ஞாயிறு, 13 அக்டோபர், 2024

கிரேக்கத்தில் ஆயுத பூஜை உண்டு!
-----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------
இந்து மதத்தின் பண்டிகைகளை சமூகத்தின் 
உற்பத்தி முறைதான் உருவாக்கியது . பொங்கல், 
தீபாவளி. ஆயுத பூஜை போன்ற பண்டிகைகளை 
 இந்து மதத் தலைவர்களோ ஆன்மிகவாதிகளோ 
உருவாக்கவில்லை. சமூகத்தின் பொருளுற்பத்தியின் 
விளைவுகளே அவை.

ஆபிரகாமிய மதங்களில்தான் மதத் தலைவர்களால் 
பண்டிகைகள் அனைத்தும் உருவாக்கப் பட்டன.
அவற்றின் உருவாக்கம் செயற்கையானது. மக்கள் மீது 
வலிந்து திணிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து பிறந்ததாகக்
கூறப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையை எந்த 
உற்பத்தி முறை உண்டாக்கியது? உற்பத்தி 
முறையால் அல்ல மதவாதிகளால் உண்டாக்கப் 
பட்டதே கிறிஸ்துமஸ்.

இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்திய புறநாநூற்றுக் 
கால வாள்மங்கலத்தின் தொடர்ச்சிதான் இன்றைய 
ஆயுத பூஜை. பாடாண் திணையின் ஒரு துறையாக 
வாள்மங்கலத்தை வைத்தனர் தமிழ்ப் புலவர்கள்.
பாடாண் திணை வாள்மங்கலம் துறையில் 
அமைந்த ஒரு புறநானூற்றுப் பாடலை இங்கு 
தருகிறேன். அதியமானைப் பற்றி ஒளவையார் 
பாடியது.

  1. இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்
    கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து,
    கடியுடை வியன்நக ரவ்வே : அவ்வே,
    பகைவர்க் குத்திக், கோடுநுதி சிதைந்து,
    கொல்துறைக் குற்றில மாதோ ; என்றும்
    உண் டாயின் பதம் கொடுத்து,
    இல் லாயின் உடன் உண்ணும்,
    இல்லோர் ஒக்கல் தலைவன்,
    அண்ணல்எம் கோமான், வைந் நுதி வேலே. (புறநானூறு 96)

 
 மேல்நாட்டினரிடமும் ஆயுகங்களின் கடவுள் 
உண்டு. ஹெபாஸ்டஸ் (Hephaestus) என்பது 
அவர்களின் ஆயுதங்களுக்கான கடவுள்.
கிரேக்கத்தில் ஏதன்ஸ் உள்ளிட்ட பல இடங்களில் 
பண்டு தொட்டு ஹெபாஸ்டஸ் வழிபாடும்
பூஜைகளும் உண்டு.

நமது கல்விக் கடவுள் சரஸ்வதி என்பது போல் 
மேல்நாட்டினரின் கல்விக் கடவுள் மினர்வா.
மானுட சமூகம் முழுவதும் பிரதேச வேறுபாடு 
இன்றி கடவுள் நம்பிக்கை, கடவுளர் வழிபாடு 
ஆகிய அனைத்தும் இருந்தன. இவை இல்லாத 
பிரதேசம் இப்பூவுலகில் கிடையாது என்று 
வரலாற்றுப் பொருள்முதல்வாதம  கற்பிக்கிறது..  

ஒய்வு பெற்ற அமெரிக்க ஜனாதிபதிகள் 
அனைவருமே தீவிரமான கிறிஸ்துவ விசுவாசிகள். 
தீவிரமான பைபிள் பிரச்சாரகர்கள். மேலும் 
அமெரிக்காவில் உள்ள மாகாணங்களின் 
 constitutionல் கடவுள் பற்றி பலமுறை 
குறிப்பிடப்பட்டு உள்ளது.

நமது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கடவுள் 
பற்றிய குறிப்பே இல்லை என்பது பெருமைக்கு 
உரியது.   

பிரிட்டிஷ் விசுவாசியும் கல்வி அறிவு 
இல்லாதவருமான  ஈ வே ராமசாமி மேனாட்டினர் 
முற்போக்காளர்கள் என்று கிளப்பி விட்ட 
பொய்களில், மேலைநாட்டில் ஆயுதபூஜை இல்லை 
என்பதும்  ஒன்று  
----------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
இந்தியப் பண்டிகைகளின் உருவாக்கத்தில் இந்திய 
உற்பத்தி முறையின் பங்கு பற்றி இக்கட்டுரை 
பேசுகிறது. வரலாற்றுப் பொருள்முதல்வாத 
நோக்கில் இக்கட்டுரை அமைந்துள்ளது.

கடவுள் இருக்கிறார் என்ற கருத்துடன் இக்கட்டுரை 
எழுதப்பட்டுள்ளது என்று கருதும் நுனிப்புல்லர்களும்   
சிந்தனைக் குள்ளர்களும் அருகிலுள்ள ரயில் 
நிலையத்திற்குச் சென்று ரயில் வரும்போது 
தலையைக் கொடுக்கவும்.

கடவுள் இல்லை என்பதை அறிவியல் வழியில் 
பலமுறை நியூட்டன் அறிவியல் மன்றம் 
நிரூபித்து உள்ளது.
****************************************************

ஜம்மு காஷ்மீரில் 2024 தேர்தலில் அதிக வாக்குகளைப் 
பெற்ற கட்சி பாஜக. பாஜக வாக்கு சதவீதம் = 25.64.  
ஓமர் அப்துல்லா கட்சி =23.43. பாஜகவை விட 2.21 % 

limit x tends to 0 என்பதற்கும் x = 0  என்பதற்கும் 
உள்ள வேறுபாடு!


  .



     

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக