ஞாயிறு, 22 டிசம்பர், 2024

வசமாக மாட்டிக்கொண்ட  தேர்தல் ஆணையம்!   
ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் 26 தொகுதிகளில்
EVMகளில் முறைகேடு நடந்ததற்கு ஆதாரம்!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------------------
அக்டோபர் 2024ல் ஹரியானா சட்டமன்றத் தேர்தல் 
முடிவுகள் வெளிவந்தன. இதில் பாஜக வெற்றி பெற்றது.
பாஜகவுக்கு இது ஹாட் டிரிக் வெற்றி ஆகும்.

90 இடங்களைக் கொண்ட ஹரியானா சட்ட மன்றத்தில் 
48 இடங்களில் வெற்றி பெற்று பாஜக அறுதிப் 
பெரும்பான்மை பெற்று ஆடசி அமைத்தது. காங்கிரஸ் 
37 இடங்களுடன் இந்த தோல்வியைத் தழுவியது.

இத்தேர்தல் முடிவுகளை ஏற்க மாட்டோம்; EVMகளில் 
முறைகேடு செய்துதான் பாஜக வெற்றி பெற்றுள்ளது
என்று காங்கிரஸ் கூறியது. தேர்தல் ஆணையத்திடம் 
புகார் கொடுத்தது.

ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளில் 26 தொகுதிகளில் 
EVMகளில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் 
கூறியது. வாக்குப்பதிவு முடிவடையும் நேரமான 
மாலை 5 மணிக்குக்கூட EVMகளில் உள்ள பாட்டரிகளின் 
சார்ஜ் 99 சதவீகம் இருந்ததாக  EVMகளில் பொருத்தப்பட்ட 
LED மூலம் தெரிய வந்ததாக காங்கிரஸ் கூறியது.

காலை 7 மணியில் இருந்து வேலை செய்யும் ஒரு EVMல் 
பாட்டரி சார்ஜ் குறைந்திருக்க வேண்டாமா? 10 மணி நேரம் 
கழிந்த பின்னும் 99 சதவீதம் சார்ஜ் எப்படி இருக்க 
முடியும் என்று காங்கிரஸ் கேட்டது. இவ்வாறு பாட்டரி 
சார்ஜ் அதிகமாக இருந்த தொகுதிகளில் எல்லாம் 
பாஜக வெற்றி பெற்றுள்ளது என்றும் காங்கிரஸ் 
மேலும் கூறியது.

EVMகள் மீதும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதும் 
பெரும் அவநபிக்கையை ஏற்படுத்திய இந்தப் 
புகார்களுக்கு  இந்தியத் தேர்தல் ஆணையம் 
பதில் அளித்துள்ளது. என்றாலும் அந்தப் பதில் 
பரந்துபட்ட மக்களின் புரிதல் மட்டத்துடன்
ஒத்திசையவில்லை.

எனவே சமூகத்தின் அனைத்துப் பகுதி மக்களும் 
புரிந்து கொள்ளும் விதத்தில் நியூட்டன் அறிவியல் 
மன்றத்தின் சார்பாக அதன் நிறுவனரும் தலைவரும் 
ஆகிய பி இளங்கோ சுப்பிரமணியன் என்னும் நான் 
அறிவியல் துல்லியம் நிறைந்த ஒரு பதிலை 
with authority and aplomb முன்வைக்கிறேன்.   

அறிவியலின் பதில் காணீர்!
-------------------------------------------
காங்கிரசின் புகார்கள் நகைப்புக்குரியவை; நாணத் 
தக்கவை. மனித குல வரலாறு கண்டும் கேட்டும் இராத 
தற்குறித்தனம் காங்கிரசின் புகார்களில் வெளிப்படுகிறது.
அவற்றில் அணுவளவு கூட உண்மை இல்லை.

EVMகளில் உள்ளவை பிரைமரி பேட்டரிகள்
(primary batteries) ஆகும். அவற்றை சார்ஜ் பண்ணவோ 
அல்லது ரீசார்ஜ் பண்ணவோ தேவையில்லை.
காங்கிரசார் குறிப்பிடும் LED indicatorகள் பேட்டரி சார்ஜ் 
அளவைக் காட்டும்  இண்டிகேட்டர்கள் அல்ல. எனவே 
99 சதவீதம் சார்ஜ் காட்டுகிறது என்று காங்கிரசார் 
கூறுவது  பேட்டரி சார்ஜைக் குறிக்காது. 

அப்படியானால் அந்த இண்டிகேட்டர்கள் எதைக் 
குறிக்கின்றன? அவை வோல்டேஜ் இண்டிகேட்டர்கள்
ஆகும். நன்கு கவனிக்கவும்: அந்த LEDகள் பேட்டரியில்  
வோல்டேஜ் எவ்வளவு இருக்கிறது என்று காட்டுபவை.

பேட்டரி சார்ஜ் இண்டிகேட்டர் வேறு; வோல்ட்டேஜ் 
இண்டிகேட்டர் வேறு. முன்னதற்கு ஒரு EVMல் 
வேலையே இல்லை.  

ஆரம்ப கால EVMகள் 6 வோல்ட் பேட்டரிகளில் 
இயங்கின. EVMகளுடன் VVPAT இணைக்கப்பட்ட 
பிறகு கூடுதலாக ஒரு 1.5 volt செல்லைச் சேர்த்தோம்; 
அதாவது தற்போது கண்ட்ரோல் யூனிட்  7.5 volt 
பேட்டரியில் இயங்குகிறது.

VVPAT அச்சடித்துத் தள்ள வேண்டி இருப்பதால் 
வோல்டேஜ் அதிகமுள்ள பேட்டரி தேவை. எனவே  
VVPAT 22.5 volt பேட்டரியில் இயங்குகிறது. 

எந்த அளவு வோல்ட்டேஜ் வரை ஒரு பாட்டரி வேலை 
செய்யும்? VVPATயில் உள்ள பேட்டரி 10 voltக்கு 
குறைந்தால் வேலை செய்யாது. low voltage
ஆகி விடும். நம் வீட்டில் உள்ள டியூப் லைட், டிவி 
போன்றவை low voltageல் வேலை செய்வதில்லை 
அல்லவா? அதுபோலவே control unitம் VVPATம் 
low voltageல் வேலை செய்யாது.

தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு எப்போது low voltage
ஆகும் என்று தெரிய வேண்டும். அப்படித் 
தெரிந்தால்தான் சரியான நேரத்தில் பேட்டரியை 
மாற்ற முடியும். காங்கிரசார் பிறழ உணர்ந்த 
இண்டிகேட்டர்கள் உண்மையில் threshold voltage levelஐ 
உணர்த்தும் இண்டிகேட்டர்கள். அவற்றுக்கும் 
பேட்டரி சார்ஜுக்கும் ஸ்நானப்  பிராப்தி கிடையாது.

எனவே காங்கிரஸாரின் புகார்களை நியூட்டன் 
அறிவியல் மன்றம் இகழ்ச்சியுடன் நிராகரிக்கிறது.
---------------------------------------------------------------------
பின்குறிப்பு:
வாசகர்களே,
உங்களின் மொபைல் போனில் ஒரு பேட்டரி 
இருக்கும். அது லித்தியம் அயான் பேட்டரியாக 
இருக்கக்கூடும். அவற்றை ரீசார்ஜ் செய்யலாம்.
அவை secondary பேட்டரிகள் ஆகும்.

ஆனால் EVMகலீல் உள்ளவை PRIMARY பேட்டரிகள்.
அவற்றை ரீசார்ஜ் செய்ய இயலாது.
********************************************************** 

           


     

   .       

      

    
          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக