வியாழன், 31 டிசம்பர், 2020

 மனிதர்களுக்கு குடியுரிமை இல்லை!

ஆனால் ஒரு ரோபோவுக்கு குடியுரிமை கிடைத்தது!

--------------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------------------------------------

ஒரு நாட்டின் குடிமகன் என்பதற்கு அடையாளமாக 

குடியுரிமை (citizenship) வழங்கப் படுகிறது. குடியுரிமை 

கிடைக்காமல் அவதிப் படுவோர் பலர்.


ஆனால் ஒரு எந்திரத்துக்கு, அதாவது ஒரு ரோபோவுக்கு 

ஒரு நாடு குடியுரிமை வழங்கி உள்ளது. நம்புவதற்கு

கஷ்டமாக உள்ளதா? ஆனால் இது உண்மை.


குடியுரிமை வழங்கிய நாடு சவூதி அரேபியா. 

குடியுரிமை வழங்கியது ஒரு ரோபோவுக்கு.

அந்த ரோபோவின் பெயர் சோபியா (Sophia).

2017 அக்டோபரில் குடியுரிமை வழங்கப் பட்டது.  


இப்போது நீங்கள் ஒரு கேள்வி கேட்க வேண்டும்.

குடியுரிமை வழங்கும் அளவுக்கு அந்த ரோபோ 

மனிதனை ஓத்திருக்கிறதா?

அப்படியானால் அந்த ரோபோவின் IQ என்ன?


ரோபோக்களுக்கு IQ கிடையாது. மனிதனைப் போலவே 

நடந்து கொள்வதுதான் ரோபோ என்ற போதிலும் 

ரோபோக்களுக்கு முறையான IQ கிடையாது. 


காரி காஸ்பரோவை Deep Blue என்னும்  கணினி சதுரங்கத்தில் 

தோற்கடித்தது. இதனால் அந்தக் கணினி காஸ்பரோவின் 

IQவைப் பெற்றிருக்கிறது என்று சொல்ல இயலுமா?    


IQ என்பது ஒற்றை அம்சம் கொண்டதல்ல. 

அது அகல்விரிவானது; மற்றும் ஆழமானது 

(comprehensive and deep). அத்தகைய  IQவை உடைய 

ரோபோக்களை இதுவரை தயாரிக்க இயலவில்லை.    


சோபியா பெப்ரவரி 14, 2016ல் பிறந்தது. இதை உருவாக்கியது 

ஹாங்காங் நிறுவனமான ஹான்சன் ரோபோடிக்ஸ் 

(Hansan Robotics). இந்த ரோபோவை உலகெங்கும் உள்ள 

பத்திரிகையாளர்கள் நேர்காணல் செய்தனர்.


எனினும் குடியுரிமை வழங்கும் அளவுக்கு சோபியா 

மனித அறிவைப் பெற்றதல்ல.


ஆனால் நமது தமிழ்நாட்டில் உள்ள பலரை விட 

சோபியாவின் அறிவு அதிகம். இது மறுக்க முடியாத 

உண்மை.

--------------------------------------------------------------------------------------     


 ஜனவரிப் புத்தாண்டு தமிழனுக்கு உரியது!

இரண்டு புத்தாண்டுகள் தமிழனுக்கு!

அறிவியலின் தீர்ப்பு என்ன?

----------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-----------------------------------------------------------

இரண்டு பொண்டாட்டி என்பது போல 

இரண்டு புத்தாண்டுகள் இருக்கும்!

ஜனவரிப் புத்தாண்டு அனைவருக்கும் பொதுவானது!

சித்திரைப்  புத்தாண்டு தமிழனுக்கு மட்டுமானது!

----------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------------------------------------

சித்திரை என்பது  பண்பாட்டுப் புத்தாண்டு. 

ஜனவரி என்பது  உற்பத்திப் புத்தாண்டு.

உலகளாவிய மானுட சமூகம்

மொத்தத்திற்கும் உரிய புத்தாண்டு ஜனவரிப் 

புத்தாண்டு. இது ஆங்கிலேயனுக்கு மட்டும் 

சொந்தமானதல்ல. 


சமூகத்தின் பொருள் உற்பத்தி உலகம் முழுவதும் 

எந்தப் புத்தாண்டின் அடிப்படையில் நடக்கிறது?

ரயில்களும் விமானங்களும் புறப்படும் நேரங்கள் 

எந்தக் காலண்டரின்படி தீர்மானிக்கப் படுகின்றன?


பத்திரப் பதிவு அலுவலகங்களில் சொத்துக்கள் 

எந்தக் காலண்டரின் அடிப்படையில் பதிவு 

செய்யப் படுகின்றன?


பள்ளி கல்லூரிகளில் தேர்வுகள் எந்தக் காலண்டரின் 

அடிப்படையில் நடக்கின்றன?


உலகில் நடைபெறும் அத்தனை நடவடிக்கைகளும் 

செயல்பாடுகளும் எந்தக் காலண்டரின் அடிப்படையில் 

மேற்கொள்ளப் படுகின்றன? ஜனவரி காலண்டரின் 

அடிப்படையில்தானே! 


மாநகராட்சிகளில்  எந்தக் காலண்டரின் பேரில் 

பிறப்பு  இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப் 

படுகின்றன?


ஜனவரிப் புத்தாண்டை அதாவது இந்தக் காலண்டரை 

விஞ்ஞானிகள் தங்களின் பொறுப்பில் எடுத்துக் 

கொண்டுள்ளனர். இது மதத் தலைவர்களின் 

கட்டுப்பாட்டில் இல்லை. எனவேதான் மதச்சார்புடைய 

கிமு கிபி போன்ற ஏசு கிறிஸ்து பெயரிலான 

குறியீடுகள் நீக்கப் பட்டுள்ளன.


ஜனவரிப் புத்தாண்டு என்பது உலகப் பொதுப் புத்தாண்டு. 

இது அறிவியல் புத்தாண்டு. இது அனைவருக்கும் உரியது. 

இது தமிழனுக்கும்  உரியது.


அறிவியல் ஒளி பெப்ரவரி ஆண்டு மலரில் வெளியான 

காலண்டரின் கதை என்னும் எனது கட்டுரையைப் 

படிக்கலாம்;; தெளிவு கிடைக்கும். 


சித்திரைப் புத்தாண்டைக் கைவிட வேண்டியதில்லை. அது 

பண்பாட்டின் அடையாளமாக இருக்கும். பழைய 

வரலாற்றின் சின்னமாக இருக்கும்.


உலகம் முழுவதும் எல்லோரும் இரண்டு புத்தாண்டுகளை 

வைத்துக் கொண்டுள்ளனர். ஒன்று ஜனவரிப் புத்தாண்டு.

இன்னொன்று தங்களின் பழைய புத்தாண்டு.


தமிழனுக்கும் இரண்டு புத்தாண்டு! ஒன்று ஜனவரிப் 

புத்தாண்டு! இன்னொன்று சித்திரைப் புத்தாண்டு.

களத்திர ஸ்தானத்தில் தமிழனுக்கு இரண்டு இருக்கிறது.

தமிழனின் கடவுளான முருகக் கடவுளுக்கும்

ரெண்டு பொண்டாட்டி; வள்ளி, தெய்வயானை!


வள்ளியாக சித்திரைப் புத்தாண்டும்

தெய்வயானையாக ஜனவரிப் புத்தாண்டும் கொண்டு 

தமிழன் வாழட்டும்! நீடூழி வாழட்டும்!

இதுதான் எனது தீர்ப்பு! அதாவது அறிவியலின் தீர்ப்பு!!

**********************************************************     

 



 

புதன், 30 டிசம்பர், 2020

அலைக்கற்றை ஏலத்தில் ஏர்டெல் பங்கேற்காது!

நிதி நெருக்கடியால் மூடப்படும் நிலை!

மஞ்சள் கடுதாசி கொடுக்க சுனில் மிட்டல் திட்டம்!

-------------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------------------------

2021 மார்ச் 31ல் அலைக்கற்றை ஏலம் இந்தியாவில் 

நடைபெற உள்ளது. இதில் பல்வேறு frequency உள்ள 

அலைக்கற்றைகள், 5ஜி உட்பட, ஏலம் விடப்படுகின்றன.


700 MHz, 800 MHz, 900 MHz, 1800 MHz, 2100 MHz, 2300 MHz,

2500 MHz ஆகிய frequency கொண்ட அலைக்கற்றைகள் 

ஏலம் விடப்படும். அதாவது 2G, 3G, 4G அலைக்கற்றைகளும் 

ஏலம் விடப்படும். 


இந்த ஏலத்தில் 700 MHz அதிர்வெண் கொண்ட 

அலைக்கற்றையின் ஏலத்தில் பங்கேற்கப் போவதில்லை 

என்று ஏர்டெல்லின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

700 MHz அலைக்கற்றையின் விலையை 43 சதம் குறைத்தது 

டிராய் அமைப்பு. குறைக்கப்பட்ட பின்னர் விலை 

ரூ 6568 per MHz.


ஒரு மெகா ஹெர்ட்ஸ் என்று உதிரியாக வாங்க முடியாது.

குறைந்த பட்சம் 5 MHz கொண்ட ஒரு தொகுப்பாகத்தான் 

வாங்க இயலும். ஒரு தொகுப்பின் விலை (price per block)

ரூ 32,840 கோடி. 700 MHz அலைக்கற்றையானது 4ஜிக்கும் 

ஓரளவு 5ஜிக்கும் உகந்தது. இருப்பினும் குறைந்தபட்சம் 

ரூ 32,840 கோடி செலவழிக்க இயலாத நிலையில், இந்த 

700 MHz அலைக்கற்றையின் ஏலத்தில் பங்கேற்கப் 

போவதில்லை என்று முடிவெடுத்துள்ளது ஏர்டெல்.


இது ஏர்டெல்லின் வறுமை நிலையை வெளிச்சம் 

போட்டுக் காட்டுகிறது. ஒரு நிறுவனத்தால் முக்கியமான 

அலைக்கற்றையை வாங்க முடியவில்லை என்பது 

ஒரு குடும்பத் தலைவரால் வீட்டுக்கு அரிசி வாங்க 

முடியவில்லை என்பதைப் போன்றது.


30 கோடி சந்தாதாரர்களைக் கொண்ட ஏர்டெல் 

வைத்திருக்கும் அலைக்கற்றையில் பெரும்பகுதி 

1800 MHz அதிர்வெண்ணில் உள்ள அலைக்கற்றையே. 

வரும் ஜூலை 2021ல் இந்தியாவின் 14 மாநிலங்களில் 

(Telecom circles) ஏர்டெல்லின் உரிமம் முடிவுக்கு வருகிறது.

இந்த உரிமங்களைப் புதுப்பிக்கவே ஏர்டெல்லுக்கு   

குறைந்தது ரூ 13,000 கோடி செலவாகும் என்று ஒரு 

மதிப்பீடு கூறுகிறது. 


இருப்பினும், இந்த 13,000 கோடி  ரூபாயைக் கூட ஏர்டெல் 

செலவழிக்க முடியாத நிலையில் உள்ளது. எனவே மேற்கூறிய 

14 மாநிலங்களிலும் உரிமம் காலாவதியான அலைக்

கற்றையைப் புதுப்பிக்க ஏர்டெல்  தயாராக இல்லை என்று 

தெரிய வருகிறது. உரிமத்தைப் புதுப்பித்து புதிதாக

அலைக்கற்றை வாங்காமல், கைவசம் இருக்கும் வேறு 

அதிர்வெண் கொண்ட அலைக்கற்றையைக் கொண்டு 

ஒப்பேத்தலாம் என்று ஏர்டெல் முடிவு செய்துள்ளது.


ஆக, ஏர்டெல்லின் நிதி நெருக்கடியை இனிமேலும் 

திரை போட்டு மறைக்க இயலாது. ஒரு காலத்தில் 

மொபைல் சேவையில் சக்கரவர்த்தியாக இருந்த 

ஏர்டெல் இன்று வறுமையின் கோரப்பிடியில் சிக்கிச் 

சின்ன பின்னமாகிக் கொண்டிருக்கிறது.   


குடைநிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்

நடைமெலிந்து ஓரூர் நண்ணினும் நண்ணுவர் 

என்ற தமிழ் மூதுரை ஏர்டெல்லுக்கு கச்சிதமாகப் 

பொருந்துகிறது.


BSNLஆ? ஏர்டெல்லா? எது மோசமான நிலையில் 

இருக்கிறது என்று பார்த்தால், படு மோசமான 

நிலையில் ஏர்டெல்  இருக்கிறது. எந்த நேரமும் 

சுனில் மிட்டல் மஞ்சள் கடுதாசி கொடுக்கலாம் 

என்ற நிலைமை உள்ளது. ஏர்டெல்லோடு ஒப்பிடும்போது 

BSNLன் நிலைமை ஆயிரம் மடங்கு மேல். இதுதான் 

டெலிகாம் இண்டஸ்டிரியில் இன்றைய யதார்த்தம்!


அழுகை நிற்கவில்லை சுனில் மிட்டலுக்கு! தேம்பித் 

தேம்பி அழுது கொண்டிருக்கிறார். நாளை டெல்லி 

செல்கிறேன்! எதற்கு? ஆறுதல் கூறி சுனில் மிட்டலின் 

அழுகையை நிறுத்தத்தான்! விபரீத முடிவு ஏதேனும் 

எடுத்துத் தொலைக்காமல் அவரைத் தடுக்கத்தான்!

******************************************************888

         

உலகம் போற்றும் பெண் விஞ்ஞானி ஒரு தமிழச்சி!

--------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------------------------------ 

மொத்தத் தமிழ்நாடும் இரண்டு விஷயங்களில் 

மூழ்கிக் கிடக்கிறது. 1) கமலஹாசனின் பிக் பாஸ்,

2) ரஜனி காந்த்தின் அரசியலுக்கு முழுக்கு.


எட்டுக் கோடித் தமிழர்களும் தங்களின் மூளையில்

கூத்தாடிகளை இறக்கி வைத்துள்ளனர். அது அவர்களுக்குப் 

பிடித்த வேலை. நாம் நமக்குத் பிடித்த வேலையைச் 

செய்வோம். நமக்குத் பிடித்த வேலை அறிவியல் வேலை.

அறிவியல் நமது மூளையில் நிறையட்டும். அது 

நம் அறிவினில் உறையட்டும்!


முந்திய கட்டுரை ஒன்றில், உலகப் புகழ்பெற்ற ஜெர்மன் 

பெண் விஞ்ஞானியை அறிமுகம் செய்தேன். குவாண்டம் 

ஈர்ப்பு (quantum gravity) என்னும் நவீன இயற்பியலில் 

ஆராய்ச்சி செய்யும் அப்பெண் விஞ்ஞானியின் பெயர் 

சபைன் ஹோசன்பெடர் (Sabine Hossenfelder).


இன்று இன்னொரு பெண் விஞ்ஞானியை உங்களுக்கு 

அறிமுகம் செய்வதில் மகிழ்கிறேன். உலகம் போற்றும்

பெண் விஞ்ஞானியான இவர் ஒரு தமிழச்சி. நம் 

கோயம்புத்தூரைச் சேர்ந்த தமிழ்ப்பெண். இவரின் பெயர் 

பிரியம்வதா நடராசன். இவர் ஒரு விண்ணியற்பியலாளர் 

(Astrophysicist) மற்றும் பிரபஞ்சவியலாளர் (cosmologist).


கேம்பிரிட்ஜில் படித்த இவர் தற்போது அமெரிக்காவின் 

யேல் பல்கலையில் பணிபுரிகிறார். கரும்பொருள் 

மற்றும் கரும் ஆற்றல் (dark matter and dark energy) குறித்து 

ஆராய்ச்சி செய்து வருகிறார். கருந்துளைகள் 

குறித்தும் இவர் பெரிதும் அக்கறை கொண்டவர்.

உலகப் புகழ் பெற்றவர் இவர். என்றேனும் ஒருநாள் 

இவர் நோபெல் பரிசு பெறக்கூடும். உலக அளவில் 

உச்சத்தில் இருக்கும் பெண் விஞ்ஞானிகளில் 

இவரும் ஒருவர்.


இவரைத் தெரிந்து கொள்வோம். இவரைத்  

தெரிந்து கொள்ளாமல் இருப்பது இழிவு.

இவரை இதுவரை தெரியாமல் இருந்ததற்காக நாணுவோம்.

**************************************************  mmmmm

 


    

    


      

செவ்வாய், 29 டிசம்பர், 2020

5G அலைக்கற்றையும் 5G தொழில்நுட்பமும்! 

-----------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------------------------------

2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில், உலகம் முழுவதும் 

34 நாடுகளில் உள்ள 378 நகரங்களில் 5ஜி மொபைல் 

சேவை உள்ளது என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.   


இந்தியாவில் 5ஜி அலைக்கற்றையின் ஏலம் அறிவிக்கப் 

பட்டு, கொரோனா காரணமாக ரத்து செய்யப் பட்டது.

தற்போது 2021 மார்ச் மாதவாக்கில் 5ஜி ஏலம் நடைபெறக் 

கூடும் என்று தெரிகிறது. ஏலத்தேதி இன்னும் அறிவிக்கப் 

படவில்லை. ஏலம் விடுவதற்கென்று ஒதுக்கப்பட்ட 

5G அலைக்கற்றையின் அளவு = 175 MHz. இது 3300-3600 MHz

frequencyயில் அமையும். விலையைப் பொறுத்த மட்டில்,

ஒரு மெகா ஹெர்ட்ஸ் விலை (price per MHz) = ரூ 492 கோடி.


5ஜி அலைக்கற்றைக்கான கருவிகளின் பரிசோதனை 

(equipment trial) 2020 மார்ச்சில் நடைபெறுவதாக இருந்தது. 

ஆனால் நடைபெறவில்லை.


தற்போது 5ஜி பரிசோதனைகளுக்கு உள்துறை அமைச்சகம் 

இன்னும் அனுமதி வழங்கவில்லை. இந்தியாவில் 5ஜி மாநாடு 

(virtual summit) 2021 பெப்ரவரியில் நடைபெற உள்ளது.

அறிவித்தபடி 2021 மார்ச்சில் 5ஜி ஏலம் நடைபெறுமானால் 

ஏலம் எடுத்த நிறுவனங்கள் சேவையைத் தொடங்குவதற்கு 

(For service roll out) 2023 அல்லது 2024 ஆகிவிடும். 

இதுதான் இந்தியாவில் 5ஜியின் நிலைமை.


இயல்பாகவும் சுமுகமாகவும் 3ஜியில் இருந்து 4ஜி போக 

முடிந்தது. ஆனால் 4ஜியில் இருந்து 5ஜி போவது அவ்வளவு 

எளிதாகவோ சுமுகமானதாகவோ இருக்க வாய்ப்பில்லை.

இந்தியாவில் இது சற்றுக் கடினமானது.


5ஜி வந்தாலும் அதற்கு முந்திய தலைமுறை தொழில்நுட்பம் 

காலாவதி ஆகி விடாது. 4ஜி LTE எனப்படும் அலைக்கற்றை

5ஜிக்கு முந்தியது. இது 2008ல் அறிமுகமானது. இந்தியாவில் 

இது தொடர்ந்து நீடிக்கும். குறைந்தது 10 ஆண்டுகளுக்கேனும் 

நீடிக்கும். ஐஓடி எனப்படும் Internet of Thingsக்கு 4ஜி LTE 

பயன்படுகிறது. இந்த நிலை தொடரும். எனவே 4ஜி LTEக்கு 

sunsetting இருக்காது. (இந்தியாவில் 2ஜிக்கே இன்னும் 

sunsetting நிகழாதபோது, 3ஜி, 4ஜி, LTE ஆகியவை 

சிரஞ்சீவியாக வாழும்). 


5ஜிக்கான மொபைல் கருவிகளை, ஐஓடி கருவிகளைத் 

தயாரிக்கும் நிறுவனங்கள்,  பழைய தலைமுறை 

அலைக்கற்றையுடனும் கருவிகள் செயல்படுமாறு 

(with backward compatibility) தயாரிக்க வேண்டும். இந்திய 

அரசானது மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு 

இதை ஒரு நிபந்தனையாக ஆக்க வேண்டும். ஆனால் 

அதற்கான தேவை இருக்காது.


இந்திய மொபைல் சந்தையின் நாடியைப் பிடித்துப் 

பார்த்த மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள்

backward compatibility கொண்ட கருவிகளையே 

தயாரிப்பார்கள்.  


12ஆம் வகுப்பு இயற்பியல் புத்தகத்தில் மின்காந்த 

அலைக்கற்றையின் (Electromagnetic spectrum) படம் 

உள்ளது. (Spectrum என்பதற்கு அலைக்கற்றை என்ற 

மொழிபெயர்ப்பு சரியில்லை). அது தேர்வுக்கு உரியதல்ல 

என்ற குறிப்புடன் அப்படம் புத்தகத்தில் உள்ளது.

ஒவ்வொருவரும் இந்த spectrum படத்தைப் பார்க்க 

வேண்டும்; படிக்க வேண்டும்; புரிந்து கொள்ள வேண்டும். 


5ஜி அலைக்கற்றையின் frequency 30 GHz முதல் 300 GHz 

வரையிலானது. இது EHF (Extremely High Frequency) வகையைச் 

சேர்ந்தது. அலைநீளம் (wavelength) 1 மில்லி மீட்டர் முதல் 

10 மில்லி மீட்டர் வரை. (நன்கு கவனிக்கவும்: மில்லி மீட்டர்).

இந்த வகை அலைக்கற்றை மில்லி மீட்டர் அலைகள் 

(millimeter waves) எனப்படுகிறது. Low band, Mid band, High band

ஆகிய மூன்றில் 24 GHz முதல் 48 GHz வரையிலானது

High band ஆகும்.   


தற்போது மொபைல்களில் பயன்படும் மின்காந்த 

அலைகள்  ரேடியோ அலைகள் என்னும் வகையைச் 

சேர்ந்தவை. இவை தீங்கு விளைவிக்காத Non ionising 

radiation ஆகும். ஸ்மார்ட் போன்களில் பயன்படும் 

மின்காந்த அலைகளின் அலைநீளம் சென்டி மீட்டரில்

உள்ளது. இதற்கு மாறாக 5ஜியில் மில்லி மீட்டர் 

அலைகள் பயன்படுகின்றன. அதிகமான bandwidth 

அதாவது அதிகமான data carrying capacityயை மில்லி மீட்டர் 

அலைகள் மூலம் பெற முடிகிறது.


மில்லி மீட்டர் அலைகளின் குறைபாடு என்னவெனில் 

கட்டிடங்களை ஊடுருவிச் செல்லும் திறன் இவற்றுக்குக் 

குறைவு (unable to penetrate structures and other obstacles).  மேலும் 

மழை பெய்யும்போது இவற்றின் சிக்கனல்கள் மழையில் 

கரைந்து விடும். அதாவது மழை இந்த சிக்கனல்களை 

உட்கிரகித்து விடும். அது போலவே இலை தழைகளும் 

இவற்றின் சிக்கனல்களை உறிஞ்சி விடும்.


தற்போது உள்ள பெரும் செலவு பிடிக்கக் கூடிய 

Base stations 5ஜியின் மில்லி மீட்டர் அலைகளுக்கு 

 தேவை இல்லை. குறைந்த செலவில் சிறிய அளவிலான 

Base stationsஐக் கட்டினால் போதும். இது capexஐக் குறைக்கும்.


மேலும் மில்லி மீட்டர் அலைகளில் சுணக்கம் குறைவு.

சுணக்கம் என்பதை ஒரு அறிவியல் கலைச்சொல்லாக 

இங்கு பயன்படுத்துகிறேன். Latency என்ற ஆங்கிலச் 

சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் சுணக்கம் ஆகும்.


முதலில் latency என்றால் என்ன என்று பார்த்து விடுவோம்.

ஒரு நெட்ஒர்க்கில் ஒரு இடத்துக்கு அனுப்பப் பட்ட 

சிக்னலானது அந்த இடத்துக்குச் சென்று விட்டு மீண்டும் 

புறப்பட்ட இடத்துக்கு வருவதற்கான (for a round trip) கால 

அளவு latency எனப்படும். Latency = சுணக்கம்.

    

Latencyயானது மில்லி செகண்டில் அளக்கப்படும்.

3ஜி, 4ஜி, 4G LTE ஆகியவற்றின் லேட்டன்சி 80 மில்லி செகண்ட்,

100 மில்லி செகண்ட் என்றெல்லாம் இருக்கும்போது,

5ஜியின் லேட்டன்சி 10 மில்லி செகண்ட் என்ற அளவில் 

இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதாவது 

சிக்கனல்கள் அதிவிரைவாக செருமிடத்துக்குச் சென்று 

சேரும் என்று பொருள்.


ஐரோப்பாவின் சில நாடுகளில் விஞ்ஞானிகளும் 

மருத்துவர்களும் பொது மக்களும் இணைந்து 5ஜிக்கு 

எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர். 5ஜி அலைகளில் 

இருந்து வெளியாகும் கதிர்வீச்சானது Non ionising radiation

என்ற வகையைச் சேர்ந்ததாக இருந்த போதிலும் 

அந்த அலைகள் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிப்பவை 

என்றும் புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகப் படுத்துவன 

என்றும் எனவே 5ஜியைக் கைவிட வேண்டும் என்றும் 

மக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.


ஜெர்மனியின் புகழ்பெற்ற பெண் விஞ்ஞானி 

சபைன் ஹோசன்பெடர் (Sabine Hossenfelder) 5ஜியின் 

மில்லி மீட்டர் அலைகள் குறித்தும் அவை தீங்கு விளைவிக்கக் 

கூடும் என்றும்  கருத்துத் தெரிவித்துள்ளார். 

சபைன் ஹோசன்பெடர் குவாண்டம் ஈர்ப்புவிசை 

(quantum gravity) ஆராய்ச்சியாளர். உலக அளவில் உள்ள 

பெண் விஞ்ஞானிகளில் உச்ச  இடத்தில் உள்ள வெகு 

சிலரில் இவரும் ஒருவர். இந்தக் கட்டுரை மூலம் 

நமது வாசகர்களுக்கு சபைன் ஹோசன்பெடரை அறிமுகம் 

செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இவரைப் பற்றித் 

தெரியாதவர்களை முட்டாள்கள் என்றே கருதுகின்றனர்

இயற்பியல் கற்றவர்கள். 


இறுதியாக, 5ஜி குறித்து தமிழில் எழுதப்பட்ட முதல் கட்டுரை 

இது. கடைசிக் கட்டுரையும் இதுதான். ஏனெனில் 

மேற்கொண்டும் 5ஜி குறித்து எழுத நான் விரும்பவில்லை. 

நான் எழுதாவிட்டால் வேறு எவரும் எழுதப் போவதில்லை.

கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவர் எழுதலாம் 

அல்லவா! ஆனால் கடவுள் இல்லை என்னும்போது 

இன்னொரு கட்டுரைக்கு எங்கு போவது! நிற்க.


வாசகர்கள் இது போன்ற அறிவியல் கட்டுரைகளைப் 

படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும். இக்கட்டுரைகளை 

ஆதரிக்க வேண்டும். வாசகர்கள் ஆதரிக்கவில்லை என்றால் 

இது போன்ற அறிவியல் கட்டுரைகளை எழுதி முகநூலில் 

வெளியிடுவதை நான் நிறுத்தி விடுவேன். நீங்கள் 

படிக்கவில்லை என்றால் எனக்கு நஷ்டமில்லை.

**********************************************************      


           

 


       

          

         

 


   தெரியாமல் இருப்பது  மடமை என்றே கருதப் படுகிறது. 


அறிவியலைத் தமிழில் எழுதுபவர்களை சோர்வடையச் 

செய்வது சமூகத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். 

  


வருகிறது 5ஜி! வேகம் பேய்த்தனமானது! 


 


       


 


   

மச்சினியின் உள்பாவாடையில் இன்டர்நெட் வேலை செய்யுமா? 

ஐஓடி (IoT) தொழில்நுட்பம் என்றால் என்ன?

அதாவது Internet of Things என்றால் என்ன?

-----------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------------------

ஐஓடி எனப்படும் (IoT = Internet of Things) அண்மைக்கால 

தொழில்நுட்பம் பற்றித் தெரியாமல் சமகால சமூகத்தில் 

வாழ இயலாது. அஞ்ஞானம் பரம சுகம் (Ignorance is bliss)

என்று இருப்போருக்கு ஐஓடி குறித்து எந்த அக்கறையும் 

இருக்காது. அவர்கள் உயிர் வாழும் தகுதியற்றவர்கள்.


இன்டர்நெட் எனப்படும் இணையம் எதில் செயல்படுகிறது?

கணினியில் செயல்படுகிறது. கணினி இல்லாமல் அந்தரத்தில் 

இணையம் செயல்பட முடியாது. இல்லையா?

இன்டர்நெட் என்பது உயிர் என்றால், கணினி என்பது உடல்.

உயிரானது ஏதேனும் ஒரு உடலில்தான் செயல்பட முடியும்.

அது போல இன்டர்நெட் என்பது கணினியிலோ அல்லது 

லேப்டாப்பிலோதான் செயல்பட முடியும்.


அறிவியல் வளர்ச்சியின் போக்கில், மொபைல் 

தொலைபேசியில் GPRS வசதி வந்தது. அதாவது இன்டர்நெட்

வசதி மொபைலில் வந்தது. குறிப்பாக ஸ்மார்ட் போன்களில்  

(SMART Phones) இணையம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு 

வருகிறது.

ஆக, 1) Internet of Computer 2) Internet of Mobile phone ஆகிய இரண்டும் 

தற்போது நடைமுறையில் உள்ளன. என்றாலும் உலகளாவிய 

இணையப் பரவலுக்கு இவ்விரண்டு மட்டும் போதாது.


எனவே எல்லாப் பொருட்களிலும் இணையத்தைக் கொண்டு 

வர வேண்டிய தேவை உள்ளது. அத்தகைய இணையம் 

பொருட்களின் இணையம் (Internet of Things) என்று அழைக்கப் 

படுகிறது. அதாவது IoT என்றால் பொருட்களின் மீதான 

இணையம் என்று பொருள்.


எல்லாப் பொருட்களிலும் இணையம் செயல்பட வேண்டும்.

வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்திலும் இணையம் 

செயல்பட வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள வாஷிங் மெஷின்,

பிரிட்ஜ் ஆகிய பொருட்களில் இணையம் செயல்பட 

வேண்டும். உங்கள் வீட்டு LED TVயில் இணையம் செயல்பட 

வேண்டும். உங்களின் டேப் ரெக்கார்டரில் இணையம் 

செயல்பட வேண்டும்.


சுருங்கக் கூறின், உங்கள் மச்சினியின் உள்பாவாடையில் 

இன்டர்நெட் வேலை செய்ய வேண்டும். இப்படி எல்லாப் 

பொருட்களின் மீதும் செயல்படும் இன்டர்நெட்டே 

IoT எனப்படுகிறது. Internet of Things என்று கூறப்படுகிறது.

தமிழில் பொருட்களின் மீதான இணையும் என்று 

சொல்லலாம்.


தற்போது ராணுவத்தில் இந்த IoT பயன்படுகிறது. இது 

IoMT (Internet of Military Things) என்று அழைக்கப் படுகிறது.

இன்னும் சில ஆண்டுகளில் IoT இந்தியாவில் செயல்பாட்டுக்கு 

வந்து விடும். அப்போது வீடுகள் மட்டுமின்றி, தெருக்கள்,

ஓட்டல்கள், காபி ஷாப்கள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் 

ஆகிய இடங்களிலும் அங்குள்ள பொருட்களின் மீதும் 

IoT செயல்படும்.


உங்கள் வீட்டில் க்ரியா ஆங்கிலம்-தமிழ் அகராதி 

இருக்கிறதா? இருந்தால் அதன் மீது இணையம் 

செயல்படட்டும். IoTயை அனுமதியுங்கள்.


சரி, IoT என்றால் புரிந்ததா? புரிந்திருக்க வேண்டும்.

இதைவிட எளிமையாக 

இதைவிடத் தெளிவாக 

யாராலும் சொல்ல முடியாது; எழுத முடியாது.

-------------------------------------------------------------------------

பின்குறிப்பு:

1) இங்கு சொல்வது அனைத்தும் வயர்லெஸ் தொழில்நுட்பத்தை 

மட்டுமே.

2) இன்னும் சில ஆண்டுகளில் உலகச் சந்தைகளில் 

20 பில்லியன் IoT கருவிகள் (IoT smart devices) விற்பனைக்கு 

வரம் என்று IoT மற்றும் சந்தை வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

(20 பில்லியன் = 2000 கோடி)   

********************************************************    

ஒரு சாதாரணக் கருவியை IoT SMART கருவியாக 

மாற்ற முடியுமா? அப்படி மாற்றுவது எளிதா?


உங்கள் கையில் கட்டி இருக்கும் ஒரு சாதாரண 

கைக்கடிகாரத்தை IoT கருவியாக மாற்ற முடியுமா?


முடியும். உங்களின் வாட்ச் IoT SMART கருவியாக 

மாற்றப்பட்டால், அதில் உங்களின் இதயத் துடிப்பு,

இரத்த அழுத்தம் ஆகியவற்றை அந்த வாட்ச் மூலம் 

நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.


            

அலெக்சா (Alexa) என்னும் கருவி ஒரு IoT கருவி 

ஆகும். அதனால் என்னென்ன பயன் என்று 

அறிந்து கொள்ள  மேற்குறிப்பிட்ட லிங்க்கில் 

உள்ள ஆங்கிலக் கட்டுரையை 

முழுசாகப் படியுங்கள்.

  



IoT தொழில்நுட்பம் வந்த பிறகு என்ன ஆகும்? 

கம்பியூட்டர் தேவையில்லை.

லேப்டாப் தேவையில்லை

ஸ்மார்ட் போன் தேவையில்லை.

இப்படி எதுவும் இல்லாமலே இணையதள வசதி 

உங்களுக்குக் கிடைத்து விடும். நீங்கள் செய்ய 

வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.

கடையில் விற்கும் IoT கருவியை வாங்கி 

வைத்துக் கொண்டு, இணையதள வசதியைப் 

பயன்படுத்தலாம். 



முக்கிய அறிவிப்பு!

-----------------------------------

பின்னூட்டங்களில் சொல்லப்பட்ட முக்கியமான 

கருத்துக்களை வாசகர்கள் விட்டு விடாமல்

படிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 


ஏதாவது ஒன்று இருந்தால் போதும் அல்லவா?

நான் லேப்டாப்பில் இன்டர்நெட் பார்க்கிறேன்.

சிலரிடம் லேப்டாப் கிடையாது. அவர்கள் 

ஸ்மார்ட் போன் வைத்து இருக்கிறார்கள். அதில் 

இன்டர்நெட் பார்ப்பார்கள்.


தற்போது IoT வருகிறது. IoT SMART கருவி என்றால் 

என்ன? அதுவும் ஒரு லேப்டாப் போன்றதுதானே!

நான் கடையில் விருக்கும் ஒரு IoT கருவியை 

வாங்குகிறேன். அதன் மூலம் இன்டர்நெட் 

பார்க்கிறேன்.


ஒருவர் லேப்டாப் மூலமும் இன்டர்நெட் பார்க்கலாம்.

அல்லது ஸ்மார்ட் போன் மூலமும் பார்க்கலாம்.

அல்லது IoT மூலமும் பார்க்கலாம்.

மூன்றும் ஒன்றுக்கொன்று சமம்.

லேப்டாப் = ஸ்மார்ட் போன் = IoT SMART கருவி.  


அலெக்ஸ்சா என்னும் IoT கருவியைப் பற்றி 

இங்கு அடுத்த கமெண்ட் பகுதியில் போஸ்ட் 

செய்கிறேன். அதைப் படித்துப் பார்க்கவும்.  

திங்கள், 28 டிசம்பர், 2020

திருவாதிரை நட்சத்திரம் இறந்து விட்டதா?

சூரிய ஒளி பூமியை வந்து சேர 8 நிமிடம் ஆவது ஏன்?

-----------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------------------------------

ஐன்ஸ்டைன் இரண்டு சார்பியல் கோட்பாடுகளைச் 

சொன்னார். 1) சிறப்புச் சார்பியல் 2) பொதுச் சார்பியல்.

(Special relativity and General relativity).


1905ல் சிறப்புச் சார்பியல் கோட்பாட்டை முன்மொழிந்தார் 

ஐன்ஸ்டைன். இந்தப் பிரபஞ்சத்தில் அதிகபட்ச வேகம் 

எவ்வளவு என்ற கேள்வியை எழுப்பிய ஐன்ஸ்டைன் 

ஒளியின் வேகமே அதிகபட்ச வேகம் என்கிறார்.

ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு 3 லட்சம் கிமீ ஆகும்.

இந்த வேகத்தை விட அதிகமான வேகம் மொத்தப் 

பிரபஞ்சத்திலும் இல்லை என்றார் ஐன்ஸ்டைன்.


சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் என்ன?

கொஞ்ச நஞ்சமல்ல; 15 கோடி கிலோமீட்டர்.சூரியனில் 

இருந்து வெளிச்சம் புறப்பட்டு பூமியை வந்தடைய 

எவ்வளவு நேரம் ஆகும்? கணக்குப் போட்டுப் பார்த்து 

விடலாம்.

தூரம் = 15 கோடி கிமீ 

வேகம் = 3 லட்சம் கிமீ/வினாடி 

காலம் = தூரத்தை வேகத்தால் வகுத்தால் கிடைக்கும்.

= 500 வினாடிகள் 

= 8 நிமிடம் 20 வினாடி 

எப்போதுமே புத்தம் புதிய சூரியனை நாம் பார்க்க 

இயலாது. இந்த நொடியில் நாம் பார்க்கும் சூரியன் 

8 நிமிடத்திற்கு முந்திய சூரியன்தான்.

பல்வேறு நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளி 

பூமியையே வந்தடைய, தூரத்தைப் பொறுத்து,

மாதம், ஆண்டு, ஒளியாண்டு என ஆகும்.


ஒளியாண்டு என்பது தூரத்தின் யூனிட் ஆகும்.

ஒரு ஆண்டில் ஒளியானது எவ்வளவு தூரம் செல்கிறதோ 

அந்த தூரமே ஒரு ஒளியாண்டு ஆகும்.


ஒரு ஒளியாண்டு = 9.46 x 10^15 மீட்டர்.

அதாவது (தோராயமாக)  9.46^12 கிமீ 

அதாவது 9.46 டிரில்லியன் கிமீ.


திருவாதிரை நட்சத்திரம் நமது பூமியில் இருந்து 

எவ்வளவு தூரத்தில் உள்ளது? 724 ஒளியாண்டு தூரத்தில் 

திருவாதிரை உள்ளது. அதாவது 724 x 9.46 டிரில்லியன் கிமீ.

தோராயமாக, 7240 டிரில்லியன் கிமீ.

நியாயமாக இந்த தூரத்தை குவாட்ரில்லியன் என்னும் 

யூனிட் மூலம் சொல்ல வேண்டும். அது மக்களுக்குப்

புரியாது. எனவே 7240 டிரில்லியன் கிமீ என்று 

சொல்கிறோம்.


இந்த தூரத்தை எல்லாம் புரிந்து கொண்டால் அது 

பெரிய விஷயம்தான்.


திருவாதிரை நட்சத்திரம் இறந்து விட்டது என்று கடந்த 

ஆண்டு முழுவதும் உலகெங்கும் ஒரே பேச்சு. இது குறித்து 

குங்குமம் வார இதழில் என்னுடைய நேர்காணல் 

வெளியாகி இருந்தது. வாசகர்கள் அதைத் தேடிப் 

படிக்கலாம்.


சரி, திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஆங்கிலத்தில் என்ன 

பெயர்? வாசகர்கள் பதில் கூற வேண்டும்.


சனி கிரகம்!

-----------------

இன்னொரு சிறிய கணக்கு!

மனக்கணக்க்காகவே விடை கூறலாம்.

சூரியனில் இருந்து சனி கிரகம் எவ்வளவு தூரத்தில் உள்ளது?

9.5 AU தூரத்தில் சனி கிரகம் உள்ளது.

அதாவது 1.4 பில்லியன் கிமீ தூரம். சனிக்கும் சூரியனுக்கும் 

இடையிலான தூரம் இது.


சூரியனில் இருந்து புறப்பட்டு வரும் ஒளி, சனி கிரகத்தை 

அடைய எவ்வளவு நேரம் ஆகும்? விடை சொல்லுங்கள்.

தோராயமாக 80 நிமிடம் ஆகும். அதாவது 1 மணி 20 நிமிடம் 

ஆகும்.


  

***************************************************** 

சூரியனில் இருந்து ஒளி பூமியை வந்தடைய 

8 நிமிடம். சனி கிரகத்தை வந்தடைய 80 நிமிடம்.

பூமிக்கு 8 நிமிடம்;; சனிக்கு 80 நிமிடம்.

நினைவில் பதித்துக் கொள்ளுங்கள்.


மனிதர்களைப் போலவே நட்சத்திரங்களுக்கும் 

பிறப்பு இறப்பு உண்டு. இதை உணர வேண்டும்.

அறிவியல் ஒளி நவம்பர் 2020 இதழில் கருந்துளைகள் 

பற்றிய கட்டுரையில் நட்சத்திரங்களின் பிறப்பு 

இறப்பு பற்றி எழுதி உள்ளேன். அதைப்  படித்துத்

தெளிவு பெறுக.

 


திருவாதிரை நட்சத்திரம் இறந்து விட்டதாக வானியல் 

அறிஞர்கள் கருதவில்லை. ஆனால் அது தன்னுடைய அந்திம 

காலத்தில் இருக்கிறது என்பது உண்மை. அப்படியே 

திருவாதிரை நட்சத்திரம் இறந்து போனாலும், அது 

உடனே நமக்குத் தெரிய வராது. அதை நாம் தெரிந்து 

கொள்ளவே சில பல நூறு ஆண்டுகள் ஆகக்கூடும்.

காரணம் அதீதமான தூரம். குங்குமம் ஏட்டில் 

வந்த என்னுடைய நேர்காணலைத் தேடி எடுத்துப்  

படிக்கலாம். 


திருவாதிரை நட்சத்திரமானது 724 ஒளியாண்டு 

தூரத்தில் இருக்கிறது. எனவே அங்கிருந்து ஒளி 

நமக்கு வந்து சேர எவ்வளவு நேரம் ஆகும் என்று 

கணக்குப் போட்டுப் பார்க்கலாம். ஒவ்வொரு வாசகரும் 

இந்தக் கணக்கைச் சொந்தமாகப் போட்டுப் பார்க்க 

வேண்டும். அப்போதுதான் விஷயம் தெளிவாகப் 

புரியும்.


     


      

கணவனை விட வயதில் இளைய மனைவிக்கு  

கணவனை விட வயது கூடியது எப்படி?

ஐன்ஸ்டைனின் சார்பியல் கொள்கை சொல்வது என்ன?

Relativity theory, Time Dilation என்றால் என்ன?

---------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------------------------------- 

கணவன் மனைவி இருவரும் இனிய இல்லறம் 

நடத்தி வந்தனர். கணவனின் வயது 30. மனைவியின் 

வயது 20.


ஒருநாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலருடன் 

கணவன் ஒரு விண்கலத்தில் ஏறி விண்வெளிப் 

பயணம் மேற்கொண்டான். விண்கலமானது 

ஒளியின் வேகம் என்னவோ அதில் 95 சதவீதம் 

வேகத்தில் பறந்தது.


ஒளியின் வேகம் = நொடிக்கு 3 லட்சம் கிமீ 

துல்லியமாகச் சொன்னால் 299,792,458 meter per second.

(முதல் வரியில் கிலோமீட்டரில் சொல்லி இருக்கிறேன்.

இரண்டாவது வரியில் மீட்டரில் சொல்லி இருக்கிறேன்.

Physicsல் units மிகவும் முக்கியம்; இதில் கவனம் தேவை)


இந்த வேகத்தில் 95 சதவீதம் வேகம் என்றால், எவ்வளவு?

95 x 299,792,458 divided by 100 meter per second.

அதாவது 284,802,835 meter per second.

அதாவது 284,803 kilo meter per second என்று புரிந்து கொள்க.     


விண்வெளியில் ஐந்தாண்டுகள் சுற்றியபின் விண்கலம் 

பூமிக்குத் திரும்பியது. ஐந்தாண்டு நிறைவில் கணவனின் 

வயது 35 ஆகி இருந்தது. 30 வயதில் விண்வெளிக்குச் 

சென்றவன் பூமி திரும்பியபோது 35 வயது ஆகி இருந்தது.


அதே நேரத்தில் அவன் மனைவிக்கு 36 வயது ஆகி இருந்தது.

அவளுடைய 20ஆவது வயதில் விண்வெளி சென்ற கணவன் 

பூமி திரும்பியபோது, அவளுக்கு 36 வயது ஆகி இருந்தது.


அதாவது விண்வெளியில் ஒளியின் வேகத்தில் 95 சதவீத 

வேகத்தில் பயணம் செய்தபோது ஆன  5 ஆண்டுகள்

பூமியின் கணக்கில் 16 ஆண்டுகலுக்குச் சமமாக 

இருந்தது.


கணவனைப் பொறுத்த மட்டில் அவன் 5 ஆண்டுகள் 

மட்டுமே விண்வெளியில் இருந்தான். அவனின் வயது 

35 ஆகியது (30 + 5 = 35).  ஆனால் பூமியின் இருந்த மனைவிக்கு 

இந்த 5 ஆண்டுகள் என்பது 16 ஆண்டுகளுக்குச் சமமாக 

இருந்தது. எனவே அவளின் வயது 36 (20+16 = 36) ஆனது.


இப்படி இருக்க முடியுமா? 

அ) ஆளைப் பொறுத்து காலம் மாறுமா? 

கணவனுக்கு 5 ஆண்டு என்பது மனைவிக்கு 16 ஆண்டா?  

ஆ) இடத்தைப் பொறுத்து காலம் மாறுமா?

விண்வெளியில் ஆன காலம்தானே பூமியிலும் ஆகி இருக்க 

வேண்டும்? விண்வெளியில் 5 என்பது பூமியில் எப்படி 16 ஆனது?  

இ) வேகத்தைப் பொறுத்து காலம் மாறுமா? வெவ்வேறு 

வேகத்தில் பயணம் செய்தால் வெவ்வேறு அளவில் 

காலம் மாறுமா?


இந்த எல்லாக் கேள்விகளுக்கும் பதில் ஆம்! ஆம்!! ஆம்!!!

ஆம் என்று அடித்துக் கூறுபவர் ஐன்ஸ்டைன். 

அவருடைய சார்பியல் கொள்கை என்னும் ரிலேட்டிவிட்டி 

தியரிப்படி இது சாத்தியம். இது time dilation என்று 

அறியப் படுகிறது. டைம் டைலேஷன் என்றால் என்ன 

பொருள்? கால நீட்சி என்று பொருள். காலம் நீள்கிறது 

என்று பொருள். அதாவது குறைவான வேகத்தில் 

இருப்பவர்களுக்கு காலம் நீள்கிறது என்று பொருள்.


ஐன்ஸ்டைன் கூறியது சரி என்று கணக்கற்ற 

பரிசோதனைகளின் மூலம் நிரூபிக்கப் பட்டு 

இருக்கிறது. காலம் என்பது எல்லா இடத்திலும் 

எல்லாச் சூழலிலும் மாறாமல் நிலையாக இருக்கக்கூடிய 

விஷயம் அல்ல என்பதுதான் ரிலேட்டிவிட்டி தியரி.

அதாவது Time is relative என்று புரிந்து கொள்ள வேண்டும்.


இப்போது ஒரு சிறிய கணக்கு. வாசகர்கள் (அதாவது 

மாணவர்கள், இளைஞர்கள் மட்டும்) இந்தக் கணக்கைச் 

செய்ய வேண்டும். மேலே சொன்ன உதாரணத்தில்,

ஒளியின் வேகத்தில் 98 சதவீத வேகத்தில் கணவன் 

விண்வெளியில் பயணம் செய்திருந்தால்,  5 ஆண்டுகளின் 

பின் பூமி  திரும்பியதும் மனைவியின் வயது என்னவாக 

இருந்திருக்கும்?


