திங்கள், 17 அக்டோபர், 2016

நோபல் பரிசு குறித்து அறிவியல் விளக்கம்!
நியூட்டன் அறிவியல் மன்றம் வழங்கியது!
-------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------
 கேப்டன் செய்திகள் டி.வி.யில் "சிறப்பு நிகழ்ச்சி"யில்
06.10.2016 அன்று, நோபல் பரிசுகள் குறித்த அறிவியல்
விளக்கமும், வரலாறும் பற்றி,
பி இளங்கோ சுப்பிரமணியன்
(நியூட்டன் அறிவியல் மன்றம்)
வழங்கிய கருத்துரை.
அதன் யூடியூப் காணொளியைக் காண்க!
----------------------------------------------------------------------------


புரட்சியை நடத்தப் போகிற கட்சிக்குத்தான்
மத்தியக் கமிட்டி போன்ற அமைப்புகள் தேவை.
மார்க்சிஸ்ட் கட்சிக்கு அது ஏன்? அவர்கள் CPI
கட்சியைப் போல, தேசியக் கவுன்சில் ஏற்படுத்திக்
கொள்ளலாம். அல்லது திமுகவைப் போல,
பொதுக்குழு, செயற்குழு வடிவங்களை உருவாக்கிக்
கொள்ளலாம். அதன் மூலம் நிறையப் பேருக்குப்
பதவி வழங்கலாம்.
**
கட்சி பிளவுபட்ட நேரத்தில் 1962-64 காலத்தில் மத்தியக்
கமிட்டி தேவைப் பட்டது. பின்னர் நெருக்கடி நிலையின்
போது, கட்சித் தலைவர்கள் பாதிப்பேர் சிறையிலும்,
பாதிப்பேர் தலைமறைவாகவும் இருக்க நேர்ந்த போது
மத்தியக் கமிட்டி தேவைப் பட்டது. இப்போது ஏன்? 

நேற்று எடுத்த புகைப்படங்களை அனுப்பி விட்டீர்களா?
மின்னஞ்சல் முகவரி ilangophysics@gmail.com


தோழர் நடராசன்,
டாக்டர் ரவீந்திரநாத்தின் பதிவைப் பகிர்ந்து இருக்கிறீர்கள்.
அதற்கு முன்னுரை போன்று உள்ள பகுதி திரு அ மார்க்ஸ் எழுதியது. தாங்கள் அதைக் குறிப்பிடாமல் விட்டது ஏன்? என் மேசையில்
"சாதியும் வர்க்கமும்" புத்தகம் உள்ளது. அ மார்க்சின்
முன்னுரை அதில் உள்ளது. AILRCயின் அந்த மாநாட்டில்
நான் கலந்து கொண்டேன். எனக்கு நிகழ்வுகள்
பசுமையாக நினைவில் இருக்கிறது.

தலையங்க விமர்சனம் 200ஆவது அமர்வு:
---------------------------------------------------------------------------
இடம்: சென்னை புரசைவாக்கம்
உழைக்கும் மக்கள் மாமன்ற அலுவலகக் கட்டிடம்
நாள்: 16.10.2016 ஞாயிறு மாலை 7 மணி

உரை:
பி இளங்கோ சுப்பிரமணியன்
(மார்க்சிய சிந்தனைப் பயிலகம்)

மேடையில்:
தோழர் மு வீரபாண்டியன்
CPI மாநிலத்து துணைப் பொதுச் செயலாளர்.
கூட்ட ஏற்பாடு:
வே சோதிராமலிங்கம் (ஊடகவியலாளர்)




புறக்கணிக்கும் குட்டி முதலாளித்துவம்!
-----------------------------------------------------------------------
1) ரங்கநாயகம்மா நூலுக்கு ஆதரவு, நூலுக்கு எதிர்ப்பு
என்று இரண்டு தரப்புகள் தற்போது மிகவும் துலக்கமாக
உருவாகி இருக்கின்றன. இந்த நூலின் கருத்துக்கள்
விவாதிக்கப் படுகின்றன என்பதும், இந்த விவாதத்தின்
விளைவாக, சாதி ஒழிப்பில் மார்க்சியத்தின் பாத்திரம்
என்ன என்ற கேள்வி இன்று விஸ்வரூபம் எடுத்திருக்கிறது
என்பதும் வரவேற்கத் தக்கவை.
**
2) அம்பேத்கார் பக்கம் சாராமலும், ரங்கநாயகம்மா பக்கம்
சாராமலும், இந்த நூலை மார்க்சிய லெனினிய
நிலைபாட்டில் கறாராக நின்று கொண்டு திறனாய்வு
செய்துள்ளது மார்க்சிய சிந்தனைப் பயிலகம். இந்தத்
திறனாய்வு மொத்தம் 15 கட்டுரைகளைக் கொண்டது.
நூல் திறனாய்வு 13 கட்டுரைகளிலும், நூலின் மீதான
விமர்சனங்களுக்குப் பதிலளிப்பது 2 கட்டுரைகளிலும்
உள்ளன.
**
3) என்றாலும், நூலின் ஆதரவாளர் தரப்பும் சரி,
எதிர்ப்பாளர் தரப்பும் சரி, எமது திறனாய்வைப்
புறக்கணிக்கின்றன. இந்தப் புறக்கணிப்பு
தற்செயலானதல்ல; திட்டமிட்ட ஒன்றே.
**
4) கைவசம் இருக்கும் வேலைகள் முடியாததாலும்,
பணிச்சுமை காரணமாகவும் இந்தப் புறக்கணிப்பை
உடைத்தெறிவதில், தற்போது நாங்கள் கவனம்
செலுத்த இயலவில்லை.
**
தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
மார்க்சிய சிந்தனைப் பயிலகம். 




மார்க்சிஸ்ட் கட்சியின் உயர் பதவிகளில்
தலித்துகளுக்கு இடம் இல்லை. ஏன்?
------------------------------------------------------------------------
மார்க்சிஸ்ட் கட்சியில் (CPM) அகில இந்திய அளவிலான
உயர் மட்டக் குழு மத்தியக் கமிட்டி (central committee)
ஆகும். கட்சியில் சர்வ வல்லமை வாய்ந்த அமைப்பு
மத்தியக் கமிட்டிதான். இதில் தலித்துகளுக்கு
இடமில்லை என்ற குற்றச்சாட்டு மார்க்சிஸ்ட் கட்சி மீது
தொடர்ந்து வைக்கப் படுகிறது. ஒரு காலத்தில்
மத்தியக் கமிட்டி உறுப்பினர்களின் எண்ணிக்கை 49
என்று இருந்தது. இன்று 100க்கும் மேல் மத்தியக்
கமிட்டி உறுப்பினர்கள் உள்ளனர். இருப்பினும்
அவர்களில் ஒருவர் கூட தலித் இல்லை.

இதற்கு மாறாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தனது
தேசியக் கவுன்சில் செயலாளராக தோழர் டி ராஜா
அவர்களை வைத்திருக்கிறது. இவர் ஓர் தலித் ஆவார்.

மார்க்சிய லெனினியக் கட்சிகளைப் பொறுத்த மட்டில்,
அக்கட்சிகள் தொடக்கம் முதலே தலைமைப் பதவியில்
தலித்துகள் பழங்குடியினரைக் கொண்டிருந்தன.
இக்கட்சிகள் தலைமறைவாக இயங்கியதன் விளைவாக
கட்சித்தலைவர் யார் என்று மக்களுக்குத் தெரியாமல்
இருந்தது. நக்சல்பாரி இயக்கத்தை சாரு மஜூம்தார்
தொடங்கியபோது, அவருடன் ஜங்கல் சந்தால்
போன்ற பழங்குடித் தலைவர்கள் தலைமையில்
இருந்தனர்.

எனவே, மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே தலைமையில்
தலித்துகளுக்கு இடமளிக்கவில்லை என்பது தெரிய
வருகிறது.   என்றாலும் மக்களை பொறுத்த மட்டில்,
மார்க்சிஸ்ட் கட்சி என்றோ, எம்.எல் கட்சி என்றோ
பிரித்துப் பார்ப்பதில்லை. அவர்கள் மார்க்சிஸ்ட்
கட்சியின் குறைபாட்டை, ஒட்டு மொத்த மார்க்சிய
இயக்கத்தின் குறைபாடாகவே பார்க்கின்றனர்.
இதனால், பூணூல் கம்யூனிசம் போன்ற சொற்கள்
சமூகத்தில் புழக்கத்திற்கு வந்து விட்டன.

தற்போது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த
தோழர் டாக்டர் ஜி ஆர் ரவீந்திரநாத், தமது அமைப்பு
வாயிலாக, "சாதியும் வர்க்கமும்" என்ற பொருளில்
சென்னையில் ஒரு கருத்தரங்கை நடத்தினார். அதில்
பங்கேற்ற கல்வியாளர் வசந்திதேவி அவர்கள்,
மார்க்சிஸ்ட் கட்சியின் உயர் பதவிகளில்
தலித்துகளுக்கு இடமில்லை என்பதைச் சுட்டிக்
காட்டிக் கண்டித்தார். இச்செய்தி எல்லா ஏடுகளிலும்
வந்துள்ளது.

தமிழ்நாட்டில் முதல் முறையாக "சாதியும் வர்க்கமும்"
என்ற பொருளில் கருத்தரங்கம் நடத்தியது புரட்சிப்
பண்பாட்டு இயக்கம் என்ற அமைப்பே. மறைந்த
தோழர் இல கோவிந்தசாமி (மக்கள் யுத்தக்க கட்சி)
இதற்கான ஏற்பாடுகளை முன்னிருந்து செய்தார்.
கருத்தரங்கப் பேச்சுக்கள் கட்டுரைகள் ஆக்கப்பட்டு
நூல் வடிவம் பெற்றன. தமிழ்ச் சூழலில் முதன்
முறையாக சாதி, வர்க்கம் குறித்த மார்க்சிய
லெனினியப் புரிதல் பொதுவெளியில் முன்வைக்கப்
பட்டது.

இப்போது, தோழர் டாக்டர் ஜி ஆர் ரவீந்திரநாத்,
சாதியும் வர்க்கமும் என்ற பொருளில் கருத்தரங்கம்
நடத்தி இருப்பது வரவேற்கத் தக்கது.

இந்திய வரலாற்றில், வேறு எந்தக் கட்சியையும் விட,
தலித்துகளுக்கு நெருக்கமாக இருந்த கட்சிகள்
கம்யூனிஸ்ட் கட்சிகளே. இந்த வரலாற்றைக் கூட
மக்களுக்கு கம்யூனிஸ்ட் இயக்கம் விளங்க
வைக்கவில்லை என்பது வருந்தத் தக்கது.

அடுத்த ஆண்டு (2017) அக்டோபர் புரட்சியின்
நூற்றாண்டு ஆகும். கம்யூனிஸ்ட் இயக்கம்
சுய விமர்சனம் செய்து கொண்டு, தவறுகளைக்
களைந்து முன்னேற இந்த நூற்றாண்டு உதவட்டும்.
*******************************************************************      

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

ரங்கநாயகம்மா கொலை செய்து விட்டார்!
சுயஇன்பம் அனுபவித்த திருப்தியில் விடலைகள்!
ரங்கநாயகம்மா நூல் திறனாய்வு!
நூல் மீது எழுந்த விமர்சனங்களுக்கு பதில்!
---------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
------------------------------------------------------------------------------------------
அவர் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்கிறார்;
அவர் முகம் தெரியவில்லை; மாறாக ஒரு பொருளாதார
நிபுணரின் முகம் தெரிகிறது. உற்றுப் பார்க்கும்போது
அது ஆடம் ஸ்மித்தின் முகமாக இருக்கிறது. தொடர்ந்து
உற்று உற்றுப்பார்க்கிறார்.

நார்சிஸத்தின் உச்சத்தில் அவர் தன் சொந்த முகத்தை
மறந்து போகிறார். ஆடம் ஸ்மித், டேவிட் ரிக்கார்டோ,
ஜான் மேனார்ட் கெயின்ஸ் என்று ஒவ்வொரு முகமாக
எடுத்து அணிந்து கொள்கிறார்.

புதிய முகம் வழங்கிய நெற்றிச் சுருக்கங்கள்
தந்த உவகையுடன் ரங்கநாயகம்மாவின்
"சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு ....." நூலைக்
கையில் எடுக்கிறார். எடுத்த வேகத்தில் சில
பிரகடனங்களை உரக்க முன்மொழிகிறார்.

ரங்கநாயகம்மா மார்க்சியத்தைக் கொலை செய்து
விட்டார் என்று அடித் தொண்டையில் இருந்து
கத்துகிறார். சற்றேறக் குறைய 110 டெசிபெல்லில்
அலறிய அக்குரல் கேட்டு  உறங்கிக் கொண்டிருந்த
குழந்தைகள் துயில் கலைந்து அழுதன.

அவரோ தொடர்ந்து தமது பிரகடனங்களை ஓசையுடன்
முழங்கிக் கொண்டிருந்தார். "உற்பத்தி உறவுகள்" வேறு;
"உழைப்பு சார்ந்த உறவுகள்" வேறு; (Production relations and
Labour relations are different) ரங்கநாயகம்மா இரண்டும்
ஒன்றுதான் என்கிறார்; இது இமாலயத் தவறு என்றார். 

எப்படி அது இமாலயத் தவறாகும் என்றோ, அல்லது
குறைந்தபட்சம் பரங்கிமலைத் தவறாவது ஆகும்
என்றோ, அந்தத் "தவறு" காரணமாக விளைந்த
பாதிப்பு என்ன என்றோ  அவர் கூற முன்வரவில்லை.
கவனத்தை ஈர்ப்பதில் வெற்றி பெற்று விட்டோம்
என்ற எண்ணம் அவருக்கு நிறைவைத் தந்தது.
சுயஇன்பம் அனுபவித்து முடிந்ததும்
விடலைக்கு ஏற்படும்  திருப்தியை அவர் அடைந்தார்.

ரங்கநாயகம்மாவின் நூல் சமூகவியல் மற்றும்
அரசியல் நூல் என்ற வகைமையில் (sociology cum politics)
வரும். அது ஒரு பொருளியல் நூல் அல்ல. பொருளியல்
அறிஞர்களின் கோட்பாடுகள் அனைத்தும் எடுத்துக்
கொள்ளப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு,
கிடைத்த விடைகளை வரிசைப் படுத்திய
பொருளியல் நூல் அல்ல அது.

சில கருத்துக்களை விளக்க, அடிப்படை மார்க்சியத்தை
(basic marxism) அவர் கைக்கொள்கிறார். "உற்பத்தி உறவுகள்",
"உழைப்புசார் உறவுகள்" ஆகிய மார்க்சியத் தொடர்களை
அவர் பயன்படுத்துகிறார். இத்தொடர்கள் ஒரு பொருளியல்
நூலில் ஆளப்படும்போது பேணப்பட வேண்டிய அதே
கறார்த்தன்மை, சமூகவியல் கோணத்தில் (sociological context)  
ஆளப்படும்போது தேவைப்படுவதில்லை.

தேவையான இடங்களில் "உற்பத்தி உறவுகள்" என்று
குறிப்பிடும் நூலாசிரியர், பிற இடங்களில் "உழைப்புசார்
உறவுகள்" என்று குறிப்பிடுகிறார். இதனால் எந்தப்
பொருள் மயக்கமும் வாசகனுக்கு ஏற்படவில்லை.
முதலில் NOUN ஐப் பயன்படுத்தி, அதன் பின் வருகிற இடங்களில் PRONOUNஐப் பயன்படுத்துவது மாதிரியான
இயல்பானதொரு செயலே இது. (கவனிக்கவும்: இங்கு
NOUN, PRONOUN ஆகிய சொற்கள் உவமைகளாக
மட்டுமே கையாளப் படுகின்றன).

ரங்கநாயகம்மா எப்போதுமே காலரிக்கு வாசிக்கிறவர்.
பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை எழுதுகிறவர்
அவர். இதன் பொருள் வாசகத் தன்மையில் முதிர்ச்சி
அடையாத, எளிய, தொடக்கநிலை வாசகர்களுக்காக
எழுதி வருபவர் அவர் என்பதே.

எந்த ஒரு பேச்சாளரும் ஒரு கருத்தரங்கில் பேசுவது
போன்று, தொழிற்சங்க வாயில் கூட்டத்தில் பேச
இயலாது. ஒரே விதமான கறார்த் தன்மையை இரு
இடங்களிலும் பேண முடியாது. எனவேதான்
ரங்கநாயகம்மா வடிவ எளிமை கருதி இரு
தொடர்களையும்  ஒரே பொருளில் தேவைக்கேற்ப
ஆள்கிறார். இதனால்  உள்ளடக்கத்திற்கு எவ்வித
பங்கமும் நேர்ந்து விடவில்லை. அதாவது பொருள்
மாறுபாடு எதுவும் ஏற்பட்டு விடவில்லை.

மொத்தம் 413 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில்,
பொருளியல் சார்ந்த அத்தியாயங்கள் மிகவும்
குறைவு, "அம்பேத்காரைப் பொறுத்தவரை
பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான பாதுகாப்பு"
என்ற தலைப்பிலான அத்தியாயம்-14 (பக்-187-204)
பொருளியல் குறித்த தொடக்கநிலைப் புரிதலை
வாசகனுக்கு அளிக்க முயல்கிறது.

"வட்டி" என்பது நியாயமான ஒன்றே என்ற
முதலாளியப் புரிதலை மறுத்து, "வட்டி" என்பது
சுரண்டல் என்ற மார்க்சியப் புரிதல் வாசகனுக்கு
அளிக்கப் படுகிறது. இதுதான் இந்த அத்தியாயத்தின்
சாரம். இதில் "உற்பத்தி உறவுகள்", "உழைப்புசார்
உறவுகள்" ஆகிய தொடர்களை ஒரே பொருளில்
பயன்படுத்தி இருப்பதால் மார்க்சியத்திற்கு எந்த
பங்கமும் நேர்ந்து விடவில்லை. எதையாவது சொல்ல
வேண்டும் என்பதற்காகச் சொல்லப் படுபவையே
இது போன்ற வீணான விமர்சனங்கள்.

அம்பேத்கார் கூறுகிறார்:
"சாதி அமைப்பு தொழில்களை மட்டும்
பிரிக்கவில்லை; தொழிலாளர்களையும்
அது பிரிக்கிறது".
(ரங்கநாயகம்மா நூல்: பக்-166, வலது பாதி)

1) தொழில் பிரிவினை (division of labour)
2) தொழிலாளர் பிரிவினை ( division of labourers)
என்ற இரண்டு பிரிவினைகள் பற்றி அம்பேத்கார்
கூறுகிறார். இதைத்தான் 'உழைப்புப் பிரிவினை',
'உழைப்பாளர் பிரிவினை' என்று ரங்கநாயகம்மா
விளக்குகிறார். ரங்கநாயகம்மா இரண்டு பிரிவாகப்
பிரிக்கிறார் என்று குற்றம் சுமத்துவோர்,
உண்மையில் அம்பேத்கார் மீதுதான் குற்றம்
சுமத்துகின்றனர். ஏனெனில் இரண்டு பிரிவாகப்
பிரித்தவர் அம்பேத்கார்தான்.  

இந்த நூலில் நுட்பமான சிக்கல் மிகுந்த பொருளியல்
கோட்பாடுகள், ஒரு பொருளியல் அர்த்தத்தில்
(context) பேசப்படவில்லை. அதற்கான தேவையே
இந்த நூலுக்கு இல்லை. மார்க்சியப் பொருளியல்
அடிப்படைகளை (basics) தொடக்கநிலை
வாசகனுக்குப் புரிய வைப்பதில் நூலாசிரியர்
வெற்றி அடைந்து இருக்கிறார். சில தொடர்களைப்
பயன்படுத்தியதில் அவர் எத்தகைய தவறையும்
செய்து விடவில்லை. இதை இங்கு நிரூபித்து
இருக்கிறோம். Much ado about nothing!
**************************************************************   


           
 







சனி, 15 அக்டோபர், 2016

மன்னிக்கவும்; நான் வாட்சப்பில் இல்லை.
என் மொபைல் எண் 94442 30176. 
மார்க்சியம் மிகத் தெளிவான கடவுள் மறுப்புக்
கொள்கையை உடையது. பொருள்முதல்வாதம்
(materialism) என்னும் தத்துவத்தை மார்க்சியம் தன்
ஒரு கூறாகக் கொண்டுள்ளது. வறட்டு நாத்திகம் அல்ல
மார்க்சியத்தின் கொள்கை.
**
கம்யூனிஸ்ட் கட்சியில் ஒருவர் சேர்த்துக் கொள்ளப்
படுவதற்கான நிபந்தனை இதுதான்: அவர் கட்சியின்
வேலைத் திட்டத்தை (party programme) ஏற்றுக் கொண்டிருக்க
வேண்டும். அவ்வளவே.
**
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களைத் தான் சேர்க்க
வேண்டும் என்று எந்தக் கம்யூனிஸ்ட் கட்சியிலும்
எந்தக் காலத்திலும்  விதி (rule) இருந்தது கிடையாது.
**
கட்சியில் சேர்ந்த உடனேயே எவர் ஒருவரும் கம்யூனிஸ்ட்டாக
ஆகி விடுவதில்லை. ஒருவர் கம்யூனிஸ்ட்டாக ஆவது என்பது
ஒரு நீண்ட இயக்கப்போக்கைக் கொண்டது. (a long process)/
காலப் போக்கில், அவர் கடவுள் குறித்த மார்க்சிய நிலைப்பாடு
என்பது என்ன என்பதைப் புரிந்து கொண்டு விடுவார். 
**
1948 தெலுங்கானாப் போராட்டத்தில் எளிய விவசாயிகள்
பலர் கட்சியில் சேர்ந்தனர். அவர்கள் அனைவரும்
கடவுளை வணங்குபவர்கள். அதில் எவ்விதத் தவறும்
இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியில் கதவடைப்புவாதத்திற்கு
இடமில்லை.   

"கடவுள் சிலைகளை உழவர்கள்தான் வைத்தனர்.
அவற்றை நாம் அகற்ற வேண்டியதில்லை. அவர்களே
ஒருநாள் அவற்றைத் தூக்கி எறிவர். அதுவரை நாம்
காத்திருக்க வேண்டும்" என்றார் மாவோ.
**
கட்சித் திட்டத்தை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தத்
தயாராக இருந்தால், ஒரு மதத்தலைவரைக் கூட,
(அதாவது போப்பைக்கூட) கட்சியில் சேர்க்கலாம்
என்றார் லெனின்.
**
கடவுள் நம்பிக்கை என்பதை பிரச்சாரத்தின்
மூலமாகவோ, துப்பாக்கி முனையிலோ, அகற்றி
விட முடியாது. கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறும்
ஒரு நாட்டில், அரசாங்கமானது எந்த மதத்திற்கும்
ஆதரவு அளிக்காது. அவ்வளவே. மக்கள் சாமி
கும்பிடத் தடை இல்லை. ஹஜ் யாத்திரைக்கு அரசுப்
பணத்தை மானியமாகக் கொடுக்கிறதே இந்திய அரசு.
இவை போன்ற செயல்களுக்கு கம்யூனிஸ்ட் ஆட்சியில்
இடமில்லை.

வழிபாட்டு உரிமையை கம்யூனிசம் ரத்து செய்வதில்லை!
----------------------------------------------------------------------------------------------------
மதமும் கடவுளை நம்புவதும் ஒருவரின் தனிப்பட்ட
அந்தரங்க விஷயம். ஒருவருக்கு கத்தரிக்காய் பிடிக்கும்,
ஒருவருக்குப் பிடிக்காது என்பது போன்ற விஷயம்.
இதில் கம்யூனிஸ்ட்கள் தலையிட வேண்டிய அவசியம் என்ன?
**
மதத்தையும் கடவுள் நம்பிக்கையையும் சுரண்டலுக்கும்
ஒடுக்குமுறைக்கும் பயன்படுத்துவதை கம்யூனிசம்
அனுமதிக்காது; உறுதியுடன் முறியடிக்கும். கம்யூனிஸ்ட்
ஆட்சியில் நாத்திகப் பிரச்சாரம் நடந்து கொண்டு
இருக்கும். வற்புறுத்தல் கிடையாது.
**
1) தலித்துகளுக்கு கோவிலில் நுழைய அனுமதி மறுப்பு
2) தேர் வடம் பிடித்து இழுக்கும் உரிமை மறுப்பு
3) இந்து-முஸ்லீம் வகுப்புக் கலவரங்கள்
4) அந்த இடம் ராமர் பிறந்த இடம், இல்லை இல்லை,
அங்குதான் பாரின் மசூதி உள்ளது.
5) போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தேவாலயத்தை
(church) இடிக்க நீதிமன்றம் உத்தரவு; பாதிரியார்கள்
சாலை மறியல்.
......இன்ன பிற, இன்ன பிற,,,,
இப்படி எதற்கும் கம்யூனிஸ்ட் ஆட்சியில் இடம் கிடையாது.
ஆனால், பிடித்த கடவுளை வணங்க உரிமை உண்டு.
மக்களின் வழிபாட்டு உரிமையை கம்யூனிசம் ரத்து செய்வதில்லை.