புதன், 31 ஜூலை, 2019

The Rs. 375 crore, heavy-lift GSLV-Mk III rocket slung the Rs. 603 crore, 3.8 tonnes Chandrayaan-2spacecraft in its intended earth parking orbit.
The 43.4 metre tall, 640-tonne rocket, nicknamed 'Baahubali', carried the 3.8-tonne Chandrayaan-2 spacecraft, which will carry out India's second mission to its closest celestial neighbour.
From here, it will be a long, over a one-and-a-half-month journey for Chandrayaan-2 as it will traverse the 384,400 km that separate Earth and its sole satellite.
After the launchIndian Space Research Organisation (ISRO) Chairman K. Sivan said: "I'm extremely happy to announce that the GSLV-Mk III-M1 successfully injected Chandrayaan-2 spacecraft into Earth orbit. It is the beginning of a historic journey for India towards the moon and to land at a place near South Pole to carry out scientific experiments. I salute to all those involved in the launch of Chandrayaan-2."
The Geosynchronous Satellite Launch Vehicle-Mark III (GSLV-Mk III) blasted off from the second launch pad at the Satish Dhawan Space Centre (SDSC) in Sriharikota spaceport at exactly 2:43pm to begin its ascent into space.
About 16 minutes into its flight, the rocket put into orbit Chandrayaan-2 that comprises three segments - the Orbiter (weighing 2,379 kg, eight payloads), the lander 'Vikram' (1,471 kg, four payloads) and rover 'Pragyan' (27 kg, two payloads) - to begin its 48-day journey to the Moon while the ISRO will raise the spacecraft's orbit by a series of manoeuvres to put it on Lunar Transfer Trajectory in the coming days.
Originally the rocket was to fly on July 15, at 2:51am but due to a technical glitch, the mission was called off one hour before take-off.
After setting right the technical snag, the ISRO launched the rocket on Monday afternoon.
According to an ISRO official, the lander Vikram will land on the moon on September 7.
"Since this is the first moon landing mission of ISRO, we had built in buffer time which is being used now," an ISRO official had told IANS.
As per the July 15 flight schedule, Chandrayaan-2's earth bound phase was 17 days and it has now been revised to 23 days as per the new schedule.
On the other hand, the lunar-bound phase which was for 28 days under July 15 flight schedule, has come down to 13 days.
Originally Vikram was planned to land on the moon 54 days after the rocket's lift off but will now do it in 48 days.
The Indian space agency has named the lander in memory of country's space pioneer Vikram Sarabhai while the rover's name means wisdom in Sanskrit.
According to the ISRO, on the day of landing - estimated on September 7, the lander Vikram will separate from the Orbiter and then perform a series of complex manoeuvres comprising rough braking and fine braking.
Imaging of the landing site region prior to landing will be done for finding safe and hazard-free zones.
The Vikram is expected to soft-land from a height of 100 km from the Moon's surface near its South Pole -- where, according to ISRO, no one has gone before - and carry out three scientific experiments.
Subsequently, the six-wheeled rover Pragyan will roll out and carry out two experiments on lunar surface for a period of one lunar day which is equal to 14 Earth days.
The Orbiter with eight scientific experiments will continue its mission for a duration of one year. It will be orbiting in 100x100 km

செவ்வாய், 30 ஜூலை, 2019

chandrayaan 2
==================
1)  ISRO lauched 10 satelites beating russia's 37. Elon Musk (born 1971) CEO of SpaceX
2. russia us china took 5 r 6 days. we take 448 days. why
3. GSLV Mark iii and Saturn v difference
4.கமாக
=================
moon rocks collected by astronauts during the Apollo program contain traces of apatite.[31] Re-analysis of these samples in 2010 revealed water trapped in the mineral as hydroxyl, leading to estimates of water on the lunar surface at a rate of at least 64 parts per billion – 100 times greater than previous estimates – and as high as 5 parts per million.[32] If the minimum amount of mineral-locked water was hypothetically converted to liquid, it would cover the Moon's surface in roughly one meter of water


anaivarukkumமிக்க நன்றி ஐயா.

vaazhththukkooriya anaivarukkum mikka nanri.

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.  மருதுபாண்டியன் 

கமகம 
===============கமாக

பெண்ணாதிக்க வெறி பிடித்த சந்திரயான்-2ல் பெண்ணாதிக்கம்!


குசலம் விசாரிக்கும் பேச்சு மட்டுமே!
மொபைல் தொலைபேசி வைத்திருப்பவர்கள் கவனிக்க!



முத்தையா வனிதா திட்ட இயக்குனர் (project director).
ரித்து கரிதால் மிஷன் இயக்குனர் (mission director) 
பெண் விஞ்ஞானிகளின் ஆதிக்கம் வாழ்க!

பெண்ணாதிக்கம் ஒழிக!
ஆணாதிக்கத்தை நிலைநாட்டுவோம் வாரீர்!
இஸ்ரோவில் ஆண் விஞ்ஞானிகளே இல்லையா?

ஆர் மயிசாமி


அன்று மயில்சாமி அண்ணாதுரை!
இன்று வனிதா முத்தையா!
வனிதா முத்தையா, ரித்து கரிதல் இருவரும்
சாதனைப் பெண் விஞ்ஞானிகள்!
----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------
சந்திரயான்-2 இந்த இரண்டு பெண் விஞ்ஞானிகளின்
பொறுப்பில் உள்ளது.

வனிதா முத்தையா சந்திரயான்-2வின் திட்ட இயக்குனராக
(project director) இருக்கிறார். முன்பு சந்திரயான்-1ன் திட்ட
இயக்குனராக மயில்சாமி அண்ணாதுரை இருந்தார்.

ரித்து கரிதல் சந்திரயான்-2ன் மிஷன் இயக்குனராக
(mission director) இருக்கிறார்.

சந்திரயான்-2ன் வெற்றிக்கு இந்த இரு பெண்
விஞ்ஞானிகளும் பொறுப்பு!

முன்பு மயில்சாமி அண்ணாதுரை புகழ் பெற்றது போல,
சந்திரயான்-2ன் வெற்றிக்குப் பின்னர்
வனிதா முத்தையா புகழ் பெற வேண்டும்.

வனிதா முத்தையா, ரித்து கரிதல் ஆகிய இரு
பெண் விஞ்ஞானிகளையும் போற்றுவோம்!
*********************************************

சந்திரயான்-1 நிலவைச் சுற்றிய orbit 200 x 200 km.   
சந்திரயான்-2ன் orbit 100 x 100 km.
பெரிசெலின் 100 km, அப்போசெலின் 100 km.


அமெரிக்காவின் ஏவுகணை
Saturn Vன் உயரம் 363 அடி, நிறை 2970 டன்.
இந்தியாவின் GSLV Mark III M1ன்
உயரம் 142 அடி, 640 டன்.   

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!


பெரிஜி அப்போஜி பற்றி வாசகர்கள் அறிவார்கள்.
இனி periselene aposelene பற்றியும் அறிந்திட வேண்டும்.


கிறிஸ்டோபர் நோலனின்   த்தி
டன்கிர்க் படம் பார்த்தீர்களா?
அதன் தயாரிப்புச் செலவு ரூ 1028 கோடி!
சந்திரயான்-2ன் செலவு ரூ 978 கோடி.
ரூ 50 கோடி குறைவு!  

Dark Knight (மூன்று) பார்த்தேன். இன்டெர்ஸ்டெல்லார்
பார்த்தேன். டன்கிர்க்கும் பார்த்தேன். டன்கிர்க் படத்திற்கு
நிச்சயம் ரூ 1000 கோடிக்கு மேல் செலவாகி இருக்கும்.
கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படத்திற்குத் தவம்
இருக்கிறேன்.

திங்கள், 29 ஜூலை, 2019

PSLV GSLV DIFFERENCE
Both PSLV (Polar Satellite Launch Vehicle) and GSLV (Geosynchronous Satellite Launch Vehicle) are the satellite-launch vehicles (rockets) developed by ISRO. PSLV is designed mainly to deliver the “earth-observation” or “remote-sensing” satellites with lift-off mass of up to about 1750 Kg to Sun-Synchronous circular polar orbits of 600-900 Km altitude.
The remote sensing satellites orbit the earth from pole-to-pole (at about 98 deg orbital-plane inclination). An orbit is called sun-synchronous when the angle between the line joining the centre of the Earth and the satellite and the Sun is constant throughout the orbit.
Due to their sun-synchronism nature, these orbits are also referred to as “Low Earth Orbit (LEO)” which enables the on-board camera to take images of the earth under the same sun-illumination conditions during each of the repeated visits, the satellite makes over the same area on ground thus making the satellite useful for earth resources monitoring.
Apart from launching the remote sensing satellites to Sun-synchronous polar orbits, the PSLV is also used to launch the satellites of lower lift-off mass of up to about 1400 Kg to the elliptical Geosynchronous Transfer Orbit (GTO).
PSLV is a four-staged launch vehicle with first and third stage using solid rocket motors and second and fourth stages using liquid rocket engines. It also uses strap-on motors to augment the thrust provided by the first stage, and depending on the number of these strap-on boosters, the PSLV is classified into its various versions like core-alone version (PSLV-CA), PSLV-G or PSLV-XL variants.
The GSLV is designed mainly to deliver the communication-satellites to the highly elliptical (typically 250 x 36000 Km) Geosynchronous Transfer Orbit (GTO). The satellite in GTO is further raised to its final destination, viz., Geo-synchronous Earth orbit (GEO) of about 36000 Km altitude (and zero deg inclination on equatorial plane) by firing its in-built on-board engines.
Due to their geo-synchronous nature, the satellites in these orbits appear to remain permanently fixed in the same position in the sky, as viewed from a particular location on Earth, thus avoiding the need of a tracking ground antenna and hence are useful for the communication applications.
Two versions of the GSLV are being developed by ISRO. The first version, GSLV Mk-II, has the capability to launch satellites of lift-off mass of up to 2,500 kg to the GTO and satellites of up to 5,000 kg lift-off mass to the LEO. GSLV MK-II is a three-staged vehicle with first stage using solid rocket motor, second stage using Liquid fuel and the third stage, called Cryogenic Upper Stage, using cryogenic engine
சந்திரயான்-2வின் 47 நாள் பயணம் ஏன்?
---------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------
நிலவின் மீது மிக மென்மையாகத் தரையிறங்கப் 
போகிறது சந்திரயான்-2. ஒரு குழந்தையைத் 
தொட்டிலில் கிடத்துவது போன்ற மென்மையான 
நிகழ்வு இது. இதுவரை கவிஞர்களின் ஆளுகையில் 
இருந்து வந்த நிலவு தற்போது விஞ்ஞானிகளின் 
ஆளுகைக்குள் வந்து விட்டது.

சந்திரயான்-2 திட்டத்தின் தலைமைப் பொறுப்பில் 
இரண்டு பெண் விஞ்ஞானிகள் இருந்து வரலாறு 
படைக்கின்றனர். முத்தையா வனிதா திட்ட 
இயக்குனராகவும் (project director), ரித்து கரிதால் 
மிஷன் இயக்குனராகவும் (mission director) பொறுப்பேற்று  
இஸ்ரோவுக்குப் பெருமை சேர்க்கின்றனர்.

ஒன்றில் மூன்று!
--------------------------
சந்திரயான்-2 தன்னுள் மூன்று நோக்கங்களைக் 
கொண்ட ஒரு ஒன்றில் மூன்று திட்டம் 
(three in one mission). 
சந்திரனைச் சுற்றி வரப்போகும் ஒரு கோள்சுற்றி 
(orbiter), சந்திரனில் தரையிறங்கும் ஒரு தரையிறங்கி 
(lander), சந்திரனின் தரையில் சிறிது தூரம் நடந்து 
சென்று ஆராயும் ஒரு நடைவண்டி (rover) ஆகிய
மூன்றும் அடங்கிய திட்டமே சந்திரயான்-2 ஆகும்.

இந்திய விண்வெளித் துறையின் தந்தையாகக் 
கருதப்படும் விக்ரம் சாராராய் நினைவாக 
தரையிறங்கிக்கு (lander) விக்ரம் என்று பெயர் 
சூட்டப் பட்டுள்ளது. நடைவண்டிக்கு (rover) 
பிரக்ஞான் என்று பெயர். இதற்கு ஞானம் 
என்று பொருள்.

சந்திரயான்-2ன் மொத்தச் செலவு ரூ 978 கோடி 
மட்டுமே (142 மில்லியன் அமெரிக்க டாலர்). 
பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களின் செலவை
விட இது மிகவும் குறைவாகும். 2017ல் வெளிவந்த 
உலகப்புகழ் பெற்ற கிறிஸ்டோபர் நோலன் 
இயக்கிய டன்கிர்க் (Dunkirk) திரைப்படத்தின் 
செலவு 150 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். 
இது சந்திரயானின் செலவை விட ரூ 50 கோடி  
அதிகம். பிரசித்தி பெற்ற அவஞ்சர்ஸ் எண்ட் கேம் 
(Avengers End Game) படத்தின் செலவு 356 மில்லியன் 
அமெரிக்க டாலர்; அதாவது ரூ 2443 கோடி ஆகும். 

சந்திரயானின் செலவைப் போல் இது இரண்டரை 
மடங்கு அதிகம் ஆகும்

செலுத்து வாகனம்!
----------------------------
சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் 384,400 கிமீ 
மட்டுமே. சந்திரனில் இருந்து புறப்படும் ஒளி  
1.3 வினாடியில் பூமிக்கு வந்து சேர்ந்து விடும்.
சந்திரயான்-2 ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 
சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 
22 ஜுலை 2019 இந்திய நேரம் 1443 மணிக்கு
(IST 14:43; UTC 09:13) வெற்றிகரமாக விண்ணில் 
செலுத்தப் பட்டது.

ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த ஒரு 
'செலுத்து வாகனம்' (launch vehilcle) வேண்டும். இதுவே 
ஏவுகணை (rocket) என்று மக்களால் அழைக்கப் 
படுகிறது. சந்திரயான்-2ஐ  விண்ணில் செலுத்திய
ஏவுகணை GSLV Mark-III எனப்படும் புவி ஒத்திசைவு 
செலுத்து வாகனம் ஆகும்.

முன்னதாக 2008 அக்டோபரில் சந்திரயான்-1ஐ 
PSLV C-11 என்னும் துருவப்பாதை செலுத்துவாகனமே 
விண்ணில் செலுத்தியது. 2013 நவம்பரில் செவ்வாய்க் கோளைச் சுற்றிய மங்கள்யானை விண்ணில் 
செலுத்தியதும் PSLV XL C-25 என்னும் துருவ வாகனமே.

GSLV தேர்வானது எப்படி?
-------------------------------------
சந்திரயான்-2ஐச் செலுத்த துருவ வாகனத்தைத்  
(PSLV) தவிர்த்து புவி ஒத்திசைவு வாகனத்தை 
(GSLV) இஸ்ரோ தேர்ந்தெடுத்துள்ளது.
இதற்குச் சிறப்பான காரணங்கள் உண்டு.

PSLVயானது தாழ்நிலை புவிச் சுற்றுப்பாதையில் 
(Low Earth Orbit)  விண்கலன்களைச் செலுத்தும் 
விதத்தில் இஸ்ரோவால் வடிவமைக்கப் பட்டது. 
பூமியை ஆராயும் செயற்கைக் கோள்களை
(Earth Observation satellites) விண்ணில் செலுத்த 
உருவானது PSLV. தாழ்புவி சுற்றுப்பாதையானது 
2000 கிமீ உயரம் அல்லது அதற்கும் குறைவான 
உயரத்தைக் கொண்டது. இவ்வளவு குறைந்த 
உயரத்தில் சுற்றினால்தான் பூமியை நன்கு 
கூர்நோக்கி அறிய இயலும். தொலைதொடர்பு 
செயற்கைக் கோள்களைப்போல 36,000 கிமீ 
உயரத்தில் சுற்றி வந்தால் பூமியைக் கூர்நோக்கி
அறிய இயலாது.

துருவச் சுற்றுப்பாதையும் (Polar orbit) தாழ்நிலை 
புவிச் சுற்றுப்பாதையே. ஒவ்வொரு சுழற்சியின்போதும் 
சுற்றப்படும் பொருளின் (இங்கு பூமி) இரண்டு 
துருவங்களையும் (pole to pole) செயற்கைக்கோள் 
கடந்து செல்லும் விதத்தில் அமைந்ததே துருவச் 
சுற்றுப்பாதை. PSLVயானது 1750 கிலோகிராம் வரை 
நிறையுள்ள பளுவை (payload) சூரிய ஒத்திசைவு 
துருவச் சுற்றுப்பாதையில்
(SSPO = Sun Synchronous Polar Orbit) செலுத்த வல்லது.


PSLV நான்கு கட்டங்களைக் கொண்டது. முதல் 
கட்டத்திலும் மூன்றாவது கட்டத்திலும் திடநிலை 
எரிபொருளும், இரண்டாம் மற்றும் நான்காம் 
கட்டத்தில் திரவநிலை எரிபொருளும் கொண்டது.
PSLVயில் கிரையோஜெனிக் எஞ்சின் இல்லை.

GSLVயானது கிரையோஜெனிக் என்ஜினைக் 
கொண்டது. அதிகமான நீள்வட்டத் தன்மை கொண்ட 
(highly elliptical) சுற்றுப்பாதையில் (250 x 36,000 கிமீ) செயற்கைக்கோள்களைச் செலுத்த வல்லது.

சந்திரயான்-2ஐ விண்ணில் செலுத்திய 
GSLV Mark-III என்னும் செலுத்து வாகனம் மூன்று 
பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி திடநிலை 
எரிபொருளால் இயங்குவது. இரண்டாம் பகுதி
திரவநிலை எரிபொருளாலும், மூன்றாம் பகுதி 
கிரையோஜெனிக் எரிபொருளாலும் இயங்குவதாகும். 
செலுத்து வாகனமும் செயற்கைக்கோளும் சுதேசித் 
தொழில்நுட்பத்தால் இஸ்ரோவால் தயாரிக்கப் 
பட்டவை.

GSLV Mark-IIIயானது 4000 கிலோகிராம் நிறையுள்ள 
பளுவை (payload) புவி ஒத்திசைவு இடமாற்றப் 
பாதையில் (GTO = Geosynchronous Transfer Orbit) 
செலுத்த வல்லது.

துருவச் சுற்றுப்பாதையில் விண்கலன்களைச் 
செலுத்தும் நோக்கில்தான் PSLV உருவாக்கப் பட்டது. 
எனினும் அதன் திறன் மற்றும் நம்பகத் தன்மை 
காரணமாக புவி ஒத்திசைவுச் சுற்றுப் பாதையிலும் 
(Geosynchronous), புவிநிலைப்புச் சுற்றுப் பாதையிலும் 
(Geostationary) குறைந்த நிறையுள்ள பளுக்களைச்
செலுத்த (1425 கிகி வரை) இது பயன்படுத்தப் பட்டது.

சந்திரயான்-2ல் உள்ள கோள்சுற்றி 2379 கிகி 
நிறையுள்ளது. விக்ரம் தரையிறங்கி 1471 கிகி 
நிறையுடனும், பிரக்ஞான் நடைவண்டி 27 கிகி 
நிறையுடனும் உள்ளன. இம்மூன்றும் சேர்ந்து 
3877 கிகி நிறையைக் கொண்டுள்ளன. PSLVயானது
1425 கிகி நிறை வரையுள்ள பளுவை மட்டுமே 
கையாள வல்லது. எனவேதான் இஸ்ரோ 
GSLVஐ தேர்ந்தெடுத்தது.

ஏவுகணை நாயகன்!
----------------------------------
இஸ்ரோ இதுவரை 105 விண்வெளி ஆய்வுத் 
திட்டங்களை (spacecraft missions) மேற்கொண்டு 
அவற்றுக்கான செயற்கைக் கோள்களை விண்ணில் 
செலுத்தி உள்ளது. இவை அனைத்தும் இந்தியாவைச் 
சேர்ந்தவை. மேலும் 33 நாடுகளின் 297 செயற்கைக் 
கோள்களையம் விண்ணில் செலுத்தி உள்ளது. 
இவை தவிர, சந்திரயான், மங்கள்யான் போன்ற 
பளுவுடன் கூடிய (payload launch missions) 75 ஆய்வு விண்கலன்களையும் மாணவர்களின்
10 செயற்கைக் கோள்களையம் விண்ணில் 
செலுத்தி உள்ளது.

ஆனால் 1975ல் நமது முதல் செயற்கைக்கோளான 
ஆர்யபட்டாவை நம்மால் விண்ணில் செலுத்த 
இயலவில்லை. அதற்கான செலுத்து வாகனம் 
நம்மிடம் இல்லாமல், ரஷ்யாவின் உதவியுடன்
ரஷ்ய விண்வெளித் தளத்தில் இருந்து 
செலுத்தினோம்.

நமது இரண்டாம் செயற்கைக்கோளான 
பாஸ்கராவும் ரஷ்ய உதவியுடன்தான் 
செலுத்தப்பட்டது. இதன் பின்னரே நமது
சொந்த முயற்சியில் பல்வேறு செலுத்து 
வாகனங்களைத் தயாரித்தோம். இன்று 
வெளிநாடுகளின் செயற்கைக்
கோள்களை நாம் விண்ணில் செலுத்தும் அளவுக்கு
வளர்ந்து இருக்கிறோம். இந்த வளர்ச்சிக்கு வித்திட்ட
விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், இந்தியாவின்
ஏவுகணை நாயகன் (missile man) டாக்டர் 
அப்துல் கலாம் ஆகியோரை இத்தருணத்தில் 
நினைவு கூர்வோம்.

உலக சாதனை!
------------------------
பெப்ரவரி 2017ல் இஸ்ரோ ஓர் உலக சாதனையை 
நிகழ்த்தியது. ஒரே செலுத்து வாகனத்தின் மூலம் 
104 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது. 
இவை PSLV C-37 மூலம் செலுத்தப்பட்டன.
இந்த சாதனையை இன்று வரை யாரும் 
முறியடிக்கவில்லை.

முன்னதாக 2014ல் ரஷ்யா ஒரே முறையில் 
37 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி 
இருந்தது. ரஷ்ய சாதனையை எளிதில் முறியடித்தது 
இந்தியா. ஒரு காலத்தில் செயற்கைக்கோளைச்
செலுத்துவதற்கான ஏவுகணை இல்லாமல் ரஷ்ய 
உதவியை நாடிய இந்தியா இன்று ரஷ்ய சாதனையை 
முறியடித்திருக்கிறது. விண்வெளித் துறையில் 
இந்தியாவின் அசுர வளர்ச்சியை இது காட்டுகிறது.

அமெரிக்கக் குடியுரிமை பெற்ற எலான் மஸ்க் 
(Elon Musk)  ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) என்னும் தனியார் 
விண்வெளி நிறுவனத்தின் தலைவர். மின்சாரக் 
கார்களைத் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின்
தலைவரும் இவரே. அமெரிக்காவில் தனியாருக்கும் 
செயற்கைக் கோள்களைத் தயாரிக்கவும் விண்ணில் 
செலுத்தவும் அனுமதி உண்டு. இவரின் ஸ்பேஸ் எக்ஸ் 
நிறுவனம் மே 2019ல் ஒரே செலுத்து வாகனத்தின் 
மூலம் ஒரே முறையில் 60 செயற்கைக் கோள்களை 
விண்ணில் செலுத்தி உள்ளது. என்றாலும் இவராலும் 
இன்று வரை இஸ்ரோவின் சாதனையை முறியடிக்க 
இயலவில்லை.

வட்டப்பாதையில் சுற்றுதல்!
-------------------------------------------
சந்திரயான்-2ன் கோள்சுற்றியின் (orbiter) வாழ்நாள் 
ஓராண்டு ஆகும். இந்த ஓராண்டு காலமும் இது 
சந்திரனைச் சுற்றி வந்து முப்பரிமாண படங்களை 
எடுக்கும். இதில் 8 அறிவியல் கருவிகள் வைக்கப்பட்டு 
உள்ளன.இது சந்திரனை 100 x 100 கிமீ என்ற துருவச் 
சுற்றுப்பாதையில் (lunar polar orbit)  சுற்றி வரும். 

சந்திரனுக்கு அருகில் வரும்போது 100 கிமீ தூரமும் 
(periselene), சந்திரனை விட்டு அப்பால் செல்லும்போதும் 
100 கிமீ தூரமும் (aposelene) கொண்டது இந்தச்
சுற்றுப்பாதை. உண்மையில் இது மையப்பிறழ்ச்சி 
பூஜ்யம் கொண்ட (eccentricity = 0) வட்டச் சுற்றுப் 
பாதையே ஆகும்.

இந்த இடத்தில் சந்திரயான்-1 நவம்பர் 2008ல் இதே 
போன்ற துருவச் சுற்றுப்பாதையில் சந்திரனைச் 
சுற்ற ஆரம்பித்தபோது எப்படிச் சுற்றியது 
என்பதைப் பார்ப்போம்.

அப்போது 200 x 200 கிமீ அளவுள்ள சுற்றுப்பாதையில் 
அது சுற்றியது. தற்போது சந்திரயான்-2 சந்திரனை 
முன்பை விட 100 கிமீ நெருங்கி 100 x 100 கிமீ  
அளவுள்ள வட்டச் சுற்றுப்பாதையில் சுற்றப் 
போகிறது. எனவே இது எடுக்கும் படங்களும் 
மேற்கொள்ளும் ஆய்வுகளும் முன்பை விடத் 
துல்லியமாக இருக்கும்.  

மென்மையான தரையிறக்கம்!
------------------------------------------------
விக்ரம் சந்திரனின் தென் துருவத்தில் 
மென்மையாகத் தரையிறங்கப் போகிறது. இந்த 
மென்மைத் தரையிறக்கம் (soft landing) முக்கியத்துவம் 
வாய்ந்தது.இதுவரை மூன்று நாடுகள் மட்டுமே 
(ரஷ்யா, அமெரிக்கா, சீனா) இவ்வாறு வெற்றிகரமாக 
மென்மைத் தரையிறக்கம் செய்துள்ளன. 

செப்டம்பர் 7ஆம் தேதியன்று விக்ரம் சந்திரனில் 
மென்மையாகத் தரையிறங்கத் திட்டமிடப் 
பட்டுள்ளது. இறங்கியதும் அறிவியல் பரிசோதனை 
செய்வதற்காக விக்ரமில் நான்கு கருவிகள் 
வைக்கப் பட்டுள்ளன.

சந்திரயான்-1 சந்திரனைச் சுற்றி வருவதை மட்டுமே 
முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தது. அதில் 
இருந்த ஒரு கருவி (moon impact probe) சந்திரனின் மீது
வேகமாக மோதித் தரையிறங்கியது. இது மோதி 
இறங்குவதாகும் (crash landing). இது எளிது. ஆனால் 
மெதுவாகத் தரையிறங்குவது சிக்கலானது.
இது திகில் நிறைந்த 15 நிமிடங்களைக் கொண்டது  
என்கிறார் இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன்.

பூமியின் துருவப் பகுதிகள் போன்றே சந்திரனின் 
துருவப் பகுதிகளும் அதீத வெப்பநிலைக்கு 
ஆட்படாமல் இருப்பதால், பிற பகுதிகளை விட  
துருவப் பகுதிகளை ஆராய்வது சந்திரனைப் பற்றிய 
உண்மைகளை . வெளிக் கொணரும். சந்திரனின் 
வட துருவத்தை விட தென் துருவம் அதிகமாக 
நிழலில் மூழ்கி இருக்கும் பகுதி. இங்கு நிரந்தர 
நிழல் பிரதேசங்கள் நிறையவே உண்டு;  எனவே 
தென்துருவப் பகுதியில் தரையிறங்குகிறது விக்ரம்.

சந்திரனின் தென்துருவத்தில் விக்ரம் எங்கே 
தரையிறங்கும்? இதற்காக இரண்டு இடங்களை 
இஸ்ரோ தெரிவு செய்துள்ளது. இவை இரண்டும்
32 x 11 கிமீ அளவுள்ள நீள்வட்டங்கள் ஆகும். 
இவ்விரண்டில் எதில் தரையிறங்குவது என்று 
சந்திரனின் துருவச் சுற்றுப்பாதையில்
கோள்சுற்றியானது நிலைநிறுத்தப்பட்ட பின்னர் 
இஸ்ரோ முடிவு செய்யும்.

விக்ரமின் வாழ்நாள் ஒரு சந்திர நாள் (one lunar day) 
மட்டுமே. இது பூமியின் 14 நாட்களுக்குச் சமம். 
சந்திரனில் பகல் அதிக வெப்பமாகவும் இரவு 
அதிகக் குளிராகவும் இருக்கும். பகலில்
127 டிகிரி செல்சியஸ் வெப்பமும் இரவில் 
மைனஸ் 173 டிகிரி செல்சியஸ் குளிரும் இருக்கும் 
(சற்றுத் தோராயமாக).

 சந்திரனின் தரையில் பரிசோதனை!
---------------------------------------------------------
விக்ரம் தரையிறங்கிய பின், அதிலிருந்து பிரக்ஞான் 
நடைவண்டி (rover) வெளிக்கிளம்பும். சந்திரனின் 
தரையில் அரை கிமீ தூரம் வரை இந்த ஆறு சக்கர 
வண்டியால் நடந்து செல்ல இயலும்.

இதில் அறிவியல் பரிசோதனைக் கருவிகள் 
இரண்டு வைக்கப்பட்டு உள்ளன. விக்ரமும் 
பிரக்ஞானும் நிலவின் தரையிலேயே 
பரிசோதனைகளை மேற்கொள்ளும் (in situ experiments). 
தரையிறங்கிய இடத்திலேயே பரிசோதனைகளைச் 
செய்வது பூமியில் செய்யும் பரிசோதனைகளை 
விடத்  துல்லியமானது.

சந்திரயானின் கோள்சுற்றியும், விக்ரம் 
தரையிறங்கியும் பெங்களூருக்கு அருகில் உள்ள 
பைலாலு (Byalalu) என்ற ஊரில் உள்ள ஆழ்வெளி 
மையத்துடன் (IDSN = Indian Deep Space Network)
தொடர்பு கொள்ளும். அங்கிருந்து கட்டளைகளைப் 
பெறும். பிரக்ஞான் நடைவண்டியால் விக்ரமுடன் 
மட்டுமே தொடர்பு கொள்ள இயலும். இவ்வாறு 
விண்ணில் பறக்கும் சந்திரயானை
பூமியில் இருந்தே வழிநடத்துகிறோம்.

நிலவில் தண்ணீர்!
---------------------------
நவம்பர் 14, 2008ல் சந்திரயான்-1ல் இருந்த கருவியானது
(Moon Impact Probe) நிலவில் மோதி நிலவின் தரையின் 
கீழ்ப்பரப்பில் உள்ள மண்ணை (subsurface debris) 
அள்ளிக் கொண்டு வந்தது. இதைப் பகுத்தாய்ந்து, 
சந்திரயான்-1 நிலவில் தண்ணீர் இருப்பதைக் 
கண்டறிந்தது. எனினும் குளம் அல்லது ஏரியில் 
தண்ணீர் இருப்பது போல நிலவிலும் தண்ணீர் 
இருக்கிறது என்று இதற்குப் பொருள் கொள்ளக் 
கூடாது. நிலவில் தண்ணீர் திரவ நிலையில் இல்லை. 
ஆனால் உறைந்த நிலையில் இருப்பதை சந்திரயான்-1 
கண்டறிந்தது.

உறைந்த நிலையில் தண்ணீர் என்பதன் பொருள் 
நம் வீட்டில் உள்ள குளிர்பதனப் பெட்டியில் தண்ணீர் 
உறைந்து பனிக்கட்டியாக இருப்பது போன்றதல்ல. 
ரஷ்யாவில் உள்ள சைபீரியா பனிப்பாலைவனப் 
பகுதியில் நிலத்தடி உறைபனியாக (permafrost) 
தண்ணீர் உள்ளது. இது போலவே நிலவிலும் 
நிலத்தடி உறைபனியாக தண்ணீர் இருக்கக்கூடும்

அல்லது தண்ணீர் தனித்து இல்லாமல் ஏதேனும் 
கனிமங்களுடன் கலந்து உறைந்து அந்தக் 
கனிமமாகவே மாறிப்போன நிலையிலும்
இருக்கக்கூடும். உதாரணமாக ஆபடைட் (apatite) 
என்னும் பாஸ்பேட் குழுவைச் சேர்ந்த கனிமத்தில் 
ஹைடிராக்சில் அயனிகள் (hydroxyl ions) உள்ளன. 
இந்த வடிவிலும் தண்ணீர் இருக்கக் கூடும்.

47 நாள் நீண்ட பயணம்!
---------------------------------------
முதன் முதலில் சந்திரனில் மென்மையாகத் 
தரையிறங்கிய பெருமை அன்றைய சோவியத் 
ஒன்றியத்துக்கு (இன்றைய ரஷ்யா) உரியது. 
சோவியத்தின் லூனா 9 என்ற விண்கலன் 
31 ஜனவரி 1966ல் புறப்பட்டு, 3 பெப்ரவரி 1966ல் 
சந்திரனில் தரை இறங்கியது. இதற்கு வெறும் 
80 மணி நேரமே ஆனது.

இதற்கு நான்கு மாதம் கழித்து, அமெரிக்காவின் 
சர்வேயர் 1 என்ற விண்கலன் 1966 மே 30ல் புறப்பட்டு  
1966 ஜூன் 2ல் சந்திரனில் மென்மையாகத் தரை 
இறங்கியது. இதற்கு 63 மணி 30 நிமிடம் ஆனது.

சீனா 2013ல் முதன் முறையாக சந்திரனில் 
மென்மையாகத் தரை இறங்கியது. சாங்கே 3 
விண்கலன் இதற்கு 14 நாள் எடுத்துக் கொண்டது 
( 1 டிசம்பர் 2013 முதல் 14 டிசம்பர் 2013 வரை).

ஆனால் ஜூலை 22, 2019ல் புறப்பட்ட இந்தியாவின் 
சந்திரயான்-2  செப்டம்பர் 7ல் சந்திரனில் 
தரையிறங்கத் திட்டமிட்டு உள்ளது. இது
47 நாள் கொண்ட நீண்ட பயணம் ஆகும். 
மற்ற நாடுகள் 64 மணி நேரத்திலும் 80 மணி 
நேரத்திலும் சந்திரனில் தரை இறங்கும்போது 
இந்தியா ஏன் 47 நாட்கள் எடுத்துக் கொள்கிறது?

இதற்கு ஒரே காரணம் பணம்தான்! நம்பவே முடியாத 
அளவு குறைந்த செலவில் இந்தியா இத்திட்டத்தைச் 
செயல்படுத்துகிறது. அமெரிக்காவின்
செலுத்துவாகனமான Saturn V அளவில் பெரியது; 
110 மீட்டர் உயரமும் 3000 டன் நிறையும் கொண்டது. 
பெரும் பொருட் செலவில் உருவாக்கப் பட்டது. 

இந்தியாவின் GSLV Mark III 43.4 மீ உயரமும் 640 டன் 
நிறையும் கொண்டது. வல்லவனுக்குப் புல்லும் 
ஆயுதம் என்பது போல குறைந்த செலவில் 
நிறைந்த சாதனைகளைப் படைக்கிறது இந்தியா.
****************************************************















               

ஞாயிறு, 28 ஜூலை, 2019

நிலவில் தண்ணீர்!
---------------------------
நவம்பர் 14, 2008ல் சந்திரயான்-1ல் இருந்த கருவியானது (Moon Impact Probe)
நிலவில் மோதி நிலவின் தரையின் கீழ்ப்பரப்பில் உள்ள மண்ணை
(subsurface debris) அள்ளிக் கொண்டு வந்தது. இப் பகுத்தாய்ந்து, சந்திரயான்-1 நிலவில் தண்ணீர் இருப்பதைக் கண்டறிந்தது. எனினும் குளம் அல்லது ஏரியில் தண்ணீர் இருப்பது போல நிலவிலும் தண்ணீர் இருக்கிறது என்று இதற்குப் பொருள் கொள்ளக் கூடாது. நிலவில் தண்ணீர் திரவ நிலையில் இல்லை. ஆனால் உறைந்த நிலையில் இருப்பதை சந்திரயான்-1 கண்டறிந்தது.

உறைந்த நிலையில் தண்ணீர் என்பதன் பொருள் நம் வீட்டில்
உள்ள குளிர்பதனப் பெட்டியில் தண்ணீர் உறைந்து
பனிக்கட்டியாக இருப்பது போன்றதல்ல. ரஷ்யாவில் உள்ள சைபீரியா பனிப்பாலைவனப் பகுதியில் நிலத்தடி உறைபனியாக (permafrost) தண்ணீர் உள்ளது. இது போலவே நிலவிலும் நிலத்தடி உறைபனியாக
தண்ணீர் இருக்கக்கூடும் என்பதே சந்திரயான்-1ன் கண்டுபிடிப்பு.
அல்லது தண்ணீர் தனித்து இல்லாமல் ஏதேனும் கனிமங்களுடன் கலந்து
உறைந்து அந்தக் கனிமமாகவே மாறிப்போன நிலையிலும்
இருக்கக்கூடும். உதாரணமாக ஆபடைட் (apatite) என்னும் பாஸ்பேட்
குழுவைச் சேர்ந்த கனிமத்தில் ஹைடிராக்சில் அயனிகள்
(hydroxyl ions) உள்ளன. இந்த வடிவிலும் தண்ணீர் இருக்கக் கூடும்.

பூமியின் துருவப் பகுதிகள் போன்றே சந்திரனின் துருவப் பகுதிகளும்
அதீத வெப்பநிலைக்கு ஆட்படாமல் இருப்பதால், பிற பகுதிகளை விட  துருவப் பகுதிகளை ஆராய்வது சந்திரனைப் பற்றிய உண்மைகளை அறிய உதவும். சந்திரனின் வட துருவத்தை விட தென் துருவம் அதிகமாக நிழலில் மூழ்கி இருக்கும் பகுதி. இங்கு நிரந்தர நிழல் பிரதேசங்கள்
நிறையவே உண்டு. எனவே சந்திரயான்-2வில் உள்ள தரையிறங்கி (lander) சந்திரனின் தென்துருவப் பகுதியில் தரையிறங்க முடிவாகி
உள்ளது.

மருதுபாண்டியன்

பொருள் உற்பத்தியின் மொழியாக
தமிழ் ஆகுமா? 

இயலவில்லை என்பதைக் காண்கிறோம்.

ஆங்கிலம் பொருள் உற்பத்தியின் மொழியாக இருக்கிறது.


தமிழ் உற்பத்தி மொழியாக இல்லை என்பதன்
பொருள் என்ன?
------------------------------------------------------------------
தமிழ் உற்பத்தியில் இருந்த மொழிதான்!
இனக்குழுச் சமூக காலத்தில், பற்றாக்குறை உற்பத்தி
நிலவிய காலத்திலும், நிலவுடைமைச் சமூக
காலத்தில் உபரி உற்பத்தி இருந்த காலத்திலும்
தமிழ் பொருள் உற்பத்தியின் மொழியாக இருந்தது.

முதலாளிய, ஏகாதிபத்திய, பின் ஏகாதிபத்திய
காலத்தில் பண்ட  உற்பத்தியில் தமிழ் இல்லை.
ஆங்கிலம்தான் உள்ளது. வேளாண்மை உற்பத்தியில்
இருந்தும் கடைசியாக தமிழ் விரட்டி அடிக்கப்
பட்டு விட்டது. இதுதான் சமகாலத் தமிழின் நிலை.

இதை நான் ஒருவன் மட்டுமே எடுத்துச் சொல்லி
வருகிறேன்.

நோயுற்றதும் மருத்துவரிடம் செல்கிறோம்.
மருந்துச்சீட்டு எழுதித் தருகிறார் மருத்துவர்.
அது தமிழில் இருக்கிறதா? இல்லை. ஆங்கிலத்தில்
மட்டுமே இருக்கிறது. ஏன்? மருந்து உற்பத்தி
தமிழில் இல்லை. அது ஆங்கிலத்தில் மட்டுமே
உள்ளது. மருந்து உற்பத்திக்கான படிப்பு
B Pharm படிப்பு. இது ஆங்கிலத்தில் மட்டுமே
உள்ளது. மருத்துவப் படிப்பும் ஆங்கிலத்தில்
மட்டுமே உள்ளது.

உற்பத்தில் இடம் பெறாத எந்த மொழியும் ஆட்சி
மொழியாக இருக்க முடியாது. அப்படியானால்
தமிழை உற்பத்தி மொழியாக ஆக்குவது எப்படி?
அடுத்துக் காணலாம்.


1) நியூட்டனின் இயற்பியல் 2) ஐன்ஸ்டினின் சார்பியல்
(Relativity theory) 3) மாக்ஸ் பிளாங்கின் குவான்டம்
இயற்பியல் (quantum physics) ஆகியவற்றைத் தாண்டி
இன்று ஸ்டிரிங் தியரியில் வந்து நிற்கிறது நவீன
அறிவியல்.

ஸ்டிரிங் தியரி (string theory) குறித்து தமிழில் எத்தனை
கட்டுரைகள் உள்ளன? ஒரே ஒரு கட்டுரை மட்டுமே
உள்ளது. அது நியூட்டன் அறிவியல் மன்றம் எழுதியது.
இப்படி இருக்கும்போது தமிழில் அறிவியல் கல்வி
எப்படிச் சாத்தியம் ஆகும்?
    




  

சனி, 27 ஜூலை, 2019

பூமியைச் சுற்றும் சந்திரயான்!
நிலவை ஏன் இன்னும் சுற்றவில்லை?
-------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------
சந்திரயான் 2 தற்போது பூமியைச் சுற்றிக்
கொண்டிருக்கிறது. இது நிலவுக்குச் செல்ல இன்னும்
சிறிது காலமாகும்.

பூமியை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றிக்
கொண்டிருக்கிறது சந்திரயான். இப்படிச் சுற்றும்போது
பூமியில் இருந்து 45163 கிமீ தூரத்தில் அதன் சேய்மைப்புள்ளி
(apogee) இருந்தது. இது ஜூலை 26ல்.

நிலவுக்குச் செல்ல சுற்றுப்பாதையை அதிகரிக்க
வேண்டும். This exercise is called orbit raising manoeuvre.
அதன்படி, ஜூலை 26ல் சுற்றுப்பாதை அதிகரிக்கப்பட்டது.
தற்போது சேய்மைப்புள்ளி (apogee) 58429  கிமீ உள்ளது.
10000 கிமீ அதிகரிப்பு!

அடுத்து ஜூலை 29ல் மூன்றாம் முறையாக சுற்றுப்பாதையை
அதிகரிக்கப் போகிறோம். பாருங்கள்.
-----------------------------------------------------------------------------------

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள்
ஆர்யபட்டாவை 1975ல் விண்ணில் செலுத்தியது
ரஷ்யா! ஏவுகணையும் ரஷ்ய ஏவுகணையே! ரஷ்யாவே!
இன்று சந்திரயான்-2 முழுவதும் சுதேசியே!


மிஸ்டர் ஸ்டான்லி ராஜன்,
நூறாண்டுக்கும் மேல் நீர் வாழ்ந்து முடித்த பின்னர்
நீர் நம்புகிற சொர்க்கத்தில் உமக்கு நிச்சயம் இடம் உண்டு.

விண்வெளிக்கு  அனுப்பி ஏதேனும் ஒரு கோளில்
அணுக்கழிவைக் கொட்டலாம். அதுதான் சாத்தியம்.
ஒன்று சந்திரனில் கொட்டி விட்டு வர வேண்டும். அல்லது
செவ்வாயில் கொட்டி விட்டு வர வேண்டும். செவ்வாயில்
கொட்டி விட்டு வந்தால், சந்திரனை அடுத்தபடியாக
மனிதன் குடியேறப் பயன்படுத்த வேண்டும்.

சந்திரனில் கொட்டி விட்டு வந்தால், செவ்வாயை
நாம் குடியேறப் பயன்படுத்த வேண்டும்.

(விண்வெளியில் அந்தரத்தில் கொட்ட முடியாது.
அந்தரத்தில் கொட்டினால் அதன் கதிர்வீச்சு
பூமிக்கு வந்து கொண்டே இருக்கும்.)


இந்தியாவின் இரண்டாவது செயற்கைக்கோள்
பாஸ்கரா-1. இதை ரஷ்ய ஏவுகணை மூலம் ரஷ்யாவே
1979ல் விண்ணில் செலுத்தியது! அப்போது நம்மிடம்
ஏவுகணை இல்லை.

----------------------------------------------------------------------------

யுகத்தின் மீது சுவடு பதித்த டாக்டர் அப்துல் கலாம்!
-----------------------------------------------------------------------------
1957ல் ஸ்புட்னிக் என்ற செயற்கைக்கோளை
விண்ணில் செலுத்தியது சோவியத் ஒன்றியம்.
அப்போது சோவியத் அதிபராக குருச்சேவ்
இருந்தார். ஸ்புட்னிக் என்று விண்ணில் பறந்ததோ
அன்று முதல் உலகின் விண்வெளி யுகம் (space era)
தொடங்கியது.

இந்தியா தன் முதல் செயற்கைக்கோளான ஆர்யபட்டாவை
1975ல் ரஷ்ய உதவியுடன் ரஷ்ய ஏவுகணை மூலம்
விண்ணில் செலுத்தியது. இதன் மூலம் இந்தியாவிலும்
விண்வெளி யுகம் தொடங்கியது.

விக்ரம் சாராபாய், சதீஷ் தவான் ஆகியோர் இந்தியாவின்
விண்வெளி ஆராய்ச்சிக்கு வித்திட்டனர். இவர்களைத்
தொடர்ந்து டாக்டர் அப்துல் கலாம் இந்திய விண்வெளித்
துறையை சிகரத்தில் அமர்த்தினார்.

ஆர்யபட்டாவை விண்ணில் செலுத்த அடுத்த நாட்டின்
தயவை எதிர்பார்த்துக் கிடந்த இந்தியா இன்று
ஒரே ஏவுகணையின் மூலம் 104 செயற்கைக் கோள்களை
விண்ணில் செலுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

மங்கள்யானை முதல் முயற்சியில் விண்ணில் செலுத்தும்
அளவுக்கு வளர்ந்துள்ளது. சந்திரயான்-1, சந்திரயான்-2
ஆகிய திட்டங்களை மிகக் குறைந்த செலவில்
நிறைவேற்றி உள்ளது. இந்த வளர்ச்சிக்கெல்லாம்
வித்திட்டவர் ஏவுகணை நாயக்கர் டாக்டர் ஏ பி ஜே
அப்துல் கலாம் அவர்கள். இந்திய விண்வெளி யுகத்தின்
மீது சுவடு பதித்தவர் டாக்டர் அப்துல் கலாம்.

ஏவுகணை நாயகனின் நினைவு நாளில்
போற்றுதலுக்குரிய டாக்டர் அப்துல் கலாம் அவர்களின்
நினைவை நெஞ்சில் ஏந்தி வணங்கி நிற்கிறது
நியூட்டன் அறிவியல் மன்றம்.
******************************************
டாக்டர் கலாம் நினைவு நாள்: ஜூலை 27.
---------------------------------------------------------------
       
   






வெள்ளி, 26 ஜூலை, 2019

சார், பின்வரும் அச்சுப் பிழைகளைத் நிறுத்துமாறு
வேண்டுகிறேன்.

1) அச்சுப் பிழை: தலைப்பில் உள்ள தேதி 2018 என்று
உள்ளது. அதை 2019 என்று திருத்தவும்.

2) முதல் பத்தி, மூன்றாவது வரி:
கீழ்கண்ட என்று உள்ளது.
கீழ்க்கண்ட என்று திருத்தவும்.

3) இரண்டாவது கோரிக்கையில்
"மத்திய பட்ஜெட்டில் 10% மும்" என்று உள்ளது.
இதை 10 சதமும் என்று திருத்தவும்.

4) அதே இரண்டாவது கோரிக்கையில்,
"மாநில 30% மும்" என்று உள்ளது.
இதை " மாநில பட்ஜெட்டில் 30 சதமும்" என்று திருத்தவும்.

5) அதே இரண்டாவது கோரிக்கையில் அடைப்புக் குறிக்குள்
ஆங்கிலத்துக்குப் பதில் தமிழ் எழுத்துக்கள் வந்துள்ளன.
அதை (GDP) என்று திருத்தவும்.

6) அதே இரண்டாவது கோரிக்கையில்
GDPஐ அடுத்து, " குறைந்தது 3% மும்" என்று உள்ளது.
அதை "3 சதமும்"  என்று திருத்தவும்.

7) கடைசி வரியில்
"பேரணிகளாக அலைகடலென திரளுவோம்" என்று உள்ளது.
இதை "பேரணிகளில்" என்று திருத்தவும்.
பேரணிகளில் அலைகடலென திரளுவோம்!
---------------------------------------------------------------------------
With regards,
 P ILANGO SURAMANIAN.         

ஞாயிறு, 21 ஜூலை, 2019

முதலில் truth table என்றால் என்ன என்பதைப் புரிந்து
கொள்ள வேண்டும். ஒரு logic gateஐ எளிமையாக
விளக்குவது truth table.

அத்வைதம் பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதுவதை விட,
ஒரு truth table மூலம் அத்வைதத்தை விளக்குகிறது
இந்தக் கட்டுரை.

இந்த truth tableன் outputஐப் பாருங்கள்.நீங்கள் என்னதான்
input கொடுத்தாலும், output பூஜ்யம்தான் என்பதைக்
காண்பீர்கள். அதுதான் அத்வைதம்! அதாவது
அத்வைதம் என்பது பூஜ்யமே என்று சுட்டிக்
காட்டுகிறது இந்த truth table.

Logic gates பற்றியும்,  truth table பற்றியும் 12ஆம் வகுப்பு
இயற்பியலில் பாடம் இருக்கிறது. AND gate, OR gate
ஆகிய gatesன் truth tables பற்றி இயற்பியல் மாணவன்
நன்கறிவான்.

இந்தப் பதிவின் நயம் மற்றும் நகைச்சுவையை 
உணர வேண்டுமெனில், AND gateன் truth tableஉடனும்
OR gateன் truth tableஉடனும் இதை ஒப்பிட்டுப் பார்க்க
வேண்டும். அப்போதுதான் இப்பதிவின்
நகைச்சுவையையும் அத்வைதத்தின் வெறுமையையும்
ஒருங்கே உணர முடியும்.



               
பொருள்முதல்வாதம்
அனைத்து முடிவுகளுடனும் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், பின்வருவனவற்றை ஒருவர் கவனிப்பது லாபமுடையதாக இருக்கலாம் 1) தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் உலகாயதம் 2) தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் பண்டைய இந்தியாவில் பொருள்முதல்வாதத்தின் உள்ளாற்றல், 3) பிரதீப் கோகலேவின் உலகாயத/சார்வாகம், 4) டி.ஆர். சாஸ்திரியின் சார்வாகத் தத்துவத்தில் பொருள்முதல்வாதம், சிற்றின்பக் கொள்கை, இன்ப நாட்டக் கொள்கை (Materialism, Sensualism and Hedonism in Cārvāka Philosophy). எலி பிரான்கோவும் கரின் பீரிசன்டென்சும் ரூட்லெட்ஜ் தத்துவக் களஞ்சியத்திற்காகத் தொகுத்ததிலிருந்து ‘இந்திய பொருள்முதல்வாதப் பள்ளிகள்...’ மற்றும் ‘உலகாயதம்’ மற்றும் பிரில்லின் இந்துமத களஞ்சியம் ஆகியவை. இறுதியாக இதுவரை நூலாகத் தொகுக்கப்படாத கிருஷ்ணா டெல் டோசோவின் சமீபத்திய மூன்று கட்டுரைகள்:
a)‘ஸ்கலிதபிரமதானயுக்திஹதுசித்தி’யில் சார்வாக/உலகாயத செய்யுள்கள் (‘The Stanzas on the Cārvāka/Lokāyata in the Skhalitapramathanayuktihetusiddhi’, Journal of Indian Philosophy 38 (2010): 543-552).
b) அறிதல் என்பது சுயத்தின் பகுதியா அல்லது உடலினுடையதா? நியாய மற்றும் வைசேசிகத்தின் நிலைப்பாடுகளுக்கு எதிரான உத்பாதபட்டரின் சில தருக்கச் சிந்திப்புகள் (Is Cognition an Attribute of the Self or It Rather Belongs to the Body? Some Dialectical Considerations on Udbhatabhatta’s Position against Nyāya and Vaiśesika), http://www.scirp.org/Journal/PaperInformation.aspx?PaperID=8726] Open Journal of Philosophy 1.2 (2011a): 48-56.
c) ‘ஓநாய்களின் காலடித்தடங்கள்: இந்தியப் பொருள்முதல்வாத கண்ணோட்டம்: ராமகிருஷ்ண பட்டாச்சார்யாவுடன் மேற்கோள்களுடன் உரையாடல்’ (The Wolf’s Footprints: Indian Materialism in Perspective: An Annotated Conversation with Ramkrishna Bhattacharya), Annali Istituto Orientale Napoli 71 (2011b): 183-204.
ஜோகன்னஸ் ப்ரோன்கோஸ்டின் ‘யார் சார்வாகர்கள்?’ Rev. Guillermode Ockham, 14(1), June 2016.
இந்திய தத்துவச் சிந்தனைகளில் ஆய்வு செய்துவரும் தத்துவவாதிகளிடம் நேர்காணல்கள் செய்வது என்கிற வரிசையில் 3:am என்ற இதழ் ராமகிருஷ்ண பட்டாச்சார்யாவை (பாவ்லோவ் நிறுவனம், கொல்கத்தா, மேற்கு வங்காளம்) கடந்த ஆகஸ்ட் 2018ல் நேர்காணல் செய்துள்ளது.
ராமகிருஷ்ண பட்டாச்சார்யா 28 புத்தகங்கள் மற்றும் 175க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் ஆசிரியர். அவர் (இந்திய மற்றும் ஐரோப்பிய) இலக்கியம், (வங்காள மற்றும் சமஸ்கிருத) பனுவல் விமர்சனம், கருத்துகளின் வரலாறு, இந்திய அறிவியல் வரலாறு, நவீன இந்திய வரலாறு, தத்துவம் (குறிப்பாக சார்வாக/உலகாயத தரிசனம், பொருள்முதல்வாதம் மற்றும் பகுத்தறிவு) ஆகியவை பற்றி ஆய்வு இதழ்களிலும், பிற இதழ்களிலும் கட்டுரைகளும் மதிப்புரைகளும் எழுதியுள்ளார்.
இங்கே இந்தியாவில் பொருள்முதல்வாதம் எப்போது தொடங்கியது, சார்வாகத்திற்கு முந்தைய இந்தியப் பொருள்முதல்வாதிகளின் கருத்துகள், ஜபாலி, இந்தியாவில் தர்க்கத்தின் வளர்ச்சி, மாயாவாதம், அஜிதகேசகம்பளி, பிரஹஸ்பதி, சார்வாக சூத்திரத்திற்கும் பௌத்தர்களுக்குமான உறவு, உண்மையில் மக்களை எதை ஏற்றுக் கொள்ள சார்வாகர்கள் சொன்னார்கள், சுபாவத்திற்கும் சீன தாவோ கொள்கைக்கும் இடையிலான தொடர்பு, இக்காலத்தில் சார்வாக/உலகாயத பாரம்பரியம் தேய்ந்தழியவும் பௌத்தம் பிரபலமடையவும் காரணம் என்ன முதலானவை குறித்து விவாதிக்கிறார்.
3:am: எது உங்களைத் தத்துவவாதியாக உருவாக்கியது?
நான் என்னை தத்துவவாதி என அழைப்பதை விரும்பவில்லை. நான், குறிப்பாக இந்தியாவிலும் கிரேக்கத்திலும் உருவான பொருள்முதல்வாத தத்துவத்தின், வாழ்நாள் முழுதுமான தத்துவ மாணவனே. இதுவரை கிடைத்திருக்கக்கூடிய பெரும்பாலான சார்வாகம், உலகாயதம் பற்றிய பரபக்க மூலாதாரங்களைப் படித்தும் கூட, அவை எனக்கு திருப்தி தரவில்லை.
1980களில் நான் நேரடி மூலாதாரங்களைத் தேடத் தொடங்கினேன், தெளிவான புரிதலை வந்தடைய மேலும் அதிகமான வேலை செய்ய வேண்டியுள்ளது என்பதைப் புரிந்து கொண்டேன். நான் முதலில் சார்வாகம்/உலகாயதம் பற்றி என் தாய்மொழியான வங்காளத்தில் கட்டுரைகள் எழுதி வெளியிட்டேன், பிறகு என்னுடைய சில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்பர்களின் ஊக்கத்தால், சர்வதேச இதழ்களில் கட்டுரைகளை வெளியிட்டேன்.
இப்படியாக நான் இயற்கையான ஆர்வத்தினாலோ அல்லது பயிற்சியினாலோ தத்துவவாதியாகாமலே, நான் இந்திய பொருள்முதல்வாதத்தில் முக்கியமானவனாக மாறினேன். மேலும் என்னுடைய உலகப்பார்வையான, மார்க்சிய-லெனினியமும், பொருள்முதல்வாத தத்துவ ஆய்வுகளின் பக்கம் என்னுடைய கவனத்தைத் திருப்பியது. இதுவே இப்பொழுதிற்கு நான் சொல்லக்கூடியது. உங்களைப் போன்ற சிலர் மிகுந்த தாராள மனதோடு என்னைத் தத்துவவாதி என்று அழைப்பீர்களேயானால், அப்படிச் செய்வது உங்களுடைய தயாளகுணம். 
நீங்கள் இந்தியத் தத்துவ மரபில் உள்ள பொருள்முதல்வாதம் குறித்து புலமை மிக்கவர். இந்தியாவில் பொருள்முதல்வாத மரபு எப்பொழுது தொடங்கியது? சிலர் குறிப்பிடுவதுபோல அது மன்னர்களால் உருவாக்கப்பட்டதா?
என்னுடைய Studies on the Carvaka/Lokayata (Florence 2009, London and New Delhi 2011) நூலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதைப் போல பொருள் முதல்வாதத்தின் (தொல் பொருள்முதல்வாதம் (proto-materialism) எனக் குறிப்பிடுவதே சரியானது) தோற்றம் என்பது அரசரீதியானது என்பதை விட வெகுசனரீதியானதே. தீக நிகாயத்தில் பயாசி இளவரசராகவோ ஆளுநராகவோ குறிப்பிடப்படுகிறார். அஜிதகேசகம்பளி கடும் துறவறத்தை மேற்கொண்டவர். அறுபத்தியிரண்டு வேத மறுப்பு கொள்கைகளின் முக்கியமான ஆறு கொள்கையாளர்கள் அரசவம்சத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதைப் பௌத்த மூலங்கள் தெளிவுபடுத்துகின்றன.
அவர்கள் இடம் விட்டு இடம் பெயர்ந்து தங்கள் சீடர்கள் பின்தொடர பயணித்துக் கொண்டே இருந்தவர்கள். தீக நிகாயத்தில் வரும் “சாமஞ்ஞபல சுத்தம்” (சிரமணநெறியின் பயன் குறித்த பொழிவு) தொல் பொருள்முதல்வாதத்தின் வெகுசன தோற்றுவாய் குறித்து குறிப்பிடுகிறது. முந்தைய அறிஞர்கள் இந்த அம்சங்களையெல்லாம் கணக்கிலெடுக்காமல் பயாசியை மட்டுமே குறிப்பிடுகிறார்கள். மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கை / மறுபிறப்பு மறுதலிப்பில் பயாசிக்கும் அஜிதகேசகம்பளிக்கும் இடையே ஒப்புமைகள் உள்ளன எனக் குறிப்பிடலாம், ஆனால் பயாசி தொட்டுக்கூட பார்க்காத பல அம்சங்களை அஜிதரின் கூற்று மிக விரிவாகப் பேசுகிறது.
இந்தியாவில் சார்வாகத்திற்கு முன் பொருள்முதல்வாதிகள் என எவரேனும் இருந்துள்ளனரா ?
இதற்குப் பதில் ஆம் என்பதே. இது குறித்து என்னுடைய கட்டுரையான ‘இந்தியாவில் பொருள்முதல்வாதத்தின் வளர்ச்சி: சார்வாகர்களுக்கு முன்பும் சார்வாகர்களும்’ (‘Development of Materialism in India: the Pre-Cārvākas and the Cārvākas’, Esercizi Filosofici 8, 2013, pp. 1-12. (2013) இது குறித்துதான் ஆராய்கிறது. தென் இந்தியாவில் பொது யுகத்தின் தொடக்கத்தில், குறைந்தது பூதவாதம், உலகாயதம் ஆகிய இரண்டு பொருள்முதல்வாதப் பள்ளிகள் இருந்துள்ளன என்பதை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்களைக் குறிப்பிட்டுள்ளேன். சமீபத்தில் நான் பழைய தமிழ் காப்பியமான நீலகேசி குறித்து அறிந்தேன், அது பூதவாதத்தை மட்டுமே தனியாகப் பேசுகிறது. இப்படியாகத் தென் இந்தியாவில் சார்வாகர்கள் வருவதற்கு முன்பே பௌத்தர்களும் ஜைனர்களும் (கி.பி. எட்டாம் நூற்றாண்டு அல்லது அதை ஒட்டி) பொருள்முதல்வாதத்தைத் தங்களின் கூட்டாளிகளாக அல்லாமல் எதிரிகளாகக் கருதி வந்திருக்கிறார்கள்.
நீங்கள் ஜபாலியை தொல் பொருள்முதல்வாதி எனவும், அவர் புத்தரைவிட வயதில் மூத்த, ஆனால் புத்தருடைய சமகாலத்தவரான அஜிதகேசகம்பளியைப் பின்பற்றியவர் எனவும் அழைக்கிறீர்கள். ஏன் அவர்கள் மறுஉலகம் உண்டு என்பதை மறுத்தார்கள், இறந்த மூதாதையருக்கு செய்யப்படும் சடங்குகள் பயனற்றவை என ஏன் எதிர்த்தார்கள்? அவர்கள் வேண்டுமென்றேதான் மரபான பழக்கங்களை எதிர்த்தார்களா? அப்படியானால் அவர்களுடைய நோக்கம்தான் என்ன?
சொர்க்கம், நரகம் என்பவற்றை கண்ணால் கண்ட சாட்சிகள் இல்லை என்பதால் தொல் பொருள்முதல்வாதிகளான ஜபாலி முதலானவர்கள் மறுஉலகத்தை மறுத்தனர். இந்த தொல் பொருள்முதல்வாதிகள் அறிதலுக்கான ஒரே கருவியாக, கண்ணால் காண்பதை மட்டுமே நம்புபவர்கள், அதில் அவர்கள் உறுதியாக ஊன்றி நின்றார்கள், அதனால்தான் அவர்கள் மறு உலகத்தையும், இறந்த மூதாதையர்களுக்கு செய்யும் சடங்குகளின் பயனையும் மறுத்தார்கள். தம் இருப்பை மட்டுமே ஏற்றுக்கொண்ட அவர்களிடம், நிலைபேறு சார்ந்த, அறம் சார்ந்த கூற்றுகளை மறுத்தொதுக்குவதற்கு ஒழுங்கமைவான அறிவுத் தோற்றக் கொள்ளை இல்லை. ஆகவே அவர்கள் முறையான [தத்துவார்த்த] பொருள்முதல்வாதிகள் அல்ல, தொல் பொருள்முதல்வாதிகள். ஆயினும் பண்பட்ட எதார்த்தவாதிகளான அவர்கள் பார்ப்பனியம் ஊட்டி வளர்த்த மரபான நம்பிக்கைகளுடன் முரண்பட்டார்கள். இந்த அர்த்தமற்ற சடங்குகளைக் கடைபிடிக்கச் சொன்ன தர்மசாத்திரக்காரர்களும், அச்சடங்குகளைத் திணித்த மதகுருமார்களும் அவர்களின் முக்கிய இலக்கானதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
தர்க்க வளர்ச்சியில் முக்கியமானதாக விளங்குகிற, புத்தர் காலத்தைச் சேர்ந்த முந்தைய தொல்பொருள்வாதியான அரசர்/ஆளுநர் பயாசியின் வாதம் குறித்து எழுதியுள்ளீர்கள். இது எவ்வாறு தர்க்கத்தின் வளர்ச்சிக்கு உதவியது? அவ்வாதம் தொல் பொருள்முதல்வாதியுடையது என்றால், எவ்வாறு மறு உலகத்தின் இருப்பை அவ்வாதம் உறுதிசெய்கிறது?
இல்லை. இந்தியாவில் தர்க்கத்தின் வளர்ச்சிக்கு நேரடியாகப் பயாசி பங்களிப்பு செய்தவரில்லை. அழியாத ஆத்மா முதலானவற்றின் இருப்பு குறித்த அவருடைய மறுப்புக்கு ஆதாரம் உபமானம் அல்லது அனுமானம் என்பதைத் தவிர வேறு எதையும் குறிப்பிட முடியாது. அரசர்/ஆளுநர் பயாசி பற்றிய சுத்தம், நோக்கி அவர் அறிதலின் இரண்டாவது உபகரணமான அனுமானத்தை முன்னேறியிருந்தார் எனத் தெரிவிக்கிறது. இவ்வாறு தர்க்கத்தின் வளர்ச்சிக்கு தொல் பொருள்முதல்வாதிகள் மறைமுகமாக காரணமாவார்கள். கட உபநிடதத்தில் வரும் எமனும், மறு உலகத்தின் இருப்பிற்கு சப்த பிரமானத்தைத் தவிர வேறு எந்த ஆதாரத்தையும் தரவில்லை. (பாதாள உலகத்தின் ஆட்சியாளனாக அவன்தான் நரகத்தைப் பற்றி பேச அதிகப் பொருத்தமானவன்) அவனே ஆப்தன், அறிவுடையவன் ஆகிறான். இவ்வாறே உபமானம் அல்லது அனுமானம், சப்த பிரமாணம் ஆகிய அறிதலுக்கான இரு உபகரணங்கள் பொருள்முதல்வாதத்தை மறுப்பதற்காகவே முன்வைக்கவும் பயன்படுத்தவும் படுகின்றன.
பயாசியோ அல்லது எந்தவொரு தொல் பொருள்முதல்வாதிகளோ மறு உலகத்தின் இருப்பை எப்போதும் ஆதரிக்கவில்லை; மாறாக அதனை மிகக் கடுமையாக மறுத்திருக்கிறார்கள். பொருள்முதல்வாதிகளாக இல்லாதவர்களே மறு உலகத்தின் இருப்பைக் காட்ட உபமானம், சப்த பிரமாணம் ஆகியவற்றைப் பயன்படுத்தினார்கள்.
பொருள்முதல்வாதத்திற்கும் சூனியவாதத்திற்கும் ஏதேனும் தொடர்புண்டா, இருமைவாத அமைப்பில்தான் எண்ணத்தை மதிப்பில்லாமலாக்கும் ஒரே சாத்தியம் உள்ளது, ஆகவே இது அன்றைக்கு இருந்த இருமைவாத அமைப்பு மீதான தாக்குதலா?
இந்தியப் பொருள்முதல்வாதத்திற்கு சூனியவாதம் முதலானவற்றுடன் எந்த உறவும் கிடையாது. அவர்கள் முழுமையான எதார்த்தவாதிகள். மாறாக, சூனியவாதம் உணர்வற்ற இறந்த உடல் இருக்க முடிவதைப் போல, உடலற்ற ஆத்மா இருக்க முடியும் என நம்பியது. பொருள்முதல்வாதம் உணர்வையும் பொருளையும் தனித்தனி வகைமைகளாக, ஒன்றில்லாமல் ஒன்று இருக்க முடியும் என்று பேசிய இருமைவாத அமைப்பின் மீது தாக்குதல் தொடுக்கவே செய்தது.
அஜிதகேசகம்பளி யார்? மேலும் ஒரு கேள்வி: அவர் சூனியவாதியா அல்லது பொருள்முதல்வாதியா?
நீங்கள் அறிந்திருப்பதைப் போல, அஜிதகேசகம்பளி புத்தரைவிட வயதில் மூத்தவரும் அவருடைய சமகாலத்தவரும் ஆவார். அவர், தீக நிகாயத்தில் வரும் அறுபத்தியிரண்டு வேத மறுப்புக் கொள்கைகளில் குறிப்பிடப்படும் முக்கியமான கொள்கையாளர்களில் ஒருவர். அவர் எல்லா காலங்களிலும் கம்பளி ஆடையையே உடுத்தினார். இது அவர் ஒரு கடுமையான துறவு விரதங்களையும், சுய விலக்கத்தையும் மேற்கொள்பவர் என்பதைக் குறிக்கிறது. இப்படியிருந்தும், ஜைன மூலங்களில் இவரும் இவருடைய சீடர்களும் சுகபோகிகள் என்று சாடப்படுகிறார்கள்.
பிரஹஸ்பதி யார்? இவர்  இந்தியப் பொருள்முதல்வாதத்தை தோற்றுவித்தவரா? அவரிடமிருந்துதான் சார்வாகத் தத்துவம் தோற்றம் பெற்றதா? அவரது சிந்தனையின் தாக்குதல் இலக்குகள் பௌத்தமும் ஜைனமுமா?
நான் பிரஹஸ்பதியும் பிரஹஸ்பதியர்களும் (Brahaspati and the Brahaspatyas, Annali di Ca’ Foscari. Serie orientale, Vol.54 - Giugno (June) 2018, pp.147-176) என்ற பெரிய கட்டுரையில் இது குறித்து குறிப்பிட்டுள்ளேன். பிரஹஸ்பதி ஒரு புராண பாத்திரம், உண்மையில் அதற்கும் பொருள்முதல்வாதம் அல்லது பிற எந்தத் தத்துவ அமைப்பிற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை.
சில புராணங்களில் அவர் தேவர்களின் குருவாக, அந்தத் தகுதியுடன், வேத வழியிலிருந்து அசுரர்களைத் திசைதிருப்பித் தவறாக வழிநடத்தும் பொறுப்புடையவராகக் குறிப்பிடப்படுகிறார். ஆனால் இது எல்லா புராணங்களுக்கும் பொதுவானது அல்ல. சில புராணங்களில், பிரஹஸ்பதிக்குப் பதிலாக மாயமோகா வேதவழியிலிருந்து விலக்கும் பணியைச் செய்கிறார். எது எப்படியாயினும், பிரஹஸ்பதி பல இடங்களில் சுரகுரு (தேவர்களின் குரு) என்றும், அரைகுறை தெய்வ அம்சம் ஏதுமில்லாத லோகாயத ஆசிரியர் என்றும் குறிப்பிடப்படுகின்றார்.
பழைய தமிழ் காப்பியமான மணிமேகலையில் சமயவாத ஆசிரியர்களான கானாதர், கபிலர், ஜைமினி முதலானவர்களில் ஒருவராக, தெளிவாக ஒரு சாதாரண மனிதனாக பிரஹஸ்பதி குறிப்பிடப்படுகிறார். இதே உண்மை பத்மபுராணம் உத்தரகாண்டத்திலும் குறிப்பிடப்படுகிறது. கிருஷ்ணமிஷ்ரரின் “பிரபோத சந்திரோதயம்”உருவக நாடகத்தில் அவர் தேவர்களின் குரு என்பதற்குப் பதிலாக மாயமோகத்தை வணங்குபவராகக் குறிப்பிடப்படுகிறார்.
பிரஹஸ்பதி பொருள்முதல்வாத அமைப்பைத் தோற்றுவித்தவராகக் குறிப்பிடப்பட்டாலும், அதற்கு எந்த அடிப்படையும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தப் பிரஹஸ்பதி தேவர்களின் குருவல்ல, ஒரு சாதாரண மனிதன். புராண மரபில் (குறிப்பாக விஷ்ணுபுராணம், 3.18ல்) பிரஹஸ்பதி, வேதவழியிலிருந்து விலக்கப் பௌத்தத்தையும் சமணத்தையும் போதிக்கிறாரே தவிர, உலகாயத்தைப் போதிக்கவில்லை. ஆனால் H.H. Wilson, Muir தொடங்கி பெரும்பாலானவர்கள் அந்தப் பகுதியை உலாகயதத்தைப் போதித்தார் எனவே எடுத்தாளுகின்றனர். நான் இந்த மோசமான தவறு குறித்து என்னுடைய “சர்வ தரிசன சங்கிரகத்தில் பிரஹஸ்பதி சூத்திரங்கள் அத்தியாயம் 1: ஒரு விமர்சன மதிப்பீடு (Verses Attributed to Bhaspati in the Sarvadarśanasagraha Chap. I: A Critical Appraisal’, Journal of Indian Philosophy, 41:6, December 2013, pp.615-30) என்ற கட்டுரையில் முன்பே குறிப்பிட்டுள்ளேன்.
சார்வாகப் போதனை எப்படிப்பட்டது ? அது மறு உலகம் உள்ளிட்ட எல்லா வகை மீ-இயற்கைச் சிந்தனைகளையும் மறுக்கும் முழுமையான பொருள்முதல்வாதத் தத்துவமா? அல்லது அது உலகாயதத் தத்துவ மரபு போன்றதா?
ஆமாம். சார்வாகப் போதனைகள் முழுமையான பொருள்முதல்வாதத் தத்துவம். இது எட்டாம் நூற்றாண்டு வாக்கில் எந்தவிதமான வெளித் தாக்கங்களும் இன்றி சுதந்திரமாக, இந்தியாவில் தோன்றிய தத்துவம் ஆகும். வாத்சாயனரின் காமசூத்திரத்திலும் பாணபட்டரின் காதம்பரியிலும் குறிப்பிடப்படும் உலகாயதம், இந்தியாவின் வடக்கிலும் தெற்கிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலவிய தொல் பொருள்முதல்வாதத் தரிசனம் ஆகும். ஆனால் எட்டாம் நூற்றாண்டிற்குக் கொஞ்சகாலம் முன்பாக நாத்திகம், பிரஹஸ்பதியம் ஆகியவற்றுடன் சேர்த்து சார்வாகமும், உலகாயதமும் ஒரே பொருள் குறித்த பெயர்களாகவே அறியப்பட்டன. இது சாந்தரசிக்தரின் தொகுப்பான தத்துவ சங்கிரகத்திற்கு எழுதப்பட்ட கமலசிலாவின் உரை மூலமும் உறுதிப்படுகிறது. ஜைன அறிஞரான ஹேமச்சந்திரரின் சமஸ்கிருத நிகண்டிலும் இந்த நான்கு பெயர்களும் குறிப்பிடப்படுகின்றன.
பௌத்த தரிசனத்திற்கு சார்வாகசூத்திரம் எவ்வளவு நெருக்கமானது? குறிப்பாக பிரத்யக்ஷம், அனுமானம் ஆகியவற்றில் எந்த அளவிற்கு நெருக்கமானது? அவர்களது வாதம் பற்றிய வரைந்துகாட்டும்போது, ஆர்ப்பாட்டமில்லாமல் ஒத்த புள்ளிகள், மாறுபடும் புள்ளிகள் என எவற்றைக் காணமுடிகிறது?
சார்வாகர்களும் (பழைய பொருள்முதல்வாதிகள் அல்ல), பௌத்தர்களும் அறிதலின் இரண்டு அம்சங்களான பிரத்யக்ஷம், அனுமானம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்கிறார்கள் (அனுமானம் பற்றிய நேர்வில், [சார்வாகர்கள்] பிரத்யக்ஷத்திற்கு உட்பட்ட அல்லது பிரத்யக்ஷத்தில் ஊன்றிய அனுமானத்தை மட்டுமே ஏற்றுக்கொள்கிறார்கள்). சார்வாகர்களுக்கு முந்திய பழைய பொருள்முதல்வாதிகள் இரண்டு விசயங்களில் வேறுபடுகிறார்கள்.  அவர்கள் பிரத்யக்ஷத்தை மட்டுமே அறிதலுக்கான ஒரே கருவியாக ஏற்றுக்கொள்கிறார்கள். பிரத்யக்ஷத்தை அடிப்படையாகக் கொண்ட அனுமானத்தைக்கூட ஏற்றுக்கொள்வதில்லை. இரண்டாவதாக, சார்வாகர்களுக்கு முந்தையவர்கள் அனைவரையும் போல நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் ஐம்பூதங்களைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால் மறுபுறத்தில், புலனுணர்வால் அறியமுடியாது என்பதால் ஆகாயத்தை விலக்கி, சார்வாகர்கள் நான்கு பூதங்கள் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். எவ்வாறாயினும் பௌத்தர்கள் ஐம்பூதக் கொள்கையுடையவர்கள்.
இதில்தான் பௌத்தர்களுக்கும் சார்வாகர்களுக்குமான முக்கிய வித்தியாசம் உள்ளது. இருப்பினும் அறிதல்முறைகள் தொடர்பாக பௌத்தத்திற்கும் சார்வாகத்திற்கும் இடையிலான பார்வைகள் தொடர்பாக ஒப்புமைகளை அதிகம் வலியுறுத்தமுடியாது. குறைந்தபட்சம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து, இவை இரண்டிற்கும் இடையில் எந்த நட்பும் இல்லை. இரண்டிற்கும் ஒத்துக் கொள்ளாது. சாந்தரக்ஷிதரின் தத்துவசங்கிரகம் யோகசார பௌத்தமும் சார்வாகமும் ஒன்றை ஒன்று எதிர்த்து வெளிப்படுத்தும் மறுப்புகளை பதிவு செய்துள்ளது. பௌத்தர்களைப் போலவேதான் சமணமும். வேதத்தின் பிழைபடா இயல்பு குறித்த பிரச்சனை தொடர்பான விசயங்களில் சார்வாகர்களும் பௌத்தர்களும் ஒன்றுபடலாம்.
சார்வாக சூத்திரத்தின் சில பகுதிகளே எஞ்சியுள்ளன, அவற்றிற்கும்கூட உரைகளையே நம்பி இருக்க வேண்டியுள்ளது. உத்பாதரின் உரை முதலான உரைகள், பொருள்முதல்வாத ஒருமைவாதமாக அல்லாமல் இருமைவாதமாக சார்வாகசூத்திரத்தைப் பொருள் கொள்கின்றன. இந்த மெய்மையை எவ்வாறு எடுத்துக்கொள்வது? உரைகள் அளிக்கும் குளறுபடியான விளக்கங்களைத் தாண்டி, சார்வாகசூத்திரம் உண்மையில் என்ன அர்த்தப்படுகிறது எனப் புரிந்துகொள்வது சாத்தியமா?
நமக்கு இதுவரை கிடைத்துள்ள உரைகளிலேயே உத்பாதபட்டர் மட்டுமே இத்தகைய ‘திருத்தல்வாத’ நிலைப்பாட்டை எடுத்துள்ளார். புரந்தரரால் ஒழுங்கமைத்துக் கொடுக்கப்பட்டதாக நம்பப்படும் சார்வாக சூத்திரத்தை அடியற்றி பெரும்பாலான உரைகளும் அதை உறுதியான ஒருமைவாதமாகவே குறிப்பிடுகின்றன. ஆகவே, குறிப்பாகப் பருப்பொருள், உணர்வு குறித்த விசயத்தில் மட்டுமாவது, நாம் இந்தச் சூத்திரங்களுக்கு விநோதமான மறுவிளக்கம் தரும் உத்பாதரைக் கவனமாக தவிர்த்துவிடலாம். ‘நிலம், நீர், நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகியவையே அடிப்படை, மற்றவை எதுவும் இல்லை’ (மி.2) என்ற சூத்திரத்திற்கு எதிராக உத்பாதர் இருமைவாதத்தை நோக்கி முன்னேறுகிறார். இந்த சூத்திரத்திலேயே உள்ள பல வார்த்தைகளுக்கு அடிக்கடி தவறான விளக்கங்களைத் தருகிறார் என்கிற உண்மையின் அடிப்படையில், உத்பாதரின் விநோதமான கருத்து நம்மை திசைதிருப்ப அனுமதிக்கக் கூடாது. நான் என்னுடைய கட்டுரைகளில் இவை குறித்து விவாதித்துள்ளேன். ‘சார்வாக சூத்திரத்தின் உரையாசிரியர்கள்: ஒரு விமர்சன ஆய்வு’ (Commentators on the Cārvākasūtra: A Critical Survey, Journal of Indian Philosophy (August 2010a), 38: 4).
‘உண்மையில் சார்வாகர்கள் எதைக் குறிப்பிட்டார்கள்: சார்வாக சூத்திர உரையாசிரியர்கள் குறித்து மேலும் அதிகமாக, (What the Carvakas Originally Meant: More on the Commentators of the Cārvākasūtra, Journal of Indian Philosophy (December 2010b), 38:6, ‘‘உலகாயதப் பொருள்முதல்வாதம்: மூலங்களின் பகுப்பு’ (Lokāyata Materialism: Classification of Source Material) சுபுதிசரன் கோஸ்வாமி தொகுத்த நூலான LokāyataPhilosophy: A Fresh Appraisal. Kolkata: The Asiatic Society, 2010. வந்துள்ள கட்டுரை. சார்வாகம்/உலகாயதம் உண்மையில் ஒருமைவாதமே, இருமைவாதம் அல்ல.
பழமைவாதிகளிடமிருந்து வேறுபட்ட வாழ்க்கையை வாழுமாறு மக்களை, சார்வாக/உலகாயத மரபு கூறினவா? உதாரணத்திற்கு சுயஇருப்பை தற்செயலுடன் தொடர்புபடுத்தினால், வாழ்க்கை செயலற்ற ஒன்றாகிவிடும், மற்றவர்கள் கூறுகிறபடி, மாறாக இருப்பைக் காரணகாரியத்துடன் தொடர்புபடுத்தினால் வாழ்க்கை மிகுந்த செயல்பூர்வமானதாகிவிடும். இதன்மூலம், பழமைவாதத் தத்துவ தரிசனங்களால் போதிக்கப்படுகிற ஆத்மா, வாழ்வு, வினை ஆகியவை தொடர்பான பார்வையில் மாபெரும் வேறுபாடு இருந்ததா? காரணகாரியம் அறிவியலுடன் தொடர்புடையதா அல்லது காரணகாரியம் மற்றும் தற்செயல் இரண்டுமே உண்மையில் அறிவியலுடன் தொடர்புடையதா?
நிஜத்தில் சார்வாகர்கள் மக்கள் எதனை ஏற்றுக்கொள்ள சொன்னார்கள் என்பதை அறிந்து கொள்ள வழியில்லை. உண்மையில் அவர்கள் தங்கள் சொந்த சமூகங்களில் ஒதுங்கியிருந்தார்கள். தங்கள் பார்வைகளை மக்களிடமிருந்து மறைத்துக் கொண்டு வாழ்ந்தார்கள். அவர்களுடைய அனைத்து எழுத்துக்களும் அவர்களுடைய எதிரிகள் அழித்தார்களோ இல்லையோ, பனிரண்டாம் நூற்றாண்டோடு அழிந்துவிட்டன, உத்பாதபட்டருக்கு (கிபி ஒன்பதாம் நூற்றாண்டு) பிறகு எந்த சார்வாகரின் பெயரும் நமக்கு அறிய கிடைக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு எதிரான அரசியல் எழுத்துக்களிலிருந்து, அவர்கள் எதார்த்த உலகில் இல்லையென்றாலும், அவர்கள் எத்தனை வலிமையான எதிரிகளாக இருந்தார்கள் என்பதை ஒருவர் யூகித்து அறியலாம். கிருஷ்ணமிஷ்ரரின் “பிரபோத சந்திரோதயம்” நாடகத்திலிருந்தும், ஸ்ரீஹர்சாவின் நளன் வாழ்வு (நைடதசரிதம்)-லிருந்தும் சார்வாகர்கள் சாதி அமைப்பிலும், ஏற்றுக் கொள்ளப்பட்ட நான்கு கட்டங்களான (ஆசிரமங்கள்) வாழ்விலும் நம்பிக்கை இல்லாதவர்கள் என அறியமுடிகிறது. இவை இரண்டினாலும் அவர்களை அன்றைக்கு அதிகாரத்தில் இருந்தவர்களால் சகித்துக் கொள்ள முடிந்திருக்காது. பொருள்முதல்வாதத்தின் ஆதரவாளர்களாக, அவர்கள் பெரிய எண்ணிக்கையில் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை.
எப்படியாயினும், இது தொடர்பாக ரிச்சர்ட் கார்பே குறிப்பிட்டவை நினைவுகூரத்தக்கவை,, ‘இத்தனைக்கும் பிறகு இன்றைக்குப் போலவே அந்தச் சித்தாந்தங்களுக்கு, நிறைய ரகசிய சீடர்கள் இருந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.’ (The Philosophy of Ancient India. Chicago: The Open Court Publishing Company, 1899 (second ed.), p.25). இவை அனைத்தும் அவர்கள் விதிவாதிகள் இல்லை என்பதையும், கூர்நோக்கையும், ஆய்வின் அவசியத்தையும் வலியுறுத்தக்கூடியவர்கள் என்பதையும் உறுதிப்படுத்துகின்றன, அவர்கள் கண்டிப்பாக அறிவியலுக்கும் அறிவியல் அணுகுமுறை உருவாக்கத்திற்கும் பங்களிப்புச் செய்தவர்களாகவே இருப்பார்கள். காரணகாரியத்தின் மீதான உறுதியான கடப்பாடு, வெறும் காரணகாரியம் மட்டுமில்லாமல் இயற்கை விளைவுகள் குறித்த வலியுறுத்தல், ‘இயற்கைக்கு மீறிய ஆற்றல்’ குறித்த அனைத்தையும் மறுத்தல் ஆகியவை இந்திய பொருள்முதல்வாதத்தைக் குறிப்பிடுகின்றன. மருத்துவ அறிவியல் எழுத்துக்களின் பின்னுள்ள தத்துவம் கண்டிப்பாக, சார்வாகர்களுக்கு முந்தையது போன்ற பொருள்முதல்வாதமே.
ஒற்றைக்கடவுள் கொள்கைப் பண்பாட்டிலிருந்து ‘இயற்கையின் விதிகள் [laws of nature]’ தோன்றியிருக்க வேண்டும் என்ற அடிப்படையிலிருந்து சுபவாதத்தை ‘law of nature’ என மொழிபெயர்ப்பதை ஆட்சேபித்து, அதனை தாவோ என்னும் சீனக் கருத்தாக்கத்தோடு தொடர்புபடுத்தி சீனவியலாளரான ஜோசப் நீதம் நோக்கியது சரியா?
என்ன காரணமாக இருந்தாலும், சுபவாதத்திற்கும் தாவோவிற்கும் ஒப்புமைகள் உள்ளன என்பதில் தவறில்லை. எவ்வாறாயினும், ஒற்றைக்கடவுள் கொள்கைக்கும் பல்கடவுள் கொள்கைக்கும் அப்பால் சுபவாதம் தோற்றத்திற்கு வேறு பல காரணங்களும் இருக்கலாம். இருந்தாலும், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா சுபாவத்தை ‘இயற்கையின் விதிகள்’ என மொழிபெயர்த்ததை தவறு என நீதம் மறுத்ததைச் சரியென்றே கருதுகிறேன். இந்த விசயத்தை நான் என் கட்டுரையான ‘சுபாவம் என்றால் என்ன: சட்டோபாத்யாயாவும் நீதமும்’ (What is Meant by Svabhava: Chattopadhyaya and Needham, Psyche and Society, Vo.10 No.2, December 2012, pp.18-20)ல் விவாதித்திருக்கிறேன்.
இயற்கைக்கு மீறிய சக்திகள் பற்றிப் பேசாத மதத்தை தேடும் பொருள்முதல்வாதிகளுக்குப் பௌத்தம் கவனத்திற்குரியதாக இருக்கிறது. ஆனால் சார்வாக/உலகாயத மரபு அபூர்வமாகத்தான் குறிப்பிடப்படுகிறது. ஆயினும் பௌத்தம் இருமைவாதமாகவே கருதப்படுகிறது. சமகாலத்தவர்கள் மத்தியில் சார்வாக/உலகாயத மரபு கண்களில் படாமல் மறைந்து போகவும் பௌத்தம் பிரபலமாகவும் என்ன காரணம் எனச் சுருக்கமாகச் சொல்லமுடியுமா?
கடவுள் அல்லது கடவுள்கள் இல்லை என்று சொன்னாலும், வேதத்தைப் போன்ற கடவுளால் வழிகாட்டப்பட்ட புனித நூல்கள் இல்லாவிட்டாலும், சாதி அமைப்பு இல்லாவிட்டாலும் இதுவரை மறு உலகத்தையோ மறுபிறப்பையோ பௌத்தம் மறுக்கவில்லை. இதற்கு மாறாக சார்வாக/உலகாயதம் மத எதிர்ப்பிலும் மறுஉலகம், மறுபிறப்பு ஆகியவற்றை மறுப்பதிலும் சமரசத்திற்கு இடமற்றதாக இருக்கிறது. ஒருவர் சமரசத்திற்கு இடம் தராத பொருள்முதல்வாதியாக இல்லாதவரை அல்லது ஆகாதவரை, சார்வாக/உலகாயதம் அவருக்கு ஈர்க்க கூடிய ஒன்றாக இருக்காது.
இரண்டாவதாக, பௌத்தம் ஒவ்வொரு பிறப்பிலும் பெரும் துன்பங்களைக் கொண்டு வரும் பிறப்பு மறுபிறப்பு என்னும் சுழற்சியிலிருந்து விடுதலைபெறுவது, நிர்வாணம் அடைவது குறித்த நம்பிக்கைகளைத் தருகிறது. மாறாக மறுபுறத்தில், பொருள்முதல்வாதம் இறந்தவுடன் உணர்வும் இறந்து விடுகிறது என்கிற அப்பட்டமான உண்மையைத் தவிர வேறு எந்த நம்பிக்கைகளையும் தருவதில்லை. அதனால் விடுதலை அல்லது மறுபிறப்பு குறித்த எந்தப் பிரச்சினையும் அதில் இல்லை. நித்தியமாக சொர்க்கத்தில் வாழலாம் என்கிற எந்த நம்பிக்கையும் அதில் இல்லை. பௌத்தம் இவ்விசயத்தில் இந்து மரபிற்கும் சார்வாக/உலகாயதத்திற்கும் நடுவில் பயணிக்கிறது.
ராகுல சாங்கிருதித்யாயன், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா போன்ற அறிஞர்கள் தொடர்ச்சியின் தொடர்ச்சியின்மை, வினை - விளைவு இணைவு ஆகிய கோட்பாடுகளைத் தோற்றுவித்ததில் பௌத்தத்தின் பங்கு, படீகா சமுபாதா (சமஸ்கிருதத்தில் ப்ரதிய சமுத்பாதா) காரணகாரிய கோட்பாட்டை முன்னறிவித்தது குறித்தும் வலியுறுத்தியுள்ளார்கள். நான் என்னுடைய கட்டுரையான, ‘எங்கெல்ஸ், இயக்கவியல் மற்றும் பௌத்தம்’ (Engels, Dialectics and Buddhism, Frontier Weekly, Autumn No., Vol. 46, Nos. 13-16, October 6- November 2, 2013, pp. 35-38) என்பதில் குறிப்பிட்டுள்ளபடி, நான்கு சிறந்த உண்மைகள் கருத்து, இயக்கவியலின் அடிப்படைகள் பலவற்றை உள்ளடக்கியுள்ளது. ஒருவர் பௌத்தராகவோ அல்லது பொருள்முதல்வாதியாகவோ இல்லாமலேயே, தத்துவத்திற்கு புத்தரின் பங்களிப்புகளை (அவர் தத்துவார்த்த விவாதங்களில் ஈடுபடும் விருப்பமுள்ளவராக இல்லாத பொழுதும்) பாராட்டமுடியும்.
உங்களுடைய நூல்கள் தவிர உங்களின் தத்துவ உலகம் குறித்து மேலும் அறிந்துகொள்ள வேறு ஐந்து நூல்களை நீங்கள் 3:AM வாசகர்களுக்காக பரிந்துரைக்க முடியுமா?
அனைத்து முடிவுகளுடனும் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், பின்வருவனவற்றை ஒருவர் கவனிப்பது லாபமுடையதாக இருக்கலாம் 1) தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் உலகாயதம் 2) தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் பண்டைய இந்தியாவில் பொருள்முதல்வாதத்தின் உள்ளாற்றல், 3) பிரதீப் கோகலேவின் உலகாயத/சார்வாகம், 4) டி.ஆர். சாஸ்திரியின் சார்வாகத் தத்துவத்தில் பொருள்முதல்வாதம், சிற்றின்பக் கொள்கை, இன்ப நாட்டக் கொள்கை (Materialism, Sensualism and Hedonism in Cārvāka Philosophy). எலி பிரான்கோவும் கரின் பீரிசன்டென்சும் ரூட்லெட்ஜ் தத்துவக் களஞ்சியத்திற்காகத் தொகுத்ததிலிருந்து ‘இந்திய பொருள்முதல்வாதப் பள்ளிகள்...’ மற்றும் ‘உலகாயதம்’ மற்றும் பிரில்லின் இந்துமத களஞ்சியம் ஆகியவை. இறுதியாக இதுவரை நூலாகத் தொகுக்கப்படாத கிருஷ்ணா டெல் டோசோவின் சமீபத்திய மூன்று கட்டுரைகள்

சனி, 20 ஜூலை, 2019

That's one small step for man, one giant leap for mankind.
சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் நிலவில் முதல் முதலாக காலடி வைத்தான் மனிதன். நீல் ஆம்ஸ்டிராங், எட்வின் ஆல்ட்ரின் இருவரும் நிலவில் இறங்கினார்கள். அவர்களும் திரும்பி வருவதற்கான ராக்கெட்டில் நிலவை சுற்றிக் கொண்டிருந்தார் மைக்கேல் காலின்ஸ். 1969 ஜூலை 16ஆம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட அப்பல்லோ-11, ஜூலை 20ஆம் தேதி நிலவில் இறங்கியது. அதைக் கொண்டாடும் வகையில்தான் மாறுவேடப்போட்டியில் ஆம்ஸ்டிராங் ஆக வேடமிட்டு வந்தார் கோபால். (அதே போட்டியில் நான் சென்ட் வியாபாரியாக நடித்தேன் என்று நினைவு.)
நிலவில் மனிதன் காலடி வைத்ததை ஒட்டி நேற்றும் இன்றும் கூகுள் சிறப்புச் செய்திருக்கிறது. மைக்கேல் காலின்ஸ் குரலில் ஒரு வீடியோ வெளியிட்டு, அப்பல்லோ-11 எப்படி செயல்பட்டது என்று விளக்கியது. (அதன் இணைப்பு கீழே.)
அதைப் பார்த்ததும், கடந்த வாரம் சந்திராயன் குறித்து எழுதத் துவங்கி, வேலை பளுவால் பாதியில் நிறுத்திவிட்ட கட்டுரை நினைவுக்கு வந்தது. எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்று நேற்று முடிவு செய்தேன். இரவு வெகுநேரம் எழுதினேன். காலையில் தொடர்ந்து எழுதி முடித்தேன்.
*
சந்திரயான்–2
சந்திரயான் என்னும் நிலவு ஆய்வுத் திட்ட விண்கலம் ஏவும் பணி ஜூலை 14ஆம் தேதி காலை நிகழ்ந்திருக்க வேண்டியது, திடீரெனக் கைவிடப்பட்டது. கடைசி நேரத்தில் கண்டறிந்த தொழில்நுட்பக் கோளாறு காரணம் என்று கூறப்பட்டது.
தினமலர் உள்ளிட்ட ஓரிரு பத்திரிகைகள், இது இது இப்படித்தான் நிகழும் என்ற வகையில் முன்கூட்டியே தயாரித்து வைத்திருந்த ரெடிமேட் செய்தியை வெளியிட்டு, ராக்கெட் ஏவப்பட்டது என்று வேறு ஏதோவொரு ராக்கெட் படத்தையும் போட்டு விட்டது நம் ஊடகங்களின் லட்சணத்தை மட்டுமல்ல, அதன் வாசகர்களின் லட்சணத்தையும் அம்பலப்படுத்துகிறது. பத்திரிகைகளின் இந்தப் போக்கு சமூக ஊடகங்களில் கேலி செய்யப்படுகிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
நவீன அறிவியலின் உச்ச அமைப்புகளில் ஒன்றான விண்வெளி ஆய்வு மையமாகிய இஸ்ரோவின் தலைவர், திருப்பதி கோவிலுக்குச் சென்று ஆசி வேண்டிய செய்தியும் ராக்கெட் தோல்விச் செய்தியுடன் சேர்த்து கேலி செய்யப்பட்டது. பகுத்தறிவுடன் யோசித்தால் அவர் செய்தது அபத்தம்தான். அது அவருடைய தனிப்பட்ட நம்பிக்கை என்று என்னதான் முட்டுக் கொடுத்தாலும் சரி, கோவிலுக்கு மட்டுமல்ல, எந்தவொரு மத வழிபாட்டு மையத்துக்குச் சென்று ஆசி கோரியிருந்தாலும் சரி, அது அபத்தம்தான். அறிவியலுக்கு ஒவ்வாததுதான். அதுவும் ஒருபக்கம் இருக்கட்டும்.
ஒரு விண்கலத்தை ஏவுவது, அதிலும் ஆய்வுக் கலனைக் கொண்ட ஒரு விண்வெளி ராக்கெட்டை ஏவுவது, அவ்வளவு சாதாரண விஷயமல்ல. சந்திரயான்-2 ஏவுகிற பணி ஒத்திவைக்கப்பட்டதையொட்டி எழுதப்பட்ட ஒவ்வொரு பதிவைப் பார்க்கும்போதும் இந்த விஷயம்தான் எனக்கு உறுத்திக் கொண்டே இருந்தது. எனவே, சந்திரயான் குறித்து நான் வாசித்தறிந்த அளவில் அறிவியல் தகவல்களை எழுத நினைத்தேன்.
முதலில் ஒரு விஷயத்தை தெளிவாக்கிக் கொள்வோம். நிலவுக்கு ராக்கெட் அனுப்புவது என்றால், ஏதோ சென்னையிலிருந்து தில்லிக்கு விமானம் செல்வது போல நேராக நிலவை நோக்கி ஏவிவிட முடியாது. உதாரணமாக, முன்னர் குறிப்பிட்ட அப்பல்லோ-11 கூட நேராக நிலவை நோக்கிச் சென்று விடவில்லை. முதலில் பூமியைச் சுற்றி வந்தது. ஒன்றரை சுற்று சுற்றியபிறகு ஓர் உந்துதல் கொடுத்து நிலவை நோக்கி ஏவப்பட்டது. நிலவுக்கு அருகே நெருங்கிய பிறகு நிலவை சுமார் 30 முறை சுற்றியது. பிறகுதான் சந்திரனில் இறங்கியது.
எதற்காக பூமியைச் சுற்றி வர வேண்டும், எதற்காக நிலவைச் சுற்ற வேண்டும் என்பதெல்லாம் சாமானிய அறிவியல் கட்டுரையில் விளக்குவது கடினம். சுருக்கமாகச் சொன்னால், பூமியின் ஈர்ப்பு சக்தியைப் பயன்படுத்தி, எரிபொருளை மிச்சப்படுத்த வேண்டியிருக்கிறது. மிச்சப்படுத்திய எரிபொருள், ராக்கெட்டுக்கு தேவையான நேரத்தில் உந்து சக்தி கொடுக்க உதவுகிறது. பூமியைச் சுற்றுகிற நேரத்தில் நிறைய படங்களையும் தகவல்களையும் அனுப்பி வைக்கிறது. உதாரணமாக, சந்திரயான் முதலில் புவியை குறிப்பிட்ட உயரத்தில் சுற்றிவரும், பிறகு சற்றே மேலே எழும்பி இன்னும் உயரத்தில் சுற்றி வரும். பிறகு திசை திருப்பப்பட்டு சந்திரனை நோக்கிச் செல்லும். நிலவை குறிப்பிட்ட உயரத்தில் சுற்றும். பிறகு இன்னும் நெருங்கிச் சென்று சுற்றும். கடைசியாக, நிலவிலிருந்து 100 கிமீ உயரத்தில் சுற்றுப்பாதையில் இயங்கும். (இதன் விளக்கப்படம் பார்க்கவும்.)
சந்திரயான் என்பது ராக்கெட்டா?
சந்திரயான் ராக்கெட்டும் கொண்டது, ஆனால் ராக்கெட் மட்டுமல்ல. ராக்கெட் என்பதை ஏவூர்தி என்று சொல்லலாம்.
• ராக்கெட்டில் ஆயுதம் வைத்து அனுப்பி ஏவுகணையாக்கலாம்.
• செயற்கைக்கோள் (சாட்டிலைட்) பொருத்தி அனுப்பலாம். அதிலிருந்து பிரிந்து செல்லும் சாட்டிலைட் புவியைச் சுற்றிவரச்செய்து, பூமியை ஆய்வுகள் செய்யலாம், தொலைத்தொடர்பு வசதிகள் செய்யலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பலாம்.
• விண்வெளி ஆய்வு மையத்தில் வசிப்பவர்களுக்கு உணவு மற்றும் இதர பொருட்களை அனுப்பலாம்.
• நிலவை அல்லது செவ்வாய்க் கோளை சுற்றிவரக்கூடிய விண்கலனை அனுப்பி, நிலவை / செவ்வாயை ஆய்வு செய்யலாம்.
• நிலவில் இறங்கி ஆய்வு செய்யக்கூடிய நிலவூர்தியை அனுப்பி ஆய்வு செய்யலாம்.
• நிலவில் இறங்கி ஆய்வு செய்யக்கூடிய மனிதர்கள் இருக்கும் கலனும் அதில் இருக்கலாம்.
ஆக, பலவகை ஆய்வுகளுக்கும் உதவக்கூடிய கலன்களை எடுத்துச் செல்லும் பணியைச் செய்வதுதான் ராக்கெட் அல்லது ஏவூர்தி. சந்திரயான்-1இல் சென்று நிலவில் இறங்கிய ஆய்வுக்கலன் வெறும் 30 கிலோதான். ஆனால் அது புறப்பட்டபோது இருந்த ஸ்பேஸ்கிராஃப்ட் – விண்வெளிக் கப்பலின் எடை சுமார் 1500 கிலோ.
அவ்வளவு எடைக்கு, அதில் என்னென்ன இருக்கும்?
ராக்கெட் என்றதும் மனதுக்குள் ஒரு படம் தெரிகிறது அல்லவா? எல்லாவற்றுக்கும் மேலே உச்சியில் கூம்பு போல் கூர்மையாகத் தெரிவது மூக்குப்பகுதி. அதற்குக் கீழே பே-லோட் (payload) எனப்படும் பகுதி – அதாவது, முந்தைய பத்தியில் குறிப்பிட்ட செயற்கைக்கோள், அல்லது நிலவைச் சுற்றி ஆய்வு செய்யப்போகிற ஆய்வுக்கலன், அல்லது நிலவில் இறங்கப்போகிற ஊர்தி, அல்லது மனிதர்கள் இருக்கும் பகுதி ஆகியவற்றைக் கொண்ட முக்கியமான பகுதி. இதுதான் ஆய்வின் முக்கியப் பகுதி. இதை எடுத்துச் செல்லத்தான் இதர பகுதிகள் இருக்கும். அந்த இதர பகுதிகள் : கன்ட்ரோல் சாதனங்கள், ஏவூர்திக்குக் தேவையான எரிபொருள் கலன்கள், எரிபொருள், பம்ப்கள், எரிபொருளை எரிக்க உதவும் ஆக்சிடைசர்கள், எரிபொருளைப் பயன்படுத்தி மேலெழுந்து பயணிக்க வைக்கும் என்ஜின்கள், கீழிருந்து உந்துவதற்கான தலைகீழ் கூம்புப்பகுதி ஆகியவை. ஒரு விண்வெளிக்கப்பலின் பே-லோட் எடையைப் பொறுத்தே விண்கலனின் எடையும் அமையும்.
ஒத்திவைக்கப்பட்ட சந்திரயான்-2 திட்டத்தில் என்னென்ன இருந்தன என்று பார்ப்போம் : 1. ஜிஎஸ்எல்வி ஏவூர்தி. 2. சந்திரயான்-2 ஆர்பிட்டர் (நிலவைச் சுற்றப்போகிற ஊர்தி). 3. விக்ரம் லேண்டர் (நிலவில் இறங்கப் போகிற கலன்). 4. ப்ரக்யான் ரோவர் (நிலவில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யக்கூடிய ஊர்தி).
சந்திரயான்-1 வெற்றிகரமாக செயல்பட்டதே? சந்திரயான்-2 ஏன் தடைபட்டது? இரண்டுக்கும் இடையே என்ன வித்தியாசம்?
இரண்டுக்கும் பெயர்கள்தான் ஒற்றுமையே தவிர, இலக்குகளும் அமைப்பும் வேறு வேறு.
• சந்திரயான்-1இல் பிஎஸ்எல்வி ராக்கெட் பயன்பட்டது. 2இல் ஜிஎஸ்எல்வி ராக்கெட் பயன்படுகிறது. (இரண்டுக்குமான வேறுபாடு பற்றி இணையத்தில் படித்து அறியலாம். ஜிஎஸ்எல்வி சக்திவாய்ந்த ஏவூர்தி)
• 1இல் சந்திரயான்-1 என்னும் நிலவைச் சுற்றும் கலன் (moon oribiter) இருந்தது. 2இல், சந்திரயான்-2 என்னும் சுற்று கலன்.
• 1இல் எம்.ஐ.பி. – Moon Impact Probe - நிலவில் மோதி இறங்கும் கலன் இருந்தது. 2இல், விக்ரம் லேண்டர் என்ற பெயரில் நிலவில் இறங்கும் கலன் இருக்கிறது. முதலாவது, திட்டமிட்டபடி மோதி இறங்கி, அத்துடன் செயலிழக்கும். ஆனால் விக்ரம் இதமாக தரையிறங்கும் (என திட்டமிடப்பட்டுள்ளது.)
• சந்திரயான்-1இல் நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் ஊர்தி ஏதுமில்லை. சந்திரயான்-2இல், ப்ரக்யான் என்ற பெயரில் ரோவர் இருக்கறது. இது விக்ரம் லேண்டரிலிருந்து வெளியேறிச் சென்று நிலவில் ஊர்ந்து ஆய்வு செய்யும். (சினிமாக்களில் பார்த்திருப்போமே, அப்படி!)
சந்திரயான்-2, விக்ரம், ரோவர் – எப்படி இருக்கும் என்பதை கீழே இருக்கும் 3 படங்களில் பார்க்கலாம்.
சரி, விண்கலம் ஏவுவது சாதாரண விஷயமில்லை என்றால், அப்படி என்னதான் இருக்கிறது அதில்?
ஒரு விண்கலத்தை ஏவுதல் என்பது, அது வெற்றியோ தோல்வியோ, அதை ஏவி விடுவதுடன் முடிவதில்லை. ஒருவேளை அது தோல்வி அடைகிறது என்றாலும், ஏன் தோல்வி கண்டது என்பதையும் கண்டறிந்தாக வேண்டும். எனவே, அதற்கான எல்லா ஏற்பாடுகளும் கருவிகளும் கச்சிதமாக செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த முறை சரி செய்துகொள்ள முடியும். அப்படிக் கண்டறிவது நமக்கு மட்டுமல்ல, உலகின் இதர நாடுகளின் விண்வெளித் திட்டங்களுக்கும் பயன்படும். டிரையல் அண்ட் எர்ரர் முறையில் “ஏவிப் பார்ப்போம், போனால் போகட்டும், இல்லாவிட்டால் மீண்டும் சரி செய்து அனுப்பினால் போகிறது” என்று செய்கிற விஷயமல்ல இது.
ஏவப்பட்டபிறகு அது வெற்றிகரமாக இயங்கலாம், அல்லது சில நொடிகளிலேயே வெடித்துச் சிதறலாம். (ரஷ்யா நிலவுக்கு அனுப்ப முயன்ற சக்தி வாய்ந்த நான்கு ராக்கெட்டுகளும் தொடர்ந்து வெடித்துச் சிதறின. பிறகு அந்தத் திட்டமே கைவிடப்பட்டது.) அல்லது வெகுதூரம் போன பிறகு செயலிழக்கலாம். சில காலம் செயல்பட்ட பிறகு குறித்த காலத்துக்கு முன்பே செயலிழக்கலாம். ஆளில்லாத விண்கலனில் ஏற்படும் கோளாறுகளை இங்கிருந்து இயக்கப்படும் கன்ட்ரோல்களின் மூலம்தான் சரி செய்ய முடியும். அதற்கு தொலைத் தொடர்புகள் சரியாக இருக்க வேண்டும், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் ஒத்திசைந்து செயல்பட்டாக வேண்டும். சில சமயங்களில் வேற்று நாட்டிலிருந்து வாங்கப்பட்ட அல்லது கொண்டுவரப்பட்ட பொருட்களும்கூட ஏவப்படலாம். அப்போது, அதற்கான கன்ட்ரோல் அந்த நாட்டுக்குத் தரப்பட வேண்டும்.
விண்கலனில் இருக்கக்கூடிய மேலே சொன்ன பொருட்கள் எல்லாம் தனித்தனியாக தயாரிக்கப்படுகின்றன. பிறகு ஒவ்வொன்றும் இணைக்கப்பட்டு, ஏவுதளத்துக்கு நகர்த்தப்படுகிறது. ஏவுவதற்கு உரிய இடத்தில் நிறுத்தி, அதைச் சுற்றிலும் இருக்கும் கரங்கள் அதைப் பிடித்துக்கொள்ளும் வகையில் நிறுத்தப்படுகிறது.
ஏவப்படும் கணத்தில், விண்வெளிக்கப்பலைப் பிடித்திருக்கும் கரங்கள் கச்சிதமாக விலக வேண்டும். எரிபொருள் சரியாக வெளி வரவேண்டும். எரிபொருளைப் பற்றவைப்பதற்கான தீப்பொறிகள் கச்சிதமாக அதே நேரத்தில் உருவாக வேண்டும். எரிபொருள் எந்தப்பக்கம் வெளிவர வேண்டுமோ அங்கே மட்டுமே வர வேண்டும், வேறு இடங்களில் கசிந்துவிடக்கூடாது. வளிமண்டலத்தில் வெகுவேகமாக காற்றை உராய்ந்து கொண்டு செல்லும் விண்கலனின் வெளிப்பகுதி, உராய்வின் காரணமாக கடுமையான வெப்பத்தை சந்திக்க நேரும். அது மிக ஆபத்தான விஷயம். ராக்கெட்டில் இருக்கிற எரிபொருளும், எரிக்க உதவுகிற ஆக்சிடைசர்களும் பாதிக்கப்படக்கூடாது. அதற்காக, விண்வெளிக் கலனுக்கு வெளிப்புறத்தில் ஒட்டப்பட்டிருக்கிற வெப்பம்தாங்கிப் படலம் பிய்த்துக் கொள்ளாதிருக்க வேண்டும். கப்பலின் ஒவ்வொரு போல்ட்டும் நட்டும்கூட கவனம் செலுத்த வேண்டிய விஷயம்.
ஏவப்படும் ராக்கெட், எந்த வேகத்தில் ஏவப்படுகிறதோ அந்த வேகத்தில் கச்சிதமாகப் பயணிக்க வேண்டும். எதிர்பார்த்த வேகத்தில் என்ஜின்கள் செயல்பட்டு உந்துசக்தி கொடுக்க வேண்டும். மிகச்சிறிய வேக மாற்றம்கூட அதன் எரிபொருளை தீர்த்துவிடக்கூடும். ராக்கெட்டின் உள்ளே ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வெப்பம் கண்காணிக்கப்பட வேண்டும். உள்ளேயும் வெளியேயும் பொருத்தப்பட்ட கேமராக்கள் சரியாக இயங்க வேண்டும். எரிபொருள் கலன், எரிபொருள் தீர்ந்து அதன் வேலை முடிந்ததும் சரியாகக் கழன்றுகொள்ள வேண்டும். புவியின் வளிமண்டலத்துக்குள் அப்படிக் கழன்று கொண்ட பொருட்கள் கடலில் அல்லது ஆளில்லாத இடங்களில் விழுமாறு வடிவமைத்திருக்க வேண்டும். எங்கெங்கோ இருக்கும் விண்வெளித் தொலைநோக்கிகளின் மூலம் கண்காணிக்க வேண்டும், படங்கள் பிடிக்க வேண்டும்.
ஏவப்பட்டதும் முதலில் நேராகச் செல்கிற ராக்கெட், சில நொடிகளில் சாய்வாக வளைந்து செல்வதை ஒளிப்படங்களில் பார்த்திருப்பீர்கள். அதுதான் சரியான முறை. சாய்வாக வளைந்து சென்று, புவிஈர்ப்பு விசைக்கு ஏற்ப, திட்டமிட்ட உயரத்தில் பூமி சுற்றுவதற்கு ஒத்திசைந்த திசையில் அதுவும் சுற்றிவந்து, தொடர்ந்து படங்களை எடுக்க வேண்டும், அவற்றை பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு திசைதிருப்பி, பூமியின் சுற்றுப்பாதைக்குள் கச்சிதமாக சுற்ற விட வேண்டும். சிறிது நேரம் அல்லது சில நாட்கள் கழித்து, ராக்கெட்டின் என்ஜினை இயக்கி, இன்னும் கொஞ்சம் மேலே சென்று பூமியை சுற்றச் செய்வார்கள்.
சிறிய விஷயங்களால் பெரிய தவறுகள் என்னவெல்லாம் நிகழக்கூடும் என்பதை கடந்தகால உதாரணங்களிலிருந்து ஒன்றிரண்டைப் பார்ப்போம்.
இன்று நவீன கேமராக்கள் நிறைய வந்து விட்டன. தரையிலிருந்து ராக்கெட் உயரும் காட்சியைப் படம் பிடிக்க விடியோ கேமராக்கள் இருக்கின்றன. ஒருகாலத்தில் புகைப்படங்கள் மட்டுமே எடுக்கப்பட்டன.
உலகின் முதல் கண்டம் விட்டுக் கண்டம்பாயும் ஏவுகணை (ballistic missile) வி2. இதுவும் ஏவூர்திதான். பே-லோட் பகுதியில் ஆய்வுப் பொருட்களுக்குப் பதிலாக, ஆயுதம் பொருத்தப்பட்டிருக்கும். வி2 ஏவப்படுவதைப் படம் பிடிக்க சற்று தொலைவில் போட்டோகிராபர் நின்றிருந்தார். வி2 ஏவப்பட்டது. 5 விநாடிகள் மெதுவாக மேலெழுந்தது. வேகம்பிடித்தது. சட்டென திசை திரும்பியது. நேராக போட்டோகிராபர் இருந்த பக்கமாக வந்தது. அவருடைய தலைக்கு சற்று மேலே பறந்துபோய் 40 மீட்டர் அந்தப்பக்கம் விழுந்து வெடித்தது. (தலைக்கு மேலே வருகிற கணம் வரை அவர் படம் பிடித்துக்கொண்டிருந்தார். பக்கத்தில் வந்ததும் குனிந்து கொண்டார் என்பது வேறு கதை. இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில் வி2-வை உருவாக்கியவர்கள் ஜெர்மானியர்கள். ஜெர்மனி வீழந்ததும் வி2 திட்டத்தில் இருந்த ஊழியர்களை கைது செய்யப்பட்டனர். அவர்களில் பலர் அமெரிக்காவின் ஏவுகணைத் திட்டத்தில் பணியில் அமர்த்தப்பட்டனர் என்பதும் தனிக்கதை)
விண்கலன் ஏவப்படும் நிகழ்வுகளை எல்லாம் கச்சிதமாக படம் பிடித்து வைத்திருந்தால்தான் எங்கெங்கே என்னென்ன கோளாறுகள் ஏற்பட்டன என்று கண்டறிய முடியும். விண்வெளி ஆய்வின் மிகப்பெரிய விபத்துகளைப் பற்றிய புதிர்களுக்கு இவ்வாறு எடுக்கப்பட்ட படங்களிலிருந்து விடை காணப்பட்டன.
1983 ஏப்ரல் 4ஆம் தேதி முதல்முதலாக ஏவப்பட்டது சேலஞ்சர் எனப்படும் விண்வெளி விமானம். இது ராக்கெட்டைப்போல அல்லாமல், விண்வெளியில் ஆய்வு செய்துவிட்டு திரும்பவும் தரையிறங்கி, மீண்டும் ஏவப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அதனால் இதற்கு space shuttle என்று பெயர். 1983க்குப் பிறகு 9 முறை வெற்றிகரமாக செயல்பட்டு திரும்பியும் வந்தது. 1986 ஜனவரி 28ஆம் தேதி, ஏவப்பட்ட 72 விநாடிகளில் வானில் வெடித்துச் சிதறியது. அதில் இருந்த விண்வெளி வீரர்கள் ஏழு பேரும் உயிரிழந்தனர். ஒரு பள்ளி ஆசிரியையும் விண்வெளிப் பயணியாக இருந்தார் என்பதால் அமெரிக்க மக்கள் மிக ஆவலாக தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கண் முன்னாலேயே விண்கலம் வெடித்துச்சிதறியது.
சேலஞ்சர், முதலில் ஜனவரி 22ஆம் தேதிதான் ஏவப்பட இருந்தது. பிறகு 23க்கும், 24க்கும் ஒத்தி வைக்கப்பட்டது. காலநிலை சரியில்லாததால் 25க்கு மாற்றப்பட்டது. ஏவும் இடமும் மாற்றப்பட்டது. இரவில் தரையிறங்குவது வசதியில்லை என்பதால் 26 காலைக்கு மாற்றப்பட்டது. 26ஆம் தேதியும் காலநிலை சரியில்லை என்பதால் 27க்கு மாற்றினார்கள். 27ஆம் தேதி, ஒரு ஸ்விட்ச் சரியாக இயங்கவில்லை என்ற சந்தேகத்தால் 28ஆம் தேதிக்கு மாற்றினார்கள். ஆக, விண்வெளிக்கலன்கள் ஏவப்படும் தேதி ஒத்திவைக்கப்படுவது புதிதில்லை என்று புரிந்து கொள்வதே முக்கியம்.
இவ்வளவு சரிபார்த்தும் 28ஆம் தேதி ஏன் வெடித்தது என்று ஆராய்ந்ததில், ரப்பர் சீல் வளையங்கள் சரியில்லாததே காரணம் என்று தெரிய வந்தது. ராக்கெட் பூஸ்டர்களை இணைக்கும் பகுதியில், O-ரிங் எனப்படும் வளையங்கள் கொண்டு பொருத்தப்படும். அந்த வளையங்கள், மைனஸ் 1 டிகிரி வெப்பநிலையில் தாங்குமா என்பதில் கவனக்குறைவு. ஏவப்பட்ட பிறகு வெப்பத்தில் சற்றே இளகி விட்டதால் எரிபொருள் கசிந்து விட்டது. ஆக, பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சேலஞ்சர் விண்கலம், சாதாரண ஒரு கேஸ்கட்டால் வெடித்துச் சிதறியது, பல்லாண்டுகள் பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் 7 பேரின் உயிரைப் பறித்தது என்றால், ஒரு விண்கலத்தின் ஒவ்வொரு பொருளும் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது புரியும்.
சேலஞ்சர் போலவே மற்றொரு விண்வெளி விமானம் கொலம்பியா. 1981இல் பறக்கத் துவங்கி 27 முறை வெற்றிகரமாக விண்ணுக்குச் சென்று திரும்பி வந்த விண்வெளி விமானம். 2003 பிப்ரவரி 1. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லா உள்பட ஏழுபேருடன் புறப்பட்டது. வளிமண்டலத்துக்குள் நுழையும்போது உராய்வின் காரணமாக இறக்கைகள் தீப்பிடித்து வானிலேயே வெடித்து விட்டது. ஒரு கட்டத்தில் அதன் இறக்கையின் வெப்பநிலை 3,000 °F (1,650 °C).
2001 ஜனவரி 11ஆம் தேதி ஏவப்பட இருந்ததுதான் கொலம்பியா. 18 முறை ஒத்திவைக்கப்பட்டது. 27 முறை வெற்றிகரமாகப் பயணம் செய்த கொலம்பியா 28ஆவது முறை வெடித்துச் சிதற என்ன காரணம்? புகைப்படங்கள் அதற்கு விடை தந்தன.
எரிபொருள் கலனுக்கு வெப்பக்காப்புப் படலம் (ஃபோம்) பொருத்தப்பட்டிருக்கும். எரிபொருள் என்பது பெட்ரோலோ டீசலோ அல்ல. திரவ ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன். விண்கலனின் வெளிப்புறம் அதிக வெப்பமும் கூடாது, ஐஸ் படியவும் கூடாது. கொலம்பியா ஏவப்பட்ட ஒரு நிமிடத்தில், சுமார் 2-3 அடி அகலம் கொண்ட ஒரு ஃபோம் கழன்று, இடதுபக்க இறக்கையின் மீதுமோதியது. அங்கே இருந்த ஆர்சிசி பேனல்களை பாதித்தது. அதன் காரணமாக, அதிகவேகத்தில் பயணிக்கும் ராக்கெட் காற்றுடன் உராய்வின்போது ஏற்படும் வெப்பம் காரணமாக தீப்பிடித்தது.
வெப்பத்தை சமநிலையில் வைக்க உதவும் சாதாரண ஃபோம், ஒரு விண்கலத்தையும் ஏழு உயிர்களையும் பறித்து விட்டது.
விண்கலம் ஏவப்படும் இடத்தில் மனிதர்கள் இருக்க முடியாது. எல்லாவற்றையும் தொலைவிலிருந்தே காணவும் கட்டுப்படுத்தவும் முடியும். நிரப்பப்பட்ட எரிபொருள் சரியாக எரிகிறதா என்று பற்றவைத்துப் பரிசோதனை செய்து பார்க்கவெல்லாம் முடியாது. (2004இல் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் பூஸ்டர் ஒன்று ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கும்போதே தீப்பிடித்து 6 பேர் உயிரிழந்தனர்.)
புறப்பாடு சரியாக அமைய வேண்டியது முக்கியம். எரிபொருள் எரிந்து என்ஜின் இயங்கத் துவங்கியதும் கீழ்ப்புறத்தில் புவி ஈர்ப்புக்கு எதிராக உந்துசக்தி கிடைத்து மேலெழும்ப வேண்டும். கட்டுப்பாட்டு அறையிலிருந்து விடப்படும் ஆணைகளுக்கு ஏற்ப திசை திரும்ப வேண்டும். குறிப்பிட்ட தூரத்தில் பூமியைச் சுற்றிவர வேண்டும். புறப்பட்ட பிறகு திட்டமிட்ட பயணம் வரை எரிபொருள் தீராமல் இருக்க வேண்டும். விண்வெளி என்பது வெற்று வெளி என்று நினைத்து விடுகிறோம். ஆனால், விண்ணில் மிதக்கும் குப்பைகளும்கூட ஆபத்தானவைதான். குப்பைகள் எங்கே எந்தப் பாதையில் மிதந்து (பறந்து) கொண்டிருக்கின்றன என்பதையும் கண்காணிக்க வேண்டும். (இன்றைய தேதியில் சுமார் 5 லட்சம் குப்பைகள் மிதப்பதாக சொல்கிறார்கள்.) 17500 கிமீ வேகத்தில் ராக்கெட் மீது மோதினால், உடனே பாதிப்பு ஏதும் தெரியாவிட்டாலும்கூட, கொலம்பியாவுக்கு நிகழ்ந்தது போல நிகழ வாய்ப்புகள் உண்டு.
இன்னும் பல சிக்கல்களை எழுதலாம் ஏற்கெனவே கட்டுரை நீளமாகி விட்டதால் (  ) நிறுத்திக் கொள்கிறேன்.
முத்தாய்ப்பாக இரண்டு செய்திகள் —
சந்திரயான்-1 நிலவைச் சுற்றிச் சுற்றி ஆய்வு செய்ய 2008 அக்டோபரில் அனுப்பப்பட்டது. இரண்டு ஆண்டுகள் செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓராண்டுக்குப் பிறகு தகராறு செய்ய ஆரம்பித்தது. சென்சார்கள் வேலை செய்யவில்லை. 312 நாட்களில் செயலிழந்தது. 2009 ஆகஸ்ட் 28ஆம் தேதியுடன் தகவல் தொடர்பு அற்றுப்போனது. அது என்னவாயிற்று என்று தெரியவில்லை. 2016 ஜூலை 2ஆம் தேதி, சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, சந்திரயான் நிலவை சுற்றிக் கொண்டிருப்பதாக அமெரிக்காவின் நாசா நிறுவனம் கண்டுபிடித்தது. (பூமியில் இருக்கும் ராடார்களின் மூலமாக, ஒரு காரின் அளவில் பாதி அளவே கொண்ட சந்திரயானைக் கண்டுபிடித்தது அமெரிக்கா!) எதிர்பார்த்ததைவிட குறைந்தகாலமே செயல்பட்டது என்றாலும், நிலவில் நீர் இருக்கிறது என்பதை உறுதி செய்த முதல் கண்டுபிடிப்பு நம்முடையதே. மிகக் குறைந்த செலவில் மிகப்பெரிய சாதனை அது.
சந்திரயான்-2 நாளை மறுநாள் – 22ஆம் தேதி – ஏவப்படவும், செப்டம்பர் 7ஆம் தேதி நிலவில் இறங்கவும், ஓராண்டு காலம் இயங்கும் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. சந்திரயான்-1 கலன் மோதி இறங்கியதும் நிலவின் தென் துருவத்தில்தான். சந்திரயான்-2 இறங்க இருப்பதும் தென் துருவத்தில்தான். இத்திட்டம் வெற்றி கண்டால், தென் துருவத்தில் இதமாக இறங்கிய முதல் விண்கலம் என்ற பெருமை கிடைக்கும்