ஞாயிறு, 22 டிசம்பர், 2024

வசமாக மாட்டிக்கொண்ட  தேர்தல் ஆணையம்!   
ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் 26 தொகுதிகளில்
EVMகளில் முறைகேடு நடந்ததற்கு ஆதாரம்!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------------------
அக்டோபர் 2024ல் ஹரியானா சட்டமன்றத் தேர்தல் 
முடிவுகள் வெளிவந்தன. இதில் பாஜக வெற்றி பெற்றது.
பாஜகவுக்கு இது ஹாட் டிரிக் வெற்றி ஆகும்.

90 இடங்களைக் கொண்ட ஹரியானா சட்ட மன்றத்தில் 
48 இடங்களில் வெற்றி பெற்று பாஜக அறுதிப் 
பெரும்பான்மை பெற்று ஆடசி அமைத்தது. காங்கிரஸ் 
37 இடங்களுடன் இந்த தோல்வியைத் தழுவியது.

இத்தேர்தல் முடிவுகளை ஏற்க மாட்டோம்; EVMகளில் 
முறைகேடு செய்துதான் பாஜக வெற்றி பெற்றுள்ளது
என்று காங்கிரஸ் கூறியது. தேர்தல் ஆணையத்திடம் 
புகார் கொடுத்தது.

ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளில் 26 தொகுதிகளில் 
EVMகளில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் 
கூறியது. வாக்குப்பதிவு முடிவடையும் நேரமான 
மாலை 5 மணிக்குக்கூட EVMகளில் உள்ள பாட்டரிகளின் 
சார்ஜ் 99 சதவீகம் இருந்ததாக  EVMகளில் பொருத்தப்பட்ட 
LED மூலம் தெரிய வந்ததாக காங்கிரஸ் கூறியது.

காலை 7 மணியில் இருந்து வேலை செய்யும் ஒரு EVMல் 
பாட்டரி சார்ஜ் குறைந்திருக்க வேண்டாமா? 10 மணி நேரம் 
கழிந்த பின்னும் 99 சதவீதம் சார்ஜ் எப்படி இருக்க 
முடியும் என்று காங்கிரஸ் கேட்டது. இவ்வாறு பாட்டரி 
சார்ஜ் அதிகமாக இருந்த தொகுதிகளில் எல்லாம் 
பாஜக வெற்றி பெற்றுள்ளது என்றும் காங்கிரஸ் 
மேலும் கூறியது.

EVMகள் மீதும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதும் 
பெரும் அவநபிக்கையை ஏற்படுத்திய இந்தப் 
புகார்களுக்கு  இந்தியத் தேர்தல் ஆணையம் 
பதில் அளித்துள்ளது. என்றாலும் அந்தப் பதில் 
பரந்துபட்ட மக்களின் புரிதல் மட்டத்துடன்
ஒத்திசையவில்லை.

எனவே சமூகத்தின் அனைத்துப் பகுதி மக்களும் 
புரிந்து கொள்ளும் விதத்தில் நியூட்டன் அறிவியல் 
மன்றத்தின் சார்பாக அதன் நிறுவனரும் தலைவரும் 
ஆகிய பி இளங்கோ சுப்பிரமணியன் என்னும் நான் 
அறிவியல் துல்லியம் நிறைந்த ஒரு பதிலை 
with authority and aplomb முன்வைக்கிறேன்.   

அறிவியலின் பதில் காணீர்!
-------------------------------------------
காங்கிரசின் புகார்கள் நகைப்புக்குரியவை; நாணத் 
தக்கவை. மனித குல வரலாறு கண்டும் கேட்டும் இராத 
தற்குறித்தனம் காங்கிரசின் புகார்களில் வெளிப்படுகிறது.
அவற்றில் அணுவளவு கூட உண்மை இல்லை.

EVMகளில் உள்ளவை பிரைமரி பேட்டரிகள்
(primary batteries) ஆகும். அவற்றை சார்ஜ் பண்ணவோ 
அல்லது ரீசார்ஜ் பண்ணவோ தேவையில்லை.
காங்கிரசார் குறிப்பிடும் LED indicatorகள் பேட்டரி சார்ஜ் 
அளவைக் காட்டும்  இண்டிகேட்டர்கள் அல்ல. எனவே 
99 சதவீதம் சார்ஜ் காட்டுகிறது என்று காங்கிரசார் 
கூறுவது  பேட்டரி சார்ஜைக் குறிக்காது. 

அப்படியானால் அந்த இண்டிகேட்டர்கள் எதைக் 
குறிக்கின்றன? அவை வோல்டேஜ் இண்டிகேட்டர்கள்
ஆகும். நன்கு கவனிக்கவும்: அந்த LEDகள் பேட்டரியில்  
வோல்டேஜ் எவ்வளவு இருக்கிறது என்று காட்டுபவை.

பேட்டரி சார்ஜ் இண்டிகேட்டர் வேறு; வோல்ட்டேஜ் 
இண்டிகேட்டர் வேறு. முன்னதற்கு ஒரு EVMல் 
வேலையே இல்லை.  

ஆரம்ப கால EVMகள் 6 வோல்ட் பேட்டரிகளில் 
இயங்கின. EVMகளுடன் VVPAT இணைக்கப்பட்ட 
பிறகு கூடுதலாக ஒரு 1.5 volt செல்லைச் சேர்த்தோம்; 
அதாவது தற்போது கண்ட்ரோல் யூனிட்  7.5 volt 
பேட்டரியில் இயங்குகிறது.

VVPAT அச்சடித்துத் தள்ள வேண்டி இருப்பதால் 
வோல்டேஜ் அதிகமுள்ள பேட்டரி தேவை. எனவே  
VVPAT 22.5 volt பேட்டரியில் இயங்குகிறது. 

எந்த அளவு வோல்ட்டேஜ் வரை ஒரு பாட்டரி வேலை 
செய்யும்? VVPATயில் உள்ள பேட்டரி 10 voltக்கு 
குறைந்தால் வேலை செய்யாது. low voltage
ஆகி விடும். நம் வீட்டில் உள்ள டியூப் லைட், டிவி 
போன்றவை low voltageல் வேலை செய்வதில்லை 
அல்லவா? அதுபோலவே control unitம் VVPATம் 
low voltageல் வேலை செய்யாது.

தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு எப்போது low voltage
ஆகும் என்று தெரிய வேண்டும். அப்படித் 
தெரிந்தால்தான் சரியான நேரத்தில் பேட்டரியை 
மாற்ற முடியும். காங்கிரசார் பிறழ உணர்ந்த 
இண்டிகேட்டர்கள் உண்மையில் threshold voltage levelஐ 
உணர்த்தும் இண்டிகேட்டர்கள். அவற்றுக்கும் 
பேட்டரி சார்ஜுக்கும் ஸ்நானப்  பிராப்தி கிடையாது.

எனவே காங்கிரஸாரின் புகார்களை நியூட்டன் 
அறிவியல் மன்றம் இகழ்ச்சியுடன் நிராகரிக்கிறது.
---------------------------------------------------------------------
பின்குறிப்பு:
வாசகர்களே,
உங்களின் மொபைல் போனில் ஒரு பேட்டரி 
இருக்கும். அது லித்தியம் அயான் பேட்டரியாக 
இருக்கக்கூடும். அவற்றை ரீசார்ஜ் செய்யலாம்.
அவை secondary பேட்டரிகள் ஆகும்.

ஆனால் EVMகலீல் உள்ளவை PRIMARY பேட்டரிகள்.
அவற்றை ரீசார்ஜ் செய்ய இயலாது.
********************************************************** 

           


     

   .       

      

    
          

வெள்ளி, 20 டிசம்பர், 2024

உலக சதுரங்க சாம்பியன்!
ஆனந்த் முதல் குகேஷ் வரை! 
-----------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------
2013ல் உங்க சதுரங்க சாம்பியன் போட்டி 
சென்னையில் நடைபெற்றது. அப்போது 
ஆனந்த் சாம்பியனாகஇருந்தார். அவரை 
மாக்னஸ் கார்ல்சன் எதிர்த்தார்.

உலக சாம்பியனை எல்லோரும் எதிர்க்க முடியாது.
ஒரு சாலஞ்சர் (challenger) மட்டுமே எதிர்க்க முடியும்.
சாலஞ்சர் யார் என்பதைத் தீர்மானிக்க 
உலக அளவிலான candidates tournament என்னும் 
போட்டி நடைபெறும். இதில் அதிகப் புள்ளிகளுடன் 
முதலிடம்  பெறுபவரே சாலஞ்சர் ஆவார்.

2013ல் ஆனந்தை தோற்கடித்து கார்ல்சன் உலக 
சாம்பியன் ஆனார். தொடர்ந்து சில ஆண்டுகள் 
கார்ல்சன் உலக சாம்பியனாக இருந்தார். 

ஒரு உலக சாம்பியன் தன்னுடைய TITLEஐ defend 
செய்ய வேண்டும். ஆனால் மாக்னஸ் கார்ல்சன்
2023ல் தன்னுடைய டைட்டிலை defend செய்யப் 
போவதில்லை என்று அறிவித்து விட்டார் எனவே 
சாலஞ்சரான சீன வீரர் டிங் லிரென் உலக 
சாம்பியன் ஆனார்

டிங் லிரெனின் சாலஞ்சர் யார் என்பதை முடிவு செய்ய 
நடந்த candidates tournamentல் பிரக்ஞானந்தா, குகேஷ் 
உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
Double round robin முறையில் நடந்த இப்போட்டியில்
சாலஞ்சராக குகேஷ் வெற்றி பெற்றார். அவர் 
டிங் லெரினைத் தோற்கடித்து உலக சாம்பியன் ஆனார்.

******************************************************     
    

.

.  

   

ஞாயிறு, 10 நவம்பர், 2024

சத்தியராஜ் மகனின் திருமணம் 
இந்து சாஸ்திர முறைப்படி நடந்தது.
---------------------------------------------------------
சத்தியராஜ் ஒரு பெரும் பெரியாரிஸ்ட்!
ஒரு சினிமாவில் பெரியாராகவே நடித்தவர்!
பகுத்தறிவுப் போராளியான அவர் 
பல தாலியறுப்பு   நிகழ்வுகளை நடத்திப் 
பெண்களின் தாலியை அறுத்த புரட்சி வீரர்.

ஆனால் அவருடைய மகன் சிபிராஜ்- ரேவதி 
திருமணத்தை எப்படி நடத்தினார் என்று தெரியுமா?
பதிவுத் திருமணம் நடத்தினாரா? இல்லை! இல்லை!
சீர்திருத்தத் திருமணம் நடத்தினாரா? இல்லை! இல்லை!

ஆசிரியர் வீரமணி தலைமை தாங்கி 
சீர்திருத்தத் திருமணம் நடத்தி வைத்தாரா? அல்லது 
மானமிகு கலிபூங்குன்றன் திருமணத்தை 
நடத்தி வைத்தாரா?

தாலி இல்லாமல் சிபிராஜ் மணப்பெண்ணைத் 
திருமணம் செய்து கொண்டாரா?
ஊரான் வீட்டுப் பெண்களின் தலையை 
அறுத்த சத்யராஜ்  தன மருமகள் ரேவதியின் 
கழுத்தில்  உள்ள தாலியை அறுப்பாரா?
திருமண நாளன்று கறுப்புச் சட்டையை 
அணிந்தாரா சத்யராஜின் மகன்?

புரட்சி புண்ணாக்கு இப்படி எதுவும் இல்லாமல் 
இந்து மத சாஸ்திரப்படி தன் மகனின் திருமணத்தை 
நடத்தி வைத்தார். வெளியில் இருந்து இத்திருமணத்தைப்  
பார்த்தவர்கள் இதை ஐயராத்துக் கல்யாணம் என்றே 
கருதினர். அந்த அளவுக்கு சம்ஸ்கிருத மந்திரங்கள் 
காதைத் துளைத்தன.
************************************************  

சனி, 2 நவம்பர், 2024

அறிவியல் நோக்கில் அமைந்த பயணநூல்!    

