உலகப்புகழ் பெற்ற இந்தியப் பெண்மணி!
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------
Indian woman's Rapid CHESS champion)
சதுரங்க வீராங்கனை கோனேரு ஹம்பியை
அழைத்துப் பாராட்டி உள்ளார் பிரதமர் மோடி.
உலக சதுரங்க சம்மேளனம் (FIDE) நடத்தும்
அதிவிரைவு சதுரங்கப் போட்டியில் (Rapid Chess Tournament)
பெண்கள் பிரிவில் 2024ஆம் ஆண்டிற்கான உலக
சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் ஹம்பி.
இவ்வாறு கோனேரு ஹம்பி உலகப்புகழ் பெற்ற
பெண்மணியாகி விட்டார். இதனால் பிரதமரின்
பாராட்டு என்ற கெளரவத்தைப் பெறுகிறார்.
ஆத்திர மாநிலம் குடிவாடா நகரைச் சேர்ந்த
தெலுங்குப் பெண்மணியே கோனேரு ஹம்பி.
இவரின் தந்தையார் வேதியியல் பேராசிரியர்.
ஹம்பிக்கு திருமணமாகி ஒரு குழந்தையும்
இவரின் கணவர் ஒரு software professional.
இந்திய சதுரங்க வீராங்கனைகளில் முதலிடத்தில்
இருப்பவர் கோனேரு ஹம்பி. நியூயார்க்கில்
அண்மையில் டிசம்பர் 2024ல் நடைபெற்ற
அதிவிரைவு சதுரங்கப் போட்டியில் பெண்கள்
பிரிவில் (Rapid Chess World Champion Women)
உலக சாம்பியன் பட்டம் வென்றார் கோனேரு
ஹம்பி. உலக சாம்பியன் பட்டத்தை இவர்
இரண்டாவது முறையாக வெல்கிறார். 2019ல்
ஏற்கனவே Rapid Chess சாம்பியனாக வெற்றி
பெற்றவர் ஹம்பி. பிரசவம், குழந்தைப்பேறு
காரணமாக சில ஆண்டுகள் விளையாடாமல்
இருந்த அவர் மீண்டும் விளையாடத் தொடங்கி
சாம்பியன் ஆகி உள்ளார்.
உலக சதுரங்க சம்மேளனம் சதுரங்கப் போட்டிகளை
மூன்று வகையாக (Three Formats) நடத்துகிறது.
1) Classical 2) Rapid 3) Blitz.
இமமூன்று வகைப் போட்டிகளிலும் ஆட்டத்திற்கு
அனுமதிக்கப்படும் நேரம் மாறுபடும்.
கிளாசிக்கல்: ஒவ்வொரு பிளேயருக்கும்
முதல் 40 நகர்த்தல்களுக்கு 90 நிமிடங்கள்
வழங்கப்படும். தொடர்ந்து 30 நிமிடங்கள்
வழங்கப்படும். அதற்குள் ஆட்டத்தை முடிக்க
வேண்டும்.அத்துடன் ஒரு நகர்த்தலுக்கு
30 வினாடி இன்கிரிமெட் வழங்கப்படும்.
Rapid: ஒவ்வொரு பிளேயருக்கும் 15 நிமிடங்கள்
வழங்கப்படும். அத்துடன் ஒவ்வொரு பிளேயருக்கும்
ஒரு நகர்த்தலுக்கு 10 வினாடி இன்கிரிமென்ட்
வழங்கப்படும்.
Blitz: ஒவ்வொரு பிளேயருக்கும் 3 நிமிடங்கள்
வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு பிளேயருக்கும்
ஒரு நகர்த்தலுக்கு 2 வினாடி இன்கிரிஎண்ட்
வழங்கப்படும்.
2013ல் சென்னையில் நடைபெற்ற உலக சாம்பியன்
போட்டியில் விஸ்வநாதன் ஆனந்தைத் தோற்கடித்து
மாக்னஸ் கார்ல்சன் சாம்பியன் ஆனார். இதுதான்
கிளாசிக்கல் ஃபார்மட்.
அன்மையில் டிசம்பர் 2024ல் சிங்கப்பூரில் நடைபெற்ற
உலக சாம்பியன் போட்டியில் சீன வீரர்
டிங் லிரென்-ஐ (Ding Liren) தோற்கடித்து இந்திய
வீரர் குகேஷ் தொம்மராஜ் (Gukesh Dommaraju)
வெற்றி பெற்றாரே, அது Classical Format.
Rapid Chess formatல் பொதுப்பிரிவில் (open) ரஷ்ய
இளம் வீரர் பதினெட்டே வயதான வோலோடர்
முர்சின் (Volodar Murzin) சாம்பியன் ஆகி உள்ளார்.
பெண்கள் பிரிவில் 37 வயதிலும் தனது ஆட்டத்
திறனைத் தக்க வைத்துக் கொண்டு சாம்பியனாகி
உள்ளார் கோனேரு ஹம்பி.
உலக Blitz Chess போட்டியில் மாக்னஸ் கார்ல்சன்,
ரஷ்ய வீரர் அயான் நெப்போ ஆகிய இருவரும்
கூட்டாக உலக சாம்பியன் பட்டத்தைப் பெற்றனர்.
இது பொதுப்பிரிவு (open section) சாம்பியன் போட்டியின்
முடிவு.
Blitz Chess மகளிர் பிரிவில் சீன வீராங்கனை
ஜூ வெஞ்சன் ( Ju Wenjun) உலக சாம்பியன்
ஆகியுள்ளார்.
மோடி அரசுக்கும் தமிழகப் பெண்கள்
அமைப்புகளுக்கும் நியூட்டன் அறிவியல் மன்றம்
பின்வரும் வேண்டுகோளை விடுக்கிறது.
பெண்களும் பெண்ணுரிமை அமைப்புகளும்
கோனேரு ஹம்பியை ஒரு iconic figureஆக
பெண்களிடமும் மக்களிடமும் எடுத்துச்
செல்ல வேண்டும்.
கோனேரி ஹம்பி 2007ல் பத்மஸ்ரீ விருது பெற்றார்.
மோடி அரசு அவருக்கு பத்மபூஷண் விருது
வழங்க வேண்டும்.
************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக