ஞாயிறு, 19 நவம்பர், 2017

குரல் தொகுப்புக் கருவி உதவுமே!
-----------------------------------------------------------
1) கேப்டன் டி.வி அதிபராக மட்டும் விஜயகாந்த்
இருப்பார் என்றால் அவரை எவரும் விமர்சிக்க
மாட்டார்கள். ஆனால் அவர் எதிர்க்கட்சித் தலைவராக
இருந்தவர். முதலமைச்சர் வேட்பாளராக இருந்தார்.

2) முதலமைச்சர் பதவி அதிகாரம் மிக்கபதவி. அதற்கு
விஜயகாந்த் ஆசைப்பட உரிமை உண்டு. அப்படி
ஆசைப்படும் ஒருவரை விமர்சிக்க ஒவ்வொரு
வாக்காளனுக்கும் உரிமை உண்டு.

3)ஸ்டீபன் ஹாக்கிங் என்ற இங்கிலாந்து விஞ்ஞானிக்கு
இளமையிலேயே ஒரு  நரம்பு நோய் ஏற்பட்டு, பேசும்
சக்தி உட்பட பல்வேறு சக்திகளை இழந்து விட்டார்.
ஆனாலும் voice synthesizer என்ற கருவி மூலம் பேசுகிறார்.
அவர் பேசாத பல்கலைக் கழகங்கள் இல்லை என்னும்
அளவுக்குப் பேசுகிறார்.

4) கேப்டன் அவர்கள் இப்படி ஒரு கருவியின் உதவியால்
பேசலாம். அதற்கு ஆகும் செலவு அவருக்குத் துச்சம்.
பார்வைக் குறைவு உள்ளவன் கண்ணாடி அணிகிறான்.
காது கேட்காதவன் ஹியரிங் எய்ட் அணிகிறான்.
நடக்க முடியாதவன் சக்கர நாற்காலியைப் பயன்
படுத்துகிறான். அது போலவே கேப்டன்  அவர்கள்
voice synthesizer பயன்படுத்தலாம். இதில் என்ன தவறு?
அல்லது இதில் என்ன கேவலம் உள்ளது?

5)  தமிழ்நாட்டில் கலைஞரை வெறுக்க ஒரு கோடிப்
பேர் உண்டு.  ஜெயாவை, முன்பு எம்ஜியாரை
வெறுக்கவும் 1 கோடிப்பேர் உண்டு. ராமதாஸையும்
திருமாவளவனையும் வெறுக்க கோடிக்கணக்கில்
ஆட்கள் உண்டு. ஆனால் அந்த அளவு வெறுப்பை,
அல்லது அதில் 10 சதம் அளவுக்குக்கூட
சம்பாதிக்காதவர் கேப்டன். அவர் தமிழக
அரசியலின் நகைச்சுவை மன்னன்.

6) எனவே அவரை விமர்சிக்கும் பதிவுகளில் வெறுப்போ
வன்மமோ இருக்காது. மாறாக கேலியும் கிண்டலும்
இருக்கும். இதற்கு காரணம் விமர்சிப்பவர்கள் அல்ல.
கேப்டனேதான்! இப்பதிவு உடற்குறை சார்ந்த
கிண்டல் என்று கருதுவதை போல பிறழ் புரிதல்
எதுவும் இல்லை. அப்படிக் கருதுவது escapism ஆகும்.
கேப்டன் அவர்கள் வாய்ஸ் synthesizer பயன்படுத்துவார்
என்றால் அதை முதலில் வரவேற்பது நாங்களே. 
 



        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக