சாம்சங்கின் காலடியில் திமுக அரசு!
திமுகவின் காலடியில் CITU.
------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் தலைவர்,
NFTE BSNL தொழிற்சங்கம், சென்னை.
----------------------------------------------------------.
தொழிலாளர்கள் சங்கம் அமைத்துக் கொள்ளலாம்.
இதற்கென்று ஒரு சட்டம் இந்தியாவில் இருக்கிறது.
Indian Trade Union Act 1926 என்பதே அந்தச் சட்டம்.
இந்தச் சட்டம் நாடு உதந்திரம் அடைந்த பிறகு
கொண்டு வரப்பட்ட சட்டம் அல்ல. பிரிட்டிஷ்
ஆட்சி நடக்கும்போதே கொண்டு வரப்பட்ட
சட்டம் இது. பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த
சட்டம் இது.
இந்தியாவின் முதன் முதல் தொழிற்சங்கம்
எது தெரியுமா? AITUCதான்.
(All India Trade Union Congress).இச்சங்கம் பம்பாயில்
தொடங்கப் பட்டது.
AITUC எப்போது எந்த ஆண்டு தொடங்கப் பட்டது
தெரியுமா? 1920ல் 31 அக்டோபர் 1920ல் தொடங்கப்
பட்டது. AITUCக்கு நேற்றோடு 104 வயது முடிந்து
இன்று முதல் 105ஆம் வயது தொடக்கம்.
AITUC சங்கத்தின் முதல் தலைவர் யார் தெரியுமா?
எஸ் ஏ டாங்கே??
எஸ் வி காட்டே??
எம் என் ராய்??
இல்லை, இல்லை.
சுதந்திரப் போராட்டத் தளகர்த்தர் லாலா லஜபதி
ராய்தான் AITUCயின் முதல் தலைவர்.
இந்த விஷயமெல்லாம் ஸ்டாலினுக்கோ
உதயநிதிக்கோ தெரியாதுதான். ஆனால்
CPM தலைமை ஏன் சோரம் போகிறது?
*************************************************