புதன், 21 பிப்ரவரி, 2018

உலக மகளிர் தினம் (மார்ச் 8)
----------------------------------------------------
ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் மார்ச் 8 அன்று
மகளிர் தினம் கொண்டாடப் படுகிறது.  1975 முதல்
ஐ நா சபை மகளிர் தினத்தைக் கொண்டாடி வருகிறது.

இன்றைய உலக மக்கள்தொகை 760 கோடி. இதில்
சரிபாதி பெண்கள்.வரலாறு நெடுகிலும் பெண்களின்
உரிமைக்குப் போராடிய பெண்கள் பலர். ஜெர்மனியைச்
சேர்ந்த கிளாரா ஜெட்கின் என்ற அம்மையார் இன்று நாம்
கொண்டாடும் உலக மகளிர் தினத்துக்கு வித்திட்டார்.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
என்றார் பாரதியார்.பாரதியின் கூற்று மெய்யாகி
வருகிறது..

நம் நாட்டிலும் நம் அண்டை நாடுகளிலும் பெண்கள்
பிரதமர் பதவியை அலங்கரித்தனர். இலங்கையில்
சிறிமாவோ பண்டார நாயகா, சந்திரிகா குமார துங்க
ஆகியோர் நாட்டின் உயர்ந்த பதவிகளில் அமர்ந்தனர்.
இந்தியாவில் கொடி கட்டி ஆண்டார் இந்திரா காந்தி.

பாகிஸ்தானில் பெனாசிர் புட்டோ, வங்க தேசத்தில்
கலிதா ஜியா, இங்கிலாந்தில் மார்கரெட் தாட்சர்,
இஸ்ரேலில் கோல்டா மேயர் என்று பெண்கள்
வையத்தலைமை ஏற்றனர்.

விண்வெளியில் வலம் வந்த முதல் பெண் என்ற
பெருமையைப் பெற்றார் ரஷ்யாவின் வாலன்டினா
தெரஸ்கோவா. இந்தியாவில் பிறந்த கல்பனா
சாவ்லாவும் சுனிதா வில்லியம்சும் விண்வெளித்
துறையில் சாதனை படைத்தனர். இதன் விளைவாக,
அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பு எதற்கு என்று
கேட்ட சமூகம் நாணித் தலை குனிந்தது.
பெண்புத்தி பின்புத்தி என்ற அவப்பெயர் அகன்றது.

எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண்
சற்றும் இளைப்பில்லை காண்
என்ற பாரதியின் கூற்று மெய்ப்பட்டது.

சட்ட மன்ற நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு
33 சதம் இட ஒதுக்கீடு எதிர்காலத்தில் நம் நாட்டில்
வந்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பெண் அடிமைத்தனம் என்ற கற்காலக்
கருத்தோட்டம் காலாவதி ஆகும் நாள்
வெகுதொலைவில் இல்லை.
ஆணும் பெண்ணும் சமம் என்ற கருத்து இன்று
வலுப்பட்டு வருகிறது. முழுமையான சமத்துவம்
என்பது இன்னும் எட்டப் படவில்லை. என்றாலும்
அதை நோக்கிய பயணத்தில் மனித குலம்
முன்னேறி வருகிறது.

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்ற
உன்னத நிலையை எதிர்காலத்தில் சமைப்போம்.
அதற்காக  உழைக்க  இந்த உலக மகளிர்
தினத்தில் சூளுரைப்போம்.
******************************************************


   
       
பூமிக்கு வெளியே கால் வைப்பதற்கு
ஒரு சிறிய இடம் கிடைத்தால் போதும், வைக்க
நான் இந்த பூமியைப் புரட்டித் தள்ளி விடுவேன்
என்றார் ஆர்க்கிமிடிஸ்.அவர்தான் கடவுள்.

இன்று மாலை என் வீட்டின் மொட்டை மாடியில்
வந்து இறங்குமாறு வந்து இறங்குமாறு கடவுளுக்கு கட்டளை இட்டேன்.
அவரும் வருகிறார்.
பொருள்முதல்வாதிகளுக்கு மட்டும் அனுமதி.

அந்தரத்தில் இருந்து லிங்கம் எடுக்க
பயிற்சி அளிக்கிறேன். இயற்பியல் படித்த
(BSc BE DME etc) 21-35 வயதிலான இளைஞர்கள்
விண்ணப்பிக்கலாம். கட்டணம் இல்லை.

ஆர்க்கிமிடிஸ் கிமு காலத்தவர்; கிமு மூன்றாம் நூற்றாண்டு.
அவர் காலத்தில் தொலைநோக்கி கூடக் கிடையாது.
வெறுங்கண்ணால் பார்த்தே வானியல் உண்மைகளைக்
கண்டறிந்த காலம் அவரின் காலம். நிற்க.
**
அவர் நெம்புகோலைக் கண்டு பிடித்தவர். இதனால்
மனித சமூகம் பெரும் நன்மையை அடைந்தது.
நெம்புகோலால் எதையும் நெம்பித் தள்ளி விட
முடியும் என்ற கருத்தை வலியுறுத்தவே ஆர்க்கிமிடிஸ்
இந்தக் கருத்தைக் கூறினார்.
**
அன்று சாத்தியம் இல்லாமல் இருந்த ஆர்க்கிமெடிசின்
விருப்பம் இன்றைய அறிவியல் வளர்ச்சியில் சாத்தியம்
ஆகி விட்டது. இன்றைக்கு விண்வெளியில் மனிதன்
நடமாடும் விண்வெளி நிலையம் அமைத்துள்ளான்.
இந்தியப் பெண்மணி சுனிதா வில்லியம்ஸ் மேற்கூறிய
விண்வெளி நிலையத்தில் (International Space Station)
மாதக்கணக்கில் தங்கி இருந்தார் என்பதை
நினைவு கொள்க.
**
இன்று பூமிக்கே வெளியே உள்ள ISSல் கால் வைத்துக்
கொண்டு, ஒரு வலுவான நெம்புகோலால் பூமியை
புரட்டித்  தள்ளிவிட முடியும். இது சாத்தியம்.
ஆனால் யாரும் செய்யப் போவதில்லை. ஏனெனில்
அதனால் நமக்கு நஷ்டமே.     

பெண்கள் விண்ணப்பிக்க வேண்டாம். ஏனெனில்
பயிற்சியின்போது உடல்ரீதியாகத் தொட்டுத்தான்
பயிற்சி அளிக்க முடியும். இதைத் தவிர்க்கவே
பெண்களுக்கு அனுமதி இல்லை.

பூமி நிலையாக ஒரு இடத்தில் இருக்கும் பொருளல்ல.
அது சுழன்று கொண்டிருக்கும் பொருள் (An object in motion).
In order to disturb it, அதன் வேகத்தில் செல்லும் ஒரு செயற்கைக்
கோளில் நாமும் செல்ல வேண்டும். செயற்கைக் கோளில்
பறந்து கொண்டே, அதில் இருந்து ஒரு கருவியை நீட்டி
பூமியைப் புரட்ட வேண்டும். அப்போது பூமி தடுமாறும்;
நிலை குலையும். இடம் மாறும். அதாவது அது தன்
orbitஐ மாற்றிக் கொள்ளும். அவ்வளவுதான்.
**
பூமியின் மீது மோத வருகின்ற விண்பொருட்களை
விஞ்ஞானிகள் எப்படி சமாளிக்கிறார்கள்? மோத வரும்
பொருளின் பாதையை மாற்றி விடுகிறார்கள். அது
போலத்தான் இதுவும்.  


15 ஆண்டுகளில் ஆணை கட்டி முடிக்கப்பட்டது.
தங்களது கேள்வி நியாயமானதும் அறிவுபூர்வமானதுமான
கேள்வி. சிறிது நேரத்தில் பதிலளிக்கப்படும் தற்போதைய
டைப்பிங் முடிந்ததும்.

பூமி என்பது ஒரு அச்சில் சுழலும் ஒரு rigid body. இவ்வாறு
சுழலும்போது , அந்த சுழற்சியின் வேகம் mass distributionஐ
பொறுத்தது. அதாவது நிறை குறைவான பகுதியில்
வேகமாகச்   சுற்ற முடியும். நிறை அதிகமாக உள்ள
பகுதியில்  இயல்பாக வேகம் குறைந்து விடும்.
பூமியில் சீனா இருக்கும் பகுதியில், இந்த அணை
காரணமாக, அதிகமான நிறை அவ்விடத்தில் செறிந்து
விட்டது. அதாவது moment of inertia அந்த இடத்தில் அதிகம்.
எனவே வேகம்குறைகிறது. இது குறித்து தாங்கள்
கூறியது சரியே.
**
அடுத்து, சீன நெடுஞ்சுவர் கட்டியபோது, அது குறித்த
ஆய்வுகள் இன்றுள்ளது போல அன்று இல்லை.
அதே நேரத்தில் சீன நெடுஞ்சுவர் ஒரு குறிப்பிட்ட
இடத்தில் நிறையை அதிகரிக்கவில்லை. அது
21000 கி.மீ நீளம் என்பதால் நிறையானது சுவர் நெடுக
பரவி நிற்கிறது (distribution of mass is even).
**
முப்பள்ளத்தாக்கு அணை முழுக்க முழுக்க இரும்பாலும்
கான்கிரீட்டாலும் கட்டப்பட்டது. எனவே நிறை அதிகம்.
சீன நெடுஞ்சுவரில் ஒப்பீட்டளவில் இந்த அளவு நிறையும்
நிறையின் செறிவும் கிடையாது. எனவே அதிகமான
moment of inertia இல்லை. எனவே அதிகமான torque
தேவையில்லை. எனவே வேகம் குறையவில்லை.

இந்தப் பதிவைப் படிப்பவர்கள், அதை நன்கு புரிந்து
கொள்ளும் பொருட்டு, புதுமைப் பித்தன் எழுதிய
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்ற அற்புதமான
சிறுகதையை வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

விண்வெளியில் (space) இருந்து பார்த்தால், சீன நெடுஞ்சுவர்
தெரியாது. தாழ் சுற்றுப்பாதை (LEO-Low Earth Orbit)யில்
இருந்து பார்த்தாலும் பார்வைக்குப் புலப்படாது. ஆனால்
புகைப்படம் எடுக்கலாம். ஆற்றல் மிக்க லென்சுகளைக்
கொண்டு ISS விண்ணியலாளர்கள் புகைப்படம்
எடுத்துள்ளனர். புகைப்படத்தில் ஓரளவு தெரியும்.

ஆம், இது சரியே. சுழற்சியின் வேகம் ஒரு சீரானதல்ல
(not uniform) இந்த உண்மை கெப்ளர் காலத்திலேயே
கண்டறியப் பட்ட ஒன்று. perigee, apogee எனப்படும்
அண்மை, சேய்மை நிலைகளில் வேக மாறுபாடு உண்டு.

செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

Self fertilizing is when the pollen from one plant is put on the stigma of the same flower or another flower that is growing on the same plant.
----------
genotype = genetic code 
phenotype = physical appearance/properties/expression of the gene
00000000
If a tall plant and a short plant bred together, how would all of the plants end up being tall? Wouldn't 75% become tall and 25% become short based on the 3:1 ratio?
All plants would end up being tall if the parents are homozygous for the traits controlling each character. 75% would be tall if and only if the p generation is heterozygous for the character while 25% would be short, which conforms to the 3:1 ratio.
----------------------
Big Bang theory
----------------------
1) Of all the theories proposed, the big bang theory is the most logical
and enjoys the support of the cosmological community.
2) 

திங்கள், 19 பிப்ரவரி, 2018

டார்வினும் கம்பனும் தியாகராஜ கீர்த்தனையும்!
ஸாமஜ வர கமனா!
---------------------------------------------------------------------------------------
இன்று நாம் காணும் யானைகளின் தும்பிக்கை
நீளமானது; கால்கள் வரை நீண்ட தும்பிக்கைகளை
இன்றைய யானைகள் கொண்டுள்ளன.

ஆனால் ஆரம்ப கால யானைகளின் தும்பிக்கைகள்
நீளம் குறைந்தவை. இன்றைய தும்பிக்கையின்
நீளத்தில் பாதிக்கும் குறைவானவை.

தடாகத்தின் ஆழத்தில் இருக்கும் நீரை அருந்தவோ,
மரத்தின் உயரமான கிளைகளில் இருக்கும்
காய்களைப் பறிக்கவோ குட்டையான தும்பிக்கை
யானைகளுக்குப் பயன்படவில்லை. எனவே தமது
தும்பிக்கையை நீட்டி நீட்டி வேண்டியவற்றைப் பெற
யானைகள் முயன்றன. காலப்போக்கில் பரிணாம
வளர்ச்சியில் யானைகள் நீண்ட  தும்பிக்கையைப்
பெற்றன.

டார்வினுக்கு முந்திய பிரெஞ்சு பரிணாமவியல்
அறிஞர் லமார்க் தமது பரிணாமக் கொள்கையில்
USE AND  DISUSE THEORY என்ற கோட்பாட்டின் மூலம் 
யானைகளின் தும்பிக்கை வளர்ந்ததை விளக்குகிறார்.
லமார்க்கின் பரிணாமக்  கொள்கை காலப்போக்கில்
தோற்று விட்டது.டார்வினின் கொள்கையே
சரியென்று நிரூபிக்கப் பட்டது. எனினும் லமார்க்கின்
USE AND DISUSE THEORY சரியானதே என்று டார்வின்
ஏற்றுக் கொண்டார்.

தடாகத்தில் நீர் அருந்தி விடாய் தீர்க்கும் ஒரு
யானையைக் கற்பனை செய்து பாருங்கள்.
தாகம் தீர்ந்த யானை மிகவும் கம்பீரமாக நடை
போடும். அதன் கம்பீரத்தை அறிய கம்பனிடம்
செல்ல வேண்டும்.

வனவாசத்தின்போது ராமனும் சீதையும் உலாவச்
செல்வார்கள். சீதையின் நடையைக் கண்ட ஓர்
அன்னம், தன் நடை சீதையின் நடைக்கு ஈடாகாது
என்று வெட்கி .ஒதுங்கும். இக்காட்சியைக் கண்ட  
ராமன் சீதையைக் கண்டு முறுவல் செய்வான்.

அப்போது ஒரு தடாகத்தில் நீர் அருந்திய யானை
மிகுந்த நிறைவுடன் கம்பீரமாக நடந்து செல்லும்.
இக்கட்சியைச் சுட்டிக் காட்டும் சீதை ராமனைக்
கண்டு முறுவல் செய்வாள்.  இவ்விரு காட்சிகளையும்
ஒரே விருத்தத்தில் காட்டுகிறான் கம்பன்.

ஓதிமம் ஒதுங்கக் கண்ட
    உத்தமன் உழைய ளாகும்
சீதைதன் நடையை நோக்கிச்
    சிறியதோர் முறுவல் செய்தான்
மாதவன் தானும் ஆண்டு
    வந்து நீருண்டு மீளும்
போதகம் நடப்ப நோக்கிப்
    புதியதோர் முறுவல் பூத்தாள்.

(ஒதிமம் = அன்னம்; போதகம்= யானை)   

கம்பன் மட்டுமல்ல, தியாகையரும் தமது பிரசித்தி
பெற்ற ஒரு கீர்த்தனையில்  யானையின் கம்பீர
நடையைப் பாடலாக்கி உள்ளார்.

"ஸாமஜ வர கமனா" என்று தொடங்கும் அந்தக்
கீர்த்தனை வெகுவாகப் புகழ் பெற்றது. அடிக்கடி
பாடப்பெறுவது. (ஸாமஜ = யானை; கமனா = கம்பீர நடை)

இந்தக் கீர்த்தனையைப் பலரும் மிகச் சிறப்பாகப்
பாடியுள்ளனர். என்றாலும் எனக்குப் பிடித்த ஜேசுதாசின்
குரலில் இப்பாடலை வாசகர்கள் கேட்கலாம்.
(முதல் பின்னூட்டத்தில் காண்க)

இங்கிலாந்தின் டார்வினையும் காவிரிக்கரை
தியாகையரையும்  அயோத்தி ராமனையும்
ஒரே கட்டுரையில் கொண்டு வந்து .காண்பித்துள்ளேன்.
கூடவே பலரும் அறியாத use and disuse theoryயையும் 
சேர்த்துள்ளேன்.படித்தும் சுவைத்தும் பயன் பெறுக!
********************************************************     
   
    

   

     
எந்த அசைவையும் ஏற்படுத்தாமல்
கடந்துபோன டார்வின் பிறந்த நாள்!
மக்களைச் சென்றடையாத பரிணாமக் கொள்கை!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------
1) இது பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றிய
கட்டுரை அல்ல.

2) இங்கிலாந்து விஞ்ஞானி சார்லஸ் டார்வினின் (1809-1882)
பரிணாமக் கொள்கை இன்று இந்த 2017இல் கூட
மக்களிடம் சென்று சேரவில்லை.

3) குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்பதைத்
தாண்டி, பரிணாமக் கொள்கை பற்றி மக்கள்
அறிந்திருக்கவில்லை. இது மிகவும் கருநிலையிலான
புரிதல் மட்டுமே.

4) மதங்கள் அனைத்தும் படைப்புக் கொள்கையை
(creationism) வலியுறுத்துகின்றன.

5) படைப்புக் கொள்கையை அறிவியல் ஏற்கவில்லை.
பிரபஞ்சம் (universe) எப்படி உருவானது என்பதற்கு
பெருவெடிப்புக் கொள்கையை (big bang theory)
அறிவியல் முன்வைக்கிறது.

6) உயிரினங்கள் எப்படித் தோன்றின என்பதற்கு
டார்வினின் பரிணாமக் கொள்கையை
(theory of evolution) அறிவியல் முன்வைக்கிறது.

7) ஆக இந்த உலகத்தில் இரண்டே இரண்டு
கொள்கைகள்தான். ஒன்று, மதங்கள் கூறும்
படைப்புக் கொள்கை. இன்னொன்று, அறிவியல்
கூறும் பெருவெடிப்பு மற்றும் பரிணாமக் கொள்கை.
மூன்றாவதாக ஒரு கொள்கை கிடையாது.

8) இயற்பியல் படித்தவர்கள் பெருவெடிப்புக்
கொள்கையை அறிந்திருப்பர். உயிரியல் படித்தவர்கள்
பரிணாமக் கொள்கையை அறிந்திருப்பர்.

9) மதங்கள் இன்றும் தங்களின் படைப்புக்
கொள்கையை  பரப்பி வருகின்றன. இதற்கு
எதிரான பெருவெடிப்புக் கொள்கையும் பரிணாமக்
கொள்கையும் மதங்களின் பரப்புரைக்கு ஈடு
கொடுக்கிற அளவுக்கு மக்களிடம் சென்று சேரவில்லை.

10) டார்வினின் பரிணாமக் கொள்கை தவறு என்றும்
அதைப் பள்ளிகளில் கற்பிக்கக் கூடாது என்றும்
சமூகத்தில் குரல்கள் எழுகின்றன. எனவே பரிணாமக்
கொள்கை சரியானது என்று நிறுவப் பட்ட கொள்கையே 
என்ற உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல
வேண்டிய கடமை அறிவியலுக்கு உள்ளது.
அறிவியலுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனுக்கும்
உள்ளது.

11) தங்களை கடவுள் மறுப்பாளர்கள் என்றும்
பகுத்தறிவாளர்கள் என்றும் போலியாக உரிமை
கொண்டாடும் பெருங்கூட்டமே தமிழ்நாட்டில்
உள்ளது. எனினும் இவர்களில் ஒருவர் கூட
பரிணாமக் கொள்கை மீதான தாக்குதலைக்
கண்டு கொள்ளவில்லை. பெருவெடிப்புக்
கொள்கையையும் பரிணாமக் கொள்கையையும்
மக்களிடம் கொண்டு செல்வது பற்றி இந்தக்
கூட்டத்திற்குத் துளியும் அக்கறை இல்லை.

12) கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன்,
விடுதலை ராசேந்திரன் போன்ற போலிப்பகுத்தறிவு
மூடர்கள் பரிணாமக் கொள்கையை மக்களிடம்
பரப்ப இதுவரை என்ன செய்துள்ளனர்? ஒரு
ரோமமும் இல்லை.

13) டார்வின் பிறந்த நாள் (பெப்ரவரி 12) அண்மையில்
கடந்து போனதே! அந்த நாளைப் பயன்படுத்தி
டார்வினின் பரிணாமக் கொள்கையை மக்களிடம்
கொண்டு செல்ல இவர்கள் செய்தது என்ன?

14) பெரும்பணமும், அரங்க வசதிகளும், ஆள் பலமும்
பிற வசதி வாய்ப்புகளும் கொண்டிருக்கும் இவர்கள்
குறைந்தபட்ச அறிவியலை மக்களிடம் பரப்ப
இதுவரை செய்தது என்ன? இனிமேலும் செய்யப்
போவது என்ன?

15) அறிவியல் கூட்டம் என்றால் மேடை மட்டும்
போதாது. ப்ரஜெக்ட்டர் ஏற்பாடு வேண்டும். காணொளிக்
காட்சி இல்லாமல் அறிவியல் கோட்பாடுகளை
விளக்க முடியாது. குறைந்தபட்சம் கரும்பலகை
சாக்பீஸ் வேண்டும். வெறுமனே மைக் முன்னால்
கத்துவதற்கு அறிவியல் விளக்கம் என்பது இலக்கியக்
கூட்டம் போன்றதல்ல.

16) அண்மையில் BREAKTHROUGH SCIENCE SOCIETY என்ற
மார்க்சிய டிராட்ஸ்கிய அறிவியல் அமைப்பு டார்வின்
பிறந்த நாளை ஒரு வாரமாக (Darwin week) கொண்டாடியது.
சென்னையில் லயோலா கல்லூரியில் பரிணாமக்
கொள்கையை விளக்கி ஒரு சொற்பொழிவும், ஒரு
ஆவணப்படத் திரையிடலும் நடைபெற்றது. இதற்கு
தங்களின் வகுப்பறையை (smart class room) இலவசமாக
வழங்கிய லயோலா கல்லூரிக்கு நன்றி.

17) 50 லட்சத்திற்கு மேல் மக்கள்தொகையைக்
கொண்டுள்ள சென்னை நகரத்திற்கு ஒரே ஒரு கூட்டம் போதுமானதல்ல. உண்மையில் இது கடலில்
காயம் கரைத்த கதைதான். என்றாலும் ஒரு
அமைப்பானது தன்னிடம் உள்ள வசதி வாய்ப்புகளைக்
கொண்டு  இவ்வளவுதான் செய்ய இயலும்.

18) பெரும் பணமும் வசதி வாய்ப்புகளும் கொண்டுள்ள
போலிகள் இது போன்ற விஷயங்களில் தாங்களாகவே
முன்கை எடுக்க வேண்டாமா?

19) பணியில் இருக்கும்போது தன்னுடைய
சம்பளத்திலும், ஒய்வு பெற்ற பின் தன்னுடைய
பென்சன் பணத்திலும் நியூட்டன் அறிவியல்
மன்றத்தின் நிறுவனர் அறிவியல் கூட்டங்களை
நடத்தி வந்தார்: வருகிறார். என்றாலும் ஒரு கூட்டம்
நடத்துவதற்கு குறைந்தது ரூபாய் பத்தாயிரம்
இல்லாமல் ஒரு ரோமமும் பிடுங்க முடியாது.

20) Every activity is associated with money input.பணம் இல்லாமல்
அறிவியலைப் பரப்ப முடியாது. யாருடைய தாலியை
அறுத்து அறிவியலைப் பரப்புவது?
***********************************************************


       

   
Lamarck and Darwin theory use and disue law and the 2nd law of Lamarck
-----------------------------------
Charles Darwin was an English naturalist who studied variation in plants and animals during a five-year voyage around the world. He explained his ideas on evolution in a book called On the Origin of Species, published in 1859.
The main features in his theory are that:
  • individuals compete for limited resources
  • individuals in a population show natural variation
  • individuals with characteristics best suited to their environment are more likely to survive to reproduce
  • 'successful' characteristics are inherited
Species unable to compete successfully eventually become extinct.
Darwin's ideas caused a lot of controversy, and this continues today. They can be seen as conflicting with religious views about the creation of the world and the creatures in it.

Lamarck's theory

Darwin was not the only person to develop a theory of evolution. Jean-Baptiste Lamarck was a French scientist who developed an alternative theory at the beginning of the 19th century. His theory centred on two ideas:
  • the law of use and disuse
  • the law of inheritance of acquired characteristics
His theory stipulated that a characteristic which is used more and more by an organism becomes bigger and stronger. One that is not used disappears eventually. Any characteristic of an organism that is improved through use is passed to its offspring.
These lists summarise the two different explanations for long necks in giraffe.

Lamarck

  1. a giraffe stretches its neck to reach food high up
  2. the giraffe's neck gets longer because it's used a lot
  3. the giraffe's offspring inherit its long neck

Darwin

  1. a giraffe with a longer neck can reach food high up
  2. a giraffe is more likely to get enough food to survive to reproduce
  3. a giraffe's offspring inherit its long neck
Lamarck's theory was eventually discredited because acquired characteristics do not have a genetic basis. In addition, his theory cannot account for all the observations made of life on Earth. For instance, it would predict that all organisms gradually become complex, and simple organisms disappear. Darwin's theory can account for the continued presence of simple organisms.
-----------------------------------------
In 1809, in his now famous Philosophie zoologique, Lamarck set out this idea more systematically in the form of two laws:
  • First Law: In every animal that has not reached the end of its development, the more frequent and sustained use of any organ will strengthen this organ little by little, develop it, enlarge it, and give to it a power proportionate to the duration of its use; while the constant disuse of such an organ will insensibly weaken it, deteriorate it, progressively diminish its faculties, and finally cause it to disappear.
  • Second Law: All that nature has caused individuals to gain or lose by the influence of the circumstances to which their race has been exposed for a long time, and, consequently, by the influence of a predominant use or constant disuse of an organ or part, is conserved through generation in the new individuals descending from them, provided that these acquired changes are common to the two sexes or to those which have produced these new individuals (, p. 235).