முந்திய கணக்கின் விவரங்கள் எல்லாம் அப்படியேதான் 

இருக்கின்றன. விண்கலத்தின் வேகத்தை மட்டுமே 

மாற்றி உள்ளேன். இப்போது கணக்கைச் செய்ய வேண்டும்.

கணக்கைச் செய்து பார்க்காமல் நான் சொன்ன விஷயம் 

எதுவும் மூளையில் பதியாது.


"அறிவினில் உறைதல் கண்டீர்" என்பார் பாரதிதாசன்.

அது போல, டைம் டைலேஷன் உங்களின் அறிவினில்

உறைய வேண்டுமென்றால், இந்தக் கணக்கைச் செய்தே 

தீர வேண்டும்.


ரிலேட்டிவிட்டி தியரியையும் டைம் டைலேஷனையும் 

இவ்வளவு எளிமையாகவும் இவ்வளவு சுவாரஸ்யமாகவும்

எல்லோருக்கும் புரியும்படி விளக்கிச் சொல்ல என்னை 

விட்டால் நாதி கிடையாது. எனவே இதை நன்கு 

பயன்படுத்திக் கொள்ளுங்கள். நான் மண்டையைப் 

போட்டு விட்டால், இதைச் சொல்ல நாதி கிடையாது.


இதைப் படிக்காமல் நீங்கள் உதாசீனம் செய்தால் 

நஷ்டம் எனக்கல்ல.

******************************************************

கணவனை விட 1 வயது கூடி விட்டது. இது மனைவிக்கு 

அதிர்ச்சியாக இருந்தது.


ஞாயிறு, 27 டிசம்பர், 2020

மதிப்புக்குரிய அறிவியல் ஒளி ஆசிரியர் அவர்களுக்கு,

------------------------------------------------------------------------------- 

புத்தாண்டு 2021க்கான மாயச்சதுரம்!

ஏன் அமைக்கவில்லை என்பதற்கான விளக்கம்!

----------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------ 

ஒரு ஆண்டு பிரைம் நம்பராக இருந்தால், அந்த ஆண்டிற்கான

மாயச்சதுரம் அமைக்க முடியாது. உதாரணமாக 2017 என்ற 

ஆண்டு பிரைம் நம்பராக வருகிறது. ஆம், 2017 ஒரு பிரைம் 

நம்பர். எனவே 2017ஐக் கொண்டு மாயச் சதுரம் அமைக்க 

முடியாது.


வரும் புத்தாண்டு 2021 ஆகும். 2021 என்பது பிரைம் நம்பர் அல்ல.

அதற்கு 4 காரணிகள் இருக்கின்றன.

அவை = 1, 43, 47, 2021.


2021ஆம் ஆண்டிற்கான மாயச்சதுரம் அமைக்கலாம்.

அது மிகப் பெரியதாக 43 x 43 என்ற அளவில் அமையும்.

அது வாசகர்களுக்கு சுவராஸ்யமாக இருக்காது.

எனவே 2021ஆம் ஆண்டிற்கான மாயச் சதுரத்தை 

நான் அமைக்கப் போவதில்லை. இதை ஆழ்ந்த வருத்தத்துடன் 

தெரிவித்துக் கொள்கிறேன்.


தங்கள் உண்மையுள்ள,

பி இளங்கோ சுப்பிரமணியன்.

********************************************

படத்தில் 5x 5 மாயச்சதுரம் உள்ளது.

இதில் 25 எண்கள் உள்ளன.

1 முதல் 25 வரையிலான எண்கள் இந்த 

மாயச்சதுரத்தில் பயன்படுகின்றன.

Sum of natural numbers from 1 to 25 = n ( n+1)/2

= 25 x 26 divided by 2

= 325.

இந்த 325ஐ 5 ஆல் வகுத்தல் கிடைப்பது

மாயச்சதுரத்தின் row or columnன் sum.

இங்கு sum = 65.


இதையெல்லாம் தயார் செய்து கொண்ட பின்பு,

உரிய உத்தியைப் பயன்படுத்தி மாயச்சதுரம் 

அமைக்கவும்.

       



சனி, 26 டிசம்பர், 2020

 5G  ஏலம் நடத்த மத்திய அமைச்சரவை முடிவு!

அநேகமாக மார்ச் 2021ல் ஏலம் நடைபெறக்கூடும்!

----------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-----------------------------------------------------------------

1) கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட 5G ஏலம்   

வரும் ஆண்டு 2021  மார்ச்சில் நடைபெறலாம் என்று 

தெரிகிறது. ஏலத்தேதி அதிகாரபூர்வமாக இன்னும் 

அறிவிக்கப் படவில்லை.


2) 700 MHz, 800 MHz, 900 MHz, 1800 MHz, 2100 MHz, 2300 MHz,

 2500 MHz ஆகிய frequency கொண்ட அலைக்கற்றைகள் 

ஏலம் விடப்படும். அதாவது 2G, 3G, 4G அலைக்கற்றைகளும் 

ஏலம் விடப்படும். 


3) 2021ல் பெறப்படும் அலைக்கற்றை ஒதுக்கீடு 20 ஆண்டு

காலம் (2041 வரை) செல்லுபடி ஆகும்.


4) ஏலம் விடப்படும் அலைக்கற்றையின் அளவு 

2251.25 MHz ஆகும். இதன் மதிப்பு ரூ 4 லட்சம் கோடி ஆகும்.

துல்லியமாக ரூ 3,992,332.70 கோடி ஆகும்.    


2) 5G அலைக்கற்றை பற்றிய விவரங்கள்:

--------------------------------------------------------------

அ) ஏலம் விடுவதற்கென்று ஒதுக்கப்பட்ட 5G அலைக்கற்றையின் 

அளவு = 175 MHz.

ஆ) Frequency = 3300-3600 MHz 

இ) விலை (price per MHz) = ரூ 492 கோடி 

ஈ) ஆக 100 MHz அளவு 5G அலைக்கற்றையின் விலை =

ரூ 50,000 கோடி (ரூ ஐம்பதாயிரம் கோடி)


5G ஏலம் நடைபெறும்போது நியூட்டன் அறிவியல் மன்றம் 

ஒரு பார்வையாளராகப் பங்கேற்கும். 2010ல் நடந்த 

3G ஏலம் 34 நாட்கள் நடைபெற்றபோது, 34 நாட்களும் 

பார்வையாராகப் பங்கேற்றது நியூட்டன் அறிவியல் மன்றம் 

என்பதை வாசகர்களுக்கு நினைவூட்டுகிறோம்.


நீங்கள் கமல் ஹாசனின் BIGG BOSS பாருங்கள். ஏற்கனவே 

அவர் நடத்திய முந்திய நிகழ்ச்சிகளைப் பார்த்துள்ள 

நீங்கள் இதையும் பாருங்கள். நாங்கள் 5G ஏலத்தைப் 

பார்க்கிறோம்.


5G மொபைல் காங்கிரஸ் (VIRTUAL SUMMIT) 2021 பெப்ரவரி 

மாதம் நடைபெறும் என்ற செய்தியை ஏற்கனவே 

வெளியிட்டு இருந்தேன். அந்த மாநாட்டில்  எல்லோரும் 

பார்வையாளராகப் பங்கேற்கலாம் என்றும் கூறி 

இருந்தேன்.(காங்கிரஸ் என்றால் மாநாடு என்று பொருள்).

அதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

கண்டிப்பாகப் பாருங்கள். இல்லையேல் நீங்கள் 

விஷயம் தெரியாதவராகவே தொடர்ந்து இருக்க 

வேண்டியது இருக்கும்.


சுனில் மிட்டலின் கைக்கூலியாகவும் 

ரிலையன்ஸ் அம்பானியின் கைக்கூலியாகவும் 

இருந்து கொண்டு BSNLஐ நேரடியாகவும் மறைமுகமாகவும் 

எதிர்க்கிற கபோதிகளே, நீங்கள் உயிருடன் இருப்பதற்கு 

ஏதாவது நியாயம் உள்ளதா? அருகில் உள்ள ரயில்வே 

ஸ்டேஷனுக்குச் சென்று, ரயில் வரும் நேரத்தில் 

தண்டவாளத்தில் தலையைக் கொடுங்கள் கபோதிகளே!

*****************************************************


வெள்ளி, 25 டிசம்பர், 2020

 தொ பரமசிவம் மறைவுக்கு இரங்கல்!

பரமசிவம் மார்க்சிய ஆய்வாளர் அல்லர்!

அவர் தீவிரமான கருத்துமுதல்வாதி!

-------------------------------------------------------------

தமிழறிஞராக, ஆய்வாளராக அறியப்படும் 

தொ பரமசிவம் அவர்களின் மறைவுக்கு எமது 

ஆழ்ந்த இறங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


தொ பரமசிவம் மார்க்சிய ஆய்வாளர் அல்லர்.

அவர் மார்க்சியம் கற்றவரும் அல்லர். மார்க்சியப் 

பொருள்முதல்வாதம் குறித்தோ, மார்க்சியம் கூறுகிற 

இயங்கியல் (dialectics) குறித்தோ அவருக்கு ஒன்றும் 

தெரியாது.


மேலும் தொ பரமசிவம் அறிவியல் கற்றவரும் அல்லர்.

அவரின் ஆய்வு முறைமை மார்க்சியமற்றது (unmarxist)  

மற்றும் அறிவியலற்றது (unscientific).


அவர்   ஒரு தமிழ்ப் பண்டிட். 1950களில் தமிழ்நாட்டில் 

தமிழ்ப் பண்டிட்ட்டுகளின் பொற்காலம் நிலவியது.

அது கொஞ்சம் கொஞ்சமாக மங்கி தற்போதுதான் 

மறைந்து கொண்டு இருக்கிறது. 


தமிழ் தவிர வேறு எதுவும் அறியாதவர்கள் பெரும் 

அறிஞர்களாகக் கொண்டாடப் பட்டனர். இந்த 

முட்டாள்தனம் உலகின் வேறு எந்தப் பகுதியிலும் 

கிடையாது.     


ரிலேட்டிவிட்டி தியரி, குவாண்டம் தியரி, ஸ்டிரிங் தியரி 

என்று அறிவியல் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது.

ஆனால் தொ பரமசிவம் போன்ற தமிழ்ப் பண்டிட்டுகள் 

இது பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாமலே வாழ்ந்து 

வருபவர்கள். a plus b whole squared என்றால் என்னவென்றே 

தெரியாதவர்களை அறிஞர்கள் என்று கருதுவது

பரிதாபம்.


கமல் ஹாசனும் எழுத்தாளர் ஜெயமோகனும் 

தொ பரமசிவன் ஒரு மார்க்சிய ஆய்வாளர் என்று 

தங்களின் அஞ்சலிக்கு குறிப்பில் எழுதி உள்ளனர்.

இவை உலகின் இழிந்த கூற்றுகள் ஆகும். 


தமது முன்முடிவுகளை ஆய்வுகள் என்ற பெயரில் 

தமிழ்ச் சமூகத்தின் மீது திணித்தவர் தொ பரமசிவம்.

கால வெள்ளத்தில் அவரின் போலி ஆய்வுகள் 

நிராகரிக்கப் படும்.

*********************************************** 


  

வியாழன், 24 டிசம்பர், 2020

 Abhas Mitra outwitted stephen hawking

Suvrat Raju 

Samir D Mathur string theorist

வெள்ளி, 18 டிசம்பர், 2020

மாக்ஸ்வெல்லின் பிசாசுதான் நோலனின் டெனட்! 

---------------------------------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

நியூட்டன் அறிவியல் மன்றம். 

-----------------------------------------------------------  

அது ஒரு வெற்றுத் துப்பாக்கி. குண்டு எதுவும் இல்லாதது. அதைக் கொண்டு கதாநாயகன் சுவரை நோக்கிச் சுடுகிறான்.

என்ன நடக்கிறது? ஏற்கனவே சுவரில் புதைந்து கிடந்த குண்டுகளில் ஒன்று 

சுவரில் இருந்து கிளம்பி, காற்றில் விரைந்து, துப்பாக்கியின் குழலுக்குள் 

புகுந்து விடுகிறது. இது சாத்தியமா? கிறிஸ்டோபர் நோலன் 

படங்களில் இது சாத்தியமே! அண்மையில் 2020 டிசம்பரில் 

இந்தியாவில் வெளியான நோலனின் டெனட் (TENET) திரைப்படத்தில் 

பிரமிப்பூட்டும் இக்காட்சி இடம் பெற்றுள்ளது.   


அதிகரிக்கும் ஒழுங்கீனம்!

------------------------------------------ 

டெனட் படத்தைப் புரிந்து கொள்ள வெப்ப இயக்கவியலைப்   

 (thermodynamics) படித்திருக்க வேண்டும் என்பது முன்நிபந்தனை 

ஆகிறது. வெப்ப இயக்கவியலில் மூன்று விதிகள் உண்டு. 

அதில் இரண்டாவது விதி "ஒழுங்கு குலைவு" (entropy) பற்றியது. 

டெனட்  திரைப்படத்தின் மையக் கருத்து ஒழுங்கு குலைவு (entropy) ஆகும்.

படத்தின் இயக்குனராக கிறிஸ்டோபர் நோலன் இருக்கலாம்.

ஆனால் உண்மையில் படத்தை இயக்குவது ஒழுங்கு குலைவே.  


ஆயின் ஒழுங்கு குலைவு (entropy) என்றால் என்ன? எந்த ஒரு அமைப்பிலும் கொஞ்சம் ஒழுங்கற்ற தன்மை (disorder or randomness) இருக்கக் கூடும்.  இந்த ஒழுங்கற்ற தன்மையே ஒழுங்கு குலைவு எனப்படுகிறது. 

அதாவது Entropy என்றால் ஒழுங்கீனம் என்று புரிந்து கொள்ளலாம்.

திட, திரவ, வாயுப் பொருட்களை எடுத்துக் கொள்வோம். இம்மூன்றில் 

திடப்பொருள் அதிக ஒழுங்கை உடையது. அதாவது ஒழுங்கீனம் 

குறைவு. வாயுப்பொருள் குறைவான ஒழுங்கை உடையது. இதில் 

ஒழுங்கீனம் அதிகம்.


ஒரே அளவிலான மூன்று பாத்திரங்களை எடுத்துக் கொள்வோம்.

ஒன்றில் 100 அணுக்கள் உள்ளன. அவை தமக்குள் நெருக்கமாக

ஒட்டிக்கொண்டு ஒரு திடப்பொருளாக அமைகின்றன. இன்னொரு 

பாத்திரத்தில் 30 அணுக்கள் உள்ளன. அவை ஒரு திரவப் பொருளாக

அமைகின்றன. மூன்றாவது பாத்திரத்தில் 10 அணுக்கள் மட்டுமே 

உள்ளன. இந்த அணுக்கள் ஒரு வாயுப் பொருளாக அமைகின்றன.

வாயுப்பொருளின் 10 அணுக்களுக்கு இடையிலான உறவு தாறுமாறாக 

இருக்கும். எனவே இதில் ஒழுங்குகுலைவு (entropy) மிக அதிகம்.

அதே நேரத்தில் 100 அணுக்களைக் கொண்ட திடப்பொருளில் 

அணுக்களுக்கு இடையிலான உறவு ஒரு திட்டவட்டமான 

ஒழுங்கைக் கொண்டிருக்கும். இதில் ஒழுங்குகுலைவு (entropy)

மிகவும் குறைவு.  


கடைகளில் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் அரிசி மூட்டைகள்  

குறைவான ஒழுங்கு குலைவைக் கொண்டிருப்பதையும்,

விளையாட்டுப் பொருளான ஹைட்ரஜன் பலூன் அதிகமான 

ஒழுங்கு குலைவைக் கொண்டிருப்பதையும் அன்றாட 

வாழ்க்கையில் இருந்தே அறியலாம்.   

    

"பிறவற்றில் இருந்து விலகித் தனித்து நிற்கும் ஒரு அமைப்பில் 

ஒழுங்கு குலைவானது காலத்தைப் பொறுத்து தொடர்ந்து 

அதிகரித்துக் கொண்டே இருக்கும்" (In an isolated system the total entropy 

will be on the increase over time). இதுதான் பிரசித்தி பெற்ற 

வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி. அதாவது என்ட்ரபி 

ஒருபோதும் குறைவதில்லை; அது எப்போதும் அதிகரித்துக் 

கொண்டே இருக்கும். அல்லது சில நிலைமைகளில் மாறாத 

மதிப்புடன் (constant value) இருக்கும்.. 


உங்களிடம் ஒரு கண்ணாடிக் குவளை இருக்கிறது. அது தரையில் 

விழுந்தால் என்ன ஆகும்?  சுக்கல் சுக்கலாக நொறுங்கி விடும். 

இப்போது அந்தக் குவளையின் என்ட்ரபி அதிகரித்து விட்டது என்று 

வெப்ப இயக்கவியல் சொல்கிறது. உடைவதற்கு முன்னால் முழுசாக இருக்கும்போது குவளையின் என்ட்ரபி குறைவு. உடைந்தபின் 

என்ட்ரபி அதிகம். அதாவது உடைந்து போன பிறகு,  ஒழுங்கீனம் 

அதிகரித்து விடுகிறது. 


ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து பெரியவனாகி முதுமை அடைகிறது. 

முதுமை அடைந்த நிலையில் உடலின் பல செல்கள் இறந்து விடுகின்றன.

உறுப்புகள் தேய்மானம் அடைந்து செயல்திறனை இழக்கின்றன.

இவையெல்லாம் ஒழுங்குகுலைவு அதிகரித்து விட்டது (entropy increased) 

என்பதன் அடையாளம் ஆகும். நமது பிரபஞ்சம் பற்றி வெப்ப இயக்கவியல் என்ன கூறுகிறது? மொத்தப் பிரபஞ்சத்திலும் ஒழுங்கீனமானது 

தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது என்று சொல்லுகிறது. 


கறந்த பால் மடியேறுமா?

-----------------------------------------

ஒழுங்கு குலைவை (entropy) மாற்ற முடியுமா? மேலும் மேலும் 

அதிகரிக்காமல்  தடுத்து நிறுத்த முடியுமா? ஒருபோதும் முடியாது. 

ஒழுங்கு குலைவு என்பது ஒரு அடிப்படையான இயற்பியல் விதி. 

இதை மாற்ற இயலாது. 


ஆனால் ஒழுங்கு குலைவை (entropy) மாற்ற முடியும் என்கிறார் 

கிறிஸ்டோபர் நோலன். கறந்த பால் மடி புகாது என்பது தமிழின் பழமொழி. ஆனால் கறந்த பாலை மீண்டும் பசுவின் மடிக்குள் செலுத்த முடியும் 

என்கிறார் நோலன்.

ஒழுங்கு குலைவை முற்றிலும் தலைகீழாக மாற்ற முடியும் (a total reversal of entropy) என்றும், அதன் மூலம் காலத்தில் பின்னோக்கிய பயணம் சாத்தியம் என்றும் கூறுகிறார் நோலன். முன்பத்தியில் கூறிய, சுவரில் புதைந்து கிடந்த துப்பாக்கிக் குண்டானது entropy reversal மற்றும் time reversalக்கு ஆட்பட்டதால்,

அது காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்து புறப்பட்ட இடத்தையே    

மீண்டும் அடைந்தது என்று விளக்குகிறார் நோலன்.  


அப்படியானால் ஒழுங்கு குலைவை (entropy) தலைகீழாக மாற்றுவது 

எப்படி? அப்படி மாற்றக்கூடிய சக்தி படைத்தவர் யார்?

நிகழ்காலத் தொழில்நுட்பத்தில் அது சாத்தியமில்லை என்பதால்  

நிகழ்கால மனிதர்களாலும் அது சாத்தியமில்லை. எனினும் 

எதிர்காலத்தில் அது சாத்தியம். எதிர்கால மனிதர்கள் 

ஒழுங்கு குலைவை எளிதில் மாற்றி அமைத்து விடுவார்கள்

(entropy will be reversed) என்கிறார் நோலன். 


ஒழுங்கு குலையாமை (Negentropy)!

----------------------------------------------------

ஒழுங்கு குலைவு என்ற நிகழ்வுக்கு எதிர்மறையாக 

ஒழுங்கு குலையாமை என்ற நிகழ்வும் இவ்வுலகில் இருக்கிறது.

ஆங்கிலத்தில் entropyக்கு எதிர்ப்பதமாக Negative entropy என்ற 

சொல் இருக்கிறது. Negative entropy என்ற கருத்தையும் அதற்கான  

சொல்லையும் உருவாக்கியவர் எர்வின் ஷ்ராடிங்கர் 

(Erwin Schrodinger 1887-1961). இயற்பியலில் நோபல் பரிசு (1933)

பெற்ற இவர் எழுதிய "What is life?" என்ற நூலில் Negative entropy

என்ற கருத்தை அறிமுகம் செய்கிறார். பின்னாளில்   

இச்சொல் மருவி Negentropy என்றாகி விட்டது.


ஒழுங்கு குலையாமை என்பது இயற்பியலின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கோட்பாடு. Entropy என்பது ஒரு அமைப்பில் நிலவும் ஒழுங்கின்மையைக் 

குறிக்கும் என்றால் Negative entropy என்பது ஒரு அமைப்பில் நிலவும் 

ஒழுங்கைக் குறிக்கும். (Negentropy is the degree of  ORDER). 2009ல் 

ஒழுங்கு குலையாமை (Negentropy) என்பது மறுவரையறை செய்யப்பட்டு

 Joule per kilogram per Kelvin என்ற SI unit வழங்கப்பட்டது. 

  

கால அம்பின் முன்னோக்கிய திசை!

---------------------------------------------------------- 

எதிர்கால மனிதர்களை கடந்த காலத்துக்குள் அழைத்து வரும் பொருட்டு  

அவர்களின் ஒழுங்கு குலைவை (entropy) தலைகீழாக மாற்றி அமைக்கிறார் நோலன். ஆட்கள், பொருட்கள் என்று அனைவரின் ஒழுங்கு குலைவையும்    

தலைகீழாக மாற்ற முடியும். ஒழுங்கு குலைவை மாற்றுவதன்

மூலம், காலத்தில் பின்னோக்கிச் செல்ல முடியும். (Reversal  in entropy leads 

to reversal of time). காலத்தில் பின்னோக்கிச் செல்வது என்பது மாபெரும் 

அதிசயம் ஆகும். ஏனெனில் வெப்ப இயக்கவியலைப் பொறுத்து,

கால அம்பு  (Time arrow) எப்போதும் முன்னோக்கி மட்டுமே செல்லும்.

அதாவது இறந்த காலத்தில் இருந்து எதிர்காலத்தை நோக்கியே 

கால அம்பு செல்லும். இதைத் தலைகீழாக மாற்றி எதிர்காலத்தில் இருந்து இறந்த காலத்திற்குள் செல்லுமாறு கால அம்பின் திசையை 

மாற்றி விடுகிறார் நோலன்.


டர்ன்ஸ்டைல் என்னும் வாசல்!

----------------------------------------------

கிறிஸ்டோபர் நோலனின் இன்டெர் ஸ்டெல்லார் படத்தில் 

டெசரக்ட் (Tesseract) என்னும் நான்கு பரிமாணம் கொண்ட ஒரு கருவியைப் பார்த்தோம். காலத்தையும் ஒரு பரிமாணமாகக் கொண்டது இந்த டெசரக்ட். 

டெனட் படத்திலும் டர்ன்ஸ்டைல் (turnstile) என்றொரு கருவி 

காட்டப் படுகிறது. ஒழுங்கு குலைவையும் அதன் மூலம் காலத்தின் திசையையும்  மாற்றுவதற்குப் பயன்படும் கருவி இது. இது ஒரு கேட் (gate)  போன்றது. இதில் நுழைந்து வெளிவருவதன் மூலம் காலத்தின் திசையை மாற்றிக் கொள்ள இயலும். இந்தக் கருவியை நிகழ்கால மனிதர்களால் செய்ய இயலவில்லை.. ஆனால் எதிர்காலத்தில் உள்ளவர்கள் செய்துள்ளனர்.


காலத்தின் திசை மாற்றம்!

-------------------------------------------

காலப்பயணம் என்பது  மனிதனின் தொன்மையான கற்பனை. 

இங்கிலாந்து அறிஞர் ஹெச் ஜி வெல்ஸ் (H G Wells 1866-1946) அறிவியல் புனைவுகளின் (science fiction) தந்தை என்று போற்றப் பட்டார். இவர் 

எழுதிய 1895ல் பிரசுரமான டைம் மெஷின் (The Time Machine) என்னும் 

அறிவியல் புனைவு காலப்பயணம் பற்றியது. 

நாவலின் கதாநாயகன்  காலத்தில் மிகவும் பின்னோக்கிச் சென்று,  

எட்டாம் நூற்றாண்டை கணப்பொழுதில் அடைந்து விடுகிறான்.


வெல்சின் காலப்பயணத்தில் ஒழுங்குகுலைவு (entropy) பற்றிய பேச்சே இல்லை. ஆனால் டெனட் படத்தில் ஒழுங்கு குலைவு (entropy) பிரதான பாத்திரம் வகிக்கிறது. அதை மாற்றி அமைப்பதன் மூலமே காலத்தில் பின்னோக்கிச் செல்ல முடிகிறது. அதாவது எதிர்காலத்தில் இருந்து இறந்த காலத்திற்குச் செல்ல முடிகிறது. 

பிற படங்களில் காலப்பயணிக்கு முழுமையான சுதந்திரம் உண்டு. அவர் நினைத்த மாத்திரத்தில் இறந்த காலத்துக்கோ  எதிர்காலத்துக்கோ ஒரு நொடிக்குள் செல்ல முடியும். ஹெச் ஜி வெல்சின் காலப்பயணி எட்டாம் நூற்றாண்டுக்கே  சென்றார். ஆனால் கிறிஸ்டோபர் நோலனின் காலப்பயணிகளால், நினைத்த மாத்திரத்தில் (instantaneously)

நினைத்த இடத்திற்குச்  செல்ல இயலாது. 


ஜனவரி 10ஆம் தேதி மதியம் 12 மணிக்கு டர்ன்ஸ்டைலில் நுழைகிறார் நோலனின் பயணி ஒருவர். முந்திய நாள் (ஜனவரி 9) 

மதியம் 12 மணி என்ற இலக்கை அடைய அவர் விரும்புகிறார். 

இதற்கு அவர் 24 மணி நேர அளவுக்கு காலத்தின்  

பின்னோக்கிய திசையில் (reverted direction of time) பயணம் 

செய்ய வேண்டும். தேவையான அளவு நேரத்துக்கு (24 மணி நேரம்) 

காலத்தில் வாழாமல் இலக்கை அடைய இயலாது. மற்றப் படங்களில் இறந்த காலத்தை அடைந்த எந்த ஒரு காலப்பயணியும்  ஆக்சிஜன் முகமூடி அணிந்து சுவாசித்ததாக வரலாறு இல்லை. ஆனால் டெனட் படத்தின் காலப்பயணிகள் ஆக்சிஜன் முகமூடி அணிந்தே சுவாசிக்க வேண்டும். இவையெல்லாம்  

காலப்பயணத்தை நரகம் ஆக்குகின்றன.


அதிக பட்ஜெட்டில் டெனட் படம்!

-----------------------------------------------------

இன்செப்ஷன், இன்டெர் ஸ்டெல்லார் ஆகிய புரியாத படங்களின் 

வரிசையில் டெனட்டும் (TENET) வந்து நிற்கிறது. உலகின் பல்வேறு 

நாடுகளில், இந்தியாவில் மும்பை  உட்பட, இப்படத்தின் படப்பிடிப்பு 

நடந்தது. கிறிஸ்டோபர் நோலன் எழுதி இயக்கிய இப்படத்தின்  

தயாரிப்பு மற்றும் விநியோகத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் 

மேற்கொண்டுள்ளது..  


இந்திய நடிகை டிம்பிள் கபாடியாவும் இப்படத்தில் நடித்துள்ளார். 

1973ல் வெளியான பாபி படத்தில், ரிஷி கபூருடன் டிம்பிள் கபாடியா கதாநாயகியாக நடித்தது .நமக்கு நினைவிருக்கும். தற்போது தமது 

63ஆம் வயதில், நோலனின் படத்தில், சர்வதேச ஆயுத வியாபாரியாக நடித்துள்ளார் டிம்பிள் கபாடியா. 


படத்தின் கதாநாயகனாக ஜான் டேவிட் வாஷிங்டன்

நடித்துள்ளார். 150 நிமிடங்கள் ஓடும் இப்படத்தின் பட்ஜெட் 

205 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். கிறிஸ்டோபர் நோலனின் 

படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில்  எடுக்கப்பட்ட 

படம் ஆகும்.  


தமது இன்டெர் ஸ்டெல்லார் படத்தின் அறிவியல் ஆலோசகராக 

நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் கிப் தோர்னேவை (KipThorne)

அமர்த்தி இருந்தார் நோலன். தற்போது டெனட் படத்திற்கும் 

 அவரிடம் ஆலோசனை பெற்றதாகக் கூறுகிறார். எனினும் 

இன்டெர் ஸ்டெல்லார் போன்று கறாரான ஒரு அறிவியல் 

புனைவாக  டெனட் இல்லை.  


தலைப்பின் பொருத்தம்!

--------------------------------------

டெனட் (TENET) என்ற சொல்லுக்கு கொள்கை, கோட்பாடு என்று 

பொருள். இடமிருந்து வலமாக வாசித்தாலும் அல்லது 

வலமிருந்து இடமாக வாசித்தாலும் இச்சொல் மாற்றம் அடையாமல் 

TENET என்றே வழங்கப்பெறும். இத்தகைய சொற்களை  ஆங்கில 

இலக்கணம் வரிசைமாறாச்சொல் (palindrome) என்கிறது. தமிழில் 

"களைகளைக" என்ற சொல்லும் ஆங்கிலத்தில் madam என்ற சொல்லும் வரிசைமாறாச் சொற்களுக்கு உதாரணங்கள் ஆகும். 


படத்தில் கதை மாந்தரும் பொருட்களும்  காலத்தில் முன்னோக்கியும்   பின்னோக்கியும் செல்கின்றனர். மேலும் படத்தின் இறுதிக் காட்சியில்  

நிகழும் 10 நிமிடத் தாக்குதல், கடந்த காலத்தில் 10 நிமிடம் என்றும் நிகழ்காலத்தில் 10 நிமிடம் என்றும் ஒருசேர நடக்கிறது. இவற்றையெல்லாம் குறியீட்டு உத்தியாக (symbolic) உணர்த்திட  

TENET என்ற வரிசைமாறாச் சொல்லைப் பயன்படுத்துகிறார் நோலன்.   

அமெரிக்க சிஐஏ உருவாக்கிய  ஒரு ரகசிய உளவு அமைப்பே டெனட் ஆகும். படத்தின் கதாநாயகன் டெனட் அமைப்பின் உறுப்பினர். 


தாத்தாவுக்கும் பேரனுக்கும் போர்!

-------------------------------------------------------

மூன்றாம் உலகப் போர் நிகழாமல் தடுப்பதே கதாநாயகனின் 

பணி என்று படம் கூறுகிறது. அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படும் 

 புளூட்டோனியத்தின் ஐசோடோப் 241 பற்றி படத்தில் 

பேசப் படுகிறது. அமெரிக்காவின் அணுகுண்டு தயாரிப்புக்கான மன்ஹாட்டன் திட்டம் (Manhattan project 1942-1946) பற்றியும் 

அணுகுண்டின் தந்தை என்று போற்றப்படும்  இயற்பியலாளர் ஓப்பன்ஹீமர் (Robert Oppenheimer 1904-1967) பற்றியும் இப்படம் குறிப்பிடுகிறது. 

படம் கூறுகிற மூன்றாம் உலகப்போர் entropy reversal மூலம் நடக்கும். இது 

அணுஆயுதப் போரை விட அதிகமான பேரழிவை ஏற்படுத்தும் 

மொத்த உலகின் ஒழுங்கு குலைவையும் தலைகீழாக மாற்றி விடுவதன் மூலம் இன்றைய மனிதர்களை கணப்பொழுதில் ஒட்டுமொத்தமாகத் துடைத்தெறிய இயலும்  (total extinction is possible). 


