வெள்ளி, 6 மார்ச், 2020

அன்புள்ள திரு அன்னம் அரசு,

கட்டுரை நன்றாக வந்திருக்கிறது.
குறிப்பாக ஒரியன் ராசி மண்டலத்தின் (constellation)
படம் அற்புதம். அதன் தோள்பட்டையில்தான் திருவாதிரை
நட்சத்திரம் இருக்கிறது.

பக்கம்-14 கடைசிப் பத்தியில்,
பூமத்திய ரேகைப் பகுதியில் திருவாதிரை வருகிறது
என்ற வாக்கியத்தில், celestial equatorல் வருகிறது என்று
பொருள். அதற்கு சரியான தமிழ்ச்சொல் புழக்கத்தில்
இல்லை. எனவே ஆங்கிலச் சொல்லையே பயன்படுத்தி
இருக்கலாம் என்று கருதுகிறேன்.

Astronomyயில் equator என்பது எப்போதுமே
celestial equatorஐக் குறிக்கும்.   

எனினும் பூமியின் equatorன் விஸ்தரிப்பே
celestial equator ஆகும். இரண்டுமே ஒரே தளத்தில்
உள்ளவைதான். இரண்டுமே கற்பனையானவைதான்.
புரிதலுக்காக  உருவாக்கப்பட்டவைதான்.

மிக்க நன்றி.
அன்புடன்
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
மொபைல்: 94442 30176.
   
=========================================================
திருவாதிரை நட்சத்திரம் வெடித்துச் சிதறுகிறது!
27 நட்சத்திரத்தில் ஒன்று குறைந்து 26 ஆகுமா?
நிரந்தர இருட்டில் சோதிடர்களின் எதிர்காலம்!
குங்குமம் ஏட்டில் நியூட்டன் அறிவியல் மன்றம் விளக்கம்!
---------------------------------------------------------------------------------------
பார்க்க: குங்குமம் ஏடு 13.03.2020, பக்கம்-100-104.

திருவாதிரை நட்சத்திரம் அழிந்து விட்டால்,
27 நட்சத்திரங்களில் ஒன்று குறைந்து 26 ஆகி விடும்.

தற்போது 27 நட்சத்திரங்களும் 12 ராசி மண்டலங்களில்
(12 Zodiac constellations) அடங்கி உள்ளன. ஒரு ராசிக்கு
இரண்டேகால் நட்சத்திரம் என்பது கணக்கு.
( 12 x 2.25 = 27). கால் பாக நட்சத்திரம் என்பதை
ஒரு பாதம் என்று கொள்வார்கள். இதன்படி ஒரு
ராசிக்கு 9 பாதம் வரும்.

தற்போது 26 நட்சத்திரம் என்று குறைந்து விட்டால்,
12 ராசிக்கு 26 நட்சத்திரத்தைப் பங்கிடும்போது,
ஒரு non terminating rational number வருமே! இந்நிலையில்
நமது சோதிடர்கள் என்ன செய்வார்கள்?

இவ்வாறு பற்பல கேள்விகளுக்கு நியூட்டன் அறிவியல்
மன்றம் விளக்கம் அளித்துள்ளது.

திருவாதிரை நட்சத்திரத்தை வெறுங்கண்ணால்
பார்க்கலாம். உலகம் முழுவதும் உள்ள மக்கள்
அனைவரும் பார்க்கலாம்.

திருவாதிரை நட்சத்திரம் ஒரியன் நட்சத்திர மண்டலத்தில்
உள்ளது. ஓரியன் மண்டலம் celestial equatorல் உள்ளது.எனவே
அனைவரும் எளிதில் பார்க்க இயலும்.


*******************************************************      
5G விவகாரத்தில் மோடிக்கு டிரம்ப் நெருக்கடி!
சீனாவை ஆதரிக்கும் தயாநிதி மாறனும் ஆ ராசாவும்!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
நாடு முழுவதும் 5G அலைக்கற்றையின் பரிசோதனைகள்
(5G trials) நடந்து கொண்டிருக்கின்றன. ஜனவரி 2020ல்
இப்பரிசோதனைகள் தொடங்கின.

ஹுவாய் (HUAWEI) என்று ஒரு நிறுவனம் உள்ளது. இது
சீன நிறுவனம். மொபைல் போன்களைத் தயாரிக்கும்
நிறுவனம் இது (equipment manufacturing).

5ஜி பரிசோதனையில் ஹுவாய் நிறுவனத்தை
அனுமதிக்கக் கூடாது என்று அமெரிக்கா இந்தியாவிடம் 
வற்புறுத்தியது. ஆனால் மோடி அரசு அதை ஏற்கவில்லை.
தற்போது ஹுவாய் நிறுவனம் இந்தியா முழுவதும்
வாய்ப்புள்ள இடங்களில் 5ஜி trialsஐ நடத்திக் கொண்டு
இருக்கிறது.

5G trials நடத்துவதற்காக இந்த நிறுவனங்களுக்கு
5ஜி அலைக்கற்றை வழங்கப் பட்டுள்ளது. 5ஜி
அலைக்கற்றை இல்லாமல் 5G trials எப்படி நடத்த இயலும்?

ஹுவாய் குறித்து இந்திய முதலாளிகளின் தீண்டாமை?!
-------------------------------------------------------------------------------------------
இந்திய முதலாளிகள் ஹுவாய் ஆதரவு, ஹுவாய் எதிர்ப்பு
என்று இரண்டு பிரிவாக உள்ளனர்.
ஹுவாய் ஆதரவுக் கூட்டணி: இதில் வோடாபோன் மற்றும்
ஏர்டெல் (Vodafone and Airtel) முதலாளிகள் உள்ளனர்.
வோடாபோன் ஒரு பிரிட்டிஷ் நிறுவனம். இதனுடன்
merge ஆகி விட்டார் பிர்லா.

ஹுவாய் எதிர்ப்புக் கூட்டணியில் மேதகு முகேஷ் அம்பானி
இருக்கிறார். அவர் சாம்சங் நிறுவனத்துடன் கூட்டணி
ஏற்படுத்தி உள்ளார். சாம்சங் என்பது எந்த நாட்டு
நிறுவனம்? வாசகர்கள் பதிலளிக்கலாம். பதில்
தெரியாதவர்கள் முகநூலில் உள்ள கிராம்சியவாதிகளிடம்
கேட்டு அறியலாம்.

முந்திய வாக்கியத்தில் உள்ள பகடியை உங்களால்
புரிந்து கொள்ள இயலுமெனில், உங்களின் IQ = 100
என்று நீங்கள் முடிவு செய்யலாம்.

முதலிடத்தில் உள்ளதா தமிழ்நாடு"
-----------------------------------------------------
இந்தியாவிலேயே 5G trials குறித்து முழுவீச்சில்
விவாதம் நடக்க வேண்டிய இடம் தமிழ்நாடு.
ஏன்? தொலைதொடர்பு அமைச்சர்களாக முன்பு
இருந்த இரண்டு பேர் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றனர்.
1) தயாநிதி மாறன்
2) ஆ ராசா
இவ்விருவரும் தற்போது எம்பிக்களாக இருக்கின்றனர்.

எனவே தமிழ்நாட்டில் ஒவ்வொரு கட்டணக்
கழிப்பிடத்திலும், ஒவ்வொரு சாராயக் கடையிலும்
5G trials குறித்து தீவிரமான விவாதம் நடக்க
வேண்டும். ஆனால் 5ஜி குறித்த எந்த அறிவோ
புரிதலோ இல்லாமல் இருக்கிற கூட்டம்
தமிழ்நாட்டில்தான் அதிகம்.

இந்து முஸ்லீம் பிரச்சினையை மட்டும்தான் தமிழ்நாட்டில்
பேச வேண்டும் என்பது இங்குள்ள "முற்போக்கு"களின்
எழுதப்படாத சட்டம். 5ஜியை அடுத்து 6ஜி, 7ஜி வந்தாலும்
இங்குள்ள போலி முற்போக்கு இந்து முஸ்லீம்
பிரச்சினையைத்தான் பேசிக்கொண்டு இருப்பான்.

இந்தக் கட்டுரையைப் படித்து விட்டு, திருச்சியில்
இருந்து ஒரு பெரிய மனிதர், "தயாநிதி மாறனையும்
ஆ ராசாவையும் குறிப்பிட்ட நீங்கள், ஏன் என் பெயரை
விட்டு விட்டீர்கள்?" என்று உரிமையுடன் கோபித்துக்
கொண்டார். யார் அவர்?

அவர்தான் திருநாவுக்கரசர். இவர் தற்போது காங்கிரஸ்
கட்சியில் இருக்கிறார் என்று நம்புகிறேன். இவரும்
தொலைதொடர்புத் துறையில் அமைச்சராக
இருந்தவர்தான். ஆனால் இணை அமைச்சராக
இருந்தார். எப்போது 2003-04 காலத்தில். ஆம், வாஜ்பாய்
அவர்களின் பாஜக அரசில் அமைச்சராக இருந்தார்.
இந்தியாவில் உள்ள எல்லாக் கட்சிகளிலும் இவர்
இருந்து விட்டார். இவர் அமைச்சராக இருந்த
காலம், தொழில்நுட்பத்தைப் பொறுத்து  ஹைதர் அலி
காலம். எனவேதான் இவரைச் சேர்க்கவில்லை.

அடுத்து ஒரு முக்கியமான செய்தியுடன் இக்கட்டுரையை
நிறைவு செய்யலாம்.இது பொருளுற்பத்தி பற்றிய
கட்டுரை. பண்பாட்டு விவகாரங்களை நான்
எழுதுவதில்லை. அது கிராம்சியவாதிகளின் ஏரியா.
5G trials குறித்து நான் எழுதாவிட்டால் வேறு யாரும்
எழுதப் போவதில்லை. எனவே நான் எழுதித் தொலைக்க
வேண்டி உள்ளது.

பொருளுற்பத்தி பற்றிய கட்டுரைகள் ஆங்கிலத்தில்
மட்டுமே உள்ளன. ஒரு வறண்ட நடையில் இக்கட்டுரைகள்
இருக்கும். ஆனால் நான் மிகவும் சுவாரஸ்யமான
நடையில் எழுதி, இதில் உள்ள செய்திகள் உங்களின்
மூளையில் பதியும் வண்ணம் எழுதி உள்ளேன்.  

சரி, அந்த முக்கியமான செய்திக்கு வருவோம்.
இந்தச் செய்தியின் கதாநாயகர் ஜே சென் என்பவர்.
இவர் ஹுவாய் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவர்.
(Jay Chen, CEO, Huawei India).

5G trialsஐ ஒட்டி டெல்லியில் இவர்
1) புரட்சியாளர் தயாநிதி மாறன்
2) புரட்சியாளர் ஆ ராசா
ஆகிய இருவரையும் சந்தித்து உரிய மரியாதை
செய்தார். உரிய மரியாதை என்றால், தயாநிதி மாறனைப்
பொறுத்து அது ராஜ மரியாதைதான் என்பதை
நுண்மாண் நுழைபுலம் உள்ளவர்கள் அறிவார்கள்.
இத்தகைய மரியாதை நிமித்தமான சந்திப்புகளை
வரவேற்போம்.
***************************************************** 





 
     
 
  

        

வியாழன், 5 மார்ச், 2020

எல் ஐ சிக்கு ஆபத்தா?
தேசத்தின் பொருளுற்பத்தியில் எல்ஐசியின் பங்கு!
இந்தியப் பொருளுற்பத்தி பற்றிய கட்டுரை!
---------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
இன்சூரன்சில் இரண்டு வகை உண்டு.
1) ஆயுள் இன்சூரன்ஸ் (life insurance)
2) பொது இன்சூரன்ஸ் (general insurance)
பொது இன்சூரன்ஸில் life தவிர மீதி அனைத்தும்
அடக்கம்.

ஆயுள் இன்சூரன்ஸ் என்றால், ஒருவர் இறந்து போனால்
பணம் தருவது. இந்தியாவில் ஆயுள் இன்சூரன்ஸ்
வழங்கும் உரிமை இரண்டே இரண்டு நிறுவனங்களுக்கு
மட்டுமே இருந்தது. அவ்விரண்டும் அரசு நிறுவனங்கள்.

அ) எல் ஐ சி
ஆ) பி எல் ஐ (PLI = Postal Life Insurance)
PLI வழங்கும் ஆயுள் இன்சூரன்ஸ் அரசு ஊழியர்களுக்கு
மட்டுமே. இதை மத்திய அரசின் அஞ்சல் துறை வழங்குகிறது.

எல்ஐசியின் ஏகபோகம் இருந்தபோதிலும், காங்கிரஸ்
ஆட்சியின்போது,தனியார் நிறுவனங்களும்
இன்சூரன்ஸில் அனுமதிக்கப் பட்டிருந்தன.
ஆனால் ஆயுள் இன்சூரன்சு ((life) வழங்க அனுமதிக்கப்
படவில்லை. பீர்லெஸ் (Peerless) என்னும் தனியார்
இன்சூரன்ஸ் நிறுவனம் அப்போது மிகவும் பிரபலமாக
இருந்ததை பொருளுற்பத்தியில் அக்கறை உள்ளவர்கள்
அறிவார்கள். இது பின்னர் நொடித்துப் போனது.             

இன்சூரன்சில் அரசின் ஏகபோகத்தை அடித்து நொறுக்கிய
"தலைசிறந்த" புண்ணியவான்கள் நாலு பேர்.

1) புண்ணியவான் நரசிம்மராவ்
2) புண்ணியவான் பிரணாப் முகர்ஜி
3) புண்ணியவான் டாக்டர் மன்மோகன் சிங்
4) புண்ணியவான் ப சிதம்பரம்.
(ப சிதம்பரத்தைச் சேர்க்காமல் இந்தியாவில்
புண்ணியவான்களின் பட்டியலைத் தயாரிக்க முடியாது)

உலகமயக் கொள்கைகளுக்குப் பின், தனியார்
நிறுவனங்களுக்கும் ஆயுள் இன்சூரன்ஸ் (life) வழங்கும்
உரிமையை காங்கிரஸ் அரசு வழங்கியது. இதன்
விளைவாக புற்றீசல் போல் பல தனியார் நிறுவனங்கள்
எல்ஐசிக்குப் போட்டியாக ஆயுள் இன்சூரன்ஸ்
வழங்க முன்வந்தன.

ஆனால் இந்த நிறுவனங்களை மக்கள் சீந்தவில்லை.
இவர்களை நம்பி இவர்களிடம் ஆயுள் இன்சூரன்ஸ்
பாலிசி எடுக்க எவரும் முன்வரவில்லை. இன்சூரன்ஸ்
என்பது பரஸ்பர நம்பிக்கை (mutual trust) சார்ந்தது.

அந்நிய நாட்டு நிறுவனங்களுடன் tie up செய்து கொண்ட
இந்த நிறுவனங்களை மக்கள் புறக்கணித்ததால்
நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டன.
நிறுவனம் நடத்த முடியாமல் தோல்வி அடைந்த
பல முதலாளிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

தனியார் நிறுவனங்களால் எல்ஐசிக்கு ஆபத்தா?
ஒருபோதும் இல்லை; மாறாக எல் ஐ சியை எதிர்த்து
நின்றவன் எவனும் வாழ முடியாது என்ற நிலைதான்
உள்ளது.
      
இந்தியப் பொருளுற்பத்தியின் கடவுள் எல் ஐ சிதான்.
இந்தியாவின் தங்கச் சுரங்கம் எல் ஐ சிதான்.
மத்திய அரசு தனது ரயில்வே நவீனமயத் திட்டங்களுக்கு
எல் ஐ சியிடம் இருந்துதான் பணம் பெறுகிறது.
அரசாங்கத்துக்கே கடன் கொடுக்கும் கடவுள்
எல் ஐ சிதான்.

பொதுத்துறை வங்கிகள் ஊருக்கெல்லாம் கடன்
கொடுக்கின்றன. அவர்களுக்குக் கடன் வேண்டுமென்றால்
அதைக் கொடுப்பது எல்ஐசிதான்.

எல் ஐ சி குறித்து நிறைய எழுத வேண்டும். அது இப்போது
இயலாது. போன மாதம் ஒரு தொழிற்சங்கக் கூட்டத்தில்
எல் ஐ சி குறித்து உரையாற்றினேன். அது வெளி மாநிலத்
தோழர்கள் பங்கெடுத்த கூட்டம் என்பதால், ஆங்கிலத்தில்
ஆற்றிய உரை அது. எனவே அதைச் சேமித்து
வைக்கவில்லை.

இந்தியப் பொருளுற்பத்தியில் எல் ஐ சியின் பாத்திரம்
பற்றி மார்க்சிய லெனினிஸ்டுகளின் கருத்து என்ன?
இது குறித்து மா லெ அமைப்பினர் யாரவது ஏதாவது
எழுதி இருக்கின்றனரா? இல்லை.

பிரபல மார்க்சிய கிராம்சிய "வினவு" என்னும் இணைய
தளத்தைப் பார்த்தேன். ஒரு குட்டி பூர்ஷ்வா ஊடகவியலாளர்
LIC பற்றிய வெறும் தக்வல்களாகத் தொகுத்த ஒரு முகநூல்
பதிவை வெளியிட்டு அத்தோடு ஓடி விட்டனர் மேற்படி
வினவு இணையதள மார்க்சிய கிராம்ஸியவாதிகள்.
சொந்தமாக எழுத, பாவம், மூளைக்கு அவர்கள் எங்கே
போவார்கள்?

பொருளுற்பத்தியில் இருந்து முற்றிலும் துண்டித்துக்
கொண்டு, வெறும் பண்பாட்டுக் கருமாந்திரங்களை
மட்டும் கட்டி அழுபவர்களாக அனைத்து மார்க்சிய
கிராம்ஸியவாதிகளும் இருக்கின்றனர் என்பதை
நான் நிரூபித்து இருக்கிறேன்.
************************************************************************


BSNL விருப்ப ஓய்வுத் திட்டம் என்பது BSNLல் உள்ள
கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களால் ஏற்றுக் கொள்ளப்
பட்ட ஒரு திட்டம். அது BSNLஐப் புத்தாக்கம் செய்யும்
திட்டத்தின் (Revival plan) ஒரு பகுதி.

BSNL தொழிற்சங்கங்கள் இந்த விருப்ப ஓய்வூத்
திட்டத்தை எதிர்த்திருந்தால், எந்த அரசாலும்
அதைக் கொண்டு வர இயலாது.இதுதான் உண்மை.
போர்க்குணமிக்க லட்சோப லட்சம் BSNL ஊழியர்களின்
முடிவை, BSNL குறித்து எதுவும் தெரியாதவர்கள்
விமர்சிப்பது அறியாமை ஆகும்.

5G ஏலம் என்பது இந்தியாவின் பொருளுற்பத்தியில்
பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.
இதைப் புரிந்து கொள்ள குறைந்தபட்ச அறிவியல்
புரிதலுடன், இன்றைய டெலிகாம் தொழிலில்
உள்ள நெருக்கடி பற்றியும் அறிந்திருக்க வேண்டும்.

இந்தியாவின் நிறுவனங்கள் 5ஜி ஏலம் எடுக்க
இயலாமல் படுத்த படுக்கையாக இருக்கும்போது,
மத்திய அரசு நடத்த விரும்பும் ஏலம் என்ன பாதிப்பை
ஏற்படுத்தும் என்று தெரியாமல் பேசுகிறீர்கள்.
அந்நிய நிறுவனங்களுக்கு இந்தியத் தொலைதொடர்பை
தாரை வார்த்துக் கொடுப்பதற்கே இந்த ஏலம் என்ற
உண்மை தெரியாமல் பேசுகிறீர்கள்.

இந்தியப் பொருளுற்பத்தி பற்றி எதுவும் தெரியாமல்,
பொருளுற்பத்தியில் இருந்து துண்டித்துக் கொண்டு,
வெறும் கிராம்சியவாதியாக இருக்கிறார்கள்
என்று நான் சொல்வதற்கு, தங்களின் இந்தப்
பதிவே உதாரணமாக உள்ளது.
தோழரே, எவ்வளவு காலம்தான் இந்து முஸ்லீம்
என்று சக்தியை வீணடித்துக் கொண்டு
இருப்பீர்கள்? பொருளுற்பத்தி அரங்கத்துக்கு
வாருங்கள் என்று உங்களை அழைக்கிறேன்.


திரும்பிச் செலுத்தாத நிறுவனங்கள் ஏலத்தில்
பங்கேற்க வாய்ப்பில்லை. 5ஜி அலைக்கற்றை
வாங்க அவர்களிடம் பணம் ஏது? வங்கிகள் கடன்
கொடுக்காது என்று SBI Chairman சொல்லி இருக்கிறாரே.







 
   
சமூகத்தின் பொருளுற்பத்தி
சார்ந்து  மார்க்சிய லெனினிஸ்டுகள் எழுதிக்
குவித்த கட்டுரைகள் என்னென்ன? மேற்கொண்ட
பிரச்சாரங்கள் என்னென்ன? நடத்திய போராட்டங்கள்
என்னென்ன?

மீண்டும் மீண்டும் இந்து முஸ்லீம் என்று மதத்தைப்
பற்றியும், சாதியைப் பற்றியும், மொழி இனம்
என்று அடையாளம் சார்ந்த விஷயங்களையும்
தாண்டி என்றாவது இவர்கள் சிந்தித்தது உண்டா?

பெரும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் டெலிகாம்
துறை பற்றி இவர்கள் கருத்து என்ன? இத்துறையில்
ஏற்படும் ஏகபோகம் பற்றியோ அதைத் தடுக்கும்
முறை பற்றியோ இவர்களின் ஆலோசனை
அல்லது தீர்வு என்ன?



புதன், 4 மார்ச், 2020

பொருளுற்பத்தியில் இருந்து துண்டித்துக் கொண்டு
கிராம்சியவாதிகளாகச் சீரழிந்து போய்க்கொண்டிருக்கும்
மார்க்சிஸ்ட் லெனினிஸ்டுகளுக்கு ஒரு வேண்டுகோள்!
 ------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------
1) மொத்தத் தமிழகத்திலும், சமூகத்தின் பொருளுற்பத்தியில்
இருந்து முற்றிலுமாகத் தங்களைத் துண்டித்துக் கொண்டு
ஒரு கூட்டம் இருக்கிறது என்றால், அது தமிழகத்தின்
மார்க்சிஸ்டு லெனினிஸ்டுகள்தான்! இது உண்மை! 
உண்மை கசக்கும்! சுடும்!! என்றாலும் உண்மையை
யாரும் எதிர்த்து நிற்க முடியாது.

2) "உங்கள் பண்பாட்டின் வேர்களைக் கண்டு அடையுங்கள்.
அதிலிருந்து உங்களின் மார்க்சியம் பீறிட்டுக் கிளம்பட்டும்
என்று அறைகூவல் விடுத்தார் கிராம்சி.

3) மார்க்சியம் பொருளுற்பத்திக்கே முதன்மை தருகிறது.
சமூகத்தின் பொருளியலை மாற்றினால் பண்பாடு
தானே சுலபமாக மாறும் என்கிறது மார்க்சியம்.
எனவே மார்க்சியம் பண்பாட்டுக்கு முதன்மை
அளிப்பதில்லை.

4) மாறாக கிராம்சியம் பண்பாட்டுக்கே முதன்மை
அளிக்கிறது. அதாவது அது தலைகீழாக நிற்கிறது.
எனவே  கிராம்சியம் மார்க்சியத்துக்கு எதிரானது.
மேலும் அது அறிவியலுக்கும் எதிரானது.

5) தமிழகத்தில் உள்ள மார்க்சிஸ்டு லெனினிஸ்டுகள்
அனைவரும், விதிவிலக்கின்றி, சமூகத்தின்
பொருளுற்பத்தியில் இருந்து முற்றிலுமாகத் தங்களைத்
துண்டித்துக் கொண்டுள்ள நிலையிலேயே பல
ஆண்டுகளாக இருந்து வருகின்றனர். இது குறித்த
பிரக்ஞையும்கூட அவர்களுக்கு இல்லை என்பது
பேரவலம் ஆகும்.

கஞ்சி குடிப்பதற்கு இலார்- அதன்
காரணங்கள் இவை என்னும் அறிவும் இலார்.
......................பாரதி......................

6) பொருளுற்பத்தியோடு எவ்விதத் தொடர்பும் அற்ற
இவர்களை மார்க்சிஸ்டுகள் என்று அழைக்க இயலாது.
இவர்களை கிராம்சியவாதிகள் என்றுதான் அழைக்க
முடியும். மெய்யாகவே இவர்கள் கிராம்சியவாதிகள்தான்!

7) சாரு மஜூம்தார் காலத்திய உற்பத்தி முறை இன்று
இல்லை. இன்றைய உற்பத்தி 1970ஐ விட மிகப்
பெரிதும் நவீனமாகி உள்ளது. 1995க்குப் பின்னர்
உலகமயமாகி உள்ளது. மிக நவீனமான உற்பத்திக்
கருவிகள் இந்திய உற்பத்தியில் பயன்படுகின்றன.
இந்த மாற்றங்கள் குறித்த ஓர்மை இல்லாமல்
இருப்பது பெருத்த அறியாமை ஆகும்.

8) Fake idயில் ஒளிந்து கொண்டு, வீராவேசமாக
அடுத்தவனைத் திட்டுகிற, கோழைகள்கூட
முகநூலைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
அவர்கள் வைத்திருக்கும் ஜியோ சிம்மும் முகநூலும்
உற்பத்திக் கருவிகளே என்ற உண்மையை என்றாவது
அவர்கள் உணர்வார்களா?

9) மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு தோழர்களே,
எவ்வளவு காலம்தான் இந்து முஸ்லீம் விவகாரங்களையும்
பார்ப்பான் சூத்திரன் விஷயங்களையுமே எழுதிக்
கொண்டு இருப்பீர்கள்? இதெல்லாம் அடையாள
அரசியல் என்ற ஓர்மை வேண்டாமா? அடையாள
அரசியலைக் கட்டி அழுவது பின்நவீனத்துவர்களின்
வேலை அல்லவா?

10) இந்திய சமூகத்தின் பொருளுற்பத்தி பற்றி
உங்களுக்கு என்ன தெரியும்? எவ்வளவு தெரியும்?
என்றாவது பண்பாட்டு விஷயங்களில் காட்டும்
அக்கறையில் ஒரு சதவீதமாவது பொருளுற்பத்தியில்
காட்டி இருப்பீர்களா? உங்களின் பொருளுற்பத்தி
மீதான அக்கறைக்கு ஏதாவது ஆதாரம் காட்ட
முடியுமா?

11) இன்றைக்கு இந்தியத் தொலைதொடர்புத்துறை பெருத்த
நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இத்துறையின்
நெருக்கடியானது பிற துறைகளையும் தீவிரமாகப்
பாதிக்கும்.

12) இந்நிலையில் 5ஜி அலைக்கற்றை ஏலத்தை வரும்
ஏப்ரல் மாதத்தில் நடத்த இருப்பதாக மோடி அரசு
அறிவித்துள்ளது. மொத்த நிறுவனங்களுமே படுத்த
படுக்கையாக இருக்கும் இந்த நேரத்தில், ஏலம்
நடத்துவது சரியாக இருக்குமா? இது பற்றி எல்லாம்
மார்க்சிஸ்ட் லெனினிஸ்டுகளின் நிலைபாடு என்ன?

13) "இதுபற்றி எங்களுக்கு ஒன்றுமே தெரியாது" என்பது
உங்களின் பதிலாக இருக்குமென்றால், பொருளுற்பத்தி
பற்றிய அக்கறையே இல்லாதவர்கள் நீங்கள்
என்றுதானே பொருள்படும்! அப்படியானால்
மார்க்சிஸ்ட் கட்சி நடத்துவதற்கான உங்களின்
அருகதை என்ன?

14) வலதுசாரிகளும் வலது இடது சார்பற்ற அரசியலற்ற
ஒரு பெருங்கூட்டமுமே தற்போது பொருளுற்பத்தியில்
அக்கறை காட்டுகிறது. மா லெ முகாமில் இருந்து
மருந்துக்கு கூட ஒருவர் பொருளுற்பத்தியில்
அக்கறை காட்டுவதில்லை. இப்படி இருக்க
மக்கள் எப்படி மாலெ அமைப்புகளின் பின்
அணி திரள்வார்கள்?

15) எனவே இனிமேலாவது பொருளுற்பத்தியில்
அக்கறை காட்டுங்கள். பண்பாட்டு விஷயங்களுக்கு
பிரதான முக்கியத்துவம் அளிப்பதைக் கைவிடுங்கள்.
இல்லையேல் கிராம்சியவாதிகளாகவும், அடையாள
அரசியலை முன்னெடுக்கும் பின்நவீனத்துவர்களாகவும்
இருக்கும் நிலையில் இருந்து விடுபட முடியாமல் போகும்.
**********************************************************
   
 
 




சமூகத்தின் பொருளுற்பத்தி குறித்த அணுவளவு 

சீர்குலைந்தது சந்தைதான். ஒரு நாட்டின் உள்நாட்டுச்
சந்தை சீர்குலையும்போது அந்நாட்டின்
பொருளாதாரமும் சேர்ந்தே சீர்குலையும். இது
அடிப்படையான பொருளியல் விதி.

சந்தை சீர்குலைவது என்றால் அதுகாறும்
சந்தையில் நிலவிய equilibrium  சீர்குலைவது என்று
பொருள். இது சந்தையில் உள்ள சில பல
நிறுவனங்களை பலி கொண்டு விடும்.

அதே நேரத்தில் நுகர்வோருக்கு இந்த cut throat
competition மூலம் 1 GB data ரூ 8க்குக் (ரூபாய் எட்டு மட்டும்)
கிடைத்துள்ளது. இதை மறுக்க இயலாது.     
ஆ ராசா ரூ 1.76 லட்சம் கோடி ஊழல் புரிந்தார்
என்பது இமாலயப் பொய். இதை அன்றே உரக்கச்
சொன்னவன் நான். ஆனால் ஆ ராசா ஒரு
மீடியாக்கர் (சராசரி)  அமைச்சர். டெலிகாம் போன்ற
சிக்கலான துறையைக் கையாளும் அளவுக்கு
அவருக்கு ஆற்றலும் திறனும் இல்லை; பெரும்
பூர்ஷ்வாக்களின் தொடர்பும் இல்லை. எனவே
வெளிப்படையாக டாட்டாவுக்குச் சலுகை
காட்டி, மற்ற  ஏகபோக பூர்ஷ்வாக்களின் 
பகையைச் சம்பாதித்தார். இப்படி வெளிப்படையாகப்
பகைப்பது ஒரு அமைச்சருக்கு உகந்தது அல்ல.
இரண்டாவது ஆ ராசாவுக்கு போர்ஷ்வா கிளப்பில்
எந்த ஒரு face valueம் கிடையாது.

சரத் பவார் கபில் சிபல் லெவலில் உள்ள
அமைச்சர்கள்தான் இத்துறைக்குப் பொருத்தம்.


ஜியோவிடம் 2ஜி, 3ஜி அலைக்கற்றை எல்லாம்
கிடையாது. அவர்களிடம் high speed 4G LTE இருப்பதால்
அதிக வாடிக்கையாளர்களைப் பிடித்தனர். இன்று
Market leader ஜியோதான். இதனால் அவர்கள் மிக்க
குறைந்த விலைக்கு 1 GB data கொடுக்க முடிகிறது.
அதே நேரத்தில் இதில் கணிசமான risk எடுத்துத் தான்
கொடுத்தனர். பெரும் முதலீட்டை கண்மூடித்தனமாக
இதில் செலவழித்தார் முகேஷ் அம்பானி.

5ஜி போட்டியில் BSNL களத்திலேயே இல்லை.
5ஜி அலைக்கற்றை விலை மிகவும் அதிகம்.
அவ்வளவு பணம் செலுத்தி தேவையான அளவுக்கு
(quantum in Mega Hertz) 5ஜி அலைக்கற்றையை
வாங்கும் அளவுக்கு இன்றுள்ள நிறுவனங்களில்
ஜியோவைத் தவிர வேறு யாருக்கும் நிதிநிலைமை
சீராக இல்லை.

எனவே ஏலம் தோல்வி அடையும். அதாவது எதிர்பார்த்த
வருவாய் கிடைக்காது. இந்திய நிறுவனங்களின்
நிதி நிலைமை  சீரடைந்த பின், அடுத்த ஆண்டில்
இந்த ஏலத்தை நடத்தலாம். அலைக்கற்றையை
வாங்குவதற்குத் தேவையான நிதியைக் கடனாக
வழங்க SBI உள்ளிட்ட வங்கிகள் தயாராக இல்லை.
இதுவரை கடன் வாங்கித்தான் இந்த நிறுவனங்கள்
அலைக்கற்றையை வாங்கின.

ஒருவேளை அந்நிய நாட்டு நிறுவனங்கள்
ஏலத்தில் பங்கெடுத்து 5ஜி அலைக்கற்றையை
வாங்குமானால், அது இந்திய நிறுவனங்களுக்குத்
தோல்வியாகவே முடியும்.

ஆக எப்படிப் பார்த்தாலும் தோல்விதான்!
இந்தியாவில் நடைபெறும் ஏலத்தில், இந்திய
நிறுவனங்கள் வெற்றி பெற வேண்டும் அல்லவா?
------------------------------------------------------------------------
கோதை அம்மா,
ரூ 1.76 லட்சம் கோடி ஊழலை ஆ ராசா செய்யவில்லை
என்பது ஒரு ஒளி வீசும் உண்மை. உண்மைகள்
முரட்டுப் பிடிவாதம் கொண்டவை என்பது ஓர்
ஆங்கிலப் பழமொழி.

ஆ ராசா ஒரு மீடியாக்கர் (mediocre) அமைச்சர். அவரால்
ஒருபோதும் ரூ 1.76 லட்சம் கோடி ஊழலைச்
செய்ய இயலாது. அதற்கான சாமர்த்தியம் (IQ உட்பட)
அவரிடம் மருந்துக்கும் கிடையாது.

ரூ 1.76 லட்சம் கோடி ஊழல் புரிய வேண்டுமென்றால்
அது ஒரு சில ஜாம்பவான்களின் கூட்டு முயற்சியால்
மட்டுமே நடைபெற இயலும். அதாவது ப சிதம்பரம்,
சரத் பவார், பிரணாப் முகர்ஜி போன்ற BIG SHOTS
கூட்டுச் சேர்ந்தால் மட்டுமே ரூ 1.76 லட்சம் கோடி
அளவுக்கு ஊழல் புரிய முடியும். இந்த elite clubல்
ஆ ராசா வெறும் errand boyயாக மட்டுமே இருக்க
முடியும். அவரின் தகுதி அவ்வளவுதான். இதுதான்
உண்மை.

மற்றப்படி, ஒரு  மீடியாக்கர் மத்திய அமைச்சர்
எவ்வளவு ஊழல் புரிவாரோ, அதை ஆ ராசாவும்
புரிந்திருப்பர் என்பது goes without saying. இதை
நான் மறுக்கவில்லை; மறுப்பவனும் அல்ல.

சரி, இக்கட்டுரை ஆ ராசாவைப் பற்றியது அல்ல.
5ஜி ஏலம் குறித்த முக்கியமான கட்டுரை.
அது குறித்துப் பேசுங்கள், விவாதியுங்கள்.
     

இந்திய நிறுவனங்கள் பங்கு கொள்ளும்
அளவுக்கு வலிமை பெற்ற பிறகு, இந்த
ஏலத்தை நடத்துவதே நாட்டுக்கு நல்லது.
சீனாவின் ஹுவாய் ஏலத்தில் பங்கெடுத்து
வெற்றி பெறுமானால், அது தேசத்தின் மிகப்பெரிய
தோல்வி. இந்திய நிறுவனங்களுக்கும் மிகப்
பெரிய தோல்வி. சுதேசித் தத்துவம் சுடுகாட்டுக்குப்
போய்விடும்.

3ஜி ஏலத்தை நடத்திய ஆ ராசா நிர்ணயிக்கப்பட்ட
விலையான ரூ 30,000 கோடியை விட மிக மிக
அதிகமாக ரூ 67,000 கோடிக்கு ஏலம் விட்டார்.
இது அப்படியே அரசு கஜானாவுக்குச் சென்றது.

இன்னொரு அலைக்கற்றையும் உண்டு. அதன் பெயர்
BWA spectrum. இது 3ஜியை விட அதிக ஆற்றல்
உடைய அலைக்கற்றை. இதையும் ஆ ராசா ஏலம்
விட்டார். இதிலும் எதிர்பார்த்த விலையை விட
அதிக விலைக்கு ஏலம் போனது. அந்த வருவாயும்
அப்படியே அரசு கஜானாவில் சேர்ந்தது.


ஜியோவிடம் illegal எதுவும் இல்லை. அலைக்கற்றையை
ஜியோ வாங்கியபோது, அதுவும் legal முறைப்படியே
நடந்தது.

ஆனால் வாடிக்கையாளர்களைக் கவரவும்,
மற்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களைத்
தங்கள்பால் ஈர்க்கவும், ஜியோ கையாண்ட முறைகள்
நிச்சயமாக unfair trade practice என்ற வகையில்தான் வரும்.

போட்டியை ஒழுங்குபடுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு
என்னும் level playing fieldஐ உருவாக்கித் தருவதே
TRAI என்னும் மத்தியஸ்த அமைப்பின் வேலை.
ஆனால் டிராய் ஜியோவுக்கு சாதகமாக நடந்து
கொண்டது.

இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் குறித்தும் COMMUNICATION
குறித்தும் உள்ள சட்டங்கள் ஹைதர் அலி காலத்தவை.
நவீன காலத் தேவைகளுக்கு ஏற்ப, புதிய சட்டங்கள்
இன்னமும் இயற்றப் படவில்லை. எனவே ஜியோவின்
unfair trade practiceஐ சட்டரீதியாக முறியடிக்க
வாய்ப்பில்லை.

இந்த நிலையில் டிராய் அமைப்பு பாரபட்சமற்ற
முறையில் நடந்து கொள்ள வேண்டும். ஆனால்
டிராய் அமைப்பு ஜியோவுக்கு சாதகமாக மட்டுமே
நடந்து கொண்டது. இன்னும் சொல்ல நிறைய
உள்ளது. குறுகிய காலத்திலேயே ஜியோ
சந்தையைச் சீர்குலைத்து விட்டது.இக்காரணங்களால்
நான் ஜியோவை எதிர்க்கிறேன்.  
 
 .