---------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------
அறிவியல் ஒளி ஏட்டின் ஆசிரியர் நா சு சிதம்பரம் 
அவர்கள் எழுதிய " அறிவியலாளரின் அமெரிக்கப் 
பயணம்" என்ற நூல் என் கரங்களில் கனக்கிறது.
அந்நூல் குறித்த திறனாய்வு நோக்கில் அமைந்த 
அறிமுகமே இக்கட்டுரை.

பயணநூல் (travelogue) என்றதுமே தமிழ் வாசகர்களுக்கு 
ஏ கே செட்டியார்தான் நினைவுக்கு வருவார். தமிழ்ப் 
பயண நூல்களின் தந்தை காரைக்குடியில் பிறந்த 
ஏ கே செட்டியார் எனப்படும் அண்ணாமலை கருப்பன் 
செட்டியார்தான் (1911-1983). பல்வேறு நாடுகளுக்கும் 
சென்று வந்த ஏ கே செட்டியார் தமது பயண 
அனுபவங்களை எழுதி நூல்களாக வெளியிட்டுள்ளார்.
முன்னதாக இவை அவர் நடத்தி வந்த "குமரி மலர்" 
என்ற பத்திரிகையில் தொடர் கட்டுரையாக 
வெளிவந்தன. 

1970களில்  எழுத்தாளர் மணியன் ஆனந்த விகடன் 
ஏட்டில் பயணக் கட்டுரைகளை எழுதினார். "இதயம் 
பேசுகிறது" என்ற தலைப்பில் அமைந்த மணியனின் 
பயணக் கட்டுரைகள் ஜனரஞ்சகமாக அமைந்து 
சராசரி வாசகர்களுக்கு நிறைவளித்தன.

ஏ கே செட்டியாருக்கும் இதயம் பேசுகிறது மணியனுக்கும் 
பின்னர் தமிழில் பயணநூலும் இல்லை; பயண நூல் 
எழுத்தாளரும் தென்படவில்லை. இச்சூழலில் நா சு சிதம்பரம் 
எழுதிய அமெரிக்கப் பயண நூல் வெளிவந்துள்ளது.
இது இடங்களின் மாண்பைக்கூறும் பயணநூல் அல்ல.
மாறாக இடங்களில் உள்ள அறிவியலின் மாண்பைக் 
கூறும் நூல் ஆகும். அறிவியல் பயணநூல் என்ற 
வகைமையில் தமிழின் முதன் முதல் அறிவியல் 
பயண நூல் நா சு சிதம்பரம் அவர்களின் " அறிவியலாளரின் 
அமெரிக்கப் பயணம்" நூலே.     

விலை உயர்ந்த பளபளப்பான காகிதத்தில் நூல் அச்சிடப்  
பட்டுள்ளது. ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட
வண்ண நிழற்படங்கள் உள்ளன. கிட்டத்தட்ட 500 நிழற்படங்கள் 
இருக்கக் கூடும். 

ஜூன் 2017ல் நா சு சிதம்பரம் அவர்கள் ஒரு மாதப் 
பயணமாக அமெரிக்கா சென்றார். அங்கு 17 ஊர்களைச் 
சுற்றிப் பார்த்தார். அவற்றின் அறிவியல் முக்கியத்துவத்தைக் 
குறித்துக் கொண்டார். தமது பயண அனுபவங்களை 
அறிவியல் ஒளி ஏட்டில் தொடர்கட்டுரைகளாக 
வெளியிட்டார் .அக்கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
 மேலும் அமெரிக்கா  தொடர்பான பலரும் அறிந்திராத 
அறிவியல் செய்திகளும் இந்நூலில் அடங்கி உள்ளன. 

இந்தியாவில் இருந்து நாம் கொண்டு செல்லும் எந்த ஒரு 
எலெக்ட்ரானிக் கருவியும் அமெரிக்காவில் வேலை 
செய்வதில்லை. இதன் காரணம் என்ன? இந்தியாவில் 
230 வோல்ட் மின்னழுத்தத்தில் (voltage) மின்சாரம் வழங்கப் 
படுகிறது. ஆனால் அமெரிக்காவில் 110 வோல்ட் 
மின்னழுத்தத்தில் மின்சாரம் வழங்கப் படுகிறது. 
இந்தியக் கருவிகள் 230 வோல்ட் மின்னழுத்ததில் 
வேலை செய்யுமாறு தயாரிக்கப் பட்டவை. அவற்றின் 
மின்னழுத்தத்தை 110 வோல்ட்டுக்குக் குறைத்தால் 
அவை வேலை செய்ய ஆரம்பித்து விடும். இதற்கேற்ற 
மின்னழுத்த மாற்றிகளை (transformers) வாங்கி நம் 
கருவிகளில் பொருத்த வேண்டும். இதுபோன்ற பயனுள்ள 
அறிவியல் செய்திகளை  நூலில் காணலாம்..

அமெரிக்க விண்வெளி அறிவியலின் திரட்சியாக
நாசா (NASA) விளங்குகிறது. செயற்கைக் கோள்களை 
விண்வெளியில் செலுத்துதல் விண்வெளி ஆய்வுகளை 
மேற்கொண்டு பூமி குறித்த தரவுகளைச் சேகரித்தல்
உள்ளிட்ட பணிகளை நாசா மேற்கொள்கிறது. இதனால் 
இயற்கைப் பேரிடர்களை எதிர்கொண்டு உயிரிழப்புகளைத் 
தவிர்ப்பது  சாத்தியமாகிறது. நாசாவின் பணிகள் 
பூமியில் வாழும் மாந்தர்களின் வாழ்க்கையை 
மேம்படுத்தியும் பாதுகாப்பானதாக ஆக்கியும் உள்ளன.

அமெரிக்க அரசு நாசாவுக்காக பெரும்பணம் செலவிடுகிறது.
நடப்பாண்டிற்கான (2024) நாசாவின் பட்ஜெட் 25 பில்லியன் 
அமெரிக்க டாலர் ஆகும் (USD 25,000,000,000).இது இந்திய 
மதிப்பில் தோராயமாக ரூபாய் இரண்டு லட்சம் கோடி 
ஆகும் ( Rs 2,000,000,000,000).

அமெரிக்காவுக்கு நாசா என்பது போல இந்தியாவுக்கு 
இஸ்ரோ (ISRO) உள்ளது. கணக்கற்ற செயற்கைக் 
கோள்களை இஸ்ரோ  விண்ணில் செலுத்தி உள்ளது. 
மங்கள்யான், சந்திரயான் என்று கோள்சுற்றிகளை 
(orbiters) அனுப்பி  ஆய்வுகளை மேற்கொண்டது.

இஸ்ரோவின் பட்ஜெட் என்ன? இந்திய அரசு இஸ்ரோவுக்காக 
எவ்வளவு செலவிடுகிறது? 2024-2025ஆம் ஆண்டிற்கான 
இஸ்ரோவின் பட்ஜெட் ரூ 13,000 கோடி ஆகும்.

இஸ்ரோவின் ரூ 13,000 கோடியை நாசாவின் ரூ இரண்டு 
லட்சம் கோடியுடன் ஒப்பிட்டால், இஸ்ரோவின் பங்கு 
நாசாவை விட 15 மடங்கு குறைவு.    

அமெரிக்கப் பயணம் என்றாலே, அதுவும் அறிவியல் நோக்கில் 
அமைத்த பயணம் என்றாலே, அப்பயணத்தில் நாசா 
முக்கியத்துவம் பெறுவது இயற்கையே. எனவேதான் 
அமெரிக்கா சென்ற உடனேயே, நூலாசிரியர் சிதம்பரம் 
தமது முதல் பயணமாக ஹூஸ்டன் (Houston) நகரில் உள்ள
நாசாவின் ஓர் அலகான ஜான்சன் விண்வெளி மையத்திற்குச் 
சென்றார்.

நாசா என்பது ஒரே ஒரு அலகை மட்டும் கொண்ட ஓர் ஒற்றை 
அமைப்பு அல்ல. நாசாவின் அலகுகள் (units) அமெரிக்காவின் 
19 ஊர்களில் உள்ளன. எடுத்துக் காட்டாக ஏம்ஸ் ஆய்வு மையம்
(Ames Research Centre) கலிபோர்னியா மாநிலத்தில் சிலிகான் 
பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. கென்னடி விண்வெளி மையம் 
(Kennedy Space Centre) புளோரிடாமாநிலத்தில் கடற்கரை 
நகரமான மியாமிக்குச் சற்றுத் தொலைவில் அமைந்துள்ளது. 
வெவ்வேறு ஊர்களில் அமைந்துள்ள 19 அலகுகளுக்கும்  
தலைமை ஏற்று வழிநடத்தும் நாசாவின் தலைமைச் செயலகம் 
வாஷிங்டனில் உள்ளது. நாசா என்றால் 19  அலகுகளையும் குறிக்கும்.        

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய நகரம் 
ஹூஸ்டன். "ஜான்சன் விண்வெளி மையம்" இங்குதான் உள்ளது.
1960களில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக 
இருந்து, ஜான் கென்னடியின் படுகொலைக்குப் பின்னர் 
அமெரிக்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் லிண்டன் 
பெயின்ஸ் ஜான்சன் (Lyndon Baines Johnson). இவரின் 
பெயரில்தான் விண்வெளி மையம் அமைந்துள்ளது.    

1620 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இம்மையத்தில் 
100  கட்டிடங்கள் உள்ளன. 110 விண்வெளி வீரர்கள் உட்பட 
3200 பேர் இம்மையத்தில்  பணியாற்றுகின்றனர். விண்வெளிப் 
பயணம் மேற்கொள்ளுவோருக்கு உரிய பயிற்சிகளை 
வழங்குவது இம்மையத்தின் பிரதான பணிகளில் ஒன்று.

இம்மையத்தில்தான் விண்வெளி வீரர்களுக்குப் பயிற்சி 
அளிக்கும் சமநிலை மிதப்பு பயிற்சியகம் (Neutral Buoyancy centre)
உள்ளது. இதில் 23,000 கனமீட்டர் கொள்ளளவு (Volume)
கொண்ட நீர் நிரம்பிய குளம் உள்ளது.  23,000 கனமீட்டர் 
என்பது  8 லட்சத்து 12000 கன அடி (8,12,000 cubic feet)
ஆகும்.    

விண்வெளிப் பயணங்களின்போது எடையற்ற நிலை (weightlessness)
மற்றும் தடையற்ற வீழ்ச்சி (freefall)  ஆகியவற்றை வீரர்கள் 
எதிர்கொள்ள வேண்டும். இதற்கு அவர்களின் உடல் 
பழக்கப்பட்ட வேண்டும். மேற்கூறிய குளத்தில் எடையற்ற 
நிலை உருவாக்கப் பட்டு வீரர்களைக் குளத்தில் அமிழ்த்தி 
பயிற்சி வழங்கப் படுகிறது. இந்தக் குளத்திற்குச் சென்று 
நேரில் பார்த்து விளக்கம் பெற்றுள்ளார் நூலாசிரியர்.

ஜான்சன் மையத்தின் இன்னொரு சிறப்பு! இதனுள் ஓர் 
அருங்காட்சியகம் உள்ளது. முன்பு விண்ணில் 
செலுத்தப்பட்ட ஏவுகணைகள் உள்ளிட்ட 400 பொருட்கள் 
காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. 1969ல் 
நெயில் ஆர்ம்ஸ்டிராங் நிலவுக்குச் சென்றபோது 
அங்கிருந்து கொண்டு வந்த பல்வேறு கற்களும் 
பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன. இவற்றையெல்லாம் 
நூலாசிரியர் பார்வையிட்டுள்ளனர்.

அமெரிக்கா என்றவுடன் நமது கருத்தைக் கவரும் விஷயங்களில் 
இன்னொன்று வால்ட் டிஸ்னியின் எப்காட் (EPCOT) மகிழிடம் ஆகும்.
உலகின் மிகப்பெரிய உல்லாசப் போக்கிடமாக இது உள்ளது.
குழந்தைகளுக்கான கார்ட்டூன் படங்களைத் தயாரித்து 
வழங்கியவரும் அமெரிக்க அனிமேஷன் தொழிலின் 
முன்னோடியுமான வால்ட் டிஸ்னியின் (Walt Disney 1901-1966)
கனவே இந்த  எப்காட் மகிழிடம் ஆகும்.  
(EPCOT = Experimental Prototype Community of Tomorrow)   

வால்ட் டிஸ்னியின் மறைவுக்குப் பின்னர் 1982 அக்டோபரில்  
எப்காட் மகிழிடம் உருவாக்கப் பட்டது.  இது புளோரிடா 
மாநிலத்தில் பே என்ற ஏரியைச் சுற்றி அமைந்துள்ளது.
நூலாசிரியர் நா சு சிதம்பரம் எப்காட் மகிழிடத்தையும் 
சுற்றிப் பார்த்துள்ளார். 

அத்துடன் நிற்கவில்லை அவர். அமெரிக்காவரை சென்றுவிட்டு 
அருகில் கனடாவில் உள்ள நயாகரா அருவியைப் பார்க்காமல் 
திரும்பலாமா? நூலாசிரியர் அதிலும் குறை வைக்கவில்லை.
நயாகரா அருவியை ஹெலிகாப்டரிலும் சுற்றி வந்து 
நிறைவு எய்தினார்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். விரிவஞ்சி விடுக்கிறேன்.
இவ்வளவு பெரிய நூலுக்கு பொருளடக்கம் இல்லை.  தலைப்புகளும் 
பக்கங்களும் பொருளடக்கத்தால் இணைக்கப் பட வேண்டும்.
இது அடுத்த பதிப்பில் சீராகும் என்று எதிர்பார்க்கிறேன்.
 
The proof ot the pudding is in the eating என்றார் ஒரு ஆங்கிலப் 
பழமொழி உண்டு. உணவின் ருசி அதைச் சாப்பிடும்போதுதான் 
தெரியும் என்று இதற்குப் பொருள். எனவே வாசகர்கள் 
நூலை வாங்கிப் படித்து அதன் சுவையை நுகருமாறு 
வேண்டுகிறேன். ஒவ்வொரு நூலகத்திலும் இந்நூல் 
இருக்குமென்றால் அது வாசகர்களுக்குப் பயன்தரும்.
********************************************************* 
பெரும் பயன் அளிக்கும்.
நேரடியாக 
  

   
     

 





   
.       


 
 

  




 
  
   



பொங்கலும் மகர சங்கராந்தியும் ஒன்றுதானா?
----------------------------------------------------------------------------
நியூட்டன்  அறிவியல் மன்றம்
 ---------------------------------------------

ராசி மண்டலத்தில், தனுஷ் ராசியைக் கடந்த பிறகு 

மகர ராசிக்குள் (from Sagittarius to Capricorn) சூரியன் நுழையும் 

முதல்நாளே மகர சங்கராந்தி ஆகும். சங்கராந்தி என்ற 

சமஸ்கிருதச் சொல் "நகர்ந்து செல்" என்று பொருள்படும். 

மகர சங்கராந்தி என்றால் "மகர ராசியில் நகர்ந்து செல்" 

என்று பொருள். சூரியன் எந்த நாளில் மகர ராசிக்கு 

நகர்கிறதோ அந்த நாளே மகர சங்கராந்தி ஆகும். 

அந்த நாளே தை மாதத்தின் முதல்நாளும் ஆகும். அன்றுதான்   

பொங்கல் பண்டிகை கொண்டாடப் படுகிறது.


மகர ராசி என்பது ஆங்கிலத்தில் Capricorn எனப்படுகிறது.

மகரம் என்பது  வெள்ளாட்டைக் குறிக்கிறது. வெள்ளாடு 

போல் உருவம் உடைய நட்சத்திரக் கூட்டமே மகர ராசி ஆகும். 

மகர சங்கராந்தி என்ற சமஸ்கிருதச்  சொல் 

"வெள்ளாட்டு நகர்வு" என்று தமிழில் பொருள்படும்.

(மகரம் = வெள்ளாடு; சங்கராந்தி = நகர்ந்து செல், நகர்வு). 


பொங்கல் என்பது ஒரு வானியல் நிகழ்வின் பண்பாட்டுப்

பெயர்.மகர சங்கராந்தி என்பது அதே வானியல் நிகழ்வின் 

அறிவியல் பெயர். மகர சங்கராந்தி என்பது தமிழில் 

வெள்ளாட்டு நகர்வு என்று பொருள்படும். ஆக பொங்கல்,

மகர சங்கராந்தி, வெள்ளாட்டு நகர்வு ஆகிய மூன்றும் 

ஒரே வானியல் நிகழ்வின் வெவ்வேறு பெயர்கள். அவ்வளவே.

*******************************************


சாம்சங்கின் காலடியில் திமுக அரசு!
திமுகவின் காலடியில் CITU.
------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
முன்னாள் தலைவர், 
NFTE BSNL தொழிற்சங்கம், சென்னை.
----------------------------------------------------------. 
தொழிலாளர்கள் சங்கம் அமைத்துக் கொள்ளலாம்.
இதற்கென்று ஒரு சட்டம் இந்தியாவில் இருக்கிறது.
Indian Trade Union Act 1926 என்பதே அந்தச் சட்டம்.

இந்தச் சட்டம் நாடு உதந்திரம் அடைந்த பிறகு 
கொண்டு வரப்பட்ட சட்டம் அல்ல. பிரிட்டிஷ் 
ஆட்சி நடக்கும்போதே கொண்டு வரப்பட்ட 
சட்டம் இது. பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த 
சட்டம் இது. 

இந்தியாவின் முதன் முதல் தொழிற்சங்கம் 
எது தெரியுமா? AITUCதான்.
(All India Trade Union Congress).இச்சங்கம் பம்பாயில் 
தொடங்கப் பட்டது.

AITUC எப்போது எந்த ஆண்டு தொடங்கப் பட்டது 
தெரியுமா? 1920ல்  31 அக்டோபர் 1920ல் தொடங்கப்
பட்டது. AITUCக்கு  நேற்றோடு 104 வயது முடிந்து 
இன்று  முதல் 105ஆம்  வயது தொடக்கம்.

AITUC சங்கத்தின் முதல் தலைவர் யார் தெரியுமா?

எஸ் ஏ டாங்கே??
எஸ் வி காட்டே??
எம் என் ராய்??
இல்லை, இல்லை.

சுதந்திரப் போராட்டத் தளகர்த்தர் லாலா லஜபதி 
ராய்தான் AITUCயின் முதல் தலைவர்.

இந்த விஷயமெல்லாம் ஸ்டாலினுக்கோ 
உதயநிதிக்கோ தெரியாதுதான். ஆனால்
CPM தலைமை ஏன் சோரம் போகிறது?
*************************************************    

            

  

வியாழன், 31 அக்டோபர், 2024

அணுக்களுக்கு ஆயுள் உண்டுதான்.
அணுக்களில் இரண்டு வகை.  
1) stable அணுக்கள் 
2) radio active அணுக்கள்.

Periodic Tableல் 82ஆம் இடத்தில் Lead என்னும் 
தனிமம் இருக்கிறது. 82 வரையிலான அணுக்கள் 
stable. அதாவது நிலையானவை.

82க்கு அப்பால் கதிரியக்கத் தனிமங்கள்.
இவை சிதைவடைந்து அழிந்து விடும்.
சிதைவின் வேகத்தைப் பொறுத்து 
அழிவு விரைவிலோ அல்லது மெதுவாகவோ 
நிகழும்.

Stable அணுக்களின் ஆயுள் புரோட்டானின் 
ஆயுளைப் பொறுத்தது. புரோட்டானின் ஆயுள் 
நம்ப முடியாத அளவு பிரம்மாண்டமானது.

ஒரு நிலையற்ற அணு (unstable) கதிர்வீச்சு 
காரணமாக தனது ஆற்றலை இழக்கும்.
இதுவே decay எனப்படும்.

Radioactive decayன்போது சிதைவுக்கு உள்ளாகும் 
parent nucleas ஒரு daughter nucleasஇ பிரசவிக்கும்.
அழிவு என்பதோ இறப்பு என்பதோ ஒன்றுமே 
இல்லாமல் முற்றிலும் பூஜ்யமாகி விடுவது அல்ல.

Law of conservation of mass படியுங்கள். பொருளுக்கு 
அழிவில்லை.