மூன்றாம் உலகப்போர் என்பது பூமியின் தற்போதைய  நாடுகளுக்கு இடையில் நடக்க இருக்கும்  போர் அல்ல. நிகழ்காலத்தில் வாழும்  நமக்கும் நம்முடைய எதிர்கால சந்ததியினருக்கும் இடையிலான போரே மூன்றாம் உலகப்போர் என்கிறார் நோலன்.

நம்முடைய எதிர்கால சந்ததி என்பது நம்முடைய பேரன் 

பேத்திகள்தானே! அவர்கள் ஏன் நம்முடன் போர் செய்ய  

வேண்டும்? காரணம் இதுதான்! பூமியில் உள்ள ஆறுகள் 

அனைத்தும் வறண்டு விட்டன. கடல்கள் வற்றி விட்டன. 

இந்த பூமியை வாழத் தகுதியற்றதாக்கி, அழித்து விட்ட 

நம் மீது நமது எதிர்கால சந்ததி ஆத்திரம் கொள்கிறது. 

நம்மோடு போர் புரிந்து நம்மைக் கொன்று விடத் துடிக்கிறது. 

நம்மைக் கொல்வதன் மூலம், நாம் ஏற்படுத்திய சீர்கேடுகளில் 

இருந்து பூமியை மீட்டுவிட முடியும் என்றும் இழந்து விட்ட 

வளங்களை மீண்டும் பெற்று விட முடியும் என்றும் நம்புகிறது. 


அல்காரிதம் என்னும் அழிவுத் திட்டம்! 

------------------------------------------------------------

ஒழுங்குகுலைவை தலைகீழாக  மாற்றுவதன் மூலம், காலத்தினூடே பின்னோக்கிய பயணத்தை எதிர்கால சந்ததியினர் சாத்தியம் ஆக்கி உள்ளனர். அவர்கள் நம்முடைய  காலத்துக்கு வந்து, நம்மை அழிக்க   

விரும்புகின்றனர். இதற்காக ஒரு பேரழிவுத் திட்டத்தையும் அதை 

நிறைவேற்றும் செயல்முறையையும் எதிர்காலத் தரப்பைச் 

சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி உருவாக்கி உள்ளார். இது அல்காரிதம் 

(algorithm) என்று குறிப்பிடப் படுகிறது. பொதுவாக அல்காரிதம் 

என்ற சொல், பென் டிரைவ் போன்றவற்றில் சேமிக்கப்படும் மென்பொருள் கட்டளைத் தொகுப்பைக் குறிக்கும். ஆனால் படத்தில் உலோகத்தால் 

ஆனதும் அளவில் பெரியதுமான ஒரு ஆயுதமாகவே அதை நோலன் 

சித்தரித்து உள்ளார். 


தான் உருவாக்கிய அல்காரிதம் பூமியை முற்றிலுமாக அழித்து விடும் 

அபாயத்தை உணர்ந்த அந்தப் பெண் விஞ்ஞானி, அதை  ஒன்பது துண்டுகளாகப் பிரித்து. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு இடத்திற்கு  அனுப்பி விட்டார். எதிர்காலத்தைச் சேர்ந்தவரான அவர், தமது அல்காரிதம் தம் காலத்தவர்கள் கையில் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக, அந்த ஒன்பது துண்டுகளின் காலத்திசையையும் மாற்றி,  அவற்றைக் கடந்த காலத்துக்கு அனுப்பி விட்டார்.

டெனட் படத்தில் அட்டகாசமான ஒரு வில்லன் இருக்கிறார். 

அவர் ஒரு ரஷ்யர். நிகழ்காலத்தவர். எனினும் அவர் நிகழ்கால 

மக்களுக்கு எதிராகவும்  எதிர்காலத் தரப்புக்கு ஆதரவாகவும் 

வேலை செய்கிறார். அவர் பெயர் அந்திரேய் சேட்டர் (Andrei Sator) . 

சிதறிக் கிடந்த  அல்காரிதத்தின்  ஒன்பது துண்டுகளையும் அவர் சேகரித்துத் 

தம்மிடம்  வைத்துள்ளார். புற்று நோயாளியான அவர் இறந்து 

போகும்போது, இந்த உலகமும் அவருடன் சேர்ந்து அழிந்து 

விடுமாறு ஒரு பயங்கரத்தை அவர் ஏற்பாடு செய்துள்ளார். அதாவது 

அவரின் இதயத் துடிப்பு நின்று போன அந்த  நொடியிலேயே 

அவரிடமுள்ள அல்காரிதம் செயல்பாட்டுக்கு வந்து இந்த உலகத்தை 

அழித்து விடும். 


பைபிளின் புதிய ஏற்பாடு கூறுகிற, நன்மைக்கும் தீமைக்கும் நடக்கிற "ஆர்மகெடான்" (Armageddon) என்னும் இறுதி யுத்தம் போன்றது 

இந்த மூன்றாம் உலகப்போர். இதில் இறுதியில் வில்லன் சேட்டர் அழிகிறான். ஆனால் அவனுடன் கூடவே உலகம் அழியவில்லை. அது பூத்துக் குலுங்குகிறது. 

இயற்கையை அழிப்பதையும்  சூழலை மாசு படுத்துவதையும் எதிர்த்து 

உரத்த கண்டனக் குரலை எழுப்புகிறது  இத் திரைப்படம்.  


இக்கட்டுரை டெனட் படத்தின் திரை விமர்சனம் அல்ல. மாறாக 

படத்திற்கான அறிவியல் விளக்கம் மட்டுமே. உணவின் ருசி அதைச் சாப்பிடும்போதுதான்  தெரியும் (The proof of the pudding is in the eating) 

என்பார்கள். அதைப்போல, படத்தைப் பார்ப்பதன் மூலமே 

அதன் சிறப்பை உணர முடியும். அதிலும் நோலனின் படங்களை 

ஒரு முறைக்கு இருமுறை பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். 

டெனட் படமும் அதற்கு விலக்கல்ல.

 

பாட்டனார் முரண்பாடு!

---------------------------------------

எதிர்காலத்தினர் காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்து, 

கடந்த காலத்திற்குள் நுழைந்து, அங்கு வாழும் நம்மைக் 

கொல்லப் போகிறார்கள் என்றதுமே, அதன் சாத்தியப்பாடு 

கேள்விக்கு உள்ளாகிறது. இக்கேள்வி ஐன்ஸ்டைனின் 

சார்பியல் கொள்கை  வெளியானபோதே பிறந்து விட்டது.

இறந்த காலத்துக்குள் சென்று அங்கு இளைஞனாக வாழும் தாத்தாவை

பேரன் கொன்று விட்டால், தாத்தா இறந்து போவார். பின் 

பேரன் எப்படிப் பிறப்பான்? பிறக்காத பேரன் எப்படி கடந்த 

காலத்துக்குச் சென்று தாத்தாவைக் கொல்லுவான்? இந்தக் 

கேள்விதான் பாட்டனார் முரண்பாடு (Grandfather paradox) எனப்படுகிறது. 

டெனட் படம் பாட்டனார் முரண்பாடு பற்றிப் பேசுகிறது. ஆனாலும் 

பேரன்களுக்கு ஆதரவாகவே கதை நகர்கிறது.  

 

 பாட்டனார் முரண்பாடு கால வரிசையை (temporal sequence) சேதாரம் செய்கிறது.

காரண காரியப் பொருத்தத்தை (cause and effect relationship) பின்பற்றவில்லை.

ஒருபோதும் பேரனால் கடந்த காலத்துக்குச் சென்று தன் தாத்தாவைக் 

கொல்ல முடியாது. இதுதான் உண்மை.    


ஆனால் பேரன் தாத்தாவைக் கொலை செய்வது ஒரு பிரபஞ்சத்தில் 

என்றும், தாத்தா வாழ்ந்து கொண்டிருப்பது வேறொரு 

பிரபஞ்சத்தில் என்றும் சப்பைக் கட்டு கட்டப் படுகிறது. 

இதை ஏற்பதற்கில்லை. பிரபஞ்சம் என்பது ஒன்றுதான். எனவே ஒன்றுக்கு மேற்பட்ட பிரபஞ்சங்களின் இருப்பு என்ற கற்பனையில் அடைக்கலம் 

புகுவது பயனற்றது. 


பிரம்மாண்டமான காட்சிகள்!

------------------------------------------------

படத்தின் தொடக்கக் காட்சி ஆறு நிமிடம் ஓடுகிறது.

உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் உள்ள ஒரு அரங்கத்தில் இசைக்கச்சேரி. 

அரங்கத்தில் புகுந்த பயங்கரவாதிகளுடன் சண்டையிடும் கதாநாயகனைச்   சுட முனைகிறான் எதிரி. ஆனால் கதாநாயகன் காப்பாற்றப் படுகிறான்.

இந்த இடத்தில் காலத்தின் திசை மாற்றப்பட்ட (inverted bullet) துப்பாக்கிக் குண்டு படத்தில் காட்டப் படுகிறது. பார்வையாளர்களால் 

எடுத்த எடுப்பிலேயே புரிந்து கொள்ள முடியாத இக்காட்சி பின்னர் 

விளங்கும்போது மெய் சிலிர்க்கிறது.  


ஆஸ்லோ  விமான நிலையத்தில் உள்ள ஒரு காவல் மிகுந்த 

அறையின் பேழையில் (vault), படத்தின் வில்லன் ஆந்திரேய் சட்டோர் 

பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒரு ஓவியத்தை கதாநாயகன் 

கவர வேண்டி உள்ளது. அதற்காக அங்கு ஒரு பெரிய தீ விபத்தை 

ஏற்படுத்த வேண்டும். இக்காட்சியை தத்ரூபமாகவும் பிரமாண்டமாகவும் 

அமைக்கும் பொருட்டு, உண்மையிலேயே ஒரு போயிங் 747

விமானத்தை மோதச்செய்து தீ விபத்தை ஏற்படுத்தினார் நோலன்.


ஆக்சிஜன் ஏன்?

--------------------------

படத்தில் கதாநாயகனும் வேறு சிலரும் ஆக்சிஜன் முகமூடியை 

(oxygen mask) அணிந்து கொண்டிருப்பதை சில காட்சிகளில்

பார்க்கிறோம். இது ஏன்? காலத்தின் திசை மாற்றத்துக்கு 

ஆட்பட்டவர்கள் (those who suffer from time reversal) உயிரியல் ரீதியாக  

சில சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். உதாரணமாக, அவர்களின் 

உடலில் நெருப்பு பட்டால், அந்த இடம் வெந்து போகாது. மாறாக  குளிரில் உறைந்து விடும். அவர்களின் நுரையீரல் இயல்பாக வேலை செய்யாது. எனவே ஆக்சிஜன் முகமூடிகள் மூலமாக செயற்கை சுவாசம் அளிக்கப் படுகிறது.

படத்தில் தீப்பிடித்து எரிந்த காரில் மயங்கிக் கிடந்த கதாநாயகனுக்கு ஒரு ஆபத்தும் ஏற்படவில்லை. எப்படி? காலத்தின் திசைமாற்றத்துக்கு அவன் ஆட்பட்டு இருந்ததால்,  காரின் வெப்பம் அவனை ஒன்றும் செய்யவில்லை. அவன்  உடம்பில் தீக்காயங்களும் ஏற்படவில்லை. மாறாக ஹைப்போதெர்மியா என்னும் வெப்பக் குறைவு நோய் ஏற்பட்டது. இதனால் கதாநாயகன் உயிர் பிழைத்தான். அதிகமான வெப்பம் குளிருக்கு இட்டுச் 

செல்லும் அதிசயம் நிகழ்ந்தது.  காலத்தின் திசைமாற்றத்துக்கு (time reversal) ஆட்பட்டவர்களை சுடுகாட்டில் வைத்து எரித்தாலும் அவர்கள் 

சாம்பலாக மாட்டார்கள். எரியும் நெருப்பு அவர்களுக்கு பனி பெய்வது  போலிருக்கும்.


நிறக் குறியீடுகள்!

-------------------------------

படத்தின் உச்சக் காட்சி (climax) நுட்பங்கள் நிறைந்தது. இக்காட்சியில்   

நிகழ இருக்கும் 10 நிமிடத் தாக்குதலானது ராணுவம் மேற்கொள்ளும் இருமுனைத் தாக்குதல் (pincer attack) போன்றது. காலத்தில் முன்னோக்கிய  

10 நிமிடம் என்றும் காலத்தில் பின்னோக்கிய 10 நிமிடம் என்றும் இருமுனைகளில் இருந்தும் இத்தாக்குதல் (temporal pincer movement) 

ஒருசேர நிகழ்கிறது. 


பார்வையாளர்கள் காட்சியை விளங்கிக் கொள்ளும் பொருட்டு 

நிறக்குறியீடுகளை (colour code) அறிமுகம் செய்கிறார் நோலன். 

சிவப்பு  நிறம் காலத்தில் முன்னோக்கிச் செல்பவர்களையும் 

(forward in time) ,  நீல நிறம் காலத்தில் பின்னோக்கிச் செல்பவர்களையும் (backward in time) குறிக்கும். மேலும் காலத்தின் திசைமாற்றத்துக்கு ஆட்பட்டவர்கள் அனைவரும் ஆக்சிஜன் முகமூடி அணிந்திருப்பார்கள். இவ்விரு அடையாளங்களையும் கொண்டு காலத்தில் முன்னோக்கியும் பின்னோக்கியும்  செல்வோரை இனங்காணலாம். 

 

துகளும் எதிர்த்துகளும்!

---------------------------------------

படத்தில் போகிற போக்கில், எலக்ட்ரானின் எதிர்த் துகளான

பாசிட்ரான் (positron the anti particle of electron) பற்றியும் பேசப்படுகிறது.

1897ல்  ஜே ஜே தாம்சன் எலக்ட்ரானையும், 1932ல் காரல் ஆண்டர்சன் பாசிட்ரானையும் கண்டுபிடித்தனர். துகளும் எதிர்த் துகளும்  

மோதினால், பொருளின் அழிவு (annihilation of matter) ஏற்பட்டு, அவை இரண்டுமே அழிந்துவிடும். பல்வேறு துகள் மோதல் பரிசோதனைகளில் நிரூபிக்கப்பட்ட  இக் கருத்தைப் பெரிதும் தோராயமாக படத்தில் கையாள்கிறார் நோலன். 

படத்தில், டர்ன்ஸ்டைல் வழியாக நுழைந்து காலத்தின் திசைமாற்றத்துக்கு 

ஆட்பட்டு  நிற்கும் கதாநாயகனும், மாற்றத்துக்கு ஆட்படாத  அவரின்         

ஒரிஜினலும் ஒருவரை ஒருவர் தொடக்கூடாது என்றும், தொட்டால் 

அழிந்து விடுவார்கள் என்றும் எச்சரிக்கப் படுகிறார்கள். அவர்கள் 

இருவரையும் பொருளாகவும் எதிர்ப்பொருளாகவும் பார்க்கும் 

தவறான பார்வையின் விளைவு இது. அறிவியல் ரீதியாக இது சரியல்ல. ஏனெனில் காலத்தின் திசைமாற்றத்துக்கு ஆட்பட்ட ஒருவர் 

எதிர்ப்பொருளாக (anti matter) ஆகி விடுவதில்லை. யாரும் அல்லது எதுவும் 

எதிர்ப்பொருளாக மாறுவது சுலபமல்ல.


இயற்பியலின் சமச்சீர்மை!

-----------------------------------------

இயற்பியல் விதிகள் சமச்சீர்மை (symmetry) உடையவை. சமச்சீர்மை 

என்றால் என்ன? ஒரு முகத்தில் இரண்டு கண்கள் இருக்கின்றன.

கண்களைப் பொறுத்து சமச்சீர்மை இருக்கிறது.  ஒருவருக்கு ஒரு 

கண் மட்டும் இருந்தால் அது சமச்சீர்மையற்ற நிலை (asymmetry) ஆகும்.


பொதுவாக இயற்பியல் விதிகள் மூன்று விதமான சமச்சீர்மை 

கொண்டிருக்கும். இது CPT சமச்சீர்மை எனப்படும். 

