ஞாயிறு, 13 அக்டோபர், 2024

 பேராசிரியர் சாய்பாபா மரணம்!
-----------------------------------------------------
பேராசிரியர் ஜி என் சாய்பாபா (57) ஹைதராபாத் 
நிஜாம் மருத்துவமனையில் சனியன்று (12.10.2024)
மரணம் அடைந்தார்.

இவ்வாண்டு 2024 மார்ச்சில் நாக்பூர் சிறையில் 
இருந்து விடுதலையான சாய்பாபா சுதந்திர 
மனிதராக ஏழு மாதங்கள் மட்டுமே வாழ்ந்தார்.

சாய்பாபா மிக மோசமான பாதிப்புடைய மாற்றுத் 
திறனாளி. 24 மணி நேரமும் சக்கர நாற்காலியோடு 
கட்டுண்டு கிடந்தவர் அவர்.   

டெல்லி பல்கலையில் ஆங்கிலப் பேராசிரியராக 
இருந்த சாய்பாபா, மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு 
கொண்டு செயல்பட்டார்  என்ற குற்றச்சாட்டின் பேரில் 
2014ல் UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டர். 
கைகான 2014 முதல் விடுதலையான மார்ச் 2024 வரை 
பத்தாண்டுகள் சிறையிலேயே இருந்தார்.

2017ல் மகாராஷ்டிரா மாநிலம் கட்ச்சிரோலி  செஷன்ஸ் 
நீதிமன்றம் சாய்பாபா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு    
UAPA சட்டத்தின்கீழ் ஆயுள் தண்டனை வழங்கியது. 
2022ல் மும்பை உயர்நீதிமன்றம் அவரை விடுவித்த்த 
போதிலும், உச்ச நீதிமன்றம் அத்தீர்ப்புக்குத் தடை 
விதித்தது.

தற்போது இரண்டாவது முறையாக மும்பை 
உயர்நீதிமன்றம் மார்ச் 2024ல் அவரை விடுதலை
செய்தது. இத்தீர்ப்பின் மூலம் நாக்பூர் சிறையில் 
இருந்து விடுதலை ஆகி சொந்த மாநிலமான 
தெலுங்கானாவுக்கு வந்து வாழத் தொடங்கினார் 
அவர். ஆனால் பத்தாண்டு சிறை வாழ்க்கை 
அவரின் உடல் நலத்தைத் தின்று விட்டிருந்தது.
இதனால் ஏழே  மாதங்களில் அவரின் வாழ்க்கை 
முடிவுக்கு வந்து விட்டது.

சாயபாபாவின் வாழ்க்கையையும் சரி மரணமும் சரி 
சமூகத்துக்கு ஒரு பெரிய பாடம்.

************************************************* சாய்பாபாவை 
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக