சனி, 28 மே, 2022

 (2) தனுஷ் ராசி மண்டலத்தில் ஒரு கருந்துளை!

அது இருக்கும் இடமே அதன் பெயரானது!
அக்கருந்துளையின் பெயர் Sagittarius A.
தமிழில் சொன்னால் தனுஷ் ஏ.
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------   

இந்த இடத்தில் ராசி மண்டலங்கள் குறித்தும் 
அவற்றின் தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்கள் குறித்தும் 
நன்கு அறிந்து கொள்வது நமது புரிதலுக்கு தாவும்.

விண்கோளத்தில் (Celestial sphere) 88 நட்சத்திரக் 
கூட்டங்கள் (constellations) உள்ளன. இந்த 88 நட்சத்திரக் 
கூட்டங்களும் IAU எனப்படும்  சர்வதேச வானியல் 
சங்கத்தால் அங்கீகரிக்கப் பட்டவை.
(IAU = International Astronomical Union).

மேற்கூறிய 88 நட்சத்திரக் கூட்டங்களில் 
12 நட்சத்திரக் கூட்டங்கள் ராசி மண்டலங்கள் 
(zodiac constellations)  என்று தனிப்பெயர் பெற்றுள்ளன.

ராசி என்றால் சித்திரம், உருவம் என்று பொருள். 
ஆரம்ப கால மனிதர்களுக்கு, அவர்கள் வானத்தைப் 
பார்த்தபோது,நட்சத்திரக் கூட்டங்கள் என்ன உருவத்தில் 
தெரிந்ததோ, அந்த உருவத்தையே அந்த 
நட்சத்திரக் கூட்டத்தின் பெயராக வைத்தார்கள்.
   
ஒரு குறிப்பிட்ட நட்சத்திரக் கூட்டம் ஆடு போலத்
தெரிந்தபோது, அதற்கு ஆடு என்றே பெயரிட்டார்கள்.
அதைத்தான் நாம் மேஷம் என்கிறோம். ஆங்கிலத்தில் 
Aries (அய்ரீஸ்) என்கிறார்கள். அய்ரீஸ் என்றால் 
செம்மறி ஆடு என்று பொருள்.

12 ராசி மண்டலங்களையும் உள்ளடக்கிய ராசிப் 
பிராந்தியம் (zodiac region) வானில் எங்கே இருக்கிறது?
வானில் ஒரு வளையம் (belt) போல ராசிப்பிராந்தியம் 
தெரியும். பூமி சூரியனைச் சுற்றி வரும் பாதையில் 
இந்த ராசிப் பிராந்தியம் (zodiac region) உள்ளது.

பூமியில் இருந்து பார்க்கும்போது, ஓராண்டில் 
இந்த ராசிப் பிராந்தியத்தில் உள்ள 12 ராசி மண்டலங்கள் 
ஒவ்வொன்றிலும் சூரியன் நுழைந்து வெளியேறுகிற  
தோற்றத்தைப் பார்க்க முடியும். அதாவது அப்படித் 
தோற்றமளிக்கும் (apparent but not actual)..

தற்போது நமக்கு மிகவும் பயன் தரும் 12 ராசி மண்டலங்களையும்  
அவற்றின் ஆங்கிலப் பெயர்களையும் அறிந்து கொள்வோம்.
1.. மேஷம் --- Aries 
2.. ரிஷபம்---- Taurus 
3... மிதுனம் ----- Gemini 
4.. கடகம்------- Cancer 

5.. சிம்மம் ---Leo
6.. கன்னி ----Virgo 
7.. துலாம் ---Libra
8.. விருச்சிகம்-- Scorpio

9.. தனுஷ் ----Sagittarius 
10...மகரம் ---Capricorn 
11.. கும்பம் ---Aquarius
12..மீனம் ----Pisces       

அண்மையில் நமது காலக்சியான பால்வீதியில் 
உள்ள ஒரு கருந்துளையை விஞ்ஞானிகள் புகைப்படம் 
எடுத்துள்ளனர். அந்தக் கருந்துளைக்கு Sagittarius A என்று 
பெயர்.

Sagittarius A என்றால் என்ன அர்த்தம்? தனுஷ் ராசிக்கு 
ஆங்கிலத்தில் Sagittarius என்று பெயர்.அந்தக் 
கருந்துளையானது தனுஷ் ராசி மண்டலத்தில் 
இருக்கிறது. எனவே அதன் அடிப்படையில் 
அதற்கு Sagittarius A என்று பெயரிடப் பட்டுள்ளது.

சரி, சகிட்டாரியஸ் ஏ என்று பெயரிடப்பட்ட அந்தக் 
கருந்துளை பூமியில் இருந்து எவ்வளவு தூரத்தில் 
இருக்கிறது? 26,673 ஒளியாண்டு தூரத்தில் அந்தக் 
கருந்துளை உள்ளது.    
     
ஒரு ஒளியாண்டு என்பது ஓராண்டில் ஒளி செல்லும் 
தூரம் ஆகும். ஒரு வினாடிக்கு 3 லட்சம் கிமீ தூரத்தைக் 
கடக்கிறது ஒளி. இப்படியே ஒரு ஆண்டில் எவ்வளவு 
தூரத்தைக் கடக்கும்? 9.5 டிரில்லியன் கிமீ தூரத்தைக் 
கடக்கும். எனவே ஒரு ஒளியாண்டு என்பது 9.5 டிரில்லியன் 
கிலோமீட்டர் தூரம் ஆகும்.
1 ly = 9.5 x 10^12 km.
1 டிரில்லியன் = 1 லட்சம் கோடி.
---------------------------------------------------------------------
பின்குறிப்பு:
நவீன காலப் பேரெண்களான மில்லியன், பில்லியன்,
டிரில்லியன், குவாட்ரில்லியன், குவின்டில்லியன் என்று 
தொடரும் எண்களை அறிந்து கொள்ள வேண்டும்.
அவற்றைப் பயன்படுத்தும் தேவை ஏற்படும்.
***************************************************

தூரம் எவ்வளவு?
---------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------
பேரழகி கிளியோபட்ரா வானில் ஒரு நட்சத்திரத்தைப் 
பார்த்தாள். மிகவும் பிரகாசமான நட்சத்திரம் அது.

விஞ்ஞானிகள் அந்த நட்சத்திரம் பூமியில் இருந்து 
5 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது என்று சொன்னார்கள்.

அப்படியானால் அந்த நட்சத்திரம் பூமியில் இருந்து 
எவ்வளவு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது என்று 
கூற இயலுமா? கூறுங்கள்.   
*************************************  
 
   

    
  
 


   
  

 (1)) 

RDX-13 (500 kg  RDX)  
ராஜிவ் காந்தியின் கொலையில்
சந்திரா சுவாமியின் பங்கு எவ்வளவு?
--------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு மார்வாடிக் 
குடும்பத்தில் பிறந்தவர் சந்திரா சுவாமி. 
இவரின் இயற்பெயர் நேமி சந்த் ஜெயின். இவர் 
சிறுவனாக  இருக்கும்போதே இவரின் குடும்பம் 
ஹைதராபாத் நகருக்குக்  குடிபெயர்ந்து விட்டது.

தாந்திரிகக் கலையைக் கற்று அதில் நிபுணரான 
சந்திரா சுவாமி தம் இளம் வயதிலேயே சாமியார் 
ஆகி விட்டார். பல மொழிகள் அறிந்தவர் சந்திரா 
சுவாமி.

டெல்லியில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் 
கொடையளிக்கப்பட்ட சில ஏக்கர் நிலத்தில் 
தமது ஆசிரமத்தைக் கட்டிக் கொண்டார் 
சந்திரா சுவாமி. 

உலகின் பிரபலமான அரசுத் தலைவர்களுக்கு 
இவர் ஆன்மிக குருவாக விளங்கினார். மார்கரெட் 
தாட்சர், யாசர் அராபத், புருனே சுல்தான் 
உள்ளிட்ட பலரும் இவரின் சீடர்கள்.

ராஜிவ் கொலையில் இவருக்குப் பிரதான பங்கு 
உண்டு என்று ஒரு வலுவான சந்தேகம் இன்றளவும் 
இருந்து வருகிறது. அவரை ஏன் CBI சிறப்புப் 
புலனாய்வுக்குழு கூப்பிட்டு விசாரிக்கவில்லை 
என்று கோபத்தோடு கேள்வி கேட்பவர்கள் 
இன்னும் உண்டு.

இந்தச் சந்தேகங்களும் கேள்விகளும் அர்த்தமற்றுப் 
போய்விட்ட ஒரு காலக்கட்டத்தில் இந்தக் கட்டுரை 
எழுதப் படுகிறது. ஏனெனில் சந்திரா சுவாமி 
இறந்து போய் விட்டார்; அவர் போன இடம் புல் 
முளைத்துப் போய்விட்டது. மே 2017ல் சந்திரா 
சுவாமி இறந்து விட்டார். அவர் இறந்து ஐந்தாண்டு
முடிந்து விட்டது. இறக்கும்போது அவருக்கு வயது 
68தான். சாமியார்களுக்கே உரிய நீண்ட ஆயுள் 
அவருக்கு வாய்க்கவில்லை.

திருச்சி வேலுச்சாமி என்று ஒருவர். இவர் அவ்வப்போது 
காங்கிரஸ்காரராக இருப்பவர். சந்திரா சுவாமியைப் 
பற்றி அதிகமாகவும் அதீதமாக்வும் பேசி வருபவர் 
இந்த திருச்சி வேலுச்சாமி. அவர் பேசுவதைக் 
கேட்டால், இந்த மொத்த உலகமே சந்திரா 
சுவாமியின் காலடியில் வீழ்ந்து கிடப்பதைப் 
போலவும், சுவாமியின் கண்ணசைவுக்கு  
ஜார்ஜ் புஷ், பாரக் ஒபாமா போன்ற அமெரிக்க 
ஜனாதிபதிகளே அடிபணிந்து நிற்பது போலவும் 
ஒரு சித்திரம் நமது மனத்தில் விரியும்.

இந்தச் சித்திரம் போலியானது; பொய்யானது!
இதில் உண்மை ஒரு ரோமமும் இல்லை என்பதை 
இதோ நான் நிரூபிக்கிறேன்.

சர்வ வல்லமை வாய்ந்தவராக வர்ணிக்கப்படும் 
சந்திரா சுவாமி மே 2, 1996ல் CBI போலிசாரால் 
கைது செய்யப் பட்டார். சென்னையில் சிந்தூரி 
ஓட்டலில் தங்கியிருந்த அவரை நள்ளிரவில் 
CBI அதிகாரிகள் கைது செய்தனர். லண்டனைச் 
சேர்ந்த ஒரு வணிகரிடம் அவரின் பணம் ஒரு லட்சம் 
அமெரிக்க டாலரை ஏமாற்றி விட்டதாக சந்திரா 
சுவாமி மீது வழக்கு. 

சிந்தூரி ஓட்டல் (Sindoori Hotel) என்பது 
அப்பல்லோ மருத்துவமனை அதிபரும் சுவாமியின் 
சீடருமான  பிரதாப் ரெட்டிக்கு உரிமையானது. 
அதில்தான் சந்திரா சுவாமி தங்கி இருந்தார். 
சென்னையில் கைது செய்த சந்திரா சுவாமியை 
டெல்லிக்கு கொண்டு சென்று திஹார் சிறையில் 
அடைத்தார்கள். திஹார் சிறையில் PRISON number-1ல் 
6 அடிக்கு 9 அடி உள்ள ஒரு B grade செல்லில்தான்
சந்திரா சுவாமியை அடைத்து இருந்தார்கள்.

மே 2ல் சிறையில் அடைக்கப்பட்ட சந்திரா சுவாமிக்கு 
உடனே ஜாமீன் கிடைத்ததா? இல்லை. ஒரு மாத 
காலம் சிறையில் இருந்த பின்னர், 1996 ஜூன் 
இரண்டாம் வாரத்தில்தான் அவருக்கு ஜாமீன் 
கிடைத்து சிறையை விட்டு வெளியேறினார்.

இதே வழக்கில் 1988 பிப்ரவரியில் சந்திரா சுவாமி 
கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப் 
பட்டார்.  நான்கு நாட்கள் சிறைவாசத்தின் பின்னர் 
அவருக்கு ஜாமீன் கிடைத்தது.

மேற்கூறிய உண்மைகள் ஒரு விஷயத்தைத் 
திட்டவட்டமாக உறுதிப் படுத்தி விடுகின்றன.
திருச்சி வேலுச்சாமி சொல்வதைப்  போல,
அல்லது ராட்சசத்தனமான வதந்திகள் கூறுவதைப்
போல, சந்திரா சுவாமி கடவுளை விடச் சக்தி 
வாய்ந்த மனிதரெல்லாம் அல்ல. அவர் ஒரு சராசரி 
ஏமாற்றுச் சாமியார்.

அவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்றால், அவரால் ஏன் 
தான் கைது செய்யப் படுவதைத் தடுக்க 
முடியவில்லை? கேவலம், ஒரு லட்சம் டாலர் 
பண மோடி வழக்கில் அவரால் கைதாகாமல் 
தப்பிக்க முடியவில்லையா? 

அவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்றால் அவருக்கு ஏன் 
உடனடியாக ஜாமீன் கிடைக்கவில்லை? ஒரு மாத  
காலம் சிறையில் இருந்து அதன் பின்னர்தானே   
ஜாமீன் கிடைத்தது?

இந்த முன்ஜாமீன் முன்ஜாமீன் என்கிறார்களே,
சசிகலா டி டி வி தினகரன் ஊழல் அமைச்சர்கள் 
இப்படி எல்லோருக்கும் கிடைக்கிறதே, அப்படிப்பட்ட   
முன்ஜாமீன் ஏன் இவ்வளவு சக்தி வாய்ந்த 
சாமியாருக்குக் கிடைக்கவில்லை?

இன்னொரு முக்கியமான விஷயம். சந்திரா சுவாமி 
கைது செய்யப்படும் தேதி என்ன? மே 2, 1996. 
அந்தத் தேதியில் இந்தியாவின் பிரதமராக 
இருந்தவர் யார்? நரசிம்ம ராவ். இவர்தான் 
சந்திரா சாமியின் அத்யந்த சீடர். தமது குருவை 
கைது செய்ய நரசிம்ம ராவ் எப்படி அனுமதிப்பார்?

ஆனால் அனுமதித்து இருக்கிறார். எப்படி? திருச்சி 
வேலுச்சாமி சொல்வதெல்லாம் முழுவதுமாக 
மிகைப்படுத்தப் பட்ட பொய்கள்.  ஆக திருச்சி 
வேலுச்சாமி சொன்னதெல்லாம் பொய் என்று
நிரூபித்து இருக்கிறேனா!   

யோசித்துப் பாருங்கள்! 
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.  
 
எனவே திருச்சி வேலுச்சாமி வர்ணிக்கிற மாதிரி,
சந்திரா சுவாமி ஒன்றும் பெரிய அப்பா டக்கர் 
அல்ல.  அவருக்கு இருப்பதாக திருச்சி வேலுச்சாமி
கூறும் அபார சக்திகளோ செல்வாக்கோ எதுவும் 
சந்திரா சாமியாருக்கு இல்லை.

அவர் விசாரிக்கப் பட்டாரா?
-------------------------------------------
அவரை விசாரிக்கவே இல்லை என்பது இன்னொரு 
பொய். ஜெயின் கமிஷனில் சந்திரா சாமி விசாரிக்கப் 
பட்டார். பல முறைகள் கமிஷனின் விசாரணையில் 
ஆஜர் ஆனார். கூண்டில் ஏறி நின்று கொண்டு 
சாட்சி சொன்னார். எனவே  ராஜிவ் கொலை 
தொடர்பாக சந்திரா சுவாமி விசாரிக்கப் படவே
இல்லை என்று எவராலும் சொல்ல முடியாது.

ஜெயின் கமிஷன் தனது இறுதி அறிக்கையை 
அரசிடம் வழங்கியது. அந்த அறிக்கையில் ஒரு 
பட்டியலை நீதியரசர் ஜெயின் அரசுக்கு வழங்கி 
இருந்தார். அந்தப் பட்டியலில் 18 பேர்கள் 
குறிப்பிடப்பட்டு இருந்தனர். இந்தப் பட்டியலில் 
கண்ட  18 பேர்களையும் விசாரிக்க வேண்டும் 
என்றும், அப்படி விசாரித்தால் ராஜிவ் கொலை 
பற்றிய மேலும் பல விவரங்கள் கிடைக்கும் என்று 
தான் நம்புவதாகவும் நீதியரசர் ஜெயின் தமது 
அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.    

நீதியரசர் ஜெயின் தயாரித்தளித்த 18 பேர் கொண்ட 
பட்டியலில் 
1) முதல் பெயராக சந்திரா சுவாமி பெயர் இருந்தது.
2) இரண்டாவது பெயராக டாக்டர் சுப்பிரமணியம் 
சுவாமியின் பெயர் இருந்தது.
3) மூன்றாவது பெயராக 1990ல் தமிழக முதல்வராக 
இருந்த கலைஞர் கருணாநிதியின் பெயர் இருந்தது.

ஜெயின் கமிஷனில் அதிக நாட்கள் சாட்சியம் 
அளித்தவர்  யாரென்றால் அது டாக்டர் சுப்பிரமணியம் 
சுவாமிதான். அநேகமாக அவர் தினசரி ஜெயின் 
கமிஷன் விசாரணைக்கு ஆஜராகி விடுவார்.
சந்திரா சுவாமியோ போதிய அளவு சாட்சியம் 
அளித்து விட்டார். இதற்கு மேலும் அவ்விருவரும் 
சாட்சியம் அளிக்க ஒரு ரோமமும் இல்லை.

அடுத்து கலைஞரை ஏன் CBI விசாரிக்க வேண்டும்?
கலைஞருக்கும் ராஜிவ் காந்தி படுகொலைக்கும்  
என்ன சம்பந்தம்? மொட்டைத் தலைக்கும் 
முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதா?

ஆக ஜெயின் கமிஷன் அறிக்கை அளித்திட்ட 
பட்டியலில் உள்ள 18 போரையும் விசாரிக்க 
வேண்டும் என்று அடுத்தடுத்து வந்த 
மத்திய அரசுகள் கருதவில்லை. வீணாக 
எல்லோரையும் சந்தேகப் படுவதால் யாருக்கும் 
பயன் இல்லை.

The suspicion can not take the place of proof என்று ஒரு 
சட்டப் பழமொழி உண்டு.  
"சந்தேகம் எவ்வளவு வலுவாக இருந்தாலும், அது 
ஒருபோதும் நிரூபணம் ஆகாது" என்பதே 
இதன் பொருள்.
********************************************************
பின்குறிப்பு::
அடுத்த கட்டுரையில் ராஜிவ் கொலையில் 
சுப்பிரமணியம் சுவாமிக்குப் பங்கு உண்டா?
படிப்பதற்கு முந்துங்கள்!
---------------------------------------------------------------------      

வெள்ளி, 27 மே, 2022

ராஜிவ் கொலைச்சதியில் முக்கியமான ஒருவர்
நேமிசந்த் ஜெயின் என்பவர்!
எழுவர் விடுதலை எப்போது?
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
ராஜிவ் காந்தி படுகொலையை முற்றிலும்
தட்டையாகப் புரிந்து கொள்பவர்களே அதிகம்.
குறைந்த பட்சமாக 
1. ராஜிவ் கொலைச்சதி  (conspiracy) 
2. கொலைச்சதி நிறைவேற்றம் (execution of conspiracy)
என்று இரண்டு பெரும் அம்சங்களாக ராஜிவ்
படுகொலையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ராஜிவ் கொலைச்சதியை நிறைவேற்றியவர்கள்
யார் என்று நமக்கெல்லாம் தெரியும். தாணு.
சுபா, நளினி, முருகன்,பேரறிவாளன் உள்ளிட்ட
சிவராசன் குழுவினர் கொலைச்சதியை நிறைவேற்றினர்.
இதை ஆங்கிலத்தில் execution part என்று சொல்வார்கள்.

இந்த நிறைவேற்றும் பகுதியில் (execution part) சிவராசன்
குழுவினர் மட்டுமின்றி, விடுதலைப் புலிகளும் 
இடம் பெறுகின்ற்னர்.விடுதலைப் புலிகள்
என்றால், 1. பிரபாகரன் 2. பொட்டு அம்மான் 3. அகிலா
என்ற மூவர் மீதும் கொலைக்குற்றம் சாட்டப்
பட்டுள்ளது.

ஆனால் இந்த மூவரோடு நின்று விடுவதல்ல நாம்
 பேசுகிற நிறைவேற்றும் பகுதி. அடுத்து 4)ஆன்டன்
பாலசிங்கம் 5) கேபி எனப்படும் குமரன் பத்மநாபன்
6) லண்டனில் இருந்த கிட்டு ஆகியோரையும்
கணக்கில் கொள்ள வேண்டும்.

மாத்தையா, கருணா ஆகியோருக்கு இந்தச் சதி
பற்றித் தெரியாது என்பது உறுதிப் படுத்தப்
பட்டிருக்கிறது. ஆக, விடுதலைப் புலிகளில்
குறைந்தது ஆறு பேர் ராஜிவ் படுகொலையின்
நிறைவேற்றும் பகுதியில் (execution part) உள்ளவர்கள்.

இவர்களின் கட்டளையின் பேரில் சிவராசன்
தலைமையிலான 26 பேருக்கும் மேற்பட்ட குழு
ராஜீவின் படுகொலையை (The actual execution)
நிறைவேற்றியது. இதில் சிலர் ஏற்கனவே 
உயிரிழந்து விட்டனர். எனவே அவர்களைக்
கணக்கில் சேர்க்கவில்லை.

ஆக, இதுவரை பார்த்தது நிறைவேற்றும் பகுதியில்
(execution part) யார் யார் என்பதைத்தான்.
இனி கொலைச்சதியில் (conspiracy) யார் யார் என்று
பார்க்க வேண்டும்.

அப்படிப் பார்க்கும்போது, முக்கியமான நபராக
வருகிறவர்தான் நேமிசந்த் ஜெயின். இந்தப்
பெயரில் இவரை அறிந்தவர்கள் சொற்பம்.
இவர்தான் சந்திராசாமி (1948-2017) எனப்படும்
சாமியார். இவர் கடந்த ஆண்டில், 2017ல்
இறந்து விட்டார். இவர் ஜெயின் சமூகத்தைச்
சார்ந்த மார்வாடி ஆவார்.

இவர் சர்வதேச ஆயுத வியாபாரத்தில் ஓர்
பிரபலமான இடைத்தரகர். உலகெங்கும்
ஆயுதம் தேவைப்படும் அரசுகளுக்கும்,
அரசு எதிர்ப்புக் குழுக்களும் ஒருங்கே
ஆயுதம் வாங்கித் தருபவர் இவர்.

விடுதலைப் புலிகளைப் பொறுத்த மட்டில்
அவர்களுக்கு மிகவும் நெருக்கமான மிகவும்
வேண்டிய ஆயுதத் தரகர் சந்திராசாமி.
புலிகளுக்குத் தேவையான பல்வேறு நவீன
உயர் ரக ஆயுதங்களை இந்தியக் கடல்
வழியாக வட இலங்கைக் கடற்கரைக்கு
அனுப்பி வைப்பதில் இவர் ஆற்றல் மிக்கவர்.
இவருக்கு கடற்படையிலும் உளவுத்துறையிலும்  
பெருத்த செல்வாக்கு உண்டு. எனவே
புலிகளுக்கும் இவருக்கும் பரஸ்பரம்
மிகவும் நெருக்கமான உயிரோட்டமான
தொடர்பும் உறவும் உண்டு.

ராஜீவைக் கொலை செய்த பெல்ட் வெடிகுண்டை
சிவராசனிடம் வழங்கியவர் இவரே. ஆனால்
இவரின் பயங்கரவாத சதிச் செயல்கள் அனைத்தும்
திட்டமிட்டு மறைக்கப் பட்டன. ராஜிவ் கொலைக்குப்
பின்னர் பதவியேற்ற மத்திய நரசிம்மராவ் அரசு
இவரின் பெயர் கூட வெளிவந்து விடாமல்
இவரைப் பாதுகாத்தது.

ஆக ராஜிவ் கொலைச்சதி விடுதலைப் புலிகளோடு
நின்று விடவில்லை. அவர்களையும் தாண்டி சதி
விரிகிறது. அதில் சர்வதேச அளவிலான உளவு
அமைப்புகள் சிலவும் ஏதேனும் ஒரு விதத்தில்
பங்கு பெற்றன. அது பற்றி அடுத்துக் காண்போம்.

விடுதலைப் புலிகள் நிறைவேற்றும் பகுதியை
(execution part) மட்டுமே சேர்ந்தவர்கள் என்பதை
மீண்டும் மனத்தில் கொள்ளவும். ஆக, சதிப்பகுதி
என்று ஆராயும்போது, அதன் முதல்கண்ணியாக
இருந்தவர் சந்திரா சாமி என்னும் நேமிசந்த் ஜெயின்.  

ராஜிவ் கொல்லப்பட வேண்டும் என்று விரும்பிய
அன்னியச் சக்திகள் நிறையவே இருந்தன. அப்படி
விரும்பிய ஒரே ஒரு இந்தியச் சக்தி சந்திரா சாமி
மட்டுமே. ராஜீவின்  கொலையை நிறைவேற்றும்
பொறுப்பை விடுதலைப் புலிகள் எடுத்துக்
கொண்டதுமே, புலிகளால் இதைச் சிறப்பாக
நிறைவேற்ற முடியும் என்று சர்வதேச சக்திகளுக்கு 
நம்பிக்கை ஏற்படுத்தியவர் சந்திரா சாமி. புலிகள்
மீது அவநம்பிக்கை இருக்குமேயானால் இந்த
வேலை அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டு இருக்காது.

ஆக சர்வதேச சக்திகளின் அங்கீகாரத்துடனும்
கண்காணிப்புடனும் ராஜிவ் கொலையை
நிறைவேற்றும் பெரும் பொறுப்பை புலிகள் ஏற்றனர்.
இதை நிறைவேற்றுவது சுலபமான பணி அல்ல.
அதிகாரத் தாழ்வாரங்களில் உள்ள பலரின்
ஆதரவு இல்லாமல் இந்த வேலை முடிந்து இருக்காது.

படுகொலைக்குப் பின்னர், போலீசிடம்
பிடிபட்டவர்கள் எல்லா உண்மைகளையம்
சொல்லி விடாமல் பார்த்துக் கொள்வதில்
இருந்து, அவர்களின் குடும்பங்களைப்
பராமரிப்பது உட்பட தேவையான அனைத்துப்
பணிகளையும் செய்தவர்கள் யார்?
ராஜிவ் கொலைச்சதியில் பங்கேற்ற சர்வதேச
சக்திகளே. அவர்கள் நியமித்த ஏஜெண்டுகளே.
       
ராஜிவ் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்ட
ஆதிரை என்பவர் திருமணம் செய்து கொண்டு
சுவிட்சர்லாந்தில் கணவருடன் குடியேறி
வாழ்ந்து வருகிறார். இதற்கான செலவை
ஏகாதிபத்திய NGO அமைப்புகள் ஏற்றுக் கொண்டன.

நளினியின் மகள் ஹரித்ரா லண்டனில்
மருத்துவம் படிக்கிறார். இவருக்குத் திருமணம்
விரைவில் நடக்க இருக்கிறது.ஹரித்ராவின் தாய்
தந்தை (நளினி, முருகன்) இருவரும் சிறையில்
இருக்கும்போதும், வெளிநாட்டில் உயர்கல்வி
படிக்கும் ஹரித்ராவின் செலவை ஏகாதிபத்திய
NGO அமைப்புகள் ஏற்றுக் கொண்டன.

பேரறிவாளனின் வழக்கு உச்சநீதிமன்றத்திலும்
உயர்நீதிமன்றத்திலும் ஜெத்மலானி போன்ற
கோடிக்கணக்கான ரூபாய் கட்டணம் வாங்கும்
வழக்கறிஞர்களால் நடத்தப் பட்டது. அதிகமான
மனுக்கள் மூலம் உச்சநீதிமன்றத்தில்  பலமுறை
வழக்குத் தொடுத்தவர் பேரறிவாளன்.

நடிகர் சஞ்சய் தத்துக்கு எந்த அடிப்படையில்
பரோல் தரப்பட்டது என்று மஹாராஷ்டிர அரசைக்
கேள்வி  கேட்டு வழக்குத் தொடுத்தவர் பேரறிவாளன்.
இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தகுதிக்கு மீறிய இத்தகைய வழக்குச் செலவுகளை,
குடும்பப் பராமரிப்புச் செலவுகளை ஏகாதிபத்திய
NGO அமைப்புகள் ஏற்றுக் கொள்கின்றன.  

ராஜிவ் படுகொலை நிறைவேற்றம் (EXECUTION) என்ற
நிகழ்வில் பங்கேற்ற அத்தனை பேருமே, அதாவது
ராஜிவ்  கொலையில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேருமே
(உயிரிழந்தவர்களைச் சேர்க்காமல்)
அந்நிய ஏகாதிபத்திய சக்திகளின் கொலைச்
சதியை நிறைவேற்ற உரிய கூலியைப் பெற்றுக்
கொண்டு வேலை செய்தவர்களே.
(They are all paid servants of the foreign imperialists)

27 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்ட  அந்த ஏழு
பேரையும் இன்றே விடுதலை செய்யலாம். உயிருடன்
இருந்தபோதிலும் அவர்கள் நடைப்பிணங்களாகவே
இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்வதால்
பெரிய தீங்கு எதுவும் நிகழ்ந்து விடாது.

ஆனால் இன்னும் எஞ்சியிருக்கும் சில உண்மைகளும்
முழுவதுமாகப் புதையுண்டு போகும் வரை,
ஏகாதிபத்திய ஆதரவு சக்திகள் அவர்களை
விடுதலை செய்யாது..
இதுதான் உண்மை.
.......................தொடரும்...........................
*********************************************************   

இந்தியச் சக்தி ஒருவர்தான். மற்றவர்கள் சக்தி அல்ல.
நேரடியாக ஈடுபட்ட சக்தி சந்திரா சாமி மட்டுமே.
வேறு யார்?
  
சுப்பிரமணியம் சுவாமி ஒரு சக்தி
( a powerful force) என்று வரையறுக்கும்
அளவுக்கு வலிமையானவர் அல்ல. அவர் வெத்துவேட்டு
ஆசாமி. சில விஷயங்கள் அவருக்குத் தெரிய வரும் 
அதை வைத்துக் கொண்டு பரபரப்புக் கிளப்புவார்.
அவ்வளவுதான். குட்டி முதலாளித்துவ நுனிப்புல்
ஆசாமிகள் டாக்டர் சுவாமியை பேராற்றல்
உள்ள ஒரு சக்தியாகக் கருதுவார்கள். அதில்
உண்மை இல்லை.

கேவலம் ஒரு MP  அவருக்கு ராஜ்யசபாவில் கிடைக்க
வழியில்லை. வெறும் நியமன MP தான் அவர்.
அவருக்கு சக்தி இருக்குமேயானால், ஒவ்வொரு
கட்சியும் அவரை MPயாக ஆக்கி தங்கள் பக்கம்
வைத்துக் கொல்லப் போட்டி போடுவார்கள்.   


அதே போல, சோனியா காந்தி நிச்சயமாக ஒரு
சக்திதான். ஆனாலும் அவருக்கு இதில் பங்கு
கிடையாது. பங்கு உண்டு என்று  சொன்னார்
சுப்பிரமணியம் சுவாமி. அதில் உண்மை இல்லை.
ராஜிவ் கொலையில் மூப்பனாருக்குப் பங்கு உண்டு
என்று சொன்னார் ஜெயலலிதா. அது போலத்தான்
இதுவும். ஏன், கருணாநிதிதான் ராஜீவைக் கொலை
செய்தார் என்று பிரச்சாரம் செய்தானே
அதிமுககாரன் 1991ல். இதெல்லாம் உண்மை கிடையாது.
சந்திரா சாமியின் சக்தியில் 1000ல் ஒரு பங்கு
கூட சு சுவாமியிடம் கிடையாது.


ராஜிவ் கொலை என்பது சர்வதேச கொலைச்சதி.
அதில் வைகோவுக்குப் பங்கு எதுவும் கிடையாது.
அவர் புலி ஆதரவுப் பேச்சாளர். அதற்கு உரிய
சம்பளம் அவருக்கு புலிகளிடம் இருந்து வந்த விடும்.
சதி கிதிக்கெல்லாம் அவருக்கு ஒர்த் கிடையாது.

இன்னும் வரும்.

1995ல் அப்போதைய பாஜக அரசு, அதாவது வாஜ்பாய்
அரசு, சு சுவாமி மீது சந்தேகம் கொண்டு, 1995ல்
அவர் மேற்கொண்ட லண்டன் பயணம் பற்றி
விசாரிக்குமாறு MDMA அமைப்பை
(பல நோக்கு புலனாய்வுக் குழு) கேட்டுக் கொண்டது.
MDMAவும் விசாரித்தது.ஆனால் சுவாமிக்கு எதிராக
எதுவும் கிடைக்கவில்லை.  .

 

 . 
         
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான
19 பேரின் இன்றைய நிலைமை!
சுவிட்சர்லாந்தில் வாழும் ஆதிரை!
-----------------------------------------------------------------------------
ராஜீவ் கொலை வழக்கில் 26 பேருக்கும்
மரண தண்டனை விதித்தது தடா நீதிமன்றம்.
மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றமானது
இந்த 26 பேரில் 19 பேரை விடுதலை செய்தது.
சற்றேறக்குறைய 8 ஆண்டுகள் சிறைவாசத்தின்
பின்னர் 1999இல் இவர்கள் விடுதலை ஆயினர்.
7 பேருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது.
(முழுமையான விளக்கம் பெற எமது முந்தைய
கட்டுரைகளைப் படிக்கவும்)

விடுதலையான 19 பேரில் சுபா சுந்தரம் மக்களுக்கு
நன்கு அறிமுகமானவர். சுபா ஸ்டூடியோ அதிபர் இவர்.
இவர் தந்தை பெரியாரின் புகைப்படக்காரர்.

உச்சநீதிமன்றம் இவரை விடுதலை செய்தது.
விடுதலையானதும், நக்கீரன் கோபாலின் வேண்டுகோளின்
பேரில் தமது சிறை அனுபவம் குறித்து நக்கீரனில்
ஒரு தொடர் எழுதினார். சில ஆண்டுகள் கழித்து
இறந்து போனார்.

ஆதிரை என்ற இளம்பெண்ணை நினைவு இருக்கிறதா?
ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்
பட்டவர். உச்ச நீதி மன்றம் இவரை விடுதலை செய்தது.

விடுதலையானதுமே இயற்கை எழில் கொஞ்சும்
சுவிட்சர்லாந்து நாட்டிற்குச் சென்றார் ஆதிரை.
திருமணம் செய்து கொண்ட இவர், தம் கணவர்
விக்னேஸ்வரனுடன் தற்போது சுவிட்சர்லாந்தில்
வாழ்ந்து வருகிறார்.

இவரின் கணவர் விக்னேஸ்வரன் யார் தெரியுமா?
அவரும் ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை
விதிக்கப் பட்டவர். ஆதிரையுடன் விடுதலை செய்யப்
பட்டவர்.

மற்றவர்கள் பற்றி அடுத்துக் காண்போம்.
*****************************************************



இந்தியா என்ற பெயர் சங்க இலக்கியங்களில் 

உள்ளதா? தமிழ் இலக்கியங்களில் உள்ளதா?

இல்லை. ஏன் இல்லை என்று தெளிவாக விடை

கூறி இருக்கிறேன்.


இந்தியா என்ற சொல் 15, 16ஆம் 

நூற்றாண்டுகளுக்குப் பின்னர்

உண்டான சொல். பார்த்தலோமியா டயஸ், 

மெக்கல்லன், வாஸ்கோடகாமா 

பயணங்களுக்குப் பின்னர் உண்டான சொல்.


ஐரோப்பியர்கள் பயன்படுத்திய சொல்.

காரல் மார்க்ஸ் காலத்தால் பிற்பட்டவர்.

அவரின் காலம் 1818-1883. அதாவது 19ஆம் 

நூற்றாண்டு. எனவே அவர் இந்தியா என்று 

குறிப்பிடுகிறார். மற்ற ஐரோப்பியர்கள் 

குறிப்பிட்டது போல மார்க்சும் 

குறிப்பிடுகிறார்.


இந்தியா என்பதற்கு 5000 ஆண்டு கால 

வரலாறேனும் உண்டு அல்லவா!

அப்போது அதற்கு என்ன பெயர் இருந்தது?



நேற்று வந்த ஐரோப்பியன் நம்மை என்ன 

சொல்லிக் கூப்பிட்டானா அந்தப் பெயரை 

நான் ஏற்பேன். ஆனால் இந்த மண்ணின் 

பண்டைய பெயரை ஏற்க மாட்டேன் என்பது 

பிரிட்டிஷ் அடிவருடித்தனமே அல்லால் 

வேறு என்ன?    


ஆரியம் திராவிடம் என்று எதுவுமே கிடையாது.

இதை டாக்டர் அம்பேத்கார் மீண்டும் மீண்டும் 

தெளிவாகச் சொல்கிறார். இந்திய மக்களைப் 

பிரித்தாள சூழ்ச்சி செய்த பிரிட்டிஸ்காரன் 

ஆரியன் என்றும் திராவிடம் என்றும் 

பிரிவினையை செயற்கையாக 

உருவாக்கினான்.


பிரிட்டிஸ்காரன் ஏற்படுத்திய 

பிரிவினையை கையில் எடுத்துக் 

கொண்டு இருப்பது பிரிட்டிஷ் 

அடிவருடித் தனம் ஆகும்.   


ஆரியமும் கிடையாது!

திராவிடமும் கிடையாது.

இன்னும் எவ்வளவு நாளுக்கு ஈ வே 

ராமசாமி சொன்ன அறிய திராவிடப் 

போலிப் பிரிவினைக்கு இரையாகிக் 

கொண்டே இருப்பது?     டி     பாத்து பது 


உண்மைதான்!

ஆரிய திராவிட இனவாதம் 

கற்பனையானது. அது புராணப் புரட்டு.


இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் 

India that is Bharath என்று உள்ளதே, அதை 

நாம் ஏற்க வேண்டும் அல்லவா!

அதை ஏற்காவிட்டால் அதைத் தீ 

வைத்துக் கொளுத்துங்கள். எந்தக் 

கோழைக்காவது அதற்குத் துணிச்சல் 

உண்டா?  


இந்தக் கட்டுரை அடையாள அரசியல் ஆசாமிகளுக்கு!
பாரதமா இந்தியாவா?
-----------------------------------------------------------------------------------
மு க ஸ்டாலின் 26.05.2022ல் பிரதர் மோடி பங்கேற்ற 
கூட்டத்தில் பேசினார். அப்போது பிரதமரைக் 
குறிப்பிடும்போது பாரதப் பிரதமர் அவர்களே 
என்று குறிப்பிட்டார். இது கூடாது என்கின்றனர் 
பிரிட்டிஷ் விசுவாசிகள்.   

பாரதம்  என்பது புராணக் குப்பை  அல்ல.
நீராரும் கடலுடுத்த என்று தொடங்கும்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாடிப்
பாருங்கள். அப்பாடலின் இரண்டாம் அடி 
"சீராரும் வதனம் எனத் திகழ் 
பரத கண்டமிதில்" என்று வரும்.
மனோன்மணீயம் சுந்தரனார் பாரதம் 
என்று கூறுவதை பாருங்கள்.

இப்பாடல்தான் தமிழ்நாடு முழுவதும் 1969
முதல் எல்லாப் பள்ளிகளிலும் பாடப்படுகிறது.
அரசு விழாக்களில் பாடப்படுகிறது. எனவே 
பாரதம் என்பது புராணக் குப்பை அல்ல.

இந்தியாவுக்கென்று ஓர் அரசமைப்புச் 
சட்டம் உள்ளது. அதன் முதல் பிரிவு 
(the first article of Indian constitution) 
"India that is Bharath shall be the..........."
என்று உள்ளது. பாரதம் எனப்படும் இந்தியா 
என்பது அதன் தமிழாக்கம்.

இந்தியா என்பது பிரிட்டிஷ்காரன் 
திணித்த பெயர். பாரதம் என்பது 
இங்குள்ள மக்களின் நாவில் புழங்கும் 
பெயர். பிரிட்டிஷ் மோகம் தமிழ்நாட்டில்தான் 
வெறித்தனமாக அதிகம். அது தீது.

பொருளாதாரத்தைப் பற்றி என்றைக்காவது 
பேசி இருக்கிறீர்களாடா அடையாள அரசியல் 
மூடர்களா? எவ்வளவு காலத்துக்கு 
முட்டாளாகவே இருக்கப் போகிறீர்கள்?
**********************************************88

*********************************************

சங்க இலக்கியங்கள் காலத்தால் 
முற்பட்டவை. குறைந்தது 2000 
ஆண்டுகளுக்கு முற்பட்டவை.

அக்காலத்திலும் கடல் கடந்த 
பயணங்கள் உண்டு என்றபோதிலும், 
பார்த்தலோமியா டயஸ், வாஸ்கோடகாமா, 
மெகல்லன் போன்ற யாத்திரிகர்களின்  
15,16ஆம் நூற்றாண்டுகளின் பயணத்திற்குப் 
பின்னரே இந்தியாவை அடிக்கடி 
குறிப்பிட வேண்டிய தேவை எழுந்தது. 

எனவே அவர்கள் இந்துகுஷ் மலைக்கு 
அப்பால் உள்ள இடம் என்பதை 
குறிப்பிடும் பொருட்டும் சிந்து நதி 
பாயும் பிரதேசம் என்று குறிப்பிடும் 
பொருட்டும் இந்தியா என்று 
சொல்லத்  தொடங்கினர். அது காலப்போக்கில் 
பெருவழக்காக ஆகி விட்டது.

சங்க இலக்கியங்களிலும் பாரதம் 
என்ற சொல் அபூர்வமாக உள்ளதாக 
எனக்கு நினைவு. மகாபாரதம் 
என்னும் இதிகாசத்தைக் குறிப்பிடுவதாக 
பாரதம்  என்ற சொல் பயின்று வந்ததாக 
எனக்கு நினைவு.

16ஆம் நூற்ராண்டிற்குப் பின்னர் 
வழங்கப்பட்ட பொருளில் சங்க 
இலக்கியங்களில் பாரதம் என்ற 
சொல் பயின்றுள்ளதா என்றால் 
இல்லை என்றே கருதுகிறேன்.     

சங்க இலக்கியங்களில் இல்லை என்பது 
ஒரு குறைபாடாக ஆகாது.




இந்தியா என்ற சொல் 15, 16ஆம் 
நூற்றாண்டுகளில் பார்த்தலோமியா 
டயஸ்,மெகல்லன், வாஸ்கோட காமா 
ஆகியோரின்பயணத்தின் பின்னர் 
உண்டான சொல்.

அதற்கு முன்பு இந்த நிலப்பரப்புக்கு 
பெயரே இல்லையா? பதில் 
சொல்லுங்கள். பதினாறாம் 
நூற்ராண்டுக்கு முன்னர் 
இந்த நிலப்பரப்பின் பெயர் என்ன?

காரல் மார்க்ஸ் 19ஆம் நூற்றாண்டைச் 
சேர்ந்தவர் (1818-1883). எனவே அவர் தமது 
சக ஐரோப்பியர்கள் வழங்கிய பெயரைப் 
பயன்படுத்துகிறார்.

இங்கு கேள்வி என்ன? 15ஆம் 
நூற்ராண்டுக்கு முன்னர் இந்தியா 
என்ற பெயர் வழங்கவில்லையே!
அப்போது இந்த நிலப்பரப்பின் 
பெயர் என்ன? 

-----------------------------------------



நான் பாரதம் என்பதை ஏற்கிறேன்.
ஏற்காதவர்கள்தான் அதைக் 
கொளுத்த வேண்டும். ஆனால் 
ஏற்காத எந்த ஒருவரும் அதை எரிக்கத் 
தயாராக இல்லை. பிறழ் புரிதலைத் 
தவிர்க்கவும்.