வியாழன், 31 அக்டோபர், 2024

அணுக்களுக்கு ஆயுள் உண்டுதான்.
அணுக்களில் இரண்டு வகை.  
1) stable அணுக்கள் 
2) radio active அணுக்கள்.

Periodic Tableல் 82ஆம் இடத்தில் Lead என்னும் 
தனிமம் இருக்கிறது. 82 வரையிலான அணுக்கள் 
stable. அதாவது நிலையானவை.

82க்கு அப்பால் கதிரியக்கத் தனிமங்கள்.
இவை சிதைவடைந்து அழிந்து விடும்.
சிதைவின் வேகத்தைப் பொறுத்து 
அழிவு விரைவிலோ அல்லது மெதுவாகவோ 
நிகழும்.

Stable அணுக்களின் ஆயுள் புரோட்டானின் 
ஆயுளைப் பொறுத்தது. புரோட்டானின் ஆயுள் 
நம்ப முடியாத அளவு பிரம்மாண்டமானது.

ஒரு நிலையற்ற அணு (unstable) கதிர்வீச்சு 
காரணமாக தனது ஆற்றலை இழக்கும்.
இதுவே decay எனப்படும்.

Radioactive decayன்போது சிதைவுக்கு உள்ளாகும் 
parent nucleas ஒரு daughter nucleasஇ பிரசவிக்கும்.
அழிவு என்பதோ இறப்பு என்பதோ ஒன்றுமே 
இல்லாமல் முற்றிலும் பூஜ்யமாகி விடுவது அல்ல.

Law of conservation of mass படியுங்கள். பொருளுக்கு 
அழிவில்லை.    

     
 


 

துகள்கள், அணுக்கள், பொருட்கள் அனைத்தும் 
சுற்றுகின்றன!
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------- 

1) பொருட்கள் அணுக்களால் ஆனவை.

2) அணுக்களில் துகள்கள் (particles) உள்ளன.

3) புரோட்டான் நியூட்ரான் ஆகிய துகள்கள் 
அணுவின் உட்கருவில் உள்ளன. எலக்ட்ரான் 
அணுவின் வெளிப்புறத்தில் அதைச் சுற்றி 
வருகிறது.

4) என்னிடம் ஒரு பம்பரம் இருக்கிறது. நான் 
அதைச் சுற்றினால் மட்டுமே அது சுற்றும்.
பம்பரம் தானாகச் சுற்றாது. ஆனால் யாரும் 
சுற்றி விடாமலேயே புரோட்டான் தானாகச் 
சுற்றும். இதை தற்சுழற்சி என்கிறோம்.
ஆங்கிலத்தில் spin என்கிறோம்.

5) நியூட்ரானும் தானாகச் சுற்றுகிற துகள்தான்.
இதற்கும் spin உண்டு.

6) எலக்ட்ரானும் தானாகச் சுற்றுகிற துகள்தான்.   
இதற்கும் spin உண்டு.

7) அனைத்து fermion துகள்களுக்கும், அனைத்து
boson துகள்களுக்கும் spin உண்டு.

 சுற்றாத துகள் எதுவும் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை.
************************************************  


  

புதன், 30 அக்டோபர், 2024

"அந்தப் பாப்பாரப் பயலை ஜெயிலில் 
நிர்வாணமாக வையுங்கள்! அவனுக்கு 
சைவ உணவு கொடுக்காதீர்கள்" என்று 
சொன்னவனைக் கண்டிக்காத கோழைகள்!
-----------------------------------------------------------------    

கிஷோர் கே சுவாமி குண்டர் 
சட்டத்தில் கைது செய்யப்பட்டபோது, 
அவரைக் குறிப்பிடும்போதெல்லாம்  
100க்கு 98 பேர் பாப்பான், பாப்பாரப்பய 
என்றுதான் குறிப்பிட்டார்கள். இவர்கள் 
திமுக ஆதரவாளர்கள் மற்றும் 
பெரியாரிஸ்டுகள்.

செய்தித்தாள் வாசிக்கிறவர்களுக்கு ஒரு 
விஷயம் புரியும். திமுகவினருக்கு 
உணர்த்தவே அவர்கள் பயன்படுத்திய 
வார்த்தைகளைக் கொண்டு "பாப்பாரப் 
பையன்" என்று எழுதப் பட்டு இருக்கிறது 
என்ற விஷயம் புரியும்.

ஊடகவியலாளர்கள் ஜென்ராமும் 
இன்னொருவரும் (இவர் திக தலைவர் 
கலி பூங்குன்றனின் மருமகன்) கிஷோர் 
கே சுவாமியை சிறையில் நிர்வாணமாக 
வைக்க வேண்டும் என்று போலீஸ் 
அதிகாரிகளிடம் கூறினார்கள். மேலும் 
"அந்தப் பாப்பாரப் பயலுக்கு சைவ உணவு 
கொடுக்காதீர்கள்; அசைவ உணவு 
கொடுங்கள்"  என்று கூறினார்கள்.

இதை கிஷ்ர் கே சுவாமியே கூறியுள்ளார்.
அந்த நெருக்கடியான நேரத்தில் 
கிஷோர் கே சுவாமிக்கு பாஜக 
ஆதரவளிக்கவில்லை என்பது இன்று 
எத்தனை பேருக்குத் தெரியும்? 

அன்று ஜென்ராமையும் கலிபூங்குன்றனின் 
மருமகனையும் கண்டித்து எழுதியவனும்  
அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியவனும் 
நான் ஒருவனே.

இன்று கிஷோர் கே சுவாமிக்கு ஆதரவு 
தருவதாக பாசாங்கு செய்யும் 
கோழைகள் அன்று மட்டுமலல 
இன்றும்கூட ஜென்ராமையம் 
கலிபூங்குன்றனின் மருமகனையும் 
கண்டிக்கத் துப்பில்லாத கோழைகள்.




 

  







 
        
திமுகவின் பாசிசம்!
---------------------------------
1) கிஷோர் கே சுவாமி என்று ஒரு பாப்பாரப் பையன்.
இவன் ஒரு பூச்சி! அவ்வளவுதான். இவனால் என்ன 
செய்ய முடியும்? தமிழ்ச் சமூகத்தில் இவனால் 
ஒரு நியூசன்ஸ் வேல்யூ (nuisance value) உண்டாக்க 
முடியும். அதைத் தாண்டி வேறெதுவும் இவனால் 
செய்ய இயலாது.

இவனை திமுக அரசு குண்டர் சட்டத்தில் சிறையில் 
அடைத்தது. ஆறு மாதம் சிறையில் இருந்து விட்டு 
வெளியே வந்தான்.

இவன் பேசியதிலோ எழுதியதிலோ தவறு 
இருக்குமானால்  அதற்குரிய சட்டப் பிரிவுகளின் 
கீழ் வழக்குத் தொடர்ந்து உரிய தண்டனை 
பெற்றுத் தரலாம். குண்டர் சட்டத்தில் 
சிறையில் அடைத்தது அப்பட்டமான பாசிசம்.  
நாளை ஆட்சி மாற்றம் நிகழும்போது these fellows 
will be at the receiving end.

2) பத்ரி சேஷாத்திரி ஐஐடியில் B.Tech படித்தவர்.
பதிப்பகம் ஒன்றை நடத்தி வருபவர். அவர் மாநில 
அரசையோ திமுகவையோ விமர்சிக்கவில்லை.
ஒரு தொலைக் காட்சி விவாதத்தில் ஒரு 
கருத்தைக் கூறிய அவரைக் கைது செய்து 
சிறையில் அடைத்தது திமுக அரசு. இது பாசிசம் 
அல்லாமல் வேறு என்ன?

3) சாவித்திரி கண்ணன் ஒரு free lance பத்திரிகையாளர்.
ஒரு பள்ளி மாணவி இறந்து போன விஷயத்தில் 
போலீசுக்கு எதிராக இவர் எழுதினார் என்பதற்காக 
இவரை நள்ளிரவில் கைது செய்து கண்காணாத 
இடத்திற்கு கொண்டு சென்றது திமுக அரசின் போலீசு.      
கைது நடவடிக்கை எவ்விதத்திலும் தேவைப்படாத 
 நிலையில் வெறித்தனமாக சாவித்திரி கண்ணன் 
கைது செய்யப்பட்டது திமுக அரசின் பாசிசம் 
அலலாமல் வேறு என்ன?

4) Master of Engineering படித்து விட்டு பொறியியல் 
மாணவர்களுக்கு தனிப்பயிற்சி நிலையம் 
மூலமாக கல்வி கற்றுத் தந்தவர் மாரிதாஸ்.
இவர் ஒரு யூடியூப் சானலை நடத்தி வருகிறார். 
திமுக அரசை இவர் விமர்சித்தார் என்பதற்காக 
இவரைக் கைது செய்து பல ஊர்களுக்கு 
அலைக்கழித்து சிறையில் அடைத்தது திமுக அரசு.
இது பாசிசமா அல்லது பருப்புப் பாயாசமா?

மாரிதாஸ் நீதிமன்றத்திற்குச் சென்றார். அவர் 
தரப்பில் உள்ள நியாயத்தை அங்கீகரித்த 
சென்னை உயர்நீதிமன்றம் அவர் மீதான FIRஐ 
ரத்து செய்தது (FIR quashed).

5) பாஜக தலைவர் கல்யாணராமன் என்பவர் 
இஸ்லாம் மதத்தை விமர்சித்தார் என்பதற்காக 
அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது 
திமுக அரசு. ஆறு மாதக் கழித்து விடுதலை ஆனார் 
கல்யாணராமன். பின்னர் மீண்டும் இரண்டாவது 
முறையாகவும் அவரை குண்டர் சட்டத்தில் 
அடைத்தது திமுக அரசு. ஒருவரை இரண்டு முறை
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பது பாசிசமா 
அல்லது பாயாசமா?

6) திமுக அரசை விமர்சித்தார் என்ற காரணத்துக்காக 
கருத்து சுதந்திர கனவான் திமுக அரசால் 
சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையில் 
அடைக்கப் பட்டார். அவர் மீதான குண்டர் சட்டத்தை 
உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 

உயர்நீதிமன்றம் ரத்து செய்ததுமே இரண்டாம் 
முறையாக சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தை 
ஏவியது திமுக அரசு. உச்சநீதிமன்ற்ம் இதைக் 
கேள்வி கேட்டதும் குண்டர் சட்டத்தை நீக்கிக் 
கொண்டது திமுக அரசு.

நீதிமன்றத்தில் நிற்க முடியாத பலவீனமான 
பொய்யான வழக்கை வைத்து சவுக்கு சங்கர் மீது  
இரண்டு முறை குண்டர் சட்டத்தை ஏவியது பாசிசமா? 
அல்லது பூத்துக் குலுங்கும் கருத்து சுதந்திரமா?
*****************************************************



         
     
  
 வேதியியல் கேள்வித்தாள் அவுட்! 
வீரவநல்லூரில் கொந்தளிப்பு! 
 இசக்கிமுத்து அண்ணாச்சி அப்செட்!
------------------------------------------------------------------
இணைக்கப்பட்ட பட்டியலைப் படியுங்கள்.
வெவ்வேறு தனிமங்களின் அணு நிறை உள்ளிட்ட 
பண்புகள் எப்படி மாறுகின்றன என்று பாருங்கள்.

ஹைட்ரஜனின் atomic mass  = 1.008 u

யுரேனியத்தின் atomic mass = 238.03 u 


ஒரு கோடி ஹைட்ரஜன் அணுக்கள் இருக்கின்றன
என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த  ஒரு கோடி 
அணுக்களையும் ஒவ்வொன்றாக எடுத்துப்     
பரிசீலித்துப் பார்த்தால் ஒவ்வொன்றின் 
atomic massம் சமமாக இருக்கும். ஒவ்வொன்றும் 
1.008 u atomic mass கொண்டதாகவே இருக்கும்.
அது மட்டுமல்லா, ஒவ்வொரு ஹைட்ரஜன் அணுவும் 
ஒரே அளவு (size) கொண்டதாக இருக்கும்.

அதே நேரத்தில் ஒரு ஹைட்ரஜன் அணுவின் atomic massம்
வேறு ஒரு தனிமத்தின் atomic massம் சமமானதாக 
இருக்காது. ஹைட்ரஜனின் atomic mass 1.008 u.
யுரேனியத்தின் atomic mass 238.03 u.

இதிலிருந்து தெரிவது:
ஒரு தனிமத்தின் அணுக்கள் அனைத்தும் சம நிறை ,
சம அளவு, சமமான பண்புகள் கொண்டிருக்கும்.  
             
வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் அணுநிறை, 
அளவு, பண்புகள் ஆகியவற்றில் ஒரு தனிம 
அணுக்களில் இருந்து வேறொரு தனிம 
அணுக்கள் வேறுபட்டு இருக்கும்.

இன்று மாலை நடைபெற உள்ள வகுப்பில் 
ஒரு revision test வைக்கிறார் இசக்கிமுத்து 
அண்ணாச்சி. வெற்றி பெற்றால் தலைக்கு 
ஒரு பாக்கட் அணுகுண்டுப் பட்டாசு பரிசு! 
பதில் தெரியாவிட்டால் முதுகில் பழுக்கக் காய்ச்சிய 
இரும்புக் கம்பியால் சூடு!

வீரவநல்லூர்ப் பிள்ளைகள் யாரும் சூடு வாங்க 
வேண்டாம் என்பதற்காக 
கேள்வித்தாளை அவுட் செய்து விட்டேன்.

கேள்வி இதுதான்!
Periodic tableல்  இரண்டாவது இடத்தில் இருக்கும் 
ஹீலியம் அணுவின் atomic mass என்ன? 
----------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
வாசகர்கள் பதிலளிக்க வேண்டும்.
பதிலளிக்க முயல வேண்டும்.
**********************************************
  

சனி, 26 அக்டோபர், 2024

திரு காலன்துரை அவர்களுக்கு,
2018ல் மார்க்சியப்  பார்வையில் அத்வைதம் என்ற 
நூலை எழுதினேன். தங்களுக்கும் அந்த நூலைக் 
கொடுத்துள்ளேன்; தாங்களும் அதைப் 
படித்துள்ளீர்கள். 

அந்நூலில், ஆதிசங்கரர் கூறிய பிரதிபாஷிக  சத்யம், 
வியவகாரிய சத்யம், பரமார்த்திக சத்யம் ஆகிய 
மூன்று விதமான சத்தியங்களைப் பற்றி 
நூலின் பக்கங்கள் 26, 27ல் குறிப்பிட்டுளேன்.

தங்களின் முகநூல் பதிவில் நான் எழுதிய 
ஆதிசங்கரரின் மூன்று விதமான சத்தியங்கள் 
பற்றி தாங்கள் எடுத்தாண்டு உள்ளீர்கள்.
ஆனால் எனது நூலில் இருந்து எடுக்கப் பட்டது 
என்பதையோ நூலின் பெயரையோ கூறாமல் 
விட்டு விட்டீர்கள். எனவே அருள்கூர்ந்து 
என் பெயரையும் நூலின் பெயரையும் 
குறிப்பிட வேண்டுகிறேன். நன்றி.

என்னுடைய நூலில் இருந்து அல்ல; வேறொரு நூலில் 
இருந்து அந்த மேற்கோளை எடுத்தேன் என்று 
தாங்கள் கூறுவதானால், அது எந்த நூல், யார் 
எழுதியது என்பதையும் குறிப்பிடுமாறு அன்புடன் 
வேண்டுகிறேன்.

ஒன்றுதான், ஒன்றுதான், சத்தியம் ஒன்றுதான் என்று  
கத்திக் கொண்டிருந்த ஆதி சங்கரர் ஒன்றல்ல மூன்று 
சத்தியங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். 
இது அத்வைதத்தை கணிசமாக பலவீனப் படுத்தி 
விட்டது.இது பற்றியும் எனது நூலில் எழுதி உள்ளேன்.  



.   

வெள்ளி, 25 அக்டோபர், 2024

ஆரம்ப காலத்தில், அதாவது இனக்குழுச் 
சமூகமாக மேய்ச்சல்சமூகமாக தமிழர்கள் 
வாழ்ந்த காலத்தில் மதங்கள் வலிமை  
பெற்றிருக்கவில்லை; அவை நிறுவனமயம் 
ஆகியும் இருக்கவில்லை.

காலப்போக்கில் மதங்கள் நிறுவனமயம்
ஆனதும், மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த 
பண்டிகைகளை அவை சுவீகரித்துக் கொண்டன.
இப்படித்தான் தீபாவளியும் ஆடிப்பெருக்கும் 
இன்ன பிறவும் இந்து மதப்பண்டிகைகள் 
ஆயின.