வெள்ளி, 1 டிசம்பர், 2023

 வெள்ளாளங்குளம் கல்வி வள்ளல் 
எம் ஜே பாண்டியன் அவர்களின்
நூற்றாண்டு விழாவும் சிலை திறப்பும்!
----------------------------------------------------------
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் 
சுரண்டை, சேர்ந்தமரம் ஊர்களுக்கு அருகில் உள்ள 
சிற்றூர் வெள்ளாளங்குளம் ஆகும்.

1960களில் இவ்வூரில் முதன் முதலாக ஓர் 
உயர்நிலைப்பள்ளி கொண்டு வரப்பட்டது.
அதற்காகப் பாடுபட்டு அச்சிற்றூரில் 
பள்ளியைக் கொண்டு வந்தவர் அவ்வூரின்
ஊராட்சி மன்றத் தலைவரான சடையப்பத் தேவர் 
எனப்படும் திரு எம் ஜே பாண்டியன் அவர்கள்.

எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்த வேண்டியிருந்த 
நிலையில் இருந்த ஊர்ப் பிள்ளைகள் இன்று பெரிய 
படிப்புப் படித்து உயர் அதிகாரிகளாய்ச் 
சமூகத்திற்குச் சிறப்புச் சேர்க்கின்றனர்.

கல்விக்கு வழி சமைத்த எம் ஜே பாண்டியன் 
அவர்களை நன்றியுடன் நினைவுகூரும் வண்ணம் 
தற்போது வெள்ளாளங்குளத்தில் அவருடைய 
நூற்றாண்டு விழாவும் சிலை திறப்பும் நடக்கிறது. 

இந்த விழா சிறப்புற இப்பள்ளியின் முன்னாள் மாணவனாகிய 
நான் வாழ்த்துகிறேன். 
எம் ஜே பாண்டியன் அவர்களின் புகழ் ஓங்குக!


இப்பள்ளியின் முதல் தலைமையாசிரியர்!
---------------------------------------------------------------
என்னுடைய தந்தையார் திரு மு பிச்சாண்டி எம் ஏ பி டி அவர்கள் வெள்ளாங்குளம் பள்ளியின் முதல் தலைமையாசிரியராகப் 
பொறுப்பேற்றுப் பணியாற்றினார்கள். அர்ப்பணிப்புடன் 
பணியாற்றினார்கள். அவர்கள் அப்பள்ளியில் 
பணியாற்றிய காலத்தில், தமிழக அரசு அவர்களுக்கு 
நல்லாசிரியர் விருது வழங்கிச் சிறப்பித்தது.

வெள்ளாளங்குளம் மட்டுமின்றி அருகிலுள்ள 
பல சிற்றூர்களையும் இப்பள்ளி அரவணைத்தது.


இந்த விழாவில் முதல் ஆளாகப் பங்கேற்க வேண்டியவன்
நான். உடல்நலக்குறைவு காரணமாக டயாலிசிஸ் செய்து 
கொண்டு இருப்பதால் தற்போது என்னால் பயணத்தை 
மேற்கொள்ள இயலவில்லை. வீரவநல்லூரில் இருந்து 
என் தம்பிமார்கள் இவ்விழாவில் பங்கேற்றுச் 
சிறப்பிக்கின்றனர்.

மதிப்புக்குரிய எம் ஜே பாண்டியன் அவர்களை 
நான் நன்கறிவேன். அவரின் திசை நோக்கி 
வணங்கி மகிழ்கிறேன்.
என்னுடைய வணக்கமும் நன்றியும்
எம் ஜே பாண்டியன் அவர்களைச் சென்றடையும் 
என்ற நம்பிக்கையுடன் இந்த விழாவில் 
நான் மானஸீகமாகப் பங்கேற்கிறேன்.

எம் ஜே பாண்டியன் புகழ் ஓங்குக!
********************************************            
சுரங்கத்தினுள் 17 நாள் சிக்கித் தவித்த 
தொழிலாளர்கள் மீட்கப்பட்டது எப்படி?
--------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------

வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம்-அடி 
மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்.
.........மகாகவி பாரதி.

உத்தரகாண்ட் மாநிலம் மலையும் மலைசார்ந்த இடமும்
ஆகும். கடந்த நவம்பர் 12 அதிகாலை ஐந்தரை மணிக்கு 
இம்மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த   
சில்கியாரா சுரங்கம் (silkyara tunnel) இடிந்து விழுந்தது. 
வெளியேறும் வழி அடைத்துக் கொண்டதால் அங்கு 
பணியாற்றிய 41 தொழிலாளர்கள் சுரங்கத்தினுள்ளேயே 
சிக்கிக் கொண்டனர். 17 நாட்கள் கழித்து  நவம்பர் 28, 2023ல் 
அவர்கள் அனைவரும் துளி சேதாரமும் இன்றி பத்திரமாக 
மீட்கப் பட்டனர். 

நவம்பர் 28 இரவு 8 மணியளவில் மீட்கப்பட்ட 41 பேரில் 
முதலில் வந்த சிலரை ஏற்றிக்கொண்டு சில்கியாரா 
சுரங்கப்பாதையின் வாசலில் இருந்து  ஒரு ஆம்புலன்ஸ்  
விண்ணதிரும் முழக்கங்களுடன் புறப்பட்டுச் சென்றது. 
இத்தொழிலாளர்களின் மீட்பு சர்வதேச ஏடுகளின் 
தலைப்புச் செய்தியானது.


ரூ ஒரு லட்சம் உதவித்தொகை!
------------------------------------------------
உத்தரகாண்ட் மாநில அரசும் மத்திய அரசும் உச்ச அளவு 
ஒருங்கிணைப்புடன் செயலாற்றின. தொடர்புடைய பேரிடர் 
மீட்பு அமைப்புகள் (NDRF and SDRF) அதிகபட்ச அர்ப்பணிப்புடன்  
தம் கடமையைச் செய்தன. மீட்புக்குழுவானது பல்வேறு 
ஏஜன்சிகளின் ஒருங்கிணைப்பாகும் (multi agency rescue team) 
உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தினமும் 
மீட்புப் பணிகளைப் பார்வையிட்டு தேவையான அனைத்து 
உதவிகளையும் செய்து வந்தார். மீட்புப் பணிகளின் நிலவரம் 
குறித்து பாரதப் பிரதமர் தொடர்ச்சியாக அறிந்து கொண்டும் 
அக்கறை காட்டியம் வந்தார். மீட்கப்பட்ட 41 பேருக்கும் 
தலைக்கு ரூ ஒரு லட்சம் உதவித்தொகையை உத்தரகாண்ட் 
முதல்வர் வழங்கினார்.

சுரங்கத்தினுள் சிக்கிக் கொண்டோர் 41 தொழிலாளர்கள்.
அதிர்ஷ்டவசமாக இவர்களில் பெண்கள் குழந்தைகள் 
முதியோர் என்று எவருமே இல்லை. அனைவருமே 
இளவயதினர்தாம்!.  


உணவு அனுப்புவதில் வெற்றி!
----------------------------------------------
தொழிலாளர்கள் சிக்கிக்கொண்ட தேதி நவம்பர் 12. எட்டு நாட்களாக 
மீட்புக் குழுவினரால் இவர்களை அணுக இயலவில்லை.
ஒன்பதாம் நாளன்று, நவம்பர் 20ல், சுரங்கத்தினுள் தொழிலாளர்கள்  
சிக்கிக் கொண்ட இடத்திற்கு ஒரு நீண்ட குழாயை
அனுப்புவதில் மீட்புக் குழுவினர் வெற்றி அடைந்தனர்.
மீட்புப் பணியின் உருப்படியான முதல் வெற்றியாகும் இது.
அரையடி விட்டமுள்ள அந்தக் குழாயின் வழியாக 
சிக்கித் தவிப்போருக்கான உணவை மீட்புக் குழுவினர் 
வெற்றிகரமாக அனுப்பினர். சூடான ரவை கிச்சடி அனுப்பப் பட்டது.

அகன்ற வாய் உடைய உருளை வடிவ பாட்டில்களில் 
கிச்சடி அடைக்கப்பட்டு சிக்குண்ட தொழிலாளர்களை 
குழாய் வழியே சென்றடைந்தது. கூடவே ஆப்பிள், வாழை,
தண்ணீர், மருந்து ஆகியனவும் மருத்துவர்களின் ஆலோசனைக்கு 
இணங்க அனுப்பப் பட்டன. முன்னதாக ஒரு குழாய் மூலம் 
ஆக்சிஜன் அனுப்பப் பட்டது.   

தொலைதொடர்பு முயற்சியில் BSNL!
------------------------------------------------------- 
சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் 
பேசுவதற்காக சில்கியாரா சுரங்கப்பாதையினுள் நிலவழித் 
தொலைதொடர்பை (wired Landline connectivity) ஏற்படுத்தும் 
பெரும் பொறுப்பு BSNL நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டது.
பொறுப்பை ஏற்றுக்கொண்ட BSNL,  நவம்பர் 25ல் வயர்களைப் 
பொருத்தும் பணியில் ஈடுபட்டது. எனினும் இப்பணி தொடர்ச்சியாக தடங்கலுக்கு உள்ளானது. 

தொழிலாளர்கள் 41 பேரும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
உபி, பீகார், மேற்கு வங்கம், அசாம், ஜார்க்கண்டு, உத்தரகாண்ட்,
ஒடிஷா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.  

மீட்கப்பட்ட 41 பேரில் ஒருவரான விஷால் குமார் என்பவர் 
மீட்கப்பட்ட உடன் செய்தியாளர்களுக்கு அளித்த 
பேட்டியில் ஐந்து அல்லது பத்து நாட்களுக்குள் தாங்கள் மீட்கப்பட்டு 
விடுவோம் என்று நம்பியதாகத் தெரிவித்தார். 17 நாட்களாகி 
விடும் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் 
நாளின் பெரும்பகுதி நேரத்தை தூங்கிக் கொண்டும் 
ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டும் கழித்ததாகத் தெரிவித்தார்.
தமது பேச்சில் ஒரு குழாய் மூலம் ஆக்சிஜன் தங்களுக்குக் 
கிடைத்துக் கொண்டிருந்ததை நன்றியுடன் நினைவு கூர்ந்தார் 
விஷால் குமார்.

சுரங்கப்பாதையில் மண்சரிவு!
------------------------------------------------ 
சில்கியாரா சுரங்கப்பாதை மண்சரிவு (Silkyara tunnel collapse)  
என்று அழைக்கப்படும் இவ்விபத்து உண்மையில் நிலக்கரிச் 
சுரங்கம், இரும்புச் சுரங்கம் போன்ற சுரங்கங்களில் 
ஏற்படும் விபத்து போன்றதல்ல. நிலக்கரி, இரும்புச் சுரங்கங்கள் 
அதிக ஆழம் தோண்டப் படுபவை. தென்னாப்பிரிக்காவில் 
சில நிலக்கரிச் சுரங்கங்கள் 4 கிமீ ஆழம் தோண்டப்பட்டவை.
ஆனால் சில்கியாரா சுரங்கப்பாதையானது சாலை அமைப்புத் 
தொடர்பான ஒரு சுரங்கப் பாதை (tunnel and not a mine) ஆகும்.
இது ஆழமாகத் தோண்டப் படுவதற்கான எந்தத் 
தேவையும் இல்லாத ஒன்று.

மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், சாலைகள் என்னும் மூன்று 
கூறுகளால் ஆனவை நவீன நெடுஞ்சாலைகள். சாலைகளின் 
பிரிக்க முடியாத பகுதிகளாக ஆகிவிட்ட சுரங்கப் பாதைகள்
பொதுவாக 15 அடி, 20 அடி என்று மேம்போக்கான ஆழம் உடையவை.
தேவையை ஒட்டி அதிகபட்சமாக 30 அடி ஆழத்திற்கு மேல் இச்சுரங்கப் பாதைகளின் உயரம் பொதுவாக அமைவதில்லை.  

உத்தரகாண்ட் மாநிலத்தில் "சார் தம் தேசிய நெடுஞ்சாலைத் 
திட்டம்" (Char Dham National Highway Project) என்னும் சாலை அமைப்புத் 
திட்டம் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் 
(இந்திய மதிப்பில் தோராயமாக ரூ 10,500 கோடி) 2016ல் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ் அமைக்கப்படும் நெடுஞ்சாலையின் மொத்த 
நீளம் 889 கிமீ ஆகும். கேதர்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி, கங்கோத்ரி 
ஆகிய நான்கு கோவில் நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையை   
அமைப்பதே "சார் தம்" திட்டம் ஆகும். சார் தம் என்ற இந்திச் சொல் 
நான்கு ஸ்தலங்கள் என்று பொருள்பட்டு மேற்கூறிய நான்கு 
கோவில் நகரங்களைக் குறிக்கும்.

உச்சநீதிமன்றம் அனுமதி!
---------------------------------------
இந்திய மாநிலங்களில் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதில் முதலிடம்  
பெற்றுள்ள மாநிலம் உத்தரகாண்ட் ஆகும். 2022ஆம் ஆண்டில் மட்டும் 
ஐந்து கோடி சுற்றுலாப் பயணிகள் உத்தரகாண்டிற்கு வருகை 
புரிந்துள்ளனர் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்த ஐந்து 
கோடியில், அரைக்கோடிப்பேர்  கேதர்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி, கங்கோத்ரி  ஆகிய கோவில் நகரங்களுக்கு பக்திச் சுற்றுலா வந்தவர்கள்.
சுற்றுலா வருவாயைப் பெருக்கும் நோக்கிலும், பக்தர்களுக்கு 
வசதி செய்து தரும் நோக்கிலும் மக்களின் தேவை சார்ந்து 
"சார் தம்" தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் கொண்டு வரப்பட்டது.  

திட்ட வேலைகள் ஆரம்பித்ததுமே இத்திட்டத்தால் சுற்றுச்சூழல் 
பாதிக்கப்படும் என்று புகார்கள் எழுந்தன. பலர் நீதிமன்றங்களில் 
வழக்குத் தொடுத்தனர். வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் 
இத்திட்டத்தைச் செயல்படுத்த அனுமதித்தது.  அதே நேரத்தில்,
இச்சாலை அமைப்பின்போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் 
கண்காணிக்க உச்சநீதிமன்றம் ஒரு மேற்பார்வைக் குழுவை 
(oversight committee) அமைத்துள்ளது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் 
ஏ கே சிக்ரி (Justice A K Sikri) அக்குழுவின் தலைவர் ஆவார். 

உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்புடனே  திட்டம்  தொடர்ந்தது.
"சார் தம்"  திட்டப்படியான மொத்தமுள்ள 889 கிமீ நீள சாலையில் 
578.6 கிமீ தொலைவுக்கு சாலை அமைக்கப்பட்டு விட்டதாக நீதியரசர் 
சிக்ரி குழு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. 

சுரங்கத்தினுள் சிக்கிய 41 பேர்!
-------------------------------------------------
விபத்து நிகழ்ந்த சில்கியாரா-பர்கோட்  சுரங்கப்பாதையானது 
(Silkyara-Burkot Tunnel) 4.5 கிமீ நீளம், 13 மீட்டர் அகலம், 9 மீட்டர் உயரம் 
என்னும் அளவுகளைக் கொண்டது. இச்சாலை அமைப்பதில் 
முக்காலே அரைக்கால் பாகம் வேலை முடிந்துவிட்ட நிலையில்,
அதாவது 4 கிமீ நீளத்திற்கான சாலை அமைக்கப்பட்டுவிட்ட 
நிலையில், வேலையின் இறுதிக் கட்டத்தில், இன்னும் 500 மீட்டர்   
நீளத்திற்கான சாலை மட்டுமே எஞ்சியுள்ளது என்ற 
நிலையில் விபத்து நிகழ்ந்து வெளியேறும் பாதை அடைபட்டு 
விட்டது. விபத்து நிகழ்ந்த இடம்  சில்க்யாராவில் இருந்து  200 மீட்டர் தொலைவில் உள்ளது.

நவம்பர் 12 அதிகாலை 5.30 மணிக்கு மண்சரிவு நிகழ்ந்து 
55 மீட்டர் நீளத்திற்கு வெளியேற்றப் பாதையை கான்கிரீட்
மூடிவிட்டது. 41 தொழிலாளர்களும் சுரங்கத்தினுள் 
சிக்கிக் கொண்டனர். எனினும் இதில் நமது அதிர்ஷ்டம் 
என்னவெனில், தொழிலாளர்கள் மாட்டிக்கொண்ட பகுதி 
மின்சார வசதி படைத்ததும், ஆக்சிஜன் வழங்கும் குழாய்களின் 
இருப்பும் உடைய 2 கிமீ நீளமான நன்கு கட்டி முடிக்கப்பட்ட 
பகுதியாகும். இங்கு தண்ணீர் இருந்தது. இது தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை அளித்தது.  எனவே சிக்குண்ட ஆரம்ப நாட்களில் தொழிலாளர்களுக்கு இன்னல்கள் பெரிதாக எழவில்லை. 

ஆனால் மீட்புப் பணியின் காலம் நீட்டிக்க நீட்டிக்க  
ஆக்சிஜன் சப்ளை குறைந்து கொண்டே செல்லும்
அபாயம் இருந்தது. இருப்பினும் நிலைமை முற்றிலும் மோசமாவதற்குள் 
மீட்புப் பணியில் ஒரு பெரிய முன்னேற்றம் ஒன்பதாம் நாளன்று 
ஏற்பட்டது. சுரங்கத்தினுள் சிக்கிக் கொண்டோருக்கு 
உணவு அனுப்புவதில் மீட்புக்குழு அன்றுதான் வெற்றி அடைந்தது.  
சிக்கிக்கொண்ட தொழிலாளர்களுக்கு உணவு, மருந்து, தண்ணீர், 
ஆக்சிஜன் ஆகியவை வேண்டிய அளவு குழாய் மூலம் அனுப்பப் 
பட்டன. இதைத் தொடர்ந்து சுரங்கத்தினுள் சிக்கிக்கொண்ட 
அனைவருக்கும் தாங்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவது 
உறுதி என்ற நம்பிக்கை பிறந்தது.


உயரமே இங்கு விதியானது!
-------------------------------------------
உத்தரகாண்ட் மாநிலம் இமயமலைச் சரிவில் அமைந்த உயரமான 
மாநிலம். இங்குள்ள இடங்களும் ஊர்களும் உயரமானவை.
அதாவது கடல் மட்டத்திற்கு மேல் (above MSL = Mean Sea Level) 
சராசரியாக 2 கிமீ உயரம் உடைய ஊர்களைக் கொண்ட மாநிலம் உத்தரகாண்ட். இம்மாநிலத்தின் அதிகபட்ச உயரம் 
(maximum elevation) ஏழரை கிமீ (துல்லியமாக 7442 மீட்டர்)..

தமிழ்நாடு போன்று மிகப்பெரிதும் சமதளமான 
மாநிலம் அல்ல உத்தரகாண்ட். சென்னை, தூத்துக்குடி, 
கடலூர் போன்று கடல்மட்டத்தை விடச் சிறிதளவே உயர்ந்திருக்கும் நிலப்பரப்பைக் கொண்டதல்ல உத்தரகாண்ட். இங்கு எதைத்
தொட்டாலும் எங்கு தொட்டாலும் எப்படித் தொட்டாலும் 
உயரம்தான்; அதுவும் கிலோமீட்டர் கணக்கில்தான். எனவே 
இம்மாநிலத்தின் சுரங்கப்பாதை முதல் மேம்பாலம் வரையிலான 
கட்டுமானம் அனைத்திலும் இமயமலையின் அதிஉயரப் 
புவியியலானது மிகவும் சக்தி வாய்ந்த தாக்கத்தைச் செலுத்தி 
வருகிறது. எனவே தமிழ்நாடு போன்ற சமதள மாநிலங்களின் 
கட்டுமான நடைமுறைகள் உத்தரகாண்டில் பொருந்தாது.

தவிர்த்திருக்கக்கூடிய விபத்து!
-------------------------------------------------
ஐதராபாத்தைச் சேர்ந்த நவயுகா பொறியியல் நிறுவனம் 
(Navayugha Engineering Company Limited) என்னும் நிறுவனமே 
சில்கியாரா சுரங்கப்பாதைக்குப்  பொறுப்பேற்று 
கட்டுமானத்தை மேற்கொண்டு வந்தது. நடைபெற்ற விபத்து 
தவிர்த்திருக்கக் கூடிய விபத்தே தவிர மனித முயற்சிக்கு 
அப்பாற்பட்ட ஒன்றல்ல.  இமயமலையின் புவியியலை 
நன்கறிந்து தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சுரங்கப் 
பாதையின் கட்டுமானம் நடந்திருக்கும்பட்சத்தில், இந்த 
விபத்துக்கு இடமே இல்லாமல் போயிருக்கும். 

இந்த விபத்தை அடுத்து, மாநிலத்தில் நடைபெறும் 
அனைத்து சுரங்கப்பாதைகளின் கட்டுமானமும் 
இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்கும்வண்ணம் 
உரிய விதத்தில் பரிசீலிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படும் 
என்று உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி 
அறிவித்துள்ளார். விபத்துக்கள் மீண்டும் தொடரக்கூடாது 
என்ற மாநில அரசின் அக்கறையை முதல்வர் வெளிப்படுத்தி 
உள்ளார். இது மிகப் பெரிதும் வரவேற்கக்கூடிய முடிவாகும். 
இதை நூறு சதம் கறாராகக் கடைப்பிடிக்க வேண்டும்.

மீட்புப் பணிகள்:
------------------------- 
நவம்பர் 12 தீபாவளியன்று அதிகாலை 5.30 மணிக்கு, கட்டப்பட்டு வரும் சில்கியாரா-பர்கோட்  சுரங்கப்பாதையில் சில்கியாரா முனையில் 
60 மீட்டர் நீளத்துக்கு மண்சரிவு ஏற்பட்டது. சுரங்கத்தில் இருந்து 
வெளியேறும் பாதையை (exit) இம்மண்சரிவு மூடிவிட்டது.  இதனுள் 
41 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்கள் சிக்கிக்கொண்ட பகுதி 
(area of entrapment) 2 கிமீ நீளமும் 8.5 மீட்டர் உயரமும் உடைய கான்கிரீட் 
போட்டு நன்கு கட்டி முடிக்கப்பட்ட சுரங்கப்பாதையின் 
(built up portion of the tunnel) பகுதியாகும். அங்கு மின்சாரமும் தண்ணீரும்  
இருந்தன. 
 
முதல் வேலையாக மண்சரிவை அகற்ற மீட்புக் குழு முடிவு செய்தது. 
இதற்காக ஜேசிபி எந்திரங்கள் (JCB machines) பயன்படுத்தப்பட்டன. 
இடிபாடுகளைத் துளைத்து அவற்றின் ஊடாக 90 செமீ விட்டம் 
உடைய ஒரு குழாயை (900 mm pipe) நுழைப்பதற்கு திட்டமிடப்  
பட்டது. ஆனாலும் இம்முயற்சி வெற்றியளிக்கவில்லை. 

அடுத்ததாக ராட்சச எந்திரங்களைப் பயன்படுத்தி மணல்குவியலை  
அறுத்துத் துளையிட்டு உயிர் காக்கும் குழாய்களை (lifeline pipes)  உள்ளே அனுப்பும் முயற்சி தொடங்கியது. இதில் பயன்பட்ட பல்வேறு 
எந்திரங்கள் பழுதடைந்து விட்டன. அமெரிக்க எந்திரமான ஆகர் எந்திரம் (Augur machine)  மட்டும் பழுதடையாமல் தொடர்ந்து கிடைமட்டமாகத் துளையிட்டது (horizontal drilling). தொடர்ந்து 4.7 மீட்டர் நீளமுள்ள 
10ஆவது உயிர் காக்கும் குழாய் உள்செலுத்தப் பட்டது. 24.11.2023 மாலை 
5.50 மணியளவில் இக்குழாய் 2.2 மீட்டர் நீளத்திற்கு உள்செலுத்தப்பட்டது.
இதன் மூலம் உள்செலுத்தப்பட்ட மொத்த நீளம் 46.9 மீட்டர் ஆனது.
60 மீட்டர் நீளத்துக்கு அடைத்துக் கொண்ட இடிபாடுகளில் 47 மீட்டர் 
நீளம் வரை அடைந்தாயிற்று. தொடர்ந்து சில தடங்கல்கள் தோன்றி  அமெரிக்காவின் ஆகர் எந்திரமும் பழுதடைந்தது.

தொடர்ந்து செங்குத்தாகத் துளையிடும் பணி (vertical drilling)
தொடங்கியது. ஒரு மீட்டர் விட்டமுள்ள (1.0 m dia) குழாயை 
உள்ளே செலுத்தும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது. 26.11.2023 பகல் 
12.05 மணிக்குத் தொடங்கிய துளையிடும் பணி 30.80 மீட்டர் நீளத்திற்கு  
குழாயை உள்ளே செலுத்தியது.

தொடர்ந்து சுரங்கப்பாதையின் பர்கோட் முனையில் (Barkot side)
இருந்து கிடைமட்டமாகத் துளையிடுதலும் (horizonal drilling),
அடுத்து செங்குத்தான கிடைமட்டத் துளையிடுதலும்  
(perpendicular horizontal drilling) மேற்கொள்ளப் பட்டன.  
இவ்வாறு தேவைக்கேற்ப மாறி மாறி வெவ்வேறு அளவு விட்டத்துடன்
சில்கியாரா முனையில் இருந்தும் பர்கோட் முனையில் 
இருந்தும் செங்குத்தாகத் துளையிடும் பணிகள் மேற்கொள்ளப் 
பட்டன. இப்பணிகளில் மற்றவர்களுடன் இந்திய ராணுவத்தின் படைவீரர்களும் அதிகாரிகளும் செயலூக்கம் மிக்க பங்காற்றினர்.          
(தகவல் ஆதாரம்: நெடுஞசாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத் 
துறை அமைச்சகத்தின் செய்தியாளர்களுக்கான வெளியீடு:
Uttarkashi Tunnel Rescue Operation Media brief, Ministry of Road transport and 
Highways).  

மீட்புப் பணியின் இறுதிக் கட்டத்தில், 60 மீட்டர் நீளத்துக்கு 
அடைத்துக்கொண்ட இடிபாடுகளில் 47 மீட்டர் நீளம் வரை
முன்னேற முடிந்தபோதிலும், சுரங்கப்பாதைக்குள் சிக்கிக் 
கொண்டோரை அடைவது  கடினமாக இருந்தது. இந்நிலையில் 
எலிவளைச் சுரங்கத் தொழில்நுட்பம் (Rat hole mining) எனப்படும் 
மற்றுமொரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மீட்புக்குழு 
முடிவு செய்தது. அதன்படி டெல்லி, ஜான்சி ஆகிய ஊர்களில் 
இருந்து எலிவளைச் சுரங்கப் பணியாளர்கள் அழைத்து வரப்பட்டனர்.

எலிவளைச் சுரங்கம் என்பது மிகவும் குறுகலாகத் தோண்டப்படும் 
ஒரு சுரங்கம் ஆகும். ஒரு ஆள் மட்டும் நுழையும் அளவு விட்டத்துடன்
ஒருவர் சுரங்கத்தைத் தோண்டிக்கொண்டே செல்வார். தோண்டப்பட்ட மண்ணை ஒருவர் டிராலியில் அள்ளுவார். மூன்றாமவர் டிராலியை
அப்புறப் படுத்துவார். மிகப்பெரிய எந்திரங்களோ நவீனமான 
கருவிகளோ தேவையின்றி, மரபான எளிய கருவிகளைக் கொண்டு 
(மண்வெட்டி போன்றவை) மனித முயற்சியால் தோண்டப்படும் 
சுரங்கமே எலிவளைச் சுரங்கம் ஆகும்.

மாபெரும் நவீன எந்திரங்களைப் பயன்படுத்துவதில் தடங்கல்கள் 
ஏற்பட்டுவிட்ட நிலையில், மனித முயற்சியால் எலிவளைச் 
சுரங்கத் தொழிலாளர்கள் இடிபாடுகளின் ஊடே வழி ஏற்படுத்திக் 
கொண்டு சென்று மீட்புக் குழாய்களைப் பொருத்தினர்.
சிக்குண்ட 41 பேரும் இருந்த இடத்தை எலிவளை சுரங்கப் 
பணியாளர்கள் விரைவிலேயே அடைந்து விட்டனர். பொருத்தப்பட்ட 
குழாய்களின் வழியே அவர்கள் அனைவரும் நவம்பர் 28 மாலை 
ஏழு மணியளவில் வெளியே வரத் தொடங்கினர். 41 பேரையும் 
மீட்டெடுத்த எலிவளைச் சுரங்கப் பணியாளர்கள் கதாநாயகர்களாகப் போற்றப் பட்டனர். 17 நாள் அவலம் முடிவுக்கு வந்தது.

தேசிய சர்வதேச சுரங்க நிபுணர்கள் பலர் மீட்புக்குழுவிற்கு 
ஆலோசனை வழங்கினர்.   ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுரங்கத்துறை 
நிபுணர் பேராசிரியர் ஆர்னால்டு டிக்ஸ் (Prof Arnold Dix, underground 
tunnelling expert) சில்கியாரா களத்திற்கு வந்து மீட்புப் பணிகளை 
வழிநடத்தினார். சிக்குண்ட தொழிலாளர்கள் அனைவரையும் 
பாதுகாப்பாக மீட்டுத் தருவதாக அவர்களின் குடும்பத்தாருக்கு 
உறுதி அளித்திருந்தார் பேராசிரியர் டிப்ஸ். தாம் உறுதியளித்தபடியே 
அனைவரையும் மீட்டெடுத்த மீட்பர் ஆனார் ஆர்னால்டு டிக்ஸ்.   

41 பேரும் துளி சேதமின்றி முழுமையாகவும் பாதுகாப்பாகவும்
மீட்கப்பட்டது அறிவியலின் வெற்றி மட்டுமின்றி, மகத்துவம் மிக்க 
மானுடமுயற்சிகளின் உச்சபட்ச சாதனையும் ஆகும்.
******************************************************  
  

   

   

   
 

 
      






   
  




        


     
   
   





        



 




 
திரு பத்ம சிவ அசோகன் கவனத்திற்கு.
------------------------------------------------------------  
1) உபரி மதிப்பு என்பது மார்க்சியப் பொருளாதாரத்தின்
உயிர்நாடியான கருத்து. அது பற்றி ஒரு இழவும் 
தெரியாத நீங்கள், உங்களை எல்லாம் தெரிந்த 
ஏகாமபரமாகக் கருதிக் கொண்டு சுயஇன்பம் 
அனுபவிக்க இது இடம் அல்ல. நீங்கள் இப்படி 
நடந்து கொள்வது தொடர்ந்தால் உங்களை 
பிளாக்  செய்ய நேரிடும்.

2) பேதை கழாஅக்கால் பள்ளியுள்  வைத்தற்று 
என்பார் வள்ளுவர். உங்களின் இச்செயல் அது 
போன்றது.   
--------------------------------------------------------
65 vayathu aanavarkalukku

65 vayathu aanavarkalukku 

65 வயது ஆனவர்களுக்கான அறிவுரை!
--------------------------------------------------------------

(படித்ததில் பயனுள்ள ஒரு செய்தி!)


ஒரு இலக்கியப் படைப்பில் ஒரு செய்தி (message)
சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது 
நவீனத்துவ இலக்கியக் கொள்கை. இங்கு 
செய்தி என்பது படிப்பினை என்று பொருள்படும்.
மார்க்சிய இலக்கியங்கள் அனைத்தும் செய்தி 
(message) சொல்பவை. 

பின்நவீனத்துவம் இந்தக் கொள்கையை ஏற்கவில்லை.
ஒரு இலக்கியப் படைப்பில் எந்த ஒரு செய்தியும் 
சொல்லப்படத் தேவையில்லை என்பது 
பின்நவீனத்துவ இலக்கியக் கொள்கை.

எனது அபித குஜாம்பாள் கவிதையில் 
செய்தி (message) எதுவும் சொல்லப்படவில்லை.
கவிதையில் நாலு வரி எழுத ஆரம்பித்ததுமே 
ஏதேனும் ஒரு செய்தியை நோக்கி நமது 
எழுத்து குவியும். அவ்வாறு குவியும்போது,
அதைத்தடுத்து, செய்தி சொல்லப்பட்டு விடாமல் 
கவிதையை யாக்க வேண்டும். அப்படிச் 
செய்தால்தான் பின்நவீனத்துவக் கவிதையை 
யாக்க முடியும்.   அவ்வாறு யாக்கப்பட்ட 
பின்நவீனத்துவக் கவிதையே இது. 
 

- 

புதன், 29 நவம்பர், 2023

 எலி வளை சுரங்கம்

41 தொழிலாளர்ளை மீட்க பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டது.
அதில் ஒன்று.
ஜேபிசி இயந்திரம் மூலம் மணலை அகற்றும் முயற்சி. ஆனால் அம்முயற்சி தோல்வியில் முடிந்தது.
பின்பு அடுத்த கட்ட முயற்சியாக ராட்சத எந்திரங்களை கொண்டு துளையிடும் வேலையை தொடர்ந்தனர்.
அது நல்லதொரு முன்னேற்றத்தை தந்தது.
ஆனால் 43 மீட்டர்கள் துளையிட்ட நிலையில் அமெரிக்க ராட்சத எந்திரமான ஆகர் எந்திரமும் பழுதானது.
அடுத்த கட்டமாக
மிக ஆபத்தான மேலிருந்து துளையிடும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
அதே நேரத்தில் பக்கவாட்டு துளையிடும் எந்திரங்கள் துளையிட்ட 43 மீட்டர்கள் இருந்து மீதமுள்ள 13 மீட்டர்கள் மண் குவியலை மனிதர்கள் கையாளும் பழமையான முறையை கையாள முடிவு செய்யப்பட்டு அதில் நிபுணத்துவம் பெற்ற தொழிலாளிகள் வரவழைக்கப்பட்டனர்.
கடைசி முயற்சியாக எலிவளை சுரங்கம் தோண்டும் வழிமுறை
பின்பற்ற திட்டமிட்டு
திங்கள் இரவு களமிறங்கிய எலிவளை சுரங்க தொழிலாளிகள் அசுர வேகத்தில் இயங்கி வெறும் 21 மணி நேரத்தில் 13 மீட்டர் தொலைவு சுரங்கம் தோண்டி சிக்குண்டவர்களை மீட்க இரும்பு குழாய்களை வெற்றிகரமாக பொருத்தினர்.
இந்த இரும்பு குழாய் மூலமாக, சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும்
நேற்று இரவு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த எலிவளை சுரங்கம் தோண்டுதல் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்று.
மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இவ்வாறான எலிவளை சுரங்கம் தோண்டுதல் மூலமாக நிலக்கரியை வெட்டி எடுப்பார்கள்.
அதாவது மூன்று தொழிலாளிகள் இந்த வேலையில் ஈடுபடுவார்களாம்.
ஒருவர் சுரங்க வழியை வெட்டிக் கொண்டு செல்வார். இன்னொருவர் வெட்டப்பட்ட கழிவுகளை அள்ளுவார்.
மூன்றாவது நபர் அக்கழிவுகளை அதற்குண்டான டிராலியில் போடுவார்.
அந்த டிராலியில் ஏற்கனவே தோண்டிய வழியில் வெளியே அனுப்பி விடுவார்களாம்.
இது எலிகள் தங்களது வளையை தோண்டும் வழிமுறை என்பதால் இதற்கு எலிவளை சுரங்கம் தோண்டுதல் என்று பெயர் பெற்றதாம்.
2018ல் மேகாலயாவில் நடந்த எலிவளை சுரங்க விபத்தில் சிக்கி எலிவளை ஊழியர்கள் உயிரிழந்ததையொட்டி பசுமை தீர்ப்பாயம் இந்த முறைக்கு தடை விதித்திருந்தது.
கடைசியில் மாபெரும் அமெரிக்க தொழில்நுட்பம் கூட தடுமாறிய நிலையில் இந்த பழமையான எலிவளை தோண்டுதல் வழிமுறைதான் கைகொடுத்தது. சிக்குண்ட தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
No photo description available.
All reactions:
Mayakooththan Govindarajan, Pugal Machendran Pugal and 56 others

திங்கள், 27 நவம்பர், 2023

விடுதலைப்போரை வெல்லுவோம்!
----------------------------------------------------- 
ஈழ விடுதலைச் சிங்கங்களே தமிழ் 
வீர வழிவந்த தங்கங்களே 

ஆழ நெடுங்கள் தாலாட்டும் அங்கு 
அனுதினமும் மரணப் போராட்டம் 

கண்டி கதிர்காம வேலனுக்கு இதைக் 
கண்டிக்காமல் வேல் எதற்கு? 

விடுதலைப் போருக்கு மரணம் இல்லை 
இரண்டாம் ஈழப்போர் தொடங்கட்டும்  

ஈழ விடுதலை வென்றெடுப்போம் 
தமிழீழம் தரணியில் உதிக்கட்டும்!

ஈழ விடுதலைச் சிங்கங்களே தமிழ் 
வீர வழி வந்த தங்கங்களே!   
********************************** 

ஞாயிறு, 5 நவம்பர், 2023

 இடதுசாரி முற்போக்கு முகாமில் இருப்போர் 

அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படத் தொடர்!

தமிழில் வசனம் எழுதப் போவது யார்?

நக்சல்பாரிகள் மாவோயிஸ்டுகளுக்கு கட்டளை!

-------------------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------

நமது பூமியின் வரலாறு இது.

உயிரினங்கள் எப்படித் தோன்றின 

என்று விளக்கும் கதை இது.


இது தனி ஒரு படம் அல்ல. பல தொடர்களின் 

இணைப்பு. தொடர் ஆவளி. (ஆவளி = வரிசை). 

டேவிட் அட்டன் பரோ தெரியுமா?


இப்படங்களை யாரெல்லாம் பார்க்க வேண்டும்?

வலதுசாரிகள் கண்டிப்பாகப் பார்த்து விடுவார்கள்;

அறிவைப் பெற்று விடுவார்கள்.


இடதுசாரி முகாமில் உள்ள ஒவ்வொருவரும் 

பார்க்க வேண்டும். இது போன்ற அறிவியல் 

படங்களை பார்க்காமல் காலமெல்லாம் 

முட்டாளாகவே இருந்து கொண்டிருக்கிறான் 

நமது போலி இடதுசாரி மூதேவி!

நமது போலி நக்சல்பாரி மூதேவி!

நமது போலி மாவோயிஸ்ட் மூதேவி!


இந்தப் படங்களைப் பார்க்க வேண்டுமெனில் 

ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.

இடதுசாரி முகாமில் ஆங்கிலத்துக்கு எங்கே போவது?


புரிந்தவரை பாருங்கள்!

Something is better than nothing!


நியாயமாக இந்த அறிவியல் படங்களுக்கு 

தமிழில் வசனம் எழுத வேண்டும். தமிழில் 

மொழிபெயர்க்க வேண்டும்.


தமிழ் தமிழ் என்று போலிக் கூச்சல் போடும் 

எந்த இழிமகனாவது இந்த அறிவியல் படத்துக்கு 

தமிழில் வசனம் எழுத முன்வருவானா?


பெ மணியரசன், சீமான் போன்றவர்கள்  

தமிழ் முயற்சிகளை ஆதரிப்பார்களா?


தேவையான வசதி வாய்ப்புகளைச் செய்து

கொடுத்தால், இப்படங்களின் வசனங்களை 

தமிழில் மொழிபெயர்க்க நான் தயார்.

அதற்காக எனக்கு ஊதியம் தேவையில்லை.


ஆங்கிலம், தமிழ், அறிவியல் மூன்றிலும் நல்ல 

புலமை உடைய எவர் வேண்டுமானாலும் 

இப்படங்களின் வசனங்களை, விளக்கங்களை 

தமிழில் எழுதலாம்.


இந்த வேலைக்கு நான் தகுதியானவன் என்று 

கருதினால், என்னிடம் இந்த வேலையை 

ஒப்படைத்தால் நான் செய்து முடிப்பேன்.

எனக்கு ஊதியம் தேவையில்லை.


என்னைத் தவிர தகுதி படைத்த வேறு எவரிடமும் 

இந்த வேலையை ஒப்படைத்தால், அப்போதும் 

என்னால் இயன்ற அளவு அந்தப் பணிக்கு 

உதவியாக இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.


நான் பட்டினி கிடந்தாலும் தமிழை பட்டினி 

கிடக்க விட மாட்டேன்.    

***************************************************

  

சனி, 4 நவம்பர், 2023

தமிழக இந்திய அடிமைச் சமூகம் குறித்து 
இலக்கியச் சான்று எதுவும் இல்லையே, ஏன்?
--------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------------- 
இலக்கிய வளம் படைத்த மொழி தமிழ் என்னும் 
உண்மையை எவரும் மறுக்க இயலாது. உலகின் 
வேறெந்த மொழியையும் விட பேரளவிலான 
இலக்கியங்களையும் தொன்மை மிக்கனவற்றையும்    
தமிழ் கொண்டிருக்கிறது.

ஆங்கிலேயரான நியூட்டன் தமது புகழ்மிக்க 
"பிலாசஃபியா நேச்சுரலிஸ் பிரின்சிபியா மேத்தமேட்டிக்கா" 
என்ற நூலை 1687ல் பதிப்பித்தார்; அதாவது இன்றைக்கு 
336 ஆண்டுகளுக்கு முன்பு. அந்நூல் ஆங்கிலத்தில் 
எழுதப்படவில்லை; லத்தீனில் எழுதப்பட்டு இருந்தது. 
அக்காலத்தில் நூல்கள் எழுதப்படும் அந்தஸ்தை 
ஆங்கிலம் பெறாமல் இருந்தது.     

ஆங்கிலத்தோடு தமிழை ஒப்பிட்டால், இரண்டாயிரம் 
ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் தலைசிறந்த 
நூல்கள் எழுதப் பட்டிருந்தன. தொல்காப்பியம் 
அதற்குச் சிறந்த உதாரணம் ஆகும். ஆனால் ஆங்கிலம் 
இலக்கிய அந்தஸ்து பெற்றது முன்னூறு ஆண்டுகளுக்கு 
முன்புதான். 

1) பத்துப்பாட்டு என்னும் 10 நூல்கள்
2) எட்டுத்தொகை என்னும் தொகுப்பு நூல்கள் 
3) பதினெண் கீழ்க்கணக்கு என்னும் நீதி நூல்கள் 
4) சைவத் திருமுறை நூல்கள் பன்னிரண்டு 
5) வைணவ நாலாயிரம் திவ்வியப் பிரபந்தம் 
6) ராமாயண, மகாபாரத இதிகாச வழிநூல்கள் 
7) ஐம்பெருங் காப்பியங்கள் 
8) ஐங்குறு காப்பியங்கள் 
9) சிற்றிலக்கியங்கள் 
10) தொல்காப்பியம், நன்னூல், காரிகை போன்ற 
இலக்கண நூல்கள் 
என்று இவ்வாறாக தமிழின் இலக்கியங்கள் மிகப்  
பரந்தவை மட்டுமின்றி ஆழமானவையும்கூட.

இவை யாவும் தமிழர் நிலத்தை, மக்களை, அவர்தம் 
வாழ்வியலை முழுமையாகப் படம் பிடித்துக் 
காட்டியுள்ளன. தமிழ்ச் சமூகத்தின் அவ்வக்  
காலக்கட்டத்தின் சித்திரங்கள் இலக்கியங்களில் 
துல்லியமாகப் படம் பிடிக்கப் பட்டுள்ளன. சுருங்கக் 
கூறின் தமிழ் இலக்கியப் பரப்பு என்பது தமிழ்ச் 
சமுகத்தின் பிரதிபலிப்பே!

தமிழின் இலக்கியங்களை கவனத்துடன் பரிசீலித்துப் 
பார்க்கையில், தமிழ்ச் சமூகத்தில் ஆண்டான்-அடிமை 
முறை நிலவியதற்கான அணுவளவு தடயமும் தமிழின் 
எந்த ஒரு இலக்கியத்திலும் பதிவாகவில்லை என்பது 
புலப்படுகிறது.

ஆண்டான்-அடிமைச் சமூக அமைப்பு நிலவுடைமைச் 
சமூக அமைப்பாக மாற்றம் பெற்றிருக்கிறது என்றால், 
அது  ஒரு மாபெரும் வர்க்கப் போராட்டத்தின் 
மூலமாகவே நடந்திருக்க வேண்டும். ஆயின் 
அந்த வர்க்கப் போராட்டம் பற்றிய எந்தத் கடயமும்
தமிழின் எந்த இலக்கியத்திலும் இல்லை.

ஆண்டான்-அடிமைச் சமூக அமைப்பும் உற்பத்தி 
முறையும் தமிழ்நாட்டில் நிலவின என்றால்,
குறைந்தது சில நூற்றாண்டு காலமாவது அந்த 
அமைப்பு நீடித்து இருந்திருக்க வேண்டும் அல்லவா! 
அப்படியானால் அந்தக் காலங்களின் மக்களின் 
வாழ்வியல் அவர்தம் இலக்கியங்களில் பதிவு 
பெற்றிருக்க வேண்டும் அல்லவா!

ஆனால் தமிழின் எந்த ஒரு இலக்கியத்திலும் 
ஆண்டான்-அடிமைச் சமூகம் குறித்தோ அந்த உற்பத்தி 
முறை நிலவியது குறித்தோ குறித்தோ ஒரு சிறு 
குறிப்பும்கூட இல்லை. இதிகாசங்களாக அறியப்படும் 
ராமாயணம், மகாபாரதத்திலும் கூட அடிமை உடைமைச் 
சமூகம் குறித்து பேசப்படவில்லை. மகாபாரதப் 
போரில் வெற்றி அடைந்த பாண்டவர்கள் தோற்றுப் 
போன கெளரவர்களை அடிமைகளாக ஆக்கிக் 
கொள்ளவில்லை. அதற்கான தடயங்கள் நமது 
இதிகாசங்களில் இல்லை.

தமிழைப் போன்று சமஸ்கிருதமும் தொன்மை மிக்க 
மொழி ஆகும். சமஸ்கிருதம் அன்றைய சமூகத்தின் 
உற்பத்தி மொழியாக இருந்தது. சம்ஸ்கிருத 
இலக்கியங்களிலும்கூட ஆண்டான்-அடிமைச் சமூகம் 
குறித்து எந்தவொரு சிறு குறிப்பும் இல்லை.

விசாக தத்தரின் முத்ரா ராட்சசம் தொன்மை மிக்க 
சம்ஸ்கிருத நூல்களில் ஒன்று. இந்நூலில் அடிமைச் 
சமூகம் இந்தியாவில் நிலவியதற்கு ஆதாரமாக 
ஒரு சிறு குறிப்பும் இல்லை. சாணக்கியரின் அர்த்த 
சாஸ்திரம், காளிதாசரின் நாடகங்கள் ஆகிய 
சம்ஸ்கிருத இலக்கியங்களில் அடிமைச் சமூகம் 
குறித்து எந்தப் பிரஸ்தாபமும் இல்லை. 

பௌத்த இலக்கியங்களிலோ தொன்மை மிக்க 
பாலி  மொழியின் இலக்கியங்களிலோ இந்தியாவின்  
அடிமைச் சமூகம் குறித்து போகிற போக்கிலான 
ஒரு சிறு குறிப்பு கூட இல்லை.

வெளிநாட்டு யாத்ரிகர்கள் பலர் இந்தியாவுக்கு 
வந்துள்ளனர். ஆண்டுக் கணக்கில் இந்தியாவில் 
தங்கி உள்ளனர்; இந்திய பல்கலைக் கழகங்களில் 
கல்வி கற்றுள்ளனர். தங்களின் அனுபவங்களை,
தாங்கள் கற்று உணர்ந்ததை  நூல்களாக எழுதி 
உள்ளனர். ஆனால் எந்த ஒரு யாத்ரிகரின் எந்த ஒரு 
நூலிலும் அடிமைச் சமூகம் நிலவியதற்கான 
அணுவளவு ஆதாரம்கூட இல்லை.

கிரேக்க அரசர் செல்யூக்கஸ் நிகேடாரின் தூதராக 
மெகஸ்தனிஸ் இந்தியா வந்தார். அவர் வந்த காலம் 
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு; கிமு மூன்றாம் 
நூற்றாண்டு. நான்காண்டு காலம் இந்தியாவில் 
தங்கி இருந்த மெகஸ்தனிஸ் இண்டிகா என்ற நூலை 
எழுதினார். அக்கால இந்தியாவின் குறுக்கு வெட்டுத் 
தோற்றத்தைக் காட்டும் இண்டிகா என்னும் அவரின் 
அந்த நூலில் அடிமைச் சமூகம் குறித்து எக்குறிப்பும் இல்லை.

கிபி 5ஆம் நூற்றாண்டில், இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் 
பாஹியான் என்னும் சீன யாத்திரிகர் இந்தியா வந்தார்.
இவரின் பயணக் குறிப்புகளில் இந்தியாவில் அடிமைச் 
சமூக அமைப்பு முறை நிலவியதாக எந்த ஒரு 
தடயமும் குறிப்பிடப் படவில்லை.

தொடர்ந்து கிபி 7ஆம் நூற்றாண்டில் யுவான் சுவாங் 
என்னும் சீன யாத்திரிகர் இந்தியா வந்தார். அப்போது 
இந்தியாவை ஹர்ஷர் ஆண்டு வந்தார். யுவான் 
சுவாங்கின் பயணக்குறிப்புகள் சி-யு-கி என்னும் 
பெயரில் நூலாக எழுதப்பட்டன. அந்நூலிலும் 
இந்தியாவில் அடிமைச் சமூகம் நிலவியதற்கான 
எந்த ஒரு சிறு தரவும்  குறிப்பிடப் படவில்லை.

அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பு, 1960களில்,
1970களில் தமிழ் வாசக உலகில் சரித்திர நாவல்கள் 
மிகவும் பிரசித்தம். கல்கி, சாண்டில்யன், கோவி 
மணிசேகரன், ஜெகசிற்பியன் என்று பலரும்
வரலாற்றைப் புனைவுகளாக எழுதித் தள்ளிக் 
கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர்கூட 
தமிழகத்திலோ இந்தியாவிலோ அடிமைச் சமூக 
அமைப்பு நிலவியதாக ஒரு புனைவைக்கூட 
எழுதவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.  

ரோமாபுரியின் வரலாற்றில் அடிமைகளின் 
கிளர்ச்சி பலமுறை நடைபெற்றுள்ளது. இக்கிளர்ச்சிகள் 
வரலாற்றில் பதியப்பட்டுள்ளன. கிமு முதல் 
நூற்றாண்டில், ஸ்பார்ட்டகஸ் என்ற அடிமைகளின் 
தலைவர் நடத்திய மாபெரும் கிளர்ச்சி ரோமாபுரி 
வரலாற்றில் குறிப்பிடத் தக்கது. இக்கிளர்ச்சி 
பெருமளவுக்கு அடிமைச் சமூக அமைப்பை 
முடித்து வைத்தது.

இந்தியாவிலும் தமிழகத்திலும் அடிமைச் சமூகம் 
நிலவியது என்றால், இந்தியாவின் ஸ்பார்ட்டகஸ் 
யார்? தமிழகத்தின் ஸ்பார்ட்டகஸ் யார்?

வரி வடிவ இலக்கியங்களில் குறிப்பு இல்லாவிடினும், 
நாட்டுப்புற இலக்கியத்தில், வாய்மொழி இலக்கியத்தில்
அடிமைச் சமூகம் பற்றிய குறிப்பு இருக்க வேண்டும் 
அல்லவா! இல்லையே!

மலையூர் மம்பட்டியானைப் பற்றியும், கரிமேடு 
கருவாயனைப் பற்றியும், திருநெல்வேலி 
செம்புலிங்கத்தைப் பற்றியும் வாய்மொழி
இலக்கியம் இருப்பது போல, கர்ண பரம்பரைக்
கதைகள் இருப்பது போல, தமிழகத்தின் ஸ்பார்ட்டகஸ் 
பற்றி ஏன் ஒரு வாயமொழிக் குறிப்பு கூட இல்லை?
இக்கேள்விக்கு பதில் தேடுவோம்!
--------------------------------------------------------------
பின்குறிப்பு:
ஸ்பார்ட்டகஸ் பற்றிய ஒரு ஹாலிவுட் படம் 1960ல் 
வெளியானது. ஆங்கிலம் நானறிந்த வாசகர்கள் 
அப்படத்தைப் பார்க்கலாம். ஐரோப்பிய அடிமைச்
சமூகம் குறித்தும், ரோமாபுரியின் வீழ்ச்சி குறித்தும் 
அறிந்து கொள்ளலாம். முதல் பின்னூட்டத்தில் 
ஸ்பார்ட்டகஸ் படத்தில் official trailorஐ கொடுத்துள்ளேன்.
விரும்புவோர் தேடிப்பிடித்து அப்படத்தைப் பார்க்கலாம்.
****************************************************