செவ்வாய், 14 நவம்பர், 2017

முழுநேர ஊழியர் கோட்பாடு!
--------------------------------------------------
புரட்சியை நடத்துகிற கட்சிக்கு முழுநேர ஊழியர்கள்
அவசியம் என்று கருதினார் லெனின். எனவே இது ஒரு
லெனினியக் கோட்பாடு. கட்சி கட்டுவது எப்படி என்று
உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு
போதித்தவர் லெனின்.
**
முழுநேர ஊழியர்கள் தொழில்முறைப் புரட்சியாளர்கள்
(Professional Revolutionaries) என்று அழைக்கப் படுகிறார்கள்.
இந்தியாவில் நக்சல்பாரி இயக்கம் வெடித்து
எழுந்தபோது, சாரு மஜூம்தாரின் தலைமையை
ஏற்று, பலர் கட்சிகளில் இணைந்து முழுநேர
ஊழியர்களாக ஆயினர். அவர்கள் அனைவரும்
கட்சி அணிகளால் PR COMRADES என்றே அழைக்கப்
பட்டனர்.
**
இந்தியா முழுவதும் RSS 30,000 முழுநேர ஊழியர்களைக்
கொண்டிருப்பதாக ஒரு மதிப்பீடு கூறுகிறது.
இந்நிலையில் புரட்சியை நடத்த விரும்பும் கட்சிக்கு
முழுநேர ஊழியர்கள் தேவையே.
==================================================

தோழமை என்றால் என்ன?
நட்பு என்றால் என்ன?
இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
ஓர் அறிவியல் சமூகவியல் விளக்கம்!
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
அறிமுகம், பழக்கம், நட்பு, தோழமை என்பதே வரிசை.
நட்பு என்பது தோழமையாகப் பரிணமிக்கிறது.
மார்க்ஸுக்கும் எங்கல்சுக்கும் இருந்தது நட்பு
மட்டுமல்ல; அதையும் தாண்டிய தோழமை.
காய் கனிந்து கனியாக மாறுவது போல, நட்பு
கனிந்து தோழமையாக மாறுகிறது.
**
கருத்தொற்றுமை இல்லாவிடினும் நட்பு இருக்கும்;
நீடிக்கும். பெரியாருக்கும் ராஜாஜிக்கும் இருந்தது
நட்பு; அது தோழமை அல்ல. நட்பு தோழமையாகக்
கனிய வேண்டுமெனில், அங்கு கருத்தொற்றுமை
அவசியம்.
**
ஆக நட்பையும் தோழமையையும் அடையாளப்
படுத்துகிற அம்சம் கருத்தொற்றுமை ஆகும்.
கருத்தொற்றுமை நட்புக்கு ஒரு முன்நிபந்தனை அல்ல.
ஆனால் தோழமைக்கு கருத்தொற்றுமை  ஒரு
முன்நிபந்தனை ஆகும். 
**********************************************************

தோழர் சிப்தாஸ் கோஷ் ஒரு கோட்பாட்டாளரே!
Com Shibdas Ghosh is a theoretician!
---------------------------------------------------------------------------------------
தோழர் சிப்தாஸ் கோஷ் ஒரு கோட்பாட்டாளரே.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே அவரை அறிவேன்.
SUCI நண்பர்களுடன் எனக்கு 30 ஆண்டுகளாக
தொடர்பு உண்டு. அவரின் தியரியை ஏற்றுக்
கொள்ளாவிடினும் அவரை நான் மிகவும் மதிக்கிறேன்.
**
சிப்தாஸ் கோஷ் பற்றி தமிழ்நாட்டில் எத்தனை
பேருக்குத் தெரியும்? மேற்கு வங்கம் தாண்டி அவரை
அறிந்தவர்கள் மிகவும் சொற்பமே. அவரையே மக்கள்
அறியாத நிலையில், அவரின் கொள்கை  கோட்பாட்டை
அறியாத நிலையில், அவரின் கொள்கைகளை ஏற்றுச்
செயல்பட்டு புரட்சியை நடத்த எத்தனை பேர்
வருவார்கள்?
**
வருந்தத்தக்க இந்த நிலையை மாற்ற வேண்டும்
என்பதற்காகவே இந்தப் பதிவு.
------------------------------------------------------------------------------------
எந்த ஒன்றையும் இரண்டாகப் பிரித்துப் பார்
என்பதன் சாரம்தான் செட் தியரி.
-----------------------------------------------------------------------------






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக