வியாழன், 16 மே, 2019

புழுத்துப்போன புழுத்தறிவு!
-------------------------------------------
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்
கனிமொழியின் கணவர் அரவிந்தன்
சுவாமி தரிசனம் செய்தார்!
கனிமொழி வெற்றி பெற அர்ச்சனை!

ஒருபக்கம் போலியான நாத்திகப் பிரச்சாரம்!
மறுபக்கம் கோவில் கோவிலாக அரச்ச்னை!

கடவுள் இருக்கிறார் என்று நம்பினால்
கும்பிடுங்கள்! அதில் தப்பில்லை!
கடவுள் இல்லை என்று சொல்லி விட்டு
ரகசியமாக கடவுளைக் கும்பிடுவது ஈனத்தனம்!

ஒரு எளிய விஷயத்தில் பொய் புரட்டு பித்தலாட்டம்
செய்து கொண்டு, நாத்திக வேடம் போட்டுக்
கொண்டிருப்பது நரக வேதனை!

பகுத்தறிவு வேறு!
புழுத்தறிவு வேறு!
-------------------------------------------------------
புதிய இலக்கணம் ஏன் வேண்டும்?
------------------------------------------------------
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில்
தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகள்
மட்டுமே இருந்தன.

அரபு, உருது, இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய
மொழிகள் அன்று இல்லை. இன்று ஈராயிரம்
ஆண்டுகளுக்குப் பின்னர், மேற்கூறிய அத்தனை
மொழிகளும், (குறிப்பாக ஆங்கிலம்) தமிழ்ச் சூழலில்
பெரும் தாக்கத்தை விளைவிக்கின்றன.
இதை மறுக்க இயலாது.

தற்பவம் தற்சமம் ஆகியவை சமஸ்கிருதம்
சார்ந்து இயற்றப்பட்டவை. இன்று ஆங்கிலம்
சார்ந்து தற்பவம், தற்சமம் உருவாக்கப்பட
வேண்டும் அல்லவா?
(cycle = சைக்கிள்; தற்சமம்)
(quantum = குவான்டம்; தற்பவம்).

பற்பொடி என்று எழுதச் சொன்னால்,
பற்ப்பொடி என்று எழுதுகிற மாணவர்கள்
குறைந்தது 50 சதம் இருப்பர். ஏன் மாணவன்
தவறாக எழுதுகிறான்? பிறமொழித் தாக்கம்
அவன் மீது அழுத்துகிறது. இதை உணர மறுப்பது
சரியன்று.

தமிழ் pre feudal காலத்தில் தோன்றி, feudal காலத்தில்
உச்சம் பெற்ற மொழி. தமிழ் ஆடசி மொழியாக 
இருந்த காலத்தில் இலக்கணம் சமைக்கப் பட்டது.

இன்று தமிழ் உற்பத்தியில் இல்லை; எனவே ஆட்சி
மொழியாகவும் இல்லை. உற்பத்தி சார்ந்த சொற்கள்
தமிழில் இல்லை. எனவே பிறமொழிகளை, குறிப்பாக 
ஆங்கிலத்தைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்த மாற்றத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தும் புதிய இலக்கணத்தின் தேவையை
உணர்த்தும் காரணிகள்.

உச்சரிப்பு பற்றி.....
இன்பம் துன்பம் ஆகிய சொற்கள் தொடக்கத்தில்
INPAM, THUNPAM என்றே உச்சரிக்கப்பட்டன.(கவனிக்கவும்
P உச்சரிப்பு)
தற்போதைய INBAM THUNBAM என்னும் உச்சரிப்பு
(கவனிக்கவும்: B உச்சரிப்பு) காலத்தால் பிந்தியதே
என்று என் பேராசிரியர் கூறினார் (முதுகலை வகுப்பில்).
எனவே உச்சரிப்புகளும் காலந்தோறும் மாறும்.

"வெட்கம்" என்றுதான் உச்சரிக்க வேண்டும் என்று
என்னதான் நாம் வலியுறுத்தினாலும், "வெக்கம்"
என்றுதான் மக்கள் உச்சரிக்கின்றனர். ஏன்?
இதை CLUSTER என்கிறது தொல்காப்பியம்.

எனவே உச்சரிப்பு என்பதும் மாறக்கூடியதே.
தமிழ் மொழியின் உச்சரிப்பு மட்டுமே மனித
உடலமைப்புக்கு ஏற்றது என்றும் ஏனைய மொழிகளின்
உச்சரிப்பு மனித உடலமைப்புக்கு ஏற்றதன்று என்றும்
கருதுவதில் உண்மை இல்லை. மனித உடல் சூழலுக்கு
ஏற்பத் தகவமைக்கும் பண்பு கொண்டது.

நான் அறிந்த மொழிக்கொள்கைளில் இரண்டே
இரண்டு கொள்கைகள்தான் தலைசிறந்தவை.
1. தொல்காப்பியரின் மொழிக்கொள்கை
2. மார்க்சிய மொழிக்கொள்கை.

மார்க்சிய மொழிக்கொள்கை என்பது தொல்காப்பியம்
போன்று இலக்கணம் வகுத்து வெளியிடும் கொள்கை
அன்று. மாறாக மொழி சார்ந்த கோட்பாடுகளை
முன்னிறுத்தும் கொள்கை ஆகும்.

எனவே எந்நிலையிலும் நாம் பயன்படுத்தும் மொழி
ஒரு தொடர்புறுத்த வல்ல மொழியாக
(communicable language) இருக்க வேண்டும் என்ற
மார்க்சியக் கோட்பாட்டை நான் 1000 சதம்
கடைப்பிடித்து வருகிறேன்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
விரிவஞ்சி நிறுத்துகிறேன்.
----------------------------------------------------------       



யாப்பிலக்கணத்தில் தொல்காப்பியர்
நேர்பு நிரைபு என்னும் அசைகளைக் கூறுகிறார்.
நன்னூலார் காலத்தில் நேர்பு நிரைபு அசைகள்
இல்லை.
"படையியங்கு அரவமும் பாக்கத்து விரிச்சியும்"
என்னும் தொல்காப்பியர் காலத்து இலக்கணம்
இன்று எங்கே உள்ளது? (பொருள் இலக்கணம் குறித்து)

அனைத்தும் மாறும்; மாறுகின்றன. இலக்கணம் மட்டும்
மாறக்கூடாது என்பது என்ன நியாயம் ஆகும்?
  






  
 
 

 


புதன், 15 மே, 2019

நாதுராம் கோட்சே - இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டிருந்தாரா?
ம.வெங்கடேசன்
முஸ்லீம்கள் மீது பழி வந்து கலவரம் வெடித்து முஸ்லிம்களை கொலை செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக தனது கையில் இஸ்மாயில் என்று முஸ்லிம் பெயரை பச்சைக் குத்திக் கொண்டு காந்தியைக் கொன்றார் கோட்சே. இப்படி ஒரு பொய்ப் பிரச்சாரம் தொடர்ந்து நாடுமுழுவதும் நடைபெற்று வந்துக் கொண்டிருக்கிறது. இது பலரும் எவ்வித ஆராய்ச்சியும், ஆதாரமும், சரியான தரவுகளும் இல்லாமல் தொடர்ந்து சொல்லிவரும் குற்றச்சாட்டு.
இதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? இதுவரை இந்தக் குற்றச்சாட்டை சொல்பவர்கள் ஏதாவது ஒரு ஆதாரத்தையாவது பொதுவெளியில் வெளியிட்டிருக் கிறார்களா? ஒரு ஆதாரமும் இல்லை. இதுவரை யாரும் பொதுவெளியில் அதற்கான ஆதாரத்தை வெளியிட்டதில்லை.
1948 ஜனவரி 30 அன்று சரியான மாலை 5.20க்கு தன் கையில் வைத்திருந்த பிஸ்டலால் சுட்டுக் கொன்றார் கோட்சே. ஆல் இந்தியா ரேடியோ மூலம் நாதுராம் விநாயக் கோட்சே என்ற இந்துவால் மகாத்மா காந்திஜி இன்று மாலை 5-20 மணிக்குப் பிர்லா மாளிகையில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று அன்று மாலை சரியாக 6.00 மணிக்கு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
தான் இந்து அல்ல முஸ்லிம்தான் என்று விடாப்பிடியாக நாதுராம் கோட்சே சொல்லி யிருந்தால் நிலைமையே வேறுமாதிரியாக மாறியிருக்கும். ஆனால் காந்திஜியை சுடப்பட்டு 40 நிமிடங்களிலேயே வானொலியில் சுட்டவர் இந்து என்று அறிவிக்கிறார்கள் என்றால் தான் இந்து என்று உண்மையை கோட்சே ஒளிவுமறைவு இல்லாமல் சொல்லியிருக்கிறார் என்றுதான் அர்த்தம்.
அன்றைக்கு இரவே செய்தித்தாள்களில் காந்தி சுடப்பட்டார் என்ற செய்தி வந்துவிட்டது. அதில் ஒரு இடத்தில்கூட கோட்சே கையில் பச்சைக் குத்திக்கொண்டு காந்தியை சுட்டுக் கொன்றார் என்ற செய்தி வரவில்லை.
மருத்துவ குறிப்புகளில் உள்ள அங்க அடையாளங்கள் பகுதியில்கூட அவர் கையில் பச்சைக் குத்திக்கொண்டிருந்தார் என்ற எந்தவிதமான தகவல்களும் இல்லை.
காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை மற்றும் பின்னர் வெளியிடப்பட்ட எந்த குறிப்புகளிலும்கூட கையில் பச்சைக் குத்திக்கொண்டிருந்தார் என்ற குறிப்பு இல்லை.
நீதிமன்றத்தில் அவர்மேல் குற்றம் சுமத்திய அரசு வழக்கறிஞரோ அல்லது வேறு எந்த வழக்கறிஞரோகூட அவர் கையில் இஸ்மாயில் என்று பச்சைக்குத்திக்கொண்டிருந்தார் என்று குற்றம் சாட்டவில்லை.
கோட்சே மற்றும் அவரது கூட்டாளிகள்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் இவைதான் :-
குற்றவாளிகள் மீது சதித்திட்டம், கொலை மற்றும் கொலை முயற்சி, வெடிகுண்டு தயாரித்தல், கடத்துதல், தன் இருப்பில் சட்டவிரோதமாக வைத்திருத்தல், அவற்றைச் சட்டத்திற்கு முரண்பாடாகப் பயன்படுத்துதல் மற்றும் சம்பந்தப்பட்ட ஆயுதங்களைச் சட்டத்திற்குப் புறம்பான முறையில் தக்க வைத்துக் கொண்டு துராக்கிருதமாகப் பயன்படுத்துதல், குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல் என்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
(Criminal Conspiracy, Murder, Attempt to Murder, Causing Explosion, Attempting to cause explosion, Making and possessing explosives, Transporting and controlling of Arms and Ammunitions, and using the explosives, Abettment of an offence - under Indian Panel code Sections 120-B, 302, 109, 114, 115, Explosive Substances Act VI of 1908, Indian Arms Act XI of 1878)
கோட்சே மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக அரசுத் தரப்பிலிருந்து சுமார் 149 சாட்சிகள், ஆவணங்கள், கடிதங்கள், தந்தி மற்றும் தபால்கள், கொலையாளிகளின் ஆடைகள், கொலைக்கான ஆயுதங்கள் (கருப்பு பெரட்டா) கொலையில் பயன்படுத்திய வாகனங்கள், பத்திரிகை செய்திகள், இது தவிர அதிமுக்கியமாகக் கோட்சேவின் கூட்டாளி திகம்பர பாட்ஜேவின் ஒப்புதல் வாக்குமூலம் ஆகியவை நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டன.
இதில் ஒரு இடத்தில்கூட கோட்சே கையில் பச்சைக் குத்தியிருந்தார் என்று அரசுத் தரப்போ, பத்திரிகைகளோ குற்றம் சாட்டவும்வில்லை; சொல்லவும்வில்லை; எழுதவுமில்லை. அதற்காக எந்த பிரிவிலும் வழக்குப்போடவில்லை.
மாறாக ஒரு இந்து கொன்றார் என்ற செய்திதான் அன்று இரவே பத்திரிகைகளில் வெளியானது.
கொன்றவர் இந்து என்று ஏன் எழுத வேண்டும்? அவர் இஸ்மாயில் என்று முஸ்லிம் பெயரை கையில் குத்திக் கொண்டிருந்தால்தானே அவரை இந்து என்று குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் கோட்சே என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றுதானே வெளியிடப்பட்டிருக்கும்?
நியாயமான சந்தேகம்தான்.
பிரிவினைக்குப் பிறகு இந்துக்கள், முஸ்லிம்கள் இந்த இரு சமுதாயத்தில் இருந்த - பிரிவினையால் மிக கொடூரமாகப் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தார்கள். குடும்பத்தை இழந்த, உறவினர்களை இழந்த, நிலபுலன்களை இழந்த லட்சக்கணக்கான இந்துக்கள் இருந்தனர். அவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருந்தனர். கோடீஸ்வரர்களாக இருந்தவர்கள் ஒரேநாளில் பிச்சைக்காரர்களாக ஆனார்கள். உற்றார் உறவினர்களோடு இருந்தவர்கள் ஒரேநாளில் அனாதையானார்கள். சொல்ல முடியாத, தாங்க முடியாத மனவேதனையில் - வலியின் வேதனையில் டெல்லி தெருவோரமாக அலைந்துகொண்டிருந்தார்கள். டெல்லியில் இவர்களால் காந்தியின் உயிருக்கு ஏதாவது நேரலாம் என்ற கவலை, தகவல் எல்லாமே இருந்தது. அதனால்தான் காந்தியைக் கொன்றவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்று சொல்ல வேண்டியது அப்போது கட்டாயமாகியது. அதனால்தான் பத்திரிகைகளில் இந்து ஒருவர்தான் காந்தியை கொன்றார் என்று சொல்ல வேண்டி வந்தது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மற்றொன்று உண்டு.
முதலில் காந்தியை கொல்ல எந்த வேஷத்தில் போகலாம் என்ற விவாதம் வந்தது. பர்தா போட்டுக் கொண்டு போய் சுடலாம் என்று சொன்னபோது அதை மறுத்தவர் நாதுராம் கோட்சே.
கோட்சே நினைத்திருந்தால் முஸ்லிம் போல தாடி வைத்துக் கொண்டு போய் சுட்டு இருக்கலாம்.
கோட்சே நினைத்திருந்தால் சுடும்போது அல்லாகு அக்பர் என்று கத்திக் கொண்டு சுட்டு இருக்கலாம்.
கோட்சே நினைத்திருந்தால் சுன்னத் செய்து கொண்டு சுட்டு இருக்கலாம்.
ஆனால் இதில் எதையுமே செய்யாமல் காந்தியை சுட்ட கோட்சே, முன்னரே திட்டம்போட்டபடி சுட்டுவிட்டு போலிஸிடம் பிடிபட வேண்டும், ஓடக்கூடாது என்ற முடிவோடு வந்து, சுட்டுவிட்டு தப்பி ஓடாமல் அங்கேயே இருந்தார்.
கோட்சே நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்தபோது, “காந்தி சுயநலம் இல்லாதவர். நாட்டுக்காகத் துன்பங்களை ஏற்றவர். சொந்த ஆதாயத்துக்காக எதுவும் செய்யவில்லை. மக்கள் மனதில் விழிப்புணர்வைக் கொண்டுவந்தவர்” என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
காந்தியைச் சுடும்போது கூட மண்டியிட்டு வணங்கிவிட்டுத்தான் சுட்டார் என்கின்றன குறிப்புகள்.
கோட்சே சிம்லா (3-6-49) சிறையில் இருக்கும்போது காந்திஜியின் மகனான ராம்தாஸ் காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘தன்னால் ராம்தாஸ் காந்திக்கும், காந்தியின் குடும்பத்திற்கும் மிகுந்த மனத்துன்பம் ஏற்பட்டுள்ளது என்றும், அதற்கு ஆறுதல் கூறத்தகுந்த வார்த்தைகள் ஏதுமில்லை என்றும், காந்தியின் சாவிற்கு மனிதாபிமான முறையில்தான் வருத்தப்படுவதாகவும் எழுதியிருந்தார். மேலும் அதில், ஆனால் காந்தியைச் சுட்ட தன் செயலுக்காகத் தான் எள்ளளவும் வருத்தமோ விசனமோப்படவில்லை என்றும், நாட்டிற்காகத் தான் செய்தது மிகவும் சரியானதுதான்’ என்றும் எழுதினார்.
எல்லோருமே காந்திஜி கொலையில் தனக்கு சம்பந்தமில்லை என்று வாதாடியபோது, கோட்சே மட்டும்தான் கடைசிவரை உறுதியாக, தான் மட்டும்தான் தன்னிச்சையாக அரசியல் காரணங்களுக்காக காந்தியைக் கொன்றதாகவும், இதில் எந்தவித அமைப்போ அல்லது குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கோ எந்த ரீதியிலும் சம்பந்தமில்லை என்றும், தான் நல்ல திட சிந்தனையில் காந்தியைக் கொல்ல வேண்டும் என்ற சரியான எண்ணத்துடன்தான் கொலை செய்ததாகவும் கூறினார்.
கோட்சேவுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டும் அதை எதிர்த்து மேல்முறையீடு எதையும் கோட்சே செய்யவில்லை என்பதையும் பார்க்கும்போது கோட்சே இதையெல்லாம் முன்பே திட்டமிட்டு இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.
இப்படி திட்டமிட்டு செயல்பட்ட கோட்சே, ஒருபோதும் தன் கையில் இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக்கொண்டு காந்திஜியை சுடவில்லை. அதற்கு அவசியமுமில்லை.
By:Ma.Ve

செவ்வாய், 14 மே, 2019

மரண தண்டனை விதித்த பிறகும்
கருணை மனு போட மறுத்த புலவர் கலியபெருமாள்!
மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய
மறுத்த நாதுராம் கோட்சே!
கமலஹாசன் அறியாத உண்மைகள்!
---------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
தமிழ்நாட்டில் நக்சல்பாரி இயக்கத்தைத் தோற்றுவித்த
மூன்று தலைவர்களில் ஒருவர் புலவர் கலிய பெருமாள்.
பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.

ஒரு அழித்தொழிப்பு வழக்கில், அதாவது கொலை
வழக்கில் புலவருக்கு மரண தண்டனை விதிக்கப்
பட்டது. புலவர் மட்டுமல்ல, அவரின் மகன்கள்,
உறவினர் என்று புலவரின் குடும்பமே சிறையில்
இருந்தது. இந்த வரலாறு எதுவும் இன்றைய
தலைமுறைக்குத் தெரியாது. சொல்ல வேண்டிய 
நக்சல்பாரிகளும் குழுக்களுக்கு இடையிலான பொறாமை
உணர்ச்சி காரணமாகச் சொல்வதில்லை. நிற்க.

செஷன்ஸ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம்
ஆகிய அனைத்தும் புலவரின் மரண தண்டனையை
உறுதி செய்தன. அடுத்து ஜனாதிபதிக்கு கருணை மனு
போடும் காலம்.

எவ்வளவோ வற்புறுத்தியும் ஜனாதிபதிக்கு கருணை மனு
போட புலவர் மறுத்து விட்டார். அரசிடம் கருணை கோர
மாட்டேன் என்று பாறையைப் போல உறுதியுடன்
நின்றார் புலவர்.

இருப்பினும் இவ்வழக்கில் பிறரை விடுவித்த அரசு
புலவரையும் விடுவித்தது அவரின் கருணை மனு
இல்லாமலேயே.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே மரண தண்டனை
விதிக்கப்பட்ட ஒரு கைதி, ஜனாதிபதிக்கு கருணை மனு
போட மறுத்தவராக புலவர் திகழ்கிறார். இதே போன்ற
வேறொரு நிகழ்வும் இந்திய வரலாற்றில் உண்டு.

மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப் படுகிறார்;
30 ஜனவரி 1948ல். நாதுராம் கோட்சே (A1), நாராயண் ஆப்தே
(A2) உள்ளிட்ட 8 பேர் விசாரணை நீதிமன்றத்தால்
தண்டிக்கப் படுகின்றனர். கோட்சே, ஆப்தே இருவருக்கும்
மரண தண்டனையும் ஏனைய 6 பேருக்கு ஆயுள்
தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது விசாரணை
நீதிமன்றம்.  

விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தாங்கள்
நிரபராதிகள் என்று கூறி 7 பேர் மேல்முறையீடு
செய்தனர். இந்த மேல்முறையீடடை பஞ்சாப்
உயர்நீதிமன்றம் விசாரித்தது. ஆனால், தான் நிரபராதி
என்றோ தண்டனையைக் குறைக்கக் கோரியோ
நாதுராம் கோட்சே மேல்முறையீடு செய்யவில்லை.
He did not appeal against his conviction and death sentence.

பஞ்சாப் உயர்நீதிமன்றம் கோட்சே, ஆப்தே ஆகிய
இருவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை
உறுதி செய்தது. ஏனைய 6 பேரில் 4 பேருக்கான
ஆயுள் தண்டனையும் உறுதி செய்யப் பட்டது.
ஆயுள் தண்டனை பெற்றவர்களில் கோட்சேயின்
தம்பி கோபால் கோட்சேயும் ஒருவர்.

அ) பஞ்சாப் உயர்நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிய தேதி
8 நவம்பர் 19449.
ஆ) கோட்சே, ஆப்தே இருவரும் அம்பாலா சிறையில்
15 நவம்பர் 1949 அன்று தூக்கில் இடப்பட்டனர்.தீர்ப்பு
வந்த ஒரே வாரத்துக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்
படுகிறது.

இதைப் படிக்கிற வாசகர்களுக்கு நியாயமாக ஒரு
கேள்வி எழ வேண்டும். ஆனால் அப்படி ஒரு கேள்வி
எவருக்கும் எழாது என்று நான் அறிவேன்.

பஞ்சாப் உயர்நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, உடனே
7 நாட்களுக்குள் தூக்கில் போட்டு விடுவார்களா?
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு எதுவும் கிடையாதா
என்ற கேள்வியை வாசகர்கள் எழுப்பினால் மகிழ்ச்சி.

காந்தி கொலை நடந்தது 1948ல்.
கோட்சே தூக்கில் இடப்பட்டது 1949ல்.
இந்தியாவில் உச்ச நீதிமன்றம் (Supreme Court)
ஏற்படுத்தப் பட்டது 1950ல். அதாவது காந்தி கொலை வழக்கு
முடிந்து தீர்ப்பு நிறைவேற்றப் பட்ட பிறகு.

இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் (Constitution)
1950 ஜனவரி 26ல் செயல்பாட்டுக்கு வருகிறது. அதன்
பிறகே உச்ச நீதிமன்றம் அமைக்கப் படுகிறது. எனவே
உச்சநீதிமன்ற மேல்முறையீடு என்ற பேச்சுக்கே இடமில்லை.

புலவர் கலிய பெருமாள் அவர்கள் வர்க்க எதிரிகளைப்
படுகொலை செய்வது (annihilation of class enemies) என்ற
சாரு மஜூம்தாரின் அரசியல் வழியை முழுமனதோடு
ஏற்றவர். எனவே ஜனாதிபதியிடம் கருணை மனு போட்டு
இறைஞ்சி நிற்க அவர் தயாராக இல்லை. அவர்
போற்றுதலுக்கு உரியவர்; வணங்கத் தக்கவர்.

நாதுராம் கோட்சே தான்தான் காந்தியைக் கொன்றவர்
என்றும் அதற்கான காரணங்கள் இன்னின்ன என்றும்
நீதிமன்றத்தில் தெளிவாகக் கூறியவர். காந்தியைக் கொலை
செய்ததை அவர் தயக்கமின்றி ஒப்புக் கொண்டவர்.
அவரது ஒப்புதல் வாக்குமூலம் புத்தகமாக வெளிவந்துள்ளது.

சுதந்திர இந்தியாவில் 1) நாதுராம் கோட்சே 2) புலவர்
கலிய பெருமாள் ஆகிய இருவர் மட்டுமே மேல்முறையீடு
செய்யாமலும் கருணை மனு போடாமலும் (முன்னர்க்
கூறியபடி) தங்களின் கொள்கையில் வழுவாமல்
பாறை போன்ற உறுதியுடன் நின்றவர்கள். மீதி
அனைவரும் கருணை மனு உள்ளிட்ட அனைத்து
வழிகளையம் பயன்படுத்தியவர்களே.
  
.பகத் சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது.
கருணை மனு எதுவும் கூடாது என்று உறுதியாக
இருந்தார் பகத்சிங். இதை இக்கட்டுரையில் குறிப்பிட
விரும்பவில்லை. ஏனெனில் இது 1947க்கு முன், அதாவது
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் நடந்த நிகழ்வு.  

பகத் சிங், உத்தம் சிங், வாஞ்சிநாதன், நாதுராம் கோட்சே,
புலவர் கலிய பெருமாள் ஆகியோர் கொலை
செய்திருக்கலாம். அவை கொள்கைக்காகச் செய்யப்பட்ட
கொலைகள்.எனவே அவர்கள் இறுதி வரை கம்பீரமாக
நின்றனர்.

ஆனால் கூலிக்குக் கொலை செய்த இழிந்த பிண்டங்கள்
உயிர்ப்பிச்சை கேட்டு மனித குலத்துக்கே அருவருப்பை
ஊட்டிக் கொண்டு திரிகின்றனர்.

விடுதலையை நேசிக்கும் எவனும்
மரணத்தையும் கூடவே நேசிக்க வேண்டும்.
அப்படி மரணத்தை நேசித்த கோட்சே, புலவர்
ஆகியோரின் உறுதியைப் போற்றுவோம்.
---------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
Gandhi is no saint. நக்சல்பாரி இயக்கம் அதன் தொடக்க
காலத்தில், மகாத்மா காந்தியைத் தீவிரமாக வெறுத்தது.
நாடெங்கும் காந்தி சிலைகளை நக்சல்பாரிகள்
உடைத்தனர்.
*******************************************************    


   
  

   
            

  


     

திங்கள், 13 மே, 2019

தோழர் நல்லகண்ணுவும் அரசு வழங்கிய வீடும்!
மெய்யான கம்யூனிஸ்ட் நடைமுறை என்ன?
-------------------------------------------------------------------------
கலையியல் நிறைஞர் புலவர்
வீரை பி இளஞ்சேட்சென்னி
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
கம்யூனிஸ்டுகள் தனியொரு பொருளால் வார்க்கப்
பட்டவர்கள்...... மூல ஆசான் ஸ்டாலின்.
(The communists are of a special mould ....J V Stalin).

கம்யூனிஸ்டுகள் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும்
தன்மானத்துடன் இருப்பவர்கள்; அரசின் சலுகைக்கு
ஆலாய்ப் பறப்பவர்கள் அல்ல கம்யூனிஸ்டுகள்.
தன்னல மறுப்பே கம்யூனிஸ்டுகளின் இயல்பு;
அடையாளமும் ஆகும். சுருங்கக் கூறின், "தமக்கென
முயலா நோன்றாள் பிறர்க்கென முயலுந"ரே
கம்யூனிஸ்டுகள்.

கம்யூனிஸ்டுகள் தனியொரு பொருளால் வார்க்கப்
பட்டவர்கள் என்று ஸ்டாலின் சொன்னதற்கு இதுதான்
அர்த்தம். இங்கு கம்யூனிஸ்டுகள் என்ற சொல்லின் மூலம்
புரட்சியை நடத்துகிற அல்லது புரட்சிக்குத் தயாரிக்கிற
கம்யூனிஸ்டுகளை மட்டுமே ஸ்டாலின் குறிப்பிடுகிறார்;
போலிக் கம்யூனிஸ்டுகளை அல்ல.

தோழர் நல்லகண்ணு உள்ளிட்ட பலரும் குடியிருந்து வந்த
CIT நகர் அரசுக் குடியிருப்பை பராமரிப்புப் பணிகளுக்காக
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி இடிக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் அக்குடியிருப்பில்  வசித்து வந்த
அனைவரையும் குடியிருப்பில் இருந்து
வெளியேறுமாறு அரசு கேட்டுக் கொண்டது.

நூற்றுக்கணக்கான குடியிருப்புவாசிகள் அனைவருக்கும்
அரசின் உத்தரவு ஒரே நேரத்தில் கிடைக்கப்பெற்றது.
இதில் தோழர் நல்லகண்ணு அவர்களும் ஒருவர். உத்தரவு
கிடைக்கப் பெற்ற பலரும் மாற்று ஏற்பாடுகளைச் செய்து
கொண்டிருக்கும் நிலையில், தோழர் நல்லகண்ணு
தரப்பில் இருந்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்கு
உட்படுத்தப் பட்டுள்ளது. இது மிகவும் துரதிருஷ்ட வசமானது.
முற்றிலும் தவிர்க்கப் பட்டிருக்க வேண்டியது.

CIT நகருக்கு அருகிலேயே தி நகரில் பாலன் இல்லம்
உள்ளது. பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான பல
மாடிக்கு கட்டிடம் இது. இது நல்லகண்ணு சார்ந்துள்ள
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலத்
தலைமையகம் ஆகும்.

வெளியேற்றும் உத்தரவு (eviction notice) கிடைக்கப் பெற்ற
உடனேயே, தோழர் நல்லகண்ணு அவர்கள் மிகவும்
கம்பீரமாக, பாலன் இல்லத்துக்குச் சென்று அங்கு
குடியேறி இருக்க வேண்டும். அப்படி ஓரு முடிவை அவர்
எடுத்திருக்க வேண்டும். அல்லது அவருடைய கட்சியானது
அந்த முடிவை எடுத்து, மேள தாளம் முழங்க அவரை
பாலன் இல்லத்துக்கு அழைத்துச் சென்று குடியமர்த்தி
இருக்க வேண்டும். இதுதான் ஒரு மெய்யான கம்யூனிஸ்ட்
அல்லது மெய்யான கம்யூனிஸ்ட் கட்சி செய்ய வேண்டியது.

இதற்கு மாறாக, அரசே வேறொரு வீட்டில் தன்னைக்
குடியேற்ற வேண்டும் என்று கோருவதும், இதை
முதலாளிய குட்டி முதலாளியக் கட்சிகளைக் கொண்டு
வழிமொழிவதும் மார்க்சிய நடைமுறை அல்ல.
அரசின் சலுகைக்கு ஏங்கி கிடப்பதும், சலுகை
இல்லாத நிலையில் அனலில் பட்ட புழு போலத்
துடிப்பதும் அருவருக்கத்தக்க நடைமுறை ஆகும்.

கோடிக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாக,
நடைபாதைவாசிகளாக வாழும் ஒரு சூழலில்,
ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் என்று அறியப்படும்
ஒருவர் தமக்கென தனியாக வேறொரு வீடு
கேட்டுக் கொடி பிடிப்பது எவ்விதத்திலும்
கம்யூனிஸ்டுகளின் பண்பல்ல.

சுமார் 13 ஆண்டுக்கு முன்பு, தோழர் நல்லகண்ணு
அவர்களுக்கு அவரின் கட்சியினர் நிதி திரட்டி
ரூ ஒரு கோடி நிதி வழங்கினர். அந்த ஒரு கோடி
நிதியைக் கட்சியிடம் ஒப்படைத்து விட்டார்
தோழர் நல்லகண்ணு. இந்தத் தொகை வங்கியில்
சேமிக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில், இதன் மூலம்
கிடைக்கும் வட்டியே மாதம் ரூ 30,000  இருக்கும்.
எனவே தோழர் நல்லகண்ணு அவர்களின்
குடியமர்த்தலுக்குப் பொறுப்பேற்க வேண்டியது
அவரின் கட்சியே.

அதைச்செய்ய மறுக்கும் கட்சி, தோழரின் கையில்
ஒரு பிச்சைப் பாத்திரத்தைக் கொடுத்து எடப்பாடி,
பன்னீர் ஆகியோரிடம் இறைஞ்சி நிற்க வைத்துள்ளது.

பாலன் இல்லம் மட்டுமல்ல, அருகில் சிந்தாதிரிப்
பேட்டையில், கோவூர் வைத்தியநாத முதலி தெருவில்
AITUCக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்று உள்ளது.
அங்கும் தங்கும் வசதிகள், அறைகள் என நிறைய
உண்டு.

தமது துணைவியார் ரஞ்சிதம் அம்மையாரின்
மறைவுக்குப் பின்னர் ஒண்டிக்கட்டையாகத்தான்
தோழர் நல்லகண்ணு வாழ்ந்து வருகிறார். அவருக்கு
வழங்க ஒரு எட்டடிக்குச்சு கம்யூனிஸ்ட் கட்சியிடம்
இல்லையா?

மறைந்த ஆந்திர நக்சல்பாரிக் கவிஞர் செரபண்ட ராஜு
பற்றி இப்போது நினைவுகூர வேண்டும். அவரின்
மறைவுக்குப் பின்னர் அவருடைய துணைவியாருக்கு
நிதி வழங்க முன்வந்தது ஆந்திர அரசு. அரசு நிதியை
ஏற்க மாட்டேன் என்று மறுத்து வைராக்கியமாக
வாழ்ந்து காட்டினார் அவரின் துணைவியார். இதுதான்
கம்யூனிஸ்ட் நடைமுறை; புரட்சிகர நடைமுறை.

மாற்று முகாமைச் சேர்ந்த எத்தனையோ பேர், இது
போன்ற சூழலில் போற்றுதலுக்குரிய விதத்தில் நடந்து
கொண்டிருக்கின்றனர்.

தமிழறிஞரும் தொழிற்சங்கத்த தலைவரும் ஆகிய
திரு வி க அவர்கள் வறுமையில் வாடினார். இவரின்
வறுமையைக் கேள்வியுற்ற கருமுத்து தியாகராசன்
செட்டியார், திரு வி க அவர்களுக்கு ரூபாய் ஆயிரம்
நிதி வழங்கினார். அந்தக் காலத்தில் ரூ ஆயிரம்
என்பது இன்றைய மதிப்பில் குறைந்தது
ரூ பத்து சட்சத்திற்குச் சமம். உதவி வேண்டுமென்று
திரு வி க அவர்களோ அல்லது அவரின் சார்பாகவோ
யாரும் எதுவும் கேட்காதபொது, தாமே முன்வந்து
நிதி வழங்கினார் கருமுத்து தியாகராசனார்.

சரி, திரு வி க என்ன செய்தார் தெரியுமா? வறுமை
வாட்டிய போதும், அந்த நிதியை ஏற்க மறுத்து,
அந்தக் காசோலையைத் திருப்பி அனுப்பினார்
திரு வி க. அவர்கள்.

வரலாறு இத்தகைய உயர்ந்த மானுடர்களைப்
படைத்திருக்கிறது. ஒரு புறப்பாடல் இந்நிகழ்வுக்குப்
பொருத்தமாக அமைந்துள்ளது.

கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று
கொள்ளேன் என்னல் அதனினும் உயர்ந்தன்று.

கேளாமலே கொடுத்த கருமுத்து தியாகராசனார்
உயர்ந்தவரா? அல்லது ஏற்க மாட்டேன் என்று
மறுத்த திரு வி க உயர்வானவரா? இதற்கு விடை
என்னிடம் இருக்கிறது; என் சொந்த விடை. உங்களுக்கு
விடை தேவைப்பட்டால் சாலமன் பாப்பையா
அவர்களை அணுகலாம்.

இந்த ஒட்டுமொத்த நிகழ்வின் மூலம், கம்யூனிஸ்டுகள்
மீது கொஞ்ச நஞ்சம் இருந்த உயர்வான மதிப்பீடும்
அகன்று விட்டது. கம்யூனிஸ்டுகளும் ஏனைய
குட்டி முதலாளித்துவ ஆசாமிகளைப் போன்றே,
சலுகைக்கு ஆலாய்ப் பறக்கிறவர்கள், சலுகை
இல்லாமல் போனால் புலம்பித தள்ளி விடுவார்கள்
என்பதுதான் நல்லகண்ணு நிகழ்வு மூலம்
உணர்த்தப் பட்டு இருக்கிறது.

இருப்பினும் worshiping the false Gods என்னும் நிலை
சிறிதேனும் மாறக்கூடும்.
*****************************************************    




     
  

                  




 .
 


வெள்ளி, 10 மே, 2019

மதன மாளிகையில் மன்மத லீலைகள்!
------------------------------------------------------------
போகம் முன்னாக ராகம் பின்னாக
முழங்கும் சங்கீதக் குயில்கள்
மேகம் மின்னாமல் இடியும் இல்லாமல்
மழையில் நனைகின்ற கிளிகள்!
--------------------------------------
கச்சை மேலாக கனியும் நூலாடை
கவிதை கொண்டாடும் ரசிகை
பொன்மான் இப்போது அம்மான் உன்கையில்
பெண்மான் என்னோடு பழகு

புது மது இது இதம்
ரசம் தரும் சுகம்!
----------------------------------
கண்கள் படாமல் கைகள் தொடாமல்
காதல் வருவதில்லை!

வெட்கம் இல்லாமல் வணங்கிச் செல்லாமல்
சொர்க்கம் தெரிவதில்லை

தொழுகிய கால்கள் பழகிய நாட்கள்
ஆயிரம் சுகம் அல்லவா

inthup


இந்துப் பெயரா கிறிஸ்துவப் பெயரா
(முருகன், டேனியல்) என்பது முக்கியம் அல்ல!
ஆள் ரா (RAW) உளவு அமைப்பின் கைக்கூலி
என்பதே முக்கியம்!
 


முதல் நாள் இலங்கையில் ராஜ பக்சே
ஒரு கோரிக்கையை முன் வைத்து போராட்டம்
நடத்துவார். மறுநாள் அதே கோரிக்கையை
முன்வைத்து இந்தியாவில் போராட்டம் நடத்துவார்
திருமுருகன் காந்தி. இதன் மூலம் ராஜ பக்சேவின்
கோரிக்கைக்கு சர்வதேச அளவில் ஆதரவு இருப்பதாக
ஒரு தோற்றம் காட்டப்படும். இதை ஐநா சபை கணக்கில்
கொள்ளும்.
  

சீமான் ரா (RAW) அமைப்பின் கைக்கூலி அல்ல.
எல்லாக் கைக்கூலிகளையும் ரா அமைப்பு
உருவாக்குகிறது என்று நினைப்பது தவறு.
எந்தெந்த உளவு அமைப்பு எந்தெந்த கைக்கூலிகளை
உருவாக்கி இருக்கிறது என்பது பற்றி விரிவான கட்டுரை
நேரம் இருந்தால் எழுதப்படும்.
 

திருமுருகன் படித்தவர். சீமான் தானா கூனா.
RAW வின் கைக்கூலியாக இருக்க வேண்டுமெனில்,
அவருக்கு நல்ல ஆங்கிலப் புலமை அவசியம்.
பாவம் சீமான், ஆங்கிலப் புலமைக்கு அவர் எங்கே
போவார்? திருமுருகன் படித்தவர், இன்ஜீனியர்,
ஆங்கிலம் (பேச்சு, எழுத்து) நன்கு கைவரப் பெற்றவர்.


Espionageல் ஈடுபடும் உளவாளிகள் மட்டுமே
வெளியில் யாருக்கும் தெரியாமல், மனைவிக்கும்
கூடத் தெரியாமல் வாழ்ந்தாக வேண்டும்.
திருமுருகன் espionageல் ஈடுபடுகிறவர் அல்ல.
political assignmentsஐ மேற்கொள்கிறவர்களை
நுண்மாண் நுழைபுலம் மிக்கோர்  எளிதில்
அடையாளம் காண்பர்.
 

முற்போக்குக் கற்பழிப்பு!
---------------------------------------
கற்பழிப்புகளிலும் முற்போக்குக் கற்பழிப்பு உண்டு.
எங்கு உண்டு? தமிழ்நாட்டில்தான்!

நூற்றுக்கணக்கில் கன்னியா ஸ்திரீகளை (nuns)
கற்பழித்தவர் கேரளப் பாதிரியார் பிஷப் பிராங்கோ முல்லக்கல்

இவருடைய கற்பழிப்பை முற்போக்குகள் யாரும்
கண்டிப்பது இல்லை. கண்டு கொள்வது கூட இல்லை.

கற்பழிப்பை மேற்கொண்ட புழுவினும் இழிந்த
பிஷப் முல்லக்கல் பெருங்கயவன்.

இவனைக் கண்டிக்காதவன் பிஷப்பை விட
மோசமான கயவன்.
--------------------------------------------------------------------- 

இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!
----------------------------------------------------------------
யாரும் திணிக்காமல் தமிழன் இந்தி கற்கிறான்!
மத்திய அரசின் உத்தரவு இல்லை!
மாநில அரசின் அரசாணை எதுவும் இல்லை!
தக்ஷிண பாரத் இந்தி பிரச்சார சபாக்களின்
அறைகூவல் இல்லை!

ஆனாலும் தாமாகவே முன்வந்து இந்தி கற்கிறார்கள்
தமிழர்கள்!

அவர்களை அமைப்பாக்குவதுதான் பெரிய விஷயம்.
அமைப்பாக்கினால் போராட்டம் தானே நடக்கும்.


பாடாண் திணை என்றால் என்ன?
கையறுநிலைத்துறை என்றாலென்ன?
ELEGY என்றால் என்ன?
மேற்கூறிய கேள்விகளுக்கான விடை தெரிந்து
இருந்தால் மட்டுமே கட்டுரையை முழுமையாகப்
புரிந்து கொள்ள இயலும்.

அடுத்து ATTENUATION என்றால் என்ன என்றும்
தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.

------------------------------------


திரு நரேன் ராஜகோபாலன் அவர்களுக்கு,
--------------------------------------------------------------
ஜகதீஷ் சந்திர போஸ் உலக அளவில் புகழ்
பெற்றுள்ள இந்திய விஞ்ஞானி. உலகெங்கும் அவர்
இயற்பியலாளர் (physicist) என்றே அறியப் படுகிறார்.
கம்பியில்லாத் தந்தியை (wireless transmission) முதன் முதலில் 
கண்டு பிடித்தவர் ஜெகதீஷ் சந்திர போஸ்தான் என்ற
உண்மையை உலகம் இன்று ஒப்புக் கொண்டுள்ளது.

கம்பி இல்லாத் தந்திக்கு நோபல் பரிசு பெற்ற
மார்க்கோனி தமக்குக் கிடைத்த நோபல் பரிசுத்
தொகையை போசுக்கு வழங்க முன்வந்தார்.
ஆனால் போஸ் மறுத்து விட்டார். தமது கண்டுபிடிப்புக்கு
பதிப்புரிமை கோரவில்லை போஸ்.

அடுத்து ஜகதீஷ் சந்திர போஸின் தாவரவியல்
பங்களிப்பில் எத்தகைய போலி அறிவியலும்
இல்லை. தாவரங்களுக்கு உயிர் உண்டு என்றார் பாஸ்.
உயிரின் பல பண்புகளில் பிரதானமான ஒன்று என்னவெனில்
தன்னைப் பிரதி எடுப்பது (replication).

தாவரங்கள் தன்னைப் பிரதி எடுக்கின்றன.
ஒரு மரக்கால் நெல்லை விதைத்தால் ஒரு கோட்டை
நெல் எப்படி விளைகிறது? replication காரணமாக.
எனவே தாவரங்களுக்கும் உயிர் உண்டு.




முகிலன் எங்கே? 
மதன மாளிகையில் மன்மத லீலைகள்!
--------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
கண்கள் படாமல் கைகள் தொடாமல்
காதல் வருவதில்லை!
வெட்கம் இல்லாமல் வணங்கிச் செல்லாமல்
சொர்க்கம் தெரிவதில்லை!
தொட்டால் பூ மலரும்!

முகிலன் எங்கே என்ற குரல்கள் மேலும் மேலும்
மெலிந்து கொண்டே வருகின்றன. சென்று தேய்ந்து இறுதல்
என்று தமிழ் இலக்கியமும் attenuation என்று
signal transmissionஉம் இந்த மெலிவை வர்ணிக்கின்றன.

முகிலனின் பாலியல் பிறழ்வு நடத்தை இன்று அனைவரும்
அறிந்து வெறுக்கத்தக்க ஒன்றாகி விட்டது. இது
மாறுவேடங்கள் கலைகின்ற நேரம்!

புரட்சி என்பது மாலைநேரத்து விருந்து என்றுதான்
குட்டி முதலாளித்துவம் நினைத்துக் கொண்டு
இருக்கிறது. முகநூலில் புரட்சிகரமாக ஒரு சில
வாக்கியங்களை எழுதுவது பெரும் புரட்சி என்று
குட்டி முதலாளித்துவம் மனப்பால் குடிக்கிறது.

முகநூல் புரட்சி முடிந்ததும் காமப் புரட்சி தொடங்கி
விடுகிறது. காமப் புரட்சியையே காரல் மார்க்ஸ்
சொன்ன புரட்சியாக வரித்துக் கொண்டிருக்கிறது
குட்டி முதலாளித்துவம்.

கச்சை மேலாக கனியும் நூலாடை
கவிதை கொண்டாடும் ரசிகை
பொன்மான் இப்போது அம்மான் உன்கையில்
பெண்மான் என்னோடு பழகு

புது மது இது இதம்
ரசம் தரும் சுகம்!
மதன மாளிகையில் மந்திர லீலைகளாம்!
உதய காலம் வரை உன்னத லீலைகளாம்!

முகிலனின் பாலியல் பிறழ்வு நடத்தை ஏற்றிப்
போற்றத் தக்கது என்று குட்டி முதலாளித்துவம்
கருதுகிறது.

அழகிய கால்கள் பழகிய நாட்கள்
ஆயிரம் சுகம் அல்லவா!
ஓ ஆயிரம் சுகம் அல்லவா!
தொட்டால் பூ மலரும்!

முகிலனின் பாலியல் அக்கிரமங்களை சுட்டிக் காட்ட
முடியவில்லை. புழுவினும் இழிந்த குட்டி
முதலாளித்துவம் முகிலனுக்கு ஆதரவாக கம்பு
சுழற்றுகிறது. ஒரு பாலியல் பிறழ்வைக் கண்டிக்க
வக்கற்ற இத்தகைய சமூகச் சூழல்தான் இன்று
பொள்ளாச்சியில் இளம் பெண்களை அடித்து
உதைத்து ஆடையைக் கழற்றச் செய்தது.

முகிலனின் கயமையை நியாயப் படுத்துபவர்கள்
முகிலனின் pimpகளாக மட்டுமே இருக்க முடியும்.
முகிலன் திரும்பி வரட்டும். தமது குற்றத்துக்குரிய
ஏழாண்டு சிறை தண்டனையை முகிலனுக்கு
பெற்றுத்தர, பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக
உறுதி ஏற்போம். முகிலன் தண்டிக்கப் படும்போது.
முகிலனின் கயமையை ஆதரித்து நிற்கும் குட்டி
முதலாளித்துவமும் தண்டனையில் இருந்து
தப்ப முடியாது.

திரு அ மார்க்ஸ் தலைமையிலான முகிலன்
குறித்த உண்மை அறியும் குழுவை உடனே
கலைக்க வேண்டும். அதனால் எப்பயனும்
விளையாது என்று ஏற்கனவே கூறி இருந்தோம்.

கூடங்குளம் உதயகுமார் அவர்களின் ஒத்துழைப்பைப்
பெற்று, முகிலனின் தலைமறைவு நாடகத்தை
காவல்துறை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

ஒருவேளை முகிலன் திரும்பி வராமல் நாள்
கடத்தினால், அல்லது திரும்பி வராமலே
போய்விட்டால், பாடாண்திணையில்
கையறுநிலைத் துறையில் எவரும் அகவல்
(elegy) புனையப் போவதில்லை. புனைய வேண்டிய
தேவை இல்லை.

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.
*********************************************

    






  

ஞாயிறு, 5 மே, 2019

போற்றுதலுக்குரிய சுஜாதா! 
------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------
மே 3 சுஜாதா பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை!
-------------------------------------------------------------------
1970களில் சுஜாதா எழுதத் தொடங்கினார்.
எழுதியது அனைத்துமே அறிவியல்தான்.

அக்காலத்தில் பெ நா அப்புசாமி மட்டுமே தமிழில்
அறிவியலை எழுதிக் கொண்டிருந்தார்.கலைக்கதிர்
என்ற அறிவியல் பத்திரிகை கோவையில் இருந்து
வந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டின் அறிவியல்
என்பது இவ்வளவுதான். அதாவது கடலில் காயம்
கரைத்த கதைதான்.

இந்த நிலையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டவர்
சுஜாதா. வெகுஜன ஏடுகள் அனைத்தையும் தம்
எழுத்தாற்றலால் ஆக்கிரமித்துக் கொண்டு, அங்கெல்லாம்
அறிவியலை எழுதினார். அவரின் துப்பறியும் கதைகள்
அனைத்தும் அறிவியலே.

தமது கதையில் நெரிசலும் ஜன சந்தடியும் நிறைந்த
ஒரு நகரத்தை இப்படி வர்ணிப்பார்: "நகரின் இயக்கம்
ஒருவித பிரௌனியன் இயக்கம் போன்று இருந்தது".

பிரௌனியன் இயக்கம் = Brownian Motion.
அடுப்பில் உலை வையுங்கள். உலைநீர் நன்கு
கொதித்ததும் அதில் ஒரு பிடி அரிசியைப்
போடுங்கள். உலை கொதிக்கக் கொதிக்க,
அரிசியானது உலைப்பானையின் உள்ளே
தாறுமாறாக மேலும் கீழும் சென்று கொண்டிருக்கும்.
இதுதான், அரிசியின் இந்த இயக்கம்தான்
பிரௌனியன் இயக்கம் (Brownian motion).

போகிற போக்கில் எழுதிச் சென்று விடுவார் சுஜாதா.
ஆனால் அதைப் புரிந்து கொள்ளவும், புரிந்து கொண்டு
ரசிக்கவும் அறிவியல் அறிவு வேண்டும்.

போட்டித்தேர்வு எழுதப்போகும் ஒருவன் ஒரு நோட்ஸ்
வாங்கக் கடைக்குப் போகிறான். ஹோலோகிராம்
(hologram) முத்திரை உள்ள நோட்சைப் பார்த்து
வாங்குகிறான். இன்று ஹோலோகிராம் பலரும்
அறிந்த ஒன்று. ஆனால் 80களிலேயே (அல்லது
90களில்) ஹோலோகிராம் பற்றி எழுதியவர் சுஜாதா.
அவரின் கொலையுதிர்காலம் நாவலைப் படிக்கவும்.

கணினி குறித்தும் செயற்கைக்கோள் தகவல்
தொடர்பு குறித்தும் எவருக்கும் முன்பாகவே
தமிழ்ச் சமூகத்திற்கு உணர்த்தியவர் சுஜாதா.
காலத்தை மீறிச் சிந்தித்தவர் அவர்.

சாமானியனிடமும் அறிவியலைக் கொண்டு சென்றவர்
சுஜாதா. தமிழ்ச் சமூகத்தின் மூலை முடுக்குகள்
இண்டு இடுக்குகளிலும் அவர் அறிவியலைக் கொண்டு
சென்றார். தமக்கென ஒரு ராஜபாட்டையை அவர்
உருவாக்கிக் கொண்டார்.

சுஜாதா பெங்களூருவில் இருந்தபோது கலைஞரின்
மகள் கனிமொழியும் பெங்களூருவில் இருந்தார்.
கனிமொழி மிகுதியும் சுஜாதாவின் வீட்டிலேயே
இருப்பார். இருவருக்கும் இடையில் தந்தை-மகள்
உறவு இருந்தது. இருவரின் மணிக்கணக்கான
உரையாடல்களின் மூலம்  தமக்கான intellectual layersஐ
கனிமொழியால் எளிதில் உருவாக்கிக் கொள்ள முடிந்தது.

சுஜாதா ஆகச்சிறந்த அறிவியல் பரப்புநர் (science communicator)
ஆவார். அவரின் அறிவியல் பரப்புப் பங்களிப்பை
அகல உழுதலுக்கு (extensive cultivation) ஒப்பிடலாம்.
-