C = Charge (மின்னூட்டம்) 

P = Parity (இட வல அச்சு மாறாமை)

T = Time (காலம்).


ஆனால் ஒழுங்கு குலைவு பற்றிய விதி (Law of entropy) மட்டும் சமச்சீர்மை 

உடையதாக இல்லை என்கிறார் நோலன்.அது உண்மையே.


மாக்ஸ்வெல்லின் பிசாசு!

---------------------------------------

குவாண்டம் கொள்கை கூறும்  ஷ்ராடிங்கரின் பூனை ஒரு சிந்தனைப் 

பரிசோதனை (thought experiment) ஆகும். அது போலவே மாக்ஸ்வெல்லின் பிசாசும் (Maxwell's demon)  ஒரு சிந்தனைப் பரிசோதனை  ஆகும். இதை 

150 ஆண்டுகளுக்கு முன்பு மாக்ஸ்வெல் (James Clerk Maxwell 1831-1879)  

1871ல் முன்மொழிந்தார். வெப்ப இயக்கவியலின் இரண்டாவது 

விதியை (law on entropy) அனுமான அடிப்படையில் (hypothetically)

எப்படி மீறுவது என்று மாக்ஸ்வெல்லின் பிசாசு சொல்லித் தருகிறது.


இயற்கையான நிகழ்வான ஒழுங்குகுலைவை (entropy) அதிரடியாக 

மாற்றுகிற தைரியத்தை  கிறிஸ்டோபர் நோலன் யாரிடம் இருந்து 

பெற்றார்? மாக்ஸ்வெல்லிடம் இருந்துதான். வெப்ப இயக்க இயலின் 

இரண்டாம் விதியை மீறுவதற்கு அன்றே வழிகாட்டியவர் அவர்தான். அதிகரித்துக் கொண்டே சென்ற ஒழுங்கு குலைவை (entropy) 

(தமது சிந்தனைப் பரிசோதனையில்) குறைத்துக் காட்டியவர் அவர்தான். ஆக மாக்ஸ்வெல்லின் பிசாசுதான் நோலனின் டெனட்டாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே 

நோலனை குற்றவாளி ஆக்க முடியாது. 

******************************************************

    

 


      


    


 

    

  

வியாழன், 17 டிசம்பர், 2020

 வாக்ய பஞ்சாங்கம் தவறு என்று விஞ்ஞானம் மூலம் இப்போது நிரூபணம் ஆகியுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வரும் 2020 டிசம்பர் மாசம் 21ம் தேதி குருவும் ஷனியும் 0.1 டிகிரிக்குள் மிகவும் நெருக்கமாக இணைகின்றன என்று சொல்கிறார்கள்.

கடந்த நவம்பர் மாசம் குரு மகரத்திற்கு பெயர்ச்சியாகி இப்போது மகரத்தில் 5 டிகிரியை கடந்துவிட்டார். வாக்ய பஞ்சங்கத்தினர் ஷனி டிசம்பர் 27ம் தேதி தான் தனுஷில் இருந்து மகரத்திற்கு பெயர்ச்சி ஆகும் என்று சொல்கிறார்கள்.
பிறகு எப்படி டிசம்பர் 21ம் தேதி தனுஷில் உள்ள ஷனி மகரத்தில் 5 டிகிரி கடந்து 276 டிகிரியில் உள்ள குருவை மிகவும் நெருக்கமாக 0.1 டிகிரிக்குள் நெருக்கும்?? எனவே வாக்ய பஞ்சாங்கப்படி ஷனி பெயர்ச்சி தவறு.
திருக்கணிதப்படி 2020ம் வருஷம் ஜனவரி 24ம் தேதி ஷனி பெயர்ச்சி நடந்திருந்தால் மட்டுமே விஞ்ஞானப்படி இந்த டிசம்பர் மாசம் 21ம் தேதி மகரத்தில் 276 டிகிரியில் ஷனியும் குருவும் 0.1 டிகிரிக்குள் மகரத்தில் நெருக்கமாக இணைய முடியம். எனவே திருக்கணித பஞ்சாங்க முறை தான் சரி என்று நிரூபணம் ஆகுகிறது.
வாக்ய பஞ்சாங்கம் தவறு என்று தெரிந்து தான் மற்ற மாநிலங்கள் மற்றும் மற்ற மாநில கோவில்கள் வாக்ய பஞ்சாங்கத்தை தவிர்த்துவிட்டு திருக்கணிதத்தை பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் மட்டும் தான் இதுபற்றி விழிப்புணர்வு இல்லாததால் தமிழக கோவில்களில் இன்னும் வாக்ய பஞ்சாங்கம் நடைமுறையில் உள்ளது.

புதன், 16 டிசம்பர், 2020

மாவோயிஸ்ட் தோழர் விவேக் மதுரையில் கைது!

இக்கைது நியாயமற்றது! தமிழக அரசே,

தோழர் விவேக் அவர்களை விடுதலை செய்!

---------------------------------------------------------------------

இன்று காலை (16.12.2020) மாவோயிஸ்ட் தோழர் 

விவேக் அவர்களை மதுரை தல்லாகுளம் காவல்துறை 

கைது செய்துள்ளது. UAPA சட்டத்தின் கீழ் விவேக் 

கைது என்றும் UAPA  சட்டத்தில் அல்ல, வேறு ஒரு பிரிவில் 

கைது என்றும் மாறுபட்ட தகவல்கள் வருகின்றன.

இந்த நிமிடம் வரை சரியான தகவல் எது என்று 

உறுதி செய்ய இயலவில்லை.


சில மாதங்களுக்கு முன்பு, ஆங்கில ஏடு இந்துஸ்தான் 

டைம்சில், ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்ட செய்தி 

வெளியாகி இருந்தது. அதைத் தமிழில் மொழிபெயர்த்து 

தமது முகநூல் பக்கத்தில் பதிவாக வெளியிட்டார் தோழர் 

விவேக் என்பதே அவர் இழைத்த பயங்கரவாதச் செயல் (??) 

என்று கருதுகிறது போலீஸ். அதையொட்டியே இந்தக் கைது.     


தோழர் விவேக் அவர்களை உடனடியாக விடுதலை 

செய்ய வேண்டும். அவர் மீதான பித்துக்குளித் தனமான 

மொழிபெயர்ப்பு வழக்கை காவல்துறை உடனடியாக 

வாபஸ் பெற வேண்டும்.


மாவோயிஸ்டுகளைப் பொறுத்து அல்லது மார்க்சிஸ்ட் 

லெனினிஸ்டுகளைப் பொறுத்து, தமிழ்நாட்டில் 

சட்ட விரோதச் செயல்கள் (unlawful activities) என்பதற்கு 

முற்றிலும் இடமில்லை. எந்தத் தனிநபரோ அல்லது

மாவோயிச அமைப்போ சட்ட விரோதச் செயல்களில்

ஈடுபடவில்லை; அவர்களின் அஜெண்டாவில் சட்ட 

விரோதச் செயல்களுக்கு இடமே இல்லை.


Unlawful activities என்பனவற்றை யாரும் isolated chamberல் 

வைத்துச் செய்ய இயலாது. Unlawful activitiesஐ மேற்கொள்ள 

வேண்டுமெனில், அதற்கான சாதகமான புறச் சூழ்நிலைகள்,

அகநிலை ரீதியான வலிமை, logistic support ஆகியவை 

போதிய அளவில் தேவை. இவை எதுவும் தற்போது 

மாவோயிஸ்டுகளுக்கு இல்லாத சூழலில் UAPA சட்டப் 

பிரயோகம் என்பது முற்றிலும் தேவையற்றது ஆகும்.


எனவே தோழர் விவேக் மீதோ அல்லது வேறு எவர் மீதோ 

UAPA சட்டத்தைப் பிரயோகிப்பது முற்றிலும் கேலிக்கூத்து 

ஆகும். முகநூலில் உள்ள கியூ பிராஞ்சு ஆட்காட்டிகள் 

ஸ்கிரீன் ஷாட் எடுத்துத் தருகிற முகநூல் பதிவுகளின் 

அடிப்படையில் மாவோயிஸ்டுகளைக் கைது செய்ய 

தமிழக போலீஸ் முடிவு செய்யுமானால், அது சிரிப்புக்கு 

இடமாகிப் போகும்.


மார்க்சிஸ்டு லெனினிஸ்டுகளின் கவனத்திற்கு,

முகநூலில் உள்ள கியூ பிராஞ்சின் ஆட்காட்டிகளிடம் 

எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் 

கொள்கிறோம். மாறுவேடத்தில் மார்க்சிய முகாமில் 

இருக்கும் கயவர்கள் அவர்கள். **********************************************************        


சனி, 12 டிசம்பர், 2020

 ஐஓடி தொழில்நுட்பம் வாயிலாக சேவை 

வழங்க BSNL முடிவு செய்துள்ளது.

இதை NBயிலும் வழங்கலாம். NB இல்லாமலும் 

வழங்கலாம். தனியார் நிறுவனங்கள்  NB IoT

தேவையில்லை என்று எடுத்த முடிவு 

அவர்களின் சொந்த முடிவு. BSNLஐ விட்டு 

முதலில் நோட்டம் பார்க்கலாம் என்று தனியார் 

எவரும் முடிவு எடுக்கவில்லை. 


அப்படி எல்லாம் முடிவு எடுக்க முடியாது என்று 

சுனில் மிட்டலுக்கும் அம்பானிக்கும்  நன்கு 

தெரியும். சதா சர்வ காலமும் BSNLஐ இழிவு 

படுத்தும் நோக்கிலேயே சிந்திப்பது சரியல்ல. 

BSNLஇடம் மற்றும் அதன் ஊழியர்களிடம்  

தாழ்வு மனப்பான்மை சிறிதும் இல்லை. அது 

BSNLக்கு வெளியே இருக்கிறது. 


NB IoT சேவை என்று முடிவெடுக்க BSNL யாரைக் கேட்க 

வேண்டும்? கடவுளையா? இது எங்கள் முடிவு.

இதை நாங்கள் செயல்படுத்துவோம். நாங்கள் 

வெற்றியடைவோம்.     

முற்றிலும் புதிய தொழில்நுட்பம்!

தனியார் நிறுவனங்களிடம் இல்லை!

BSNL அறிமுகம் செய்கிறது!

தனியார் நிறுவனங்கள் மூடுவிழா!

----------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------------- 

இந்தியா 5G சேவையில் தொடர்ந்து உலக அளவில் 

பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது பின்தங்கியே உள்ளது.

அறிவிக்கப்பட்ட 5G ஏலம் கொரோனா காரணமாகத் 

தள்ளி வைக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டானது ஒன்றுமே 

செய்ய  இயலாமல் போய் வீணே கழிந்தது. 


ஒத்தி வைக்கப்பட்ட 5ஜி ஏலம்  (4ஜி மற்றும் 5ஜி)  2021ல் 

நடைபெற வேண்டும். எனினும் இதற்கான தேதி 

இன்னும் அறிவிக்கப் படவில்லை. 5ஜி ஏலத்தில் 

பிரதானமாக ஏர்டெல், வோடாபோன், ரிலையன்ஸ் 

ஜியோ ஆகிய நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.


மத்திய அரசு 5ஜி ஏலத்தை உரிய நேரத்தில் தாமதமின்றி 

நடத்தும் என்பதற்கான அறிகுறிகள் இல்லை. மேற்கு வங்கம் 

தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் 2021 ஏப்ரலில் 

சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.  இதைக் 

கணக்கில் கொண்டால், 2021ன் பின்பாதியில்தான் ஏலம் 

அறிவிக்கப் படக்கூடும். இந்தத் தாமதம் யாருக்கு லாபமாக 

அமையும்? 


ஏர்டெல்லுக்கா? அல்லது ஜியோவுக்கா?

அதாவது சுனில் மிட்டலுக்கா அல்லது அம்பானிக்கா?

இக்கேள்விக்கு இடதுசாரிகள் என்போர் பதில் கூற வேண்டும்.


ஜி ஏலம் எப்போது நடைபெற்றாலும் அதில் BSNL

பங்கேற்கப் போவதில்லை. தற்போது கையில் உள்ள 

4ஜியை வைத்துக் கொண்டு SERVICE ROLL OUT  செய்வதே 

BSNLன் வேலை.


மற்ற நிறுவனங்களிடம் 5ஜி இருந்து, BSNLஇடம் அது 

இல்லாமல் போனால் BSNLக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் 

அல்லவா? போட்டியில் பின்தங்கக் கூடும் அல்லவா?


இந்தக் கேள்விக்கு இல்லை என்று பதிலளிக்கிறார் 

பிரவீன் குமார் புர்வார். யார் இவர்? இவர்தான் BSNLன் 

CMD, இவர் என்ன சொல்கிறார்? இந்தியாவிலேயே 

முதல் முறையாக செயற்கைக்கோள் அடிப்படையிலான 

குறுகிய அலைக்கற்றையை (ஐஓடி தொழில்நுட்பத்துடன் 

கூடியது) BSNL பெற்றுள்ளது. இதை BSNL அறிமுகம் 

செய்து SERVICE ROLL OUT செய்யும்போது சந்தையில் 

முதலிடத்தை BSNL பெற்று விடும்.

(ஆங்கிலத்தில்: First Satellite based narrowband IoT; IoT = Internet of Things) 

BSNLஇடம் 5ஜி இல்லாத குறையை இது ஈடு கட்டி விடும்.


ஐஓடி என்றால் என்ன?  Satellite based narrowband என்றால் 

என்ன? இவற்றை விளக்கி தனிக்கட்டுரை எழுதப்படும்.

அறிவியல் தொழில்நுட்ப அறிவு இல்லாமல் இன்றைய 

டெலிகாம் இண்டஸ்டிரி பற்றியோ BSNL பற்றியோ 

புரிந்து கொள்ள இயலாது.


எனவே BSNL அழிந்து விட்டது, BSNLஐ அம்பானி விழுங்கி 

விட்டார் என்றெல்லாம் அவதூறு பேசும் தனியார் 

நிறுவனக் கைக்கூலிகள், அருகிலுள்ள ரயில் 

நிலையத்துக்குச் சென்று, ரயில் வரும்போது 

தண்டவாளத்தில் தலையைக் கொடுத்துச் செத்துப் 

போகும்படி கேட்டுக் கொள்கிறேன். 


BSNL எதிர்ப்பாளர்களான உங்களுக்கு உயிர் வாழும் 

உரிமை  இல்லை.

******************************************************



வியாழன், 10 டிசம்பர், 2020

வலதுசாரியும் இடதுசாரியும்!

--------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-----------------------------------------------

முன் அறிவிப்பு:

எனது கருத்துக்களோடும் நடைமுறையோடும் உடன்படாதோர் 

எனது பதிவுகளைப் படிக்க வேண்டாம். அவர்கள் வெளியேற 

வேண்டும்.

---------------------------------------------------------------------------- 

ஒரு அறிவுஜீவி என்பவன் முழுநேர இடதுசாரி என்றார்

ழான் பால் சார்த்தர். பிரெஞ்சு அறிஞரான சார்த்தர் 

இலக்கியவாதியும் தத்துவஞானியும் ஆவார். 1964ல் 

இலக்கியத்துக்கான நோபல் பரிசு இவருக்கு 

வழங்கப்பட்டபோது அதை ஏற்க மறுத்தவர் சார்த்தர். 

அவரைப் பற்றி மேலும் அறிந்திட உரிய GK bookஐப் படிக்கவும்.


ஒரு அறிவுஜீவி என்பவன் முழுநேர இடதுசாரி என்பதில்  

ஒரு தற்குறியானவன் முழுநேர வலதுசாரி என்ற 

பொருளும் உள்ளடங்குகிறது. பிரசித்தி பெற்ற அவரின்  

வாக்கியத்தில் இருந்து இரண்டு சமன்பாடுகள் 

கிடைக்கின்றன.

1) அறிவுஜீவி = இடதுசாரி. 

2) கல்வி கற்காதவன் = வலதுசாரி. 

  

படிக்காமல் யாரும் அறிவைப் பெற முடியாது.

எந்த அளவுக்குப் படிக்கிறோமோ அந்த அளவுக்குத்தான் 

அறிவு ஏற்படும் என்கிறார் வள்ளுவர். பள்ளி கல்லூரி 

வழி முறையாகப் பயில்வதும் நூலகங்கள் வாயிலாக 

சுயமாகப் பயில்வதும் படிப்பே ஆகும்.


தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் 

கற்றனைத் தூறும் அறிவு.

(இக்குறளின் பொருள் தெரியாதவர்கள் தெரிந்து 

கொள்ளவும்).


இடதுசாரி, வலதுசாரி என்பதன் வரையறை என்ன?

இச்சொற்கள் (Left, Right) நிலவுடைமைச் சமூக 

காலத்தில் ஏற்பட்டவை. அரசை எதிர்ப்பது இடதுசாரி

என்றும், ஆதரிப்பது வலதுசாரி என்றும் ஏற்பட்டது.

அரசாங்கம், மதங்களின் தலைமைப் பீடம் உள்ளிட்ட

சகல establishmentஐயும் எதிர்ப்பது இடதுசாரி ஆகும்.


வலதுசாரி, இடதுசாரி போன்ற சொற்கள் உருவான 

காலத்தில்  இருந்த அரசுகள் கொடிய மக்கள் விரோத 

அரசுகள். இன்றைய அரசுகள் அவ்வாறில்லை.

இன்று மக்கள் நல அரசுகள் (Welfare state) செயல்பட்டு 

வருகின்றன. சத்துணவு (மேனன்), இலவச பஸ் பாஸ் 

(கருணாநிதி), இலவச லாப்டாப் (ஜெயலலிதா), 69 சத 

இட ஒதுக்கீடு என்றெல்லாம் மக்கள் நலத் திட்டங்கள் 

செயல்படுகின்றன.


ஜெர்மனியில் ஒன்றாம் வகுப்பு முதல் பிஹெச்டி (PhD)

வரையிலான கல்வி முற்றிலும் இலவசம். நிச்சயமாக 

இன்றைய நவீன அரசுகள் முந்தைய நிலவுடைமைச் சமூக 

அரசுகள் போன்று மக்கள் விரோத அரசுகள் அல்ல. 


1) பெரியம்மை, போலியோ போன்ற நோய்களை உரிய 

தடுப்பூசிகள் மூலம் ஒழித்தது இந்திய அரசே.  இன்று 

தமிழ்நாட்டில் நிலவும் அவலம் என்னவெனில், 

தடுப்பூசியை எதிர்ப்பவன் இடதுசாரி என்று அழைக்கப் 

படுகிறான்.


2) மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை அறிமுகப் 

படுத்தி தேர்தல் முறையை அறிவியல்வழியில் 

மேம்படுத்தியது இந்திய அரசு. இன்று EVMகளுக்கு 

எதிரான கடைந்தெடுத்த பிற்போக்குத்தனமான 

அவதூறுப் பிரச்சாரம் தமிழ்நாட்டில்தான் உச்சத்தில் 

இருக்கிறது. அறிவியலுக்கு எதிரான இந்தப்  பிற்போக்குப் 

பிரச்சாரம் செய்பவன் அத்தனை பேரும் தன்னை 

இடதுசாரி என்று அழைத்துக்கொண்டு சுயஇன்பம் 

அடைகிறான்.  


3) இந்தியாவிலேயே காங்கிரஸ் கட்சியில்தான் IQ  

அதிகமுள்ள தலைவர்கள் ஏராளம் இருக்கின்றனர். 

ப சிதம்பரம் (120), சசி தரூர் (119.5), கபில் சிபல் (118), 

அபிஷேக்சிங் மனுவி (118), ஜெய்ராம் ரமேஷ் (119), 

வீரப்ப மொய்லி (118) என்று பல மேதைகள் உள்ளனர். 

EVMகளைக் கொண்டு மோடி மோசடி செய்தால், அதைப் 

பார்த்துக் கொண்டிருக்க இவர்கள் என்ன முட்டாள்களா?


ப சிதம்பரத்தின் மலத்துக்குப் பெறாத பயல் நீ! EVMல் 

மோசடி செய்யலாம் என்று உன்னுடைய புழுத்த மூளைக்குத் 

தெரிந்த விஷயம் சிதம்பரத்துக்குத் தெரியாதா? 

சசி தரூருக்குத் தெரியாதா? 


"அவர்கள் எல்லாம் முட்டாள்கள், நீ அவர்களை விட 

அறிவாளியாடா?" உண்மையிலேயே EVM மோசடி 

மூலம் ஒரு தொகுதியில், ஒரே ஒரு தொகுதியில் 

பாஜக வெற்றி பெற்றிருக்கும் என்றால், ப சிதம்பரம் 

இந்தியத் தேர்தல் ஆணையத்தையே கலைத்து 

விடுவார். தலைமைத் தேர்தல் கமிஷனரை சிறைக்குள் 

தள்ளி விடுவார். ப சிதம்பரத்தின் ஆற்றல் அத்தகையது. 


ஆக, EVMகளை எதிர்க்கிற பிற்போக்குப் பிண்டம் 

எவ்வாறு இடதுசாரி ஆவான்? 


4) புயல் முன்னறிவிப்பு, வானிலை முன்னறிவிப்பு ஆகிய 

பணிகளை மத்திய மாநில அரசுகளே மேற்கொள்ளும்   

என்று இந்தியாவின் பேரிடர் மேலாண்மைச் சட்டங்கள் 

வரையறுக்கின்றன. புயல் முன்னறிவிப்புப் பணிகளில் 

தனியாரையோ NGOகளையோ இந்தியாவின் பேரிடர் 

மேலாண்மைச் சட்டங்கள் அனுமதிக்கவில்லை.

வானிலை முன்னறிவிப்பில் தனியாரையும் NGOகளையும் 

அனுமதிக்க வேண்டும் என்று சொல்பவன் ஒரு சிந்தனைக்

குள்ளனாகத்தான் இருக்க முடியுமே தவிர,  இடதுசாரியாக 

எவ்வாறு இருக்க முடியும்? தனியார் வானிலைக் 

கணிப்பாளர்கள் என்று திரியும் குட்டி முதலாளித்துவ

ஆசாமிகளை ஆதரித்துக் கொண்டு, வானிலை 

முன்னறிவிப்பில் தனியார்மயத்தை ஆதரிப்பவன் 

எப்படி இடதுசாரி ஆவான்?


5) BSNLன் சிம்மைத்தான் நீங்கள் வாங்க வேண்டும் என்று 

நாங்கள் உங்களை வற்புறுத்தவில்லை. அம்பானியின் 

தாசர்களாகிய நீங்கள் Reliance Jio வாங்குங்கள். ஆனால் 

BSNL அழிந்து விட்டது என்றோ, BSNLஐ அம்பானி வீழ்த்தி 

விட்டார் என்றோ அவதூறுப் பிரச்சாரம் செய்யாதீர்கள். 


BSNLக்கு எதிராக அவதூறுப்பிரச்சாரம் செய்பவன் 

எவ்வாறு இடதுசாரி ஆவான்? அவன் அம்பானிதாசனே!

அவன் வலதுசாரியே!


இடதுசாரி முகாமில் மாறுவேஷத்தில் ஒளிந்து 

கொண்டிருக்கும் வலதுசாரிகளை அம்பலப் 

படுத்தி உள்ளேன். தமுஎகசவின் வலதுசாரிகள்,

மாலெ குழுக்களின் வலதுசாரிகள், உதிரிகளாக 

உள்ள வலதுசாரிகள், சவுண்டிப் பார்ப்பான் 

காலச்சுவடு கண்ணனின் ஆதரவாளர்கள், உயிர்மை 

மனுஷ்ய புத்திரனின் கூட்டம், மருதையனின் கூட்டம் 

என்று பலரும் அடிவயிற்றில் குத்துப் பட்டது போல் 

ஆகியிருக்கக் கூடும். இருக்கட்டும்.

**************************************************************** 


        


      


     

 


       

  


    

ஞாயிறு, 6 டிசம்பர், 2020

தரையில் இறங்கும் விமானங்கள்!

-----------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

---------------------------------------------------

அன்று இலக்கியச் சிந்தனைக் கூட்டம். பெரும்   

உற்சாகத்துடன் நாங்கள் விடுதி அறையில் 

இருந்து கிளம்பினோம். இது வருடாந்திரப் 

பரிசளிப்புக் கூட்டம்.


இலக்கியச் சிந்தனை என்னும் அமைப்பை தங்கள் 

செலவில் ப சிதம்பரம் மற்றும் அவரின் உடன்பிறந்தோர் 

நடத்தி வருகின்றனர். இலக்கியச் சிந்தனையின் 

அங்கீகாரம் பெரும் கெளரவத்துக்கு உரியது


அப்போது ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்த

இந்துமதியின் தரையில் இறங்கும் விமானங்கள் நூலுக்கு 

சிறந்த நாவலுக்கான விருது கிடைக்கும் என்று நாங்கள் 

பெரிதும் எதிர்பாரத்து இருந்தோம். படித்து முடித்து விட்டு 

வேலை தேடுகிற அல்லது வேலை பார்க்கிற பல்லாயிரக் 

கணக்கான இளைஞர்கள் நடுவில் அந்த நாவல் சக்தி 

மிக்க தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.


ஆனால் இந்துமதியின் நாவலுக்குப் பரிசு கிடைக்கவில்லை.

இது எங்களுக்கெல்லாம் ஏமாற்றமாக இருந்தது.

கி ராஜநாராயணன் எழுதிய கோபல்ல கிராமம் என்ற 

நாவல் தேர்ந்தெடுக்கப் பட்டது. நாங்கள் அதை ஏற்கனவே  படித்திருந்தோம். அதுவும் சிறந்த நாவலே.  


இந்துமதியின் நாவல் பல்லாயிரக் கணக்கான 

இளைஞர்களை ஈர்த்ததன் காரணம் தங்களையே 

அந்நாவலின் பாத்திரங்களாக வாசகர்கள் உணர்ந்ததே 

ஆகும். அந்த அளவுக்கு characterization யதார்த்தமாக 

இருந்தது.    


நாவலின் கதாநாயகன் ஒரு நடுத்தர வர்க்க ஏழைக்

குடும்பத்தைச் சேர்ந்தவன்.நல்ல மதிப்பெண்களுடன்

SSLC தேறிய நிலையில் கல்லூரியில் சேர்ந்து PUC

படிக்க வேண்டும் என்று காத்திருப்பவன். ஆனால்  

குடும்ப வறுமை காரணமாக அவனைக் கல்லூரிப் 

படிப்பு  படிக்க வைக்க அவனது தந்தையால் இயலவில்லை. 

வேலைக்கு அனுப்புகிறார். 


PUC படிக்க விரும்பியது ஒரு இளைஞன் நியாயமாக 

அடைய விரும்பிய உயரம். ஆனால் இந்தக் கொடிய 

சமூகம் அந்த உயரத்தை அடைய அவனை 

அனுமதிக்கவில்லை. இதைப்போல் நாவலின் இறுதியில் 

யார் எவரும் தாம் அடைய விரும்பிய உயரங்களை அடைய 

இயலாமல் அத்தனை விமானங்களும்  தரையில் 

இறங்கி விடும். தரையில் இறங்கும் விமானங்கள் 

என்றால், விரும்பிய உயரத்தை அடைய இயலாமல் 

உயரம் இழத்தல் (altitude loss) என்று பொருள்.  


அன்று உயரம் இழந்த ஒவ்வொரு சாராரும் தங்கள் 

வழியைப் பார்த்துக் கொண்டனர். ஒரு சிலர் இந்தக் 

கொடிய சமூகத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று 

விரும்பினர். அப்போது நாடு முழுவதும் நக்சல்பாரி 

பேரெழுச்சி முழுவீச்சில் நடந்து கொண்டிருந்தது.


மாணவர்களும் இளைஞர்களும் புரட்சியில் 

பங்கெடுக்குமாறு சாரு மஜூம்தார் அறைகூவல் 

விடுத்தார். எழுபதின் பத்தாண்டுகளை விடுதலையின் 

பத்தாண்டுகளாக மாற்றுவோம் என்ற முழக்கத்தை 

(The decade of 70s will be the decade of liberation) அப்போது 

சாரு மஜூம்தார் முன்வைத்தார்.


இந்த மொழிபெயர்ப்பு சரியில்லையே என்கிறார் தோழர் 

தியாகு. அன்று புரட்சிப்பணி சரியாக நடக்கவில்லையே  

என்று கவலைப்பட்ட தோழர் தியாகு இன்று 

மொழிபெயர்ப்பு சரியில்லையே என்று கவலைப் 

படுகிறார். கணிசமாக உயரம் இழந்தவர் அவர்.


எனினும் இந்த உயர இழப்புக்குத் தான் காரணம் அல்ல என்று 

அவர் நிரூபித்து விடுவாரேயானால், அவர் குறித்து 

எதிர்மறையாகக் கூற என்னிடம் எதுவும் இருக்காது. 



சாரு மஜூம்தாரின் அறைகூவலை ஏற்று நக்சல்பாரி 

இயக்கத்தில் சேர முடிவு செய்தோம். கட்சியில் சேர்வ்து

அவ்வளவு எளிதல்ல. கட்சித் திட்டத்தை ஏற்றுக் கொண்டால் 

மட்டுமே கட்சியில் சேர இயலும். திட்டத்தை ஏற்றுக் 

கொண்டோம்.இறுதியில் ஒரு சுபயோக சுபதினத்தில் 

தொழில்முறைப் புரட்சியாளர் (Professional Revolutionary)

முன்னிலையில் நாங்கள் இருவரும், நானும் தோழர் 

கே பாலகிருஷ்ணனும் நக்சல்பாரிப் பேரியக்கத்தில் 

பெருமிதத்துடன் எங்களை இணைத்துக் கொண்டோம்.

எங்களைக் கொண்டு கட்சி யூனிட் அமைக்கப் பட்டது.


இது லாபம், 

இது நஷ்டம் 

என்று தொழில்முறைப் புரட்சியாளரால்

எங்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லப் பட்டது.

அதன் பிறகும் லாபத்தைப் புறந்தள்ளி விட்டு 

நஷ்டத்தை விரும்பி ஏற்றோம் நாங்கள். எங்களுக்கு முன்பே 

கட்சியில் சேர்ந்திருந்த தோழர் ஸ்ரீரெங்கன் எங்களை 

வரவேற்றார். (எனக்கும் தோழர் பாலகிருஷ்ணனுக்கும்

கால்குலஸ் கற்பித்த எங்கள் கல்லூரியின் கணித

ஆசிரியர் தோழர் ஸ்ரீரெங்கன்)  


முற்றிலும் தெளிந்த முடிவான போர் இதாகுமே

முகமலர்ச்சியோடு உயிர்த் தியாகம் செய்ய நில்லுமே!


(தொழிலாளர் ஊர்வலத்தில் பியதோர் மாசின் பாட்டு, தாய் நாவல்)

**************************************************************   ------


      







  


        

.







.    .

   

 புயலில் இருந்து கடவுள் காப்பாற்றுவார் அல்லது காப்பாற்றினார் என்பது எவ்வளவு மோசமான இறை நிந்தனை!

அவரே எல்லாமாக எல்லையற்றவராக இருக்கும் போது எதனிடம் இருந்தாவது கடவுள் காப்பாற்றுவார் என்பது கடவுளுக்கும் அப்பால் ஒரு சக்தி இருக்கிறது என்றாகிவிடும்!
நான் நம்பும் கடவுள் எல்லாம் , முக்காலமும் அறிந்தவர் அவருக்கு நான் ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைப்பது அவரது சக்தியை சந்தேகிப்பதாக அமைந்துவிடும். எனவே நான் அவரிடம் எதுவும் சொல்வதேயில்லை...
கடவுள் ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதே ஒருவகை இறை மறுப்பு! ஏனெனில் தனக்கு அப்பால் ஒரு சக்தி அல்லது பொருள் இருப்பவர்கள் மட்டுமே ஏதாவது செய்து தொலைக்க வேண்டிக் கிடக்கிறது....
"எல்லாமாகி நிற்கும் எல்லையற்ற சக்தி
அர்த்தம் இழந்து விடுகிறது" இந்த வார்த்தைகளை புரிந்து கொள்ள ஆழமான உணர்தல் தேவை! கடவுளை உணர்வதை போல்...,
4
1 Share
Like
Comment
Share