செவ்வாய், 26 மே, 2015

மூலவினைக்கு மௌனம்!
எதிர்வினையைக் கண்டு ஆத்திரம்!!
---------------------------------------------------------------
ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறான் ஒரு தலித்
இளைஞன். அவன் செல் போனில் ஒரு அழைப்பு. அதில்
ரிங் டோனாக அம்பேத்கார் பாட்டு. இதனால் அவன்  உயிரையே
இழந்தான். அவனைஅடித்துக் கொலை செய்து,
அவன் மீது வண்டிச்சக்கரங்களை ஏற்றி.... எவ்வளவு குரூரம்!
எவ்வளவுகொடூரம்! இது ஏதோ  பன்னிரண்டாம் நூற்றாண்டிலா
நடந்தது? இந்த 2015இல் அல்லவா!
**
சாதிக் கொடூரம் என்பது மூலவினை! அதனால்
பாதிக்கப் பட்டவர்கள் ஆற்றுவது எதிர்வினை!
மூலவினையைக்  கண்டிக்க மனம் இல்லாதவர்கள்
எதிர்வினையைக் கண்டு பொங்குவதில் எவ்வித
நியாயமும் இல்லை.
**
பார்ப்பானின் பூனூலை அறுத்தவன் குண்டர் சட்டத்தில்
கைது ஆகிறான். தலித் படுகொலைகளைப் புரிந்தவன்
எத்தனை பேர் தண்டிக்கப் பட்டு இருக்கிறான்? பதில்
சொல்ல முடியுமா? விவாதம் நடத்த முன்வருவார்களா
சாதி வெறியர்கள்?
**

இன்னும் அடுத்த அரை மணி நேரத்தில் தன்  உயிர்
போகும் என்று நினைத்து இருப்பானா  அந்த தலித்
இளைஞன்? பதில் சொல்லுங்கள் சாதி வெறியர்களே!
பதில் சொல்லுங்கள்!
**
பாதிக்கப் பட்டவர்கள் எதிர்வினை ஆற்றினால், அதைக் 
கண்டு பொங்குவதும் சாதிவெறியை ஆதரிப்பதும் ஒன்றே!
**
இங்கு ஒரு அடிப்படை விதி ஒன்று உள்ளது.
சாதிக்கொடுமை என்ற சிக்கலை அணுகும்போது,
பாதிக்கப் பட்டவனின் பார்வையில் இருந்து அணுக
வேண்டும். ஆதிக்க உணர்வுடன் சாதிக் கொடுமை
புரிந்தவனின் பார்வையில் இருந்து அணுகக் கூடாது.
**

திங்கள், 25 மே, 2015

தமிழிசை அம்மையாருக்கு ஏன் அழைப்பில்லை?
இரண்டு காரணங்கள்.
1) ஓரினச் சேர்க்கையைக் கடுமையாக எதிர்ப்பவர் தமிழிசை.
2) பனையேறி குமரி அனந்தனின் மகளான சூத்திரச்சி
தமிழிசையை, ஒரு பிராமண சிரோன்மணியின் ஆத்து
பங்ஷனுக்கு அழைக்க வேண்டிய தேவையில்லை. 
***
ரத்த அடி அடிக்காமல் சாதி போகாது!   
சிந்தனை என்று இதுவரை நாம் கருதி வந்ததும் 
உண்மையில் ஒரு பொருளே என்கிறது அறிவியல்!
பொருள் பற்றிய லெனினிய வரையறையின் 
பொருத்தப்பாடு!
-----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------------------------------
மார்க்சும் எங்கல்சும் "பொருள்" (matter) என்றால் என்ன 
என்று எந்த ஒரு வரையறையும் தரவில்லை. 
ஏன் தரவில்லை என்றால்,தரவேண்டும் என்ற தேவை 
எதுவும் அவர்களுக்கு இருக்கவில்லை. மார்க்ஸ்-எங்கல்ஸ் 
காலத்தில் டால்டன் (1766-1844) என்ற ஆங்கில விஞ்ஞானி 
தம் அணுக்கொள்கையை  வெளிஇட்டு இருந்தார்.
இதை மார்க்சும் எங்கல்சும் அறிந்து இருந்தார்கள்.
அதே நேரத்தில், பொருள் என்பது நான்கு பூதங்களின் 
சேர்க்கை (four elements theory) என்ற அரிஸ்டாட்டிலின் 
கொள்கையும் அன்றைய சமூகத்தில் நிலவி வந்தது.

பொருள் என்றால் என்ன என்று வரையறுக்க முடியுமா 
என்று லெனின் காலத்தில் கருத்துமுதல்வாதிகளும் 
சில விஞ்ஞானிகளும் லெனினுக்கு சவால் விடுத்துக் 
கொண்டே இருந்தனர். லெனின் அவர்களின் சவாலை 
ஏற்கவில்லை. ஒரு கட்டத்தில், அவர்களின் நிர்ப்பந்தம் 
பொறுக்க முடியாத நிலையில், லெனின் பொருள் என்றால் 
என்ன என்று வரையறுத்தார்.

பொருள் என்பது மனித சிந்தனைக்கு வெளியே இருக்கும் 
ஒரு புறநிலை யதார்த்தம் என்பதுதான் லெனினின் 
வரையறை. இது அறிவியல்ரீதியான விளக்கம் அல்ல 
என்று லெனின் உணர்ந்தே இருந்தார். இது தத்துவ 
ரீதியிலான விளக்கம் (epistemological definition) என்ற 
தெளிவுடனே லெனின் இவ்வாறு வரையறுத்தார்.

திடம், திரவம், வாயு என்ற பொருளின் மூன்று நிலைகள் 
பற்றி அனைவரும் அறிவர். ஆனால், பொருளின் நிலைகள் 
(states of matter) இந்த மூன்று மட்டும் அல்ல. பிளாஸ்மா 
(charged ions) என்ற நான்காவது நிலையும் உண்டு. 
போஸ்-ஐன்ஸ்டின் பதிவு (Bose-Einstein condensate) என்கிற 
அதிகுளிர் நிலையும் உண்டு. (திட திரவ வாயு நிலைகளை 
நவீன அறிவியல் வெறும் PHASE TRANSTITION என்று 
மட்டுமே குறிப்பிடுகிறது)

சிந்தனை என்பதும் ஒரு பொருளே (CONSCIOUSNESS IS ALSO 
A STATE OF MATTER) என்கிறது நவீ ன அறிவியலின் ஒரு 
தியரி. ஏதோ போகிற போக்கில் சொல்லி விட்டுப் போய் 
விட்டார் ஒரு விஞ்ஞானி என்று இதைக் கருதி விடக் 
கூடாது. குலியோ டொனானி  (Giulio Tonani) என்னும் 
உளவியல்- நரம்பியல் மருத்துவரும், மாக்ஸ் டெக்மார்க் 
(Max Tegmark) என்னும் இயற்பியல் அறிஞரும், பல 
ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின்னர் தங்கள் முடிவுகளை 
அறிவித்தனர்.                

டெக்மார்க் கூறுகிறார்: சிந்தனை என்பது பொருளின் 
ஒரு நிலை. இந்நிலையின் பெயர்: "பெர்செப்ட்ரோனியம்"  
(perceptronium). இந்தப் பிரபஞ்சத்தை ஆளுகை செய்யும் 
இயற்பியல் விதிகளே பெர்செப்ட்ரோனியத்தையும் 
ஆளுகை செய்கின்றன.

சிந்தனை என்பதும் ஒரு பொருளே என்னும்போது 
கருத்துமுதல்வாதம் தற்கொலை செய்துகொண்டு 
செத்துப் போகிறது. அதே நேரத்தில் லெனினின் 
வரையறையின் பொருத்தப்பாடும் தகர்ந்து விடுகிறது.
எனினும் பெர்செப்ட்ரோனியம் ஒரு hypothesis என்ற 
அந்தஸ்தில் மட்டுமே தற்போது உள்ளது. மேலும் 
ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படும்போது, இது 
ஏற்கத் தக்க கோட்பாடாக மாறலாம். அதுவரை 
பொறுத்து இருப்போம்.
குறிப்பு: மேல் விவரம் அறிய, பார்க்கவும்:
The Physics arXiv blog.  
---------------------------------------------------------------------------------

சனி, 23 மே, 2015

மூளை எவ்வாறு சிந்திக்கிறது?
மூளை பற்றிய லெனின் வரையறையும்
பொருள்முதல்வாதமும்.
-----------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகத்தின் செயற்குழுக்
கூட்டத்தில் சிறப்புரை!
நாள்: 27.05.2015 காலை 11 மணி.
---------------------------------------------------------------------------
சிறப்புரை-1 (ஆங்கிலத்தில்)
தோழர் டாக்டர் ஜெயகிருஷ்ணா MBBS, Ph.D
  (உளவியல் மருத்துவ நிபுணர்)
Subject: The brain and the birth of Thought.
---------------------------------------------------------------------------   
சிறப்புரை-2
தோழர் பி இளங்கோ சுப்பிரமணியன்
பொருள்: மூளை பற்றிய லெனின் வரையறையும்
பொருள்முதல்வாதமும்
நவீன அறிவியல் வளர்ச்சியின் பின்னணியில்.
--------------------------------------------------------------------------------
மூளை என்பது சிந்தனையின் உறுப்பு என்றார் லெனின்.
அப்படியானால், மூளை சிந்தனையைச் சுரக்கிறதா,
கணையம் இன்சுலினைச் சுரப்பது போல?
இத்தகைய கேள்விகளுக்கு அப்படி இல்லை என்ற பதில்
லெனின் காலத்திலேயே கொடுக்கப் பட்டது.
**
என்றாலும், லெனின் காலத்தில் உள்ள அறிவியலின்
(உயிரியல்) நிலை  இன்று போல் வளர்ச்சி அடைந்ததாக
இல்லை. இன்று இந்த நூறு ஆண்டுகளில், உயிரியலின்
வளர்ச்சியானது மூளை என்பது எப்படிச் சிந்திக்கிறது
என்ற கேள்விக்கு விடையளிக்கிறது. இது லெனின்
காலத்தில் இல்லாத புதுமையாகும். எனவே, நவீன
அறிவியலின் வளர்ச்சியின் ஊடாக, பொருள்முதல் 
வாதத்தைப் புதுப்பிப்போம். கருத்துமுதல் வாதத்தை 
வீழ்த்துவோம்.
*****மார்க்சிய சிந்தனைப் பயிலகம்*************
NOTE: EC members and special invitees only are admitted.
venue: our office.
------------------------------------------------------------------------ 

வெள்ளி, 22 மே, 2015

முகநூலில் சாதியத்தின் திரண்ட வடிவத்தின்
பிரதிநிதியாக மார்க்சிய வேடதாரி ஏ கே ஈஸ்வரன்!
------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
---------------------------------------------------------------------------------
INSULT IS A THING THAT CANNOT BE CARRIED HOME.
--------Bharath Rathna Dr B R Ambedkar.
---------------------------------------------------------------------------------
சமூகத்தில் உள்ள சாதி, சமூகத்தின் எல்லா
நிறுவனங்களிலும் பிரதிபலிக்கிறது. தமிழ்ச் சூழலில்,
முகநூலில், சாதியத்தின் திரண்ட வடிவமாக,
திரு ஏ கே ஈஸ்வரன் என்பவர் இருக்கிறார்.
தொழில் ரீதியாக இவர் ஒரு புத்தக வியாபாரி.
தம்மை மார்க்சிஸ்ட் என்று கூறிக் கொள்ளும் இவர்,
உண்மையில் ஒரு போலி வேடதாரி.
**
பறப்பசங்க, சேரிப்பசங்க என்ற வார்த்தைப் பிரயோகங்கள்
இவர் வாயில் இருந்து சரளமாக வரும் என்று நிறையப்
புகார்கள் எங்களுக்கு வந்துள்ளன.
**
SC/ST இனத்தைச் சேர்ந்த முகநூல் பதிவர்கள்
ஒன்றுமே தெரியாத முட்டாள்கள் என்பது இவரின்
திடமான கருத்து. அவர்களின் பதிவுகளில் இவர் இடும்
பின்னூட்டங்கள், தலித் தோழர்களை வசை பாடுவதும்
அவமதிப்பதாகவுமே இருக்கும். இது குறித்து, பல
தோழர்கள் எங்களிடம் ஆதாரங்களுடன் புகார்
தெரிவித்து இருக்கிறார்கள்.
**
சாதி வெறி உச்சந்தலைக்கு ஏறிப் போய், மண்டைக்
கனத்தால், தலித் முகநூல் பதிவர்களை அவமதிப்பது
என்பது ஒரு வினாடி கூட சகித்துக் கொள்ள முடியாது.
பறையன், சேரிப்பசங்க போன்ற சாதிகொழுப்பேறிய
வார்த்தைகளை காலம் காலமாக, இந்த 2015லும்
கேட்டுக் கொண்டு இருக்க நாங்கள் சோற்றால் அடித்த
பிண்டங்கள் அல்ல என்று குமுறுகிறார்கள் தோழர்கள்.
** 
 இருநூறு ரூபாய் இருந்தால் போதும், இந்தியாவில் யார்
வேண்டுமானாலும் மதக் கலவரத்தை உண்டாக்கி விடலாம்
என்று மார்க்கண்டேய கட்ஜு கூறுவார். இந்த ஈஸ்வரனை
மனதில் நினைத்துக் கொண்டுதான், கட்ஜு அப்படிக் கூறி
இருக்க முடியும்.
**
"பறையன் என்றால் திருடன்" என்று தன்  நட்பில் உள்ள
 முஸ்லிம் பதிவரை விட்டுப் பின்னூட்டம் போடச் சொல்லி
விட்டு, மதக் கலவரத்தைத் தூண்டுபவர் இந்த ஏ கே ஈஸ்வரன்.
பெரியாரையும் பகுத்தறிவு இயக்கத்தையும் இழிவாக
எழுதிப் பதிவுகள் போடுவதும் அத்தகைய பதிவுகளைப்
பகிர்ந்து ஊக்கமளிப்பதும் இவரின் வாடிக்கை.
**
திரு ஈஸ்வரன் மீதான புகார்கள் ஆதாரங்களுடன் எங்களிடம்
சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. முகநூலின் சாதிவெறி அதன்
திரண்ட வடிவத்தில், திரு ஏ கே ஈஸ்வரனிடம் தங்கி
இருப்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. எனவே
எதிர்வரும்  ஞாயிறு 24.05.2015 காலை 11 மணியளவில்
நடைபெறும் மார்க்சிய சிந்தனைப் பயிலகத்தின் செயற்குழுக்
கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப் படும்.
**
சிவில் உரிமைப் பாதுகாப்புச் சட்டம், SC /ST வன்கொடுமைத்
தடுப்புச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் இவரின்
குற்றங்கள் வருகின்றன என்பது சட்ட ஆலோசகர்களின்
கருத்து.
**
மார்க்சியப் பிழைப்புவாதியும் போலி வேடதாரியும்,
மிக மூர்க்கத்தனமான சாதி வெறியனும் ஆகிய ஏ கே
ஈஸ்வரனை மார்க்சிய சிந்தனைப் பயிலகம் அம்பலப்
படுத்துகிறது. இந்த இழிந்த நபரின் சாதி ஆணவத்தை
முறியடிப்போம் என்று உறுதி கூறுகிறோம்.
தோழமையுள்ள,
(ஒப்பம்) ---பி இளங்கோ சுப்பிரமணியன்
தலைவர், மார்க்சிய சிந்தனைப் பயிலகம்.
சென்னை ,நாள்:24.05.2015
********************************************************************* 

            
இது என்ன வேலை நீக்கமா? சஸ்பென்சனா?
அல்லது டிஸ்மிஸ் ஆர்டரா? ஈஸ்வரனே, சாதிவெறி
பிடித்து ஆடவேண்டாம். மண்டைக்கனம் மிகுந்தால்
மண்டை வெடித்துவிடும். பறையன் என்றால் உனக்கு
அவ்வளவு இளக்காரமா? தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தில்
கம்பி எண்ண ஆசையா? உன் சாதி வெறிக்கு நீ தண்டனை
அனுபவித்தே ஆக வேண்டும்.
மார்க்சிய அறிவு இல்லாமல்
கோழையைப் போல் ஓடிஒளியும்
மார்க்சியப் பிழைப்புவாதிகள்!
---------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-------------------------------------------------------
முகநூலில் காணப்படும் திரு A K ஈஸ்வரன் என்பவர்
ஒரு புத்தக வியாபாரி.  மூல ஆசான்களின் நூல்களில்
இருந்து மார்க்சிய மேற்கோள்களை எடுத்துப் போட்டு,
தனக்குத் தெரிந்த அரைகுறை அறிவுடன், அதற்கு
விளக்கம் அளித்து, புத்தகம் வெளியிட்டுச் சம்பாதிப்பவர்.
**
எந்த விதமான மார்க்சிய நடைமுறையும் இல்லாதவர்.
கடைந்தெடுத்த போலி. கடைந்தெடுத்த பிழைப்புவாதி.
தொழிற்சங்கமோ விவசாய சங்கமோ இப்படி எந்த ஒரு
வெகுஜன அமைப்பிலும் வேலை செய்யாமல்,
மார்க்சிய வேடம் தரித்துக் கொண்டு அலைபவர்.
**
வியாபார நோக்கத்துடனே மார்க்சியத்தை அணுகுபவர்.
மார்க்சியம் குறித்து முகநூலில் யார் பதிவிட்டாலும்,
அந்தப் பதிவுக்குள் புகுந்து, கருத்துச் சொல்லி, தன்
அறியாமையை வெளிப்படுத்துபவர்.
**
வியாபாரி என்பதனால், மார்க்சியத்தின் மொத்த வியாபாரியாகத்
தம்மைக் கருதிக் கொள்பவர். சாதி வெறியர். தன்னைப்
பார்ப்பானாகவும், மற்றவர்களைப் பறையர்களாகவும்
கருதிக் கொண்டு, தீண்டாமையை நடைமுறைப்
படுத்துபவர்.
**
விவாதங்களின்போது, இவரின் அறியாமை வெளிப்பட்டு
விடும். ஓடி ஒளிந்து கொள்வார். பதில் சொல்ல மாட்டார்.
இப்படிப் பட்ட விவாதங்களைத் தவிர்க்க விரும்புவார்.
தவிர்த்தும் விடுவார்.
**
தன்னுடைய பலவீனத்தை, முட்டாள்தனத்தை மறைக்க
மற்றவர்கள் மீது அவதூறு பேசுவார்.
**
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் இந்த ஈஸ்வரனை
ஒரு அருவருக்கத் தக்க நபராகக் கருதுகிறது.
மார்க்சியத்தை வைத்துப் பிழைப்பு நடத்தும் ஒரு
கேவலமான பிழைப்புவாதி என்று கணிக்கிறது.
போலி அடையாளத்தில் ஒளிந்து கொண்டு, முகநூலில்
மார்க்சிய நிலவரம் (The trend of Marxism in facebook) என்ற
தலைப்பில், RAW அதிகாரிகளுக்கு, periodical report
அனுப்பிக் கொண்டிருக்கும் சில போலிஸ் உளவாளிகளுக்கும்
இவருக்கும் உள்ள சகவாசம் கவனத்துக்கு உரியது

**
இந்த ஈஸ்வரன் இனியும் தொடர்ந்து தன் சாதிவெறியைக்
கக்கிக் கொண்டு இருப்பானேயாகில், இந்த நபர் மீது
சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும் என்று மார்க்சிய
சிந்தனைப் பயிலகம் எச்சரிக்கிறது.
***************************************************************