மாக்னஸ் கார்ல்சன்னும் டி எம் கிருஷ்ணாவும்!
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
2024ஆம் ஆண்டிற்கான மின்னல்வேக சதுரங்கப்
போட்டி (Rapid and Blitz format) நியூயார்க்கில் (வால் ஸ்டிரீட்)
டிசம்பர் 26 முதல் 31 வரை நடைபெற்றது.
இதில் பங்கேற்று ஆடிய உலக சாம்பியன் மாக்னஸ்
கார்ல்சன் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து வந்ததால்
அவருக்கு அபராதம் விதிக்கப் பட்டது. அதைச்
செலுத்த மறுத்ததால் அவர் தகுதிநீக்கம்
(disqualified) செய்யப்பட்டார். ஒன்பதாவது சுற்றில்
விளையாட அவரை FIDE நிர்வாகம்
அனுமதிக்கவில்லை.
நம்மூர் போலி முற்போக்குகளுக்கு இந்தச் செய்தி
பெரும் ஆச்சரியத்தைத் தரலாம். தாராளவாத
அமெரிக்காவில் கூட ஜீன்ஸ் அணியத் தடையா
என்று அதிர்ச்சி அடையலாம். FIDE விதிகளின்படி
(Dress code) ஜீன்ஸ் பேன்ட் முறையான உடை அல்ல.
எனவே உலக சாம்பியனுக்கே அனுமதி மறுக்கப்
பட்டு அவர் தகுதிநீக்கம் செய்யப் பட்டார். (பின்னர்
சமரசம் ஏற்பட்டு கார்ல்சன் பங்கேற்க
அனுமதிக்கப்பட்டு 2024ஆம் ஆண்டின் உலக
சாம்பியன் பட்டத்தை அவர் அயான் நெப்போவுடன்
பகிர்ந்து கொண்டார்..
நம் ஊரிலும் ஒரு பூர்ஷ்வா இசைமேதை
உடைப்புரட்சி செய்தார். 2024 டிசம்பர் சங்கீத
சீசனில் லுங்கி அணிந்து வந்து கச்சேரி செய்தார்.
டி எம் கிருஷ்ணா.
லுங்கி முரளியான உடை அல்ல. சபாக்களில்
கச்சேரி செய்யும் ஒரு வித்துவான் முறையான
உடையை அணிந்திருக்க வே ண்டும் என்று
ரசிகர்கள் எதிர்பார்ப்பர். இது நியாயமே.
இந்த சீசனில் லுங்கி அணிந்து வந்து புரட்சி
செய்த பூர்ஷ்வா இசைமேதை அடுத்த சீசனில்
பாவாடை தாவணி அணிந்து வந்து கச்சேரி
செய்து ஆண்-பெண் சமத்துவத்தை
நிலைநாட்ட முற்படலாம்.
ஜீன்ஸ் அணிந்து வந்ததால் உலக சாம்பியன்
கார்ல்சனுக்கே அமெரிக்காவில் தடை என்ற
செய்தியைப் படித்து அரண்டு போயிருக்கக்
கூடும் நமது பூர்ஷ்வா இசைமேதை.
***************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக