ரத்தன் டாட்டா பெற்றிருந்த அதீத மக்கள் செல்வாக்கு!
கம்யூனிஸ்டுகள் நக்சல்பாரிகளிடம் இதற்கு
விளக்கம் ஏதேனும் உண்டா?
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------
ரத்தன் டாட்டா தமது முதிர்ந்த வயதில் (86) மும்பையில்
காலமானார். அவர் பெரும் மக்கள் செல்வாக்கைப்
பெற்றிருந்தார். மாணவர்கள் இளைஞர்கள் உள்ளிட்ட
இன்றைய இளைய தலைமுறை முதல் முந்தைய
தலையுறையினர் வரை அவருக்கு செல்வாக்கு
இருந்தது.
இவ்வளவுக்கும் ரத்தன் டாட்டா ஒரு முதலாளி; ஒரு
பூர்ஷ்வா. நவீனச் சொல்லாடலில் ஒரு கார்ப்பொரேட்
பூர்ஷ்வா. முதலாய் என்கிற தமது தன்மையை,
பணப்பை அவர் ஒருபோதும் இழக்கவில்லை.
ஒரு பூர்ஷ்வாவாகவே அவர் எப்போதும் வாழ்ந்தார்.
அமெரிக்காவில் கட்டிடப் பொறியியல் படித்த ரத்தன்
டாட்டா இறுதி வரை திருமணமே செய்து கொள்ளாமல்
வாழ்ந்தார். 1940களில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின்
பொதுச் செயலாளராக இருந்த பிரகாஷ் சந்திர ஜோஷி
கம்யூனிஸ்டுகள் திருமணம் புரியாமல் வாழ வேண்டும்
என்ற கட்டுப்பாட்டை விதித்தார். ஆனால் என்ன
துரதிருஷ்டம்? தடை விதித்த ஜோஷியே தமது தடையை
மதிக்காமல் திருமணம் செய்து கொண்டார். சிட்டகாங்
வீராங்கனை என்று அறியப்பட்ட கல்பனா தத் என்னும்
சக கம்யூனிஸ்டை மணந்து கொண்டார்.
ஜோஷிக்கு இருந்த வைராக்கியப் பற்றாக்குறை
எதுவும் டாட்டாவுக்கு இருக்கவில்லை. எனவே
till death அவர் பிரம்மச்சாரியாக வாழ்ந்தார்.
ரத்தன் டாட்டா ஒன்றும் சோஷலிஸ்ட் அல்ல.
மக்களுக்கு நன்மை செய்யும் இடத்தில்
அரசு அதிகாரத்துடன் அமைச்சராகவோ
சட்ட மன்ற நாடாளுமன்ற உறுப்பினராகவோ
அவர் இருக்கவில்லை. சினிமா நடிகரோ கிரிக்கெட்
வீரராகவோ அவர் இல்லவும் இல்லை.
என்றாலும் இவர்களுக்கு நிகரான மக்கள் செல்வாக்கை
தமது இறுதிக் காலம் வரை டாட்டா பெற்றிருந்தார்.
இது எப்படி? இதற்கான காரணங்கள் என்ன?
இந்தியாவில் தொழிலதிபர்களுக்கு மக்களிடம்
செல்வாக்கு இருந்ததில்லை. சிலருக்கு மரியாதை
கூட இருந்ததில்லை.
1955ல் இறந்து போன, தமிழ்நாட்டைச் சேர்ந்த டிவிஎஸ்
குழுமத்தின் தலைவராக இருந்த டி வி சுந்தரம்
ஐயங்காருக்கு அவர் வாழ்ந்தபோதும் சரி
மறைந்தபோதும் சரி, இவ்வளவு செல்வாக்கு
இருந்ததே இல்லை. ரத்தன் டாட்டாவின் செல்வாக்கில்
ஒரு 10 சதவீதம்கூட டிவிஎஸ் ஐயங்காருக்கு இல்லை.
பிர்லா குழுமத்தின் முதல் தலைவரான ஜி டிபிர்லா
1985ல் மறைந்தார். இவர் மகாத்மா காந்திக்கு மிக
நெருக்கமானவர். காந்திக்கு வேண்டிய நிதி உதவிகள்
உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்து வந்தார்.
1983ல்தான் இவர் மறைந்தார். என்றாலும் பரந்துபட்ட
மக்கள் இவரின் மறைவுக்காக துக்கம் எதுவும்
அனுசரிக்கவில்லை. அவருக்கு மக்கள் செல்வாக்கும்
இல்லை.
திருபாய் அம்பானியின் மரணம் நமமில் பலர்
நன்கறிந்தது. இன்றைய முகேஷ், அனில்
அம்பானிகளின் தந்தையான திருபாய் அம்பானி
2002ல்தான் மறைந்தார். என்றாலும் அவரின் மறைவுக்கு
பரந்துபட்ட மக்கள் யாரும் துக்கம் அனுசரிக்கவில்லை.
மேற்கூறிய முதலாளிகள் யாருக்கும் இல்லாத
அளவுக்கு, ரத்தன் டாட்டாவுக்கு அபரிமிதமான
மக்கள் செல்வாக்கு இருந்தது. அவரின் மரணம்
மக்களின் மதிப்புக்கு உரிய ஒருவரின் மரணமாகக்
கொள்ளப்பட்டு மக்களால் இரங்கல் தெரிவிக்கப்
பட்டது. ரத்தன் டாட்டாவின் வாழ்வும் மரணமும் சரி,
இந்திய மக்களிடம் சக்தி வாய்ந்த தாக்கத்தை
ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கெல்லாம் காரணங்கள் என்ன? ஒரு பூர்ஷ்வாவான
ரத்தன் டாட்டா மக்களின் மனத்தில் இடம் இடித்தது எப்படி?
கம்யூனிஸ்டுகளும் நக்சல்பாரிகளும் பதில் கூற
வேண்டிய கேள்வி இது.
ஆனால் தற்குறிகளாக உள்ள போலி நக்சல்பாரிகள்.
போலி மாவோயிஸ்டுகளால் இதற்குப் பதிலளிக்க
முடியாது. திமுகவிடம் விலை போய்விட்ட
CPI, CPM போலிக் கம்யூனிஸ்டுகளிடம் இதற்குப்
பதில் கிடையாது.
********************************************************
ஆராசா நாத்திகர் அல்ல. அவர் ஒரு கிறிஸ்துவர்.
தமது மனைவியின் மரணத்தின்போது, கிறிஸ்துவ
முறைப்படி சவப்பெட்டியில் சடலத்தை அடைத்த
பிறகு. சவப்பெட்டியின் அருகே கிறிஸ்துவரான
ஆ ராசா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக