வெள்ளி, 2 செப்டம்பர், 2022

சோவியத் சீன சமூகங்கள் தோல்வியுற்ற 
சோஷலிச மாடல்கள்.அவை முதலாளியத்தை 
விடக் கொடிய சர்வாதிகார அமைப்புகளும் 
ஆகும்.....கவிதா கிருஷ்ணன்.  


ரிலையன்ஸ் அம்பானியிடம் ஆவின் நிறுவனத்தை 
விற்கப்போகும் ஸ்டாலின்!

விற்போம் விற்போம்!
ஆவினை விற்போம்!
அம்பானியிடம் விற்போம்! 

ரிலையன்ஸ் அம்பானியிடம் ஆவின் நிறுவனத்தை 
விற்கப்போகும் ஸ்டாலின்!

இவர்களை விட அதிகக் குற்றம்
புரிந்துள்ள, புரிந்து வருகின்ற
கயவன் பியூஸ் மனுஷ், கயவன் 
சவுக்கு சங்கர் ஆகியோர் மீது கை 
வைக்க தமிழக போலீசுக்கு தைரியம் கிடையாது.


முக்கிய குறிப்பு!
--------------------------
இந்தச் செய்தி எவனோ ஒரு ஈனப்பயல் 
வாட்சப்பில் எழுதியது அல்ல.
மின்னம்பலம் என்னும் இணையப்  
பத்திரிக்கையில் வந்த செய்தி இது.

மின்னம்பலம் திமுக ஆதரவுப் பத்திரிக்கை.
நக்கீரன் காமராஜ் நடத்தும் பத்திரிக்கை.
டெல்லி சவுண்டிப் பாப்பான் ராஜன் குறை 
அடிக்கடி இதில் கட்டுரை எழுதுவான்.

திமுக ஆதரவுப் பத்திரிகையில் 
வந்த செய்தி இது என்ற உண்மை 
மண்டையில் ஏற வேண்டும்.


நெருக்கடியான அந்த ஆண்டுகளில் 2012, 2013
சனல் இடமருகுவுக்கு ஆதரவாக நின்றது 
நான் மட்டுமே.

வேறு எவரும் இல்லை என்பது கசப்பான உண்மை.
திகவினரைச் சென்று சந்தித்து சனல் இடமருகுவுக்கு 
ஆதரவு தரக் கோரினேன். பயனில்லை.

அன்றிலிருந்து இன்றுவரை சனல் இடமருகு பற்றி 
எழுதி வருபவன் நான் ஒருவன் மட்டுமே!
எவனாவது ஜனசக்தியில் எழுதி இருக்கிறானா?
இல்லை.

எவனாவது தீக்கதிரில் எழுதி இருக்கிறானா?
இல்லை.

எந்த மாவோயிஸ்ட்டாவது எழுதி 
இருக்கிறானா? இல்லை. ஒரு பயலும் எழுதவில்லை.

கிறிஸ்துவ மதபீடங்களை எதிர்ப்பது என்பது 
இவனுகளுடைய ரத்தத்திலேயே கிடையாதே!
இவனுக்கள் எப்படி எதிர்ப்பான்?

 
 


 


  
    

நக்சல்பாரி பெண் தலைவர் கவிதா கிருஷ்ணன் 
கட்சியை விட்டு நீக்கம்!
====================
CPI ML (Liberation) என்று ஒரு கட்சி. கட்சி அல்ல;
நக்சல்பாரிக்குழு. இதன் மத்தியக் கமிட்டி 
உறுப்பினராக இருப்பவர் திருமதி கவிதா 
கிருஷ்ணன்.

முதலாளித்துவ அரசுகளை விட 
சோஷலிச அரசுகள் கூடுதலான பாசிசத் 
தன்மையுடன் இருப்பதாக அண்மையில் 
கவிதா கிருஷ்ணன் அவர்கள் டுவிட்டர் 
உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில்
எழுதி இருந்தார்.

அவரின் கட்சி இதை ஏற்றுக் கொள்ளவில்லை.
அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட 
அனைத்துப் பொறுப்புகளில் இருந்து கவிதா 
கிருஷ்ணனை அவரின் கட்சி நீக்கி உள்ளது.
----------------------------------------------------------------
  

வியாழன், 1 செப்டம்பர், 2022

தோழர் விவேக் தோழர் பத்மா தம்பதியினருக்கு 
தமிழக கியூ பிராஞ்சு போலீசு 
இழைக்கும் மனிதத் தன்மையற்ற கொடுமைகள்!
---------------------------------------------------------------------------
தோழர் விவேக் அவர்களின் முகநூல் பதிவு 
இங்கு மறுபிரசுரம் செய்யப் படுகிறது.
பார்க்க: Vivek Ananthan 
---------------------------------------------------------------  
தோழர்களே...
தோழர் பத்மா கடும் சட்டப் போராட்டத்துக்குப் பிறகு உடல்நிலை (இதய நோய்) காரணமாகப் பிணை பெற்று ஏப்ரல் 26 ல் வெளிவந்தார். தற்போது மருத்துவம் பார்த்துக் கொண்டு பிணை நிபந்தனைக்காக சென்னையில் தங்கி கையெழுத்திட்டு வருகிறார். அவர் பிணையில் வருவதற்கு சில மாதங்கள் முன் பிணையில் வந்த நானும் அவருடன் வீடு எடுத்து தங்கி வருகிறோம்.சகட்டு மேனிக்கு போடப்பட்ட பொய் வழக்குகளுக்காக நீதி மன்றங்களுக்கு செல்வதே எனக்கு வேலையாக உள்ளது.பொருளியல் ரீதியாக மிகுந்த கடினங்களுக்கு இடையே வழக்குகளை சந்திப்பதே பெரும் தண்டனையாகத் தொடர்ந்து வருகிறது.
இத்தகைய நிலையில் உளவுத்துறை அரசியல் சட்டம் வழங்கியுள்ளதாகக் கதையளக்கப் படும் வாழும் உரிமையை காலில் போட்டு மிதித்து, எங்களது அன்றாட இருத்தலையே நிலையற்றதாக மாற்றி கொடூரமாக நடந்து கொள்கிறது.
கடந்த 2 மாதங்களாக ஒரு வீட்டில் குடியிருக்க முடியாமல் வீடு தேடி ஓடுவதையே எங்களது ஒரே வேலையாக உளவுத்துறை மாற்றி விட்டுள்ளது.
பூந்தமல்வலி நீதிமன்றத்தில் கையெழுத்திட வசதியாக திருமழிசையில் ஜூலை வீடு பார்த்து குடி வந்த 10 நாட்களேக்குள்ளேயே வீட்டு உரிமையாளருக்கு நெருக்கடி தந்து வீட்டை காலி பண்ண ( தங்கள் உறவினருக்கு வீடு அவசரமாகத் தேவைப்படுகிறது என்று கூறி) முயன்றது உளவுத்துறை. நாங்கள் வீட்டு உரிமையாளரிடம் பேசி 2 மாத தவணையில் ஆகஸ்ட் இறுதி வரை அங்கிருந்தோம்.இடையில் இரண்டு வீடுகளில் தந்த முன்பணத்தை திரும்ப தந்துவிட்டனர்.
அவர்கள் கூறியதும் அதே போலிக்காரணம்தான். உளவுத்துறையின் கற்பனைத்திறன் அவ்வளவுதான்!
ஒரு வழியாக ஓரு வீட்டை வாடகைக்கு எடுத்து நேற்றுதான் மிகுந்த சிரமத்துக்கிடையில் 2 வது மாடிக்கு பொருட்களை ஏற்றிவிட்டு, மாலை கீழே வந்தால், "உங்கள் மீது ரிபோர்ட் வந்துள்ளது" என்று வீட்டு உரிமையாளர் கூறினார். என்ன குற்ற சாட்டு, யார் கூறினார்கள் என்று கூற மறுத்துவிட்டார். இன்று காலை கூப்பிட்டனுப்பி உடனே வீட்டை காலி செய்யுங்கள் என்கிறார்.நாம் "இது எப்படி சரி?" என்ற போது, Q பிரிவு கற்றுத் தந்துள்ள "எனது மகனுக்கு அவசரமாக வீடு தேவைப்படுகிறது" என்ற போலிக் காரணத்தைக் கூறுகிறார்.
வீட்டு உரிமையாளரை மிரட்டுவது மட்டுமின்றி, வீடு பார்த்து தருபவர்கள், அதற்காக உதவி செய்யக்கூடிய நண்பர்கள்/தோழர்கள் என அனைவரையும் தொடர்ச்சியாக மிரட்டி வருவது உளவுத்துறையின் தொடர் சட்டவிரோத வேலையாக இருந்து வருகிறது.ஏறத்தாழ யாருடைய உதவியும் இன்றி தனிமைப்படுத்தி,வீடும் இல்லாமல் செய்துகொடூரமாக ஒடுக்க விரும்புகிறது தமிழக 'கியூ' பிரிவுபோலீஸ்.
சட்டபூர்வமாக நீதிமன்றத்தில் பிணை பெற்று நீதி மன்ற நிபந்தனைகளனைத்தையும் நிறைவேற்றி வரும்போதுதான் இந்த சட்டவிரோத அடக்குமுறைகள்!
குடிருப்பு உரிமை வாழும் உரிமையின் பகுதியாக ஒரு மனிதனின் அடிப்படை உரிமை எனஅரசியல் சட்டம் கூறுகிறது. ஆனால் உளவுப் பிரிவு காவல் துறையினர் வாழும் உரிமையையே பறித்துகொடுமை செய்ய முயற்சிக்கின்றனர். சட்டப்படியாக பிணை பெற்று, தொடர்ச்சியாக நிபந்தனை கையெழுத்திட்டு கொண்டு,போடப்பட்ட பல பொய் வழக்குகளையும் சந்தித்துக் கொண்டுள்ள சூழலில், நான் ஏற்கனவே கூறியுள்ளபடி தனிமைப்படுத்தப்பட்டு கடுமையான பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சிக்கல்களில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு குடியிருப்ப உரிமையையும் பறிப்பது என்பதுஎத்தகைய கொடூரமான சட்ட விரோத தண்டனை! .அதிலும் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண் என்று தெரிந்தும் அவரையும் தொடர்ந்து அலைக்கழிப்பது எத்தகைய கேவலமானஅடக்குமுறை ஆட்சி!!
தனது அரசு தனிமனித உரிமைகளை மிக முக்கியமாகக் கருதுவதாகக் கதை அளந்து கொண்டே, தனது உளவுத்துறை மூலமாக அப்பட்டமான மனித உரிமை மீறல்களை நிகழ்த்துவது, திமுக அரசின் கபட வேடத்தையே காட்டுகிறது. தமிழக நிதித்துறை அமைச்சர் ஆங்கிலதொலைக்காட்சி அலை வரிசைகளில் 'அர்பன் நக்சல்கள்' என்ற பெயரில் மைய அரசு சர்வாதிகாரத்தை நிலை நாட்டுவதாக கதையடித்துக் கொண்டே, தமிழகத்தில் அதே வேலையை உளவுத்துறை மூலம் செய்வது ஜனநாயகமா அல்லது பாசிசத்திற்கு துணை போவதா?
உளவுத்துறைக்கு ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். நீங்கள் எத்தகைய கொடும் அடக்குமுறைகளை ஏவினாலும் உங்களது பாசிச ஒடுக்கு முறைகளுக்கு முன் எக்காலத்திலும் மணடியிடுவோம் என கனவு காணாதீர்கள்!
Vivek Ananthan

இலக்கியம்!
சின்னவளை முகம் சிவந்தவளை!
கம்பனின் ஒளியில் கண்ணதாசன்!
------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------
அது ஒரு நீர்த்துறை! தவளைகள் தண்ணீரில் 
ஓடியாடிக் கொண்டிருக்கின்றன. அத் தவளைக்
கூட்டத்தில் ஒரு சூல் கொண்ட தவளையும்
இருக்கிறது.

சூல் கொண்ட தவளையின் கணவன் வேறொரு 
பெண் தவளையின் அருகில் அமர்ந்து சிரித்துப் 
பேசிக் கொண்டிருக்கிறது. இதைப் பார்த்து 
விட்ட சூல் கொண்ட தவளை கோபம் கொண்டு 
தண்ணீரை அடித்துக் கலக்குகிறது.

இந்தக் காட்சியை கம்பர் காவியமாக்குகிறார்.
"சேற்றவளை தன்கணவன் அருகிருப்பச் சினந்திருகி 
சூற்றவளை நீருழக்கும் துறைகெழுநீர் வளநாடா" 
 
இந்த உவமையின் மூலம், சூர்ப்பனகை, ராமனின் 
அருகில் இருக்கும் சீதையைக் கண்டு தான் 
மனம் பொறுக்காமல் இருப்பதை இலக்குவனிடம் 
கூறுகிறாள். முழுப்பாடலையும் இப்போது பாருங்கள்.

ஏற்றவளை வரிசிலையோன் இயம்பாமுன் இகலரக்கி  
சேற்றவளை தன்கணவன் அருகிருப்பச் சினந்திருகி 
சூற்றவளை நீருழக்கும் துறைகெழுநீர் வளநாடா
மாற்றவளைக் கண்டக்கால் அழலாதோ மனமென்றாள்.

இது என்ன காண்டம், என்ன படலம் என்று வாசகர்கள் 
தாமே முயன்று அறிதல் வேண்டும்.  
 
இகலரக்கி என்ற பதத்தைக் கருதுக. திருக்குறளில் 
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் என்ற ஈற்றடியில் 
வரும் இகல் வேந்தர் என்ற பதத்தையும் கருதுக.

"கொடித்தேர் நும்மோரன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யுமிவ் விகலே"  
 என்னும் புறநானூற்றுப்பாடலிலும் வரும் இகல் 
என்ற சொல்லையும் கருதுக. இகல் என்றால் என்ன 
என்று அறிந்திடுக

இகல் என்பது பகைமை (enmity) என்று பொருள்படும்.
எனினும் hostility என்ற சொல்லே பொருத்தமான 
சொல்லாகும்.   .   

இதுவரை கம்பரைப் பார்த்தோம். இனி கண்ணதாசனுக்கு 
வருவோம். கம்பரின் இந்தப் பாடலை கண்ணதாசனும் 
படித்தார். சேற்றவளை, சூற்றவளை, மாற்றவளை,
ஏற்றவளை  என்று எதுகையாகக் கம்பர் அடுக்குவதைப் 
பார்த்தார். மனம் பறிகொடுத்தார்.

திரைப்படத்தின் ஒரு காட்சிக்குப் பாடல் எழுத 
நேர்ந்தபோது, கம்பரின் தாக்கத்தால் சின்னவளை, 
சிவந்தவளை, என்னவளை, பொன்னவளை என்று 
அடுக்குகிறார் கண்ணதாசன். பல்லவியில் மட்டுமல்ல, 
சரணங்களிலும் வளை  வளை என்று அனைத்துமே 
வளைதான்.

இதோ பாடல்:
சின்னவளை முகம் சிவந்தவளை நான் 
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு 
என்னவளை காதல் பொன்னவளை நான் 
ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு.
(படம்: புதியபூமி ஆண்டு 1968)  

கம்பரைப் படியுங்கள்; கண்ணதாசனையும் படியுங்கள்.
கூடவே அவர்களை பற்றி விளக்கும் என்னுடைய 
கட்டுரைகளையும் படியுங்கள். 

இதெல்லாம் உங்களால் படிக்க முடிகிறதா?
படிக்கும்போது ஒரு textual pleasureஐ நீங்கள் 
அனுபவிக்கிறீர்களா? இல்லையா?

இல்லையென்றால் நான் பன்றிக்கூழ்ப் பத்தரில் 
தேமா வடிக்கிறேனா? நாலடியார் தெரியுமா?
படித்ததுண்டா?

பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தர்றால் 
என்று கூறுகிறதே, அதன் பொருள் அறிவீர்களா?
முயன்று அறிந்திடுங்கள்!
----------------------------------------------------------------- 

 
   
 

  

புதன், 31 ஆகஸ்ட், 2022

 கைத்தல நிறைகனி!
---------------------------------
இந்திய அரசின் கைத்தல நிறைகனியாக பெகாசஸ் 
என்னும் உளவு மென்பொருள் இருப்பதாக 
எதிர்க்கட்சிகளும் சவுண்டிப் பாப்பான் என் ராமும் 
கூறினர். அதை நான் மறுத்தேன். இந்திய அரசு 
பெகாசசைப் பயன்படுத்தவில்லை என்று அன்றே 
கூறினேன். 

அது தற்குறி தேசமான இந்தியாவின் கவனத்தை 
ஈர்க்கவில்லை. நான் சொன்னதைப்  பலராலும்
புரிந்து கொள்ள இயலவில்லை. அநேகமாக 
மிகப்பலரின் மண்டையில் நான் சொன்னது 
ஏறவில்லை.

இன்று உச்சநீதிமன்றமே நான் சொன்னது சரிதான் 
என்று தீர்ப்புக்கூறி விட்டது. இந்திய அரசு  பெகாஸஸ் 
உளவு மென்பொருளைப் பயன்படுத்தவில்லை என்று
உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறி விட்டது.

பெகாஸஸ் பெகாஸஸ் என்று கூப்பாடு போட்டானே 
சவுண்டிப் பாப்பான் தி ஹிண்டு என் ராம். அவன் 
சொன்னது தப்பு என்று தீர்ப்பு வந்து விட்டதே!
தற்கொலை செய்து கொண்டு செத்துப் போவானா 
என் ராம்!

நான் சொன்னதை சரியாகப் புரிந்து கொண்டவர்கள் 
எவரேனும் இருக்கக் கூடும். இந்திய அரசு பெகாசஸ்
உளவு மென்பொருளைப் பயன்படுத்தவில்லை என்று 
மட்டும்தான் நான் கூறினேன். எந்தஒரு  உளவு 
மென்பொருளையும் இந்திய அரசு பயன்படுத்தவில்லை 
என்று அதற்குப் பொருள் அல்ல.

உண்மையில் பெகாஸஸ் ஒரு substandard மென்பொருள்.
அதைவிடச் சிறந்த உளவு மென்பொருளை இந்திய 
அரசு பயன்படுத்துகிறது. இந்தியாவின் DRDO
பெகாசாசை விடச் சிறந்த உளவு மென்பொருளைத்
தயாரித்துள்ளது. அதன் திறன் பெகாசாசை விட 
1.32 மடங்கு அதிகமானது. இதைத்தான் இந்திய அரசு 
பயன்படுத்தி வருகிறது.

திருக்குறளில் உள்ள ஒற்றாடல் என்னும் அதிகாரத்தில் 
உள்ள குறட்பாக்களைப் படித்ததுண்டா? 
படிக்கவில்லையெனில் படியுங்கள்.  

முன்பு நான் இயற்றிய பெகாசஸ் வெண்பா
----------------------------------------------------------------- 
பாடா வதியே தரக்குறைவே வேண்டாமே 
கேடான மென்பொருளே இந்தியா --நாடா  
பெகாசசே  பேயே பிசாசே இகழ்வோமே  
ஆகாதென் றுன்னை யே.     


  
      
 

பில்கிஸ் பானுவும் காஸ்மீரப் பண்டிட்டுகளும்!
----------------------------------------------------------------------
ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப் 
பட்டார். உடனே அதிமுக கயவர்கள் தர்மபுரியில் 
பேருந்தை எரித்தனர். கோகிலவாணி, ஹேமலதா, 
காயத்ரி என்ற மூன்று மாணவிகள் எரித்துக் 
கொல்லப் பட்டார்கள். குற்றவாளிகள் யாருக்கும் 
மரண தண்டனை இல்லை. ஆயுள்தான்!

அதிலும் எல்லாப் பயல்களும் சீக்கிரமே 
விடுதலையாகி வெளிவந்து விட்டார்கள். அதிமுக 
அரசின் கைங்கர்யம் இது.

மதுரையில் உள்ள மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதியை 
திமுக ரவுடிப் பயல்கள் படுகொலை செய்தனர்.
தூண்டி விட்டவன் பெரிய இடம். லீலாவதியின் 
கொலையாளிகள் சீக்கிரமே தண்டனைக்கு காலம் 
முடிவதற்கு முன்பே வெளிவந்து விட்டனர். 
கருணாநிதியின் கைங்கர்யம் இது.

தா கிருஷ்ணனைக் கொன்றவன் யார் என்று 
உலகத்துக்கே தெரியும். அவன் சுண்ணி மயிரைக் கூட 
இந்த சட்டத்தால் ஆட்ட முடிந்ததா?

மதுரை தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தை 
எரித்தவன் யார்? அங்கு வேலை பார்த்த மூன்று 
ஊழியர்களைக் கொன்றவன் யார்? விடை எல்லோருக்கும் 
தெரியும்! தெரிந்து என்ன செய்ய முடியும்?
குற்றவாளிகளை கருணாநிதி காப்பாற்றவில்லையா! 

அண்ணாத்துரை தாலியறுத்த நாளில் இவனும்
ராமச்சந்திர மேனனுக்கு குஷ்டம் வந்த நாளில் 
அவனும் ஜெயிலில் உள்ள கைதிகளை அவுத்து 
விடுவது வாடிக்கை.

இதையெல்லாம் விட மிகவும் கொடூரமானது 
மேலவளவு முருகேசன் படுகொலை! ஒரு ரிசர்வ் 
தொகுதியில் முருகேசன் என்னும் தலித், 
பஞ்சாயத்துத் தலைவராக வெற்றி பெற்று விட்டார்.
இது பொறுக்காமல் அவரைக் கொன்று விட்டான்கள்  
சாதி வெறி நாய்கள்.  

முருகேசனைக் கொன்று, அவரின் தலையைத் 
துண்டித்து, அந்த தலையை ரோட்டில் பந்து 
போல உருட்டிக் கொண்டே சென்றார்கள் சாதி 
வெறி நாய்கள். குற்றவாளிகள் யாருக்கும் 
மரண தண்டனை இல்லை. ஆயுள்தான்!
ஆனால் எல்லாக் குற்றவாளிகளும் தண்டனைக் 
காலம் முடிவதற்கு முன்னரே சீக்கிரமாகவே  
விடுதலை ஆகி விட்டார்கள்.

ராஜிவ் காந்தியைக் கொன்ற, அவரோடு சேர்த்து 
18 பேரைக் கொன்ற பேரறிவாளன், நளினி 
போன்ற சி ஐ ஏ கைக்கூலிகளை விடுதலை 
செய்யக்கோரி தமிழ்நாட்டில் எத்தனை போராட்டம்!

இவ்வளவு விஷயத்தில் வாயில் மலத்தைத் திணித்துக் 
கொண்டு அமைதியாக இருந்த குட்டி முதலாளித்துவம் 
பில்கிஸ் பானு என்று கூடுதல் டெசிபெல்லில் கத்துவது 
எப்படி இன்றைய நடைமுறைக்குப் பொருத்தமாக 
இருக்கும்?

நீதிமன்றங்கள் மேலே போகப்போக லிபரல் 
பூர்ஷ்வாக்களை நீதியரசர்களாகக் கொண்டது.
பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகளை நீதிமன்றம் 
முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி உத்தரவு 
பிறப்பிக்கிறது. எனவே குஜராத்தை அரசு விடுவிக்கிறது.

ஜனநாயகத்தில் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை 
குறைக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 
அரசுக்கு உண்டு. நவீன அரசுகள் அனைத்துக்கும் 
இந்த அதிகாரம் உண்டு. இதைப் புரிந்து கொள்ள 
முயல்வோம்.

காஷ்மீரில் அங்குள்ள சுதேசி மக்களான 
பண்டிட்டுகளுக்கு நேர்ந்த கொடுமைக்கு முன்னால் 
பில்கிஸ் பானுவெல்லாம் எம்மாத்திரம்? நூற்றுக்
கணக்கான காஷ்மீர்ப் பண்டிட்டுகள் கொல்லப் 
பட்டனர். ஆயிரக் கணக்கான காஷ்மீரிப் பெண்கள்
கற்பழிக்கப் பட்டனர். உலக வரலாற்றில் குரூரத்துக்கும்
கோடோர்ரத்தும் பேர் போனவை காஸ்மீர்ப்
பண்டிட்டுகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள்.
ஆனால் எவர் மீதும் ஒரு வழக்கு கூடக் கிடையாது.
இது தெரியுமா உங்களுக்கு?
********************************************* கொடூரத்துக்கும் 
 குற்றவாளிகளான காஷ்மீர் முஸ்லிம்கள்  


பில்கிஸ் பானுவுக்கு நிகழ்ந்தது கொடூரத்திலும்
கொடூரம்; பயங்கரமான கொடூரம்! அதே நேரத்தில் 
காஷ்மீரில் பண்டிட் இனப் பெண்களுக்கு நிகழ்ந்தது 
இதை விட ஆயிரம் மடங்கு அதிக கொடூரம்!
அதை பற்றி ஒரு இழவும் தெரியாமலே 
வாழ்ந்து கொண்டிருக்கிறோமே சோற்றால் அடித்த 
பிண்டங்களாக!      
  
    
        
    

 

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

 

ரவிசங்கர் பிரசாத் அவர்களே,
அலைக்கற்றை விலையைக் குறையுங்கள்!
குறைக்காவிட்டால் 4g, 5g ஏலம் தோல்வி அடையும்!
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------
2ஜி முதல் 5ஜி வரை உலகில் உள்ளது. இந்தியாவிலும்
உள்ளது. இந்தியாவில் 5ஜி ஏலம் மார்ச் 31ல் நடைபெறும்.
முன்னதாக 2ஜி,3ஜி,4ஜி ஏலம் மார்ச் 1ல் தொடங்குகிறது.
ஒவ்வொரு தலைமுறை அலைக்கற்றையும் அதற்கேற்ற
அதிர்வெண் (frequency) கொண்டது. உலகின் அனைத்து
நாடுகளுக்கும் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்யும்
பணியை ஐநா சபையின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பான ITU (International Telecommunications Union) மேற்கொள்கிறது.
டாக்டர் மன்மோகன்சிங் பிரதமராகவும் கபில் சிபல்
தொலைதொடர்பு அமைச்சராகவும் இருந்த காலம்
தொட்டு, அலைக்கற்றைகள் ஏலத்தின் மூலமே
ஒதுக்கீடு செய்யப் படுகின்றன.
அதற்கு முன்பு ஆ ராசா தொலைதொடர்பு அமைச்சராக இருந்தபோது, 2ஜி அலைக்கற்றையை ஏலம் விடாமல் லஞ்சம் வாங்கிக் கொண்டு தமக்கு வேண்டியவர்களுக்கு வழங்கினார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டு உண்மையே என்று உணர்ந்து, 2008-2010 காலக்கட்டத்தில் ஆ ராசா வழங்கிய 122 உரிமங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
உச்சநீதிமன்ற நீதியரசர் கங்குலி 2012 பிப்ரவரியில்
இத்தீர்ப்பை வழங்கினார். வரலாற்றுச் சிறப்பு மிக்க
இந்தத் தீர்ப்புக்குப் பின்னர், ஏலம் விடாமல்,
லஞ்சம் வாங்கிக் கொண்டு அலைக்கற்றையை வழங்கும் ஊழல் பீடித்த நடைமுறை மரணத்தைத் தழுவியது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, அன்றைய
தொலைதொடர்பு அமைச்சர் கபில் சிபல் 2ஜி
அலைக்கற்றைக்கான ஓர் ஏலத்தை நவம்பர் 2012ல்
நடத்தினார். Base priceஆக ரூ 14,000 கோடியை நிர்ணயித்து விட்டு, ரூ 30,000 கோடி வருவாய் வரும் என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு காத்திருந்தது TRAI அமைப்பு.
ஆனால் கபில் சிபல் நடத்திய ஏலம் படுதோல்வி அடைந்தது. பல நாட்கள் நடைபெற வேண்டிய ஏலம், இரண்டாம் நாளே முடிவுக்கு வந்தது. பேராசையோடு டிராய் நிர்ணயித்த
அநியாய விலைக்கு ஏலம் எடுக்க எந்த நிறுவனமும்
முன்வரவில்லை.
ரூ 30,000 கோடி எதிர்பார்த்த இடத்தில்,
ரூ 9407.64 கோடி மட்டுமே வருவாயாக வந்தது. இந்த
ஏலத்துக்குப் பொறுப்பான அமைச்சர்கள் கபில் சிபலும்
ப சிதம்பரமும் அவமானத்தால் தலைகவிழ்ந்து நின்றனர்.
ஒரு இட்லியின் விலை ரூ 50 என்று சொன்னால் கூட,
பல்லைக் கடித்துக் கொண்டு வாங்கி விடுவார்கள்.
ஆனால் ஒரு இட்லி விலை ரூ 100 என்று சொன்னால்
எவன் வாங்குவான்? இதுதான் கபில் சிபலின் ஏலத்தில்
நடந்தது. இந்த ஏலம் பொன் முட்டையிடும் வாத்தை
அறுத்துப் பார்க்கும் முயற்சி என்று வர்ணித்தார்
கபில் சிபல்.
வேண்டா வெறுப்புடன் இந்த ஏலத்தை
நடத்தினார் கபில் சிபல். உச்சநீதிமன்றம் 122 உரிமங்களை ரத்து செய்து விட்டதால், ஏலம் நடத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டு விட்டது.
தோல்வி அடைந்த இந்த ஏலம் மத்திய அரசுக்கு ஒரு
படிப்பினையைத் தந்தது. நிறுவனங்களின் வாங்கும்
சக்தியைக் கணக்கில் கொள்ளாமல், அநியாய விலைக்கு அலைக்கற்றையை விற்க முயன்றால் அந்த முயற்சி தோல்வியைத் தழுவும் என்பதே அந்தப் படிப்பினை.
பாஜக ஆட்சியின்போது, தொலைதொடர்பு அமைச்சர்
ரவிசங்கர் பிரசாத் 2016ல் ஒரு அலைக்கற்றை ஏலத்தை
நடத்தினார். அது பிரதானமாக 4ஜி ஏலம். 2ஜி, 3ஜி, 4ஜி
அலைக்கற்றைகள் அனைத்தும் ஏலம் விடப்பட்டன.
டிராய் அமைப்பு வழக்கம் போல அநியாய விலையை
நிர்ணயித்து இருந்தது.
உலகிலேயே அலைக்கற்றையை அதிக விலைக்கு விற்கும் நாடு இந்தியாதான். 2010ல் நடந்த 3ஜி ஏலம் ரூ 67,000 கோடி வருவாயை அரசுக்குத் தந்தது. டிராய் நிர்ணயித்த Base price ரூ 30,000 கோடிதான். இதுவே மிகவும் அதிகமான விலை.
என்றாலும் இந்த ரூ 30,000 கோடிக்கு 3ஜி அலைக்கற்றையைப் பெற எந்த நிறுவனத்தாலும் இயலாது.அதை விட
அதிகத்தொகை செலுத்தியாக வேண்டும்.
ஏனெனில் அலைக்கற்றையை எந்த ஒரு நிறுவனமும் ஏலத்தின் மூலம்தான் பெற முடியும் என்பதாலும், ஏலத்தில் பங்கேற்பது மேலும் விலையை ஏற்றி விடும் என்பதாலும் ரூ 30,000 கோடியில் விவகாரம் முடிவுக்கு வராது. இதன் நிகர விளைவு தொலைதொடர்பில் உள்ள நிறுவனங்கள் திவால் ஆவதுதான்.
இது எந்த விதத்திலும் தேசத்தின்பொருளாதாரத்துக்கோ
தொழில் வளர்ச்சிக்கோ உகந்தது அல்ல.
தொலைதொடர்புத் துறையை பெருமளவுக்கு சீரழித்து
விட்டு 2014ல் காங்கிரஸ் ஆட்சி விடைபெற்றுக் கொண்டது. தொடர்ந்து வந்த பாஜக ஆட்சியில் தொலைதொடர்பு குறித்த அரசின் கொள்கைகள் கொஞ்சமும் மாறவில்லை.
ரவி சங்கர் பிரசாத் தொலைத்தொடர்பு அமைச்சராக
இருந்தார். இவர் ஓர் ஏலத்தை நடத்தினார்.
4ஜி அலைக்கற்றையின் முதல் ஏலம் அது. அதில் 2ஜி மற்றும் 3ஜி அலைக்கற்றைகளும் ஏலம் விடப்பட்டன. 700 MHz என்னும் அலைக்கற்றையை முதன் முதலாக அரசு இந்த ஏலத்தில் அரசு அறிமுகம் செய்கிறது. மிகவும் திறன் வாய்ந்த அலைக்கற்றை இது. இது low band என்ற போதிலும், 4ஜி மற்றும் 5ஜிக்குப் பெரிதும் பயன்பட வல்லது.
இதற்கு முன்பு, தூர்தர்ஷன் இந்த அலைக்கற்றையை (700MHz) வைத்திருந்தது. 700 MHz அலைக்கற்றைக்கு டிராய் அநியாயத்திலும்
அநியாயமான விலையை நிர்ணயித்தது. எவ்வளவு
விலை தெரியுமா? ஒரு மெகா ஹெர்ட்ஸ் விலை
ரூ 11523 கோடி. உதிரியாக ஒரு மெகா ஹெர்ட்ஸ் என்று
வாங்க முடியாது. 5 MHz கொண்ட ஒரு தொகுப்பாக
(block) வாங்க வேண்டும். ஒரு தொகுப்பின் விலை
ரூ 57615 கோடி.
இவ்வளவு அநியாய விலை நிர்ணயித்ததால், 2016 ஏலத்தில் பல நிறுவனங்கள் குறிப்பாக ஏர்டெல்
இந்த 700 MHz அலைக்கற்றையை வாங்கவில்லை.
இதன் காரணமாக தற்போது நடைபெற உள்ள ஏலத்தில் (2021 மார்ச்) விலையைக் குறைத்துள்ளது டிராய்.
அதாவது 700 MHz அலைக்கற்றையின் விலையை 43 சதம் குறைத்தது டிராய் அமைப்பு. குறைக்கப்பட்ட பின்னர் விலை ரூ 6568 per MHz. 5 MHz கொண்ட ஒரு தொகுப்பின் விலை (price per block) ரூ 32,840 கோடி.
இவ்வளவு குறைத்த பின்னரும் இந்த விலை அநியாய
விலைதான். ஒரு இட்லி ரூ 500 என்று விலை வைத்து விட்டு பின்னர் அதை ஒரு இட்லி ரூ 250 என்று குறைத்து விட்டால் அது விலைக்குறைப்பாகி விடாது.
தற்போதைய மார்ச் 2021 ஏலத்திலும் 700 MHz அலைக்கற்றையை வாங்கப் போவதில்லை என்று ஏர்டெல் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
The prices are exorbitant என்று நிறுவனங்களின் சார்பாக
காய் அமைப்பு (COAI = Cellular Operators Association of India)
அரசிடம் தெரிவித்து உள்ளது. இருந்தும் அரசு
செவிசாய்க்கவில்லை.
இந்தியாவில் உள்ள எந்த ஒரு டெலிகாம் நிறுவனமும்
தன வசம் எவ்வளவு அலைக்கற்றையை வைத்திருக்கிறது என்று பார்க்கலாம். சர்வதேச அளவில் பார்த்தால்,
உலக சராசரி (global average) 50MHz.
இந்திய சராசரி2017ஆம் ஆண்டு நிலவரப்படி 31 MHz.
இவ்வளவு குறைந்த அளவில் அலைக்கற்றையை வைத்துக் கொண்டு சேவை வழங்கினால், call dropsஐத் தவிர்க்க இயலாது.
இப்போது சிந்தித்துப் பாருங்கள். ஒரு மெகா ஹெர்ட்ஸ்
700 MHz அலைக்கற்றையின் விலை ரூ 6568 கோடி என்றால், capex அறுத்துக் கொண்டு ஓடுமே! யார் வாங்குவார்கள்?
எனவே மதிப்புக்குரிய டெலிகாம் அமைச்சர் ரவிசங்கர்
பிரசாத் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
அலைக்கற்றையின் விலை அநியாயத்துக்கு அதிகம்.
அதை மேலும் குறைக்க வேண்டும். குறிப்பாக
எல்லோருக்கும் தேவைப்படும் 700 MHz அலைக்கற்றையின் விலையை ரூ 1000 கோடி (per MHz) என்பதாகக் குறைக்க வேண்டும்.
அடுத்து அலைக்கற்றையின் upfront payment
ஏலம் எடுத்த உடன் 5 சதம் என்பதாக மட்டுமே இருக்க
வேண்டும். நிறுவனங்கள் Service Roll out செய்த பின்னர்,
மீதிப் பணத்தில் ஒரு கணிசமான சதவீதத்தை வாங்கிக்
கொள்ளலாம். பின்னர் EMI மூலம் பாக்கி முழுவதையும்
செலுத்தலாம். இப்படி ஒரு ஏற்பாட்டை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்ய வேண்டும் என்று நியூட்டன் அறிவியல் மன்றம் வேண்டுகோள் விடுக்கிறது.
இதே அநியாய விலையில் அலைக்கற்றையை வைத்துக் கொண்டு ஏலத்தை நடத்தினால், அது வெறும்
கண்துடைப்பாகவே இருக்கும். எந்த ஒரு நிறுவனமும்
உற்சாகத்துடன் ஏலத்தில் பங்கேற்கும் நிலை தற்போது
இல்லை. தொலைதொடர்பில் ஏதேனும் ஒரு நிறுவன்த்தின் அல்லது நிறுவனங்களின் MONOPOLY அல்லது DUOPOLY ஏற்பட்டு விடக்கூடாது என்பது அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ள அரசின் நிலை. இது நடைமுறைக்கு வர வேண்டுமென்றால், அலைக்கற்றைகளின் விலைக்குறைப்பு மிகவும் அவசியம்.
கபில் சிபலும் ப சிதம்பரமும் 2012ல்
அலைக்கற்றைக்கு அதிக விலை வைத்து
நடத்திய ஏலம் படுதோல்வி அடைந்ததை
ரவிசங்கர் பிரசாத் அவர்களே நினைவு
கூருங்கள். கபில் சிபலும் சிதம்பரமும்
அடைந்த அவமானத்தை இனி ஒருவரும்
அடையக்கூடாது என்று உறுதி பூணுங்கள்.
அலைக்கற்றைகளின் விலையைக் குறையுங்கள்!
வரலாற்றில் இடம் பெறுங்கள்!
-----------------------------------------------------------------------
பின்குறிப்பு:
இக்கட்டுரையின் முக்கியத்துவமும் மகத்துவமும்
வாசகர்களுக்குப் புரிய வேண்டும். இக்கட்டுரையின்
தரவுகள் மிகவும் துல்லியமானவை; சரிபார்க்கப் பட்டவை.
UPSC தேர்வுகளில் IAS தேர்வு உட்பட கேட்கப்படும்
அலைக்கற்றை பற்றிய கேள்விகளுக்கு எமது கட்டுரைகள் ஆகச் சிறந்த பதில்கள் ஆகும். இதை இலவசமாக வழங்குகிறேன்.
இதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது முற்போக்கார்களின் கடமை. இல்லையேல் I will feel that I am casting pearls before swine.
********************************************************************
.
Ravikumar J, Gurumoorthy Swaminathan and 8 others
1 Comment
2 Shares
Like
Comment
Share