செவ்வாய், 25 அக்டோபர், 2022

 இதிகாசம் என்றால் என்ன?
இராமாயணமும் மகாபாரதமும் 
உணர்த்தி நிற்கும் சமுதாய மாற்றங்கள் பற்றி!
வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வை!
----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------
இராமாயணமும் மகாபாரதமும் வெறும் 
புராணங்கள் அல்ல; அவை இந்நாட்டின் 
இதிகாசங்கள். மாவோவின் மொழியில் 
சொன்னால், அவை தொன்மங்கள்.  

பெரும் சமுதாய மாற்றங்களைத் 
தொடர்ந்து அவற்றை மாண்புறுத்தி 
(glorify செய்து) மக்கள் படைத்த 
காவியங்களே இதிகாசங்கள்.

இராமாயணம் ஒரு இதிகாசம் என்பதால் 
அது ஒரு சமுதாய மாற்றத்தைச் சுட்டி 
நிற்கிறது. இதிகாசம் என்பது நூறு 
விழுக்காடும் உண்மை அல்ல. 
அதே நேரத்தில் நூறு விழுக்காடும் 
புனைவும் அல்ல. மெய்யும் புனைவும் கலந்த 
படைப்பே இதிகாசம் ஆகும். அதாவது 
இராமாயணம் ஒரு இதிகாசம் ஆகும்.

அது போலவே மகாபாரதமும் ஒரு 
இதிகாசம் ஆகும். அதாவது ஒரு தொன்மம் 
ஆகும். அது அக்காலத்தில் நிகழ்ந்த ஒரு 
சமுதாய மாற்றத்தைச் சுட்டி நிற்கிறது. 
ஆயின் மகாபாரதம் சுட்டி நிற்கும் சமுதாய
மாற்றம் எது? 

மகாபாரத காலச் சமுதாயமானது 
குடும்பம், குடும்ப உறவுகளின் உன்னதம், 
குடும்ப உறுப்பினர்களுக்கு 
இடையிலான பிணைப்பு, குடும்பவாரியான 
உழைப்பும் குடும்பவாரியான பங்கீடும் 
ஆகிய கூறுகளைக் கொண்டது. 

குடும்பமும் குடும்ப அதிகாரமுமே  
ஆட்சிமுறை வடிவமாக இருந்தது 
அச்சமூகத்தில். ஒரு கட்டத்திற்கு மேல் இந்த 
முறைமையினால் உபரியை அதிகரிக்க 
இயலவில்லை. சமூக வளர்ச்சியானது அன்று 
நிலவிய குடும்ப உறவுகளினால் தடைப்பட்டது.

இந்தத் தடையை உடைத்து, சமுதாய 
வளர்ச்சியை ஏற்படுத்த ஒரு சமுதாய 
மாற்றம் தேவை. குடும்ப 
உறவுகளைத் தகர்த்து புதிய உறவுகளை 
நிலைநாட்டினால் மட்டுமே சமூக மாற்றம் 
சாத்தியம்.

எனவே குடும்ப உறவுகள் தகர்க்கப் 
படுகின்றன. சகோதரர்களான பாண்டவர்களும் 
கெளரவர்களும் சண்டை இடுகிறார்கள். 
விளைவாக புதிதாக ஓர் அரசு பிறக்கிறது. 
குடும்ப உறவுகளுக்குப் பதிலாக 
அரசு என்னும் அதிகாரமிக்க அமைப்பு 
உற்பத்தியைக் கட்டுப் படுத்துகிறது. 
உபரியைப் பெருக்குகிறது.

குடும்பம் என்பது highly decentralised என்று 
நாம் அறிவோம். ஆனால் அரசு என்பது 
centralised. மையத்தில் இருந்து கொண்டு 
ராஜ்ஜியம் முழுமைக்குமான முடிவுகளை 
எடுக்க அரசு என்னும் கட்டுமானத்தால் 
முடியும். இது குடும்ப அமைப்பில் இயலாதது.

ஆக மாகாபாரதம் என்பது மேற்கூறிய 
சமுதாய மாற்றத்தை ஆவணப் படுத்திய  
அக்கால மக்களின் படைப்பு. அது மையச் சரடு 
எதுவும் இல்லாத வெற்றுக் கற்பனையான
புராணம் அல்ல. மகாபாரதப் போர் என்பது 
சமுதாய மாற்றத்துக்கான போர். குடும்ப 
அமைப்பை, குடும்பம் மூலமான உற்பத்தி 
உறவுகளை அகற்றி விட்டு, அரசு என்னும் 
மையப்படுத்தப்பட்ட சமூகக்  கட்டுமானத்தை 
ஏற்படுத்திய புதிய உற்பத்தி உறவுகளை 
உருவாக்கிய போர்.  

சூரிய கிரகணத்தின்போது கோபாலபுரம் 
கோமளா மாமியும் ஆலிவர் ரோடு அம்புஜம் 
மாமியும் உபவாஸமாம்! பகுத்தறிவே நீ வாழி! 
 சூரிய கிரகணம் என்றால் என்ன?
ரத்தினச் சுருக்கமான விளக்கம்!
-----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------
1) சூரியன், சந்திரன், பூமி இம்மூன்றும் கிரகணத்துடன்  
தொடர்பு உடையவை.

2) கிரகணம் என்ற சொல்லுக்கு மறைப்பு என்று 
பொருள். சூரிய கிரகணம் என்றால் சூரியன் 
மறைக்கப் படுதல் என்று பொருள்.

3) சூரியனை மறைப்பது யார்? சூரியனை 
சந்திரன் மறைக்கிறது. சந்திரன் மறைப்பதால் 
சூரியனின் ஒளி பூமிக்கு கிடைப்பதில்லை.
பூமி இருண்டு போகிறது. இந்நிகழ்வே சூரிய 
கிரகணம் ஆகும்.   

4) சில நேரங்களில் சந்திரன் முழுவதுமாக சூரியனை 
மறைத்து விடும். இதனால் பூமி முற்றிலுமாக இருண்டு 
விடும். இந்நிகழ்வு பூரண சூரிய கிரகணம் 
(Total solar eclipse) எனப்படும்.

5) சில நேரங்களில் சந்திரன் பகுதியளவே சூரியனை 
மறைக்கும். இந்நிகழ்வு பகுதியளவிலான சூரிய 
கிரகணம் (partial solar eclipse) ஆகும்.

6) சூரிய கிரகணத்தை வெறுங்கண்ணால் பார்ப்பதோ 
மூக்குக் கண்ணடி அணிந்து கொண்டோ பார்ப்பதோ 
கூடாது. அப்படிப் பார்த்தால் கண்பார்வை பழுது
படக்கூடும். கதிவீச்சை வடிகட்டும் விஷேசக் 
கண்ணாடி அணிந்து கொண்டு மட்டுமே பார்க்க 
வேண்டும்.

7) கிரகண நேரத்தில் (ஆரம்பம் முதல் முடிவு வரை) 
கர்ப்பிணிகள் உட்பட எவரும் வெளியில் செல்லலாம்; 
உணவு அருந்தலாம். இதனால் எத்தீங்கும் நேராது.
***********************************************     

முறியடிக்கப்பட்ட அத்வைதம்!
அஹம் ப்ரம்மாஸ்மி என்பது அறிவியலுக்கு எதிரானது! 
------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------
அஹம் ப்ரம்மாஸ்மி என்பது அத்வைதத்தின் 
ஜீவனான வாக்கியம். நானே பிரம்மம் என்று 
பொருள். இது உலகின் மிகப்பெரிய தவறான 
வாக்கியம்.  

நீயும் பிரம்மம்; நானும் பிரம்மம்;
ஒவ்வொருவரும் பிரம்மம் என்பதைப் போல
அபத்தம் இவ்வுலகில் எதுவும் இல்லை. இது 
அறிவியலுக்கு எதிரானது. அன்றாட வாழ்க்கையில் 
ஒவ்வொருவரும் உணரும் பிரத்தியட்ச 
உண்மைக்கு எதிரானது.

குழந்தையைக் கற்பழிக்கிறான் ஒரு கயவன்.
குழந்தையும் பிரம்மம்; அதைக் கற்பழித்த கயவனும் 
பிரம்மம் என்கிறது அத்வைதம். இது அறிவுக்கு 
எதிரானது. இருவரும் பிரம்மமாக இருப்பது
ஒருபோதும் சாத்தியமற்றது.

முட்ட வரும் காளைமாடும் அதன் எதிரில் 
நிற்பவனும் இருவருமே பிரம்மம் என்பது 
நகைப்புக்கு உரியது. 

கரமைதுனம் செய்து சுயஇன்பம் அனுபவிக்கிறான் 
ஒரு விடலை. தனது சுயஇன்பத்தின்போது, 
நயன்தாராவுடனோ திரிஷாவுடனோ உடலுறவு 
கொள்வதாக நினைத்துக் கொண்டு  
சுயஇன்பம் அனுபவிப்பான். அதுபோன்ற 
நினைப்புதான் அஹம் ப்ரம்மாஸ்மி என்பது.

ஆதிசங்கரரின் அத்வைதம் தத்துவக் களத்தில் 
முறியடிக்கப்பட்ட ஒரு கருத்துமுதல்வாதத் தத்துவம்.
ஆதிசங்கரர் மறைந்து சில நூற்றாண்டுகளுக்குப்
பின்னர், ஐரோப்பாவில் பெர்க்லி பாதிரியார் 
என்பவர் இதே அத்வைதக் கருத்துமுதலவாதத்தை 
முன்மொழிந்தார். பொருள்முதல்வாத ஞானிகளால் 
அது சுக்குநூறாக அடித்து நொறுக்கப் பட்டது.

அயன் ராண்டு என்று ஒரு ரஷ்யப் பெண்மணி.
இவர் அமெரிக்காவில் குடியேறிய ஓர் அமெரிக்கப் 
பிரஜை. இவர் சிறந்த ஆங்கில நாவலாசிரியை.
அத்தோடு objectivism என்னும் ஒரு தத்துவத்தை
உலகிற்கு அளித்தவர். அத்வைதக் கோட்பாடுகள் 
அனைத்தையும் தூள்தூளாய் நொறுக்கியவர் இந்த 
அயன் ராண்டு. (objectivism = புறவயவாதம்; இது 
ஒரு பொருள்முதல்வாதத் தத்துவம்)       

சில ஆண்டுகளுக்கு முன், "அத்வைதம்: ஒரு மார்க்சியப் 
பார்வை" என்ற ஒரு சிறுநூலை எழுதினேன்.
அச்சடித்த அத்தனை பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன.
மறுபதிப்புக் கொண்டுவர விரும்பவில்லை. ஏனெனில் 
இங்கு அத்வைதமே என்னவென்று ஒருவருக்கும் 
தெரியவில்லை. 
**********************************************************



Please avoid such outbursts 
in the name of comments. பரம்பரை 
பரம்பரையாக ஆசிரியம் எங்கள் 
குலத்தொழில். கடைந்தெடுத்த 
முட்டாள் கூட என்னிடம் வந்த பின் 
கணக்கைக் கற்றுக் கொண்டு விடுவான்.    

என்னுடைய தந்தையார் மறைந்த திரு 
மு பிச்சாண்டி M.A,B.T அவர்கள் 
தென்மாவட்டங்களில் மிகவும் பிரபலமான 
ஆசிரியர். பாவூர்ச்சத்திரத்தில் 1960களில் 
பணியாற்றியவர். மாநில நல்லாசிரியர் 
விருது பெற்றவர். மேனிலைப்பள்ளித் 
தலைமையாசிரியராக இருந்தவர்.    

ஒரு IQ testக்கும் ஒரு கற்பிக்கும் சோதனைக்கும் 
என்னை நான் உட்படுத்திக் கொள்ளத் தயார்.
என்னுடைய கற்பிக்கும் திறனையும், அதற்கு 
மூலமாக உள்ள அறிவுத் திறனையும் நான் 
நிரூபிக்கத் தயாராக உள்ளேன். எனக்கு 
சலுகையோ இடஒதுக்கீடோ சமூகத்தின் 
கருணையோ என்றுமே தேவைப் பட்டதில்லை. 
My merit will speak for me.  

உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப- நரைமுடித்துச் 
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை 
கல்லாமல் பாகம் படும்.

இந்தப் பாடலின் பொருளை நீங்கள் 
இன்றில்லாவிடினும் நாளை அறிந்து கொள்ள 
நீங்கள் வணங்கும் கடவுள் துணைநிற்கட்டும்.   

 





 

திங்கள், 24 அக்டோபர், 2022

தீபாவளி: தமிழைச் சரியாக எழுதுங்கள்!
தீபாவளி குறித்த பொருட்செறிவு மிக்க ஒரே கட்டுரை! 
-------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------- 
தீபம் + ஆவளி = தீபாவளி.
தீபம் = விளக்கு.
ஆவளி = வரிசை.
தீபாவளி = விளக்குகளின் வரிசை.
(அல்லது விளக்கு வரிசை).

நாமாவளி என்றால் நாமங்களின் வரிசை 
என்று பொருள். இறைவனுக்கு ஆயிரம் நாமங்கள் 
உண்டல்லவா! அவற்றை வரிசையாகச் சொன்னால் 
அது நாமாவளி ஆகும்.

புஷ்பாவளி = புஷ்பங்களின் வரிசை.
அதாவது பூக்களின் வரிசை என்று பொருள்.
மல்லிகை, முல்லை, இருவாச்சி, பிச்சி, 
ரோஜா என்று பூக்களை வரிசையாக 
அடுக்கினால் அது புஷ்பாவளி.

கர்நாடக சங்கீதம் தெரியுமா? அதில் 
ஸ்வரங்கள் என்றால் என்ன என்று தெரியுமா?
ஸ்வரங்கள் மொத்தம் ஏழு. 
ஸ ரி க ம ப த நி என்னும் ஏழு ஸ்வரங்கள்.

ஸ்வராவளி என்ற சொல்லை அறிவீர்களா?
கேள்விப் பட்டதுண்டா? 
ஸ்வரம் + ஆவளி = ஸ்வராவளி.
ஸ்வரங்கள் வரிசை என்று பொருள்.
அதாவது சுரவரிசை இரு பொருள்.

சுரவரிசைக்கு ஒரு உதாரணம் தருகிறேன்.
கர்நாடக சங்கீதத்தில் இருந்து நேரடியாக 
உதாரணம் தந்தால்  புரிந்து கொள்ள 
இயலாமல் போகலாம். எனவே ஒரு சினிமாப்
பாட்டில் உள்ள சுரவரிசையை அப்படியே 
இங்கு தருகிறேன். சினிமாப்பாட்டு என்றால் 
தமிழன் எளிதில் புரிந்து கொள்வான்தானே!

சசக  நிசப்பானி சாசா 
சச சமக நிசப்பானி சாசா 
நிச சபபா பா பாப பாதபமா 
மம கமக கம கம நீப காரி சாநி.

(நெடில்களை குறில்கள் ஆக்கிக் கொள்ளவும்.
நிசப்பானி = நி  ஸ ப நி)

மேலே உள்ளது சுர வரிசை. பாடல் இப்படி 
அமையும்.

ஸப்த ஸுர தேவி உணரு 
நீ என்னில் வரகானம் அருளு
நீ அழகில் மமனாவில் வாழு
என் கழிவில் ஒளிதீபம் ஏற்று.

ஏகப்பட்ட உதாரணங்கள் தந்து விட்டேன். 
இப்போது தீபாவளி என்றால் தீபங்களின்
வரிசை என்று புரிகிறதா?

கணிதத்தில் வரும் மேட்ரிக்ஸ் (Matrix) பற்றித் 
தெரியுமா? மேட்ரிக்ஸ் மிகவும் வசதியானது.
உதிரி உதிரியாக வருகின்ற பொருட்களை,
ஒவ்வொன்றாக வரும் பொருட்களை 
வசதியாக அடுக்கலாம்.
வரிசையாக அடுக்கலாம்.
இதற்குப் பயன்படுவதுதான் மேட்ரிக்ஸ்.     

வாழைப்பழம் = 10
மாம்பழம் = 10
பலாப்பழம் = 10
என்பதாக மொத்தம் மூன்று வகையில் 30 பழங்கள் 
உங்களிடம் உள்ளன. இதை ஒரு 3x10 matrixல் 
(3 rows and 30 columns) அடுக்கலாம் அல்லவா!     

ஒரு mxn matrixன் படத்தை இங்கு கமெண்ட் பகுதியில் 
கொடுக்க விழைகிறேன். அது உங்களின் புரிதலை 
சரிப்படுத்தும். தீபங்களையெல்லாம் 
ஒரு மேட்ரிக்சில் அடுக்குவதுதான் தீபாவளி.
இதை உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால் 
நீங்கள் பேறு பெற்றவர்கள்.    
---------------------------------------------------------
பின்குறிப்பு:
இக்கட்டுரை ஒரு கோடீஸ்வரக் கட்டுரை.
இது போன்ற கட்டுரைகளை என்னிடமிருந்து 
அல்லாமல் வேறு யாரிடம் இருந்தும், கடவுளிடம் 
இருந்து கூட, நீங்கள் பெற இயலாது என்ற 
உண்மையை உணருங்கள். 
     
கடவுள் என்னுடைய வாசகராக இருக்கிறார்.
அவர் கேட்டபடி தீபாவளி சிறப்புக் கட்டுரையாக 
இக்கட்டுரையை எழுதி அவருக்கு அனுப்பி உள்ளேன்.
ஆன்மிக காலமாக கடவுளானவர் என்னுடைய 
கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து தமது IQவை 
மேம்படுத்தி வருகிறார். கடவுளின் IQ என்ன 
தெரியுமா? அதை அளந்து வைத்துள்ளது நியூட்டன் 
அறிவியல் மன்றம். 
********************************************

IQ குன்றியவர்கள் அருள் கூர்ந்து இக்கட்டுரையைப் 
படிக்க வேண்டாம்! படிக்க வேண்டாம்!


    




     
             
 
                       
        
     

ஞாயிறு, 23 அக்டோபர், 2022

வரலாற்றுப் பொருள்முதல்வாத நோக்கில் தீபாவளி!

----------------------------------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

நியூட்டன் அறிவியல் மன்றம்.

-------------------------------------------------------------------------- 

தீபாவளி சமணப் பண்டிகையோ பௌத்தப் 

பண்டிகையோ அல்ல. அப்படி யார் சொல்லி 

இருப்பினும் அது தவறான அனுமானமே தவிர

உண்மை அல்ல.


வரலாற்றுப் பொருள்முதல்வாத நோக்கில் 

இந்திய சமூக வரலாற்றை (அல்லது தமிழ்ச் 

சமூக வரலாற்றை) ஆராயாமல், குட்டி 

முதலாளிய அரைவேக்காட்டுத் தனத்துடன் 

வந்தடைந்த முடிவுகளே தீபாவளி ஒரு 

பௌத்தப் பண்டிகை என்ற அயோத்திதாசரின் 

அனுமானமும், தீபாவளி ஒரு சமணப் பண்டிகை 

என்ற குட்டி முதலாளியத் தமிழறிஞர் மயிலை 

சீனி வெங்கக்கடசாமியின் அனுமானமும் ஆகும்.  

இவை முற்றிலும் தவறானவை மட்டுமின்றி 

முழுமூடத்தனத்தின் வெளிப்பாடுகள் ஆகும்.


பின் தீபாவளி யாருடைய பண்டிகை?

அது வேளாண் குடிமக்களின் பண்டிகை!

குறிஞ்சி பாலை நிலங்களில் வேட்டுவச்

சமூக வாழ்க்கை நிலவி வந்த காலத்தில் 

வேட்டுவச் சமூகத்திற்கு அடுத்த கட்டச் 

சமூகமான மேய்ச்சல் சமூக வாழ்நிலையை 

எட்டி நின்றன முல்லை மருதத் திணைகள். 


மேய்ச்சல் சமூகம் அதன் இயக்கப் போக்கில் 

வேளாண்மையைக் கண்டறிந்தது. மேய்ச்சல் 

சமூகமும் வேளாண் சமூகமும் அக்கம் பக்கமாக

நிலவின.


ஆண்டாளின் திருப்பாவை இந்நிலையை அழகுறக் 

காட்டுகிறது.

"ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகளப் 

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப 

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்"

என்கிறாள் ஆண்டாள்.


தமிழ்ச் சூழலில், நிலவுடைமைச் சமூகம் தோற்றம் 

பெற்ற ஒரு காலக்கட்டத்தில், சமூகத்தின் 

பொருளுற்பத்தி முறையாக வேளாண்மை ஏற்றம் 

பெறத் தொடங்கியிருந்த ஒரு காலக்கட்டத்தில்

தீபாவளி பிறந்தது.


விலங்குகள் விளைச்சலை அழித்திடாமல்

பாதுகாக்கும் நோக்கத்துடன் ஏற்பட்டது 

தீபாவளிப் பண்டிகை. சமூகத்தின் உற்பத்தி 

முறையில் இருந்துதான் பண்டிகைகள் 

தோன்றுகின்றன என்பது வரலாற்றுப் 

பொருள்முதல்வாத பால பாடம்.


முல்லை நிலத்தில் மனிதனும் விலங்கும்

ஒன்றாகவே வாழ்ந்தனர். வாழிடமான 

முல்லை நிலம் மனிதன் விலங்கு உள்ளிட்ட 

எல்லாத் தரப்பினருக்கும் பொதுவானது.

வேளாண் உற்பத்தி முறைக்கு மாறிய அந்த 

ஆரம்பக் கட்டத்தில், வயலில் விளைந்த 

விளைச்சலை விலங்குகள் பாழ் படுத்தின.


விலங்குகளை விரட்டியடித்து வேளாண்மையைப் 

பாதுகாக்க வேண்டிய தேவை அன்று இருந்தது.

விளைந்த வயலில் கூட்டம் கூட்டமாக விழுந்து 

பயிர்களைத் தின்றும் அழித்தும் உழவர்களுக்குப்  

பேரிழப்பை ஏற்படுத்தும் விலங்குகளை 

தீப்பந்தங்களைக் கொளுத்திக் கொண்டும்

 கருவிகளைக் கொண்டு ஓசை எழுப்பியும்  

விரட்டி அடிக்க வேண்டிய தேவை அப்போது 

இருந்தது.


கேரளத்தின் செண்டை மேளம் என்பது இப்படிப்பட்ட 

ஒரு கருவியே. அன்றைய பயன்பாட்டின் மிச்ச 

சொச்சமாக அது இன்றளவும் ஒரு சான்றாதாரமாக 

நீடிக்கிறது.


ஆக விலங்குகளை ஒலி ஒளி மூலமாக 

(தீப்பந்தம், ஓசை செய்யும் கருவிகள் வாயிலாக)

விரட்டியடிப்பது ஒரு வேளாண் செயல்பாடு.

ஒரு பொருளுற்பத்திச் செயல்பாடு. இதைத் 

தொடர்ந்து செய்ய வேண்டிய தேவை அன்று 

இருந்தது. ஒரு சமூகத்தில் எந்தச் செயலைத்  

தொடர்ந்து செய்ய வேண்டியிருக்குமோ அந்தச் 

செயலை அச்சமூகம் ஒரு பண்டிகையாக ஆக்கி 

விடும். பண்டிகையாக்கம் என்பதன் மூலம் 

அச்செயல் தங்குதடையின்றியும் காலத் 

தொடர்ச்சியோடும் நடைபெறுவதை அச்சமூகம் 

உறுதி செய்து கொள்கிறது.


ஆக இவ்வாறு பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் 

பொருளுற்பத்தியின் தேவையில் இருந்து 

பிறந்ததே தீபாவளி. தீபாவளி ஒரு வேளாண்

பண்டிகை. தமிழ்ச் சமூகம் வேளாண் 

உற்பத்திமுறையின் சிக்கல்களுடன் அல்லாடிக் 

கொண்டிருந்த ஒரு காலக்கட்டத்தில் தீபாவளி பிறந்தது.


தீபாவளி தோன்றிய இந்த ஆயிரம் ஆயிரத்தைந்நூறு 

ஆண்டுகளில் அது பல்வேறு மாற்றங்களைக் 

கண்டுள்ளது. சமூகம் முதலாளிய உற்பத்திமுறைக்கு 

மாறிவிட்ட தற்காலத்தில், அது முதலாளிய 

உற்பத்தியின் மையமான பண்டிகையாக 

மாறி  விட்டது. முந்தைய உற்பத்திமுறையில்

தீபாவளியானது வேளாண் உற்பத்தியின் 

முதன்மையான பண்டிகையாக இருந்தது போல 

தற்கால முதலாளிய உற்பத்தி முறையிலும் அது தனது 

முதன்மையான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.


அப்படியானால் நரகாசுரன் கதை? அது முற்றிலும் 

போலியான ஒரு புனைவு! விஜயநகரத் தெலுங்கு 

மன்னர்கள் தமிழகத்தை ஆக்கிரமித்து வல்லாட்சி

நடத்திய காலத்தில் அவர்கள் கட்டவிழ்த்து விட்ட, 

அறிவியலுக்கு எதிரான ஒரு பொய்க்கதையே

நரகாசுரன் கதை. இக்கதையை பல பத்தாண்டுகளாக 

தமிழர்கள் சீந்தவில்லை. தெலுங்குத் தற்குறியான

ஈ வெ ராமசாமி என்னும் தமிழ்ப் பகைவர், தமிழர்களை 

இழித்துப்பழிப்பதற்கு நரகாசுரன் கதை வசதியாக

இருப்பது கண்டு அக்கதையை மூடர்களாகிய தனது 

தொண்டர்கள் மூலம் தமிழ்நாடெங்கும் பரப்பினார்.    


இந்தியச் சமூகத்தின் தனித்துவம் என்னவெனில்,

இங்கு பண்டிகைகளை உருவாக்கியது சமூகத்தின் 

பொருளுற்பத்தி முறையே தவிர, மதங்கள் அல்ல.

இந்தியச் சமூகத்தில் மதங்கள் பண்டிகைகளை 

உருவாக்கவில்லை. பொருளுற்பத்தியின்போது,

அதன் தேவைகளில் இருந்து இயல்பாக எழுந்தவையே  

இந்தியப் பண்டிகைகள். மக்களின் செல்வாக்கைப் 

பெற்ற பண்டிகைகளை  மதங்கள் சுவீகரித்துக் கொள்ளும்.

இவ்வாறே தீபாவளி திருக்கார்த்திகை உள்ளிட்ட 

பண்டிகைகளை இந்து மதம் சுவீகரித்துக்  கொண்டது.    

 

இதனால்தான் இன்று நாம் கொண்டாடி வரும் 

பல்வேறு பண்டிகைகளை மதங்கள் உருவாக்கியதாக 

நாம் பிறழ உணர்கிறோம். அதே நேரத்தில் இந்து 

மதத்திற்கு மாற்றாக, ஆபிரகாமிய மதங்களில் 

பண்டிகைகளை அம்மதங்களே உருவாக்கின. 

அவை பாலைவன மதங்கள். பொருளுற்பத்திக்கோ 

உபரிக்கோ இடம் தராத சமூகங்களில் பண்டிகைகளை 

மதங்களே செயற்கையாக உருவாக்கும்.


இந்தியாவில் இந்து மதமோ பௌத்த சமண 

மதங்களோ எந்த ஒரு பண்டிகையையும்

உருவாக்கவில்லை. இங்கு உருவான 

பண்டிகைகள் அனைத்துமே பொருளுற்பத்தியில் 

இருந்து பிறந்தவை. காலப்போக்கில் மதங்கள் அவற்றை

சுவீகரித்துக கொண்டன. 

******************************************************

பின்குறிப்பு:

1) மார்க்சியம் கற்றிராத, குறிப்பாக வரலாற்றுப் 

பொருள்முதல்வாதம் என்றால் என்னவென்றே 

தெரியாத வாசகர்களால் எடுத்த எடுப்பில் 

இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள இயலாது.

அவர்கள் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை 

முதலில் அறிந்து கொண்டு, அதன் பின் இந்தக் 

கட்டுரையைப் படிக்கவும்.


2) இக்கட்டுரையின் பதிப்புரிமை ஆசிரியர்க்கு.

எனவே எவரும் கவர வேண்டாம். அதே நேரத்தில் 

இன்னார் எழுதியது என்று குறிப்பிட்டு கட்டுரையை 

எடுத்தாளலாம், Due attribution is a must. 

----------------------------------------------------

   

சனி, 15 அக்டோபர், 2022

சென்னையில் 5G வந்து விட்டது!
ராட்சஸத் தனமான வேகத்தில் 5G கிடைக்கிறது!
5Gயை நியூட்டன் அறிவியல் மன்றம் வரவேற்றது!
--------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------------------
சற்று முன் இரவு எட்டரை மணியளவில் 
(2030 hours IST on 15 Oct 2022), சென்னை எத்திராஜ் சாலை 
ஏரியாவுக்கு எங்கள் மன்ற உறுப்பினர்களான 
இளைஞர்கள் சிலருடன் (பைக்கில் பின்புறம் 
அமர்ந்து) சென்றிருந்தேன்.

அங்குதான் 5ஜி டவர் நன்றாகக் கிடைக்கிறது என்று 
நண்பர்கள் மூலமாக அறிந்தோம். அங்கு சென்றோம்.
அங்கு பாந்தியன் சாலையில் கன்னிமாரா நூலகம் 
அருகிலும் எத்திராஜ் கல்லூரி அருகிலும் 5ஜி சிக்னல்கள்
சிறப்பாகக் கிடைத்தன. மேலும் நுங்கம்பாக்கம் 
ஏரியாவிலும் சாஸ்திரி பவன் அருகிலும் வருமானவரி 
அலுவலகமான ஆயக்கர் பவனிலும் மிகவும் 
பிரமாதமாக 5ஜி டவர் கிடைக்கிறது.    

நாங்கள் கன்னிமாரா அருகிலும், எத்திராஜ் மகளிர் 
கல்லூரி அருகிலும் நின்று ஏர்டெல் நிறுவனம் வழங்கும் 
5ஜி சேவையின் வேகம் என்ன என்று அறியும் வேகச் 
சோதனையை மேற்கொண்டோம்.  ஓக்லா (Ookla) நிறுவனம் 
நடத்தும் Global Broadband Speed Test என்னும் வேகச் 
சோதனையை மேற்கொண்டோம். ராட்சஸத் தனமான 
வேகம் இருந்தது. 910 Mbps வேகம் DOWNLOAD 
செய்யும்போது கிடைத்தது. இது மூச்சை அடைக்கிற 
வேகம்! UPLOADல் 130 Mbps வேகம் கிடைத்தது.

சென்னையில் சுனில் மிட்டலின் ஏர்டெல் மட்டுமே 
5ஜி சேவையை  வழங்குகிறது. முகேஷ் அம்பானியின் 
ஜியோ சென்னை நகரில் சேவை வழங்கவில்லை.
டெல்லி, மும்பை, கொல்கொத்தா, வாரணாசி ஆகிய 
நான்கு நகரங்களில் மட்டுமே ஜியோ 5ஜி சேவையை 
வழங்குகிறது.

சென்னை உள்ளிட்ட எட்டு நகரங்களில் ஏர்டெல் தனது 
5ஜி சேவையை வழங்குகிறது. 50 லட்சம் சென்னை 
மக்கள் சார்பாக ஏர்டெல்லின் 5ஜியை நியூட்டன் 
அறிவியல் மன்றம் வரவேற்கிறது. அந்தச் சேவையை 
உடனடியாக நுகர்கிறது. ஏர்டெல் அதிபர் சுனில் 
மிட்டல் அவர்களுக்கு சென்னைப் பெருநகரவாசிகள் 
சார்பாக எங்களின் மரியாதையைத் தெரிவித்துக் 
கொள்கிறோம். Let us SALUTE him.

நிறுவனங்களுக்கு இடையிலான போட்டியில் 
நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போட்டுக்கொண்டு 
முதன் முதலில் 5ஜி போன்ற அதிநுட்பபமான 
சேவையை வழங்குவது எளிதல்ல. தீபாவளிக்கு 
வரும் என்று எதிர்பார்த்த 5ஜி சேவை தீபாவளிக்கு 
முன்னரே வந்து விட்டது. இவ்வளவு அதிவிரைவில் 
சேவையை வழங்கிய ஏர்டெல்லின் பொறியாளர்கள் 
மற்றும் டெக்னீஷியன்களுக்கு நியூட்டன் அறிவியல் 
மன்றம் பாராட்டைக் காணிக்கை ஆக்குகிறது. இது 
மானுட ஆற்றலின் மற்றுமோர் மகத்துவம்!

5ஜி என்பது சமகால சமூகத்தின் மிகவும் மேம்பட்டதும் 
அதிநுட்பமானதுமான ஓர் உற்பத்திக் கருவி!
எந்தவொரு சரியான மார்க்சிஸ்டும் உற்பத்திக்
கருவியின் மேம்பாட்டை மனப்பூர்வமாக வரவேற்பது
மார்க்சியப் பண்பு.   

வாசகர்களின் கேள்விகளுக்கு நியூட்டன் அறிவியல் 
மன்றத்தின் பதில்கள்!
-----------------------------------------------------------------------------
வாசகர்: என்னுடைய மொபைல் போனில் 5ஜி 
இருக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொள்ள 
வழி எதுவும் உண்டா?

நி அ ம: உண்டு. 
1) உங்களின் மொபைலை எடுத்துக் 
கொள்ளுங்கள். 
2) அதில் உள்ள SETTINGS பகுதிக்குச் செல்லுங்கள்.
3) அங்கு NETWORK என்ற optionக்குச் செல்லுங்கள்.
4) அதிலிருந்து SIM MANAGEMENTக்குச் செல்லுங்கள்.
5) அங்கிருந்து PREFERRED NETWORK TYPEஐ கிளிக் 
செய்யுங்கள்.
6) இதை கிளிக் செய்தவுடன் உங்களின் கைபேசி 
எந்தெந்த அலைக்கற்றைகளை ஆதரித்து நிற்கிறது 
என்று தெரியவரும். 2ஜி முதல் 5ஜி வரையிலான 
அத்தனை நெட்வொர்க்களில் உங்களின் 
கைபேசியில் எவையெல்லாம் உள்ளன என்று 
திரையில் காட்டப்படும்.
2g/3g/4g/5g என்று திரையில் காட்டினால் நீங்கள் 
அதிர்ஷ்டசாலி. உங்களின் கைபேசியில் 5ஜி 
enabledஆக உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
அதாவது உங்களின் இந்தக் கைபேசியைக் 
கொண்டே 5ஜி சேவையைப் பெறலாம் என்று 
அர்த்தம்.

சிம் மாற்ற வேண்டுமா அல்லது பழைய சிம்மிலேயே 
5ஜி சேவையைப் பெற இயலுமா என்ற கேள்விக்கு 
உங்களின் நிறுவனம் என்ன  பதில் சொல்கிறதோ 
அதைக் கேட்டு நடக்கவும். பழைய சிம்மிலேயே 
5ஜி சேவையை வழங்க முடியும் என்று ஏர்டெல் 
அறிவித்துள்ளது.

சர்வ சாதாரணமாக 850 Mbps, 900 Mbps  வேகமெல்லாம் 
5ஜியில் கிடைக்கிறது. இந்த அசுர வேகத்தால் 
85 நொடி அல்லது 90 நொடியில் ஒரு முழுநீளத் 
திரைப்படத்தை பதிவிறக்கம் செய்ய முடியும்.
அதே நேரத்தில் உங்களின் data இருப்பு காற்றில் 
கரைந்த கற்பூரமாய் ஆகிவிடக் கூடும். 2 GB data 
என்பதெல்லாம் கண்ணிமைப்பதற்குள் காலியாகி 
விடும். எனவே data managementல் சரியானதொரு 
அணுகுமுறையைக் கையாளுங்கள்.

வசதி படைத்த அன்பர்கள் 5ஜி சேவையைப்
பெறுங்கள். பெற்று அனுபவியுங்கள். வசதி 
படைத்த பெற்றோர்  தங்களின் பிள்ளைகளுக்கு 
நல்லதொரு கைபேசியுடன் 5ஜி சேவையை 
உறுதி செய்யுங்கள்.

BSNLன் 5ஜி சேவை அடுத்த ஆண்டு (ஆகஸ்டு 15, 2023)
சுதந்திர தினத்தில் வந்து விடும். BSNL மலிவு 
விலையில் 5ஜி சேவையை வழங்கும். அதுவரை 
பொறுத்திருங்கள். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு
மட்டுமின்றி தனியார் பள்ளி மாணவர்கள் உட்பட 
அனைத்து மாணவர்களுக்கும் 5ஜி வசதி கொண்ட 
ஸ்மார்ட் கைப்பேசிகளை தமிழக அரசு இலவசமாக 
வழங்க வேண்டும். இது அரசின் கடமை.

5ஜியை வரவேற்போம்!
5ஜி இன்று வந்தது. உடனேயே INSTANTANEOUSLY 
5ஜி பற்றிய என்னுடைய கட்டுரை தமிழில் வெளிவந்து 
விட்டது. இந்தக் கட்டுரையைப் படியுங்கள். இதைப் 
பரப்புங்கள்.

5ஜி குறித்து ஒரு நீண்ட கட்டுரையை இம்மாத 
அறிவியல் ஒளி இதழில் (அக்டோபர 2022)
எழுதி உள்ளேன். அறிவியல் ஒளி ஏட்டுக்குச் சந்தா 
கட்டி அதை வாங்கிப் படியுங்கள். பல்வேறு அரசு 
நூலகங்களிலும் அறிவியல் ஒளி கிடைக்கும்.
அங்கும் சென்று படியுங்கள். படிக்க வேண்டும்.

அமெரிக்காவிலேயே 5ஜி இவ்வாண்டு பெப்ரவரியில்தான் 
நிறுவப்பட்டுக் கொண்டு இருந்தது. இதோ அக்டோபர் 
முதல் தேதியன்று பிரதமர் மோடி 5ஜியை இந்தியாவில் 
தொடக்கி வைத்தார். தற்போது சென்னையில் 
ஆர்வமுள்ள சாதாரண மக்கள் 5ஜி சேவையை 
அனுபவிக்கத் தொடங்கி விட்டனர். அதே வேகத்தோடு 
தமிழில் எழுதப்பட்ட என்னுடைய  கட்டுரையும் 
அறிவியல் ஒளியில் வெளிவந்து விட்டது. தமிழை 
உற்பத்தி மொழியாக ஆக்குவது எப்படி? இப்படித்தான்!    
***********************************************  

இதை எல்லோரும் படியுங்கள்! பகிருங்கள்.
வாட்சப்பில் அனுப்புங்கள்.

மருதுபாண்டியன் 

ரகுபதி 

ராமன் ராஜு