பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த
எனது RDX கட்டுரையைத் தொடர்ந்து....
ஐன்ஸ்டினும் எட்டிங்டனும்!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------
அண்ணாமலையின் சவுக்கடிப் போராட்டம் குறித்த
எனது RDX கட்டுரைக்கு எதிர்வினைகள் வந்துள்ளன.
முகநூலிலும் தொலைபேசி மூலமும் வந்தடைந்த
அவற்றில் காத்திரமானவை மிகவும் சொற்பமே.
அந்தக் கட்டுரை ஓர் அரசியல் கட்டுரை அல்ல.
மீண்டும் சொல்லுகிறேன்; அது ஓர் அரசியல்
கட்டுரை அல்ல. மாறாக அது ஒரு அகாடமிக்
(academic) கட்டுரை ஆகும். அதாவது அது ஒரு
கல்வியியல் கட்டுரை ஆகும்.
சமகால உலகின் சமூகவியல் பிரச்சினைகளுக்கு
கேம் தியரி (Game theory) மூலம் தீர்வு காண இயலும்
என்பதை யாப்புறுத்தும் பொருட்டே அக்கட்டுரை
எழுதப்பட்டது.
அறிவியல் சிக்கல்களுக்கு மட்டுமே அறிவியலால்
தீர்வு தர முடியும் என்ப து சென்ற நூற்றாண்டின்
பழங்கதை. அறிவியல் மட்டுமின்றி சமூகவியல்
சிக்கல்களுக்கும் அறிவியல் தீர்வு தருகிறது.
இதற்குச் சான்றுதான் Game theoryயும் நாஷ்
சமநிலையும் (Nash equilibrium)
மூன்றாம் உலகப்போர் வரும் என்று போலி
நக்சல்பாரிகளும் போலி முற்போக்குகளும்
உளறிக் கொட்டியபோது மூன்றாம் உலகப்போர்
வராது என்று கேம் தியரி (Game theory) மூலம்
நிரூபித்துக் காட்டியவன் நான். இப்பொருளில்
அமைந்த எனது கட்டுரை அறிவியல் ஒளி ஏட்டில்
பிரசுரமானது. (அறிவியல் ஒளி ஏட்டுக்குச்
சந்தா கட்டுங்கள்; அதுவரை நூலகங்களில்
கிடைக்கும் அறிவியல் ஒளி ஏட்டைப் படியுங்கள்).
Game theory குறித்தோ Nash equilibrium குறித்தோ
அணு அளவேனும் தெரிந்தவர்கள் அப்பொருள்
குறித்த எனது அக்காடமிக் கட்டுரையின் மீது
கருத்துக் கூறுவதே நியாயமானது. அது வரவேற்கத்
தக்கதும் ஆகும். Game theory குறித்தும் அதனுடைய
சமூக முக்கியத்துவம் குறித்தும் எதுவும் தெரியாத
நிலையில், இடதுசாரி முகாமில் மாறுவேஷத்தில்
இருக்கும் வலதுசாரிகள் தங்களின் பிறழ்புரிதலை
வெளிப்படுத்துவதால் என்ன பயன் விளையும்?
Game theory என்பதெல்லாம் MSc, M Tech போர்ஷன்.
எனவே இது பற்றிப் படித்தவர்கள் மிகவும்
சொற்பமே. மைனஸ் x மைனஸ் எப்படி ப்ளஸ்
ஆகும் என்று கேட்பவர்கள் அனைவருமே
இடதுசாரி முகாமில் மாறுவேஷத்தில் இருக்கும்
வலதுகளே ஆவர். அவர்களால் ஒருபோதும்
கேம் தியரியைப் புரிந்து கொள்ள இயலாது.
பாஜக தலைவர் அண்ணாமலை மீதான
காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த விரும்புபவர்கள்
தி நகரில் உள்ள கமலாலயம் சென்று
வெளிப்படுத்தலாம், தைரியம் இருந்தால்.
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் அகாடமிக்
பதிவுகள் அண்ணாமலை மீதான காழ்ப்புக்கு
இடம் தராதவை.
நியூட்டன் அறிவியல் மன்றம் அண்ணாமலையை
defend செய்யும் கடப்பாடு உடையது..
தமிழ்நாட்டின் புகழ்மிக்க கல்லூரியில்
படித்துப் பெற்ற B Tech பட்டம், வணிக மேலாண்மைப்
பட்டம், UPSC தேர்வு எழுதி IPS தேர்ச்சி, IPS பயிற்சி,
இவற்றுடன் அண்மையில் ஆக்ஸ்போர்டு பல்கலையில்
பயின்ற உயர்கல்வி ஆகியவற்றுடன் ஒரு பெரும்
அறிவாளியாகத் திகழும் அண்ணாமலையை
நியூட்டன் அறிவியல் மன்றம் பாதுகாக்கும்.
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.
ஒரு அறிவுஜீவி என்பவன் முழுநேர இடதுசாரி
என்றார் பிரெஞ்சு தத்துவஞானி ஜீன் பால் சார்த்தர்
(Jean Paul Sartre 1905-1980). இந்த இலக்கணப்படி
அண்ணாமலை ஒரு முழுநேர இடதுசாரியே!
அண்ணாமலையின் சவுக்கடிப் போராட்டம்
குறித்து ஏளனம் செய்வது அறிவியலை ஏளனம்
செய்வதாகும். கேம் தியரியின் அடிப்படையில்
கணக்கிடப்பட்டு மேற்கொள்ளப் பட்டது அவரின்
சவுக்கடி மற்றும் தொடர் போராட்டங்கள்.
அவை பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலை
மாணவிக்கு நியாயம் வழங்கி உள்ளது கண்கூடு.
அண்ணாமலையின் சவுக்கடிப் போராட்டங்களை
ஏளனம் செய்வது Game theoryயை ஏளனம் செய்வதாகும்.;
அறிவியலை ஏளனம் செய்வதாகும். அவ்வாறு ஏளனம்
செய்பவர்களின் வலதுசாரிப் பிற்போக்கு mindset
அம்பலம் ஆகிவிடுகிறது.
-------------------------------------------------------------
பின்குறிப்பு:
இதுவும் அகாடமிக் கட்டுரைதான். Game theory பற்றித்
தெரிந்தவர்கள்தான் இக்கட்டுரையின் மீது எதிர்வினை
ஆற்ற வேண்டும் என்று எந்த நிபந்தனையையும் நான்
விதிக்கவில்லை. இந்த மொத்த விவகாரத்திலும்
கேம் தியரி பற்றித் தெரிந்தவர்கள் இரண்டே இரண்டு
பேர்தான் என்பது புலப்படுகிறது. யார் அந்த இரண்டு பேர்?
வேறு யார்? அண்ணாமலையும் நானும்தான்.
ரிலேட்டிவிட்டி தியரியைச் சொன்னவர் ஐன்ஸ்டின்.
அதைப் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கு விளக்கிச்
சொன்னவர் எட்டிங்டன் (Arthur Eddington 1882-1944).
இந்தச் சவுக்கடி விவகாரத்தில் அண்ணாமலையும்
நானும், ஐன்ஸ்டினும் எட்டிங்டனும் போல்
செயல்பட்டு இருக்கிறோம். இதைப் புரிந்து
கொள்ளத் தேவையான IQ உள்ளவர்களுக்காக
இக்கட்டுரை எழுதப் பட்டுள்ளது.
*******************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக