செவ்வாய், 16 மே, 2023


 எஸ் வி ராஜதுரையின் கயமையும் 
நல்லகண்ணுவின் தற்குறித்தனமும்!

--------------------------------------------------------- 

பெரும் பிற்போக்குவாதி எஸ் வி ராஜதுரை

மின்னம்பலம் என்னும் இணைய இதழில்

அண்மையில் மே 12 அன்று எழுதிய கட்டுரை இது.


கட்டுரையின் தலைப்பு கயமைத்தனமான 

ஒரு தலைப்பு: " இல்லாத சொத்துக்கு உரிமை 

கொண்டாடும் சி பி ஐ ".    


NCBH (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) என்பது 

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் (CPI) 

புத்தக விற்பனை மற்றும் பதிப்பக நிறுவனம் ஆகும்.

இந்நிறுவனம் தற்போது பறிபோய் இருக்கிறது.


இதற்கு மூல காரணமான நல்லகண்ணு அவர்கள் 

அரசியலை விட்டே விலக வேண்டும்.

நல்லகண்ணு தம் கடமையில் தவறியதாலேயே 

இன்று NCBH பறிபோனது.


எஸ் வி ராஜதுரை என்பவர் கடைந்தெடுத்த 

பிற்போக்குவாதி. ஒரு காலத்தில் மார்க்சிஸ்ட்டாக, 

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்டாக இருந்தவர்.   

மக்கள் யுத்தக் குழுவில் இருந்தவர். பின்னாளில் 

சீரழிந்து பிற்போக்குவாதியாக மாறினார்.


இந்தக் கடைந்தெடுத்த பிற்போக்குவாதிக்கு 

வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி 

தங்களின்  மார்க்சிய எதிர்ப்புப் போக்கை 

வெளிப்படுத்திக் கொண்டவர்கள் 

CPM கயவர்கள். அவர்களின் தமுஎகச 

(என்று நினைக்கிறேன்) எஸ் வி ராஜதுரைக்கு 

மார்க்சிய அறிஞர் பட்டம் வழங்கி

மார்க்சியத்துக்கு கொள்ளி வைத்தது.


இது குறித்த எல்லா விஷயங்களையும் 

மார்க்சிஸ்டுகளும் போலி மார்க்சிஸ்டுகளும் ஏன் 

வலதுசாரிகளும் கூட தெரிந்து கொள்ள வேண்டும்.

-----------------------------------------------------------------------

 

 

திங்கள், 15 மே, 2023

தேசிய இனப் பிரச்சினை குறித்த கருத்தரங்கம் 
வெற்றிகரமாக நிறைவுற்றது!
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------------
சென்னை சூளைமேட்டில் 14.05.2023 அன்று காலை 
10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற 
தேசிய இனக் கோட்பாடு குறித்த கருத்தரங்கம் 
இனிதே நிறைவுற்றது.

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் 
தோழர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்றுச் 
சிறப்பித்தனர். பங்கேற்றவர்களில் கணிசமான 
பெண்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

காலை முதல் மாலை வரை நடைபெற்ற 
இக்கருத்தரங்கில் பேச்சாளர்களின் சொற்பொழிவு 
மொத்தம் ஆறு மணி நேரம் நிகழ்ந்தது. அவற்றின் 
எடிட் செய்யப்பட்ட வீடியோ பதிவு விரைவில் 
வெளியாகும்.   

தேசிய இனக்கோட்பாடு குறித்த 
இக்கருத்தரங்கில்  அச்சிக்கல் குறித்த 
செழுமையான கருத்துக்கள் முன்வைக்கப் பட்டன. 
இதுவரை பொதுவெளியில் பரவலாக கவனத்துக்கு 
வந்திராத கருத்துக்களும் கருத்தரங்கில் 
முன்வைக்கப் பட்டன. சுருங்கக் கூறின்
தேசிய இனச்சிக்கல் குறித்த சகல தரப்பின் 
கருத்துக்கள் முழுவதும் அநேகமாக இக்கருத்தரங்கில் 
வெளிப்பட்டு விட்டன. கருத்தரங்கம் தனது 
அறிவிக்கப்பட்ட நோக்கத்தில் வெற்றி அடைந்து 
விட்டது என்பதை இது உணர்த்துகிறது.
*********************************************
 
  
 

சனி, 13 மே, 2023

நாஷ் சமநிலை பேணப்படும்வரை 
உலகப்போர் வராது!
-------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
email: ilangophysics@gmail.com   
------------------------------------------------------- 
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரானது உலகப்போர் 
வருமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. ஒருவேளை 
உலகப்போர் வந்தால் அதில் அணுஆயுதங்கள் பயன்படுத்தப் 
படுமா என்ற கேள்வியும் கூடவே எழுந்துள்ளது. 

இக்கேள்விகளுக்கு அறிவியல் துல்லியமான பதில்களை 
வைத்திருக்கிறது. உலகப்போர் குறித்தோ, அணுஆயுதப் 
பிரயோகம் குறித்தோ பேசவேண்டுமெனில், நாஷ் சமநிலை 
(Nash equilibrium) பற்றித் தெரிந்திருக்க வேண்டும் என்பது 
முன்நிபந்தனை ஆகும். உலகப்போரும் நாஷ் சமநிலையும் 
மிகவும் நெருக்கமான தொடர்பு உடையவை. எனவே 
நாஷ் சமநிலை பற்றித் தெரியாமல் இருக்கும் எவர் ஒருவராலும் 
உலகப்போர் பற்றிப் புரிந்து கொள்ள இயலாது.

நாஷ் சமநிலை பேணப்படும் வரை அணுஆயுத உலகப்போர்
வராது. நாஷ் சமநிலை மீறப்படுமானால் அணு ஆயுத 
உலகப்போர் வரும். இதுதான் நிலவரம்! ஆக உலகப்போரின் 
சூட்சுமம் நாஷ் சமநிலையில் இருக்கிறது. எனவே அது பற்றிப் 
பார்ப்போம். 

மூன்றாம் உலகப்போர் ஏன் இன்னும் நிகழவில்லை?
-----------------------------------------------------------------------------------
முதல் உலகப்போர் 1914 ஜூலையில் தொடங்கி 1918 நவம்பர் வரை 
நடந்தது. இரண்டாம் உலகப்போர் செப்டம்பர் 1939ல் தொடங்கி 
செப்டம்பர் 1945ல் முடிந்தது. முதல் உலகப்போர் முடிந்த 
20 ஆண்டுகளில் இரண்டாம் உலகப்போர் தொடங்கி விட்டது.

இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில்,  அதுவரையான  
மானுட வரலாறு கண்டிராத புதுமையாக அணுகுண்டு வீசப்பட்டது.
1945 ஆகஸ்டு 6ல் ஹிரோஷிமா மீதும், ஆகஸ்டு 9ல் நாகசாகி மீதும் 
அமெரிக்கா வீசிய அணுகுண்டால் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட 
மக்கள் மரணம் அடைந்தனர். உடனடியாக ஜப்பான் சரண் அடைந்தது. 
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. இது வரலாறு.

இரண்டாம் உலகப்போர் 1945ல் முடிவடைந்து, இன்று 
75 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் மூன்றாம் உலகப்போர் 
எதுவும் உலகில் இன்னும் மூளவில்லை. இதன் காரணம் என்ன?  
30 ஆண்டுகளுக்குள் (1914-1945) இரண்டு உலகப் போர்களைப்
பார்த்த இந்த உலகம், இன்று 75 ஆண்டுகளாக இன்னொரு 
உலகப்போர் நிகழ்ந்து விடாமல் தவிர்த்து வருகிறதே, அது எப்படி 
சாத்தியமானது? 

அணுகுண்டின் தந்தை ஓப்பன்ஹீமர்!
----------------------------------------------------------
லட்சக்கணக்கான மக்களை ஒரு நொடியில் கொன்றுவிடும் 
பெரும் அழிவு சக்தியான அணுகுண்டு 1945ல் பிறந்தது.
ஐன்ஸ்டினின் பொருளும் ஆற்றலும் சமம் என்ற கோட்பாடே
அணுகுண்டைப் பிறப்பித்தது. ஐன்ஸ்டினின் E = mc^2 என்ற 
சமன்பாடுதான் பேராற்றல் மிக்க ஒரு அணுகுண்டை உருவாக்க 
முடியும் என்று கோட்பாட்டு ரீதியாக உலகிற்குப் போதித்தது.

1939 ஆகஸ்டில், அன்றைய அமெரிக்க அதிபர் 
பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டுக்கு (Franklin D Roosevelt 1982-1945)
ஐன்ஸ்டின் எழுதிய கடிதமே உலகின் தலைவிதியை 
மாற்றியமைத்த கடிதம் ஆகும். அக்கடிதத்தில், அணுகுண்டு 
தயாரிக்கும் முயற்சியில் ஹிட்லர் இறங்கியிருப்பதால், 
அமெரிக்காவும் அணுகுண்டு தயாரிக்க வேண்டும் என்று 
கோரியிருந்தார் ஐன்ஸ்டின். அவரின் கருத்தை  ஏற்றுக்கொண்ட 
ரூஸ்வெல்ட், அணுகுண்டு தயாரிக்க முடிவு செய்தார். 

அதற்காக மன்ஹாட்டன் திட்டம் (Manhattan Project) என்றொரு 
திட்டத்தை 1942 ஆகஸ்டில் ஏற்படுத்தினார் ரூஸ்வெல்ட்.  
மூன்று ஆண்டுகள் ஆய்வின் இறுதியில், அமெரிக்காவின் 
தலைசிறந்த அணுக்கரு விஞ்ஞானி ராபர்ட் ஓப்பன்ஹீமர் 
(Robert Oppenheimer 1904-1967) உலகின் முதல் அணுகுண்டை 
வெற்றிகரமாக உருவாக்கினார். இவரே அணுகுண்டின் 
தந்தை (Father of Atom bomb) என்று அழைக்கப் படுகிறார். 

நியூ மெக்சிகோவில் இருந்து 56 கிமீ தொலைவிலுள்ள ஒரு 
பாலைவனத்தில் உலகின் முதல் அணுகுண்டை அமெரிக்கா 
வெடித்துச் சோதனை செய்து பார்த்தது. டிரினிட்டி சோதனை 
(Trinity test) என்ற சங்கேதப் பெயர் பெற்ற இச்சோதனை 
ஜூலை 16, 1945ல் நடந்தது. அந்நாள் உலக வரலாற்றில் 
அழியா இடம் பெற்று விட்டது. டிரினிட்டி சோதனை நடந்து 
முடிந்த 21ஆம் நாளிலேயே ஆகஸ்டு 6ல் ஹிரோஷிமா மீது 
அணுகுண்டை வீசியது அமெரிக்கா. தான் தயாரித்த 
அணுகுண்டு எப்படிச் செயல்படுகிறது என்று அறியும் 
பொருட்டே அணுகுண்டுகளை வீசியது அமெரிக்கா.  

காலந்தோறும் அணுகுண்டு!
--------------------------------------------
அணுகுண்டின் காலக்கோட்டை (Timeline) அறிந்திடுவோம்.
1) 1905 செப்டம்பர்: ஐன்ஸ்டின் E= mc^2 ஆய்வறிக்கை சமர்ப்பித்தல்.
2) 1939 ஏப்ரல்: யுரேனியம் கிளப் (Uranium Club) என்ற பெயரில் 
ஒரு விஞ்ஞானிகள் குழுவை அமைத்து அணுகுண்டு 
தயாரிக்க ஹிட்லர் முயற்சி.
3) 1939 ஆகஸ்டு: ரூஸ்வெல்ட்டுக்கு ஐன்ஸ்டின் கடிதம்.
4) 1942 ஆகஸ்டு: மன்ஹாட்டன் திட்டம் தொடக்கம்.
5) 1945 ஜூலை: அமெரிக்காவின் அணுவெடிப்புச் சோதனை.
6) 1945 ஆகஸ்டு: ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டு வீச்சு.
7) 1945 ஆகஸ்டு: அணுகுண்டால் 2 லட்சம் பேர் மரணம்.       

இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, 
யுரேனியம் கிளப்பைச் சேர்ந்த பத்து ஜெர்மானிய விஞ்ஞானிகளைக் 
கைது செய்து சிறையில் அடைத்தனர் நேச நாட்டினர் (The Allies).
வெர்னர் ஹெய்சன்பெர்க் உட்பட அனைவரும் இங்கிலாந்தில்  
சிறையில் தள்ளப் பட்டனர்.பின்னர் 1946 ஜனவரியில் ஹெய்சன்பெர்க் 
விடுதலை செய்யப்பட்டார். உறுதியின்மைக் கோட்பாட்டை
(uncertainty principle) கண்டறிந்து அதற்காக நோபல் பரிசு 
(1932ஆம் ஆண்டிற்கானது) பெற்றவர் ஹெய்சன்பெர்க் என்பது 
வாசகர்களுக்கு  நினைவில் இருக்கலாம்.            

அணுஆயுத நாடுகள் எவை?
--------------------------------------------
இன்று இக்கட்டுரையை எழுதும் 2022 மார்ச்சு நிலவரப்படி, 
உலகில் எட்டே எட்டு நாடுகளிடம் மட்டுமே 
அணுகுண்டுகள் உள்ளன.

1) அமெரிக்கா 2) ரஷ்யா 3) இங்கிலாந்து 4) பிரான்சு 5) சீனா 
6) இந்தியா 7) பாகிஸ்தான் 8) வடகொரியா ஆகிய எட்டு நாடுகள் 
மட்டுமே இன்றைய உலகின் அணுஆயுத நாடுகள். சோவியத் 
ஒன்றியத்தின் தகர்வுக்குப் பின்னர் அதன் முந்நாளையக் 
குடியரசுகளான உக்ரைன் போன்றவை தங்கள் நாடுகளில்
இருந்த அணுஆயுதங்கள் அனைத்தையும் ரஷ்யாவிடம் திரும்ப 
ஒப்படைத்து விட்டன. இஸ்ரேலிடம் அணுஆயுதம் உள்ளதாக 
ஒரு சந்தேகம் உள்ளது. இது வெறும் சந்தேகம்தான்! ஆதாரமோ 
நிரூபணமோ இதற்கில்லை. அடுத்து ஈரான் ஆணுஆயுதம் 
தயாரித்து விடக்கூடாது என்பதற்காக அந்நாட்டின் மீதான 
கண்காணிப்பும் கெடுபிடிகளும் அதிகரித்து வருகின்றன.    
எனவே அணுஆயுத நாடுகளின் எண்ணிக்கை எட்டுக்கு மேல் 
செல்ல வாய்ப்பில்லை. 

முதலில் வீசுவது நான் அல்ல!
----------------------------------------------
இந்தியாவின் அணுஆயுதக் கொள்கை No First use policy ஆகும்.
முதல் பிரயோகம் எமதல்ல என்பது இதன் பொருள். அதாவது 
ஒரு போரின்போது, அணுஆயுதத்தை முதலில் பிரயோகிக்கும் 
நாடாக இந்தியா இருக்காது என்பது இதன் பொருளாகும்.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் அணுஆயுதங்கள் என்பவை 
அச்சுறுத்தலுக்கு மட்டுமே ஆனவை (for the purpose of deterrence only). 
எனவே இந்தியா அவற்றை ஒருபோதும் முதலில் பிரயோகிக்காது. 

அதே நேரத்தில் எவரேனும் இந்தியா மீது அணுஆயுதங்களைப் 
பிரயோகித்தால் மிகக் கடுமையாக இந்தியா திருப்பித் தாக்கும். 
இந்தியாவின் இரண்டாவது அணுவெடிப்புச் சோதனை (பொக்ரான்-2) 
1998ல் நடைபெற்றது. 1999ல் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக
இருந்தார். அப்போது இந்தியாவின் அணுஆயுதக் கொள்கையாக 
இக்கொள்கை (No First use policy) இந்திய அரசால் வெளியிடப் பட்டது.


காலாவதி ஆகிவிட்ட உலகப்போர்கள்!
------------------------------------------------------------  
ஆக, அணுகுண்டுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய 
அடிப்படையான விவரங்களில் முக்கியமான சிலவற்றைப் 
பார்த்தோம். இந்தப் புரிதல் இல்லாமல் நவீன ராணுவப் 
போர்த்தந்திரத்தில் (modern military strategy) அணுகுண்டுகளின் 
பாத்திரம் பற்றிப் புரிந்து கொள்ள இயலாது.

இரண்டாம் உலகப்போர் முடிந்து 75 ஆண்டுகள் ஆகியும்,
மூன்றாம் உலகப்போர் மூளவில்லை. அது மட்டுமல்ல, 
இனி உலகப்போர் என்ற ஒன்றே இந்த உலகில் இருக்க இயலாது.
உலகப்போர் என்பது காலாவதியாகிவிட்ட ஒரு கோட்பாடாக 
(a lapsed doctrine) ஆகிவிட்டது. நம்புவதற்குக் கடினமாக இருந்தாலும், 
இதுதான் உண்மை.

இதன் பொருள் போர்களே இல்லாத ஓர் உலகை நாம் சமைத்து 
விட்டோம் என்பதல்ல. போர்கள் இருக்கும். ஆனால் ஒவ்வொரு 
கண்டத்திலும் ஒவ்வொரு கடலிலும் நடக்கும் உலகளாவிய 
போர், ஒவ்வொரு நாட்டையும் உள்ளே இழுக்கின்ற  
உலகப்போர் இனிமேல்  ஏற்பட வழியில்லை. உலகப்போர்களின்  
சகாப்தம் (the era of world wars) முற்றிலுமாக முடிந்து விட்டது.
அதிர்ச்சியில் மூச்சடைத்துப் போகிறது, நம்பவே முடியவில்லை 
என்றெல்லாம் சொன்னாலும் மேலே சொன்னது தெளிந்த 
உண்மை ஆகும்.

அமைதியை அருளும் அணுகுண்டு!
-------------------------------------------------------
உலகப் போர்களுக்குக் கொள்ளி வைத்தது யார்?
உலகப்போர் என்ற கோட்பாடே இன்றைய உலகில்
செல்லுபடி ஆகாது என்ற நிலையை ஏற்படுத்தியது யார்?
அணுகுண்டு என்பதுதான் விடை! 

அப்படியானால் கடந்த 75 ஆண்டுகளாக உலகில் 
நிலவும் அமைதிக்குக் காரணம் அணுகுண்டுதானா?
மூன்றாம் உலகப்போர் ஏற்படாமல் இருப்பதற்குக் காரணம் 
அணுகுண்டுதானா? ஓர் அழிவு சக்தியான அணுகுண்டு 
எப்படி அமைதிக்குக் காரணமாக இருக்க முடியும்? 
அணுகுண்டால் எப்படி அமைதியை நிலைநாட்ட முடியும்? 
நெருப்பை நெருப்பு அணைக்குமா? அணைக்குமென்றால் எப்படி?

அணுகுண்டின் மீதான அச்சம்தான் போர் வெறியர்களை 
சமாதானப் பிரியர்களாக மாற்றியுள்ளது  அணுகுண்டின் 
மிகவும் உக்கிரமான அச்சுறுத்தும் தன்மையானது (deterrence)
மொத்த உலகத்தையும் பீதியில் ஆழ்த்தி போருக்கு 
எதிரானவைகளாக எல்லா நாடுகளையும் மாற்றியுள்ளது. 
இவ்வாறு அணுகுண்டானது ஒரு எதிர்மறைப் பாத்திரத்தை 
வகித்து போருக்கு எதிரான உளவியலை உலக நாடுகளிடம் 
ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது.  
  
லிட்டில் பாய், ஃபேட் மேன்!
------------------------------------------   
ஹிரோஷிமாவில் வீசப்பட்ட லிட்டில் பாய் (Little Boy) என்ற பெயருடைய 
அணுகுண்டின் ஆற்றல் 15 கிலோ டன் TNT ஆகும். 
(TNT = Tri Nitro Toluene என்னும் வெடி மருந்து).  அதாவது 63 Tera Joule 
ஆற்றல் ஆகும். 

நாகசாகியில் வீசப்பட்ட ஃபேட்மேன் (Fat Man) என்ற பெயருடைய 
அணுகுண்டு 21 கிலோ டன் TNT ஆற்றலை உடையது அதாவது 
88 Tera Joule ஆற்றல் ஆகும். இந்த அணுகுண்டின் ஆற்றலைப் புரிந்து 
கொள்ள முடிகிறதா? 1 கிராம் TNT வெடித்தால் தோராயமாக 
4000 ஜுல் ஆற்றல் வெளிப்படும் என்று புரிந்து கொள்ளவும்.  

1945ல் அணுகுண்டின் ஆரம்பக் கட்டத்தில்   21 கிலோ டன் TNT
என்ற அளவு ஆற்றல் கொண்ட அணுகுண்டுகளைத்தான் 
தயாரிக்க முடிந்தது. அபோது அமெரிக்கா மட்டும்தான் 
அணுகுண்டுகளை வைத்திருந்தது. தொடர்ந்து பிற நாடுகளும் 
அணுகுண்டுகளைத் தயாரித்தன. அணுகுண்டுகளின் ஆற்றலும்  
எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே சென்றன. 1953ல் 1000 
அணுகுண்டுகளை மட்டுமே வைத்திருந்த அமெரிக்கா, 1961ல் 
18,000 அணுகுண்டுகளைத் தயாரித்து விட்டது. 

ஹைட்ரஜன் குண்டுகள்!
--------------------------------------
ஆரம்ப கால அணுகுண்டுகள் யாவும் அணுக்கருப் பிளவு (nuclear fission) 
வகையிலானவை.  1952 நவம்பர் 1ல் அணுக்கருச் சேர்ப்பு முறையிலான 
குண்டை (Thermonuclear fusion bomb) உலகிலேயே முதன்முறையாக 
அமெரிக்கா உருவாக்கி வெடித்துச் சோதனை செய்தது. இது ஹைட்ரஜன் 
குண்டு என்று மக்களால் அழைக்கப் படுகிறது. ஹங்கேரிய அமெரிக்க 
விஞ்ஞானியான எட்வர்ட் டெல்லர் (Edward Teller 1908-2003)
ஹைட்ரஜன் குண்டை உருவாக்கினார். அவரே ஹைட்ரஜன் 
குண்டுகளின் தந்தை என்று கருதப் படுகிறார். 
    
அமெரிக்காவைத் தொடர்ந்து சோவியத் ஒன்றியம் 1953 ஆகஸ்டிலும்,
இங்கிலாந்து 1957 மேயிலும் ஹைட்ரஜன் குண்டுகளை 
உருவாக்கின. சீனா 1967ல், பிரான்சு 1968ல் என்று அடுத்தடுத்து 
ஹைட்ரஜன் குண்டுகளை உருவாக்கிக் கொண்டன.     

அணுகுண்டுகளை விட ஹைட்ரஜன் குண்டுகள்  
ஆயிரம் மடங்கு ஆற்றல் மிக்கவை. குண்டுவெடிப்பின்போது 
வெளிப்படும் ஆற்றலை அணுகுண்டுகளில் கிலோ டன் 
TNT என்று குறிப்பிடுவதும், ஹைட்ரஜன் குண்டுகளில் 
மெகா டன் TNT என்று குறிப்பிடுவதும் வழக்கம். இதுவே 
இவ்விருவகை குண்டுகளின் ஆற்றலை உணர்த்தும். 
(1 கிலோ டன் = 1000 டன்; 1 மெகா டன் = 10 லட்சம் டன்).       


அணு ஆயுதம் தந்த படிப்பினை!
-------------------------------------------------
1970களில் அமெரிக்கா தயாரித்த B83 எனப்படும் அணுஆயுதம் 
1.2 மெகா டன் TNT ஆற்றல் உடையது. அதாவது 5.0 Peta Joule
ஆற்றல் உடையது. முன்னதாக சோவியத் ஒன்றியம் 
(இன்றைய ரஷ்யா) மிகவும் பிரம்மாண்டமான ஒரு 
அணுஆயுதத்தை 1960களில் தயாரித்து இருந்தது. 

அதன் பெயர் ஜார் பம்பா (Tsar Bomba) என்பதாகும். இதன் பொருள் 
குண்டுகளின் அரசன் என்பது. 100 மெகா டன் TNT ஆற்றலுடன் 
தயாரிக்கப்பட்ட அக்குண்டு பின்னர் நடைமுறை சாத்தியம் 
கருதி, 50 மெகா டன் TNT ஆற்றலுக்கு குறைக்கப் பட்டது. 
ஹிரோஷிமாவில் வீசப்பட்ட லிட்டில்பாய் குண்டின் ஆற்றலைப் 
போல 3800 மடங்கு ஆற்றல் உடையதாக இது இருந்தது. 

இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் உலகில் ஒரே ஒரு நாடு 
(அமெரிக்கா) மட்டுமே அணுகுண்டுகளைக் கொண்டிருந்தது.
காலப்போக்கில் எட்டு நாடுகளிடம் அணுகுண்டுகள் வந்து 
விட்டன. அவற்றின் ஆற்றலும் பல்லாயிரம் மடங்கு 
அதிகரித்து விட்டது. அவற்றின் எண்ணிக்கையும் அசுரத்தனமாகக்  
கூடி விட்டது. சுருங்கக் கூறின், ஒரே ஒரு அணுகுண்டை 
வீசினாலே கோடிக்கணக்கான மக்களை ஒரே நொடியில்
கொன்று விட முடியும் என்ற நிலை இன்று ஏற்பட்டு விட்டது.
அதாவது இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஒரு போரில் 
அணுஆயுதம்  பிரயோகிக்கப் பட்டால், கண்ணிமைக்கும் 
நேரத்துக்குள் இரு தரப்பிலும் சர்வ நாசம் ஏற்பட்டு விடும் 
என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல அனைவராலும் 
உணரப் பட்டு விட்டது.

எனவே அணுஆயுதப் பிரயோகம் எந்த நிலையிலும் தவிர்க்கப் 
பட வேண்டும் என்ற நிலைபாட்டுக்கு அணுஆயுத நாடுகள் 
இயற்கையாக வந்து சேர்ந்தன. இது காலத்தின் கட்டாயம் 
என்று அனைவரும் உணர்ந்தனர். மனித குலத்தின் மொத்தச்  
சிந்தனையில் இவ்வாறு ஒரு அடிப்படை விலகல்  (paradigm shift) 
ஏற்பட்டது. அது அணுஆயுதப் பிரயோகத்துக்கு முடிவு கட்டுகிறது. 
இதன் பின்விளைவாக உலகப் போர்களும் முடிவுக்கு வருகின்றன.

இவ்வாறு உலகப் போர்கள் ஏற்படுத்தும் பேரழிவை அணுகுண்டானது
தடுத்து விடுகிறது. அணுகுண்டு கண்டுபிடிக்கப் படாமல் 
போயிருந்தால், தடுப்பதற்கு யாருமின்றி உலகப் போர்கள் 
நடந்து கொண்டே இருந்திருக்கும். ஆனால் காலம் மாறிவிட்டது.
இனி உலகப்போருக்கு வாய்ப்பில்லை! உலகப்போர்களின் 
சகாப்தம் முற்றுப்பெற்று விட்டது. ஆக, அமைதியை அருளுவது 
அணுகுண்டே என்ற கூற்று வலுவான தர்க்கங்களின் மூலம் 
நிருபிக்கப் பட்டுள்ளது. 

ஒரு மாபெரும் அழிவு சக்தியாகப் பிறப்பெடுத்த அணுகுண்டு 
ஆக்க சக்தியாக மாறி, மூன்றாம் உலகப் போரைத் தடுத்து, 
கடந்த முக்கால் நூற்றாண்டு காலமாக உலக அமைதியை உறுதி செய்துள்ளது.

பேரழிவு உறுதி!
-------------------------
பித்தகோரஸ் தேற்றத்துக்கு மொத்தம் 367 நிரூபணங்கள் 
இருக்கின்றன. அதிர்ச்சி அடைய வேண்டாம். 367 நிரூபணங்கள்! 
அந்த அளவுக்கு இல்லாவிடினும்,  இனி உலகப்போர்களே இருக்காது 
என்ற நமது தேற்றத்திற்கு மேலும் சில நிரூபணங்களைப் பார்ப்போம்.  

நவீன ராணுவப் போர்த் தந்திரத்தில் (Modern military strategy)
MAD doctrine என்னும் பிரசித்தி பெற்ற ஒரு கோட்பாடு உண்டு.
(MAD = Mutually Assured Destruction). அணுஆயுதம் வைத்துள்ள இரண்டு 
நாடுகள் ஒரு போரில் ஒருவர் மீது ஒருவர் அணுஆயுதங்களைப் 
பயன்படுத்தினால்,இரு தரப்புக்கும் பரஸ்பரம் முழுமையான 
பேரழிவு ஏற்படும். எனவே அணுஆயுதப் பிரயோகத்தைத் 
தவிர்க்க வேண்டும் என்பதே MAD கோட்பாடு. 

அணுஆயுதங்கள் உலகில் இருக்கும்வரை MAD கோட்பாடு 
செல்லுபடியாகும்   உலகின் அணுஆயுத நாடுகள் அனைத்தும் 
உணர்வுபூர்வமாக நடைமுறைப் படுத்துகின்ற ஒரு கோட்பாடு இது.
இதன் காரணமாகவே இரண்டாம் உலகப்போருக்குப் பின், 
அணுஆயுதப் பிரயோகமும் இல்லை; உலகப்போர்களும் இல்லை. 
இவ்வாறு  MAD கோட்பாடு உலகப் போர்களை ஒழித்து, மானுடத்தின் 
மாபெரும் சமாதானத் தூதுவனாகத் திகழ்கிறது.

ஜான் வான் நியூமேன்!
----------------------------------
விளையாட்டுக் கோட்பாட்டின் (Game theory) முன்னோடி 
அமெரிக்காவின் கணித, இயற்பியல் மற்றும் பல்துறை 
அறிஞரான ஜான் வான் நியூமேன் (John von Neumann 1903-1957) ஆவார்.  
MAD கோட்பாடு, நாஷ் சமநிலை ஆகியவை விளையாட்டுக்
கோட்பாட்டின் பெறுபேறுகளே (derivatives). இங்கு "விளையாட்டு"
என்பது கிரிக்கெட், கால்பந்து, சதுரங்கம் போன்றவற்றைக் குறிக்காது.
மாறாக, உலகின் சமூக, அரசியல், பொருளியல், ராணுவ, வணிகச்   
சிக்கல்களையே "விளையாட்டு"  என்ற பதம் குறிக்கிறது.    

நியூமேன் வகுத்தளித்த விளையாட்டுக் கோட்பாட்டின்
அடிப்படைத் தேற்றம் இதுதான். 
"பல்வேறு வகையான விளையாட்டுக்களில் ஒரு சமநிலையைக்
கண்டறிவது எப்போதுமே சாத்தியம் ஆகும். இந்தச் சமநிலையில் 
இருந்து எந்தத் தரப்பு ஆட்டக்காரரும் ஒருதலைப் பட்சமாக 
விலகிச் செல்லக்கூடாது".   

(In a broad category of games it is always possible to find an 
equilibrium from which neither player should deviate unilaterally.
---Fundamental theorem of Game theory) 

நாஷ் சமநிலை!
------------------------
இத்தேற்றத்தின்படியே "நாஷ் சமநிலை" (Nash equilibrium) 
உருவாக்கப் பட்டது. இத்தகைய சமநிலைகளை ஏற்படுத்துவது 
சாத்தியமே என்று நியூமேனின் அடிப்படைத் தேற்றம் கூறுகிறது.

அமெரிக்கக் கணித மேதையான ஜான் நாஷ் (John Nash Jr 1928-2015) 
பல்வேறு விளையாட்டுகளுக்குத் தீர்வாக முன்வைத்த ஒரு 
சமநிலை அவரின் பெயரால் நாஷ் சமநிலை (Nash equilibrium) என்று 
வழங்கப் படுகிறது. நோபல் பரிசு (1994), ஏபெல் பரிசு (2015) இரண்டையும் 
பெற்றவர் ஜான் நாஷ். அவரின் வாழ்க்கை வரலாறு A beautiful mind என்ற 
பெயரில் ஒரு ஹாலிவுட் திரைப்படமாக 2001ல் எடுக்கப் பட்டது.
கணித அறிவியல் ஆர்வலர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய 
ஒரு திரைக்காவியம் இப்படம். 

நாஷ் சமநிலைக்குப் பல்வேறு வரையறைகள் உள்ளன. எல்லோரும் 
புரிந்து கொள்ள வசதியாக நாம் பின்வருமாறு எளிமையாக 
வரையறுப்போம். 

"எந்த ஒரு முடிவுறு விளையாட்டிலும் அதில் பங்கேற்றுள்ள 
அத்தனை ஆட்டக்காரர்களும் அதிகபட்சமான ஆதாயத்தைப் 
பெற இயலும். இந்த அதிகபட்ச ஆதாயமே நாஷ் சமநிலை ஆகும்.
இதைப் பெறுவதற்கு ஒவ்வொரு ஆட்டக்காரரும் மற்ற 
ஆட்டக்காரர்களின் சாத்தியமான நடவடிக்கைகளைக் 
கருத்தில் கொண்டிருக்க வேண்டும்".


ஒத்துழைப்பற்ற விளையாட்டுக்கள்!
----------------------------------------------------------
இந்தியா சீனா போர் வருமா?
போர் வந்தால் இந்தியா மீது சீனா அணுகுண்டு வீசுமா?
உலகப்போர் மூளுமா?
அமெரிக்கா ரஷ்யா மீது போர் தொடுக்குமா?

கழுத்தை நெரிக்கும் கேள்விகள் இவை. இவற்றுக்குப் 
பதில் தேடாமல் வெறுமனே கடந்து போக முடியாது.
இக்கேள்விகளை விளையாட்டுக்கள் என்று 
எடுத்துக் கொள்வோம். இவற்றை ஒத்துழைப்பற்ற  
விளையாட்டுக்கள் (non cooperative games) என்கிறார் நாஷ்.
இந்தியா மீது சீனா அணுகுண்டு வீசுமா என்ற கேள்விக்கு 
சீனா பதில் சொல்லாது. எனவே இது ஒத்துழைப்பற்ற 
விளையாட்டு. எனவே பதிலை நாம்தான் தேட வேண்டும்.

பதிலை எப்படித் தேடுவது? முடிவெடுப்பவர்கள் அல்லது 
எழுத்தாளர் ஜெயமோகன் பாணியில் சொன்னால் 
விதி சமைப்பவர்கள் (decision makers) என்ன செய்வார்கள் 
என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இங்குதான் நாஷ் சமநிலை பயன்படுகிறது.
கொடுக்கப்பட்ட சூழல் (இந்தியா மீது சீனா அணுகுண்டு வீசுமா?) 
ஒரு முடிவுறு விளையாட்டு (finite game) என்கிறார் நாஷ். ஒவ்வொரு 
முடிவுறு விளையாட்டுக்கும் ஒரு  தீர்வு உண்டு என்கிறார் நாஷ். 
.  
இன்னொரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். நயன்தாராவுக்கும் 
எனக்கும் திருமணம் நடக்குமா என்று கேட்கிறான் ஒரு இளைஞன்.
இந்தக் கேள்வியை ஒரு விளையாட்டு என்கிறார் நாஷ். இது முடிவுறு 
விளையாட்டு! எனவே இதற்குத் தீர்வு உண்டு. மேலும் இது ஒத்துழைப்பற்ற 
விளையாட்டு. ஏனெனில் விதி சமைப்பவரான நயன்தாரா 
இளைஞனின் கேள்விக்குப் பதில் சொல்ல மாட்டார். எனவே 
நாஷ் சமநிலையைப் பயன்படுத்தி நாம்தான் இதற்குத் தீர்வு 
கண்டாக வேண்டும். அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் 
இதுபோன்ற அத்தனை சிக்கல்களுக்கும் ஒரு நாஷ் சமநிலையை 
உருவாக்கித்  தீர்வு காண இயலும். இதுதான் விளையாட்டுக் 
கோட்பாட்டின் மகிமை! 

இந்தியா மீது சீனா அணுகுண்டு வீசுமா?
-------------------------------------------------------------
இக்கேள்விக்கு நாஷ் சமநிலையைப் பயன்படுத்தி 
விடை காணலாம். இந்தியா சீனா இரண்டுமே அணுஆயுத 
நாடுகள். அணுஆயுதங்களைப் பிரயோகிப்பது என்றால் 
இருதரப்பும் பிரயோகிக்கும். அத்தோடு இருதரப்பும் 
பரஸ்பரம் சர்வ நாசத்தைச் சந்தித்து மண்ணோடு 
மண்ணாகப் போகும்..

இரண்டு நாடுகளுமே அறிவார்ந்த நாடுகள். எனவே 
இவ்விருவரும் மிகச் சிறந்த முடிவையே எடுப்பார்கள்.
அதாவது அணுஆயுதங்களைப் பிரயோகிக்கக் கூடாது 
என்ற முடிவையே எடுப்பார்கள். அதன் மூலம் நாஷ் 
சமநிலையை இருவரும்  பேணிக் கொள்வார்கள் 

ஒவ்வொரு தரப்பும் நாஷ் சமநிலையில் இருக்கும்போதுதான் 
அதிகபட்ச ஆதாயத்தைப் பெற முடியும். நாஷ் சமநிலையில் 
இருந்து விலகினால் இழப்புத்தான் ஏற்படும். அணுஆயுதங்களைப் 
பிரயோகிப்பது என்பது நாஷ் சமநிலையில் இருந்து விலகுவதாகும்.
அது இழப்பை ஏற்படுத்துவதால் அதை  யாரும் விரும்ப மாட்டார்கள்.

எனவே எந்த நிலையிலும் சீனா இந்தியா மீது அணுகுண்டை 
வீசாது. சீனா மட்டுமல்ல, உலகின் எந்த ஒரு அணுஆயுத 
நாடும் பிறிதொரு அணுஆயுத நாட்டின் மீது அணுகுண்டை 
வீசாது. எந்த ஒரு நாடும் நாஷ் சமநிலையில் இருந்து 
விலக முன்வராது. கனியிருப்பக் காய் கவர்ந்து இழப்பை ஏற்க  
எந்த நாடும் தயாராக இருக்காது.  

ஆக இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் நாஷ் சமநிலையைப் 
பேணுவதையே விரும்பும். இவ்வாறு நாஷ் சமநிலை 
நிரந்தரமாகப் பேணப்படுவதால் இனி இந்த பூமியில் 
அணுஆயுதப் பிரயோகம் இருக்காது. போர்களும் இருக்காது. 
ஏனெனில் இது புதியதோர் உலகம்!
*************************************
(இக்கட்டுரை அறிவியல் ஒளி மார்ச் 2022 இதழில் பிரசுரிக்கப்பட்ட 
கட்டுரை ஆகும். அறிவியல் ஒளி ஏடு அரசு நூலகங்களிலும் 
கன்னிமாரா நூலகத்திலும் கிடைக்கும்).
-------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
நாஷ் சமநிலை (Nash equilibrium) உள்ளிட்ட பல்வேறு அறிவியல் 
தலைப்புகளில் இக்கட்டுரையாசிரியர் நடத்தும் கணித/அறிவியல் 
வகுப்புகளில் ஆர்வமுள்ளோர் சேரலாம். கட்டணம் எதுவும் இல்லை.
வகுப்புகள் ஒரு வார கால முன்னறிவிப்புக் கொடுத்த பின்னர் 
சென்னையில் நடைபெறும்.  குறைந்தபட்சமாக 12ஆம் வகுப்பு கணிதம் இயற்பியல் பாடங்களில் வலுவான அடித்தளம் உடையவர்களை 
மட்டுமே வகுப்புகளில் அனுமதிக்க இயலும்.
*********************************************    
 

புதன், 10 மே, 2023

அடிக்கடி வெளிநாடு செல்லும் சவுண்டிப் பாப்பான் 
ஸ்ரீதர சுப்பிரமணியனின் ஒப்புதல் வாக்குமூலம்!
---------------------------------------------------------------------
பார்வை: 
சினிமாக் கூத்தாடி பா ரஞ்சித்தின் எடுபிடியும்
குட்டி முதலாளித்துவ அற்பனும் ஆகிய 
விடுதலை சிகப்பி என்பவன் எழுதிய 
மலக்குழி மரணம் என்ற கவிதை.

இதுபற்றி ஸ்ரீதர சுப்பிரமணியன் எழுதி 
இருப்பதாவது படமாகத் தரப்பட்டு உள்ளது.
பாருங்கள்.
------------------------------------------------------------

நாத்திகப் பிரச்சாரம் என்பது வர்க்கப் போராட்டத்தின் 
நலன்களுக்கு உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
இது மார்க்சிய போதனை.

பொருள்முதல்வாத நாத்திகம் என்பது அறிவியல் 
வழியில் கடவுள் இல்லை என்று நிரூபிப்பது.
மக்களை நமக்கு எதிராக நிறுத்துவதல்ல.


இது hate speech என்கிறது முகநூல் நிர்வாகம்.
அந்த முடிவை ஏற்காமல் contest செய்துள்ளேன்.

அது ஆபிரகாமிய மதங்களில் மட்டும் உள்ள 
போக்கு; பிற்போக்கு.
 

இந்து மதத்தில் எல்லோருமே கடவுள்கள்தான்.
அவதாரங்களும் கடவுள்களாகவே கருதப் 
படுகிறார்கள். பாற்கடலைக் கடையும்போது 
லட்சுமி கிடைக்கப் பெற்றாள். எனினும் 
லட்சுமி கடவுளே. ஆபிரகாமிய மதங்களில்
இறைவனுக்கும் இறைத்தூதர்/இறைக்குமாரன் 
போன்றோருக்கும் இடையே திட்டவட்டமான 
வேறுபாடு உண்டு. இந்து மதத்தில் அப்படியான 
வேறுபாடு எதுவும் இல்லை. இங்கு ஒவ்வொரு 
தனித்தனி இதிகாச பாத்திரமும் கடவுளாகவே 
கருதப் படுகிறார்கள். 

ராமன், சீதை, மதுரை மீனாட்சி, மாங்காடு 
காமாட்சி, ஐயப்பன், முருகன் ஆகிய எல்லோரும்
கடவுள்களே. முருகனை நேரடியாக வணங்கலாம்.
எப்படி வணங்க வேண்டும் என்று instructions 
கொடுக்க இறைத்தூதாரோ அல்லது இறைவனின் 
மானேஜரோ இங்கு கிடையாது.     
 

அறிவியல் வர்க்க சார்பற்றது. எனவே அது 
எல்லோருக்கும் பயன்படும். அது தவிர்க்க 
இயலாதது. கருத்துமுதல்வாதமானது 
அறிவியலின் வளர்ச்சியை நன்கு பயன்படுத்திக் 
கொண்டு வெகுவாகத் தன்னை வளர்த்துக் 
கொண்டுள்ளது.
 

ஆம். Concrete application தேவைப்படும் 
இடம் இது. இந்து மதத்திற்கு ஒரு ஸ்தாபகர், 
ஒரு புனித நூல், கண்டிப்பான ஒழுகலாறுகள் 
(நியம நிஷ்டைகள்) இப்படி எதுவும் கிடையாது. 

எனவே அப்படிப்பட்ட இந்து மதத்தை 
எதிர்கொள்ளும் முறையைக் கொண்டு 
பிற மதங்களை எதிர்கொள்ள இயலாது.
மார்க்சியம் கூறுகிறபடி,  பருண்மையான 
நிலைமைகளை பருண்மையாகப் 
பகுப்பாய்வு செய்துதான் ஒவ்வொரு 
மதத்தையும் அதனதன் தன்மைக்கு 
ஏற்ப எதிர்கொள்ள வேண்டும்.    

Tolerance என்பது கணக்கில் கொள்ள 
வேண்டிய முக்கியமான விஷயம். 
சில மதங்கள் zero tolerance கொண்டிருக்கும். 
உதாரணம் இஸ்லாம்; சீக்கியம். 
கிறிஸ்துவம், இந்து மதம், புத்த மதம் 
ஆகியவை ஒப்பீட்டளவில் 
tolerance உடையவை.

கூடுமானவரை without antagonising the 
followers of a religion அம்மதத்தை 
அம்பலப்படுத்த வேண்டும்.
followers என்பது முக்கியமானது. அது 
மதத்தைப் பின்பற்றும் இயல்பான 
மக்களைக் குறிக்கிறது.
மதத்தின் பிரதிநிதிகள், பொறுப்பாளர்களை 
antagonize செய்யாமல் இருக்க முடியாது.
அறிவியல் வழியில் உங்களது 
அம்பலப்படுத்தல்கள் இருக்கட்டும். 
அது வெற்றியை ஈட்டித் தரும்.
Diehard ஆசாமிகள் மற்றும் வரட்டுப் 
பிடிவாதமுள்ள ஆசாமிகள் ஆகியோரோடு 
விவாதம் வேண்டாம்.அது எனர்ஜி வேஸ்ட். 

சிந்தனை corrupt ஆகாத ஆட்களைத் 
தேடிப்பிடித்து அவர்களை உங்களின் 
கருத்தை ஏற்கத் செய்யுங்கள்.
உண்மை வெல்லும். வென்றே தீரும்.

ஒரு மதத்தை விமர்சிக்கும் உரிமை 
அம்மதத்தைச் சேர்ந்தவருக்கு இயல்பாகவே 
வந்து விடுகிறது. அதே நேரத்தில் ஒரு 
மதத்தைச் சாராதவர் அம்மதத்தை 
விமர்சிப்பதற்கு  சமூகத்தில் acceptability 
கிடையாது. அதாவது மக்கள் அதை 
ஏற்பது கிடையாது. எனவே இங்கு 
உலகத்தோடு ஓட்ட ஒழுகல் தேவைப்படுகிறது.

   
திராவிடத்தின் ஏதையா அறிவு ஜீவிகள்?
தெற்காசியாவின் பிரம்மாண்டமான தற்குறி 
இயக்கம்தான் திராவிட இயக்கம்!
திராவிட அறிவுஜீவிகள் என்பது 
தமிழிலக்கணப்படி இல்பொருள் உவமை.

  
சினிமாக் கூத்தாடி பா ரஞ்சித்தின் எடுபிடி 
குட்டி முதலாளித்துவ அற்பன் கைது செய்யப் படவில்லை!
ஏனெனில் அவன் திமுகவின் கைக்கூலி!
----------------------------------------------------------------------------
பா ரஞ்சித்தின் எடுபிடி விடுதலை சிகப்பி 
என்பவன் மலக்குழி மரணம் என்ற பெயரில் ஒரு 
கவிதையை எழுதி இருந்தான். 

அதில் இந்துக் கடவுள்களை அவமதித்ததாக 
அவன் மேல் ஒரு புகார் கொடுக்கப் பட்டது.
அதையொட்டி திமுக அரசு அவன் மீது வழக்குப் 
பதிந்துள்ளது. அவன் கைது செய்யப் படவில்லை.   

திமுக கைக்கூலியான விடுதலை சிகப்பி என்னும் 
குட்டி முதலாளித்துவ அற்பன் திமுக அரசுக்கு ஜால்ரா 
போடுபவன். எனவே அவன் கைது செய்யப் படவில்லை.

ஒன்றுக்கும் உருப்படாத குப்பையான கிஷோர் கே 
சுவாமி என்னும் பிள்ளைப் பூச்சியை திமுக அரசு 
குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் 
அடைத்தது. ஆறு மாத காலம் சிறையில் இருந்து 
அதன் பின்னரே வெளியே வந்தான் 
கிஷோர் கே சுவாமி.  

ஆனால் கு.மு அற்பன் விடுதலை சிகப்பியை
திமுக அரசு குண்டர் சட்டத்தில் ஒருபோதும் கைது 
செய்யாது. ஏனெனில் இவன் ஆளும் கட்சியின் 
அடிவருடி.

கல்யாணராமன் என்னும் பாஜக பிரமுகர் இரண்டு முறை 
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப் பட்டு, ஓராண்டு 
காலம் சிறையில் இருந்த பின்னரே வெளியே வந்தார்.

  
குட்டி முதலாளித்துவ மாரிதாஸ் என்னும் இன்ஜீனியரை 
திமுக அரசு கைது செய்தது. நீதிமன்றம் மாரிதாஸ் 
மீதான  எப் ஐ ஆரையே (FIR) ரத்து செய்ததால் 
மாரிதாஸ் தப்பித்தான்.

மீம்ஸ் போட்டான் என்பதற்காக சவுக்கு 
சங்கரின் கூட்டாளி ஒருவன் சமீபத்தில் கைது 
செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டான்.

ஆனால் திமுகவின் கைக்கூலி விடுதலை சிகப்பியை 
திமுக அரசு கைது செய்யாது.

விடுதலை சிகப்பி என்பவன் நாத்திகன் அல்லன்.
நாத்திகனாக வேடம் தரிக்கும் ஒரு போலி.
இவன் பொருள்முதல்வாதி அல்ல. பொருள்முதல்வாதம் 
என்றால் என்ன என்று இவனுக்கு சுட்டுப் போட்டாலும்
மண்டையில் ஏறாது.

நம்மூர் போலி மாவோயிஸ்டுகளும் போலி முற்போக்குகளும்
விடுதலை சிகப்பியை ஏதோ மாயா காவ்ஸ்கி ரேஞ்சுக்கு 
உயர்த்திப் பேசி வருகிறார்கள். இவர்கள் போலி 
மாவோயிஸ்டுகள். நேற்று ஒடிஷாவில் 3 மாவோயிஸ்டுகளைச் 
சுட்டுக் கொன்றுள்ளான் போலீஸ். அநேகமாக அவர்களைக் 
காட்டிக் கொடுத்தது யாராக இருக்கும் என்றால்,
நம்மூர் போலி மாவோயிஸ்டுகளாகத்தான் இருக்கும்.
**************************************************  
 

செவ்வாய், 9 மே, 2023

தமிழ்நாட்டில் இன்று (09.05.2023) NIA அமைப்பால் 
கைது செய்யப்பட்டவர்கள் 5 பேர்.
இவர்கள் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் 
இந்தியா என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள். 
கடந்த செப்டம்பர் 2022ல் UAPA சட்டப்படி 
NIA தொடுத்த வழக்கு தொடர்பாக பின்வரும் 
5 பேரும் கைது செய்யப் பட்டுள்ளனர். 
முன்னதாக இவர்கள் தொடர்புடைய ஆறு இடங்களில் 
நடந்த ரெயிடுகளைத் தொடர்ந்து ரெயிடுகளில் 
முக்கியமான materialsஐ NIA கைப்பற்றி உள்ளது.   


1) அப்துல் ரசாக் (47) சென்னை 
2) முகம்மது யூசுப் (35) மதுரை 
3) எம் முகம்மது அபபாஸ் (45) மதுரை 
4) கைஸர் ஏ (45) திண்டுக்கல் 
5) சாதிக் அலி (39) தேனி  
 OBC இடஒதுக்கீட்டின் தந்தை வி பி சிங் வாழ்க!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------
பெரியாரும் அம்பேத்காரும்தான் 
இடஒதுக்கீட்டையே கண்டுபிடித்தார்கள்; 
கொண்டு வந்தார்கள் என்று அவர்களின்
ஆதரவாளர்கள் சொல்லிக்கொண்டு 
திரிகிறார்கள். 

OBCக்கான இடஒதுக்கீட்டுக்கும் 
அம்பேத்காருக்கும் எள்முனையளவும் 
சம்பந்தம் கிடையாது.
அவர் ஒரு SECTARIAN LEADER.   
 
OBC இடஒதுக்கீடு, மண்டல் கமிஷன், 
வி பி சிங் உத்தரவு ஆகியவற்றால்தான் 
OBCக்கு 27% ஒதுக்கீடு கிடைத்தது. 

இதற்குப் பாடுபட்ட பலரில் முக்கியமானவர் 
ஆனைமுத்து. OBC 27% இடஒதுக்கீட்டில் 
பெரியாருக்கு எப்பங்கும் இல்லை. அவர் 
அதற்கெல்லாம் வெகுகாலத்துக்கு 
முன்னரே இறந்து விட்டார்.

ஒரு விஷயத்தை முழுமையாக கற்றுக் 
கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் 
பெரியார் அம்பேத்கார் என்று ஸ்தோத்திரம் 
சொல்வதால் பயனில்லை. உண்மை 
அதைத் தாண்டி இருக்கிறது.

OBC இடஒதுக்கீடு என்றால்,
1) பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல்        
2) ஆனைமுத்து 
3) வி பி சிங் 
ஆகியோரைப் பற்றி மட்டுமே பேச வேண்டும்.
அங்கு ஈ வெ ராமசாமி பற்றியோ 
அம்பேத்கார் பற்றியோ பேசுவதற்கு 
ஒன்றுமே இல்லை. 

சாகு மகாராஜை அடுத்து இந்தியாவை ஆண்ட 
பிரிட்டிஷ்காரன் பல சமூகங்களுக்கும் 
இடஒதுக்கீடு கொடுத்தான். பிரிட்டிஷ்காரனைப் 
பின்பற்றி அன்றைய பல சமஸ்தானங்களிலும் 
இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

பிரிட்டிஷ்காரன் கொடுத்த இடஒதுக்கீட்டில்தான் 
அம்பேத்காரே படித்தார். இதுதான் உண்மை.
இதுதான் மெய்யான வரலாறு.

தன சொந்தசாதிக்கு மட்டுமே (SC,ST) 
இடஒதுக்கீடு வேண்டுமென அம்பேத்கார் 
உழைத்தார்.

இந்திய மக்கள்தொகையில்பாதிக்கும் மேலாக 
உள்ள OBC மக்களை அம்பேத்கார் கிஞ்சித்தும் 
பொருட்படுத்தவில்லை. அவர் வெறும் 
SECTARIAN LEADER.

எவர் ஒருவருடைய வீட்டில் சாஹு மகராஜ்,
B P மண்டல், வி பி சிங், ஆனைமுத்து 
ஆகியோரின் படம் இருக்கிறதோ அவர் 
மட்டுமே OBC ஒதுக்கீட்டைப் பற்றிப் பேசும் 
அருகதை உடையவர். 

பி பி மண்டல், வி பி சிங், ஆனைமுத்து 
ஆகியோரின் உழைப்பால் விளைந்ததே OBC 
இடஒதுக்கீடு. இவர்களின் பாத்திரத்தை 
மறைத்து விட்டு தொட்டதெற்கெல்லாம் 
அம்பேத்கார் பெரியார் என்று கூறுவதில் 
உண்மையும் இல்லை; நேர்மையும் இல்லை.

தமிழ்நாட்டில் 69 சதவீதம் அளவு இடஒதுக்கீட்டை 
உயர்த்தியவர் அன்றைய முதல்வர் எம் ஜி ஆர்.
பின்னர் ஜெயலலிதா அதை எட்டாவது 
அட்டவணையில் வைத்தார். இன்று 69 சதவீத 
இடஒதுக்கீடு சாசுவதமான, நிலைபேறு 
உடையதாக இருக்கிறது என்றால் 
அதற்குக் காரணம் எம்ஜியாரும் 
ஜெயலலிதாவுமே.

இதெல்லாம் யார் எவராலும் மறுக்க முடியாத
வரலாறு. ஆனால் முழுப்பூசணிக்காயைச்
சோற்றில் மறைக்க முயல்வதைப்போல, 
மேற்கூறிய இவ்வளவு பேரையும் மறைத்து 
விட்டு, அவர்களின் உழைப்பை அபகரித்துக்
கொண்டு தொட்டதெற்கெல்லாம் அம்பேத்கார் 
பெரியார் என்ரூ பேசுவது நியாயம் அல்ல.

அம்பேத்காருக்கும் பெரியாருக்கும் 
இடஒதுக்கீடு முறையை வளர்த்ததில் 
நிச்சயம் பங்குண்டு. அவர்களின் பங்கைப் 
பற்றிச் சொல்லுங்கள். அதற்குப்பதிலாக 
இடஒதுக்கீடு என்றாலே அம்பேத்கார் 
பெரியார்தான் என்று சொல்லி 
OBC இடஒதுக்கீட்டுக்காகப் பாடுபட்ட 
மற்றப் பலரின் பங்களிப்பை அபகரிக்காதீர்கள்.