ஞாயிறு, 24 நவம்பர், 2019

மோடி ஆதரவாளர்களுக்கு மறுப்பு!
மருத்துவ அட்மிஷனில், 26 மாநிலங்களில் இருந்து
பெறப்படும் இடங்களில் OBCக்கு இடஒதுக்கீடு இல்லை! 
இது உண்மை! இதைப் புரளி என்று சொல்லும்
மோடி ஆதரவாளர்களே, திருந்துங்கள்!
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
1) ஜம்மு காஷ்மீர், தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மூன்று
மாநிலங்கள் தவிர மீதியுள்ள 26 மாநிலங்களும்
மருத்துவப் படிப்புக்கான இடங்களை மத்தியத் தொகுப்புக்கு
வழங்குகின்றன.

2) மேற்கூறிய 26 மாநிலங்களும் வழங்கும் அகில இந்திய
ஒதுக்கீட்டு இடங்களில் (All India Quota) இதர பிற்பட்ட
வகுப்பினருக்கு (OBC), அவர்களுக்குரிய 27 சத இட ஒதுக்கீடு
கிடையாது; வழங்கப்  படுவதில்லை.

3) ஆனால் SC, ST பிரிவினருக்கு உரிய 15 சதம் மற்றும்
7.5 சதம் அட்டியின்றி வழங்கப் படுகிறது. இதில் நமக்கு
ஆட்சேபணை இல்லை. இதை வரவேற்கிறோம்.

4) ஆனால் OBCக்கு மட்டும் இட ஒதுக்கீட்டை மறுக்கும் இந்த
ஓர வஞ்சனை 2007 முதல் டாக்டர் மன்மோகன்சிங் ஆடசிக்
காலம் தொட்டே இருந்து வருகிறது.

5) இந்த உண்மையைச் சுட்டிக் காட்டி, " மருத்துவப் படிப்பில்
இட ஒதுக்கீட்டுக்குக் கொள்ளி  வைத்தது யார்?" என்ற
தலைப்பில் ஒரு கட்டுரையை முகநூலில் வெளியிட்டு
இருந்தேன். மன்மோகன் சிங்கின் ஒரவஞ்சனையை
அதில் அம்பலப் படுத்தி இருந்தேன்.    

6) அக்கட்டுரையைப் படித்த மோடி ஆதரவாளர்கள் சிலர்
நான் புரளி கிளப்புவதாகவும் பொய்ப்பிரச்சாரம்
செய்வதாகவும் கூறித் திரிந்தனர். அவர்கள் கூறுவது
முற்றிலும் தவறு.

7) 26 மாநிலங்களில் இருந்து மத்தியத் தொகுப்புக்குச்
செல்லும் இடங்களில் OBCக்கு இட ஒதுக்கீடு இல்லை!
இல்லை!! இல்லை!!! 2007 முதலே இல்லை!!!
இதை நியூட்டன் அறிவியல் மன்றம் அடித்துக் கூறுகிறது.

8) குட்டி முதலாளியர்களைப் போல, சுயஇன்பப்
பதிவுகளை முகநூலில் நியூட்டன் அறிவியல் மன்றம்
எழுதுவது இல்லை. நிரூபிக்கப்பட்ட தேற்றங்களை
மட்டுமே நியூட்டன் அறிவியல் எழுதுகிறது.

9) நியூட்டன் அறிவியல் மன்றம் எதை எழுதினாலும்,
அது நிரூபிக்கப்பட்ட தேற்றத்திற்குச் சமமானது.

10) கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவ அட்மிஷனை
நியூட்டன் அறிவியல் மன்றம் தொடர்ந்து பின்பற்றியும்
கண்காணித்தும் வருகிறது. நீட் அறிமுகப் படுத்தப்
பட்ட காலத்தில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும்
இலவசமாக ஆலோசனைகளை நியூட்டன் அறிவியல்
மன்றம் வழங்கியது. இது இந்த நாட்டின் வரலாறு.

11) நான் இலவசமாக வழங்கிய ஆலோசனைகளை
NEET Consultant என்று போர்டு மாட்டிக் கொண்டு
வழங்கியவர்கள் லட்சக் கணக்கில் சம்பாதித்தார்கள்.

12) மாநிலங்கள் வழங்கும் இடங்களில் OBCக்கு
இடஒதுக்கீடு இல்லை என்பதை மூன்றாண்டுகளுக்கு
முன்பே, இதே முகநூலில் எழுதி இருக்கிறேன்.
2008ல் மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தி
இருக்கிறேன்.

13) என்னுடைய நண்பர் டாக்டர் ரவீந்திரநாத் அவர்கள்
மாநிலங்கள் வழங்கும் இடங்களில் OBCக்கு
இடஒதுக்கீடு கோரி சில ஆண்டுகளுக்கு முன்பே,
நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர். இவர்
சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் தலைவர்.

14) ஜே பி நட்டா அவர்கள் மத்திய சுகாதார அமைச்சராக
இருந்தபோது, டில்லி சென்று அவரை நேரில் சந்தித்து
OBC இடஒதுக்கீடு வேண்டுமென்று வலியுறுத்தியவர் அவர்.

15) இவ்வளவு உண்மைகளையும் மறுத்து விட்டு,
மாநிலங்கள் வழங்கும் இடங்களில் OBCக்கு இட ஒதுக்கீடு
இருக்கிறது என்று பச்சைப் பொய்யைக் கூறும்
மோடி அன்பர்கள் திருந்த வேண்டும். அரங்கின்றி
வட்டாட வேண்டாம்.

16) மாநிலங்கள் வழங்கும் இடங்களில் OBCக்கு உரிய
27 சதம் இடங்களைப் பெற நியூட்டன் அறிவியல் மன்றமும்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கமும்
போராடும். நாங்கள் வெற்றி பெறுவோம்! 27 சதம்
OBC இடஒதுக்கீட்டைப் பெறாமல் ஓய மாட்டோம்!     
**********************************************


 NFTE தோழர்களுக்கு ஒரு அறிவிப்பு!
---------------------------------------------------------
இந்தக் கட்டுரையை முழுமையாகவோ அல்லது
பகுதியாகவோ யார் வேண்டுமானாலும்
எடுத்தாளலாம். இக்கட்டுரையில் தங்களுக்குத்
தேவையற்றதாகக் கருத்தும் பகுதிகளை நீக்கி
விட்டுக்கூட, தங்கள் பெயரிலோ அல்லது என் பெயரிலோ
வெளியிடலாம். அதற்கு அனுமதி வழங்கப் படுகிறது.
இது NFTEக்கு மட்டும் பொருந்தும்.

இக்கட்டுரையில் சொல்லப்பட்ட ஒவ்வொரு அம்சத்துக்கும்
நான் பொறுப்பேற்கிறேன்.


உங்களைப் பொறுத்தமட்டில், மே 2020 superannuationக்கும்
ஜனவரி 31 VRSக்கும் இடையில் பெரிய வேறுபாடு இல்லை.
இருக்கின்ற ஒரே வேறுபாடு, பணப்பயன்கள் பற்றியது
மட்டுமே.

பிப்ரவரியில் ஒரு இன்கிரிமென்ட்டைப் பெற்றுக்
கொண்டு மே 31ல் வெளியேறுவதற்கும்,
Jan 31ல் VRSல் வெளியே செல்வதற்கும் இடையிலான
பணப்பயன்களில் உள்ள வேறுபாடு மட்டுமே
நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு வேறுபாடு.
இரண்டையும் கணக்குப் போட்டுப் பார்க்கவும்.

பணப்பயன்களின் வேறுபாடு appereciableஆக
இருக்கிறதா அல்லது negligibleஆக இருக்கிறதா
என்று பார்த்து அதன் பிரகாரம் முடிவு எடுக்கவும்.

அடுத்து பணப்பயன்களின் பட்டுவாடா எப்போது
என்பதும் உங்களைப் போன்றவர்கள் கருத்தில்
கொள்ள வேண்டியது. எந்த ஒன்றில் பணப்பயன்
தாமதமாகுமோ அதைத் தவிர்ப்பது அறிவுடைமை ஆகும்.

மூன்றாவதாக, post VRS Scenario. உங்களுக்கு இன்னும்
ஆறு மாதம் மட்டுமே இருப்பதால், VRSக்குப் பிந்திய
அலுவலக நிலைமைகளில் பெரிய இடையூறுகள்
ஏற்பட முடியாது. இடமாற்றல் ஏதேனும் (SSAக்கு
உள்ளேதான் என்றாலும்) வர வாய்ப்பு உண்டா என்று
பார்க்கவும். அதை எளிதாக எதிர்கொள்ள முடியுமா
அல்லது UNBEARABLEஆக இருந்து தொலைக்குமா
என்பதையும் கருத்தில் கொள்ளவும். பெரும்பாலும்
இடமாற்றல் வராது என்றால், post VRS Scenario என்ற
காரணியால் உங்களுக்குத் பாதிப்பில்லை என்று
பொருள். இது மே 31 வரை பணியில் நீடிக்கலாம்
என்ற முடிவுக்கு வலு சேர்க்கிறது.

அதே நேரத்தில் rotational transfer மற்றும் normal transfer
குறித்த இதுநாள் வரை அமலில் இருக்கும்
சட்டங்களோ அல்லது practice in vogueஓ இனிமேலும்
பொருந்தும் என்று கூற முடியாது. புதிய சூழலில்
புதிய சட்டங்கள் அல்லது நடைமுறைகள் கொண்டு
வரப்படும். அவற்றை சங்கங்களால் எதிர்க்க இயலாது.
கடைசி 6 மாதத்தில் இடமாற்றம் செய்ய மாட்டார்கள்
என்பதெல்லாம் உத்தரவாதம் உடையதல்ல.

சாதக பாதகங்களை ஒரு காகிதத்தில் எழுதி
ஒவ்வொன்றுக்கும் மதிப்பெண் கொடுத்து,
எந்த option சிறந்தது என்று முடிவெடுங்கள்.
தேவைப்பட்டால் என்னிடம் இன்று இரவு 7 மணிக்கு
மேல் மொபைலில் பேசுங்கள். தற்போது வெளியில்
செல்கிறேன். Wish you a good retired life.
--------------------------------------------------------
         

         
BSNL VRS 2019: ஒளி வீசும் உண்மைகளும்
VRS குறித்த வழிகாட்டுதல்களும்!
------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலர், NFTE, சென்னை.
நியூட்டன் அறிவியல் மன்றம்.
---------------------------------------------------------------------
BSNL நிறுவனம் லாபம் ஈட்ட இயலாமல் தொடர்ந்து பல
ஆண்டுகளாகவே நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஒரு
கட்டத்தில் நெருக்கடியானது மிகவும் வெளிப்படையாகப்
புலப்பட்டது. ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம்
வழங்க இயலாமல் BSNL தலைகுனிந்து நின்றது. கடந்த
பல ஆண்டுகளாகவே வளர்ச்சிப்பணிகள் என்று எதுவும்
இல்லை; நடக்கவில்லை; அதற்கான நிதி இல்லை.

சந்தையிலோ கடும் போட்டி. பிற நிறுவனங்களுடன்
போட்டி போட இயலாமல் BSNLன் சந்தாதாரர்
அடித்தளம் (subscriber base) மெல்ல மெல்ல அரிக்கப்பட்டு
விட்டது. மழை வெள்ளத்தின் பின், மண் அரிப்பு ஏற்பட்ட
இடம் போல BSNL ஆகிப்போனது.

நலிவுற்ற பொதுத்துறை நிறுவனங்களை என்ன செய்யலாம்
என்பதை முடிவு செய்ய இந்தியாவில் சட்ட திட்டங்கள்,
முன்னுதாரணங்கள், வழிமுறைகள் ஆகியன உள்ளன.
அதன்படி அமைக்கப்பட்ட நிபுணர் குழு தனது
பரிந்துரைகளை அரசிடம் வழங்கியது.

அ) BSNLஐ மூடி விடுவது (closure)
ஆ)  BSNLஐப் புதுப்பித்து உயிர் கொடுப்பது (revival)
என்ற இரண்டு வழிகள் முன்வைக்கப் பட்டன. இந்த
இரண்டில் எதை வேண்டுமானாலும் மத்திய அரசு
மேற்கொள்ளட்டும் என்று நிபுணர் குழு கூறியது.

உலக நாடுகளிலேயே இந்தியாவுக்கு ஒரு தனிப்பெரும்
சிறப்பு உண்டு. வேறெந்த நாட்டையும் விட, அதிகமான
கெடுநம்பிக்கையாளர்கள் (pessimists) இங்குதான் உண்டு.
அவர்கள் தாங்களாகவே BSNL மூடப் படுகிறது என்று
முடிவெடுத்து விட்டு, புதைப்பதா எரிப்பதா என்று
பட்டி மன்றம் நடத்தத் தொடங்கி விட்டனர்.

ஊடக முட்டாள்களும் பெசிமிஸ்டுகளும் கூட்டணி
அமைத்துக் கொண்டு BSNLன் இறுதி ஊர்வலத்துக்கு
ஆயத்தம் ஆகினர்.

BSNLஐ மூடுவதா அல்லது புதுப்பிப்பதா என்று மத்திய
அரசு தனது துறைகளிடம் (departments) கருத்துக் கேட்டது.
மத்திய அரசில் 50 துறைகள் உள்ளன என்பதை நாம்
அறிவோம்.

அநேகமாக எல்லாத் துறைகளுமே BSNLஐ மூடி
விடலாம் என்று கருத்துத் தெரிவித்தன. ஒரே ஒரு
துறை மட்டும் "BSNLஐ மூடக்கூடாது; அதன் சேவை
எங்களுக்கு வேண்டும்; BSNL இருந்தால்தான் அரசின்
ரகசியங்கள் பாதுகாக்கப்படும்" என்று கூறியது.
இப்படிக் கூறியது யாரெனில் அது பாதுகாப்புத் துறையே.

ஒற்றைக்குரல் எனினும் பாதுகாப்புத் துறையின் குரல்
ஓங்கி ஒலித்த குரல்; காடுகளை அதிர வைத்த
சிங்கத்தின் குரல். தீர்மானம் செய்கிற குரல்
(decisive voice). எனவே மத்திய அரசு பாதுகாப்புத்
துறையின் கருத்தை ஏற்றுக் கொண்டு BSNLஐ
மூட வேண்டாம் என்று முடிவெடுத்தது. மூட வேண்டாம்
என்று முடிவெடுத்த பின்னால், அடுத்து புதுப்பிக்க
வேண்டும் என்பதே கண்முன் இருக்கும் ஒரே வழி.
அதன் விளைவாகவே இன்றைய புதுப்பித்தல்
திட்டம் (REVIVAL PLAN).

இந்த இடத்தில் BSNL ஊழியர்களும் அதிகாரிகளும்
ஒரு விஷயத்தைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பாதுகாப்புத் துறையின் பரிந்துரையை அலட்சியப்
படுத்தி விட்டு, BSNLஐ மூடுவது என்று மோடி அரசு
முடிவெடுத்து இருந்தால் நமது நிலை என்ன?
அனைவருக்கும் COMPULSORY RETIREMENT வழங்கப்
பட்டிருக்கும். இன்று வழங்கப்பட்ட VRSக்குப் பதில்
CRSல் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்டு
இருப்போம்.

அரசு VRSஐ அறிவிப்பதற்கு முன்னால், BSNLன் நிலைமை
எவ்வாறு இருந்தது? அதன் மரணத்துக்குத் தேதி குறிக்கப்
பட்டு இருந்தது. இதுதானே உண்மை?

இந்த நிலையில் தொழிற்சங்கங்கள் என்ன செய்திருக்க
வேண்டும்? BSNLஐ மூடக்கூடாது என்றும் அதைப்
புதுப்பிக்க வேண்டும் என்றும் கோரி, நாடு தழுவிய
வலிமையான வேலைநிறுத்தம் செய்து அரசை
நிர்ப்பந்தம் செய்திருக்க வேண்டும். செய்தனவா
தொழிற்சங்கங்கள்? இல்லை.

இவ்வளவுக்கும் BSNLல் இடதுசாரித் தொழிற்சங்கங்கள்
மட்டுமே ஊழியர்களின் செல்வாக்கைப் பெற்றவை.
அங்கீகரிக்கப் பட்டவை. காங்கிரசின் FNTOவும்
பாஜகவின் BMSம் இங்கு வெறும் லெட்டர் பேட்
சங்கங்களே. இடதுசாரிச் சங்கங்களான NFTE, BSNLEU
ஆகிய இரண்டு ஊழியர் சங்கங்கள் மட்டுமே
ஊழியர்களின் 90 சதம் ஆதரவைப் பெற்றவை.
NFTE சங்கத்திற்கு CPI கட்சியும், BSNLEU
சங்கத்திற்கு CPM கட்சியும் அரசியல் வழிகாட்டுதலை
வழங்குகின்றன. அதிகாரிகள் சங்கங்களான SNEA,
AIBSNLOA, AIBSNLEA ஆகியவையும் மிக மெலிதான
இடதுசாரிச் சாயல் கொண்ட சங்கங்களாகவே
இவ்விடத்தில் கருதலாம்.

ஆனால் பாரம்பரியம் மிக்க இந்த இடதுசாரிச் சங்கங்கள்
கிழித்தது என்ன? ஒன்றுமில்லை என்பது நம் கண்ணில்
வந்து உறுத்துகிறது அல்லவா?

ஆக, BSNLஐ மூட வேண்டாம் என்றும் அதற்கு உயிர்
கொடுப்போம் என்றும் அரசு எடுத்த முடிவு முற்ற முழுக்க
அரசின் முடிவு மட்டுமே! அரசின் நல்லெண்ணத்தால்
விளைந்த முடிவு மட்டுமே. இந்த முடிவை எடுப்பதில்
எந்த ஒரு தொழிற்சங்கத்திற்கும் 0.00000001 சதவீதம்
பங்கு கூட இல்லை என்பதும்தானே உண்மை!

வெறுமனே BSNLக்கு வெளியில் உள்ள சராசரி இந்தியப்
பிரஜை போல,  வெறும் மௌனப் பார்வையாளராக
மட்டும்தானே தொழிற்சங்கங்கள் இருந்தன! இதை
எவராலும் மறுக்க முடியுமா?

VRS அறிவிக்கப் பட்டதுமே ஊழியர்கள் என்ன செய்திருக்க
வேண்டும். சங்கங்களின் வழிகாட்டுதலுக்குக் காத்திருக்க
வேண்டும். சங்கம் சொன்ன பின்னால்தான் நான்
VRSக்கு விண்ணப்பம் செய்வேன் என்றோ அல்லது VRSல்
போக மாட்டேன் என்றோ அமைதி காத்திருக்க வேண்டும்.
ஆனால் நடந்தது என்ன?

VRS அறிவிக்கப்பட்ட ஒன்றிரண்டு நாட்களில் மட்டும்
இருபதாயிரம், முப்பதாயிரம் என்று ஊழியர்கள்
விண்ணப்பம் செய்தனர். செம்பரம்பாக்கம் ஏரியைத்
திறந்து விட்டபோது கூட, இந்த வேகத்தில் நீர்மட்டம்
உயரவில்லை. இன்று 80,000 என்ற அளவில் விண்ணப்பம்
செய்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து நிற்கிறது.
யார் எவராவது சங்கத்தின் ஆலோசனையைக்
கேட்டார்களா? சங்கத்தின் கிளைக் கூட்டமோ,
மாவட்டச் செயற்குழுவோ அவசரமாகக் கூட்டப் பட்டதா?
VRSன் சாதக பாதகங்கள் விவாதிக்கப் பட்டதா?
இல்லையே!

இவையெல்லாம் இதைக் காட்டுகின்றன?
இந்த VRS திட்டத்திலும், BSNLன் புத்தாக்கத்திலும்
தொழிற்சங்கங்களுக்கு எந்தவொரு சிறு பங்கும் கூட
இல்லை என்பதைத்தானே நிரூபிக்கின்றன!

புத்தாக்கத் திட்டத்தைக் கொண்டு வந்ததற்காக,
அமைச்சருக்கு நன்றி தெரிவிக்க முண்டியடித்துக்
கொண்டு போய், அமைச்சருக்கு மாலையும் பூங்கொத்தும்
அளித்ததைத் தவிர தொழிற்சங்கங்களால் என்ன செய்ய
முடிந்தது? தொழிற்சங்கங்களால் ஒரு bargaining counterஐ
ஏற்படுத்த முடிந்ததா? இல்லையே.

நிற்க. தொழிற்சங்கங்களை விமர்சிப்பது இக்கட்டுரையின்
நோக்கம் அல்ல. VRS திட்டம் குறித்துப் பார்ப்போம்.

BSNL VRS என்னும் தங்கக் கைகுலுக்கல் திட்டம்!
-------------------------------------------------------------------------
BSNL VRS 2019 என்பது இத்திட்டத்தின் அதிகார பூர்வமான
பெயர். உண்மையில் இது வெறும் VRS அல்ல, மாறாக
அதிகப் பயன்களை வழங்கும் Golden Shake திட்டம் ஆகும்.
இந்த உண்மையை முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தத் திட்டத்தில் ஏதேனும் மறைமுகமான படுகுழிகளோ
அல்லது வேறெந்த ஆபத்தோ இல்லை. 37A பிரிவு இந்த
VRS திட்டத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் பொருந்தும்.
இத்திட்டம் அதை explicitஆகச் சொல்லவில்லை என்று
சிலர் முணுமுணுக்கக் கண்டேன். அப்படி எல்லாவற்றையும்
explicitஆகச் சொல்லத் தேவையில்லை. Many things go without
saying! இவையெல்லாம் frivolous objections.

இருப்பினும் 23.11.2019 அன்று BSNL Boardன் Director HR
அரவிந்த் வட்னேர்கர் அவர்கள் வெளியிட்ட அறிக்கை
VRS திட்டத்தில் 37A உள்ளடங்கவில்லை என்பது போன்ற
அர்த்தமற்ற ஐயங்களுக்கு முடிவு கட்டுகிறது. அந்த
அறிக்கையில் Director HR மிகத் தெளிவாகச் சொல்லுகிறார்:
"Here it is clarified that for BSNL employees, retirement on
VRS (VRS 2019) is neither a distinct nor a separate group but
will be at par with retirement on superannuation".

ஒரு ஊழியர் 60 வயது நிறைவடைந்தபின் எப்படி
இயல்பாக ஒய்வு பெறுவாரா, அதைப் போன்றதே இந்த
VRS என்று அவர் தெளிவாகக் கூறுகிறார். சுருங்கக் கூறின்,
VRS 2019 = Superannuation என்கிறார்.

உயிர்த்தெழுந்த இயேசுநாதர் வீதியில் நடந்து சென்றபோது
தாமஸ் என்னும் அவரின் சீடர் அவர்தான் இயேசுநாதர் என்று
நம்பாமல் இருந்தார் என்பது வரலாறு. எனவே தாமஸ்
மக்களால் doubting Thomas என்று அழைக்கப் பட்டார்.
அதிர்ஷ்டவசமாக BSNLல் "Doubting Thomas" ஆசாமிகள்
அபூர்வமாகவே உள்ளனர்.

2012ல், எட்டு ஆண்டுக்கு முன்பு, BSNLல் ஒரு VRS திட்டம்
வருகிறது என்று மிகத் தீவிரமான ஒரு சூழல் இருந்தது.
அன்றைய PACKAGEஐ விட இன்றைய VRS 2019  அதிகமான
பயன்களைக் கொண்டது. இதை அன்றைய PACKAGEஐ
நன்கறிந்தவன் என்ற முறையில் என்னால் உறுதியாகக்
கூற இயலும். ஆனால் அன்றைய பிரதமர் டாக்டர்
மன்மோகன் சிங் அவர்கள் VRSக்குத் தேவையான நிதியை
BSNLக்கு வழங்க முன்வரவில்லை. எனவே அன்றைய
VRS வெறும் கனவாகவே முடிந்தது. இன்றைய VRS 2019
அப்படி அல்ல. இது இன்னும் ஒன்றிரண்டு மாதத்தில்
நனவாகப் போகிறது.

அப்போது 2012ல், அன்றைய VRS குறித்து "Greet the exodus"
என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். அகில இந்திய
அளவில் அக்கட்டுரை அனுப்பப் பட்டதால்  அது ஆங்கிலத்தில்
உள்ளது. அது இன்றைக்கும் பொருந்தும் அதை மீண்டும்
படிக்குமாறு வேண்டுகிறேன்.

கடந்த பத்தாண்டுகளாக நஷ்டத்தில் இயங்குகிற, நலிவுற்று
விட்ட ஒரு நிறுவனத்தின் VRS Package  இவ்வளவு
கவர்ச்சிகரமாக இருப்பது BSNLல் மட்டுமே. பல்வேறு
தொழில்களில் வழங்கப்பட்ட VRS திட்டத்தை
நன்கறிந்தவன் என்ற முறையில் இதைக் கூறுகிறேன்.

Post VRS Scenario என்பது முடிவெடுக்க உதவும் ஒரு
முக்கியமான காரணி. பல SSAகளில் அந்த SSAவில்
உள்ள மொத்த ஊழியர்களுமே VRSக்கு விண்ணப்பித்து
உள்ளனர். பல SSAகளில் 80 சதம், 90 சதம் என்ற அளவில்
ஊழியர்கள் VRSக்கு விண்ணப்பித்து உள்ளனர். VRS
செயல்படுத்தப்பட்ட பின்னர், மிச்சம் மீதி இருப்பவர்கள்
முற்றிலும் புதிய சூழலில் வேலை செய்ய நேரிடும்.
மானவாரியாக இடமாற்றல்கள் நிகழும். SSA கேடர்கள்
CIRCLE கேடர் ஆகும்; CIRCLE கேடர் All India கேடர் ஆகும்.
இதை நான் ஏற்கனவே கூறினேன். தற்போது இதற்கான
உத்தரவும் வந்து விட்டது.

புதிய சூழலும் புதிய வேலையும் அதிகபட்ச தொழில்நுட்ப
அறிவைக் கோருபவை.ஒரு sluggish work forceஆல்
புதிய சவால்களை ஒருபோதும் எதிர்கொள்ள இயலாது.
DOTயில் இருந்து BSNLக்கு வந்த promotee அதிகாரிகளுக்கும்
GATE தேர்வில் தேறி BSNLல் வேலைக்கு வரும் பொறியியல்
பட்டதாரி இளைஞர்களுக்குமான பாரதூரமான
வேறுபாட்டை கணக்கில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.
இதற்கு மேல் இதை விளக்க விரும்பவில்லை. நீங்களே
சிந்தித்துப் பாருங்கள்.

Unceremonious exit என்பதை இந்த VRS 2019 தடுக்கிறது.
இது ஊழியர்களை விட அதிகாரிகளுக்கே அதிகப்பயன்
அளிக்கும் வாய்ப்பு.

மென்மேலும் அறிவியல்-தொழில்நுட்ப மயமாகும்
BSNL நிறுவனம் அதற்கேற்ற கல்வித் தகுதியம்
தொழில்நுட்ப அறிவும் கொண்ட ஊழியர்கள் மற்றும்
அதிகாரிகளை வேண்டி நிற்கிறது. ஏற்கனவே BSNLல்
1.10.2000த்துக்குப் பின்னர் வேலைக்கு வந்த, BSNLல்
நேரடி நியமனம் செய்யப்பட ஊழியர்கள்-அதிகாரிகளுக்கும்,
DOTயில் இருந்து வந்த Lower rank promotee அதிகாரிகளுக்கும்
இடையே மனக்கசப்பும் வெறுப்புணர்வும் நிலவி வருகின்றன.
இது VRS 2019ன் மூலமாக மட்டுமே களையப்பட முடியும்.

யாரினும் கூடுதலாக, அதிகாரிகளுக்கே இந்த VRS 2019
திட்டம் வரப்பிரசாதமாக உள்ளது.

எனவே 50 வயதான ஊழியர்களும் அதிகாரிகளும்
BSNL VRS 2019ஐ ஏற்றுக் கொண்டு, விருப்ப ஒய்வு
பெறுவதே சாலச் சிறந்தது என்று நியூட்டன் அறிவியல்
மன்றம் தெளிவு படுத்துகிறது. இதனால் எதிர்காலத்தில்
பாதகங்கள் விளைய வாய்ப்பில்லை. அப்படி ஏதேனும்
ஏற்படினும், 80,000 பேரைக் கொண்ட ஒரு கூட்டம்
கணிசமான கூட்டு பேர சக்தியைத் தன்னகத்தே
கொண்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தக் கட்டுரையில் கூறப்படும் வழிகாட்டுதல்கள்
DOTயில் இருந்து BSNLக்கு வந்தவர்களுக்கு மட்டுமே
பொருந்தும். அதிகாரிகளைப் பொறுத்த மட்டில்
DOTயில் இருந்து BSNL க்கு வந்த Promotee officersக்கு
மட்டுமே பொருந்தும். இதைக் கவனத்தில் கொள்க.
********************************************************


    
     
  .          




         
        

சனி, 23 நவம்பர், 2019

BSNL VRSஐ ஊழியர்கள் ஏற்கலாமா வேண்டாமா?
ஆயிரம் பூகம்பங்களுக்குச் சமமான
எமது வழிகாட்டும் கட்டுரை!
------------------------------------------------------------------------- 
BSNL VRS குறித்த எமது ஆகத்தெளிவான விளக்கக்
கட்டுரை இன்னும் எட்டு மணி நேரத்தில் வெளியாகும்.
தற்போது நேரம் 1915 Hours/ 23.11.2019.

எமது கட்டுரை கருத்துக்களால் ஆனதல்ல.
மாறாக தேற்றங்களால் (theorems) ஆனது.
முற்றிலும் Assertive statementsஆலும், imperative sentencesஆலும்
ஆனது. பயந்து கொண்டே எழுதுவதும், அரைகுறையாக
எதையாவது சொல்லிவிட்டுப் பதுங்குவதும் நியூட்டன்
அறிவியல் மன்றத்தின் வரலாற்றிலேயே கிடையாது.
நான் இதைச் சொல்கிறேனோ அதற்கு நான்
பொறுப்பேற்கிறேன்!

இன்று (23.11.2019)  BSNL VRS குறித்து BSNL வாரியம்
ஒரு முக்கியமான உத்தரவை வெளியிட்டு உள்ளது.
அந்த உத்தரவை அரவிந்த் வட்னேர்கர், DIRECTOR HR
வெளியிட்டு உள்ளார்.

தற்போது ஒரு கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறேன்.
வீடு திரும்பியதும் கட்டுரை வெளியிடப்படும்.
இன்று (23.11.019) BSNL Boardன் Director HR ஒரு உத்தரவை
வெளியிட்டு உள்ளார். அதைச்  சற்று முன்தான் படித்தேன்.
அதையும் உள்ளடக்கி Latest updatesஉடன் கட்டுரை
அமையும்.

ரிக்டர் அளவுகோலில் 12.4 என்ற அளவுக்கு அதிர்வை
ஏற்படுத்த வல்ல அக்கட்டுரையைப் படிக்கத்
தயார் ஆகுங்கள் தோழர்களே!
(ரிக்டர் அளவுகோல் ஒரு open scale என்பதை
மனதில் கொள்க.)
**************************************************

 
     
மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில்
இட ஒதுக்கீட்டுக்குக் கொள்ளி வைத்தது யார்?
ALL INDIA QUOTAவில் OBCக்கு 2 சத ஒதுக்கீடு வேண்டும்!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------  
மருத்துவ முதுநிலைப் படிப்புக்குரிய (எம்.டி, எம்.எஸ்)
நீட் முதுநிலைத் தேர்வு (NEET PG 2020) விண்ணப்பங்களை 
தேசியத் தேர்வு வாரியம் பெற்று வருகிறது. ஜனவரி 5 அன்று
தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள்
ஜனவரி 31 அன்று வெளியாகும் என்றும் தேசியத் தேர்வு
வாரியம் (NBE National Board of Examinations) அறிவித்து உள்ளது.

இந்த முதுநிலை மாணவர் சேர்க்கையில், அகில இந்திய
ஒதுக்கீட்டுக்கு (All India Quota) உரிய இடங்களில், இதர
பிற்பட்ட வகுப்பினருக்கு (OBC) 27 சத இட ஒதுக்கீடு
வழங்கப் படவில்லை என்று திடீரெனக் கண்டு பிடித்த சிலர்
கூச்சலிட்டு வருகின்றனர்.

இப்படி திடீர்க் கூச்சலிடுவோர் எவரும் இட ஒதுக்கீட்டின்
ஆதரவாளர்கள் அல்லர் என்றும் இவர்கள் பிற்பட்ட
வகுப்பினர் மீதான மெய்யான கரிசனமோ அக்கறையோ
இல்லாத வெறும் போலிகள் என்றும் நியூட்டன் அறிவியல்
மன்றம் அடித்துக் கூறுகிறது.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் (All India Quota)
இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இன்று நேற்றல்ல,
கடந்த 13 ஆண்டுகளாகவே இட ஒதுக்கீடு இல்லை.
இது 14ஆவது ஆண்டு. கடந்த 13 ஆண்டுகளாக
ரிப் வான் விங்கிளாக (Rip Van Winkle) தூங்கிக் கொண்டிருந்த
இந்த மூடர்கள் இப்போது தீடீரென போதை கலைந்து
எழுந்து OBCக்கு ரிசர்வேஷன் இல்லை என்று வாய்
குளறுகிறார்கள்.

யாம் மீண்டும் கூறுகிறோம்! 2007ஆம் ஆண்டு முதலாகவே
அகில இந்திய ஒதுக்கீட்டுக்குரிய இடங்களில் (All India Quota)
இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 27 சத இட ஒதுக்கீடு
வழங்கப் படுவதில்லை.  

அப்படியானால் பிற்பட்ட வகுப்பினருக்கான இந்த
27 சத இட ஒதுக்கீட்டுக்குக் கொள்ளி வைத்தது யார்?
வேறு யாருமல்ல, டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள்தான்.

டாக்டர் மன்மோகன்சிங் பிரதமராக இருந்த ஐக்கிய
முற்போக்கு கூட்டணி-1ன் (UPA-1) ஆட்சிக் காலத்தில்தான்
மருத்துவப் படிப்பில் இளநிலை முதுநிலை (UG and PG,
அதாவது MBBS மற்றும் MD/MS) இரண்டிலும் உள்ள
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் மட்டும்
இதர பிற்பட்ட வகுப்பினருக்கு மட்டும் 27 சத இட
ஒதுக்கீடு மறுக்கப் பட்டது. அதே நேரத்தில் SC, ST
வகுப்பினருக்கு உரிய 15 சதம் மற்றும் 7.5சதம்
தடையின்றி வழங்கப் பட்டது. இது வரவேற்கத் தக்கது.

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு உரிய (All India Quota)  
இடங்கள் என்றால் என்ன என்று தெளிவாகத் தெரிந்து
கொள்ளாமல் இந்தக் கட்டுரையைப் புரிந்து கொள்ள
முடியாது.

இந்தியாவில் 29 மாநிலங்கள் (370ஆவது பிரிவு ரத்துக்கு
முன்பு) இருந்தன. இவற்றில் ஜம்மு காஷ்மீர், ஆந்திரா,
தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்கள் நீங்கலாக,
மீதியுள்ள 26 மாநிலங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு
இடங்களை வழங்குகின்றன. தங்கள் மாநிலங்களில்
உள்ள மொத்த மருத்துவ இடங்களில் MBBS, BDS
படிப்பில் 15 சதம் இடங்களை மத்தியத் தொகுப்புக்கு
வழங்குகின்றன. முதுநிலைப் படிப்பில் (MD,MS)
50 சதம் இடங்களை வழங்குகின்றன.   

இவ்வாறு 26 மாநிலங்கள் சேர்ந்து மத்தியத் தொகுப்புக்கு
வழங்கும் இடங்களே அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள்
ஆகும். இந்த இடங்களில் SC, ST வகுப்பினருக்கு இட
ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால்
ஓர வஞ்சனையாக பிற்பட்ட வகுப்பினருக்கு மட்டும்
இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது.

ஒரு கண்ணில் வெண்ணெயும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும்
வைக்கும் இந்தக் கயமை டாக்டர் மன்மோகன் சிங்
காலத்தில் தொடங்கியது. அவரின் ஐமுகூ-2 காலத்திலும்
தொடர்ந்தது. பின்னர் மோடி-1 மற்றும் மோடி-2  ஆட்சிக்
காலத்திலும் தொடர்ந்து  நீடித்து வருகிறது.

உங்களுக்குத் தெரியாத இன்னொரு முக்கியமான செய்தி
ஒன்றைச் சொல்கிறேன்; கேளுங்கள். மருத்துவப் படிப்பில்
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், பிற்பட்டோரின்
இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டியபோது, மருத்துவத்
துறைக்கு அமைச்சராக இருந்தவர் யார் தெரியுமா?

மிகவும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த டாக்டர் அன்புமணி
ராமதாஸ் அவர்கள்தான். அவர்தான் அப்போது (2004-2009)
Health Minister! தான் அமைச்சராக இருந்தபோது
ரிப் வான் விங்கிளாக இருந்து விட்டு, இன்று புரட்சிக்
குரல் கொடுக்கிறார் அன்புமணி!

டாக்டர் மன்மோகனின் அமைச்சரவையில் (2004-2009)
சமூகநீதிக் காவலர் லல்லு பிரசாத் யாதவ் இருந்தார்.
அவர் ரயில்வே அமைச்சர்.

திமுகவில் இருந்து ஏகப்பட்ட பேர் அப்போது
அமைச்சர்களாக இருந்தனர். இன்று நாடாளுமன்றத்தில்
போலி வேஷம் போடும் டி. ஆர் பாலு, தயாநிதி மாறன்
ஆ ராசா ஆகியோர் காபினெட் அமைச்சர்களாக
இருந்தனர். பழனி மாணிக்கம், ராதிகா செல்வி
என்று பட்டியல் நீள்கிறது. இவர்கள் அனைவருமே
பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பினர்தான். இருந்தும்
பிற்பட்டோரின் ஒதுக்கீட்டைப் பெற முயற்சி செய்யவில்லை.

அடுத்து ஐமுகூ-2 ஆட்சிக்காலம். அதாவது 2009-2014.
இந்த ஆட்சி முழுவதும் பழைய அவலம் தொடர்ந்து
நீடித்தது. தமிழ்நாட்டில் உள்ள 39 முண்டங்களில்
எந்த முண்டமும் குரல் கொடுக்கவில்லை.
"பாராளுமன்றம் ஒரு பன்றித் தொழுவம்"
(Parliament is a pig sty) என்று லெனின் எவ்வளவு
தீர்க்க தரிசனத்துடன் சொல்லி இருக்கிறார்!

மோடியின் 2014-2019 ஆட்சிக் காலத்தில், திமுக எம்பிக்கள்
திருச்சி சிவா, கனிமொழி ஆகியோர் ஓரினச் சேர்க்கைக்கு
ஆதரவாகவும் திருநங்கைகளுக்கு ஆதரவாகவும்
தங்களின் ஆற்றல் முழுவதையும் செலவிட்டனர். இது
வரவேற்கத் தக்கதுதான் என்றாலும் உயிராதாரமான
பிற்பட்டோர் இட ஒதுக்கீடு குறித்து அவர்கள்
கவலை கொள்ளவில்லை.

நன்றறி வாரில் கயவர் திருவுடையார்
நெஞ்சத்து அவலம் இலர்.

2008ல் மருத்துவச் சேர்க்கையில் பிற்பட்டோருக்கு
ஒதுக்கீடு என்ற கோரிக்கையை முன்வைத்து
ஒரு வாயில் கூட்டத்தையும் பெருந்திரள்
ஆர்ப்பாட்டத்தையும் எங்கள் அலுவலகத்தில்
நடத்தினேன். அப்போது நான் எங்கள் தொழிற்சங்கத்தின்
மாவட்டச் செயலாளராக இருந்தேன். ஸ்டான்லி
மருத்துவ மனையில் இருந்து ஒரு மருத்துவரை
அழைத்து வந்து கூட்டத்தில் பேச வைத்தேன்.

என்றாலும் தொழிலாளர்கள் மத்தியில் அக்கோரிக்கை
வரவேற்பைப் பெறவில்லை. நீதிமன்றத்தில் வழக்குப்
போடலாமே என்றார் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒரு
பொதுஜனம். அதற்கு நான் வாய்க்கரிசிக்கு
எங்கே போவேன்?

மாதம் ரூ 1 லட்சம் சம்பளமும் பல்வேறு படிகளாக
மேலும் 2 லட்சமும் இலவச விமானப் பயணமும்
இன்ன பிற வசதிகளையும் அனுபவிக்கும் தமிழகத்து
நாடாளுமன்ற உறுப்பினர்கள்  சோம்பித் திரியும்போது
வசதியற்ற நான் எப்படி வழக்குப் போட  முடியும்?

2005ல் 93ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம்
நிறைவேறியது. அதன்படி ஷரத்து 15ல் உட்பிரிவு 5
சேர்க்கப் பட்டது.

அதில் “Nothing in this article or in sub-clause (g) of 
clause (1) of article 19 shall prevent the State from making any 
special provision, by law, for the advancement of any socially 
and educationally backward classes of citizens or for the 
Scheduled Castes or the Scheduled Tribes in so far as such 
special provisions relate to their admission to educational 
institutions ............." என்று இருக்கிறது.   

இதன்படி, OBCக்கு உரிய 27 சத ஒதுக்கீட்டை 
நடப்பு நாடாளுமன்றத் கூட்டத் தொடரிலேயே  
கொண்டு வர முடியும்.நிச்சயம் முடியும் என்று 
நியூட்டன் அறிவியல் மன்றம் அடித்துக் கூறுகிறது.
----------------------------------------------------------------------   
பின்குறிப்பு: 
1) ரிப் வான் விங்கிள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
2) இடஒதுக்கீடு குறித்த அரசமைப்புச் சட்டத்தின் 
ஷரத்துகளைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
3) அரங்கின்றி வட்டாடுதல் கூடாது.

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய 
நூலின்றிக் கோட்டி கொளல். 
***********************************************************
   

வெள்ளி, 22 நவம்பர், 2019

PERCENTILE VS PERCENTAGE
A percentile rank tells how well a candidate did in comparison to other
candidates, while a percentage rank explains how well a candidate did in the
test itself. Percentile never gives the detail of the marks that you have
scored instead it just tell you about your merit position among the number
of candidates who have appeared in the test with you. For example, a
candidate might answer 85 percent of questions correctly and rank in the
99th percentile which means that percentile is not related to the percent of
correct answers a student gets on a test.
Percentile ranks are commonly used to clarify the interpretation of marks
on standardized tests. For example, a test mark that is greater than or equal
to 80% of the marks of candidates taking the test is said to be at the 80th
percentile, where 80 is the percentile rank.
Whereas percentage of mark is simply calculated based on the mark
obtained out of the maximum mark in the test. For example, a test mark of
75% in a test with a maximum mark of 1000 indicates a mark of 750. The
percentage of marks is not affected by the candidate’s merit position in
comparison to other candidates who took the test.
இலங்கையில் ரூ 25,000 கோடி முதலீடு!
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கிறார்
ஈழப்போராளி திமுகவின் ஜகத் ரட்சகன்!
சிங்கள இனவெறி ராஜபக்சேவுடன் நல்லுறவு!
----------------------------------------------------------------------
கடல் கடந்து தொழில் செய்வது தமிழனின்
மேன்மையன்றோ! இந்த மேன்மைக்குரிய
ஜகத் ரட்சகனை வாயார வாழ்த்துவது
தமிழனின் கடமையன்றோ!

ஐயா, சில ஈழத் தமிழ்ச் சொறிநாய்கள் குரைக்கும்தான்!
அதைப் பார்த்தால் நடக்குமா?
சிங்களத்தில் தமிழனின் மூலதனம் பாதுகாக்கப்படும்
என்று உறுதியளித்த ராஜபக்சேவுக்கு
நல்லதொரு சிலை வைப்போம் தமிழனின் ஊரில்!

3.8 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு
செய்யும் திமுக தொழிலதிபரே, நீவிர் வாழி!

இனி என்னடா பாக்கி இருக்கிறது வேசி மகன்களே!
சென்னையில் ராஜபக்சேவுக்குச் சிலை எப்போதடா
அமைக்கப் போகிறீர்கள்?
-----------------------------------------------------------------------------

மருதுபாண்டியன்