புதன், 14 அக்டோபர், 2015

விழுப்புரத்தில் அறிவியல் மன்றம் திறப்பு விழா!
நியூட்டன் அறிவியல் மன்றம் திறந்து வைக்கிறது!
------------------------------------------------------------------------------
டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான
15.10.2015 அன்று விழுப்புரத்துக்கு அருகில் உள்ள ஒரு
சிற்றூரில், அறிவியல் மன்றம் திறக்கப் படுகிறது.

நியூட்டன் அறிவியல் மன்ற உறுப்பினர்
தோழர் கோவிந்தன் MSc PhD அவர்கள் இயற்பியலில்
அண்மையில் PhD பட்டம் பெற்றார். அவரின் முயற்சியில்
உருவான அறிவியல் மன்றத்தை நியூட்டன் அறிவியல்
மன்றத் தலைவர் தோழர் இளங்கோ திறந்து வைக்கிறார்.
*************************************************************    
தமிழகத்துக்கு மோடி பாராட்டு! ஹெச் ராஜா பெருமிதம்!!
கமலாலயத்தில் ஆனந்தக் கூத்து!!!
ரோட்டில் போகிறவனுக்கு எல்லாம் இனிப்பு!!
----------------------------------------------------------------------------------------
சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள தமிழ் எழுத்தாளர்கள்
சுமார் 30 பேரில் ஒருவர்கூட விருதுகளைத் திருப்பிக்
கொடுக்க முன்வரவில்லை என்பதற்காக மோடி அவர்கள்
தமிழிசை அம்மையாரையும் ஹெச் ராஜா அவர்களையும்
பாராட்டி உள்ளாராம்.

தமிழ்நாட்டில் இடதுசாரி எழுத்தாளர் என்று ஒருவர்கூட
கிடையாது என்று பெருமிதம் பொங்க ஹெச் ராஜா
மோடியிடம் கூறி உள்ளாராம்.

இதற்கு இடம் தரலாமா? யாராவது ஒரு எழுத்தாளராவது
விருதைத் திருப்பிக் கொடுத்து இருந்தால், பாஜக
இப்படிக் கொட்டம் அடிக்குமா?

மோடி பாராட்டியதைத் தொடர்ந்து கமலாலயத்தில்
ஒரே இனிப்பு மாயம். ரோட்டில் போகிறவனைக்கூட
வலுக்கட்டாயமாக இழுத்து வந்து வாயில் லட்டு
உருண்டையைத் திணித்து அனுப்புகிறார்கள்


நமக்கு கோபம் கோபமாக வருகிறது. வந்து என்ன
பிரயோஜனம்? இந்துத்துவ இடதுசாரிகளை வைத்துக்
கொண்டு, பாஜகவின் முகத்தில் கரி பூச முடியுமா?
யாராவது ஒருவர் விருதைத் திருப்பிக் கொடுத்து
இருந்தால் ஹெச்.ராஜா இப்படிக் கொக்கரிக்க முடியுமா?
********************************************************


செவ்வாய், 13 அக்டோபர், 2015

பார்ப்பனரும், முன்னாள்  மத்திய அமைச்சர் டி.டி.கே.யின்
பேரனும் ஆகிய இசை மேதை திரு டி.எம்.கிருஷ்ணா
மோடிக்கு கண்டனக் கடிதம் எழுதி உள்ளார். இவர்
சைவ உணவு மட்டுமே உண்பவர்.

திரு டி எம் கிருஷ்ணா இடதுசாரி என்றோ முற்போக்காளர்
என்றோ உரிமை கோருபவர் அல்ல. அவர் அரசியலிலும்
இல்லை. அவரைப் போன்ற சராசரி மனிதர்களே கொதித்து
எழும்போது, தமுஎகச மற்றும் கலை இலக்கியப் பெருமன்றம்
என்று எழுத்தாளர்களுக்குத் தனி அமைப்பு வைத்திருக்கும்
CPI, CPM கட்சிகள் விருதுகளைத் திருப்பிக் கொடுக்குமாறு
தங்கள் எழுத்தாளர்களுக்கு உத்தரவு போட வேண்டாமா?  

தீவிர வலதுசாரி எழுத்தாளர்களான 1) இந்திரா பார்த்தசாரதியும்
2) அசோகமித்திரனும் கண்டன அறிக்கையில் கையெழுத்து
இட்டுள்ளனர். ஆனால் பெருமாள் முருகன் கையெழுத்திடவில்லை.
இது வாசகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
சாகித்ய விருது பெற்ற பதினாறு தமிழ் எழுத்தாளர்கள் நேற்று
வெளியிட்ட கூட்டறிக்கையில், பெருமாள்  முருகன்
இடம் பெறவில்லை. இது வாசகர்களுக்குப் பெரும்
அதிர்ச்சியாக உள்ளது. பெருமாள் முருகன் அல்லவா
முதல் கையெழுத்து இட வேண்டும்?
வின் டி.வி.யில் விவாதம்!
--------------------------------------------
சாகித்ய விருதுகளை எழுத்தாளர்கள்
திருப்பிக் கொடுக்கத்தான் வேண்டுமா?
------------------------------------------------------------
செவ்வாய் 12.10.2015 இரவு 7 to 8 மணி.
-----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் பங்கேற்கிறது!
*************************************************
ரோம் நகரம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்துக்
கொண்டிருந்த நீரோ மன்னனைப் போல,
எழுத்தாளர் பாமாவும் இருப்பது நியாயமா?