக்
கைது நாடகம்!

இந்திய உளவு அமைப்பான ரா (RAW) உருவாக்கிய
NGO போராளியே திருமுருகன் காந்தி. இந்திய அரசின்
மற்றும் சிங்கள ராஜபக்சே மைத்திரிபால  அரசின்
ஈழத் கொள்கையே திருமுருகனின் கொள்கை!
இதை அடுத்தடுத்த கட்டுரைகளில் அம்பலப்
படுத்துவேன்.

டைசன் ஒரு போராளி!!! திருமுருகன் ஒரு போராளி!!!
இப்படிக் கருதிக் கொண்டு இவர்களின் பின்னால்
செல்லும் கோமாளிகள் மற்றும் கூமுட்டைகள்
உண்மையை உணரும் நாள் வெகுதூரத்தில் இல்லை!
*****************************************************************


  
வடகொரிய அணுவெடிப்புச் சோதனையால்
நாஷ் சமநிலை பாதிக்குமா?
-------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------
கடந்த மாதம் (2017 செப்டம்பர்) முதல் வாரத்தில் ஹைட்ரஜன் குண்டு
வெடிப்புச் சோதனையை நிகழ்த்தியதாக வட கொரியா
அறிவித்துள்ளது. நாட்டின் வடகிழக்கில் உள்ள  யங்யீரி
(Punggye ri) மலைப்பகுதியில் பூமிக்கு அடியில் இந்த
அணுவெடிப்புச் சோதனையை நிகழ்த்தியதாக
வடகொரியா மேலும் தெரிவிக்கிறது.

முன்னதாக கடந்த ஆண்டிலேயே, ஜனவரி 2016இல் ஹைட்ரஜன்
குண்டை வெடித்துச் சோதனை செய்ததாக வட கொரியா
அறிவித்தது. எனினும் வடகொரியாவின் இந்த  உரிமை கோரலை அமெரிக்கா உள்ளிட்ட அணுஆயுத நாடுகள் ஏற்கவில்லை.
பன்னாட்டு புவிஅதிர்வு கண்காணிப்புக் கருவியில்
(International Seismic Monitor) பதிவாகி இருந்த பூமி அதிர்வின்
அளவு மற்றும் செறிவு (magnitude and intensity) ஒரு ஹைட்ரஜன்
குண்டு வெடிப்புக்குப் போதுமானதாக இல்லை. எனவே வடகொரியா ஹைட்ரஜன் குண்டை வெடித்தது என்பதை
பிற நாடுகள் நம்பவில்லை.

ஒருநாடு எவ்வளவு ரகசியமாக பூமிக்கடியில் ஒரு
அணுவெடிப்புச் சோதனையை நிகழ்த்தினாலும்,
அதன் விளைவாக ஏற்படும் பூமி அதிர்வைக் கொண்டு,
மற்ற நாடுகள் அதைக் கண்டு பிடித்துவிட முடியும்.
2017 செப்டம்பரில் பூமி அதிர்வைப் பதிவு செய்யும்
கருவிகளின் தரவுகள் வடகொரியா ஒரு ஹைட்ரஜன் குண்டு
வெடிப்பை நிகழ்த்தியிருக்க வேண்டும் என்பதை உறுதி
செய்கின்றன என்று அமெரிக்கா கூறுகிறது. எனவே
வடகொரியா ஹைட்ரஜன் குண்டுகளைத் தயாரித்துள்ளது
என்பது உறுதிப்படுகிறது.

அணுகுண்டும் ஹைட்ரஜன் குண்டும்!
--------------------------------------------------------------------
யுரேனியம் என்பது ஒரு கனமான தனிமம். இதன் அணுஎண்
92 ஆகும். இதன் ஐசோடோப்களில் U-235, U-238 ஆகியவை
முக்கியமானவை. இவற்றில் U-238 அதிக அளவில் பூமியில்
கிடைக்கும். எனினும் இது அணுகுண்டு தயாரிப்புக்கு
உகந்தது அல்ல. U-235 என்னும் ஐசோடோப் பிளவுறும்
தன்மை உடையது (fissile material). இதுவே அணுகுண்டு
தயாரிப்புக்கு உகந்தது. இந்த கனமான ஐசோடோப்பை
ஒரு நியூட்ரான் மூலமாக பிளவுறுத்தும்போது, பேரளவிலான
ஆற்றல் வெளிப்படுகிறது. இவ்வகையில் தயாரிக்கப்படும்
அணுகுண்டுகள் பிளவுறு குண்டுகள் (nuclear fission bombs)
எனப்படும். புளூட்டோனியமும் அணுகுண்டு தயாரிக்கப்
பயன்படும்.

ஹைட்ரஜன் குண்டு என்பது சரியான பெயர் அல்ல.
ஊடகங்களும் மக்களும் ஹைட்ரஜன் குண்டு என்று
அழைத்தாலும், தொழில்நுட்ப ரீதியாக அதன் சரியான பெயர்
வெப்ப ஆற்றல் சேர்க்கை குண்டு (Thermo nuclear fusion bomb)
என்பதே. மிக மெல்லிய இரண்டு அணுக்களைச் சேர்ப்பதன்
வாயிலாக, பிரம்மாண்டமான ஆற்றல் வெளியிடப்படும்.
இவ்வகை குண்டுகள் சேர்க்கைக் குண்டுகள் (fusion bombs) ஆகும்.

உதாரணமாக, ஹைட்ரஜனின்
ஐசோடோப்களான டியட்ரியம் மற்றும் டிரிடியம்
(Deuterium and tritium) ஆகிய இரண்டையும் சேர்க்கும்போது 
ஹீலியம்-4 என்ற புதிய தனிமம் உருவாகும்.அதாவது
ஹைட்ரஜன் குண்டு உருவாகும். ஆனால் இவ்விரண்டு
ஐசோடோப்புகளும் அதியுயர்ந்த வெப்பநிலையில்
மட்டுமே சேரும். அதாவது குறைந்தது 200 மில்லியன்
கெல்வினில் தொடங்கி 800 மில்லியன் கெல்வின் வரையிலான வெப்பநிலை இதற்குத் தேவை.

ஒரு ஹைட்ரஜன் குண்டை (fusion bomb) வெடிக்கச் செய்வதற்கு
ஒரு அணுகுண்டு (fission bomb) கண்டிப்பாகத் தேவை.
சேர்க்கைக்குத் தேவையான வெப்பத்தை அணுகுண்டு
வெடிப்பதன் மூலமே வழங்க முடியும். எனவே ஒரு ஹைட்ரஜன்
குண்டு என்பது two in one வகையிலான இரட்டை குண்டாகும்.

அணுஆயுத நாடுகள் எவை?
--------------------------------------------------
இன்றைய உலகில் மொத்தம் 195 நாடுகள் உள்ளன.
இவற்றில் 193 நாடுகள் ஐ.நா சபையில் உறுப்பினர்களாக
உள்ளன. (பாலஸ்தீனம், ஹோலி சீ  ஆகிய இரு நாடுகளைத்
தவிர). உலகின் இந்த 193 நாடுகளில் இன்றைய நிலையில்
எட்டு நாடுகள் மட்டுமே அணு ஆயுத நாடுகள் ஆகும்.
அவையாவன:

1) அமெரிக்கா
2) ரஷ்யா
3) இங்கிலாந்து
4) பிரான்சு
5) சீனா
6) இந்தியா
7) பாகிஸ்தான்
8) வட கொரியா

இந்த எட்டு நாடுகளும் தங்களிடம் அணுஆயுதங்கள்
இருப்பதையும் அணுவெடிப்புச் சோதனைகளை
நிகழ்த்தியதையும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டவை.
ஒன்பதாவது நாடாக இஸ்ரேலிடம் அணுஆயுதம்
இருப்பதாக உலக நாடுகள் சந்தேகிக்கின்றன. எனினும்
இஸ்ரேல் தங்களிடம் அணுஆயுதம் இருப்பதாகவோ
அணுவெடிப்புச் சோதனையை நிகழ்த்தியதாகவோ
ஒருபோதும் ஒப்புக் கொண்டதில்லை. மற்ற
நாடுகளாலும் இஸ்ரேலிடம் அணுஆயுதம் இருப்பதாக
நிரூபிக்கவும் முடியவில்லை.

நேட்டோ நாடுகளான (North Atlantic Treaty Organisation) பெல்ஜியம்,
ஜெர்மனி, ,இத்தாலி, நெதர்லாந்து, துருக்கி ஆகிய ஐந்து
நாடுகளும் அணுஆயுதம் எதையும் சொந்தமாகத்
தயாரிக்கவில்லை. என்றாலும் நேட்டோ ராணுவ
ஒப்பந்தப்படி, இந்த ஐந்து நாடுகளுக்கும்
அணுகுண்டுகளை அமெரிக்கா வழங்கி உள்ளது.
எனவே அணுஆயுத நாடுகளாக இவை இல்லாவிட்டாலும்
அணுஆயுதங்களைக் .கொண்டிருக்கின்றன.

 கோர்ப்பச்சேவ் காலத்தில்  சோவியத் ஒன்றியம் (USSR)
 உடைந்து சிதறியது. சோவியத் குடியரசுகள் பல
ஒன்றியத்தை விட்டுப் பிரிந்து தனி நாடுகளாக ஆயின.
அப்போது தங்களிடம் இருந்த அணுஆயுதங்களை
அவை ரஷ்யாவிடம் திருப்ப ஒப்படைத்து விட்டன.
உக்ரைன், கஜகஸ்தான், பெலாராஸ் ஆகிய நாடுகளே அவை.

ஒரு காலத்தில் அணுஆயுதங்களைத் தயாரித்து வைத்திருந்த
தென் ஆப்பிரிக்கா பின்னர் அவற்றை அழித்து விட்டு,
அணுஆயுதமற்ற நாடாக மாறியது.

ஆக மொத்தத்தில், கூட்டிக் கழித்துப் பார்த்தால், தற்போதைய உலகில், எட்டு நாடுகள் மட்டுமே அணுஆயுத நாடுகள்
ஆகும். இவை மட்டுமே  சொந்தமாக அணுவெடிப்புச்
சோதனை நிகழ்த்தி அணுஆயுதங்களைத் தயாரித்து
வைத்திருப்பவை.

இந்தியாவின் அணுவெடிப்புச் சோதனைகள்:
-------------------------------------------------------------------------------
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, 1974 மே மாதத்தில்  ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் பாலைவனப் பகுதியில்
இந்தியா தன் முதல் அணுவெடிப்புச் சோதனையை நிகழ்த்தியது.
அணுகுண்டு தயாரிப்பு மற்றும் அணுவெடிப்புச் சோதனையை உள்ளடக்கிய இந்தத் திட்டத்திற்கு (Pokran I) விஞ்ஞானி ராஜா ராமண்ணா தலைமை ஏற்றார்.
இந்த அணுகுண்டு (fission bomb) 8 கிலோ டன் TNT (Tri Nitro Toulene)
அளவு கொண்ட வெடிப்பு என்று மதிப்பிடப்பட்டது.

பின்னர் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது,
1998 மே மாதத்தில் அதே பொக்ரானில் இந்தியா தன் இரண்டாவது
அணுவெடிப்புச் சோதனையை நிகழ்த்தியது. இத்திட்டத்திற்கு
(Pokhran II) டாக்டர் அப்துல் கலாம் தலைமை ஏற்றார். மே 11
மற்றும் மே 13 நாட்களில் மொத்தம் ஐந்து  குண்டு வெடிப்புச்
சோதனைகள் ( சக்தி-1,2,3,4,5) நிகழ்ந்தன. இவற்றில் முதல் சோதனையான சக்தி-1 என்பது ஹைட்ரஜன் குண்டு வெடிப்பாகும்.
இது 45 கிலோ டன் TNT அளவிலானது என்று ஒரு மதிப்பீடு
கூறுகிறது.

அணுஆயுத வல்லமை பெற்றிருந்தாலும் இந்தியாவின்
அணுஆயுதக் கொள்கை "நாங்கள் முதலில் அணுகுண்டைப்
போட மாட்டோம்" (No First use policy) என்பதாகும். 2003இல் 
இந்தக் கொள்கையை அறிவித்த இந்தியா இதை
இன்றளவும் உறுதியாகப் பற்றி நிற்கிறது.

அணுஆயுதங்களின் வளர்ச்சியில் ஏவுகணைகள்:
----------------------------------------------------------------------------------------
உலகின் முதல் அணுகுண்டு ஜப்பானிய நகரமான
ஹிரோஷிமா மீது ஆகஸ்டு 6, 1945இல் போடப்பட்டது.
அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமன் உத்தரவின் பேரில்,
லிட்டில் பாய் (Little Boy) எனப்படும் யுரேனியம் அணுகுண்டு
எனோலா கே (B-29 Enola Gay) என்னும் போர் விமானத்தில்
வைக்கப்பட்டு, கர்னல் பால் டிப்பெட்ஸ் (Col Paul Tibbets)
என்னும் விமானியால் ஹிரோஷிமா மீது போடப்பட்டது.

இதன் பின்னரும் ஜப்பான் சரண் அடையாததால்,
ஆகஸ்டு 9, 1945இல் ஃபேட் மேன் (Fat Man) என்னும்
அணுகுண்டு (புளுட்டோனியம் குண்டு) நாகசாகி
நகரத்தின் மீது வீசப்பட்டது. போக்ஸ்கார் (B-29 Bockscar)
என்னும் போர் விமானத்தில் இருந்து, மேஜர்
சார்லஸ் சுவீனி (Major Charles Sweeney) என்னும் விமானியால்
நாகசாகி மீது வீசப்பட்டது.

இன்றைய அறிவியலின் வளர்ச்சியில், விமானத்தில்
பறந்து விமானியின் மூலம் அணுகுண்டை வீச
வேண்டியதில்லை. ஆளில்லா ஏவுகணைகளில்
அணுகுண்டை வைத்து மிகத் துல்லியமாகவும்
அதிவிரைவாகவும் எதிரியின் நிலைகள் மீது
அணுகுண்டை வீச முடியும். அதே போல, ஹிரோஷிமா
மீது வீசப்பட்ட லிட்டில் பாய் அணுகுண்டை  விட
பல்லாயிரம் மடங்கு ஆற்றல் வாய்ந்த ஹைட்ரஜன்
குண்டுகளும் இன்று அணுஆயுத வல்லரசுகளிடம்
உள்ளன. நவம்பர் 1, 1952இல் உலகின் முதல் ஹைட்ரஜன்
குண்டை அமெரிக்கா வெடித்தது. இந்த வெடிப்பின்போது
10.4 மெகா டன் TNT அளவிலான ஆற்றல் வெளிப்பட்டது.
லிட்டில் பாய்  என்னும் முதல் அணுகுண்டின் ஆற்றல்
வெறும் சில கிலோ டன் அளவுதான்.

இந்தியாவின் அக்னி வரிசை ஏவுகணைகளில் அக்னி-1
முதல் அக்னி-5 வரை வெற்றிகரமாகச் சோதித்துப்
பார்க்கப்பட்டன. அக்னி-6 தயாரிப்பில் உள்ளது.
1989இல் சோதிக்கப்பட்ட அக்னி-1 700 கி.மீ வீச்சு (range)
கொண்டது. 2000 கி.மீ வீச்சு கொண்ட அக்னி-2, 3500கிமீ
முதல் 5000 கி.மீ வீச்சு கொண்ட அக்னி-3 என்ற வளர்ச்சியின்
அடுத்த கட்டமாக, அக்னி-6  8000கி.மீ முதல் 10000 கி.மீ
வரையிலான வீச்சைக் கொண்டிருக்கும் விதத்தில்
தயாரிக்கப்பட்டு வருகிறது.

 அணுஆயுத ராணுவப் போர்த்தந்திரத்தில் (nuclear military strategy)
ஒரு காலத்தில், அணுஆயுதங்களின் வெடிப்பாற்றலே
(yield) முக்கியமாகக் கருதப்பட்டது. இதன் விளைவாகவே
வெடிப்பாற்றல் அதிகமான ஹைட்ரஜன் குண்டுகள் தயாரிக்கப் பட்டன. பின்னர்  அணுஆயுதங்களைச் சுமந்து கொண்டு
எதிரி இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளே
முக்கியமாகக் கருதப்பட்டன. உலகின் எட்டு அணுஆயுத
நாடுகளும் இந்த ஏவுகணைத் தொழில்நுட்பத்திலும்
வளர்ச்சி அடைந்து வருகின்றன.

நாஷ் சமநிலையும் MAD கோட்பாடும்!
--------------------------------------------------------------------
1945 ஆகஸ்டு 6, 9 தேதிகளில் ஹிரோஷிமா நாகசாகி
மீது வீசப்பட்ட அணுகுண்டே உலகின் முதல் அணுகுண்டுத்
தாக்குதல் ஆகும். அது மட்டுமல்ல, அதுவே கடைசி
அணுகுண்டுத் தாக்குதலும் ஆகும். 1945க்குப் பிறகு
இன்று 70 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த 70 ஆண்டுகளில் எத்தனையோ போர்கள் நிகழ்ந்து இருக்கின்றன.என்றாலும்
எந்தப் போரிலும் எந்த நாடும் அணுகுண்டைப்
பயன்படுத்தவில்லை. ஆம், அணுகுண்டின் சகாப்தம்
முடிந்து விட்டது.

எப்படியெனில், எந்தப் போரிலாவது அணுகுண்டுகளை எந்த அணுஆயுத நாடு பயன்படுத்தினாலும், பாதிக்கப்பட்ட
நாடு திருப்பி அதே ஆணு ஆயுதங்களால் தாக்கும்.
இதன் விளைவு பரஸ்பரம் சர்வ நாசம் ஏற்படும்.
இதுவே நடைமுறை உண்மையாகும். இந்தக் கோட்பாடு அணுஆயுதப் போர்த்தந்திரத்தில் MAD doctrine எனப்படுகிறது.
(MAD =Mutually Assured Destruction).

பனிப்போர் நடந்த காலத்தில் இரு வல்லரசுகளான
அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் இந்தக்
கோட்பாட்டைக் கடைப்பிடித்தன. இரு நாடுகளுமே
அணுஆயுதப் பந்தயத்தில் (nuclear arms race) ஒன்றையொன்று
விஞ்ச முற்பட்டன. என்றாலும் எந்த நாடும் அணுஆயுதத்தைப்
பிரயோகிக்கவில்லை. அணுஆயுதங்கள் அச்சுறுத்த
மட்டுமே (for the purpose of deterrence) என்று அவை
உணர்ந்து இருந்தன. சதுரங்க விளையாட்டில், "The threat
is more powerful than its execution" என்று ஒரு பழமொழி உண்டு.
அதைப் போன்றதுதான் இதுவும். நாஷ் சமநிலை
(Nash equilibrium) என்னும் தீர்வுக் கோட்பாட்டில் (solution concept)
இருந்து பெறப்பட்டதுதான் MAD கோட்பாடும்.

ஜான் நாஷ் (John Forbes Nash Jr, 1928-2015) என்பவர் ஓர்
அமெரிக்க கணித அறிஞர். நோபல் பரிசு மற்றும்
ஏபெல் பரிசு ஆகிய இரண்டையும் பெற்றவர்.
விளையாட்டுக் கோட்பாட்டில் (game theory)
அடிப்படையான பங்களிப்புகளைச்
செய்தவர். நாஷ் சமநிலை என்பது இவரின் பெயரால்
அமைந்த ஒரு தீர்வு.

ஒருவருக்கொருவர் ஒத்துழைக்காத விளையாட்டுகளில்
(non cooperative games) முடிவுகளை எடுப்பதற்கு வழிகாட்டுவது
நாஷ் சமநிலை. ஒருவருக்கொருவர் பகைமையான A, B
என்னும் இருவர் பின்வரும் சூழ்நிலையில் நாஷ் சமநிலையில் இருப்பதாகக் கொள்ளலாம்:

1) ஒரு குறிப்பிட்ட நிகழ்வைப் பொறுத்து, B எடுக்கும் முடிவை
அறிந்த பிறகு, A தம்மாலான மிகச் சிறந்த முடிவை எடுக்கிறார்.
2) A எடுக்கும் முடிவை அறிந்த பிறகு, B தமது மிகச் சிறந்த
முடிவை எடுக்கிறார்.
3) A முடிவெடுத்த பின் Bயும், B முடிவெடுத்த பின்னர் Aயும்
தங்கள் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.
மேற்கூறிய சூழ்நிலையில் A, B இருவரும் நாஷ்
சமநிலையில் இருப்பதாகப் பொருள்.

அமெரிக்கா முதலில் அணுகுண்டை ரஷ்யா மீது
வீசாது. இது அமெரிக்கா எடுத்த முடிவு. இதை அறிந்த
பிறகு ரஷ்யாவும் அமெரிக்கா மீது அணுகுண்டை முதலில்
வீசுவதில்லை என்று முடிவு எடுக்கிறது. இப்போது
அமெரிக்காவும் ரஷ்யாவும் நாஷ் சமநிலையில்
இருக்கின்றன. இதன் விளைவு எந்த நாடும் மற்ற
நாட்டின் மீது அணுகுண்டை வீசப் போவதில்லை.

ஆக மொத்தத்தில், ஹைட்ரஜன் குண்டு வெடிப்புச்
சோதனை நடத்திய பின்னரும்கூட, வடகொரியா
எவர்மீதும் அதை பிரயோகிக்காது. ஏனெனில்
நாஷ் சமநிலையில் இருந்து விலக வடகொரியா விரும்பாது.
********************************************************************     









         

திங்கள், 18 செப்டம்பர், 2017

பெரியார் திருமணம்!

போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல். உண்மை ஏட்டுக்கு பதிலடி பாகம் - 8

போலி பகுத்தறிவுவாதிகளான திராவிடர் கழகத்தினரால் நடத்தப்படும் உண்மை எனும் ஏடு இஸ்லாத்தையும், உணர்வு இதழையும் வம்புக்கு இழுத்ததாலும், முஸ்லிம்களுக்கு உச்சரிக்கை விடுத்ததாலும் போலி பகுத்தறிவுவாதிகளின் மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்தும் அவசியத்தை ஏற்படுத்தித் தந்தனர்.

மூடநம்பிக்கையின் மொத்த வடிவமாக போலி பகுத்தறிவுவாதிகள் திகழ்கிறார்கள் என்பதை கடந்த ஏழு வாரங்களாக நாம் விளங்கி வருகிறோம்.

அந்த வகையில் திருமணம் என்பதே ஒழிக்கப்படவேண்டும் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே பெரியார் தானே திருமணம் செய்து தனது கொள்கையை மீறினார் என்ற முரண்பாட்டை சென்ற இதழில் நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.

அவர் மணியம்மையை திருமணம் செய்ததன் மூலம் தனது மற்றொரு உயிர் மூச்சான கொள்கையையும் தானே குழிதோண்டிப் புதைத்தார். மணியம்மையை திருமணம் செய்தபோது பெரியாரின் வயது 72. மணியம்மையின் வயது 26. அவ்விருவருக்கும் 46 வயது இடைவெளி இருந்த நிலையில்தான் மணியம்மையை திருமணம் செய்து கொண்டார்.

தக்க வயதை அடைந்தவர்கள் மனமொப்பி, வயதில் மூத்தவரை திருமணம் செய்வதை நாம் விமர்சிக்கவில்லை. இளம் பெண்ணை வயதானவர் திருமணம் செய்வது பற்றி பெரியார் என்ன கருத்தை கொண்டிருந்தார் என்ற அடிப்படையிலெயே விமர்சிக்கிறோம்.

மணமக்கள் விஷயத்தில் போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும், பெண்களின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லாமல் பெற்றோர் தீர்மானம் செய்துவிட்டார்களாதலால் கட்டுப்பட்டுதான் தீரவேண்டும் என்ற நிர்பந்த முறையில் நடப்பதும் சுயமரியாதை அற்ற திருமணம் என்றே சொல்லலாம். (குடியரசு : 3-6-1928 இதழில் பெரியார்)

வயது பொருத்தம் இல்லாத திருமணமும், கட்டாயத் திருமணமும் சுயமரியாதை அற்ற திருமணங்கள் என்பது பெரியாரின் பிரச்சாரமாக இருந்தது.

வயதான சாமியார்கள் இளம் பெண்களை மயக்கி திருமணம் செய்வதைக் கேலி செய்தும், கண்டித்தும் தனது விடுதலை ஏட்டில் அண்ணா அவர்கள் எழுதிய கட்டுரையை வெளியிட்டு மகிழ்ந்தவர் பெரியார்.

தொந்தி சரிய மயிரே வெளிர நிறை தந்த மனைய உடலே படைத்த வயதான ஒரு பார்ப்பனக் கிழவர் துள்ளு மத வேட்கைக் கனையாலே தாக்கப்பட்டு கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். அவரின் வயது 72.

ஏற்கனவே மணமாகிப் பெண்டைப் பிணமாகக் கண்டவர். பிள்ளை குட்டி பேரன் பேத்தியும் பெற்றவர் இந்த பார்ப்பனக் கிழவர். ஆயினுமென்ன? இருண்ட இந்தியாவில் எத்தனை முறை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாமே' (1940ல் விடுதலை நாளேட்டில் அண்ணா எழுதி பெரியார் வெளியிட்டது)

1940 லி இப்படி எழுதிய பெரியார் அறு ஆண்டுகளில் அந்த பார்ப்பனக் கிழவருக்குப் போட்டியாக பேத்தி வயதுடைய மணியம்மையை மணந்து கொண்டாரே! இப்படி நடப்பதுதான் பகுத்தறிவா?

குடியரசு இதழில் வெளியான கட்டுரையை தேடிப்பிடித்து விடுதலையில் வெளியிடும் பொறுப்பில் இருந்தவர் இராம அரங்கண்ணல்.

தான் பெரிதாக மதிக்கும் பெரியார் பொருந்தாத் திருமணம் செய்ததால் மனம் வெறுத்த அரங்கண்ணல் 'தக்க வயதுப் பொருத்தமே திருமணத்தின் லட்சியம்' என்று கடியரசு ஏட்டில் பெரியார் எழுதியதை எடுத்து விடுதலையில் அச்சிட்டு வெளியாக்கிவிட்டு பணியிலிருந்து விலகினாரே அவர்தான் பகுத்தறிவாளராகவும், சுயமரியாதைக்காரராகவும் காட்சியளிக்கிறார்.

பெரியாரின் பொருந்தாத் திருமணம் அன்றைக்கு ஏற்படுத்திய கொந்தளிப்பை அண்ணா அவர்கள் அன்று எழுதியதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

அப்பா, அப்பா என்று அந்த அம்மையார் மனம் குளிர வாய் குளிர, கேட்போர் காது குளிர அழைப்பதும் - அம்மா, அம்மா என்று கேட்போர் பூரிப்பும், பெருமையும் அடையும் விதமாக பெரியார் அந்த அம்மையாரை அழைப்பதும் - இக்காட்சியைக் கண்டு 'பெரியாரின் வளர்ப்பு மகள் இந்த மணியம்மை' எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழ்வதான நிலை இருந்தது.

அந்த வளர்ப்புப் பெண்தான் இன்று பெரியாரின் மனைவியாகி இருக்கிறார். பதிவுத் திருமணமாம்! கையிலே தடி மணமகனுக்கு. கருப்பு உடை மணமகளுக்கு என்று ஊரார் பரிகாசம் செய்கிறார்களே! ' ஊருக்குத் தானய்யா உபதேசம்' என்று இடித்துரைக்கிறார்களே! எனக்கென்ன வயதோ 70க்கு மேலாகிறது. ஒரு காலை வீட்டிலும் ஒரு காலை சுடு காட்டிலும் வைத்துக் கொண்டிருக்கிறேன். 'நான் செத்தால் அழ ஆளில்லை' என்றெல்லாம் பேசிய பெரியார், 'கல்யாணம் செய்து கொள்கிறாரய்யா' என்று கடை வீதி தோறும் பேசிக் கைகொட்டிச் சிரிக்கிறார்களே! வெட்கப்படுகிறோம்.

அயலாரைக் காண வேதனைப் படுகிறோம். தனிமையிலே. பொருந்தாத் திருமணம் செய்துகொள்ளத் துணிபவர்களை எவ்வளவு காரசாரமாக எவ்வளவு ஆவேசமாக கண்டித்திருக்கிறோம்.

இப்போது எவ்வளவு சாதாரணமாக நம்மையும், நமது உணர்ச்சிகளையும் கொள்கைகளையும், இயக்கத்தையும் எவ்வளவு அலட்சியமாகக் கருதி நமது தலைவர் 72ம் வயதிலே திருமணம் செய்து கொள்வதாக அறிவிக்கிறார்.

நம்மை நடைபிணமாக்குவதாகத் தெரிவிக்கிறார். நாட்டு மக்களின் நகைப்புக்கு இடமாக்கி வெட்கி தலைகுனிந்து போங்கள் எனக்கென்ன என்று தெரிவித்துவிட்டார். இதைச் சீர்திருத்தச் செம்மலாகிய தாங்கள் செய்திருப்பது காலத்தால் துடைக்க முடியாத கறை என்பது மறுக்க முடியாதே!

இந்த நிலையை யார்தான் எந்த காரணம் கொண்டுதான் சாதாரணமானதென்று சொல்ல முடியும்? நுற்றுக்கணக்கான மாநாடுகளிலே நமது வீட்டுத் தாய்மார்கள் தமது கரம் பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைக் காட்டிப் பெருமையாக 'இதோ இந்த தாத்தாவைப் பார்! வணக்கம் சொல்லு' என்று கூறுவர். கேட்டோம் களித்தோம். பக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மணியம்மையைக் காட்டி தாத்தா பொண்ணு என்று கூறவர். இன்று அந்த தாத்தாவுக்குக் கலியாணம் - பணிவிடை செய்து வந்த பாவையுடன். சரியா, முறையா? என்று உலகம் கேட்கிறது. அன்புள்ள சி. என். அண்ணாதுரை (திராவிட நாடு 3-7-49)

அதிக வயது வித்தியாசம் கொண்ட திருமணத்தை பெரியார் எந்த அளவு கண்டித்திருந்தால் அண்ணா இவ்வளவு கடும் எதிர்ப்பை காட்டியிருப்பார்.

உரத்த குரலில் எடுத்து ஊரெல்லாம் சுற்றினாலும் இனி தலைவர் போக்கால் ஏற்பட்ட கண்ணியக் குறைவை காப்பாற்றிட முடியாது. போறிப் பரப்பி வந்த லட்சியங்களை மண்ணில் வீசும் அளவுக்கு தலைவரின் சுயநலம் கொண்டு போய்விட்டு விட்டது. (அண்ணா - திராவிட நாடு - 21-8-49)

ஒரு கொள்கையால் கவரப்பட்டு அந்த தலைவரின் பின்னே செல்வதை ஏற்றுக் கொள்ளலாம். கொள்கைக்காக தலைவன் மீது கொண்ட பக்கி முற்றிப் போய் கொள்கையை விட தலைவனே பெரிது என்று எண்ணினால் அவர்கள் மூட நம்பிக்கையாளர்களே தவிர பகுத்தறிவாளர்கள் அல்லர்.

பெண்ணினத்துக்காக குரல் கொடுக்கிறார். வயதுப் பெண்களை சாமியார்கள் மயக்குவதைக் கடுமையாகச் சாடுகிறார் என்பன போன்ற என்பன போன்ற காரணங்களுக்காக பெரியாரை தலைவராக ஏற்றவர்கள், பெரியாரே அக்கொள்கைக்கு சாவு மணி அடித்து சமாதி கட்டிய பிறகு அவர் பின்னே சென்றதும், சென்று கொண்டிருப்பது; மூட பக்தியா? சிந்தனைத் தெளிவா?

அண்ணாவையும் அவருடன் வெளியேறியவர்களையும்தான் இந்த வகையில் பகுத்தறிவாளர்கள் என்று கூறலாமே தவிர இதன் பின்னரும் 'பகுத்தறிவுத் தந்தை' என்று பட்டம் சூட்டித் திரிபவர்களை பெரியாருக்கு கடவுள் அந்தஸ்து கொடுக்கும் பக்தர்களாகத்தான் கருத முடியும்.

ஒருவர் மீது குருட்டுத் தனமாக ஒருவன் அன்பு வைத்து அவர் செய்த எந்தச் செயலும் அவனைப் பாதிக்கவில்லை என்றால் அவன் ஒருக்காலும் பகுத்தறிவை பயன்படுத்துபவனாக ஆக முடியாது.

போலி பகுத்தறிவு வாத்களிடம் நாம் கேட்கிறோம், பெரியார் செய்தது பொல இன்று ஒரு 75 வயதுக் கிழவன் இருபது வயது குமரியை மணப்பது குறித்து உங்கள் பகுத்தறிவின் தீர்ப்பு என்ன?

இதுபோல் நடக்கும் திருமணங்களை இன்றும் கூட கேலி செய்து உங்கள் பத்திரிக்கைகளில் எழுதுகிறீர்களே! இதில் உங்கள் பகுததறிவு தத்துவம் தான் என்ன?

பெரியாரைத் தவிர வேறு யாரும் இதைச் செய்தால் நாங்கள் எதிர்ப்போம்! கிண்டல் பண்ணுவோம்! என்று நடப்பதுதான் பகுத்தறிவா?
ஆளுநர் ஒன்றும் செய்ய மாட்டார். செய்ய வேண்டிய
எந்த அவசியமும் இல்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
98 பேரும் ராஜினாமா செய்தாலும் சட்டமன்றம் நடக்கும்.
ஆட்சி நடக்கும். இதுதான் இந்திய அரசமைப்புச் சட்டம்.
இந்த மாதிரி mass resignation ஏற்கனவே 1970களில் பீகாரில்
நடந்தது. முழுப்புரட்சி (total revolution) என்ற பெயரில்
ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் இந்திரா
காந்தியை எதிர்த்து, எதிர்க்கட்சி MLAகள் ஒட்டு
மொத்தமாக ராஜினாமா செய்தனர். ஆனால் அன்றைய
பீஹார் முதல்வர் அப்துல் கபூர் ராஜினாமா செய்யவில்லை.  

இங்கு பெரும்பான்மை என்பது கம்யூனிஸ்ட் கட்சியில்
உள்ள பெரும்பான்மை. அரசு, ஆட்சி என்பவை  கம்யூனிஸ்ட்
கட்சிக்குக் கட்டுப்பட்டவை. கம்யூனிஸ்ட் கட்சியில்
செயல்படும் கட்சி அமைப்புக் கோட்பாடு லெனின்
வகுத்தளித்த ஜனநாயக மத்தியத்துவம்
(democratic centralism) ஆகும். இதன் பொருள் முடிவு
எடுக்கும் வரை ஜனநாயகமும் முடிவு எடுத்த பின்னர்
மத்தியத்துவமும் செயல்படும் என்பதே ஆகும்.

மார்க்சியம் உலகின் ஆகப்பெரிய சமூகநீதி. அதிலிருந்து
விலகுவதே மாபெரும் சமூக அநீதி. பிறழ்வு என்பது
எங்கும் உண்டு. எங்கும் அதற்குரிய வாய்ப்பு உண்டு.
   
மயிலாடுதுறையில் புஷ்கர பூஜை செய்து
பெரியாருக்கு மரியாதை செய்த துர்கா ஸ்டாலின்!
படுதோல்வி அடைந்த இந்து முன்னணி ராமகோபாலன் 
நாணித் தலைகுனிந்தார்!
-----------------------------------------------------------------------------------------
1) தந்தை பெரியார் பிறந்த நாளான இன்று (17.09.2017)
மயிலாடுதுறையில் காவிரியாற்றில் நடைபெற்ற
புஷ்கர பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்தார்
மாண்புமிகு துர்கா ஸ்டாலின் அம்மையார் அவர்கள்.

2) தாமே முன்னின்று புஷ்கர பூஜை செய்தார் துர்கா
ஸ்டாலின் அம்மையார்.

3) குரு பகவான் ஒவ்வோராண்டும் ஒரு ராசியில்
இருந்து இன்னொரு ராசிக்கு சஞ்சாரம் செய்யும்போது
புஷ்கர பூஜை நடைபெறும். இது மிகப்பெரும் ஆன்மிகத்
திருவிழா ஆகும்.

4) இந்த புஷ்கர பூஜையில் இந்து முன்னணி ராமகோபாலன்
கலந்து கொள்ளாத நிலையில், துர்கா ஸ்டாலின்
கலந்து கொண்டது ஹெச் ராஜாவை நாணித்
தலைகுனிய வைத்துள்ளது.

5) ஒவ்வொரு ஆண்டும் திமுக வழங்கும் பெரியார்
விருது யார் யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்று
தீர்மானிக்கக்கூடிய இடத்தில் துர்கா ஸ்டாலின்
இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
************************************************************       


ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

அரவிந்தன் நீலகண்டன்
------------------------------------------
This is going to be my last post on politics of any kind: Most Modi supporters are under the impression that despite even the growing perception of certain alleged failures by the present government, it will easily win the 2019 elections because of the 'no other alternative' factor. I am not that sure. It is almost deja vu 2004 with additional disadvantages for Modi. The establishment media which is essentially faithful servants of the SS-NG dynasty (Socialist Secularist - Nehru-Gandhi), the crony-journalist school has been doing a whirlwind propaganda against Modi 24/7. It is interesting that with less than 16 murders spread over three years in a nation of one billion, that too with selective media twists, the crony-media establishment has been able to generate the feeling of 'lynchstan'.
Media, anti-Hindu forces, Raghu Ram Rajan to Arun Shourie, pro-Congress elements crucially placed within Modi government itself to sabotage him strategically, opportunists like Subramanian Swamy who play to the gallery of loony fringe subtly whipping up a sly anti-Modi campaign ... Vajpayee never had to face so many number of enemies sly and open.
Despite the propaganda that Modi has a well-oiled social media army, in reality the anti-Modi forces have been functioning with corporate rigor in the social media spreading all sorts of allegations against Modi despite they being unable to produce anything substantial. So they shamelessly indulge in a very systematic spit-and-run campaign. While they do it in an organized manner, the Modi-supporters in the social media who came spontaneously in 2014 are in a disarray. Meme-generation, small videos against Modi are created with various levels of professionalism to cater to every section of the society by Modi haters. Modi supporters are not in the least organized. While individual trolls are highlighted by the corporate media as lumpen elements under the command of BJP, actually the Modi supporters in the social media are as I said completely disorganized and in a disarray.
The best thing for the government to do is to bring petrol under GST and create a drastic reduction of prices and bring out its own white paper on the black money issue. It is now visible that the raids have increased on black money holders at all level. This government has visibly reduced corruption levels, which in itself is a great achievement. This government had tried to its max to improve relations with neighbors. And it bore fruit in Doklam issue. Even as CPI(M) as usual played its treacherous pro-Chinese role Modi won a diplomatic victory for India, for which alone this government should be re-elected.
While the dynasty cult Mecca of socialist-secularism (India's own SS) JNU did the dirty job for China by nurturing Nepali Maoists - swaying the mountain nation ideologically towards China, Modi has been working to clear the mess in the backyard, not entirely without errors (but they can be forgiven given the kind of mess into which that socialist romanticist treacherously got us in and given his despotic dynasty has been since then sucking India's blood for decades with a corrupt pot-bellied demagogues of bureaucracy).
Airlifts of stranded Indians to even rescuing the kidnapped Christian missionaries of Indian origin from Islamist forces, this government had shown no partiality and has acted proactively. But I find not a single Christian of Indian origin thanking Modi for that. Modi was never thanked for liberating five Indian fishermen of Tamil Nadu from death sentence in Sri Lanka, for stopping the regular feature of shooting down of Tamil Nadu fishermen reducing it to almost one or two incidents in the whole three years. Yet I saw only traitors and shameless opportunists from Tamil Nadu blame him.
If by any chance Modi is defeated in 2019 Hindus can be sure that within decades their plight will be worse than the Hindus, Sikhs and Buddhists of Pakistan and Bangladesh - those orphans from whose life light went out to provide the halo of Mahatma and whose blood reddened bright the roses worn by the Light of Asia.

சனி, 16 செப்டம்பர், 2017

பிறந்த நாளுக்கு எதிராக பெரியார் 
================================-----------------
"வாழ்த்துவது என்பது முட்டாள்தனமேயாகும் ஏன்?
பொதுவாக யாருக்குப் பிறந்த நாள் கொண்டாடினாலும் பிறந்த நாள் என்பது கொள்கையைப் பாராட்ட, பரப்ப என்கின்ற கருத்திலேயே ஆகும். வாழ்த்துவது என்பது முட்டாள்தனமேயாகும். அந்த வார்த்தைக்கு உண்மையில் மதிப்பே கிடையாது.
நாமம் போட்டுக் கொள்வது எப்படி முட்டாள் தனமோ அப்படிப்பட்ட முட்டாள்தனம்தான் வாழ்த்துக் கூறுவதுமாகும். பார்ப்பான் பிச்சை எடுப்பதற்கு ஆசீர்வாதம் என்று ஆரம்பித்தான். அதையே தமிழாக்கி இவன் வாழ்த்து என்கின்றானே ஒழிய, அதில் எந்தப் பலனும் கிடையாது. ஒருவன் நூறு வருஷம் வாழவேண்டும் என்று சொன்னாலேயே எவனும் வாழ்ந்துவிட முடியாது. அதுபோல, வசை கூறுவதால் எவரும் கெட்டுப் போய்விடப் போவதுமில்லை.
என்னை வாழ்த்துகிறவர்களைவிட வசை சொல்கிறவர்கள்தான் அதிகம். அதற்கு உண்மையான பலனிருக்குமானால் நான் இத்தனை ஆண்டுகள் உயிரோடிருந்திருக்க முடியாது. எனவே, வாழ்த்துவதற்கும் வசை கூறுவதற்குமுள்ள பலன் ஒன்றேயாகும்.
வாழ்த்துவது வாய்க்கும், காதுக்கும்
இனிமையாக இருக்குமே தவிர பலனில் ஒன்று மில்லை.
(விடுதலை, 12.12.1968)
"ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!"

குட்டி முதலாளித்துவ நீட் எதிர்ப்பாளரின்
உலகமே வியந்து நோக்கும் அறிவுத்திறன்!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
1) அந்த வீட்டுக்குள் நுழைந்த நீட் எதிர்ப்பாளர்
கவிமுரசு இசக்கி வேந்தன்  "தம்பி, அப்பா இருக்காரா?"
என்றார். படித்துக் கொண்டிருந்த பையன் அவரை
வரவேற்று அமரச் சொன்னான்.

2) பையன் +2 மாணவன். Physics பாடத்தைப் படித்துக்
கொண்டிருந்தான். "B B ROY Great Briton Very Good Wife" என்று
திரும்பத் திரும்பச் சொல்லி எழுதிப் பார்த்துக்
கொண்டிருந்தான் பையன். இசக்கி வேந்தன் அதிர்ச்சி
அடைந்தார். பையனுக்கு இப்போதே WIFE வேண்டுமா
என்று ஆத்திரம் கொண்டார் கவிமுரசு.

3) அடுத்து Trigonometryயைப் படிக்கத் தொடங்கிய
பையன், அடிக்கடி "ALL SILVER TEA CUPS"  என்று சொல்லிக்
கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தான்.
கல்யாண சீர்வரிசைப் பாத்திரங்கள் எல்லாம்
வெள்ளியில் இருக்க வேண்டும் என்று பையன்
கண்டிஷன் போடுகிறான் என்று புரிந்து கொண்ட
நீட் எதிர்ப்பாளர் இசக்கி வேந்தன் பையன் மீது
ஒரு வன்மத்தை வளர்த்துக் கொண்டார். .

4)   "ALL SILVER TEA CUPS" என்பது Trigonometryயில்
ஒவ்வொரு கால்வட்டத்திலும் T ratios என்ன signஉடன்
இருக்கும் என்பதை நினைவில் இருத்தும் ஒரு
வாசகம்.

5) "B B ROY Great Briton Very Good Wife" என்பது RESISTORகளின்
COLOUR CODEஐ நினைவில் இருத்தும் ஒரு வாசகம்.

6) நமது நீட் எதிர்ப்பாளர் கவிமுரசு SSLCயில் பெயில்
ஆனவர். கணக்கும் சயன்சும் வராததால் செப்டம்பர்
எழுதியும் தேறாமல் படிப்புக்கு கொள்ளி வைத்தவர்.
தற்போது ஒரு பிரபல அரசியல் கட்சியில் மாவட்ட
அளவில் பொறுப்பில் இருப்பவர். Trigonometry, Physics
என்பதையெல்லாம் அவரால் மேற்கூறியவாறுதான்
புரிந்து கொள்ள முடியும்.

7) முன்னர்க்கூறிய எதுவுமே நகைச்சுவை அல்ல.
இதுதான் யதார்த்தம். நீட் எதிர்ப்பாளர்களின் அறிவு
வளர்ச்சி என்பது இப்படித்தான் இருக்கிறது.
இதனால்தான் எந்தப் பொய்யையும் இவர்களால்
சமூகத்தில் எவ்விதக் குற்ற உணர்வும் இன்றி
பரப்ப முடிகிறது. இந்த வரிசையில் தற்போது
இவர்கள் கூறி வருவது இன்னொரு பொய்.
அது இதுதான்.

8) நீட் தேர்வு ஒரு உலகளாவிய GLOBAL தேர்வு என்ற
ஒரு குட்டி முதலாளித்துவ நீட் எதிர்ப்பாளரின் இழிந்த
பொய்யை தற்போது இவர்கள் பரப்பி வருகின்றனர்.

9) உண்மை என்ன? நீட் தேர்வு ஒரு குளோபல்
தேர்வு அல்ல. அது முற்ற முழுக்க ஒரு இந்தியத் தேர்வு
மட்டுமே.

10) நீட் தேர்வை உலகில் எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை.
அது தேவையும் இல்லை. நீட்டில் தேறி விட்டேன் என்று
கூறிக் கொண்டு அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ
மருத்துவப் படிப்பில் இடம் பெற முடியாது.

11) வெளிநாட்டினர் (FOREIGNERS), NRI ஆகியோர் 
மாநில அரசுகளின் மருத்துவ இடங்களுக்கு
விண்ணப்பிக்கவே முடியாது. அரசு MBBS இடங்கள்,
தனியார் சுயநிதிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு
இடங்கள் ஆகியவற்றில் இவர்களுக்கு இடம் கிடையாது,

12) நிகர்நிலை பல்கலைகளின் நிர்வாக ஒதுக்கீட்டு
இடங்கள், சுயநிதிக் கல்லூரிகளின் நிர்வாக
ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு
இடங்கள் ஆகியவற்றில் மட்டுமே FOREIGNERS, NRI
ஆகியோர் விண்ணப்பிக்க முடியும்.

13) இது தெரியாமல் அரசு இடங்களை வெளிநாட்டினர்
கைப்பற்றுவதாக, தனியார்மயத்தின் கைக்கூலிகளான
இந்த நீட் எதிர்ப்பாளர்கள் வதந்தி பரப்பி வருகின்றனர்.

14) அடுத்து, அமெரிக்காவின் புரோமெட்ரிக்
நிறுவனம்தான் கேள்வித்தாள்களைத் தயாரிக்கிறது
என்ற பொய்யைத் தோலுரிக்கலாம். (தொடரும்).
**************************************************************   
    
   
        

வெள்ளி, 15 செப்டம்பர், 2017

1) ஜேப்பியார், ஜெயேந்திரர். பச்சமுத்து, ஜகத் ரட்சகன்
ஆகிய சுயநிதிக் கல்வித் தந்தைகளின் குரலையே
இந்த அம்மையார் ஒலிக்கிறார். ஒரு MBBS சீட்டுக்கு
ரூ 1 கோடி முதல் 5 கோடி வரை கொள்ளையடித்துச்
சுரண்டிய சுயநிதி முதலைகளின் குரல்.
2) நீட் தேர்வு ஒரு உலகத் தேர்வு (GLOBAL TEST) என்று இவர்
கூறுவது அசட்டு முட்டாள்தனத்தின் உச்சம். நீட் தேர்வு
இந்தியத் தேர்வு மட்டுமே; அது இந்தியாவில் மட்டுமே
செல்லும். நீட் தேறிவிட்டேன் என்று கூறிக்கொண்டு
உலகின் எந்த நாட்டு மருத்துவக் கல்லூரியிலும்
சேர முடியாது.
3) அரசு இடங்கள் இந்திய மாணவர்களுக்கு மட்டுமே.
NRI, OCI, PIO மாணவர்கள் எவரும் இந்தியாவின்
மொத்தமுள்ள 29 மாநிலங்களிலும் இருக்கின்ற
மாநில அரசுகளின் அரசுக் கல்லூரி இடங்களிலோ
அரசு ஒதுக்கீட்டு இடங்களிலோ  சேர முடியாது.
அந்த இடங்களில் இந்திய மாணவர்கள் மட்டுமே
சேர முடியும். இது தெரியாமல் இவர் உளறுகிறார்.
4) தனியார் சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப்
பல்கலைகளின் நிர்வாக ஒதுக்கீடு மற்றும் அகில இந்திய
ஒதுக்கீட்டு இடங்களில் மட்டுமே NRI, OCI,PIO மற்றும்
Foreign nationals சேர முடியும். 
5) இந்தக் குட்டி முதலாளித்துவ அம்மையார்
பேசிய ஒவ்வொரு வார்த்தையும் பொய் என்பதை
தரவுகள் நிரூபிக்கின்றன.
6) NEET UG தேர்வை CBSEதான் நடத்துகிறது. CBSE தவிர
வேறு யாரும் நடத்தவில்லை. கேள்வித்தாள் தயாரிப்பு,
விடைகள் தயாரிப்பு உள்ளிட்டவற்றை CBSE மட்டுமே
நடத்துகிறது.        

வியாழன், 14 செப்டம்பர், 2017

சரியான விடையும் விளக்கமும்!
----------------------------------------------------------
விடை: 129 நாட்கள்.
விளக்கம்: இந்தக் கணக்கை கெப்ளரின் Law of periods
விதியைக் கொண்டு செய்ய வேண்டும்.
**
Law of periods: The square of the period of revolution of any planet is
proportional to the cube of the planet's mean distance from the sun.
Therefore, T^2 is directly proportional to R^3.
**
சூரியனைச் சுற்றுகிற எந்த ஒரு கோளின்
சுழற்சிக்காலத்தின் வர்க்கமானது, சூரியனுக்கும்
அக்கோளுக்கும் உள்ள சராசரி தூரத்தின்
மும்மடிக்கு நேர்விகிதப் பொருத்தத்தில் இருக்கும்.
இதுதான் மேற்கூறிய கெப்ளரின் விதியின் தமிழாக்கம்.
**
இப்போது கணக்கைச் செய்யலாம்.
சூரியன்-பூமி தூரம்= R என்க. (R = 15 கோடி கி.மீ= 1 AU)
காலம் = Time Period=  T என்க. (T = 365 நாட்கள்)
சூரியன்-பூமி புதிய தூரம் = a என்க (a = 7.5 கோடி கி.மீ = 0.5 AU)
இதற்கான காலம் = b என்க. (இதைக் கண்டறிய வேண்டும்).
**
கெப்ளரின் விதிப்படி,
b^2 /T^2 = a^3/R^3
b^2/ 365^2 =  0.5^3/1^3
On simplifying we get, b= 129 days.
எனவே, சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம்
பாதியாகக் குறையுமானால், ஒரு ஆண்டு என்பது
129 நாட்களாக இருக்கும்.
*********************************************************   
      



செவ்வாய், 12 செப்டம்பர், 2017

நீண்ட காலமாக மறைந்திருந்த பாடலை
இன்று வெளிப்படுத்தியமைக்கு நன்றி.

சரியான விடையும் விளக்கமும்:
----------------------------------------------------------
விடை: நீதியரசர் ஓ பி சைனி மீதான புவியீர்ப்பு
விசையே அதிகமாகச் செயல்படும் விசை.
விளக்கம்: புவியீர்ப்பு விசை உயரத்தைப்  பொறுத்து
மாறும்.( gravitational force varies with altitude). அதிகமான உயரத்தில்
புவியீர்ப்புவிசை குறையும்.
We know, acceleration due to gravity, g = GM/r^2
Also, acceleration to gravity at height h = GM/(R+h)^2
This clearly shows that g at a height h is lesser than g at the surface of the earth.
***************************************************************

அவர் மீது செயல்படும் புவியீர்ப்பு விசை = 9.8 m/s^2.
இதில் எவ்வித  மாற்றமும் இல்லை.  

தற்போது இந்த 2017இல் பாஜக கட்சி வளர்ச்சி
அடைந்துள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் மத்தியிலும்
ஆட்சியில் உள்ளது. இது பாஜகவின் வளர்ச்சியே.
இதற்குப் பல காரணிகள் உண்டு. என்றாலும் இதற்கு
கம்யூனிஸ்ட்டுகள் பொறுப்பு என்பதை மறுக்க இயலாது.
பதில் உள்ளவற்றில் இந்த ஒரு கருத்தில் நான்
உடன்படுகிறேன்.

பிரமிடில் நிரம்பியுள்ள நெல்!
---------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------
ஒரு பிரமிட் வடிவ தானியக் களஞ்சியம் முழுவதும்
நெல் நிரம்பி உள்ளது. இந்த பிரமிடின் அடிப்பாகம்
15 அடி கொண்ட சதுரமாகும். பிரமிடின் உயரம் 10 அடி.
எனில் பிரமிட்டில் உள்ள நெல்லின் கனஅளவு என்ன?

விடைகள் வரவேற்கப் படுகின்றன.
------------------------------------------------------------------------------------------------

திங்கள், 11 செப்டம்பர், 2017

ஆ ராசாவும் ஓ பி சைனியும் புவியீர்ப்பு விசையும்!
---------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------------
1) நீதியரசர் ஓ பி சைனி அவர்கள் கன்னியாகுமரிக்கு
வந்து, முக்கடல் சங்கமத்தில், கடலில் நீந்திக் கொண்டு
இருக்கிறார்.

2) சரியாக அதே நேரத்தில், ஆ ராசா அவர்கள் நீலகிரி
மலையில் 2400 மீட்டர் உயரத்தில் உள்ள தொட்டபெட்டா
சிகரத்தில் ஏறி நிற்கிறார்.

3)இவ்விருவர் மீதும் புவியீர்ப்பு விசை செயல்படுகிறது.
யார் மீது புவியீர்ப்பு விசை அதிகமாகச் செயல்படும்?

4) கண்டிப்பாக விடை எழுத வேண்டும். சரியான விடை
எழுதுவதன் மூலம், கல்வி சார்ந்த விஷயங்களில்
கருத்துக்கூறும் அருகதையைப் பெறுங்கள்!

5) விடைகள் கட்டாயப் படுத்தப் படுகின்றன.
************************************************************** 
சமூகநீதி என்றால் என்ன?
------------------------------------------------
மேற்குறித்த பின்னூட்டம் சமூகநீதி குறித்த
பிறழ் புரிதலை வெளிப்படுத்துகிறது. சமூகம்
என்பது அரசு எந்திரத்தின் வழியாகச் செயல்படுகிறது.
அரசு எந்திரம் (state machinery)  அதாவது அரசு இல்லாமல்
சமூகம் செயல்படுவதில்லை. சமூகநீதி என்பது
ஏற்றத்தாழ்வுகள் உள்ள ஒரு சமூகத்தில், அரசானது
குடிமக்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை
வழங்குவதாகும். தங்களின் உதாரணத்தில்,
மேற்குறித்த A, B  இருவருக்கும் அரசானது சம வாய்ப்புகளை வழங்குமேயானால், அங்கு சமூகநீதி செயல்படுகிறது
என்று பொருள்.
**
குடிமக்கள் தம் சொந்த முயற்சியில் தங்களை
மேம்படுத்திக் கொள்ளும் செயல்களை, தங்களின்
வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளும் செயல்களை 
சமூகநீதிக்கு எதிரானவை என்று கருதுவது
பிறழ்புரிதல்  ஆகும்.
**
A, B என்று இரு மாணவர்கள். Aயின் தந்தை பொறியியல்
படித்தவர். Bயின் தந்தை எம்.ஏ தமிழ் இலக்கியம்
படித்தவர். போட்டித்தேர்வு வருகிறபோது, பொறியியல்
படித்த தந்தை தன மகன் Aக்கு பாடங்களைச்
சொல்லிக் கொடுத்து தேர்வுக்கு ஆயத்தம் செய்கிறார்.
எம்.ஏ.இலக்கியம் படித்த தந்தையால் தன் மகன் B க்கு
போட்டித்தேர்வில் உதவி செய்ய இயலாது. இந்நிலையில்
பொறியியல் படித்த தந்தையின் மகன் போட்டித்தேர்வில்
வெற்றி பெற்று பொறியியல் இடம் பெறுகிறான்.
இங்கு சமூகநீதி மீறப்பட்டுள்ளது என்று கருத இயலாது.
அப்படிக் கருதுவது பிறழ் புரிதல் ஆகும்.

     

1) திருநெல்வேலியில் நான் படித்த அரசுப்பள்ளியில்
என்னுடன் படித்த சில மாணவர்கள் மதிய உணவு
கொண்டு வர மாட்டார்கள். காரணம் வறுமை.
பின்னர் வந்த எம்ஜியார் அரசு சத்துணவு போட்டது.
2) இன்று இலவசமாக பாடப்புத்தகங்கள், லாப்டாப்,
சைக்கிள்,சீருடை என படிப்பதற்கான materials
அரசால் இலவசமாக வழங்கப் படுகின்றன.
3) அரசுப் பள்ளிகளில் கட்டணம் (fees) கிடையாது.
4) மேற்கூறிய அனைத்தும் AFFIRMATIVE ACTIONS எனப்படும்.
**
5) இவற்றின் மூலம் சமூகநீதி நிலைநாட்டப்
படுகிறது.
6) ஏழை பணக்காரன் என்னும் இரு பிரிவினருக்கு
இடையிலான வேற்றுமைகள் (DISPARITIES) அரசால் அகற்றப்
படுகின்றன.
7) அரசு மேற்கொண்ட இச்செயல்களையே எவரேனும்
ஒரு உள்ளூர் வள்ளல் (LOCAL PHILONTHROPHIST செய்யலாம்.
அவரால் மொத்த சமூகத்திற்கும் செய்ய இயலாது.
வள்ளல் செய்யும் உதவிகள் welfare activities என்ற வகையில்
வரும். அரசு தன் அதிகாரத்தைக் கொண்டு செய்வன
மட்டுமே affirmative actions எனப்படும்.  affirmative actions என்பவை
சமூகநீதியை நிலைநாட்டுபவை.  

நீங்கள் விவாதம் செய்யுங்கள்! அதில் நான் பங்கேற்று
ஆட்டத்தின் சமநிலையை பாதித்து விடக் கூடாது.
தாமிரபரணி மணலில் நீங்களெல்லாம் சடுகுடு
விளையாடும்போது, நான் அதில் பங்கேற்கக்
கூடாதுதான். இங்கு social justice, affirmative action ஆகியன
குறித்து ஒரு புரிதலை உருவாக்கவே நான் தலையிட்டேன்.
நீங்கள் தொடர்ந்து விவாதியுங்கள்.நன்றி. 

  
இந்தக் கணக்கைச் செய்யுங்கள்!
நீட் குறித்து கருத்துக்கூறும்  அருகதையைப் பெறுங்கள்!
இதைவிட எளிமையாக ஒரு கேள்வி கேட்க முடியாது!
----------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------------------
இரண்டு ஒயர்களை தொடரிணைப்பு (series connection)
மூலம் இணைக்கும்போது 18 ஓம் மின்தடையும்,
அதே ஒயர்களை இணையான இணைப்பு
(parallel connection) மூலம் இணைக்கும்போது 4 ஓம்
மின்தடையும் கிடைக்கின்றன. அப்படியானால்,
அவ்விரு ஒயர்களில் ஒவ்வொன்றின்
மின்தடையும் என்ன?

Two wires when connected in series have an equivalent resistance of
18 ohm and when connected in parallel, an equivalent resistance of
4 ohm. Find their resistances.

விடைகள் வரவேற்கப் படுகின்றன.
************************************************************
   

ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

சரியான விடையும் விளக்கமும்!
---------------------------------------------------------
சரியான விடை: AB = 3.33 km.
விளக்கம்:
-------------------
எடப்பாடியும் தினகரனும் தரையில் உள்ள
இரண்டு புள்ளிகள். அவற்றை முறையே A, B என்க.
தற்போது AB எவ்வளவு என்று கண்டுபிடிக்க வேண்டும்.
AB என்ற தூரத்தை விமானம் எவ்வளவு வேகத்தில்,
எவ்வளவு நேரத்தில் கடந்தது என்பது நமக்குத் தெரிய
வேண்டும். தெரிந்தால். தூரம், வேகம்,நேரம் மூன்றையும்
இணைக்கும் universal formulaஆன distance =speed x time என்ற
சூத்திரத்தைப் பயன்படுத்தி விடை காணலாம்.
**
வேகம்= 600 கி.மீ /மணி என்பது கணக்கில் உள்ளது.
நேரம் மட்டுமே கண்டு பிடிக்க வேண்டும்.
இதற்கு ஒரு சூத்திரம் உள்ளது. விமானத்தில் இருந்து
ஒரு பொருளை கீழே எறியும்போது, அது parabola
வடிவத்திலான பாதையில் செல்லும் என்பது
அடிப்படை எந்திரவியல். (The path of the projectile is a parabola).
**
எனவே, if  T is the time taken by the particle (projectile) to reach the ground,
then T= square root of 2h/g
Now, time and speed are known. Multiplying these two, one gets the distance.
time = square root of 2x1960 divided by 9.8 (g= 9.8 on earth)
= 20 s.
distance AB= speed x time
= 600 x 20 s
= 600 x 20 x(5/18)
= 3.33 km.
=======================================================    

5/18 is a conversion factor.
To convert meter per second into kilometer per hour and vice versa we use the conversion factors like 5/18 and 18/5 depends on the need.
------------------------------------------------------------------

எடப்பாடிக்கும் தினகரனுக்கும் உள்ள தூரம் என்ன?
இந்தக் கேள்விக்கு விடை காண்போம்!
-------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------------
பல்லாவரம் மலையின் மீது இரு வேறு இடங்களில்
நின்று கொண்டு இருக்கின்றனர் எடப்பாடியும்
தினகரனும். மேலே வானத்தில் ஒரு விமானம்
1960 மீட்டர் உயரத்தில் மணிக்கு 600 கி.மீ வேகத்தில்
கிடைமட்டமாகப் பறந்து கொண்டு இருக்கிறது.

விமானத்தில் அமித்ஷா இருக்கிறார். விமானம்
சரியாக எடப்பாடியின் தலைக்கு நேரே வந்ததும்,
விமானத்தில் இருந்து கொண்டு, ஒரு பொருளை
எடப்பாடியை நோக்கி வீசுகிறார் அமித் ஷா.
அந்தப் பொருளோ தினகரன் இருந்த இடத்தில்போய்
விழுகிறது. அப்படியானால், எடப்பாடிக்கும்
தினகரனுக்கும் உள்ள தூரம் என்ன?

An aeroplane is flying horizontally with a speed of 600 km per hour
at a height of 1960 m.When it is vertically above the point A on the
ground, a body is dropped from it.The body strikes the ground at
point B. Calculate the distance AB.

இது IIT தேர்வில் பலமுறை கேட்கப்பட்ட ஒரு கேள்வி.
இதற்கு வாசகர்கள் விடையளிக்கலாம். 
***************************************************************  

புதன், 6 செப்டம்பர், 2017

அறிவியல் உரை!
------------------------------
சரஸ்வதி கேலக்சி
(இந்திய விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு)
உரை: பி இளங்கோ
நாள்: 07.09.2017 வியாழன் இரவு 7 மணி
இடம்: பெரியார் திடல் (மணியம்மை அரங்கம்)
வேப்பேரி, சென்னை. அனைவரும் வருக!
பிரதீப்

நிஜந்தன் நிஜந்தன் 
நீட் எதிர்ப்பு என்று கூறும் அத்தனை போலிகளும்
தனியார் சுயநிதி முதலைகளின் கைக்கூலிகளே.
பச்சமுத்து, ஜேப்பியார், ஜெயேந்திரர், ஜகத் ரட்சகன்
இன்ன பிற சுயநிதிக் கொள்ளையர்களின் நலனுக்கே
நீட் எதிர்ப்பு பயன்படுகிறது. நிட்டை எதிர்க்கும்
எவனாவது மேனேஜ்மேன்ட் கோட்டாவை
ரத்து செய்யக் கோரியது உண்டா? இல்லை. 

ரூ 5 கோடி ஊழல் புரிந்த
தன் மகன்



தகுதியற்ற மகளுக்கு
ஜெயாவின் கால் நக்கி  சீட் பெற்ற
கிருஷ்ணசாமியும், ரூ 500 கோடி ஊழல் செய்த மகனுக்கு
புரிந்த தன் மகன் டேவிட் பாண்டியனுக்கு
பல்கலை பதிவாளர் பதவி பெற்ற
தா பாண்டியனும் போராளிகளே!    கயவர்களே 

நீட் எதிர்ப்பு என்ற பெயரில் நடந்த எந்த ஒரு
போராட்டத்திலாவது, எந்தவொரு விளக்க அறிக்கையிலாவது
தனியார் சுயநிதிக் கல்விக் கயவர்களை எதிர்த்து
ஒரு வார்த்தையாவது சொல்லப் பட்டு இருக்கிறதா?
இல்லையே.

பாலபாரதி அவர்களே விளக்கம் தேவை!
கிருஷ்ணசாமியின் மகளுக்கு
மருத்துவ மேற்படிப்பில் ஜெயா
இடம்   வழங்கியதாக ஓபிஎஸ் சட்டமன்றத்தில் பேச்சு!சீட்
MBBS சீட்டுக்கு அல்ல.

பாலபாரதி அவர்களே,
டாக்டர் கிருஷ்ணசாமியின் மகளுக்கு அன்றைய முதல்வர்
ஜெயலலிதா MBBS சீட் வழங்கியதாக தாங்கள் கூறினீர்கள்.
ஆனால் அன்றைய நிதியமைச்சர் ஓ பன்னீர் செல்வம்
அவர்கள் மருத்துவ மேற்படிப்பில்   சீட் வழங்கினார் அம்மா
என்று கூறுகிறார். MBBS சீட் வேறு; மருத்துவ மேற்படிப்பு
சீட் வேறு. மேலும் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகள்
MBBS,  MD, Diploma என்று நிறையப் படித்து இருப்பதால்
எந்தப் படிப்புக்கு ஜெயலலிதா உதவினார் என்பதற்கு
நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.

உதவி பெற்றார் என்பது நான் இங்கு வெளியிட்ட
சட்டமன்ற மினிட்ஸில் தெளிவாக உள்ளது. ஆனால்
கிருஷ்ணசாமி தரப்பு MBBS, MD என்று இரண்டு படிப்பையும்
படித்து முடித்த பின்னர், டிப்ளமா படிப்புக்கு மட்டுமே
உதவி கேட்டார் என்கிறார்கள். அரைகுறையாக
எதையும் பேச முடியாது என்பதால் பாலபாரதி
அவர்கள் விளக்கம் தந்தால் நல்லது. இது விஷயமாக
எனது முந்திய பதிவுகளையும் படிக்க வேண்டும்.

பள்ளன் பறையனுக்கெல்லாம் படிப்பு வருமா?
டாக்டர் கிருஷ்ணசாமி மீதான
'மார்க்சிஸ்ட்' பாலபாரதியின் குற்றச்சாட்டு உண்மையா?
டாக்டர் மனோகர் தலைமையில்
உண்மை  அறியும் குழுவை அமைக்கிறோம்!
--------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------------------
1) டாக்டர் கிருஷ்ணசாமி குறைந்த மதிப்பெண் பெற்ற
தகுதியற்ற  தன் மகளுக்கு அன்றைய முதல்வர்
ஜெயலலிதாவிடம் மண்டியிட்டு மருத்துவப் படிப்பில்
MBBSல் சேர்த்தார் என்று பாலபாரதி அம்மையார் குற்றம்
சாட்டி உள்ளார்.

2) இதை டாக்டர் கிருஷ்ணசாமி தரப்பு உறுதியாக
மறுக்கிறது. டாக்டர் கிருஷ்ணசாமியின் மகள்
2002ல் அன்றைய நுழைவுத்தேர்வில் (TNPCEE 2002)
தேர்ச்சி பெற்று முறையாகத்தான் MBBS படிப்பில்
சேர்ந்தார் என்கிறது கிருஷ்ணசாமி தரப்பு.

3) மேலும் டாக்டரின் மகள் MBBS, MD, Diploma in pediatrics என்று
நிறைய படித்து இருக்கிறார். இதில் எந்தப் படிப்புக்காக
முதல்வர் ஜெயாவின் உதவியை டாக்டர் கிருஷ்ணசாமி
நாடினார் என்று தெளிவு படுத்த வேண்டியது
பாலபாரதியின் கடமை. ஆனால் அவரிடம் பலமுறை
இதுபற்றிக் கேட்டும் அவர் பதிலளிக்காமல் மௌனம்
சாதிக்கிறார்.

4) டாக்டர் கிருஷ்ணசாமி மீதான அரசியல்
விரோதங்களுக்காக  கணக்குத் தீர்க்க அவரின்
அரசியல் எதிரிகள் முயல்வது இயற்கையே. அதில்
எங்களுக்கு துளியும் அக்கறை இல்லை. ஆனால்
அதற்காக அவரின் மகள் மீது பொய்யான அவதூறுச்
சேற்றை வாரி இரைப்பது நியாயமல்ல.

5) பள்ளன் பறையனுக்கெல்லாம் படிப்பு வராது என்ற
மேல்சாதி ஆதிக்க மனப்பான்மை காரணமாக
டாக்டர் கிருஷ்ணசாமியின் மகள் மீது சேற்றை
வாரி இரைப்பது சரியல்ல.

6) எனவே இந்த விஷயத்தில் உண்மை என்ன என்று
தரவுகளை ஆராய்ந்து கண்டறிவதற்காக டாக்டர்
பி மனோகர் தலைமையில் ஒரு நபர் உண்மை அறியும்
குழுவை நியூட்டன் அறிவியல் மன்றம் அமைக்கிறது.

7) டாக்டர் மனோகர் அவர்களின் அறிக்கை கிடைத்த பிறகு
இந்த விவகாரத்தில் எது உண்மை என்று தெரிய வரும்.

8) தொடர்புடைய அனைவரும் டாக்டர் மனோகர்
அவர்களுக்கு இது விஷயத்தில் தேவையான
தகவல்களை ஆதாரத்துடன் அளித்து அவருக்கு
ஒத்துழைப்பு அளிக்குமாறு நியூட்டன் அறிவியல்
மன்றம் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.

தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம்,
சென்னை.
இடம்: சென்னை 094; நாள்: 05.09.2017.
***********************************************************      

அறிவியல் சொற்பொழிவு!
நியூட்டன் அறிவியல் மன்றம் நிகழ்த்துகிறது!
-----------------------------------------------------------------------------------
நாள்: 07.09.2017, வியாழன், இரவு 7 மணி

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்,
பெரியார் திடல், வேப்பேரி, சென்னை.

பொருள்:
இந்திய விஞ்ஞானிகள் அண்மையில்
கண்டுபிடித்த புதிய கேலக்சி
(Saraswathi Galaxy).
(POWER POINT PRESENTATION)

உரை: நியூட்டன் அறிவியல் மன்றம்

கூட்ட ஏற்பாடு: பெரியார் நூலக வாசகர் வட்டம்.

அனைவருக்கும் அனுமதி! அனைவரும் வரலாம்! 
---------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
அறிவியல் சொற்பொழிவு சரியாக 7  மணிக்குத் தொடங்கி
8 மணிக்கு முடிந்து விடும்.  கேள்விகள் இருந்தால்
அரை மணி நேரம் விடையளிக்கப் படும்.  குறித்த
நேரத்திற்கு வருமாறு வேண்டுகிறோம்.
**************************************************************