ஞாயிறு, 31 ஜூலை, 2022

 பெரியாரியம் ஒரு சொத்துடைமைத் 

தத்துவம்!

---------------------------------------------------------- 

மார்க்சியம் என்பது சாராம்சத்தில் 

தனிச்சொத்துரிமையை ஒழிப்பதுதான் 

(abolition of private property) என்றார் 

மார்க்ஸ்.


பெரியாரியம் என்பது முற்ற முழுக்க 

தனிச்சொத்தைப் பாதுகாக்கும் தத்துவம்.

தனது சொத்துக்களுக்கு அதீத 

முக்கியத்துவம் கொடுத்த பெரியார், 

அச்சொத்தைக் காப்பாற்ற ஒரு வாரிசு 

தேவை என்று தமது 72ஆம் வயதில் 

27 வயது இளம்பெண்ணை மணந்தார்.


சொத்துடைமையைப் பாதுகாக்கும் 

தத்துவமான பெரியாரியத்தை 

சொத்துரிமையை அழிக்கும் 

மார்க்சியத்துடன் சேர்க்க முயல்வது 

பேதமையுள் எல்லாம் பேதைமை ஆகும்.


அம்பேத்காரியம் அல்லது தலித்தியம் 

என்னும் தத்துவமும் தனிச்சொத்துரிமையைப் 

பாதுகாக்கும் தத்துவமே. 






மார்க்சியம் வர்க்க ரீதியாக மக்களை 

அணிதிரட்டி வர்க்கப்போரை நடத்தும்.

பெரியாரியமும் தலித்தியமும் அடையாள 

அரசியலை மட்டுமே நடத்தும். இவ்வாறு 

கொள்கை, நடைமுறை என்று எல்லாவற்றிலும்

கடும் முரண்பாடு கொண்டுள்ள 

பெரியாரியத்தை மார்க்சியத்துடன் எப்படி 

ஒன்றாக வைக்க முடியும்? 

      

வெள்ளி, 29 ஜூலை, 2022

வியாழன், 28 ஜூலை, 2022

 

Centre lays Rs 1.64L cr BSNL revival plan, to pump Rs 26316 cr on rural digital connectivity

The move is seen as a part of Centre’s broader digital inclusion plan after the Union cabinet cleared another supplementary Rs 26,316 crore for 4G connectivity in remote villages

------------------------------------------------
Breaking the silos to fetch the rural digital connectivity quest, the Union cabinet led by Prime Minister Narendra Modi in a much surprising move cleared a mega Rs 1.64 lakh crore revival package for ailing public sector telecom operator Bharat Sanchar Nigam Limited (BSNL) on Wednesday. The Union cabinet has also approved the merger of Bharat Broadband Nigam Limited (BBNL) with BSNL.

The move is seen as a part of Centre’s broader digital inclusion plan after the Union cabinet cleared another supplementary Rs 26,316 crore package to provide 4G mobile services in uncovered villages across the country. Interestingly the project that looks to fast track 4G mobile services in about 24,680 uncovered villages in remote areas will be executed by BSNL. The project also looks to upgrade 2G/3G connectivity with 4G in an additional 6,279 villages.

“Connectivity brings opportunities, progress and prosperity. Today’s Cabinet decision on enhancing connectivity in uncovered villages is going to transform lives of people in these areas and ensure better service delivery as well,” PM Modi said in a tweet.


According to the Union ministry of communications, Ashwini Vaishnaw, BSNL is already in process of deployment of Atmanirbhar 4G technology stack. The 4G connectivity project in uncovered villages is seen as one of key government initiatives for smooth delivery of e-governance services, banking services, tele-medicine and tele-education, which can be accessed through mobile broadband and may generate new employment opportunities in rural areas.

Meanwhile, addressing a media briefing after the cabinet meeting Union minister of Railways, Communications, Electronics and Information Technology, Ashwini Vaishnaw said the BSNL ‘revival’ package is a “combination of cash support and non-cash support.”

According to the Union minister, as part of Rs 1.64 lakh crore revival package, BSNL will be allotted spectrum in 900/1800 MHz band administratively at the cost of Rs 44,993 crore through equity infusion. Further to promote indigenous technology development, BSNL is in process of deploying Atmanirbhar 4G technology stack. To meet the projected capital expenditure for next 4 years, Centre will fund a capex of Rs 22,471 crore. The new BSNL revival plan eyes a turn-around and profitability in FY 2026-27.

Further, the Union government will provide Rs 13,789 crore to BSNL as viability gap funding for commercially unviable rural wire-line operations done during 2014-15 to 2019-20 and increase the authorized capital of BSNL from Rs 40,000 crore to Rs 1,50,000 crore in lieu of AGR dues, provision of capex and allotment of spectrum.

“In another important decision, the Union Cabinet chaired by PM Shri @narendramodi Ji approved the revival package of BSNL amounting to ₹1.64 Lakh crores. This will help BSNL to improve the quality of their existing services, roll out 4G services and become financially viable,” Union home minister Amit Shah tweeted.


As per Union communications minister Vaishnaw said, “the attrition of BSNL customers has stopped. Revenue which was going down has become stable at Rs 19,000 crore.” The minister said the move to merge BBNL with BSNL will facilitate the wider utilisation of infrastructure laid under BharatNet.

The infrastructure created under BharatNet will however, continue to be a national asset and accessible on a non-discriminatory basis to all the Telecom Service Providers, according to an official statement released after the cabinet meeting.

With the BBNL merger, BSNL is likely to get an additional 5.67 lakh kilometres of optical fibre which has been laid across 1.85 lakh village panchayats in the country using the Universal Service Obligation Fund (USOF). Currently, BSNL has an optical fibre cable network of over 6.83 lakh kilometres.

The Union minister said the revival package has three elements -- to improve services, de-stress the balance sheet and expansion of fibre network. To de-stress BSNL balance sheet Centre will provide sovereign guarantee to these PSUs for raising long term loans. They will be able to raise long term bonds for an amount of Rs 40,399 crore. This will help restructuring existing debt and de-stressing the balance sheets.

Besides a financial support for AGR dues of BSNL amounting to Rs 33,404 crore will be settled by conversion into equity. Government will provide funds to BSNL for settling the AGR/GST dues. BSNL will also re-issue preference shares of Rs 7,500 crore to the government.


 Union Cabinet today (yesterday) approved the ₹1.64 lakh crore revival package for BSNL, Also approves the merger of BSNL and BBNL.

Public Reaction
Modi govt wasting money on a dead horse. Total waste. Sell BSNL
My Analysis
As per TRAI, Rural Tele-density is just 58.50% as of Dec' 21. As BSNL & BBNL merger is also approved, this signifies that GoI is trying to cover Rural Population with 4G connectivity.
Private Operators will be moving to 5G and later 6G, there would be a big vacuum for 4G services. Even today these private operators don't offer service in low ARPU zones, especially Village and Sub-Urban population areas. That must not be left behind since in the coming future most of the Govt services will be delivered directly over the Internet, GPRS texting and Phone
When it comes to infrastructure, BSNL even today is miles ahead of private players. BSNL widely covers Mountains, Hills, Deserts, Forest and rural India. If you travel Hills and mountain terrain, still the best penetration is from BSNL
By pumping money in BSNL what i believe govt is doing is strengthening the mobile infrastructure in India which they are the best in however their last mile connectivity is pathetic
So i see that in the future BSNL will give the infrastructure backbone to Mobile services and Private players can give last mile connectivity. The same is working on the power sector and grid management
From a national security point of view, this is the best proposition to deliver citizen services to people and at the same time manage national security and surveillanc

5G அலைக்கற்றை ஏலத்தில் BSNL கலந்து 
கொள்ளவில்லையே, ஏன்?   
-----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------
5G அலைக்கற்றை ஏலம் ஜூலை 26ல் தொடங்கி இன்றும் 
நடக்கிறது. அநேகமாக ஆகஸ்டு முதல் வாரத்தில் 
முடிவடையலாம்.

இந்த ஏலத்தில் ஏர்டெல், ஜியோ, வோடபோன், அதானி 
டேட்டா நெட்ஒர்க் ஆகிய நான்கு நிறுவனங்கள் 
மட்டுமே கலந்து கொண்டுள்ளன. அரசு நிறுவனமான 
BSNL இந்த ஏலத்தில் பங்கு பெறவில்லை. 

ஏலத்தில் பங்கு பெறாமல் இருப்பது BSNLக்கு ஒரு 
பின்னடைவு என்றும் தனியார் நிறுவனங்கள் 
5G அலைக்கற்றையை வைத்திருக்கும்போது 
BSNL அது இல்லாமல் இருப்பது சந்தையில் BSNLஐ 
பின்னுக்குத் தள்ளி விடும் என்றும் சிலர் 
கவலைப் படுகின்றனர்.

இதுவரை மூன்று ஏலங்கள் நடைபெற்றுள்ளன.
அ) 2010ல் ஆ ராசா நடத்திய 3G ஏலம்.
ஆ)       

செவ்வாய், 26 ஜூலை, 2022

5G ஏலம்! இன்று ஆரம்பம்!
--------------------------------------------------- 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------
1) இன்று முதல் (26.07.2022) PAN INDIA 5G ஏலம்.
72 GHz அளவுள்ள அலைக்கற்றை ஏலம் விடப் 
படுகிறது.  Base price ரூ 4.3 லட்சம் கோடி.
20 ஆண்டு வேலிடிட்டி.    

2) ஏலத்துக்கு வைக்கப்பட்ட அலைக்கற்றையின் 
அளவு மிக அதிகம். விலையும் மிக 
அதிகம். ஆனால் ஏலத்தில் பங்கேற்கும் 
நிறுவனங்கள் மிக்க குறைவான 
பணத்தையே டெபாசிட் செய்துள்ளன.  

3) சிறுகக் கட்டிச் சிறுக வாழ் என்ற 
நிலையில்தான் 5G ஏலத்தில் 
நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
எல்லோருக்கும் பணமுடை! எனவே கொஞ்ச 
அளவுள் ள அலைக்கற்றையை மட்டுமே 
அவை ஏலம் எடுக்கும்.

4) எந்த நிறுவனமும் Pan India 5G  லைசன்சை 
எடுக்கப் போவதில்லை.  Pan India லைசன்ஸ் 
என்றால் இந்தியா முழுமைக்குமான லைசன்ஸ் 
என்று பொருள். அதாவது இந்தியா முழுவதும் 
22 லைசன்ஸ் ஏரியாவாக DOT (Dept of Telecom) 
பிரித்து வைத்துள்ளது. இந்த 22 LSAக்களிலும் 
5G அலைக்கற்றையை ஏலம் எடுக்க வேண்டும்.
ஆனால் எந்த நிறுவனமும் அப்படி PAN INDIA
லைசன்ஸை எடுக்கப் போவதில்லை. ஏனெனில் 
அதற்கான வாய்க்கரிசி அவர்களிடம் இல்லை.    
 
5) ஜியோ, ஏர்டெல், வோடபோன், அதானி டேட்டா 
நெட்ஒர்க் ஆகிய நான்கு நிறுவனங்கள் மட்டுமே 
5G ஏலத்தில் பங்கேற்கின்றன.
   
6) BSNL ஏன் இந்த ஏலத்தில் பங்கேற்கவில்லை 
என்று கேள்வி எழுப்பும் போலி முற்போக்கு 
விபச்சாரத் தரகர்களின் கேள்விக்கு தனிக் 
கட்டுரையில் பதில் அளிக்கப் படுகிறது.  
 
7) பின்வரும் BANDWIDTHல் உள்ள அலைக்கற்றைகள்
  ஏலம் விடப் படுகின்றன.
5G: 3.3GHz to 3.67 GHz, 26 GHz.
இவை தவிர 2G, 3G, 4G அலைக்கற்றைகள்.   

ஏலம் எடுத்த பின்னரும், 5G சேவையைத் தொடங்க
நிறுவனங்கள் குறைந்தது ஓராண்டு காலம் 
எடுக்கும். எனவே 2023ல் இந்தியாவில் 5G செயல்படும்.
*********************************************** 

ஞாயிறு, 24 ஜூலை, 2022

எங்களுக்கு நாணம் இல்லை என்று சொல்லும் 
இந்தியப் பெண்கள்!
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------------- 
இந்தியப் பெண்கள் கட்டுப் பெட்டிகள்; பத்தாம் 
பசலிகள்.உடலுறவின்போது இப்பெண்கள் 
உணர்ச்சியற்ற ஜடமாகப் படுத்துக் 
கிடப்பார்கள்.இவர்கள் ஒருபோதும் முழுமையான 
செக்ஸ் இன்பத்தை தாங்களும் அனுபவித்தது 
இல்லை; தங்கள் கணவன்மார்களையும் அனுபவிக்க 
விட்டதில்லை. 

இவையெல்லாம் இந்தியப் பெண்களின் பாலுறவு 
நாட்டம் மற்றும் பாலுறவு நடத்தை குறித்து
லிபரல் பூர்ஷ்வக்கள் முன்வைக்கும் புகார்கள்!
இப்புகார்கள் உண்மையா? பரிசீலிப்போம்.    

இந்தியப் பெண்கள் மற்றும் ஆண்கள் மீதும் 
செக்சை அனுபவிக்கத் தெரியாதவர்கள் என்ற 
குற்றச்சாட்டு 1980களில் முதன் முதலாக வைக்கப்பட்டது. 
வைத்தவர் ஆச்சார்ய ரஜனீஷ் (1931-1990) என்னும் 
ஒரு வட இந்தியச் சாமியார்.  

செக்ஸ் இன்பத்தில் "உச்சகட்ட யோகநிலை" என்னும்  
ஒரு கிளைமாக்ஸ் நிலை இருப்பதாகவும் இந்தியக் 
குடும்பஸ்தர்கள் அந்த உச்ச நிலையை அடைவதே 
இல்லையென்றும் ஆச்சார்ய ரஜனீஷ் ஆதங்கப்பட்டார்.
அவருக்கு நிறையச் சீடர்கள் சேர்ந்தனர். எல்லாம் உச்ச 
கட்ட யோகநிலையை அடைய விரும்பியவர்கள்தான்!

சரி, இந்தியப் பெண்கள் உணர்ச்சியற்ற பதுமைகளா?
ஆராய்வோம். சங்க காலப் பெண்கள் முதல் 
இன்றையப் பெண்கள் வரை ஆராய்ந்து விடலாம்.

திருக்குறளில் ஒரு காட்சி! காமத்துப்பால்; அதிகாரம் 
நிறையழிதல். நிறை = ஒழுக்கம். நிறையழிதல் 
என்றால், காதலனுடன் கூடும் விருப்பத்தால்,
பெண் தனது சகல கட்டுப்பாடுகளையும் இழந்து 
நிற்றல்.

நாண்என ஒன்றோ அறியலம் காமத்தால் 
பேணியார் பெட்ப செயின்.

நாண் = நாணம் 
நாண் என ஒன்றோ = நாணம் எனப்படும் ஒன்றை 
அறியலம் = அறியாமல் உள்ளோம், தெரியாது.
காமத்தால் = காமம் மேலோங்கி நிற்க 
பேணியார் = காதலர் அல்லது கணவர் 
பெட்ப செயின் = விரும்பியதைச் செய்தார்கள் என்றால்.
(செயின் = செய்யின், செய்தால்)  
   
இக்குறளின் பொருள் என்ன? அந்தப் பெண் கூறுகிறாள்:
உடலுறவின்போது, காமம் மேலிட, எங்களின் 
கணவன்மார்கள் நாங்கள் விரும்பியதை எல்லாம் 
செய்வார்கள் என்றால், நாணம் என்ற ஒன்று 
இருப்பதையே அறியாதவர்களாக நாங்கள் 
நடந்து கொள்வோம்.

இந்தக் குறள் காமத்தின் உச்சம்! செக்சின் உச்சம்.
நாணமாவது வெட்கமாவது, எங்களுக்கு அதெல்லாம் 
தெரியாது! காமத்தின் உச்சத்தை அடைய, எங்கள் 
கணவன்மார்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் 
போவோம் என்கிறாள் அந்தப் பெண்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாலுறவில் 
இவ்வளவு புரட்சிகரமான கருத்துக்களை 
வள்ளுவர் சொல்லி இருக்கிறார். அதுவும் ஒரு 
பெண்ணின் கூற்றாகச் சொல்லி இருக்கிறார்.

அவருக்கு முன்னோடியாக வாத்சாயனர் பொசமு 
400ஆம் ஆண்டில் (கிறிஸ்து பிறப்பதற்கு 400 
ஆண்டுகளுக்கு முன்பே) உடலுறவை முற்றிலும் 
அறிவியல் அடிப்படையில் விளக்கி காமசூத்ரா 
என்னும் நூலை எழுதி உள்ளார்.

காமசூத்ராவின் காலத்திற்கு வெகுவாகப் பிந்தி,
கொக்கோக முனிவரின் கொக்கோக சாஸ்திரம் 
உள்ளது. அதற்கு அதிவீர ராம பாண்டியர் 
எழுதிய உரையை நான்  படித்திருக்கிறேன்.

கண்ணதாசனும் 
"முறையுடன் மணந்த கணவர் முன்னாலே 
பரம்பரை நாணம் தோன்றுமா?" 
என்று பெண் பாடுவதாக எழுதி இருப்பார்.

நமக்குத் தெரிந்த காம சூத்திரங்களை எல்லாம் 
ஐரோப்பியர்கள் அறிந்து கொள்ள, 19ஆம் நூற்றாண்டு 
வரை, அதாவது  சிக்மண்ட் பிராய்டு (1856-1939) 
வரும் வரை காத்திருக்க வேண்டியதாயிற்று.
   
ஆக அறிவில் மூத்தவன் தமிழனும் இந்தியனுமே!
ஐரோப்பியன் அல்லன்.இதை இந்தக் கட்டுரையில் 
நிரூபித்து இருக்கிறேனா? ஆம்! QED.
-----------------------------------------------------------------
பின்குறிப்பு:
இந்தக் கட்டுரையின் இறுதியில் QED என்று 
குறிப்பிட்டுள்ளேன். ஏன்? அதன் பொருள் என்ன?
வாசகர்கள் விடை கூற வேண்டும்.
********************************************

 
      


 
 
நாண்என ஒன்றோ அறியலம் காமத்தால் 
பேணியார் பெட்ப செயின்.
குறள் 1257. அதிகாரம்:: நிறையழிதல்  

சொன்னவர் வள்ளுவர்.
சிக்மாண்ட் பிராயிடு அல்லது ஆச்சார்ய ரஜனீஷ் 
சொல்லவில்லை.

முறையுடன் மணந்த கணவர் முன்னாலே 
பரம்பரை நாணம் தோன்றுமா  

நாணமோ இன்னும் நாணமோ
தன்னை நாடும் காதலன் முன்னே 
திருநாளைத் தேடிடும் பெண்மை 
நாணுமோ  
 ==============================



திருக்குறள் 1257 கற்பியல் 

நாணம் என்ற ஒன்றோ அறியலும் காமத்தால் 
பேணியார் பெட்பச் செயல்.














நாணம் என்ற ஒன்றோ அறியலும் காமத்தால் 
பேணியார் பெட்பச் செயல்.

சனி, 23 ஜூலை, 2022

 அடுத்து வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலின் 

முன்னோட்டமே ஜனாதிபதி தேர்தல்!

-------------------------------------------------------------------

POLITICAL ANALYSIS by நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------------------------------- 

2019ல்  பாஜக இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்தது.

இன்று பாஜகவின் ஆட்சி  மூன்றாண்டுகளை நிறைவு 

செய்து விட்டது.2024 மார்ச் தேர்தலுக்கு இன்னும் 

19 மாதங்கள் மட்டுமே உள்ளன.


தற்போது (ஜூலை 2022) ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று 

முடிந்து விட்டது. பாகஜாவின் திருஒபதி முர்மு வெற்றி 

பெற்றுள்ளார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 

நிறுத்திய யஷ்வந்த் சின்ஹா அவமானகரமான 

தோல்வியைத் தழுவி உள்ளார்.


1) எதிர்க்கட்சிகளால் திரௌபதி முர்முவை எதிர்த்து 

ஒரு சரியான வேட்பாளரை நிறுத்த இயலவில்லை.

தேர்தலில் தோல்வி அடைவதில் பெரிய குறை 

எதுவுமில்லை.ஆனால் யஷ்வந்த் சின்ஹா அடைந்த 

தோல்வி கெளரவமான தோல்வியோ அல்லது 

reasonableஆன தோல்வியோ அல்ல.


2) ஜனாதிபதி தேர்தல் எதிர்க்கட்சிகளின் 

பலவீனத்தையும் கையாலாகாத் தனத்தையும்

நன்கு அம்பலப் படுத்தி விட்டது. 2024 தேர்தலில்

எதிர்க்கட்சிகளும் காங்கிரசும் அடையப்போகும்

மெகா தோல்விக்கு ஜனாதிபதி தேர்தல் கட்டியம் 

கூறி விட்டது.


3) இந்தியாவில் மக்களவையில் உள்ள 543 இடங்களில் 

131 இடங்கள் தலித் மற்றும் பழங்குடியினருக்கு (SC,ST)

உரியவை. இதில் தற்போது பாஜக 77 இடங்களையும் 

காங்கிரஸ் 9 இடங்களையும் பெற்றுள்ளன.


திரௌபதி முர்முவின் வெற்றிக்குப் பின்னர் மேற்கூறிய 

131 இடங்களில் குறைந்தது 100 இடங்களை பாஜக 

கைப்பற்றும். காங்கிரசும் எதிர்க்கட்சிகளும்

தங்களின் தலித் வாக்கு வங்கியை கணிசமாக 

பாஜகவிடம் இழக்கும்.


திரௌபதி முர்முவுக்கு வாக்களிக்காமல் யஷ்வந்த் 

சின்ஹாவுக்கு வாக்களித்த துரோகிகள் இனி

சேரிகளில் நடமாட முடியாத நிலை ஏற்படும்.

SC/ST மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 131

தொகுதிகளில் மேற்கூறிய துரோகிகள் 

போட்டியிட்டால் அவர்கள் காயடிக்கப் படுவார்கள்.

SC/ST மக்களை முட்டாள்கள் என்று கருதி அவர்களை 

ஏமாற்றலாம் என்று மனப்பால் குடிக்கும் 

துரோகிகள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத 

அளவுக்கு பாடம் கற்பிக்கப் படுவார்கள். 

*****************************************************************      

       

     

 

 

செவ்வாய், 19 ஜூலை, 2022

கணித வேதியியல் ஆசிரியைகளைக் 
கைது செய்தது மிகப்பெரிய அநியாயம்! 
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி தற்கொலைக்கு
ஆசிரியைகளைப் பொறுப்பாக்குவது பேதைமை!
----------------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------------
சின்ன சேலம் கனியாமூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) 
தனியார் மெட்ரிக் பள்ளி 12ஆம் வகுப்பு மாணவியான 
ஸ்ரீமதி (17) அண்மையில் தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி இறந்து சில நாட்கள் ஆன பின்னரும்கூட 
தமிழக அரசின் காவல் துறை நடவடிக்கை எதுவும் 
எடுக்கவில்லை.இதனால் ஆத்திரமுற்ற மக்கள் பள்ளியை 
அடித்து நொறுக்க்கினர். மேசை நாற்காலி பள்ளிப் 
பேருந்துகள் என கோடிக்கணக்கிலான பள்ளியின் 
சொத்துக்கள் எரிக்கப்பட்டன.  

3500 மாணவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டன.
பள்ளி வளாகத்தில் நின்றிருந்த பசு மாடுகளின் 
பால் காம்புகளை கயவர்கள் அறுத்திருக்கிறார்கள்.
(பள்ளியானது உண்டு உறைவிடப் பள்ளி ஆதலால்
பசு மாடுகள் வளாகத்தில் நிற்கின்றன)  

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அமைதியை 
மீட்டெடுப்பது தமிழக அரசின் கடமை ஆகும். 
அரசு அதைச் செய்யும் என்று நம்புகிறோம்.
இந்த வன்முறைக்கும் தீவைப்புக்கும் காரணம் 
காவல்துறையின், பள்ளிக் கல்வித் துறையின்
அலட்சியமும் மெத்தனமுமே ஆகும். 

மாணவி ஸ்ரீமதியின் மரணம் நெஞ்சைப் பிழியும் 
சோகம் ஆகும். அக்குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டை
அரசு வழங்க வேண்டும். மாணவி மரணம் குறித்து 
CBI விசாரணை நடத்துவதே சிறந்த தீர்வாகும்.

ஆசிரியைகளைக் கைது செய்தது அநியாயம்!
----------------------------------------------------------------------
மாணவியின் மரணத்துக்குக் காரணம் என்று கருதி 
பள்ளியின் தரப்பைச் சேர்ந்த ஐந்து பேரை கைது செய்து 
சேலம் சிறையில் அடைத்துள்ளது தமிழகக் காவல்துறை.
.
1) பள்ளித் தாளாளர் 2) பள்ளிச் செயலாளர் (இவர் ஒரு பெண்)
3) பள்ளித் தலைமையாசிரியர் 4) வேதியியல் ஆசிரியை 
ஹரிப்பிரியா (40 வயது)  5) கணித ஆசிரியை கீர்த்திகா 
(28 வயது )ஆகிய ஐந்து பேரும் பிணைத்தகுதியற்ற 
பிரிவில் (non bailable) கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் 
அடைக்கப் பட்டுள்ளனர்.

இவர்களில் வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா
கணித ஆசிரியை கீர்த்திகா இருவரையும் காவல்துறை 
கைது செய்ததும் சிறையில் அடைத்ததும் எந்த 
நியாயமும் அற்ற அராஜகச் செயலாகும். 

மாணவி இறந்த முதல் நாளன்றே நடவடிக்கை 
எடுக்காமல் உறங்கிக் கிடந்த தமிழகக் காவல்துறை, 
மக்களின் கோபம் எல்லை மீறியதும், தங்களின் 
முதுகுத் தோலைக் காப்பாற்றிக் கொள்ள
ஒரு பாவமும் அற்ற ஆசிரியைகளைக் கைது செய்து 
சிறையில் அடைத்துள்ளது.

மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு 
ஆசிரியைகள் எப்படிப் பொறுப்பாக முடியும்?
மாணவியை யாரும் அடிக்கவில்லை; 
துன்புறுத்தவில்லை.

மாணவி எழுதிய தற்கொலைக் கடிதத்தை காவல்துறை 
வெளியிட்டு உள்ளது.தமிழ் வாக்கியத்தை ஆங்கில 
எழுத்துக்களால் எழுதியதே அக்கடிதம். ஒரு பக்க 
அளவு கூட, தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதத் 
தெரியவில்லை அந்த மாணவிக்கு. 

அக்கடிதத்தில் மாணவி என்ன சொல்லி இருக்கிறார்?
தனக்கு கெமிஸ்டிரி சமன்பாடுகளை எழுத 
முடியவில்லை என்றும், கெமிஸ்டிரி ஆசிரியை 
படிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார் என்றும்
மாணவி சொல்லி இருக்கிறார். தற்கொலைக் 
குறிப்பில் ஒரு இடத்தில் கூட ஆசிரியைகள் 
தன்னை இழிவாகத் திட்டியதாகவோ, 
அடித்ததாகவோ  மாணவி கூறவில்லை.

மாணவி படித்த பள்ளி உண்டுஉறைவிடப் பள்ளி.
(Residential school). சொந்த ஊரான கடலூரில் இருந்து 
சின்னசேலத்தில் உள்ள இப்பள்ளியில் விடுதிவாசியாக
(hosteller) மாணவி தங்கிப் படித்துள்ளார். ஓராண்டுக்கு 
லட்சக் கணக்கில் கட்டணம் செலுத்திப் படிக்கிறார் 
இந்த மாணவி.

மாணவி தனது கடிதத்தில் கூறியபடி பார்த்தால்,
கணிதம் வேதியியல் போன்ற அறிவியல் பாடங்கள்
தனக்குப் புரியவில்லை என்று மாணவி ஒப்புதல் 
வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது மாணவியின் 
குறை அல்ல. கணக்கு எல்லோருக்கும் வராது. 

Taylor series expansion, 2nd order differential equation போன்ற 
கடினமான கால்குலஸ் பாடங்களும் சரி, 
Group, semi group, monoid போன்ற discreet algebra பாடங்களும்  
சரி கடினமானவை. எல்லோராலும் அவற்றைப் 
படித்துப் புரிந்து கொண்டு தேர்வெழுத முடியாது. 
நல்ல மதிப்பெண்களும் பெற முடியாது. 
  
இந்த மாணவியை ஏதாவது கலைப் பாடப் பிரிவிலோ 
(arts group) அல்லது வணிகவியல் சார்ந்த அக்கவுண்டன்சி
பாடப்பிரிவிலோ சேர்த்திருக்க வேண்டும். அதைச் 
செய்ய மாணவியின் பெற்றோர்  தவறி விட்டனர்.
மாணவியின் பெற்றோர் செய்த தவறுக்கு, M.Sc Maths 
மற்றும் M.Sc Chemistry படித்து விட்டு கூடவே B.Ed, M.Ed
படித்து விட்டு அதன் பிறகும் தேவையான போட்டித் 
தேர்வுகளை எழுதி வெற்றி பெற்று ஆசிரியப் 
பணிக்கு வந்த ஆசிரியைகள் தங்கள் பக்கம் தவறு  
இல்லாத நிலையிலும் இன்று சேலம் சிறையில் 
அடைக்கப் பட்டு வாடி வருகின்றனர்.    
  
Maths, Physics, Chemistry பிரிவிலோ அல்லது BioMaths
பிரிவிலோ ஒரு குழந்தையைச் சேர்ப்பதற்கு முன்னால்,
அப்படங்களில் கடினத்தனமைக்கு தங்களின் 
குழந்தையால் ஈடு கொடுக்க முடியுமா என்று 
பெற்றோர்கள் தீர விசாரித்து முடிவுக்கு வர வேண்டும்.

அப்படியில்லாமல் தங்களின் நிறைவேறாத 
ஆசை, நிராசைக்கெல்லாம் குழந்தைகளிடம் 
வடிகால் தேட முயன்றால் விபரீதங்கள் ஏற்பட்டே
தீரும்.

குட்டி முதலாளித்துவப் பெற்றோரிடம் இன்னொரு 
பெருங்கேடு அவர்களின் குழந்தை வளர்ப்பு 
முறை. குழந்தைகளை வெகு செல்லமாக 
வளர்ப்பது அவர்களின் நடைமுறை. இதன் 
விளைவாக அனிச்சப் பூக்களாகவும் தொட்டால் 
சிணுங்கிகளாகவும் இவர்கள் தங்களின் குழந்தைகளை
வளர்த்து பொதுவெளியில் விட்டு விடுவார்கள்.

மிகச்சிறிய அசௌகரியத்தைக்கூட எதிர்கொள்ளும்
துணிவு இல்லாமல் வளர்க்கப்பட்ட இந்தக் 
குட்டி முதலாளித்துவப் பெற்றோரின் குட்டி 
முதலாளித்துவக் குழந்தைகள் ஆசிரியை 
படிக்கச் சொல்வதையே ஒரு துன்புறுத்தலாக 
(harassment) எடுத்துக் கொண்டு தற்கொலை செய்து 
கொண்டு விடுகிறார்கள்.

பாடம் கடினமாக இருக்கிறது என்ற தன்னுடைய 
உண்மையான கஷ்டத்தை அந்தப் பெண்ணால் 
தன பெற்றோரிடம் கூற முடியவில்லை. அதற்கான 
ஒரு சூழலே அப்பெண்ணின் குடும்பத்தில் இல்லை.
பெற்ரோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் 
இருக்க வேண்டிய ஆரோக்கியமான அறிவுபூர்வமான 
வெளி (space) ஸ்ரீமதியின் குட்டி முதலாளித்துவக்    
குடும்பத்தில் இல்லை. ஸ்ரீமதி மட்டுமல்ல எல்லா 
நடுத்தர  வர்க்கக் குடும்பங்களிலும் இதுதான் 
நிலைமை.

தன்  பிள்ளை படிக்க வேண்டும்; மார்க் எடுக்க 
வேண்டும். இதைத்தவிர வேறு எதையும் ஒரு 
பெற்றோர் காது கொடுத்துக் கேட்க விரும்புவதில்லை.
Grievance redressal mechanism என்பதே குட்டி முதலாளித்துவக் 
குடும்பங்களில் இல்லை. 

தனது குறைகளுக்கு தன்  பெற்றோரிடம் ஆறுதல் தேட 
வாய்ப்பு இல்லாததால் அக்குழந்தை ஸ்ரீமதி தன்  
வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளது. இதற்கு 
ஆசிரியைகள் எவ்விதத்தில் பொறுப்பாக முடியும்?

மாணவியைப் படிக்கச் சொல்வதும் படிக்கிறாளா 
என்று கண்காணிப்பதும் ஆசிரியர்களின் கடமை.
படிப்பு வராத ஒரு பெண் செத்துப் போனதற்காக 
தங்களின் கடமையைச் செய்த ஆசிரியைகளைச் 
சிறையில் அடைப்பது என்ன நியாயம்?

இப்படித்தான் இந்த சமூகம் இருக்குமென்றால் 
இந்தச் சமூகம் தேவையில்லை; அழியட்டும்.

எனவே தமிழக அரசு உடனடியாக சேலம் சிறையில் 
அடைக்கப்பட்டுள்ள இரண்டு ஆசிரியைகளையும்
(ஹரிப்பிரியா, கீர்த்திகா) விடுதலை செய்ய வேண்டும். 
அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. பிள்ளைகள் 
இருக்கின்றன. அந்த ஆசிரியைகள் சுயமரியாதையுடன் 
வாழ வழி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு. 
மேலும் அது சமூகத்தின் பொறுப்பும் ஆகும். 

முழுவதும் தன்னுடைய தப்பாலும் தன்னுடைய 
பெற்றோரின் தப்பாலும் செத்துப்போன ஸ்ரீமதி என்ற 
பரிதாபத்துக்கு உரிய அந்தக் குழந்தைக்காக 
எந்தத் தப்புமே செய்யாத ஆசிரியைகள் இரண்டு 
பேரைத் தண்டிப்பது பெருங்குற்றம் ஆகும்.
********************************************


  
      

 
 

சனி, 16 ஜூலை, 2022

தன்னைக் கடத்தியவனை 
அடையாளம் காட்டிய பெண்!
---------------------------------------------
மப்டி முகம்மது சையது தெரியுமா?
காஷ்மீர் முதல்வராக இருந்தவர்.
மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர்.

இவருடைய மகள்தான் ருபையா சையது.
இவருடைய இன்னொரு மகள்தான் மெஹபூபா.
காஷ்மீர் முதல்வராக இருந்தவர்.  

1989ஆம் ஆண்டு. இன்றைக்கு 33 ஆண்டுக்கு முன்பு.
ருபையா கடத்தப்  பட்டார்.இஸ்லாமிய 
பயங்கரவாதிகளால் கடத்தப் பட்டார்.

பின்னர் ஏகப்பட்ட விலைகொடுத்து பெருத்த 
நஷ்டத்துடன் இந்திய அரசு ருபையாவை மீட்டது.

அந்தக் கடத்தல் வழக்கு இன்னும் நடந்து 
கொண்டிருக்கிறது. இந்திய நீதித்துறையின் 
ஊறுகாயப் பானையில் 1989 முதல் கடந்த
33 ஆண்டுகளாக ஊறிக் கொண்டிருக்கும்
இந்த வழக்கின் விசாரணை தற்போது நடந்து 
கொண்டிருக்கிறது.

ருபையா தமிழ்நாட்டில்தான் இவ்வளவு காலமாகத் 
தங்கி வருகிறார். பாதுகாப்புக் காரணங்களை 
முன்னிட்டு அவர் தமிழ்நாட்டில் தங்கி உள்ளார்.

இந்த வழக்கில் இன்று நீதிமன்றம் சென்று 
தமது சாட்சியத்தைப் பதிவு செய்தார் ருபையா.
அத்தோடு தம்மைக் கடத்தியவர்களை 
அடையாளம் காட்டினார் ருப்பையா.

யாசின் மாலிக் மற்றும் மூவரை தன்னைக்   
கடத்தியவர்களாக அடையாளம் காட்டினார்
ருபையா.

யாசின் மாலிக் யார் என்று தெரியுமா? அண்மையில் 
இவன் பெயர் செய்திகளில் அடிபட்டதே! நினைவு 
இருக்கிறதா? யோசித்துப் பாருங்கள்.
--------------------------------------------------------------
தகவல்: TheTimes of India, Chennai dtd 16ஜூலை 2022, page 10.
---------------------------------------------------------------------------------- 
ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளியிடம் 
பணம் வாங்கிய கயவர்கள்!
------------------------------------------------------------- 
காஷ்மீரைச் சேர்ந்த இஸ்லாமிய பயங்கரவாதி 
யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை 
விதிக்கப் பட்டுள்ளது. அவன் நீதிமன்றத்தில் 
தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டான்.

அவன் மீதான குற்றம் பயங்கரவாதச் 
செயல்களுக்கு பணம் கொடுத்தது. அதாவது 
terror funding. இக்குற்றம் நிரூபிக்கப் 
பட்டுள்ளது.

யாசின் மாலிக்கைக் கூட்டி வந்து தமிழ்நாட்டில்
கூட்டம் போட்டான் அடிமுட்டாள் சீமான்.
Terror funding குற்றவாளியான யாசின் மாலிக் 
யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தான் 
என்று CBI/NIA விசாரிக்கும்போது அவன் 
உண்மையைக் கக்கி விடுவான்.

அப்போது அவனிடம் எச்சில் காசு வாங்கிய 
பயல்கள் ஜெயிலுக்குப் போக வேண்டியது 
வரும். தப்ப முடியாது.

ஆயில் தண்டனை பெற்று, சிறையில் கம்பி 
எண்ணிக் கொண்டு இருக்கிறான். தனது 
குற்றத்தை எல்லாம் ஒப்புக் கொண்டான் அவன்
அவன் CONFESSION கொடுக்கிறான்.

யாராக இருந்தாலும் சரி, அவனிடம் எச்சில் 
காசு வாங்கியவன் CBIஇடம் மாட்டுவான்.
குறைந்தது பத்தாண்டு சிறை தண்டனை 
கிடைக்கும் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.  .
------------------------------------------------      
    
    

வெள்ளி, 15 ஜூலை, 2022

அறிவியல் நிகழ்வில் கவனம் கொள்ளுங்கள்!
ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி பற்றி 
அறிந்து கொள்ளுங்கள்! 
---------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------- 
உலகின் மகத்தான அறிவியல் நிகழ்வு நடந்து 
கொண்டிருக்கிறது. ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி 
எடுத்த படங்களை நாசா வெளியிட்டுக் 
கொண்டிருக்கிறது.

இந்தப் பட வெளியீடு தனித்த ஒரு அறிவியல் 
நிகழவல்ல. மாறாக உலகளாவிய அறிவியல் 
திருவிழா ஆகும்.

இது குறித்து ஆங்கிலத்தில் நிறையக் கட்டுரைகள் 
வெளிவந்துள்ளன. தமிழிலும் ஓரளவுக்கு 
வெளிவந்துள்ளன.

அவற்றையெல்லாம் படியுங்கள். அறிவியலை 
அறிந்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருப்பது 
கிரிமினல் குற்றம் ஆகும்.

உங்கள் பிள்ளைக ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி 
பற்றிட தெரிந்து வைத்து இருக்கிறார்களா?
தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்களா?
உங்கள் பிள்ளைகளின் அறிவியல் ஆர்வம் பற்றி 
உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டாமா?

ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி பற்றி அறிந்து 
கொள்வதில் உங்கள் பிள்ளைக்கு ஆர்வம் 
இல்லையென்றால் அது ஆபத்து. சர்வ நிச்சயமாக 
உங்கள் பிள்ளை ஒரு சமூக விரோதியாக, 
கிரிமினலாக, போலீசால் சுட்டுக் கொல்லப்படப் 
போகிறவனாக ஆவது திண்ணம்.

உங்கள் பெண்ணுக்கு ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி 
பற்றித் தெரிந்து கொள்ள விருப்பம் இல்லையெனில் 
அவள் நிச்சயம் பாலியல் ஒழுக்கமற்ற திராவிடக் 
கணிகையாக ஆவது திண்ணம்.

எனவே ஜேம்ஸ்வெப் பற்றித் தெரிந்து 
கொள்ளுங்கள். கட்டுரைகளைப்  படியுங்கள்.
பரப்புங்கள். முகநூலில் எழுதுங்கள்.

சினிமாக் கூத்தாடியும் குடிகாரத் தாயோளியுமான
குடிச்சே குடல் வெந்து செத்துப்போன பிண்டமான 
முத்துக்குமாருக்காக மூக்கைச் சிந்திக் 
கொண்டிருக்கும் மூதேவிகளே, ஜேம்ஸ்வெப் 
பற்றிப் படிங்கடா என்கிறார் வீரவநல்லூர் 
இசக்கிமுத்து அண்ணாச்சி!

எவனோ வேசிமகன் பிரதாப் போத்தன் என்னும் 
கூத்தாடியாமே! அந்த முண்டம் செத்துப் போச்சாமே!
இதுக்கு ஏண்டா அழறீங்க, வேசிமகன்களா என்று 
கத்திக் கொண்டே வீரவநல்லூரில் நாக்காச் 
சவுக்கத்தில் இருந்து காந்தி சிலையை நோக்கி ஓடி 
வருகிறார் இசக்கிமுத்து அண்ணாச்சி.
***********************************************
       
 
        

வியாழன், 14 ஜூலை, 2022

பிரபஞ்சத்தின் வரலாற்றை எழுதும்
ஜேம்ஸ்வெப் தொலைக்காட்சி!
---------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------
கடந்த கிறிஸ்துமஸ் நாளன்று (டிசம்பர் 25, 2021) 
ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி விண்ணில் 
செலுத்தப்பட்டது. இதற்கு முன்பு விண்ணை அளந்த  
ஹப்பிள் தொலைநோக்கியின் வாழ்நாள் முடிந்து 
விட்டதால் ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி அதனிடத்தில் 
வருகிறது.

ஹப்பிள், ஜேம்ஸ்வெப் இரண்டு தொலைநோக்கிகளுமே 
பூமியில் வைக்கப் படவில்லை. அவை விண்ணில் 
வைக்கப் பட்ட விண்வெளித் தொலைநோக்கிகள் 
(Space Telescopes) ஆகும்.

ஹப்பிள் தொலைநோக்கி பூமியை ஒரு தாழ்நிலை 
சுற்றுப்பாதையில் (LEO = Low Earth Orbit) 570 கிமீ 
உயரத்தில் (altitude) சுற்றி வந்து கொண்டிருந்தது.

ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி ஹப்பிளைப் 
போன்று பூமியைச் சுற்றி வராது. மாறாக L2  
எனப்படும் இரண்டாம் லாக்ரேஞ்சு புள்ளியில் 
(Earth sun second Lagrange point) தங்கி இருந்து இயங்கும். 
பூமியில் இருந்து 15 லட்சம் கிமீ தொலைவில் இந்த 
லாக்ரேஞ்சு புள்ளி (L 2) உள்ளது.

லாக்ரேஞ்சு புள்ளிகள் பிரெஞ்சுக் கணித மேதை 
லாக்ரேஞ்சு-ன் நினைவாக அப்பெயர் பெற்றவை.
அவை விண்வெளியில் உள்ள வாகன நிறுத்தும் 
இடங்கள் (vehicle parking spots) போன்றவை என்று 
புரிந்து கொள்ளுங்கள். ஜேம்ஸ்வெப் போன்ற 
செயற்கைக்கோள்களை நிறுத்தும் இடங்கள் 
என்று புரிந்து கொண்டால் போதும். லாக்ரேஞ்சு 
புள்ளிகள் hyper physicsல் வருபவை என்பதால், 
அவை குறித்து தனிக்கட்டுரை வெளியிடப் 
படுகிறது.   

ஹப்பிள் தொலைநோக்கி புறஊதா அலைக்கற்றையை 
முதன்மையாகக் கொண்டு இயங்கியது. இதற்கு 
மாறாக அகச்சிவப்பு அலைக்கற்றையை 
முதன்மையாகக் கொண்டு ஜேம்ஸ்வெப் 
தொலைநோக்கி இயங்குகிறது. நட்சத்திரங்கள் 
வாயுக்கோளங்களாலும் தூசுக்களாலும் ஆனவை 
புற ஊதாக் கதிர்களால் அவற்றை ஊடுருவிச் 
செல்வது கடினம். ஆனால் அகச்சிவப்புக் கதிர்களால் 
அவற்றை ஊடுருவிச் செல்ல இயலும்.  மேலும் 
அவற்றால் மிகவும் குறைவாக சிதறடிக்கப் 
படுபவையும் அவையே. எனவே ஜேம்ஸ்வெப்பில்
அகச் சிவப்புக் கதிர்கள் பயன்படுகின்றன. 

பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே செல்கிறது
என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. இவ்வாறு 
விரிவடைவதால், இப்போது ஒரு குறிப்பிட்ட 
தூரத்தில் இருக்கும் ஒரு நட்சத்திரக் கூட்டம் 
அதே இடத்தில் நிலையாக இருப்பதில்லை.
அந்த இடத்தை விட்டு விலகிக் கொண்டே செல்லும். 

இவ்வாறு ஒரு காலக்சி விலகிச் செல்வதை 
தொலைநோக்கியில் பார்த்தால், அதில் இருந்து 
ஒரு சிவப்பு விலகல் (red shift) நமக்குக் கிடைக்கும். 
இதற்கு மாறாக ஒரு நட்சத்திரக் கூட்டம் நம்மை 
நோக்கி வரும்பட்சத்தில், அதில் இருந்து நீல விலகல் 
(blue shift) கிடைக்கும். ஆக காலக்சிகள் விலகினால் 
சிவப்பும், நெருங்கினால் நீலமும் கிடைக்கும்.  

நமது பிரபஞ்சம் (universe) ஒரு பெரு வெடிப்பின் 
பின் தோன்றியது. அதாவது 13.8 பில்லியன் 
ஆடுகளுக்கு முன்பு (1380 கோடி ஆண்டுகள்) நமது 
பிரபஞ்சம் பிறந்தது.   

அந்த ஆரம்ப கால பிரபஞ்சத்தில் இருந்து புறப்பட்ட 
ஒளி நமக்குக் கிடைக்குமானால், அதன் வரலாற்றை 
நாம் அறிய முடியும். ஒளி என்பது வரலாறு என்று 
உணர்க.

மழை பெய்யும்போது மொட்டை மாடியில் ஒரு 
பானையை வைத்து மழை நீரை அதில் 
பிடிக்கிறோம். அது போல ஜேம்ஸ்வெப் 
தொலைநோக்கி ஒளியைப் பிடிக்கும் ஒரு 
பானை ஆகும். 

பிரபஞ்சம் தோன்றிய காலத்தில், அல்லது அதன் 
பின்னர் நட்சத்திரங்கள் தோன்றிய காலத்தில் 
உள்ள ஒளியானது ஓரிடத்தில் நின்று 
கொண்டு இருப்பதில்லை. அது பயணம் செய்து 
கொண்டே இருக்கிறது. அவ்வாறு பயணம் செய்யம் 
ஒளி நம்மை வந்து அடையும். அதாவது 
ஜேம்ஸ்வெப்பை வந்தடையும். 

அந்த ஒளியைப் பரிசீலித்தால், அது எந்தக்
காலக்கட்டத்து ஒளி என்பதை அறிய முடியும்.
ஒளி என்பது வரலாறு என்பதால், 13 பில்லியன் 
ஆண்டுகளுக்கு முந்திய ஒளி நமக்கு கிடைத்தால் 
13 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய பிரபஞ்சத்தின் 
வரலாற்றை நம்மால் எழுத முடியும். இப்படித்தான் 
பிரபஞ்சத்தின் வரலாற்றை எழுதுவதில் ஜேம்ஸ்வெப்
தொலைநோக்கி பங்காற்றுகிறது.

நாசா சார்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 
ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி எடுத்த ஐந்து 
படங்களை வெளியிட்டார். தொடர்ந்து இரண்டாவது 
முறையில் மேலும் சில படங்களை நாசா வெளியிட்டு 
உள்ளது. படங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு 
தொடர்ந்து வெளியிடப்படும். இதன் விளைவாக 
பிரபஞ்சத்தின் வரலாறு துல்லியமாக எழுதப்படும்.
அதற்குக் காத்திருப்போம்.
**************************************************  


           

 தமிழ் விரைவில் அழியும்!   
இன்னும் 50 ஆண்டு கூடத் தாங்காது!
கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை!
-----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------
கவிஞரின் பிறந்த நாள் விழா கோவையில் 
2022 ஜூலை 13ல் நடைபெற்றது. கழுத்து 
நிறைய மாலையுடன் கவிஞர் நிற்கிறார்.

கவிஞரின் வலப்பக்கம் ப சிதம்பரம் நிற்கிறார்.
இடப்பக்கம் துரைமுருகன் நிற்கிறார்.
(வலது பக்கம் என்றும் இடது பக்கம் என்றும் 
நான் எழுத மாட்டேன். கணிகைக்குப் பிறந்த
பயல்கள் அப்படி எழுதுவார்கள்)

பள்ளி மாணவர்களுக்கு தமிழில் படிக்கவோ 
எழுதவோ தெரியவில்லை. தமிழில் 
பேசுவதற்குக்கூட அவர்கள் சிரமப் 
படுகின்றனர் என்று வருத்தப்பட்டுச் சொல்கிறார் 
வைரமுத்து.

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்புத் தேர்வில் 47,000 பேர் 
தமிழ்ப் பாடத்தில் தோல்வி அடைந்துள்ள செய்தியை 
கவிஞர் கணக்கில் கொள்கிறார். தமிழுக்கு 
இனி எதிர்காலமில்லை என்ற யதார்த்தத்தை 
அவர் உணர்கிறார்.

வைரமுத்து இப்படிச் சொல்வது இது முதல் 
முறை அல்ல. மேலும் இது அவரின் சொந்தக் 
கருத்தும் அல்ல. இது ஐநா சபையின் 
யுனெஸ்கோ மன்றத்தின் கருத்து. 2000ஆம் 
ஆண்டின் தொடக்கத்தில் யுனெஸ்கோ இவ்வாறு
கூறியதை முன்பே பலமுறை நான் பொதுவெளியில் 
கூறியுள்ளேன்.

அப்போதே ஐநாவின் யுனெசுகோ மன்றத்தின் 
அறிக்கையைப் படித்துப் பார்த்த வைரமுத்துவும் 
குமரி அனந்தன் அவர்களும் பெருந் துக்கத்தை 
வெளிப்படுத்தி அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.
அவர்களின் அறிக்கை குறித்தும் நான் முன்பே 
குறிப்பிட்டு இருந்தேன். இது குறித்து குமரி அனந்தன்
அவர்களைச் சந்தித்து அப்போதே உரையாடினேன். 
உரையாடலின்போது இடையிடையே குமரி அனந்தன் 
அவர்கள் தமிழின் அவலம் குறித்த துக்கத்தில் 
விம்மி விம்மி அழுதார். விடைபெற்று வரும்போது 
நான் அவரின் காலில் விழுந்து வணங்கியபின் 
விடைபெற்றேன்.   

வைரமுத்துவும் இதைத்தான் சொல்கிறார். அவர் 
சொல்வதில் பொய் எதுவும் இல்லை.
இதைத்தான் நான் பல ஆண்டுகளாகக் கூறிக் 
கொண்டு இருக்கிறேன்.

தமிழ் பொருளுற்பத்தி மொழியாக இல்லை என்ற 
உண்மையை முதன் முதலில் நான்தான் கூறினேன்.
உற்பத்தி மொழி என்ற கருத்தாக்கமே எனது 
கண்டுபிடிப்புத்தான். என்னைத் தவிர வேறு யார் 
எவரும், எனக்கு முந்தி உற்பத்தி மொழி என்ற 
கருத்தாக்கத்தை அறிந்திருக்கவில்லை.

இந்திய-தமிழ்ச் சமூகத்தின் உற்பத்தி மொழியாக 
ஆங்கிலமே இருந்து வருகிறது. தமிழோ சமஸ்கிருதமோ 
இந்தியோ இந்தியாவின் உற்பத்தி மொழியாக இல்லை.

எது அறிவியல் மொழியோ அதுதான் உற்பத்தி மொழி.
உற்பத்தி என்பது அறிவு சார்ந்தது. ஜாவா, பைத்தான் 
ஆகிய கணினி மொழிகள் ஆங்கிலத்தில்தான் உள்ளன. 
உற்பத்தியில் ஆங்கிலம்தான் உள்ளது. தமிழ் 
எங்கே உள்ளது? 

தமிழை உற்பத்தி மொழியாக ஆக்குவதுதான் 
எல்லாச் சிக்கல்களுக்கும் உரிய ஒரே தீர்வு.
தமிழை முழுமையானதொரு உற்பத்தி மொழியாக 
ஆக்க இயலுமா? ஒருபோதும் இயலாது. ஆனால் 
கடினமாக முயன்றால், ஓரளவுக்கேனும் பொருள் 
உற்பத்தியில் பங்களிப்பைச் செய்ய வல்லதாக 
தமிழை ஆக்க முடியும்.

இதை யாராவது செய்கிறார்களா? அதாவது 
தமிழை உற்பத்தி மொழியாக ஆக்கும் 
பெரும்பணியை யாராவது செய்கிறார்களா? 

ஆம், நான் செய்கிறேன்; நான் மட்டுமே செய்து 
வருகிறேன்.கடந்த 20 ஆண்டு காலமாக நான் 
மட்டுமே செய்து வருகிறேன். தமிழை அறிவியல் 
மொழியாக உற்பத்தி மொழியாக ஆக்கி வருகிறேன்.

தமிழில் அறிவியலைச் சொல்லி வருகிறேன்.
கடந்த பத்தாண்டுகளாக மிகவும் தீவிரமாக 
தமிழில் அறிவியல் கட்டுரைகளை எழுதி 
வருகிறேன்.தமிழ்ப் பகைவர்களின் வியூகங்களை 
முறியடித்து வருகிறேன்.

என்றாலும் தமிழ் தமிழ் என்று போலியாகக்  
கூச்சலிடும் குட்டி முதலாளிய வேசி மகன்கள் 
எனது முயற்சிகளை ஆதரிப்பதில்லை.
அவர்கள் விரைவில் செத்துப் போவார்கள்.
நான் தமிழை வாழ வைப்பேன். எனது இறுதி மூச்சு 
நிற்கிற வரைக்கும் தமிழ் வாழும். 

குமரி அனந்தன் அவர்களைப் போலவும் 
வைரமுத்துவைப் போலவும் அழுது புலம்புவதோடு 
நான் நிற்க மாட்டேன். நான் தமிழை வாழ 
வைப்பேன். நான் உயிரோடு இருக்கும் வரை 
தமிழ் வாழும். அது உற்பத்தி மொழியாக 
அறிவியல் மொழியாகத் தன்னை ஆக்கிக் 
கொள்ளும் முயற்சியில் முன்செல்லும்.

என்னுடைய இறுதி மூச்சு நிற்கிற வரை தமிழுக்கு 
எந்தவொரு பங்கமும் நேராது. ஆனால் எவ்வளவு 
காலம்தான் நான் வாழ இயலும்? எனது வாழ்நாள் 
infinity அல்லவே!  இப்போதே எனக்கு 70 வயது 
ஆகிறதே! 

நான் செத்துப்போனால் என்ன ஆகும்?
பூமடந்தை வாழப் புவிமடந்தை வீற்றிருக்க 
நாமடந்தை நூலிழைந்தாள்
என்றல்லவா ஆகும் தமிழ்!   
---------------------------------------------------------------
பின்குறிப்பு::
கனதனவான்களே,
உற்பத்தி மொழி என்பது முழுக்க முழுக்க 
என்னுடைய மூளையில் உதித்த கருத்தாக்கம்.
அது எனக்கு மட்டுமே சொந்தமானது. அதன் 
பதிப்புரிமை காப்புரிமை உள்ளிட்ட சகல 
உரிமைகளும் எனக்கு மட்டுமே உண்டு. தயவு 
செய்து அதைக் களவாண்டு விடாதீர்கள் ஐயா.   
*****************************************************      .    
    


செவ்வாய், 12 ஜூலை, 2022

நியூட்டனும் ஈர்ப்பு விசையும்!
------------------------------------------------
தோட்டத்தில் உள்ள சிமெண்டு பெஞ்சில்
உட்கார்ந்து இருக்கிறார் நியூட்டன். சுற்றிலும் 
ஆப்பிள் மரங்கள். ஒரு மரத்தில் இருந்து 
ஆப்பிள் கீழே தரையில் விழுகிறது  இதை 
நியூட்டன் பார்க்கிறார்.

தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் மரத்தில் 
இருந்து விழுகிற ஆப்பிள்கள் கீழே தரையை 
நோக்கி வருவதையும் தரையில் விழுவதையும் 
நியூட்டன் பார்க்கிறார்.

ஏன் ஆப்பிள்கள் கீழ் நோக்கியே வருகின்றன?
ஏன் மேல்நோக்கிப் போகவில்லை என்று 
சிந்திக்கிறார் நியூட்டன். அதன் காரணத்தை அறிய
முயல்கிறார். அறிந்தும் விடுகிறார். அதுதான் 
நியூட்டனின் ஈர்ப்பு விசைக் கோட்பாடு.

இந்தக்கதை பொய்யில்லை. இது பொய் என்று 
வலிந்து கூறுவதால் என்ன பயன்? அது பொய்
என்று எவராலும் இன்று நிரூபிக்க இயலாது.

சரி, இந்தக் கதை பொய் என்றே வைத்துக் 
கொள்ளுவோம். அதனால் யாருக்கு என்ன லாபம்?
யாருக்கு என்ன நட்டம்? இதெல்லாம்  non issue. எனவே 
ஆப்பிள் கீழே விழுந்த கதை குறித்து அதிகமாகவோ 
குறைவாகவோ யாரும் அலட்டிக் கொள்ள வேண்டாம்.

இதற்கு மேல் இந்தக் கட்டுரையைப் படிக்க 
வேண்டுமெனில் படிப்பவர்களுக்கு நியூட்டனின் 
ஈர்ப்பு விசைக் கோட்பாடு தெரிந்திருக்க வேண்டும். 
அப்படித் தெரிந்தவர்களை விரல் விட்டு எண்ணி   
விடலாம். தெரியாதவர்கள் வெளியேறி விடலாம்.

நியூட்டனின் ஈர்ப்புவிசைக் கோட்பாடு இப்படிக்
கூறுகிறது. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எந்த 
இரண்டு பொருட்களும் ஒன்றையொன்று 
ஒரு விசையுடன் ஈர்க்கின்றன. இந்த விசையே 
ஈர்ப்பு விசையாகும். இது இவ்விரு பொருட்களின் 
நிறையையும் (mass), அப்பொருட்களுக்கு 
இடையிலான தூரத்தையும் பொறுத்தது.

Gravitational Force = GMm/r^2. 
இங்கு G = Gravitational constant.
உரிய புத்தகங்களைப்  படித்து மேல் விளக்கம் 
பெறுங்கள். 

ஆக ஈர்ப்பு விசை இருக்கிறது என்று சொன்ன 
நியூட்டன் அத்தோடு நிற்காமல் அந்த விசையை 
அளந்தும் காட்டி உள்ளார். இது சிறப்புக்குரிய 
விஷயம் அல்லவா!

பின்னர் வந்த ஐன்ஸ்டைன் ஈர்ப்பு குறித்த 
நியூட்டனின் பார்வையில் இருந்து வேறுபட்ட 
புதிய பார்வையை முன்வைக்கிறார். அது 
பற்றி அடுத்துப் பார்ப்போம். 
---------------------------------------------------------     
     

ஞாயிறு, 10 ஜூலை, 2022

எழுதிய பாட்டுக்கு மெட்டுப் போட்டது
கண்ணதாசன் காலம்!
போட்ட மெட்டுக்கு பாட்டு எழுதுவது 
இளையராஜாவின் காலம்!
-------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------
இசையமைப்பதற்கு தமிழை விட இந்தி ஏற்றது. அது 
நளினம் மிக்கது என்கிறார் இளையராஜா.

இளையராஜா என்ன சொன்னார் என்று முதலில் 
புரிந்து கொள்ள வேண்டும். அவர் சொன்னதற்கு 
என்ன பொருள் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்.

சினிமாவுக்கு இன்று எப்படி இசையமைக்கப் 
படுகிறது? இசையமைப்பாளர் ஆர்மோனியப் 
பெட்டியில் ஒரு டியூனைப் (மெட்டை) போடுகிறார்.
அதற்கு ஏற்ற வரிகளை கவிஞர் எழுதுகிறார்.
இன்று மெட்டுக்குத்தான் பாட்டு.

1960களில் நிலைமை அப்படி இல்லை. அப்போதெல்லாம் 
பாட்டுக்குத்தான் மெட்டு. 

"காலங்களில் அவள் வசந்தம் 
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி 
மலர்களிலே அவள் மல்லிகை"    
என்று கவிஞர் எழுதிய பாட்டுக்குத்தான் 
எம் எஸ் விசுவநாதன் மெட்டுப்போட்டார்.

ஆர்மோனியப் பெட்டி, அதில் போடும் டியூன்,
தத்தகாரங்களுக்கு ஏற்ற சொற்கள், சொற்களுக்கு 
ஏற்ற இசை என்று பரஸ்பரம் ஒரு ஒத்திசைவைப் 
பேணிக்கொண்டபடிதான் ஒரு சினிமாப் பாட்டு
பிறக்கிறது.அனுதினமும் சினிமா 
இசையமைப்பாளர்கள் இந்த PROCESSல்தான்  
தொழிற்படுகிறார்கள்.    

பல்வேறு மொழிகளிலும் சேர்த்து காலங்காலமாக  
பல்லாயிரக் கணக்கான பாடல்களுக்கு இசை 
அமைத்த அனுபவத்தில் கிடைத்த பட்டறிவை
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வழிப்படுத்தினார் 
இளையராஜா. 

இது இளையராஜாவின் சொந்தக் கருத்து மட்டுமல்ல.
எல்லா இசையமைப்பாளர்கள், பாடகர்களின் 
ஏகோபித்த கருத்து.

ஆர்மோனியப் பெட்டியுடன் பெரிதும் ஒத்துப் போவது 
இந்தியே தவிர தமிழ் அல்ல. இதுதான் இளையராஜா 
சொன்னது. இது சரியா தப்பா என்று சரிபார்க்க 
எங்கு போக வேண்டும்?

ஆர்மோனியப் பெட்டியிடம்தான் போக வேண்டும்.
ஆர்மோனியம் இழுத்த இழுப்புக்கெல்லாம் 
இந்திச் சொற்கள் போகும். ஆனால் தமிழ்ச் 
சொற்கள் போகாது.

ஏன்? அது தமிழின் பண்பு. தமிழ் ஒரு PHONETIC 
language. அதாவது சொல்வதை அப்படியே 
தமிழில் எழுதி விடலாம். ஸ்பெல்லிங் பிரச்சினை 
தமிழில் கிடையாது. எனவே தமிழ் கறாரான 
ஒரு மொழி. ஆனால் இந்தி அப்படி அல்ல.
அது மிகவும் flexible. இதைத்தான் நளினம் என்று 
சொன்னார் இளையராஜா.

தமிழ் என்பது அரிசி மாவு. (ஈர மாவைச் 
சொல்கிறேன்; batter). ஒரு அளவுக்குத்தான் 
இழுக்க முடியும். இந்தி என்பது மைதா மாவு.
இழுத்த இழுப்புக்கெல்லாம் வரும். அதாவது 
more and more accommodative.

இதைத்தான் இளையராஜா சொன்னார். இது 
அவருடைய கருத்து மட்டும் அல்ல. 
இசையமைப்பாளர்கள் அனைவரின் ஏகோபித்த 
கருத்தும் அதுதான்.

இந்தியா தமிழா எது இசைக்கு உகந்தது என்பதை 
ஆர்மோனியப் பெட்டியில் தேட வேண்டும்.
அப்படித் தேடினால் இளையராஜா கூறியது 
முழு உண்மை (absolute truth) என்று தெரியவரும்.
--------------------------------------------------------------------
இத்துடன் இளையராஜா குறித்த இசை சார்ந்த 
கட்டுரைகள் நிறைவு பெறுகின்றன.
*****************************************  
பின்குறிப்பு:
இது ஒரு அகாடமிக் சர்ச்சை. எனவே இதை 
எல்லோரும் விவாதிக்க இயலாது. துறை சார்ந்த 
வல்லுநர்கள் விவாதித்து முடிவு காண வேண்டிய 
விஷயம். 

இது அரசியல் சர்ச்சை அல்ல.
ஆனால் துரதிருஷ்ட வசமாக திராவிடக் 
கசடுகள் தங்களின் தற்குறித்தனத்துக்குப் 
பொருத்தமாக இதை அரசியல் சர்ச்சையாக மாற்றிக் 
கொண்டு சமூக விரோதச் செயல்களைச் 
செய்கிறார்கள்.     
---------------------------------------------------------------

 
         
 
   
இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை!
--------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------- 
1970களில் தமிழின் வெகுஜன இலக்கிய ஏடுகளில் 
காரிகை மிகவும் பிரசித்தம். காரிகை என்பது 
யாப்பருங்கலக் காரிகை என்னும் தமிழிலக்கண 
நூலைக் குறிக்கும். அப்போது தமிழறிஞர் 
கி வா ஜகந்நாதன் இருந்தார். அவர் காரிகை 
கற்றுக் கவிபாட அனைவரையும் ஊக்குவித்தார்.

பட்டப் படிப்பில் மொழிப்பாடத்தில் எனக்கு காரிகை 
பாடமாக இல்லை. எனவே சொந்த முயற்சியில் 
படிக்க வேண்டிய நிலையில் இருந்த நாங்கள் 
காரிகை வாங்கிப் படித்தோம்; கவி புனைந்தோம்.

யாப்பு என்பது குறிப்பிட்ட ஓசையை நோக்கி 
செய்யுட்களை ஆற்றுப்படுத்துவது. முற்றிலும் 
தற்போக்கான (random) ஓசைக்குப் பதில் 
தெரிந்தெடுக்கப்பட்ட ஓசை அமையுமாறு 
கவி இயற்றுவதற்கு யாப்பு வேண்டும். எழுத்து,
அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியன யாப்பின் 
உறுப்புக்கள். 

யாப்பிலக்கணப்படி பாக்களை இயற்றினால் 
செப்பலோசை, அகவலோசை, துள்ளலோசை, 
தூங்கலோசை  ஆகியவற்றைப் பெற முடியும்.
அப்படி ஓசைகளைப் பெற்றுத்தான் ஆக 
வேண்டுமா? ஓசைகளுக்கு அவ்வளவு 
முக்கியத்துவமா?

ஆம் என்கிறார் ........................ (யார் என்று வாசகர்கள் 
சொல்ல வேண்டும்) ஓசை தரும் இன்பம் 
உவமையிலா இன்பம் என்கிறார் அவர்.

இந்தக் கட்டுரை பலருக்கும் புரியாது என்பதை 
நானறிவேன். புரியாதவர்கள் சபையில் இருக்கக் 
கூடாது. வெளியேறி விட வேண்டும். இதற்கு முன்பு 
உற்பத்தியோடு இணைத்து இசை குறித்து 
எழுதிய கட்டுரையும் பலருக்கும் புரியவில்லை.
புரியாதவர்கள் இசைத்தமிழ் பற்றிப் பேசும் 
அருகதை அற்றவர்கள்.
       
வாசகர்களின் புரிதலின் மட்டம் குறித்த நியாயமான 
அச்சம் காரணமாக கட்டுரையை முரடடடியாகச் 
சுருக்கிக் கொள்கிறேன். அடுத்து நேரடியாக 
சந்தத்துக்குள் இறங்கி விடுவோம். சந்தம் என்றால் 
என்ன என்று தெரியுமா? தெரியாதவனோடு 
மல்லுக்கு கட்ட இயலாது. சபையை விட்டு 
வெளியேறுங்கள்.

1980களில் திருப்புகழின் சந்த அமைப்பு என்ற ஓர் 
ஆய்வு நூலைப் படித்தேன். இன்று திருப்புகழின் 
சந்த அமைப்பு குறித்து ரிசர்ச் செய்து PhD 
பட்டம் பெற்ற நூற்றுக்கணக்கான ஆய்வாளர்களின் 
ஆய்வடங்கல்கள் (thesis) நூல்களாக வெளிவந்து 
விட்டன.

இளையராஜா குடித்தும் இசைத்தமிழ் குறித்தும் 
பேச விரும்புவோர் திருப்புகழின் சந்த அமைப்பு
குறித்து அறிந்திருக்க வேண்டும்; உரிய 
நூல்களைப் படித்திருக்க வேண்டும். அரங்கின்றி 
வட்டாட வேண்டாம்.      
   
ஒரு எளிய எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

முட்டுப் பட்டுக் கதிதோறும் (இது திருப்புகழ்)
தத்தத் தத்தத் தனதான (சந்த அமைப்பு)

முற்றச் சுற்றிப் பலநாளும்
(தத்தத் தத்தத் தனதான)

சந்தம் என்றால் என்ன என்று புரிகிறதா?
இசைப்பாங்கான பாட்டு சந்தம் கொண்டு 
கட்டப்பட்டதாகும். திருப்புகழ் எல்லோருக்கும் 
புரியாது.

அப்படிப் புரியாதவர்கள் "வறுமையின் நிறம் சிவப்பு"
என்ற சினிமாவில் கமல்-ஸ்ரீதேவி நடிப்பில், 
எஸ்பிபி-ஜானகி பாடிய "சிப்பி இருக்குது முத்தும் 
இருக்குது" என்ற பாடலின் சந்த அமைப்பைப் 
புரிந்து கொள்ள முயலுங்கள்.

பிரசித்தி பெற்ற திருப்புகழ் செய்யளின்
சந்த அமைப்பைப் பார்ப்போம்.

முத்தைத் தரு பத்தித் திருநகை 
அத்திக்கிறை சத்திச் சரவண 
முத்திக்கொரு வித்துக் குருபர .....எனவோதும்.

இதன் சந்த அமைப்பு பின்வருமாறு உள்ளது.
சந்தத்தையும் பாடலின் அடிகளையும் 
பொருத்திப் பார்க்கவும். சந்தம் புரிகிறதா 
என்று பாருங்கள்.

தத்தத்தன தத்தத் தனதன  
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தனதான  

யாப்பிலக்கணம் என்பது தற்போக்கான ஓசைக்குப் 
பதிலாக வரையறுக்கப்பட்ட ஓசையை நோக்கி 
செய்யுட்களை ஆற்றுப் படுத்துவது என்று முன்னரே 
சொன்னேன். அதே நேரத்தில் ஒரு அகவற்பாவை 
இசை செறிந்த பாடலாகக் கருதுவது பேதைமை ஆகும்.

இசைத்தமிழைக் கற்க விரும்புவோர் சந்த அமைப்புள்ள 
செய்யட்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
மிகச் சிறந்த உதாரணம் திருப்புகழ்.

காவடிச் சிந்து பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்?
அநேகமாக ஒருவருக்கும் தெரியாது. என் இள  
வயதில் காவடிச் சிந்து பாடக் கற்றேன். ஆனால் 
அப்போதே நான் கடவுள் மறுப்புக் கொள்கையில்
தீவிரமாக இருந்தேன். காவடிச் சிந்து என்றாலே 
முருகன் கோவிலுக்குப் போவோம் வா என்று 
கூப்பிடுவார்கள். நான் போக விரும்பவில்லை.
அதனால் எனது காவடிச்சிந்துப் பயிற்சி
முடிவுக்கு வந்தது. 

தேமா புளிமா என்று உளறிக்கொண்டு சிலர் 
தாங்கள்தான் இசைத்தமிழுக்கு அத்தாரிட்டி என்று 
தங்களின் அறியாமையைத் தம்பட்டம் அடித்துக் 
கொண்டு திரிகிறார்கள். குட்டி முதலாளியத்துக்கே 
உரிய தற்குறித்த தனமும் நேர்மையற்ற தன்மையும் 
கொண்டு அவர்கள் அவதூறில் இறங்குகிறார்கள்.

இளையராஜாவை ஆதரிப்பவன் எல்லாம் பாஜகவின் 
அடிப்பொடிகள் என்று உளறுகிறார்கள் குட்டி    
முதலாளியத் தற்குறிகள். நல்லது; அப்படியானால் 
இளையராஜாவை எதிர்ப்பவன் எல்லாம் விபச்சாரத் 
தரகன் (pimp) என்று பதிலுக்குச் சொல்லலாமா? 
எந்தப் படியால் அளக்கப் படுகிறதோ அதே படியால் 
திருப்பி அளக்கப்படும். 

இசைத்தமிழ் குறித்தும், இந்தி குறித்தும், இளையராஜா 
குறித்தும் தகுதி வாய்ந்த எவர் ஒருவருடனும் 
விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். அறிவியல் 
கற்ற சான்றோர்கள் நடுவர்களாக இருக்கட்டும்.

விவாதத்தில் நான் தோற்று விட்டால் உடனடியாக 
என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன். அது போல 
விவாதத்தில் என்னிடம் தோற்போர் உடனடியாக 
செத்துப் போய் விட வேண்டும். இதற்கு நான் தயார்.
குட்டி முதலாளியத் தற்குறிகள் தயாரா?
------------------------------------------------------------------
பின்குறிப்பு:
என்னுடைய தகுதிகள் குறித்த அனைத்துச்
சான்றிதழ்களையும் என் வீட்டிற்கு வந்து 
நடுவர்களோ போட்டியாளர்களோ சரிபார்த்துக் 
கொள்ளலாம். தேவையான எந்தத் தேர்வுக்கும் 
உட்படவும் நான் தயார். 

போட்டியாளர்கள் தங்களின் இந்திப் புலமை,
இசையறிவு குறித்து சான்றிதழ் இல்லாவிடினும் 
பரவாயில்லை. அவர்கள் எளிய ஒரு தேர்வுக்குத் 
தங்களை உட்படுத்தி நிரூபிக்க வேண்டும்.
*******************************************