ஞாயிறு, 20 மார்ச், 2022

ஷரியத் சட்டமா இந்திய அரசமைப்புச் சட்டமா 
என்ற கேள்வி எழுந்தபோது ஷரியத் சட்டத்தை 
உயர்த்திப் பிடித்த ராஜிவ் காந்தி!
---------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------- 
ஷா பானு என்று பெண்மணி. 62 வயதான மத்தியப் 
பிரதேசத்து முஸ்லிம் பெண்மணி. இவரின் கணவர் 
முகமது அகமது கான் ஒரு வழக்கறிஞர். அவர் 
1978ல் ஷா பானுவை முத்தலாக் கூறி விவாகரத்து 
செய்து விட்டார்.

தனக்கு ஜீவனாம்சம் கேட்டு இந்தூர் நீதிமன்றத்தில் 
வழக்குத் தொடுத்தார் ஷா பானு. மாதம் ரூ 25 
ஜீவனாம்சம் கொடுக்குமாறு இந்தூர் மாவட்ட 
நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வழக்கு உயர்நீதிமன்றம் 
சென்றபோது அங்கும் ஷாபானுவுக்குச் சாதகமாகவே 
தீர்ப்பு வந்தது.

வெகுண்டெழுந்த அகமது கான் உச்சநீதிமன்றத்தில் 
மேல்முறையீடு செய்தார். ஷரியத் சட்டப்படி 
ஜீவனாம்சம் அளிக்க வேண்டிய தேவையில்லை 
என்று வாதிட்டார். உச்சநீதிமன்றமும் 1985 ஏப்ரலில் 
ஷா பானுவுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஷரியத் சட்டத்துக்கு எதிரானது 
என்றும் அதை ஏற்க இயலாது என்றும் இஸ்லாமிய 
மதவெறி அமைப்புகள் போராடின. அப்போது 
ராஜிவ் காந்தி இந்தியாவின் பிரதமர்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் செல்லாதது (INVALID)
ஆக்கும் பொருட்டும், ஜீவனாம்சம் வழங்கத் 
தேவையில்லை என்று கூறும் ஷரியத் சட்டத்தை   
உயர்த்திப் பிடிக்கும் பொருட்டும் ராஜிவ் காந்தி 
ஒரு நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்திய வரலாற்றின் மாபெரும் பிற்போக்குத் 
தனமான நடவடிக்கை அது. இஸ்லாமிய அபலைப் 
பெண்களின் வயிற்றில் அடித்த நடவடிக்கை 
அது. சமூகநீதிக்கு கொள்ளி வைத்த இழிந்த 
நடவடிக்கை அது. ஆணாதிக்க வெறியின் 
வெளிப்பாடு அது.

விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு அவள் கணவன் 
ஜீவனாம்சம் வழங்க வேண்டியதில்லை என்னும் 
ஷரியத் சட்டத்தைச் செல்லுபடி ஆக்கும் விதமாக 
ஒரு சட்டம் கொண்டு வந்தார் ராஜிவ் காந்தி. முஸ்லீம் 
பெண்கள் விவாகரத்து உரிமைகள் சட்டம் 1986
என்ற பெயரிலான அச்சட்டம்  மனைவிக்கு கணவன் 
ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் 
தீர்ப்பை கடித்துக் குதறிப் போட்டது.

இச்சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள 
இஸ்லாமியப் பெண்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய 
ஒரு சிறு நிவாரணமும் இல்லாமல் போனது. இச்சட்டம் 
கொண்டுவரப்பட்ட ஐந்தே ஆண்டுக்குள் ராஜிவ் காந்தி 
செத்துச் சுண்ணாம்பாகப் போனார். ஸ்ரீபெரும்புதூரில் 
மே 1991ல் தலை வேறு முண்டம் வேறாக ரத்தச் சகதியில்
பிணமாகக் கிடந்தார் ராஜிவ் காந்தி. ஜீவனாம்சம் 
மறுக்கப்பட்ட இஸ்லாமியப் பெண்களின் வயிறு அன்று 
குளிர்ந்திருக்கும்.

ராஜிவ் காந்தியின் இந்த நடவடிக்கை முற்போக்கானது 
என்று யாராவது சொல்ல முடியுமா? முடியாது.
கடைந்தெடுத்த பிற்போக்குத்தனமான 
நடவடிக்கையே இது.

ராஜிவ் காந்தியின் இந்த நடவடிக்கை வலதுசாரிச் 
செயல்பாடா அல்லது இடதுசாரிச் செயல்பாடா?
 அதீவிர வலதுசாரிச் செயல்பாடு.

இந்த நடவடிக்கையின் மூலம் 1000 ஆண்டுகளுக்கு 
முந்திய நிலவுடைமைச் சமூக அமைப்பின் 
காலத்துக்கு நாட்டை இட்டுச் சென்றார் 
ராஜிவ் காந்தி. 

ராஜீவின் இந்த நடவடிக்கை சமூகநீதிக்கான 
நடவடிக்கையா அல்லது சமூகநீதிக்கு எதிரான 
நடவடிக்கையா? நிச்சயம் சமூகநீதிக்கு எதிரானதுதான்.

தமிழ்நாட்டில் உள்ள பல முட்டாள்கள் சமூகநீதி 
என்றால் BC/SC/ST இடஒதுக்கீடு மட்டும்தான் என்று 
நினைத்துக் கொண்டு இருக்கிறான். சமூகநீதி 
என்பது மற்ற மதப் பெண்களுக்கு உள்ள உரிமைகளை  
இஸ்லாமியப் பெண்களுக்கு மறுப்பதல்ல என்று 
தமிழ்நாட்டின் திராவிடக் கசடுகள் உணர வேண்டும்.

ராஜிவ் காந்தியின் இந்த நடவடிக்கை மதச்சார்பின்மை 
எனப்படும் செக்க்யூலரிஸத்தில் வருமா? வராது. 
இது முற்ற முழுக்க இஸ்லாமிய மதவெறிக்கு 
ஆதரவான நடவடிக்கை. எனவே ராஜிவின் இந்த
நடவடிக்கை போலி மதச்சார்பின்மையில் வரும்.
 
  
    
   

. 

சனி, 19 மார்ச், 2022

 உங்கள் கவனத்துக்கு சில உண்மைத் தகவல்கள்!

21-5-1991 அன்று ராஜீவ் காந்தி ஸ்ரீ பெரும்புதூரில் சதிகாரர்களால் கொல்லப்பட்டார். அதற்கு சரியாக, “ஒரே மாதம் கழித்து”, அதாவது 21-6-1991 அன்று, “ராஜீவ் காந்தி பவுண்டேஷன் ( Rajiv Gandhi Foundation) ” என்று ஒரு “என் ஜி ஓ ( NGO)” அறக்கட்டளை டில்லியில் ஆரம்பிக்கப் படுகிறது! சோனியா தான் அதற்குப் பொறுப்பு!
1993-ல், ராஜீவ் காந்தி ஃபௌண்டேஷனுக்கு, ஒரு கிளை ( Branch) இங்கிலாந்தில் ஆரம்பிக்கப் படுகிறது. சோனியா காந்தி முன்னிலையில் இதற்கான “பிரேரணையை ( Motion) ", பிரிட்ட்ஷ் அரசு நிறைவேற்றுகிறது!
அதே ஆண்டு, சோனியா, அமெரிக்கா சென்று, அங்கும் “ராஜீவ் காந்தி ஃபௌண்டேஷன் கிளை ஒன்றைத் துவக்க ஏற்பாடுகளை செய்கிறார்.
இதே 1993-ல், “ ஜார்ஜ் சோரோஸ் ( George Zoros) ” என்னும் அமெரிக்கக் கோடீஸ்வரரும், அமெரிக்காவின் நியூயார்க்கில், “ஓப்பன் சொஸைட்டீஸ் ஃபௌண்டேஷன் (Open Societies Foundation ) ” என்னும் பெயரில் ஒரு அறக்கட்டளையை ஆரம்பிக்கிறார்! ( இவர் தான் இப்போது மோடிஜிக்கு எதிராகவும், பா ஜ க ஆட்சிக்கு எதிராகவும், இந்தியாவில் பல குழப்பங்களை விளைவிக்க, ஏராளமான நிதி உதவியை செய்து வருவதாக சொல்லுகிறார்கள்! விவசாய தரகர் போராட்டத்தை நடத்தப் பணம்கொடுத்ததும் இவரே! காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் நிதி போவதாக சொல்லுகிறார்கள்)
1994, டிசம்பரில், “ஏஷியா பஸிபிக்கின் ஜனநாயகத் தலைவர்களின் மன்றம் (Asia Pacific Democratic Leaders Forum ) ” என்னும் ஒரு “ அரசு சாரா அமைப்பு ( NGO ) ” ஆரம்பிக்கப் படுகிறது. இதன் குறிக்கோள், “சுதந்திர காஷ்மீர்” என்பதாகும். ராஜீவ் காந்தி பவுண்டேஷனின் தலைவி என்ற முறையில், சோனியா, இந்த அமைப்பின் இணைத் தலைவி ஆகிறார். (ஆம்! காஷ்மீரைத் தனி நாடாக்க முயலும் ஓர் அமைப்பில் சோனியா உறுப்பினர்!)இதில் உள்ள மற்ற உறுப்பினர் அனைவரும் “அமெரிக்க தாஸர்கள்”. இதற்கு பெரும் நிதி அளித்துள்ளது, நான் முன்னால் குறிப்பிட்டுள்ள “ஓப்பன் சொஸைட்டீஸ் ஃபௌண்டேஷன் “ தலைவர் ஜார்ஜ் சோரோஸ், தான் என்பது குறிப்பிடத் தக்கது!
1999-ல் 'காந்தஹார்' விமானக் கடத்தல் நடக்கிறது. அந்த விமானம் காந்தஹாரில் இறங்குவதற்கு முன், ஐக்கிய அரபு எமிரேட்ஸில், எரிபொருள் நிரப்ப தரை இறக்கப் படுகிறது. எமிரேட்ஸ் அதிகாரிகள், அமெரிக்க தூதரை, விமான நிலையத்துக்குள் அனுமதிக்கிறார்கள்; ஆனால் இந்திய தூதரை அனுமதிக்க வில்லை.
அந்த சமயத்தில் ஆப்கானிஸ்தானத்தைத் தாலிபான் ஆட்சி செய்கிறார்கள். அப்போது அமெரிக்கா , ரஷ்யாவுக்கு எதிராக தாலிபானை ஆதரிக்கிறது. முதலில் கடத்தல்காரர்கள் 36 பயங்கரவாதிகளை விடுவிக்கக் கோருகிறார்கள். பின்னர், மசூத் அஸார், உள்பட மூன்று பேரை விடுவிக்கக் கோருகிறார்கள். அந்தப் பெயர்களில் ஒன்று, “லத்தீஃப்”. ஆனால் அவர் விடுவிக்கப் பட வில்லை.இதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
அமெரிக்காவின் “ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI ) , மசூத் அஸாரை, இந்திய சிறைகளில், 1995-1998 கால கட்டத்தில் பல முறை பேட்டி (!) கண்டுள்ளது. அதற்கு அனுமதி அளிக்கப் படுகிறது. விடுதலைக்குப் பிறகு மசூத் அஸார், பாகிஸ்தான் சென்று, “ஜெய்ஷ் ஈ முஹமது” என்னும் பயங்கரவாத அமைப்பைத் துவக்குகிறார். இதன் குறிக்கோளும், காஷ்மீரை விடுவிப்பதே!
2001, ஜூன் மாதம், சோனியா அமெரிக்கா சென்று 5 நாட்கள் தங்கினார்.ஆனால் அதற்கு முன் இங்கிலாந்துக்கும், ஐஸ்லாந்துக்கும் சென்றிருந்தார். அமெரிக்காவில், சோனியா, “ கவுன்ஸில் ஆஃப் ஃபாரின் ரிலேஷன்ஸ் ( Council of Foreign Relations ) ” உடன் ரகசியக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அதன் பின் 13-12-2001 ல், நம் பாராளுமன்றத்தைத் தாக்கினார்கள். அதற்கு கொஞ்ச நேரம் முன்பாக,சோனியா பாராளுமன்றத்தை விட்டுக் கிளம்பிப்போய் விட்டார்!
2004-ல் சோனியா, தேர்தலில் ஜெயித்த பிறகு, அரசு அமைக்க முயற்சித்ததற்கு துணை நின்றவர்கள் ஹர்ஷ் மண்டர், அருந்தது ராய் ஆகியோரே. அவர்கள் இருவரும் ஜார்ஜ் சோரோஸின் இந்திய ஜால்ராக்கள்.
அர்பன் நக்ஸல் ( Urban Naxals ) களுக்காக மனித உரிமை சட்ட “நெட் ஒர்க்” வேலை செய்கிறது. காஷ்மீர் பிரிவினை வாதிகள், ராஜீவ்காந்தி ஃபௌண்டேஷனுக்கு பங்காளிகள். இந்த அமைப்புக்கு ஜார்ஜ் சோரோஸிடம் இருந்து நிதி கிடைக்கிறது.
2008-ல் சோனியா, ராஹுலுடன், சைனாவுக்குப், போய், அங்கு, சைனா கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இந்திய காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் ஒரு ரகசிய ஒப்பந்தம் போட்டு விட்டு திரும்புகிறார்.
28-5-2010ல், இந்திய அரசு 25 பாகிஸ்தானி தீவிரவாதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்தது. இவர்களில் ஒருவர், நான் முன்பு ஞாபகம் வைத்துக் கொள்ளச் சொன்ன “லத்தீஃப்”
2004 முதல் 2014 வரையிலும் ஆன காலத்துக்கு சோனியா வெளிநாடுகள் போன தகவல்கள் அரசிடம் இல்லை என்று சொல்லுகிறார்கள். 2011-க்குப் பிறகு, மருத்துவ சிகிச்சை என்று சொல்லி, பல தடவைகள் சோனியா அமெரிக்கா போய் இருக்கிறார். 30-11-2015 ல் கூட 3 நாட்களுக்கு மருத்துவ சோதனைக்காக அவர் அமெரிக்கா போய் வந்துள்ளார்.
2-1-2016 அன்று பதான்கோட்டில் ஒர் பயங்கரவாத சம்பவம் நிகழ்ந்ததே அதனை நடத்தியதும் " தன் விடுதலைக்கு நன்றி தெரிவித்த" இதே ”லத்தீஃப்” தான்.
சோனியாவின் பயணங்களின் ரகசியம் நட்வர்சிங்குக்கு நன்றாகத் தெரியும்.
இவை எல்லாம் நமக்கு வெளிப்படையாகக் கிடைக்கும் தகவல்கள்.இவற்றை எல்லாம் ஒன்று சேர்த்துப் பாருங்கள். தேசத் துரோகி யார் என்பது நன்கு தெரிந்து விடும். சிலரது ஆலோசனைப்படி, அப்படிப் பட்டவர்களோடு நெருக்கமாக இருக்கும் நம்மவர்களின் முட்டாள்தனமும் நன்கு புரிந்து விடும்.

வெள்ளி, 18 மார்ச், 2022

இரங்கல் கூட்டம் நடத்துவதற்கு 
அனுமதி கொடுத்த பத்திரிகையாளர் மன்றம்
இஸ்லாமிய மதவெறியர்கள் கொடுத்த 
நெருக்கடியால் அனுமதியை ரத்து செய்தது!
------------------------------------------------------
கோவையைச் சேர்ந்த கடவுள் மறுப்பாளர் 
தோழர் பாரூக்கை இஸ்லாமிய மதவெறியர்கள் 
படுகொலை செய்தனர். 

அவரின் நினைவுநாளைக் கொண்டாட 
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்
கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டம் 
நடத்துவதற்கு சென்னை பத்திரிகையாளர் 
மன்றம் அனுமதி கொடுத்து இருந்தது.

ஆனால் இஸ்லாமிய மதவெறியர்கள் சென்னை 
பத்திரிகையாளர் மன்றத்துக்கு நெருக்கடி 
கொடுத்தனர். அதன் விளைவாக கூட்டம் 
நடத்துவதற்கு இடம் தந்த சென்னை 
பத்திரிகையாளர் மன்றம் அனுமதியை ரத்து 
செய்து விட்டது.

எனவே தங்கள் அலுவலகத்திலேயே மயிலாப்பூர்)
சிறிய அளவில் கூட்டம் நடத்துகிறது திராவிடர் 
விடுதலை கழகம்.

இது குறித்து தோழர் ஓவியா அவர்கள் கண்டன 
அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
மூத்த பத்திரிகையாளர் எல் ஆர் ஜெகதீசன் 
கண்டனப் பதிவு எழுதி உள்ளார்.

இஸ்லாமிய மதவெறியர்களை கண்டிக்க 
அஞ்சி நிற்கிறார் கொளத்தூர் மணி.
அவர்கள் வெளியிட்டு உள்ள அழைப்பிதழைப் 
படியுங்கள். கொளத்தூர் மணி, விடுதல் 
ராஜேந்திரன் போன்ற கோழைகள் இஸ்லாமிய 
மத வெறியர்களால் படுகொலை செய்யப்பட 
தோழர் பாரூக் என்று எழுத அஞ்சிக் கொண்டு 
அடக்கி வாசிக்கின்றனர்.

இவர்களின் கோழைத்தனத்தை நன்கு புரிந்து 
வைத்துக் கொண்டுள்ள இஸ்லாமிய மத வெறியர்கள் 
கொளத்தூர் மணியை ஏறி மிதிக்கின்றனர்.
************************************************
      


 
( 
 
  

வியாழன், 17 மார்ச், 2022

பட்டியல் இனத்தவருக்கு  அதிகாரம் அளித்தல்!
(Dalit empowerment) 
பாஜகவும் திமுகவும் காங்கிரசும்!
---------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------
தலித்துகளைப் பொறுத்தமட்டில் வேறெந்த 
முழக்கத்தையும் விட தலித்துக்கு அதிகாரம் 
அளித்தல் ((Dalit empowerment) என்ற முழக்கம் 
அதிமுக்கியமானது. தலித் விடுதலை, தலித் 
சமத்துவம், சமஉரிமை ஆகிய எல்லாவற்றுக்கும்
முன்நிபந்தனையாக இருப்பது தலித்துக்கு 
அதிகாரம் அளித்தல்.

தலித்துக்கு அதிகாரம் அளித்தல் என்பதன் 
பொருள் என்ன? தலித்துகள் கவுன்சிலராக
வேண்டும்; மேயராக வேண்டும்; MLA, MP
ஆக வேண்டும், அமைச்சராக வேண்டும்.
முதல்வராக வேண்டும், பிரதமராக வேண்டும்,
ஜனாதிபதியாக வேண்டும். அப்படி ஆனால்தான் 
தலித்துகள் அதிகாரம் பெற்றதாகப் பொருள்.

இந்தியாவின் மாநிலக் கட்சிகளால் தலித்துக்கு
அதிகாரம் அளிக்க இயலாது. எப்படியெனில்,
மாநிலக் கட்சிகள் அனைத்தும் குடும்ப அரசியல் 
கட்சிகள் என்பதால் தமது குடும்பம் அதிகாரம் 
பெறுவதில் மட்டுமே அவை கவனம் செலுத்தும்.

உதாரணமாக, உதயநிதியை முதல்வர் 
ஆக்குவதில்தான் திமுக கவனம் செலுத்துமே 
தவிர, தலித்துக்கு அதிகாரம் அளிப்பது என்பதெல்லாம் 
திமுகவுக்கு மயிருக்குச் சமானம். அடுத்து மாநிலக் 
கட்சிகளின் வீச்சு (reach) குறைவு. ஒரு மாநிலக் 
கட்சியால் ஒரு தலித்தை ஜனாதிபதி ஆக்க முடியாது.

எனவே தலித்துக்கு அதிகாரம் அளித்தல் என்பது
இந்தியாவில் தேசியக் கட்சிகளால் மட்டுமே முடியும்.
இந்தியாவில் இதுவரையிலான தலித்துக்கு 
அதிகாரமளித்தலில் பெரும்பகுதி காங்கிரஸ் 
கட்சியால்தான் நடந்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சிதான் தலித்துகளை மாநில 
முதல்வர்களாக்கி இருக்கிறது. அதிக அளவில் 
மத்திய அமைச்சர்கள் ஆக்கி இருக்கிறது. துணை 
ஜனாதிபதி, ஜனாதிபதி ஆக்கி இருக்கிறது. சட்ட 
மன்ற நாடாளுமன்ற சபாநாயகர் ஆக்கி இருக்கிறது.
கே ஆர் நாராயணனை ஜனாதிபதி ஆக்கியது யார்?
காங்கிரஸ்தானே!

காங்கிரசை விஞ்சி நிற்கிறது பாஜக! தலித்துக்கு 
அதிகாரம் அளித்தலில் இன்றைய இந்தியாவில் 
பாஜகதான் முதல் இடத்தில் இருக்கிறது. ராம்நாத் 
கோவிந்தை ஜனாதிபதி ஆக்கி உள்ளது பாஜக.

காங்கிரஸ் கட்சியானது இந்தியாவில் முக்தி அடைந்து 
விட்டது. எனவே அக்கட்சியால் தலித்துக்கு அதிகாரம் 
அளித்தலில் ஒரு கடுகளவு கூட எதுவும் செய்ய இயலாது.
காங்கிரஸ் குடும்ப அரசியலின் இளவரசர் ராகுலுக்கும் 
இளவரசி பிரியங்காவுக்கும் ஒரு எம்பி பதவியைப் 
பெறுவதற்கே  இன்று அக்கட்சி பகீரதப் பிரயத்தனம் 
செய்ய வேண்டிய நிலையில், காங்கிரசால் இனி தலித்துக்கு 
அதிகாரம் அளித்தலில் என்ன செய்ய இயலும்??

பிற தேசியக் கட்சிகளான CPI, CPM கட்சிகளில் 
தலித்துகளுக்கு கடைசிப் பந்தி உத்தரவாதம் செய்யப் 
பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் 
கமிட்டியிலோ பொலிட் பீரோவிலோ ஒருபோதும் 
ஒரு தலித் இடம் பெற்றதில்லை; இடம் பெறவும் 
போவதில்லை. மார்க்சிஸ்ட் கட்சிக்கு நாடாளுமன்ற
சபாநாயகர் பதவி கிடைத்தபோது, அக்கட்சி 
அப்பதவியில் பார்ப்பனரான சோம்நாத் 
சட்டர்ஜியைத்தானே அமர்த்தியது! யாரேனும் 
தலித்தை அல்லது OBCயை அமர்த்தியதா, இல்லையே!

மத்திய அமைச்சரவையில் CPI பங்கேற்றபோது, 
அக்கட்சியானது தனக்குக் கிடைத்த இரண்டு 
காபினெட் அமைச்சர் பதவிகளில் இரண்டு 
உயர்சாதியினரைத்தானே (இந்திரஜித் குப்தா, 
சதுரானந்த் மிஸ்ரா) நியமித்தது! அமைச்சர் பதவிக்குத் 
தகுதியான ஒருவர்கூடவா CPI கடசியில் இல்லாமல் 
போனார்கள்?      
      
இந்த இடத்தில் பகுஜன் கட்சித் தலைவர் மாயவாதியை 
மிகவும் சிறப்புக்கு உரியவராகச் சுட்டிக் காட்ட வேண்டும்.
மற்றக் கட்சிகளின் தயவு இல்லாமல், தனது 
சொந்த பலத்தில் அவர் உத்தரப்  பிரதேச முதல்வர் 
ஆனார். ஒருமுறை அல்ல, நான்கு முறை உபி
முதல்வராக இருந்தார். தலித் ஆளுமையின் உச்சம் 
மாயாவதிதான்! தலித் அதிகாரம் பெறுதலின் 
உச்சமும் மாயாவதிதான்.

தலித் அதிகாரமளித்தலில் மிகவும் பரிதாபத்துக்கு 
உரிய மாநிலம் தமிழ்நாடுதான். இங்கு  1967க்கு 
முன்பு வரை காங்கிரஸ் கட்சிதான் தலித் 
அதிகாரமளித்தலில் முன்னணி வகித்தது. 1967ல் 
ஆட்சியில் இருந்து விரட்டப்பட்ட காங்கிரஸ், இன்று 
உதயநிதி ஸ்டாலினின் கடைக்கண் பார்வைக்கு 
ஏங்கிக் கிடக்கிறது. அக்கட்சியைப் பொறுத்தவரை 
தலித்துக்கு அதிகாரமலைப்பது அல்ல, காங்கிரசுக்கு 
அதிகாரமளித்தல்தான் இன்று அதன் ஒரே அஜெண்டா. 

தமிழ்நாட்டின் பிரதான தலித் கட்சியான விசிக 
பெருத்த நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இத்தனை 
ஆண்டுகளில் அக்கட்சியால் ஒரு மாநில அமைச்சர் 
பதவியைக் கூடப் பெற முடியவில்லை. 

ஆனால் பாஜக ஒரு தலித்துக்கு அதிகாரமளித்து அவரை 
மத்திய இணை அமைச்சராக்கி உள்ளது. தலித்துகளிலேயே 
மிகவும் புறக்கணிக்கப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் 
சேர்ந்த திரு முருகனுக்கு கட்சியின் மாநிலத் தலைவர் 
பதவியை முதலில் அளித்த பாஜக, அதன் பின்னர் அவரை 
மத்திய இணையமைச்சராக்கி உள்ளது. 

அமைச்சராகும்போது திரு முருகன் ஒரு MPஆக இல்லை.
தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபா எம்பி ஆகும் அளவுக்கு 
பாஜகவுக்கு இங்கு ஒன்றும் இல்லை. ஆனாலும் 
திரு முருகனை மத்திய பிரதேசம் கொண்டு சென்று,
அங்கிருந்து அவரை ராஜ்ய சபா எம்பி ஆக்கி,
அத்துடன் மத்திய இணை அமைச்சராகவும் ஆக்கி 
உள்ளது பாஜக. தலித் அதிகாரமளித்தல் என்பதன் 
பொருள் இதுதான். இதை இன்று பாஜகவால் 
மட்டுமே செய்ய முடியும். வேறு எந்தக் கட்சியாலும் 
செய்ய இயலாது.
   
  
திமுகவின் சபரீசன் ஒரு ராஜ்ய சபா எம்பி பதவியை 
தலித்துக்குத் தருவாரா? உலகம் அழிந்தாலும் 
தர மாட்டாரே ஐயா!

உபியில் ஒரு தலித் பெண். பெயர்.........................................
பெயரை நீங்கள்தான் சொல்ல வேண்டும்; நீங்களும் 
பேப்பர் படிக்க வேண்டும். எல்லாம் நானே SPOON FEEDING
செய்ய மாட்டேன். இந்த தலித் பெண்ணை உபியில் 
ஒரு மாநகராட்சியின் மேயர் ஆக்கியது பாஜக.      

அடுத்து இப்பெண்ணை ஒரு மாநிலத்தின் ஆளுநராக 
ஆக்கியது. பின் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து 
விட்டு, உபி சட்ட மன்றத் தேர்தலில் அப்பெண்ணை 
பிரச்சாரம் செய்ய வைத்தது. தற்போது அந்தப் பெண்ணை 
துணை முதல்வர் ஆக்க பாஜக திட்டம் என்று செய்திகள் 
வருகின்றன. ஒரு தலித் பெண்ணுக்குத்தான் எத்தனை 
உச்சங்கள்! இதுதான் தலித்துக்கு அதிகாரமளித்தல்!

தமிழ்நாட்டில் ஒரு தலித்துக்கு துணை முதல்வர் 
வழங்க திமுக முன்வருமா? ஆந்திராவில் முதல்வர் 
ஜெகன்மோகன் ரெட்டி ஒரு தலித்துக்கு துணை 
முதல்வர் பதவி வழங்கி உள்ளார். இங்கு கனவிலும் 
அது கைகூடுமா? புரட்சியாளர்  ஸ்டாலின் 
தலித் ஒருவருக்கு கனவிலாவது துணை முதல்வர் 
பதவி வழங்க முன்வருவாரா?

திருமாவளவன் Dalit empowerment என்று அவ்வப்போது 
பேசுவார் தவிர, உண்மையில் அதில் அக்கறை 
இல்லாதவர். உதயநிதியின் பெயரை வலது 
கையில் பச்சை குத்திக்கொண்டு ஸ்டாலின் 
குடும்பத்தைப் பல்லக்கில் வைத்துச் சுமந்து கொண்டு 
செல்பவர். அவர் ஒரு பல்லக்குத் தூக்கி.

தேர்தலில் திமுகவின் சின்னத்தில்தான் நிற்க 
வேண்டும்; இல்லாவிட்டால் முதுகுத் தொலியை 
உரித்து விடுவேன் என்று உதயநிதி வற்புறுத்தினார்.
மானமிகு புரட்சியாளர் திருமாவளவன் அடங்க 
மறுத்தாரா? அத்து மீறினாரா?ஒரு மயிரும் இல்லை.

உபியில் Dalit empowerment நடந்து கொண்டிருக்கிறது.
பாஜக அதை நடத்திக் காண்பிக்கிறது. தற்போதைய 
சூழலில்  Dalit empowermentல் அக்கறையுள்ள கட்சிகள்
பாஜகவுடன் இணைந்துதான் அதைப்பெற முடியும்.
இங்குள்ள அரசியல் சூழல் அப்படித்தான் இருக்கிறது.
திருமாவளவன்  Dalit empowermentல் அக்கறை இல்லாதவர் 
என்பதை நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.
****************************************************8
பின்குறிப்பு: 
படத்தில் இருக்கும் பெண்ணின் பெயர் 
பேபி ராணி மவுரியா. இவர் ஒரு தலித் பெண்மணி.
இவர் ஆக்ரா நகர மேயராக இருந்தார். பின்னர் 
அவரை உத்தரகாண்ட் மாநில ஆளுநர் ஆக்கினார்
மோடி. தற்போது ஆளுநர் பதவியை ராஜினாமா 
செய்து விட்டு உபி சட்டமன்றத் தேர்தலில்  தீவிரப் 
பிரச்சாரம் செய்தார். இவர் உபி மாநில துணை முதல்வர் 
ஆகக்கூடும் என்று பேசப்படுகிறது. ஒரு தலித்துக்குத்தான் 
எத்தனை பதவிகள்? இதுதான்  Dalit empowerment.
---------------------------------------------------------------------- 
 
   

         

  
      
   

    
   

 தாழ்ந்த ஜாதியினரின் கட்சி!

--------------------------------------------

உபியில் மொத்தத் தொகுதிகள் = 403

இதில் தலித் தொகுதிகள் (SC/ST) = 84

பாஜக கூட்டணி = 63

இந்த 84ல் பாஜகவும் அதன் கூட்டணிக்

கட்சிகளும் சேர்ந்து 63 இடங்களில் வென்றுள்ளன.


Scavenger என்றும் safaiwala என்றும் அழைக்கப்படும் 

துப்புரவுப் பணியாளர் ஒருவருக்கு சட்டமன்றத் 

தேர்தலில் போட்டியிட யோகி ஆதித்யநாத் 

வாய்ப்பளித்தார். துப்புரவுப் பணியாளரின் 

பெயர் கணேஷ் சந்திர சவுகான் என்பது.

அவர் தேர்தலில் வென்று MLA ஆகியுள்ளார்.


ஒரு துப்புரவுப் பணியாளர் அரசியல் அதிகாரம் 

பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் திமுகவில் 

இது நடக்குமா?


போலி முற்போக்கே உன் பதில் என்ன?

-----------------------------------------------------   .     

புதன், 16 மார்ச், 2022

 மோடியை ஆதரித்த வி ஆர் கிருஷ்ண ஐயர்!

------------------------------------------------------------------

மனித குல வரலாற்றின் தலைசிறந்த மனித 

உரிமைப் போராளி, 

மரண தண்டனை எதிர்ப்பு மாவீரர்,

உச்சநீதிமன்ற நீதியரசர் 

இப்படி பல்வேறு வகையில் புகழ் பெற்றவர்;

மக்களின் மதிப்பைப் பெற்றவர் 

மேதகு நீதியரசர் வி ஆர் கிருஷ்ண ஐயர்.


2014ல் மோடியே பிரதமர் பதவிக்கு மிகவும் 

தகுதியானவர் என்று மோடிக்கு புகழாரம் 

சூட்டியவர் கிருஷ்ண ஐயர்!


மோடியின் குஜராத்தில் மட்டும்தான் மதுவிலக்கு 

நடைமுறைப் படுத்தப் பட்டு வருகிறது 

என்றும் மோடியைப் பாராட்டியவர் ஐயர்!

**********************************************8    


போலி முற்போக்கே உன் பதில் என்ன?




கக்கூஸ் கழுவும் நபரை MLA ஆக்கியது சரியா?
யோகி ஆதித்யநாத்தின் திமிருக்குப் பாடம் 
கற்பிக்க வாரீர்!
---------------------------------------------------------------------
உபியில் அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் 
தேர்தலில் (2022 பெப்ரவரி-மார்ச்சு) உபி முதல்வர் 
யோகி ஆதித்யநாத் தனது நூறு சதம் திமிரையும்
முழுசாக வெளிப்படுத்தினார்.

சண்ட் கபீர் மாவட்டத்தில் உள்ள தொகுதி தன்காட்டா 
(Dhanghata). இதில் பாஜக வேட்பாளராக கணேஷ் சந்திரா 
என்பவரை நிறுத்தினார் யோகி. இவர் அந்த ஏரியாவில் 
துப்புரவுப் பணியாளராக, அதாவது கக்கூஸ் 
கழுவுபவராக வேலை செய்து வருகிறார். இவரின் 
தகப்பனாரும் அந்த ஏரியாவில் கக்கூஸ் கழுவி 
வருகிறார்.

கக்கூஸ் கழுவும் இந்த கணேஷ் சந்திராவை தன்காட்டா
தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தினார் யோகி.
சமாஜ்வாதியின் கூட்டணிக் கட்சியான SB சமாஜ் 
கட்சியின் கோடீஸ்வரர் அழகு பிரசாத் இத்தொகுதியில் 
நிற்கிறார். இவ்வளவு பெரிய கோடீஸ்வரரான 
அழகு பிரசாத்தை எதிர்த்து கக்கூஸ் கழுவும் கணேஷ் 
சந்திரா ஜெயிக்க முடியுமா? 

இடதுசாரி முற்போக்கு அரசியல் நோக்கர்கள் அனைவரும் 
கக்கூஸ் கழுவும் கணேஷ் சந்திரா தோல்வி அடைவார் 
என்றும் டெபாசிட் கிடைக்காது என்றும் ஆணவத்துடன் 
பேசினர்.

ஆனால் தேர்தல் முடிவு வந்தபோது அவர்களின் மண்டை 
உடைந்து போனது. கக்கூஸ் கழுவும் கணேஷ் சந்திரா 
ஜெயித்து விட்டார்.
கணேஷ் சந்திரா (பாஜக) = 83,241 வாக்குகள் 
அழகு பிரசாத் (SB சமாஜ் கட்சி) = 72,688 வாக்குகள் 
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளில் கக்கூஸ் 
கழுவும் கணேஷ் சந்திரா அகிலேஷின் வேட்பாளரைக் 
காயடித்து விட்டார்.

அழகு பிரசாத்தின் தோல்வி அகிலேஷ் யாதவ்வுக்கும் 
பிரியங்கா வாத்ராவுக்கும் பேரதிர்ச்சியாக ஆனது.
உயர்சாதியினர் அனைவரும் கோபம் அடைந்தனர்.

இந்த நிகழ்வு யோகியின் திமிரை வெளிக்காட்டுகிறது.
கக்கூஸ் கழுவும் ஒருவனை நிறுத்தி பாரம்பரியமான 
கோடீஸ்வர வேட்பாளாரை யோகி தோற்கடித்தது
எல்லோரின் கோபத்தையும் கிளப்பி உள்ளது.
எல்லோரும் யோகியைக் கண்டித்து வருகின்றனர்.

வாருங்கள், நாமும் சேர்ந்து கொண்டு யோகியைக் 
கண்டிப்போம். என்ன திமிர் இந்தக் காவி கட்டிய 
சாமியாருக்கு? கக்கூஸ் கழுவுபவனை MLA ஆக்கி 
பிரியங்கா முகத்தில் கரியைப் பூசுவதுதானே 
யோகி ஆதித்யநாத்தின் நோக்கம்! இதை 
உயர்சாதியினர் சும்மா விட்டு விடுவார்களா?
தகுந்த பாடம் கற்பிப்பார்கள்!

யோகியின் திமிரை அடக்குவோம்!
யோகியின் ஆணவத்தை அடக்குவோம்!
************************************************