மார்க்சிய வகுப்புகளை சிறப்பாக எடுப்பது யார்?
மார்க்சிஸ்டுகளா அல்லது மார்க்ஸாலஜிஸ்டுகளா?
---------------------------------------------------------------------------------------------
1) இந்தக் கேள்விக்கு எடுத்த எடுப்பில் விடை
சொல்லி விட முடியாது. காரணம் மார்க்ஸாலஜிஸ்ட்
என்றால் என்ன என்று முதலில் புரிய வைத்தாக
வேண்டும்.
2) Marxology, Marxologist ஆகிய சொற்களை ஆங்கில
அகராதிகள் (Oxford, Cambridge etc) இன்னும் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கவில்லை. எனவே அவற்றில் இச்சொற்களுக்கு
பொருள் கிடையாது.
3) எனினும் விக்சனரி (wiktionary) இதற்குப் பின்வருமாறு
பொருள் தருகிறது.
Marxologist = A specialist on the works of Karl Marx. அதாவது காரல்
மார்க்சின் நூல்களைப் பயின்று புலமை பெற்றவர்
என்று பொருள்.
4) zoology, biology ஆகிய சொற்களைப் போன்றதே
Marxology என்பதும். Marxology என்றால் மார்க்சியம்
பற்றிய அறிவு என்று பொருள்.
5) தமிழ்ச் சூழலில் மார்க்ஸாலஜி, மார்க்ஸாலஜிஸ்ட்
ஆகிய சொற்களை முதன் முறையாக அறிமுகம்
செய்வது நானே என்பதையும் இங்கு பதிவு
செய்கிறேன். எனவே இச்சொற்களுக்கு நான்
பொறுப்பேற்கிறேன் என்று உணரவும்.
6) மார்க்சிஸ்ட், மார்க்ஸாலஜிஸ்ட் என்ன வேறுபாடு?
ஏதேனும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்து
இயங்கியவர் அல்லது இயங்குபவர் மார்க்சிஸ்ட்
என்று அறியப் படுகிறார். எனினும் மார்க்சிஸ்ட்
என்பதற்கான வரையறை இதுவல்ல.
7) மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டும், அதை
நடைமுறைப் படுத்தியும் வருபவரே மார்க்சிஸ்ட்
ஆவார். One who accepts and practices marxism is a marxist.
இதுதான் மார்க்சிஸ்ட் என்பதற்கான இலக்கணம்.
8) மார்க்ஸாலஜிஸ்ட் என்பவர் மார்க்சியத்தை நன்கு
கற்றவர்; அதில் புலமை பெற்றவர். அவர் மார்க்சியத்தை
ஏற்றுக் கொண்டு இருந்த போதிலும், அதை நடைமுறைப்
படுத்த வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லாதவர்.
In short, any one who is well versed in marxism is a marxologist.
எனினும் மார்க்ஸாலஜிஸ்ட்களில் சிலரோ
பலரோ கட்சி சார்ந்தோ சாராமலோ மார்க்சியத்தைப்
பரப்பி வருவதும் உண்டு.
9) மேலை நாடுகளில் மார்க்சியக் கல்வி என்பது
கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளும் அதற்கு வெளியிலும்
உள்ளது. மார்க்சியக் கல்வி பெறுவதற்கு
கட்சிகளைச் சார்ந்து இருக்க வேண்டிய
அவசியம் அங்கில்லை. இது மார்க்சியத்தின்
வளர்ச்சியின் போக்கில் ஏற்பட்டுவிட்ட நிகழ்வு.
10) தமிழ்நாட்டில் மார்க்சியக் கல்வி என்பது இன்னும்
அமைப்பு சார்ந்தே உள்ளது. மார்க்ஸாலஜிஸ்டுகள்
இங்கு உருவாகவில்லை.
11) சரி, இப்போது முதலில் கேட்ட கேள்விக்கு
வருவோம். எடுத்த எடுப்பில் வர முடியவில்லை.
பீடிகையாக 10 வரிகள் எழுத வேண்டிய நிலையில்தான்
மார்க்சியக் கல்வி உள்ளது.
12) மார்க்சியக் கல்வியில் பொருள்முதல்வாதம்
அதிக முக்கியத்துவம் உடையது. இது முற்றிலும்
அறிவியல் .சார்ந்தது. இந்தியப் பல்கலைக்
கழகங்களில் பொருள்முதல்வாதம் முறையாகக்
கற்றுத்தரப் பட வேண்டும். ஆனால் கற்றுத்
தரப்படுவதில்லை.
13) Physics, Chemistry போல பொருள்முதல்வாதமும்
ஒரு அறிவியல் பாடம். பொருள்முதல்வாதம்
3000 ஆண்டுத் தொன்மை மிக்கது. மார்க்சியத்துக்கும்
முந்தியது. மார்க்சியம் 19ஆம் நூற்றாண்டில்
பிறந்தது. பொருள்முதல்வாதம் கி.மு காலத்தியது.
14) மேலை நாடுகளில் பொருள்முதல்வாதக் கல்வி
மார்க்ஸாலஜிஸ்டுகளால் சிறப்பாகக் கற்றுத்
தரப்படுகிறது.
15) கற்க விரும்புவோர் மார்க்ஸாலஜிஸ்டுகளிடம்
கற்றுக் கொண்டு அமைப்பு சார்ந்து செயல்பட
வேண்டும்.
16) கட்சிக்காரர்கள் கற்றுத்தரும் பொருள்முதல்வாதக்
கல்வி பெரும் போதாமையைக் கொண்டிருக்கிறது.
****************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக