சனி, 29 ஜூலை, 2017

குஜராத்தில் ஒரு கூவாத்தூர்!
குஜராத் காங்கிரஸ் MLA களை பெங்களூருவில்
அடைத்து வைத்துள்ள சோனியா!
சசிகலாவிடம் ஆலோசனை கேட்ட சித்தராமையா!
---------------------------------------------------------------------------------------
1) டிசம்பர் 2017இல் குஜராத்தில் சட்ட மன்றத் தேர்தல்
வருகிறது. அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைகளாய்
காங்கிரஸ் தலைவர்கள் கட்சி மாறி வருகின்றனர்.

2) அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில்,
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எட்டுப்பேர் கட்சிமாறி
பாஜகவின் கோவிந்துக்கு வாக்களித்தனர்.

3) குஜராத் சட்ட மன்றத்தில் மொத்த இடங்கள் =182.
பாஜக= 120; காங்கிரஸ்= 57. ஆனால் மீரா குமாருக்கு
காங்கிரசின் 57 MLAகளும் வாக்களிக்கவில்லை.
49 பேர் மட்டுமே வாக்களித்தனர். காங்கிரசின் 8 MLAகள்
கோவிந்துக்கு வாக்களித்தனர்.

4) நிற்க. குஜராத்தில் ஏன் ஒரு கூவாத்தூரை அரங்கேற்றி
உள்ளது காங்கிரஸ்? பார்ப்போம்.

5) ஆகஸ்ட்டு 8இல் குஜராத்தில் ராஜ்யசபா தேர்தல்
வருகிறது. 3 காலியிடங்களுக்கான தேர்தல் இது.
இதில் பாஜக வேட்பாளர்களாக அமித்ஷா, அமைச்சர்
ஸ்மிருதி இரானி ஆகிய இருவரும் போட்டி இடுகின்றனர்.

6) ஒருவர் வெற்றி பெற 47 MLAக்களின் ஆதரவு தேவை.
பாஜகவின் இரண்டு வேட்பாளர்களும் வெற்றி பெற
94 MLAக்களின் ஆதரவு வேண்டும். பாஜகவுக்கு
120 MLAக்கள் உள்ளனர். அதாவது வெற்றி பெறத்
தேவையான எண்ணிக்கை போக, உபரியாகவே
26 பேர் உள்ளனர்.

7) காங்கிரஸ் வேட்பாளராக சோனியாவின்  செயலாளர்
அகமது பட்டேல் இங்கு போட்டி இடுகிறார். காங்கிரசுக்கு
57 MLAக்கள் இருக்கின்றனர். இதில் ஜனாதிபதி தேர்தலில்
கட்சி மாறி வாக்களித்த 8 பேரைக் கழித்தால், மீதி
49 பேர் உள்ளனர். வெற்றிக்கு 47 தேவை. கூடுதலாக
2 பேர் இருப்பதால், அகமது படேலின் வெற்றி உறுதி
என்ற நிலை இருந்தது. ஆனால் அண்மையில் இந்த
நிலை மாறி விட்டது.

8) மூத்த காங்கிரஸ் தலைவர் சங்கர்சிங் வகேலா
கட்சி மாறி, பாஜகவில் சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து
3 காங்கிரஸ் MLAகள் பாஜகவில் சேர்ந்து விட்டனர்.
பாஜகவில் சேரும் முன்னரே தங்களின் MLA பதவிகளை
ராஜினாமா செய்து விட்டனர். எனவே கட்சி தாவல்
சட்டம் இவர்கள் மீது பாய முடியவில்லை.

9) மேலும் காங்கிரஸ் MLAகள் கட்சியில் இருந்து
விலகி பாஜகவில் சேர்ந்து வருகின்றனர். இதனால்
வெற்றிக்குத் தேவையான 47 MLAக்களின் ஆதரவைப்
பெறுவது அகமது பட்டேலுக்கு கடினமாக உள்ளது.

10) மொத்தம் 3 ராஜ்யசபா காலியிடங்கள். மூன்று
பேர்தான் வேட்பாளர்கள் (பாஜக=2, காங்=1). எனவே
தேர்தல் ஏகமனதாக நடந்து முடிந்திருக்க வேண்டும்.
ஆனால் காங்கிரஸ் MLAக்கள் கட்சி மாறி நிலைமையைச்
சிக்கலாக்கி உள்ளனர். காங்கிரஸ் தலைமைக்
கொறடா ராஜ்புத் என்பவரே காங்கிரசில் இருந்து
விலகி விட்டார்.

11) நிலைமையைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த
பாஜக காங்கிரசில் இருந்து விலகிய ராஜ்புத்தை
ராஜ்யசபா வேட்பாளராக்கி விட்டது. பாஜகவின்
உபரி வாக்குகளான 26 மற்றும் காங்கிரஸ் அதிருப்தி
MLAக்களின் வாக்குகள் ஆகியவற்றுடன் அகமது
பட்டேலை தோற்கடித்து, அதிருப்தியாளர்
ராஜ்புத்தை வெற்றிபெறச் செய்வதற்காக, பாஜக
முயன்று வருகிறது.

12) தங்களின் MLAக்களைத் தக்க வைத்துக்
கொள்வதற்காக, சோனியாவும் ராகுல் காந்தியும்
எஞ்சியுள்ள காங்கிரஸ் MLAக்களை குஜராத்தில்
இருந்து வெளியேற்றி, காங்கிரஸ் ஆட்சி நடத்தும்
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில்
ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் அடைத்து
வைத்துள்ளனர்.

13) ஆக, பெங்களூருவில் ஒரு கூவாத்தூரை உருவாக்கி
உள்ளது காங்கிரஸ்.  தப்பித்துப் போகாமல், MLAகளை
அடைத்து வைத்து வழிக்கு கொண்டு வருவது எப்படி
என்று, இது விஷயத்தில் நல்ல அனுபவம் உள்ள
 அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவிடம் காங்கிரஸ்
முதல்வர் சித்தராமையா ஆலோசனை கேட்டதாக
சசிகலா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

14) ஆக, பாராளுமன்றம் ஒரு பன்றித் தொழுவம் என்று
லெனின் சொன்னது ஒவ்வொரு நாளும் நிரூபிக்கப்
பட்டு வருகிறது.
*************************************************************          

தொ பரமசிவன் மார்க்சியம் அறியாதவர். வரலாற்றுப்
பொருள்முதல்வாதம் பற்றிய எந்த அறிவும் இல்லாத
ஒரு குட்டி முதலாளித்துவ நபர். அவரின் "ஆய்வு"களில்
அறிவுக்கு இடம் கிடையாது. தமது நுனிப்புல் பார்வையை
ஆய்வாக முன்வைப்பவர் அவர். அவரின் கருத்துக்கள்
மார்க்சிய ஆய்வுமுறைமையைப் பின்பற்றாதவை.
அவை இகழ்ச்சியுடன் நிராகரிக்கத் தக்கவை.

   

சாதியும் வர்க்கமும்!
-----------------------------------
சாதி என்பது ஏனைய சமூக யதார்த்தங்களில்
இருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு,
முழுமுதலான ஒன்றாக (absolute) இருப்பதில்லை.
அது மட்டுமல்ல, என்றுமே அப்படி இருந்ததில்லை.
சாதி தோன்றும்போதே, அது தன் முக்கிய உள்ளடக்கமாக
(essential ingredient) வர்க்கத்தையும் கொண்டிருந்தது. 

மனிதகுலம் அதன் தொடக்க காலத்திலேயே
வர்க்கங்களாகப் பிரிந்து விட்டது. சாதி என்பது
காலத்தால் பிந்திய மற்றுமொரு பிரிவினையே.
வர்க்கப் பிரிவினையை அழித்து விட்டு, அதன்
இடத்தில் சாதி தோன்றவில்லை. மாறாக, ஏற்கனவே
சமூகத்தில் நிலவிய வர்க்கப் பிரிவினையுடன்,
கூடுதலான மற்றுமொரு பிரிவினையாக சாதி
தோன்றியது.

சாதிய அரசியல் செய்பவர்களின் மூளையில்
இந்த உண்மை உறைக்காது. அவர்கள் சாதியை
தனித்துவமானதும் முழுமுதலானதுமான ஒன்றாகப்
பார்க்கிறவர்கள். எனவே சமூகத்தின்  தொடர்ச்சியான
இயக்கத்தின் விளைவாக, ஒவ்வொரு சாதிக்குள்ளும்
புதிது புதிதாக வர்க்கங்கள் முளைப்பதை அவர்கள்
கணக்கில் கொள்ள மாட்டார்கள்.

சாதியானது மாற்றவே முடியாத ஒன்று என்ற கருத்தும்
முற்றிலும் தவறானதே. இன்றுள்ள சாதிகள் யாவும்,
இன்றுள்ள தமது சமூக அந்தஸ்துடன், ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு இருந்தததில்லை. இன்று
முன்னேறிய சாதிகளாகக் கருதப்படும் சில
சாதிகள் முன்பு கீழ்நிலை சாதிகளாக இருந்தவையே.
இதனால் யாப்புறுத்தப் படுவது என்னவெனில்,
சாதியும் சரி, வர்க்கமும் சரி, இரண்டுமே மாற்றத்துக்கு
ஆட்படுபவைதான்.
==========================================

வெள்ளி, 28 ஜூலை, 2017

துரோகம் செய்தவர்கள் லாலுவும் ராகுல் காந்தியுமே!
துரோகத்தை முறியடித்தார் நித்திஷ் குமார்!
-------------------------------------------------------------------------------------------
1) பீகாரில் மாபெருங்கூட்டணி அமைந்து நித்திஷ்
 முதல்வர் ஆனார். இதே கூட்டணி தொடர்ந்து நீடித்தால்,
2019 தேர்தலில் நித்திஷ்குமார் பிரதமர் வேட்பாளராக
அறிவிக்கப் படுவார் என்ற நிலை இருந்தது. இது
சோனியாவுக்குப் பிடிக்கவில்லை.

2) பிரதமர் வேட்பாளராக தன்னுடைய குடும்பத்திற்கு
அப்பால் யாரும் அறிவிக்கப்படுவது சோனியாவால்
தாங்க முடியாத ஒன்று. எனவே நித்திஷ்குமார்
சோனியாவின் நெஞ்சில் தைத்த நெருஞ்சி முள் ஆனார்.

3) லாலு மூலம் தொடர்ந்து நித்திஷுக்கு நெருக்கடி
கொடுத்து வந்தார் சோனியா. மாபெருங் கூட்டணியில்
இருந்து நித்திஷை வெளியேற்ற வேண்டும் என்ற
ஒற்றை அஜெண்டாவுடன் சோனியா செயல்பட்டார்.

4) சோனியாவின் யோசனை லாலுவுக்கு மிகவும்
பிடித்து இருந்தது. நித்திஷை வெளியேற்றி விட்டு
தன் மகனும் துணை முதல்வருமான தேஜஸ்வி
யாதவை முதல்வராக்கி. அவரை பினாமியாகக் கொண்டு
தானே பீகாரை ஆளலாம் என்று கனவு கண்டார் லாலு.

5) லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை
முதல்வரான போது அவரின் வயது 25 மட்டுமே.
ஒன்பதாம் வகுப்பில் தோல்வி அடைந்தவர் என்பதே
அவரின் கல்வித் தகுதி. இன்னொரு மகனான
தேஜ் பிரதாப் யாதவ்வும் நித்திஷிடம் அமைச்சராக
இருக்கிறார். இவ்விரு அமைச்சர்களின் துறை சார்ந்த
கோப்புகள் அனைத்தையுமே லாலுதான் பார்வை
இடுகிறார்; முடிவு எடுக்கிறார். பீஹார் மக்கள்
அனைவரும் அறிந்த செய்திதான் இது.

6) ஒரு உறையில் ஒரு கத்திதான் இருக்க முடியும்.
பீஹார் முதல்வர் என்ற உறையில் நித்திஷ் என்ற
ஒரு கத்தி மட்டும்தான் இருக்க முடியும். லாலுவின்
தலையீடு நித்திஷால் பொறுக்க முடியாத எல்லை
வரைக்கும் சென்றது. ராகுலிடம் முறையிட்டார்
நித்திஷ்.தன பங்கிற்கு நித்திஷை வெறுப்பேற்றினார்
ராகுல்.

7) எனவே பாஜகவின் துணையை நாடுவது என்ற
முடிவை எடுத்தார் நித்திஷ். இதற்கு முன்பு
பீஹார் முதல்வராக இருந்தபோது, நித்திஷிடம்
துணை முதல்வராக இருந்தவர் பாஜகவின் சுஷில்
குமார் மோடி. இவர்கள் இருவரும் முதல்வராகவும்
துணை முதல்வராகவும் எட்டு ஆண்டுகள் சுமுகமாகப்
பணியாற்றிய வரலாறு உள்ளது.

8) ஒருபுறம் கூடவே இருந்து குழி பறிக்கும் லாலு.
மறுபுறம் தன தலைமையை ஏற்றுக்கொண்டு
சுமுகமாக ஆட்சி நடத்த உதவிய சுஷில் குமார்.
எனவே லாலுவை விவாகரத்து செய்தார்
நித்திஷ். சுஷிலுடன் வாழ முடிவு செய்தார்.

9) உட்பகை மிகவும் கொடியது. அது மனிதனை
வாழ விடாது. எனவே பாஜகவின் ஆதரவைப்
பெறுவது என்ற நித்திஷின் முடிவு தர்க்கப்
பொருத்தம் உடையதே. இந்த முடிவுக்கு
நித்திஷைத் தள்ளிய சோனியாவும் லாலுவுமே
குற்றவாளிகள்.

10) நித்திஷை வெளியேற்றியதன் மூலம், "அப்பாடா,
ஒரு போட்டியாளர் ஒழிந்தார்" என்று நிம்மதிப்
பெருமூச்சு விடுகின்றனர் சோனியாவும் ராகுலும்.

11) தனது பேராசையால் பெரு நஷ்டம் அடையப்
போகிறவர் லாலு. லாலுவின் மொத்தக் குடும்பமும்
இனி சிறையில் களி தின்றுதான் வாழ வேண்டி
இருக்கும்.

12) தான் நீதிமன்றத்தால் தண்டிக்கப் பட்ட குற்றவாளி
என்பதும், தகுதிநீக்கம் செய்யப்பட்டவர் என்பதால்,
தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என்பதையும்
லாலு மறந்து விட்டு, பேராசையுடன் செயல்பட்டார்.
இனி அவரின் எஞ்சிய வாழ்நாள் சிறைக்கம்பிகளுக்குப்
பின்தான்.

13) நித்திஷ் குமார் படித்த இன்ஜீனியர். மின்
பொறியாளராகப் பணியாற்றியவர். மனைவி
இறந்து விட்டார். குடும்ப அரசியல் அவரிடம்
கிடையாது. ராஜதந்திரத்தில் ஆயிரம் கலைஞருக்குச்
சமம் அவர். அவரை வெறும் முரட்டு முட்டாளான,
சுயநல குடும்ப அரசியலின் அருவருக்கத்தக்க
வெளிப்பாடான லாலுவால் ஒருநாளும் வெற்றி
கொள்ள முடியாது.

14) வல்லமை வாய்ந்த நித்திஷ் குமாரை தங்கள்
அணியில் தக்க வைத்துக் கொள்ள சோனியா
முயற்சி எடுத்திருக்க வேண்டும். ஆனால் தன் குடும்ப
நலனுக்காக, நித்திஷை விரட்டிய சோனியாவே
முழுமுதல் குற்றவாளி!

15) ஆக, நித்திஷ் வெளியேறியது சோனியாவின்
கைங்கரியமே. இதன் விளைவு 2019லும் மோடியே
பிரதமர் என்பதை உறுதி செய்வதுதான்.
-----------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துக்
கொண்டு, தன் குடும்பத்தினர் மீதான வழக்குகளை
வாபஸ் வாங்கினால், நித்திஷை விரட்டி விடுவதாக
வாக்களித்து லாலு பல காய்களை நகர்த்தினார்.
அவை குறித்து பின்னர் பார்ப்போம்.
***************************************************************  
நித்திஷ்குமார் ஏற்கனவே வாஜ்பாய் அவர்களிடம்
ரயில்வே அமைச்சராக இருந்தார். இதே பீகாரில்
பாஜகவுடன் ஏற்கனவே கூட்டணி ஆட்சி நடத்தியவர்தான்.
பாஜக- நித்திஷ் கூட்டணிதான் இயற்கையான
கூட்டணி. இது வரலாறு. இப்படிப்பட்ட ஒருவரை
தன அணியில் தக்க வைக்க காங்கிரஸ் செய்த
முயற்சி என்ன? பூஜ்யம்!! நித்திஷை போட்டியாளராக
பார்த்து, கூட்டணி அமைந்த நாள் முதல் மனம்
புழுங்கி கொண்டிருந்த சோனியா நேற்றுதான்
நிம்மதியாக உறங்கினார். காங்கிரஸ் ஒரு மண்குதிரை
என்பதை மக்கள் உணர்வது எப்போது?
               
வாஜ்பாய்  அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக
இருந்தபோது, ஒரு ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர் நித்திஷ்.
இது வரலாறு. நித்திஷ் ஒரு சராசரி அரசியல்வாதி அல்ல.

மாபெருங்கூட்டணியில் காங்கிரஸ் ஒரு
வேண்டாத சுமைதான். (unwanted extra luggage). காங்கிரசுக்கு
போட்டியிட சீட்டு கொடுப்பதில் லாலு எவ்வளவு
கறார் ஆகவும் மிரட்டும் தொனியுடனும் நடந்து
கொண்டார் என்பதை நினைத்துப் பார்க்கவும்.
காங்கிரஸ் நித்திஷைத் தூக்கிச் சுமக்கவில்லை.
லாலுவும் நித்திசும்தான் தங்கள் தோள்களில்
காங்கிரஸைத் தூக்கிச் சுமந்தனர்.
**
2019ஐ விட்டுக் கொடுத்து விட்டார் சோனியா என்பதே
கசப்பான உண்மை.




வியாழன், 27 ஜூலை, 2017

ஒரு என்ஜிஓ எடுபிடியின்
அப்துல் கலாம் குறித்த
இழிந்த பின்நவீனத்துவ மதிப்பீடு!
-------------------------------------------------------------
1)தோழர் விவேக் அவர்கள் பகிர்ந்த கட்டுரை
இழிந்த பின்நவீனத்துவப் பார்வையில்
ஏவுகணை விஞ்ஞானி கலாம் அவர்களை
இழிவு செய்கிறது.
**
2) ஏவுகணை விஞ்ஞானத்துக்கும் அணு விஞ்ஞானத்துக்கும்
மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு உண்டு என்கிறார்
கட்டுரையாளர்.இரண்டுமே இயற்பியல்தான். இரண்டிலுமே இயற்பியலும் கணிதமும் செயல்படுகின்றன. இயற்பியலின்
இரண்டு துறைகளுக்கு இடையே உள்ள பொதுத்தன்மையைப்
பார்க்க மறுக்கிறார் கட்டுரையாளர். இது பின்நவீனத்துவப்
பார்வை.
**
2) பின்நவீனத்துவம் எல்லாவற்றையும் differentiate செய்யும்
தத்துவம். மாறாக, மார்க்சியம் integrate செய்யும் தத்துவம்.
அரசியல் சமூக அரங்கில் இத்தகைய தொடர்ச்சியான
பிரிவினை, மக்களின் வர்க்கரீதியான ஒற்றுமைக்கு எதிராகச் செயல்படும்.மக்களை எந்த அமைப்பிலும் சேர்ந்து
விடாதவண்ணம் தடுக்கும்.
**
3) ஏவுகணை விஞ்ஞானியான கலாம், அணுக்கரு இயற்பியல்
பற்றிக் கருத்துக் கூறக்கூடாது என்கிறார் கட்டுரையாளர்.
என்ன கருத்தைக் கூறினார் கலாம் என்பதுதான்
கவனிக்கத் தக்கது. நியல்ஸ் போரின் அணுச்சித்திரம்
தவறு என்று கூறினாரா கலாம்? அல்லது, எலக்ட்ரான்கள்
அணுவின் உட்கருவுக்குள் இருக்கின்றன என்கிறாரா
கலாம்?
**
4) கலாம் அவர்களுக்கு அணுக்கரு இயற்பியல் பற்றிப்
பேசத் தகுதியில்லை என்றே வாதத்திற்காக வைத்துக்
கொள்வோம். கட்டுரையாளருக்கு கலாம் பற்றி
கருத்துக்கூற என்ன தகுதி உள்ளது? கட்டுரையாளர்
ஏவுகணை விஞ்ஞானியா என்ன?  இக்கட்டுரையை
முகநூலில் பகிர்ந்த தோழருக்கு என்ன தகுதி உள்ளது?
தோழர் விவேக் ஏவுகணை விஞ்ஞானியா?
**
5) டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலில் எங்கல்ஸ் அங்கக
வேதியியல் (organic chemistry) பற்றி நிறையவே எழுதி
உள்ளார். எங்கல்ஸ் என்ன வேதியியல் அறிஞரா?
**
6) கட்டுரையாளர் தன் மண்டைக்குள் ஏறிய
பார்ப்பனியத்தை தன எழுத்தில் வெளிப்படுத்துகிறார்.
என்ன இருந்தாலும் கலாம் ஒரு துலுக்கந்தானே என்ற
அருவருக்கத்தக்க எண்ணமே அவரின் கட்டுரையில்
வெளிப்படுகிறது.
**
7) திமிர் பிடித்த ஒரு இழிந்த நபரின் கேவலமான
அவதூறுகள் கட்டுரை முழுவதும் நிரம்பிக்
கிடக்கின்றன. அவற்றில் எதுவும் பரிசீலித்து
பதிலளிக்க அருகதை அற்றவை.
**
(தொடர்ச்சி)
--------------------
8) இதில் ஒரு அவதூறு என்ஜிஓ எடுபிடி உதயகுமார்
கிளப்பிய அவதூறு. அதை அப்படியே தன் 
கட்டுரையில் மீண்டும் எழுதி இருக்கிறார்
கட்டுரையாளர். கூடங்குளம் அணுஉலையைச்
சுற்றிப் பார்த்த நாலு மணி நேரத்திலேயே, அதைப்பற்றி
நூல் எழுதி விட்டார் கலாம் என்கிறார் கட்டுரையாளர்.
**
9) குறிப்பிட்ட நிகழ்வில் கூடங்குளம் சென்ற கலாம்
அவர்கள், அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள PHRS
(Passive Heat Removal System) எவ்வாறு வேலை செய்கிறது
என்று செயல்படுத்திப் பார்த்து அறிவதற்காகச்
சென்றார். அதை பார்த்து முடித்ததும் கூடங்குளத்தை
விட்டு வெளியேறி, அவரின் நூலை வெளியிட்டார்.
**
10) இந்தியாவில் உள்ள எல்லா அணுஉலைகளிலும்
சென்று பார்வையிட்டு, சோதித்து அறிந்து, இதற்காக
ஆயிரம் என்ற அளவில் மனித நேரங்களைச் 
(man hours) செலவிட்டு, அதன் பிறகு எழுதப்பட்ட
புத்தகம் அது.கூடங்குளம் சென்று சுற்றிப்பார்த்து
விட்டு ஒரு சில மணி நேரத்தில் எழுதப்பட்ட
புத்தகம் அல்ல.
**
11) இதை எந்த இடத்திலும் எத்தனை பேர்
முன்னிலையிலும் நிரூபிக்க நான் தயார்.
கட்டுரையாளரை வரச் சொல்லுங்கள். நீங்களும்
வாருங்கள். உங்களின் கூற்றை நிரூபிக்க இயலாது
என்று நான் சவால் விடுகிறேன்.
**
12) எவரோ ஒரு என்ஜிஓ எடுபிடி எழுதிய,. முற்றிலும்
காழ்ப்புணர்வு மட்டுமே நிரம்பிய ஒரு  நச்சு
எழுத்தை இகழ்ச்சியுடன் நிராகரிப்பதற்குப்
பதிலாக, அதை மக்களிடம் பரப்புவது
மார்க்சியம் ஆகாது.
**
13) சோவியத் ஒன்றியத்தில் சீனாவிலும், மூல ஆசான்கள்
ஸ்டாலினும்  மாவோவும், தங்கள் நாட்டின் அணு
விஞ்ஞானிகளை தேசத்தின் மகத்தட்டான குடிமக்களாகக்
கருதி மரியாதை செய்தார்கள். அத்தகைய மரியாதைக்கு
இந்தியாவில் உரியவர் கலாம் அவர்கள். அவரை நேர்மையாக எவரும் விமர்சிக்கலாம். ஆனால் அவதூறு செய்வது
அநீதியானது. 
**
தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம்
சென்னை.
-------------------------------------------------------------------------    .
        

நாடாளுமன்ற அரசியல் என்பதில் (parliamentary politics)
சந்தர்ப்பவாதம் தவிர்க்க முடியாத ஒன்று. அரசியலில்
நிரந்தர நம்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை
என்பதே அங்கு செயல்படும் தத்துவம். இதனால்தான்
பாராளுமன்றம் ஒரு பன்றித் தொழுவம் என்கிறார் லெனின்.
இந்து ஏட்டின் கட்டுரை  நாடாளுமன்ற அரசியலின்
அடிநாதம் பற்றிய புரிதல் இல்லாமல் எழுதப்பட்ட
வழமையான கட்டுரை.
**
நித்திஷ் குமார் முதல்வரான உடனே நித்திஷ்-லாலு
கூட்டணி நீடிக்காது என்று எழுதி இருக்கிறேன். எனது
பழைய பதிவுகளை படிக்கவும்.
**
திமுக, அதிமுக, மதிமுக, பாமக ஆகிய தமிழக
கட்சிகளும், மமதா கட்சியும் பாஜகவுடன் கூட்டணி
வைத்த கட்சிகளே. வாஜ் பாய் அமைச்சரவையில்
முரசொலி மாறன் அமைச்சராக இருக்கவில்லையா?
காஷ்மீரின் உமர் அப்துலா அமைச்சராக
இருக்கவில்லையா?
**
நித்திஷை மட்டும் சந்தர்ப்பவாதி என்று  சொல்ல
யாருக்காவது அருகதை இருக்கிறதா?
        

திங்கள், 24 ஜூலை, 2017

வரலாற்று அறிவியல்
காலப் பயணம் சாத்தியமா?
காலப் பயணம் குறித்த திரைப் படங்கள், அறிவியல் புனைகதைகள் போன்றவை மேலைநாடுகளிலிருந்து அதிகம் வெளிவந்தாலும் ‘காலப் பயணம்’ என்பதொன்றும் புதிய சிந்தனை கிடையாது. கீழை தேசங்களின் புராணங்களிலும் இதுகுறித்துத் தொன்மங்கள் காணப்படுகின்றன.
கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்துக்கு:
இந்துப் புராணங்களில் கக்குட்மி என்பவரைப் பற்றிய கதைகள் வருகின்றன. சூர்ய வம்சத்தைச் சேர்ந்த கக்குட்மி மன்னனுக்கு ரேவதி என்ற பெண் இருக்கிறாள். தேவதை போன்ற அழகான அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளத் தகுதியான ஆண் யாரும் இந்த உலகத்தில் இல்லை என்று கருதும் கக்குட்மி, ரேவதியை அழைத்துக்கொண்டு பிரம்ம லோகத்தில் இருக்கும் பிரம்மாவிடம் கலந்தாலோசிக்கப் போகிறார். கக்குட்மியைச் சந்தித்ததும் பிரம்மா சிரிக்கிறார்.
பிரம்மா
‘பிரபஞ்சத்தில் நேரம் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி கிடையாது. நீ இங்கு இருக்கும் நேரத்தில் பூமியில் 108 யுகங்கள் கழிந்துவிட்டன. பல லட்சம் வருடங்களாகியிருக்கும்’ என்கிறார். என்ன செய்வதென்று விழித்துக்கொண்டிருக்கும் கக்குட்மியிடம் பிரம்மா, “விஷ்ணு இப்போது பூமியில் கிருஷ்ணராகவும் பலராமராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். அவர்களில் பலராமர் உன் பெண்ணுக்குப் பொருத்தமாக இருப்பார்” என்று யோசனை சொல்லி அனுப்புகிறார். பூமிக்கு கக்குட்மி திரும்பும்போது எதிர்காலத்துக்குள் பிரவேசிக்கிறார்.
பலராமர்
இதுபோன்று பல்வேறு மதங்களிலும் தொன்மங்கள் இருக்கின்றன. இவையெல்லாமே புராணங்கள் மட்டுமே. அறிவியல் அடிப்படைகளைவிட நம்பிக்கைகளையும் கற்பனைகளையும் சார்ந்து உருவானவை.
எங்கேயோ இடிக்குதே!
சமீப காலம் வரை ‘காலப் பயணம்’ என்பதையே அறிவியலுக்குப் புறம்பான ஒரு கற்பனை என்றுதான் புகழ் பெற்ற அறிவியலாளர்கள் உட்பட பலரும் எள்ளி நகையாடிவந்தார்கள். ‘காலப் பயணம்’ ஏன் சாத்தியம் இல்லை என்பதற்கு மூன்று முரண்பாடுகளை முன்வைத்தார்கள். அவை இங்கே…
அப்பா பிறப்பதற்கு முன்பே தாத்தாவைக் கொல்லுதல்:
குணாளன் என்பவர் கால இயந்திரத்தின் மூலம் கடந்த காலத்தை நோக்கிப் பயணிக்கிறார். அங்கே அவர் தனது தாத்தாவைச் சந்திக்கிறார். அப்போது குணாளனின் அப்பா பிறந்திருக்கவில்லை. குணாளன் தனது தாத்தாவைச் சுட்டுவிடுகிறார். அப்படியென்றால் குணாளனின் அப்பாவும் பிறக்க மாட்டார். குணாளனும் பிறக்க மாட்டார் அல்லவா! பிறக்காத குணாளன் எப்படிக் காலப் பயணம் செய்து தன் தாத்தாவைச் சுட்டுக்கொல்ல முடியும்?
கடந்த காலம் இல்லாத மனிதன்:
முத்தழகன் என்ற இளைஞர் கால இயந்திரத்தைக் கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருக்கிறார். அப்போது அவரைப் பார்க்க வரும் முதியவர் ஒருவர் கால இயந்திரத்தை வடிவமைப்பது எப்படி என்று சொல்லித்தருகிறார். அதைக் கொண்டு முத்தழகன் எதிர்காலத்தை நோக்கிப் பயணித்து பங்குச் சந்தை, கார் பந்தயம், விளையாட்டுப் போட்டி போன்றவற்றின் முடிவுகளைத் தெரிந்துகொண்டு மறுபடியும் நிகழ்காலத்துக்கு வருகிறார்.
தான் தெரிந்துகொண்டதை வைத்துக்கொண்டு பெரும் பணக்காரர் ஆகிறார். முத்தழகனுக்கு வயதாகிறது. தனது கடந்த காலத்தை நோக்கிப் பயணித்து, இளைஞராக அப்போது இருக்கக் கூடிய தனக்குக் கால இயந்திரத்தை வடிவமைப்பதன் ரகசியத்தைச் சொல்லுகிறார். அப்படியென்றால் ஆரம்பத்தில் பார்த்த முதியவர் முத்தழகன்தான். முத்தழகனுக்கு முத்தழகனே யோசனை என்றால் முதன்முதலில் கால இயந்திரத்தை முத்தழகனுக்கு யார் சொல்லிக்கொடுத்திருப்பார்கள்?
தாயும் நீயே தந்தையும்…
ப்ரீடெஸ்டினேஷன் படத்தில் ஜேன் மற்றும் ஜான்
காலப் பயணத்தைப் பற்றிய முக்கியமான திரைப்படங்களுள் ஒன்று ‘ப்ரீடெஸ்டினேஷன்’. காலப்பயணம் செய்யும் ஒரு ரகசிய ஏஜென்ட் மதுவிடுதி ஒன்றில் வேலை பார்க்கிறார். அங்கே வரும் ஜான் என்ற நபர் மது குடித்துக்கொண்டே தனது விசித்திரமான வாழ்க்கைக் கதையைப் பற்றிச் சொல்கிறார்.
பெண்ணாகப் பிறந்தவர் ஜான் (பெண் பெயர்- ஜேன்). பிறந்த உடனேயே யாரோ ஒருவரால் ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டுபோய் விடப்பட்ட ஜேன் அங்கேயே வளர்கிறார். பருவமடைந்த பிறகு சந்திக்கும் ஒரு இளைஞனிடம் காதல் வயப்பட்டு அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. ஆனால், அந்தக் குழந்தை காணாமல் போகிறது. பிரசவத்தின்போது ஜேனுக்கு இரண்டு பாலினத்துக்கும் உரிய உறுப்புகளும் இருப்பது மருத்துவர்களுக்குத் தெரிகிறது. அப்போது ஏற்பட்ட ஒரு சிக்கலின் காரணமாக ஜேனை ஆணாக மாற்றிவிடுகிறார்கள். அந்த ஆண்தான் ஜான்
predestination movie poster
இந்தக் கதையைச் சொல்லிமுடித்ததும் ஜேனின் காதலனைக் கண்டு பிடிப்பதற்காக ஜானைக் கால இயந்திரத்தில் ஏற்றிக்கொண்டு, ஜேனும் அவளது அடையாளம் தெரியாத காதலனும் முதன்முதலின் சந்தித்த தருணத்துக்கு அழைத்துச்செல்கிறார் அந்த ஏஜென்ட். அங்கே, ஜேனும் ஜானும் (இரண்டு பேரும் ஒன்றுதான்!) சந்தித்துக்கொள்கிறார்கள். காதல் வயப்படுகிறார்கள். ஜேன் கர்ப்பமாகிறாள். இறுதியில், அந்த ஏஜென்ட், ஜேன், ஜான், குழந்தை அனைவரும் ஒரே நபர் என்பதும், காலப்பயணங்களால் ஏற்பட்ட விசித்திர சந்திப்புகளின் விளைவுகளே அவர்கள் என்பதும் நமக்குத் தெரியவருகிறது. தானே தனக்குத் தாயும் தகப்பனும் குழந்தையும் என்றால் தாத்தா, பாட்டி யார்?
நான்காவது முரண்:
காலப் பயணம் சாத்தியம் இல்லை என்பதற்கு அறிவியலாளர்களால் முன்வைக்கப்பட்ட முரண் உதாரணங்கள்தான் இவை. இவற்றோடு நான்காவதாக ஒரு முரணை ஸ்டீவன் ஹாக்கிங் முன்வைக்கிறார். காலப் பயணம் செய்வது சாத்தியம் என்றால் நம் எதிர்காலத் தலைமுறைகள் யாராவது காலப் பயணம் செய்துவந்து நம்மை ஏற்கெனவே சந்தித்திருப்பார்களே? அப்படி யாரும் இதுவரை சந்திக்கவில்லை என்பதே எதிர்காலத்திலும் காலப் பயணத்துக்கான வழிமுறைகள் சாத்தியப்படாது என்பதற்கான உதாரணம்தானே என்று கேள்வி கேட்கிறார்.
ஆனால், தற்போதோ ஸ்டீவன் ஹாக்கிங் உட்பட பல அறிவியலாளர்கள் காலப் பயணம் என்பது சாத்தியமாகலாம் என்ற மனமாற்றத்துக்கு வந்திருக்கிறார்கள். ஏன்?
காலம் ஒரு அம்பு போல முன்னே பாய்ந்து செல்கிறது என்றும், பூமி, செவ்வாய், சூரியன் என்று பிரபஞ்சத்தில் எங்கும் காலம் ஒரே மாதிரி பயணித்துக்கொண்டிருக்கிறது என்றும் நியூட்டன் சொல்கிறார். நியூட்டன் காலத்துக்குப் பிறகு, 18-ம் நூற்றாண்டில் இத்தாலிய அறிவியலாளர் லக்ராஞ், இயக்கவியலைப் பற்றிச் சொல்லும்போது “இயக்கம் என்பது நான்கு பரிமாணங்களில் நடைபெறுகிறது. மூன்று பரிமாணங்கள் இடத்தைச் சார்ந்தவை, ஒரு பரிமாணம் காலம்” என்று காலத்தை நான்காவது பரிமாணமாக முன்வைக்கிறார். அதற்குப் பிறகு ‘நான்காவது பரிமாணமாகக் காலம்’ என்ற கோட்பாடு சூடுபிடிக்கிறது.
நதி போல பாயும் காலம்
காலத்தைப் பற்றிய கோட்பாடுகள் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கிப் போடுகிறார் ஐன்ஸ்டைன். அண்டவெளி, காலம் இரண்டும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த ‘கால-வெளி’என்ற கோட்பாட்டை முன்வைக்கிறார். காலத்தை ஐன்ஸ்டைன் ஒரு நதி போல உருவகிக்கிறார். நதி எப்படி ஒரு இடத்தில் வேகமாகவும் வேறொரு இடத்தில் மெதுவாகவும் போகிறதோ அதுபோலத்தான் காலமும். செவ்வாய் கிரகத்தின் ஒரு நொடியும் பூமியின் ஒரு நொடியும் ஒன்று கிடையாது. அதேபோல் பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு இடத்தில் இருக்கும் விண்மீனின் ஒரு மணி நேரமும் பூமியின் ஒரு மணி நேரமும் ஒன்று இல்லை என்பதை 1915-ல் வெளியான ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியல் கோட்பாடு சொல்கிறது.
இதில்தான் காலப் பயணத்துக்கான சாத்தியத்தை ஐன்ஸ்டைன் தன்னையே அறியாமல் ஒளித்துவைத்திருக்கிறார். இத்தனைக்கும் காலப் பயணம் சாத்தியமில்லை என்றே நம்பியவர் ஐன்ஸ்டைன்!
கருந்துளையைச் சுற்றி...
பொதுச் சார்பியல் கோட்பாட்டின் படி பெரும் நிறையானது காலத்தையும் அண்டவெளியையும் வளைக்கிறது. சூரியன் போன்ற பெரும் நிறைகொண்ட விண்பொருள் தன்னைச் சூழந்திருக்கும் கால-வெளியை வளைக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எந்த அளவுக்கு ஒரு விண்பொருள் அதிக நிறை கொண்டிருக்குமோ அந்த அளவுக்கு அது கால-வெளியை வளைக்கும். அந்த விண்பொருளுக்கு அருகில் காலம் மெதுவாகிறது. இதுவும் ஒரு வகையில் காலப் பயணம்தான்.
காலத்தை மிகவும் மெதுவாக ஆக்குவதற்கு சூரியனை விட ஆயிரக்கணக்கான மடங்கு நிறை தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட நிறை கொண்ட பொருள் ஒன்று நமது விண்மீன் மண்டலமான பால்வீதியிலேயே இருக்கிறது. ஆம், பால்வீதியின் மையத்தில் சூரியனை விட 40 லட்சம் மடங்கு நிறை கொண்ட கருந்துளை ஒன்று இருப்பதாகக் கருதப்படுகிறது.
பால்வீதியின் மையத்திலுள்ள கருந்துளையை ஒரு விண்கலத்தைச் சுற்றிவரச் செய்ய வேண்டும். பூமியில் 16 நிமிடங்கள் கழிந்திருந்தால் அந்த விண்கலத்தில் உள்ள கடிகாரத்தில் 8 நிமிடம் கழிந்திருக்கும். அந்த விண்கலத்தில் உங்களின் இரட்டைச் சகோதரர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். விண்கலத்தில் அவர் புறப்பட்டபோது உங்கள் இருவருக்கும் 25 வயது என்றால் பூமியில் 10 ஆண்டுகள் கழிந்த பிறகு உங்களுக்கு 35 வயது ஆகியிருக்கும். உங்கள் சகோதரருக்கோ 30 வயதுதான் ஆகியிருக்கும். தனது 30-வயதில் 35 வயதுக்காரரான உங்களை அவர் சந்தித்ததால் உங்கள் சகோதரர் மேற்கொண்டது காலப் பயணமே.
ஆனால், இந்த கருந்துளையை அடைவதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. ஒன்று, அந்தக் கருந்துளை இருப்பது பூமியிலிருந்து 26,000 ஒளியாண்டுகள் தொலைவில், அதாவது 260,00,00,000,00,00,000 கிலோ மீட்டர் தொலைவில். ஒளியின் வேகத்தில் பயணம் செய்வது சாத்தியமில்லை என்றாலும் அப்படிப் பயணம் செய்வதாக வைத்துக்கொண்டாலும் அந்தக் கருந்துளைக்கு அருகே செல்வதற்கு 26 ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.
ஆனால், மனிதர்கள் செல்லும் விண்கலத்திலேயே அதிக வேகம் கொண்ட அப்போலோ-10 கலமே கிட்டத்தட்ட மணிக்கு 40 ஆயிரம் கிலோ மீட்டர்தான் செல்லும். இன்னொரு சிக்கல், கருந்துளைக்கு அருகில் சென்றால் அது ஒளியைக்கூடத் தப்ப விடாது. ஆக, காலப் பயணம் மேற்கொள்வதற்காகக் கருந்துளையைச் சுற்றிவருவதென்பது கோட்பாட்டளவில் சாத்தியமே ஒழிய நடைமுறையில் சாத்தியம் இல்லை.
பேரனைவிட இளைய தாத்தா
அடுத்த சாத்தியமும் ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்பியல் கோட்பாட்டில்தான் இருக்கிறது. ‘ஒளியை விட வேகமாகப் பயணித்தால் கடந்த காலத்துக்கு நாம் தந்தி அனுப்ப முடியும்’ என்று ஐன்ஸ்டைன் நகைச்சுவையாக ஒருமுறை குறிப்பிட்டார். என்றாலும், பிரபஞ்சத்தின் உச்சபட்ச வேகம் ஒளியினுடையதே; அந்த வேகத்தை எதுவும் தாண்ட முடியாது என்பது அவருடைய கோட்பாடு.
ஒளியின் வேகத்துக்குச் சற்று அருகே ஒரு விண்வெளி வீரர் விண்கலத்தில் பயணித்துவிட்டுச் சில வருடங்கள் கழித்து பூமிக்கு வருவாரென்றால் பூமியில் இருக்கும் அவரது பேரனைவிட இளமையாக இருப்பார்.
ஒளியின் வேகத்துக்கு அருகே பயணிக்கும் எதுவும் மிக மெதுவாகவே மூப்படையும் என்பது சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் (CERN) ஆய்வுக் கூடத்தில், பை-மேசான்கள் என்ற அணுத்துகள்களைக் கொண்டு நிரூபிக்கப் பட்டிருக்கிறது. ஒரு நொடியை 2,500 கோடி மடங்காகப் பகுத்தால் எவ்வளவு நேரம் கிடைக்குமோ அவ்வளவு நேரம்தான் ஆயுள் அந்தத் துகள்களுக்கு. செர்னில் தரைக்கு அடியில் 16 மைல் தொலைவுகொண்டதாய் 
அமைக்கப்பட்டிருக்கும் சுற்றுப்பாதையில் அந்தத் துகள்களை ஒளியின் வேகத்தில் 99.99% வேகத்தில் அனுப்பிப் பார்த்தபோது அந்தத் துகள்கள் தங்கள் வழக்கமான ஆயுளைவிட 30 மடங்கு அதிக நேரம் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆகவேதான் ஒளியின் வேகத்துக்கு அருகில் பயணிப்பதும்கூட காலப் பயணமாகக் கருதப்படுகிறது. இதுபோன்ற நிரூபணங்களால்தான் காலப் பயணம் சாத்தியம் என்ற மனமாற்றத்துக்கு அறிவியலாளர்கள் வந்திருக்கிறார்கள்.
காலப் பயணம் மேற்கொள்வதற்கு மேலும் பல வழிமுறைகள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் ‘கால-வெளித்துளை’ (wormhole). பெயருக்கேற்ப காலத்திலும் வெளியிலும் இருப்பதாக நம்பப்படும் துளை இது. பிரபஞ்சம் முழுவதும் இந்தத் துளைகள் இருப்பதாகவும், இவை மிகவும் நுண்ணியவை என்றும் கருதப்படுகிறது. இந்தத் துளையைப் பெரிதாக்கி, அதன் ஒரு முனையில் நுழைய முடிந்தால் பிரபஞ்சத்தில் நாம் சாதாரணமாக எட்ட முடியாத இன்னொரு மூலைக்கு மட்டுமல்ல, காலத்திலும் வேறொரு புள்ளிக்கு இந்தத் துளை நம்மைக் கொண்டுபோய் விடும் என்று நம்பப்படுகிறது.
கடந்த காலத்துக்குப் போக முடியாது
‘இண்டெர்ஸ்டெல்லார்’ படம் நினைவிருக்கிறதா? (படம் பார்த்தவர்களுக்கு மட்டும்) ‘கால-வெளித் துளை’ வழியே பயணிக்கும் கதாநாயகன் தன் மகளைச் சந்திக்கத் திரும்பி வருகிறார். கதாநாயகன் இளைஞராகவும் அவருடைய மகள் தொண்டு கிழவியாகவும் இருக்கிறார். காலப் பயணம் மேற்கொண்டதன் விளைவுதான் இது.
interstellar
எதிர்காலத்தை நோக்கிய காலப் பயணம்தான் சாத்தியம்; கடந்த காலத்தை நோக்கிய காலப் பயணம் சாத்தியமே இல்லை என்கிறார் ஸ்டீவன் ஹாக்கிங். ஒரு வகையில் காலப் பயணத்துக்கான கனவுகள் காலத்தை மட்டுமல்ல, காலத்தோடு பின்னிப் பிணைந்துள்ள மரணத்தையும் வெல்வதற்கான கனவுகளே. கூடவே, தூரத்தை வெற்றிக்கொள்வதற்குமானது காலப் பயணம் என்ற கனவு.
பால்வீதி
இதைப் பற்றி ஸ்டீவன் ஹாக்கிங் இப்படிச் சொல்கிறார்: ‘காலம் மெதுவாவதால் இன்னுமொரு பலன் உண்டு. கோட்பாட்டளவில் ஒருவர் தனது ஆயுட்காலத்துக்குள் மிக மிக நீண்ட தொலைவை எட்ட முடியும் என்பதுதான் இதன் அர்த்தம். நமது பால்வீதியின் விளிம்பை 80 ஆண்டுகளுக்குள் நாம் எட்டிப் பிடிக்கலாம். இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு விசித்திரமானது என்பதை அது உணர்த்தக்கூடும் என்பதுதான் எல்லாவற்றையும் விட மிகவும் பரவசமூட்டக் கூடியது.’
நன்றி: ஸ்டீவன் ஹாக்கிங், மிஷியோகாக்கு.

ஞாயிறு, 16 ஜூலை, 2017

நிர்வாக ஒதுக்கீட்டு MBBS இடங்களில் (management quota)
இட ஒதுக்கீடு ஏன் இல்லை? இது நியாயமா?
---------------------------------------------------------------------------------
1) சிறுபான்மையினர் கல்லூரிகளில் நிர்வாக
ஒதுக்கீட்டு இடங்களில் (management quota)
சிறுபான்மையினரை மட்டுமே சேர்ப்பார்கள்.
எனவே அங்கு SC, ST, OBC உட்பட இடஒதுக்கீட்டுப்
பிரிவினர் சேர வாய்ப்பே இல்லை.

2) அண்மையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில்
நிகர்நிலை பல்கலைகளின் (Deemed universities)
மருத்துவ இடங்களில், வரலாற்றிலேயே முதல்
முறையாக, SC ST மாணவர்களுக்கு 22 சதம் இட
ஒதுக்கீடு வழங்கி மராட்டிய அரசு ஆணை
பிறப்பித்து உள்ளதாக ஆங்கில ஏடுகளில்
செய்தி வந்துள்ளது.

3) For the first time, 25% of the seats in deemed medical 
and dental institutes will be reserved for candidates from 
the Scheduled Castes (SC), Scheduled Tribes (ST), 
Vimukta Jati Nomadic Tribes (VJNT) and Other Backward 
Classes (OBC). This reservation was earlier available only 
in government institutes. (பார்க்க: Hindustan Times epaper 
june 7, 2017)

4) பார்ப்பன பட்நாவிஸ் அரசு SC,ST,OBCக்கு 
நிகர்நிலைகளில் MBBS படிப்பில் இடஒதுக்கீடு செய்கிறது என்றால், அதற்கு அங்குள்ள சமூக 
நிர்பந்தமே காரணம். அதே போன்ற சமூக 
நிர்பந்தத்தை தமிழ்நாட்டிலும் ஏற்படுத்தினால் 
மட்டுமே இங்கும் நிகர்நிலைகளில் இட 
ஒதுக்கீடு பெற முடியும்.  

5) ஆனால், துரதிருஷ்ட வசமாக, தமிழ்நாட்டில் 
எல்லா சுயநிதி மற்றும் நிகர்நிலைகளை 
சங்கராச்சாரி ஜெயேந்திரர் கட்டுப்படுத்துகிறார்.
அரசியல்வாதிகளில் பலர் ஜெயேந்திரரின் 
கைக்கூலிகளாய் உள்ளவரை, இங்கு எப்படி 
இடஒதுக்கீடு சாத்தியம் ஆகும்?

6) மேற்குறித்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியை 
முதல் கமெண்டில் பார்க்கவும்.
-------------------------------------------------------------------------

AI quota 15%
SC 603 இடங்கள்
ST 299, OBC(NCL) 78
பொதுப்பிரிவு 3038
முதல் சுற்றில் நிரம்பியது
4018 இடங்கள். மீதி 2ஆம் சுற்றில்.
----------------------------------------------------------
மதிப்புக்குரிய ஐயா,
தங்களின் பதிவில் கண்ட விவரங்கள் முற்றிலும்
தவறானவை. 15% அகில இந்திய இடங்களில்
SC 603 இடங்களையும் ST 78 இடங்களையும் பெற்றுள்ளனர்.
விவரம் கீழே காண்க.
**
15% அகில இந்திய கோட்டா இடங்கள் நிரம்பிய விதம்!
-----------------------------------------------------------------------------------------------
15% இடங்களில் 4018 இடங்கள் மட்டுமே முதல் சுற்றில்
நிரப்பப் பட்டுள்ளன. Break up figures வருமாறு:-
SC = 574 மற்றும் SC PH= 29. மொத்தம் நிரம்பிய
SC இடங்கள்= 603.(PH =உடல் ஊனமுற்றோர்).
**
ST = 286 மற்றும் ST PH= 13. மொத்தம் ST = 299.
OBC( NCL)= 74 மற்றும் OBC(NCL) PH= 4.
மொத்தம் OBC(NCL)= 78.
**
பொதுப்பிரிவு = 2894 மற்றும் PH =144.
மொத்தம் பொதுப்பிரிவு= 3038 இடங்கள்.
ஆக, முதல் சுற்றின் முடிவில் 4018 இடங்கள்
மட்டுமே நிரப்பப் பட்டுள்ளன. மீதி இடங்கள்
அடுத்த சுற்றில் நிரப்பப்படும்.

15% இடங்களில் தேறிய மாணவர்களில் இதுவரை
சுமார் 150 பேர் என்னுடன் (நியூட்டன் அறிவியல்
மன்றத்துடன்) மின்னஞ்சல் மற்றும் sms மூலமாகத்
தொடர்பு கொண்டுள்ளனர். மேலும் பலர்  தொடர்பு
கொண்டு வருகின்றனர். அவர்களில் பலர் SC,ST
மற்றும் OBC பிரிவைச் சேர்ந்தவர்கள். பலரின்
ALLOTMENT LETTER COPY எனக்கு மின்னஞ்சல்
மூலமாக வந்துள்ளது. கவுன்சலிங் இன்னும்
முடியவில்லை. முதல் சுற்று மட்டுமே முடிந்துள்ளது.
இன்னும் ஆயிரக் கணக்கான இடங்களின்
கவுன்சலிங் இனிமேல்தான் நடைபெறும்.  
-----------------
தமிழ்நாட்டில் உள்ள அரசுக் கல்லூரிகளில்
BA, BSc, MA, MSc  போன்ற படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும்
மாணவர்களுக்கு 69 சதம் இடஒதுக்கீடு உண்டு.
SC =18%, ST = 1%, BC =30%, MBC =20%, மொத்தம் 69%.
மீதி 31% பொதுப்போட்டி. இந்த அடிப்படையில்
மாணவர் சேர்க்கை நடைபெறும்.

MBBS 15% AI Quota 
முதல் சுற்று முடிவு.
சுற்று-2 முடிந்தபின்
நிரப்பப்படாத இடங்கள்
அந்தந்த மாநிலத்திடம் ஒப்படைக்கப்படும்.

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதல் சுற்று முடிந்து
பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது. கலந்தாய்வு
ஆன்லைன் மூலம் நடந்தது.
-------------------------------------------------------------------------
கேரள மாநில MBBS தரவரிசைப் பட்டியல் வெளியானது!
படிப்பில் உச்சத்தைத் தொட்டு நிற்கிறார்கள்!
-----------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------------
1) தமிழ்நாட்டில் MBBS சேர்க்கைக்கான தரவரிசைப்
பட்டியல்  வெளியாகவில்லை. ஆனால் கேரளம்
உள்ளிட்ட பல மாநிலங்களில் வெளியாகி விட்டது.

2) கேரளத்தின் தரவரிசைப் பட்டியல் (RANK LIST)
மொத்தம் 763 பக்கங்களைக் கொண்டது. 45363 மாணவ
மாணவிகளைக் கொண்டது. அதாவது நீட் தேறி
MBBS, BDS படிப்புக்கு விண்ணப்பம் செய்தவர்களில்
ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 45373 பேர்.

3) முதல் மாணவர் நீட் மதிப்பெண் 691 பெற்றுள்ளார்.
இவரின் PERCENTILE SCORE 99.9994 ஆகும்.

4) 2,3,4.....10 ரேங்க் வரையில் உள்ள மாணவர்கள்
 பெற்றுள்ள நீட் மதிப்பெண்கள் முறையே
684,682,677,676,675,674,671,671,670 ஆகும்.

5) 50ஆவது ரேங்க் மாணவர் பெற்ற நீட் மதிப்பெண்
644 ஆகும். இவரின் percentile score = 99.9581.

6) 100ஆவது ரேங்க் மாணவரின் நீட் மதிப்பெண்
635. percentile score = 99.9334.

7) 200ஆவது ரேங்க் மாணவரின் நீட் மதிப்பெண்
622. percentile score = 99.8855.

8) 491ஆவது ரேங்க் மாணவரி ன் நீட் மதிப்பெண்
600 ஆகும். இவரோடு 600 மதிப்பெண் முடிகிறது.

9) 1000ஆவது ரேங்க் மாணவரின் நீட் மதிப்பெண்
576. percentile score = 99.4492.

10) 1500ஆவது ரேங்க் மாணவரின் நீட் மதிப்பெண்
559. percentile score = 99.1614.

11) 2000ஆவது ரேங்க் மாணவரின் நீட் மதிப்பெண்
544. percentile score = 98.8460.

12) 2500ஆவது ரேங்க் மாணவரின் மதிப்பெண் 529.

13) 3000ஆவது ரேங்க் மாணவரின் மதிப்பெண் 517.

14) 3500ஆவது ரேங்க் மாணவரின் மதிப்பெண் 506.

15) 3800ஆவது  ரேங்குடன் 500 மதிப்பெண் முடிகிறது.
5000ஆவது மாணவரின் ரேங்க் 475 ஆகும்.

16) கேரளா மாணவர்களின் தரவரிசையைப்
பார்த்தால் தமிழ்நாட்டில் உள்ள நமக்கு
தலை சுற்றும்; மயக்கம் வரும்; வாழ்க்கை
வெறுத்துப் போகும். ஆனால் தமிழக மாணவர்களின்
தரவரிசைப் பட்டியல் நிச்சயமாக இப்படி
இருக்காது.

17) ஆக, நீட்டில் 500 மதிப்பெண் எடுத்திருந்தால்தான்
கேரளத்தில் கலந்தாய்வுக்கே அழைப்பு வரும்
என்று தோன்றுகிறது. அதாவது முற்பட்ட பிரிவு
மற்றும்  OBCக்கு மட்டுமே இது பொருந்தும்.
SC,ST பிரிவினருக்கு இந்த மதிப்பீடு பொருந்தாது.

18) இங்கு குறிப்பிட்ட ரேங்க் கேரள மாநில ரேங்க்
ஆகும் (Kerala State Medical Rank).  
*********************************************************** 
கேரளா MBBS ரேங்க் பட்டியல்!
முதல் 10 இடங்களில்
5 கிறிஸ்துவர், 3 முஸ்லீம்,
1 ஈழவர் (BC) மற்றும்
முற்பட்ட வகுப்பு 1 மட்டுமே!

முற்றிலும் தவறான HIGHLY MISLEADING செய்தி இது.
தமிழ்நாட்டுக்கு உரிய இடங்களில் தமிழ்நாட்டில்
வசிப்பவர்கள் (TN Domicile) மட்டுமே MBBS இடங்களைப்
பெற முடியும். தமிழக வசிப்பு (DOMICILE STATUS) என்பது
தீர்மானிக்கும் தகுதி. அருள்கூர்ந்து MISLEADING
செய்திகளை பரப்ப வேண்டாம் என்று வேண்டுகிறேன்.

தமிழ்நாடு மட்டுமல்ல, எல்லா மாநிலங்களிலும் 
DOMICILE STATUSதான் தீர்மானிக்கும் காரணி.

  

பொறுத்திருந்து பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை.
AI Quota போக, தமிழ்நாட்டு இடங்களான 85%
இடங்களுக்கு விண்ணப்பிக்கவே domicile status
தமிழ்நாடாக இருக்க வேண்டும்.


 
 இங்கு குறிப்பிடுவது கேரள மாநில ரேங்க் பட்டியல்.
இது கேரளா மாநில இடங்களுக்கானது.

மன்னிக்கவும். நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு
பேசுகிறீர்கள். தமிழகத்தில்வசிக்காதவர்கள் தமிழக
இடங்களுக்கு விண்ணப்பிக்கவே முடியாது.
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மட்டுமே இந்தியாவின்
எல்லா மாநில மாணவர்களும் (தமிழகம் உட்பட)
விண்ணப்பிக்கலாம். கேரளாவில் படிக்கும்
கேரளா மாணவர்கள் தமிழக இடங்களுக்கு
விண்ணப்பிக்கவே முடியாது. இதில் தமிழக
அரசு கோட்டை விடவில்லை. Misunderstanding to the core.

ஆம், ஐயா, தமிழக மொத்த MBBS இடங்கள்= 4350.
இதில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள்= 973 மட்டுமே.
மீதியுள்ள 3377 இடங்களுக்கு விண்ணப்பிக்க
தமிழகத்தில் வசிக்க வேண்டும். இது தீர்மானிக்கும்
காரணி ஆகும்.

  நீட் என்பதே போன வருஷம்தான் (2016) EFFECTIVE
ஆனது. எனவே 10ஆம் வகுப்பில் இருந்தெல்லாம்
கோச்சிங் தரப்படவில்லை.

அந்தக் கேள்விக்கே இடமில்லாமல்  செய்து விடுகிறது
கள நிலைமைகள். தமிழக 3377 இடங்களுக்கு 50,000 பேர்
விண்ணப்பித்து உள்ளனர்.
**
அகில இந்திய கோட்டாவைப்
பொறுத்த மட்டில், ஒவ்வொரு ஆண்டும் சில இடங்கள்
தமிழக அரசிடம் திருப்பி அளிக்கப் படுகின்றன.
காரணம், இங்கு சீட் கிடைத்தவர்கள் ஜிப்மர் அல்லது
AIIMS அல்லது IIT இடம் கிடைத்துப் போய் விடுவதால்
அந்த சீட்டுகள் சரண்டர் ஆகி தமிழக அரசிடம்
ஒப்படைக்கப்படும். முற்றிலும் உண்மை.

இது கேரள மாநில இடங்களுக்கான பட்டியல்!

2017 நீட் UG அகில இந்திய அளவில் 
தேறிய பெண்கள் =3,45,313
தேறிய ஆண்கள் = 2.66,221
பெண்கள்  79,092 பேர் ஆண்களை விட
அதிகம் தேறினர்.

ஆந்திர மாநில MBBS தரவரிசைப் பட்டியல்!
ஆந்திரம் கேரளம் ஒப்பீடு!
கேரளத்தை விடக் குறைவான மதிப்பெண்ணுக்கு
ஆந்திரத்தில் MBBS இடம் கிடைக்கும்!
------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
1) நீட் தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண் மற்றும்
தரவரிசைப் பட்டியலை (RANK LIST) ஆந்திர மாநிலம்
முன்பே வெளியிட்டு விட்டது.

2) ஆந்திரத் தரவரிசைப் பட்டியல் 798 பக்கங்கள்
கொண்டது. 44640 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அதாவது நீட் தேர்வு எழுதிய அனைவரின் பட்டியல் இது.
தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பெறாதவர்களின்
மதிப்பெண் மற்றும் ரேங்க் கொண்ட முழுமையான
பட்டியல் இது. எனவே நெகட்டிவ் மதிப்பெண் பெற்ற
மாணவர்கள் பற்றிய விவரங்களும் இப்பட்டியலில் உள்ளன.

3) ஆந்திர அரசு செய்தது போல, தமிழக அரசும்
நீட் எழுதிய அத்தனை பேரின் (தேறியோர் தேறாதோர்
உட்பட) மதிப்பெண் மற்றும் ரேங்க் பட்டியலை
பொதுவெளியில் அனைவரும் பார்க்கும் வண்ணம்
வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால் தமிழக
அரசு வெளியிடவில்லை. வெளியிட வேண்டும் என்று
கோரிக்கை விடுக்கக்கூட தமிழ்நாட்டில் நியூட்டன்
அறிவியல் மன்றத்தைத் தவிர யாரும் இல்லை.

4) தேர்வு முடிவுகள் பொதுவெளியில் வைக்கப்பட
வேண்டும். தமிழக அரசு நீட் முடிவுகளைப்
பொதுவெளியில் வைக்கவில்லை. தேர்வு எழுதிய
மாணவர் மட்டும் தனது பதிவு எண் மூலம்
LOG IN செய்து தன்னுடைய மதிப்பெண்ணை மட்டும்
பார்க்கக்கூடிய அளவில்தான் தமிழக அரசு
வெளியிட்டு உள்ளது. இது சரியல்ல.

5) தற்போது, ஆந்திரா கேரளா ஒப்பிட்டுப் பார்ப்போம்.
(நேற்று வெளியிட்ட கேரளத்து தரவரிசைப்
பட்டியல் பற்றிய எமது பதிவைப் பார்க்கவும்)
ஆந்திராவில், முதல் ரேங்க்பெற்ற மாணவனின்
நீட் மதிப்பெண் 685.(கேரளத்தில் 691).

6) ஆந்திராவில், 50ஆவது ரேங்க் மாணவனின்
நீட் மதிப்பெண் 638.(கேரளத்தில் 644)

7) 100ஆவது ரேங்க் மாணவனின் நீட் மதிப்பெண்
624. (கேரளத்தில் 635).

8) 200ஆவது ரேங்க் மாணவனின் நீட் மதிப்பெண்
599 (கேரளத்தில் 622).

9) 198ஆவது ரேங்குடன் ஆந்திரத்தில் 600 மதிப்பெண்
முடிவுக்கு  வந்து விடுகிறது. (கேரளத்தில் 491ஆவது
ரேங்கில்தான் 600 மதிப்பெண் முடிவுக்கு வருகிறது)

10)1000ஆவது ரேங்கின் நீட் மதிப்பெண் 530.
(கேரளத்தில் 576; 46 மதிப்பெண்கள் அதிகம்).

11) 2000ஆவது ரேங்கின் நீட் மதிப்பெண் 487.
(கேரளத்தில் 544: 57 மதிப்பெண் அதிகம்).

12) 3000ஆவது ரேங்கின் நீட் மதிப்பெண் 454.
(கேரளத்தில் 517)

13) 4000ஆவது ரேங்கின் நீட் மதிப்பெண் 428.
(கேரளத்தில் 496)

14) இதன் மூலம் தெரிய வருவது என்ன? ஆந்திர
மாணவர்கள் நீட் தேர்வில் கேரள மாணவர்களை
விடக் குறைவாகவே மதிப்பெண் பெற்றுள்ளனர்
என்பது தெரிய வருகிறது.

15) இதன் பொருள் என்ன? கேரளத்தை விடக்
குறைவாக மதிப்பெண் எடுத்தாலும், ஆந்திராவிலும்
இடம் கிடைக்கும் என்பதுதான் இதன் பொருள்.

16) தமிழக ரேங்க் பட்டியல் வெளியிடப் பட்ட
பிறகுதான் நமது மாணவர்களின் நிலை தெரியவரும்.
ஆனால் ஆந்திராவை விடக் குறைவாக மதிப்பெண்
எடுத்திருந்தாலும், தமிழகத்தில் இடம் கிடைக்கும்.
**************************************************************  


சனி, 15 ஜூலை, 2017

தோல்விக்குக் காரணம் வாஸ்து சரியில்லாததே!
ம.பி, காங்கிரஸ் தலைவர் மிஸ்ரா கருத்து!
-------------------------------------------------------------------------------------
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தொடர்ந்து
மூன்று முறை தோற்று விட்டது. நான்காவது
முறையும் தோற்கும் என்று அஞ்சப்  படுகிறது.

இதற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்த காங்கிரஸ்
தற்போது காரணத்தைக் கண்டு பிடித்து விட்டது.

ம.பி. போப்பாலில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத்
தலைமைச் செயலகம் உள்ளது. இதன் பெயர்
இந்திரா பவன் ஆகும். நம்மூர் சத்தியமூர்த்தி பவன்
போல. இதன் மூன்றாவது மாடியில் ஒரு கழிப்பறை
உள்ளது. அது கிழக்கு நோக்கி உள்ளது.
வாஸ்து சாஸ்திரப்படி இது தவறானதாம். இதனால்தான்
காங்கிரஸ் தொடர்ந்து தோற்று வருகிறதாம்.

இப்படிக் கூறி இருப்பவர் மானமிகு மிஸ்ரா அவர்கள்.
காங்கிரசின் செய்தித் தொடர்பாளர்.

இச்செய்தி கேட்டதும் அமித்ஷாஜி அதிர்ச்சி
அடைந்துள்ளார். வருங்காலத்தில் காங்கிரஸானது
இந்துத்துவத்தை தங்கள் கொள்கையாக
அறிவித்து விடுமோ என்று அமித்ஷாஜி
அஞ்சுகிறாராம்.

வாழ்க வாஸ்து சாஸ்திரம்!
வாழ்க காங்கிரசின் இந்துத்துவம்!
********************************************************    
NEET: If sufficient number of candidates did not pass in NEET, WHAT TO DO?
-------------------------------------------------------------------------------------------
Medical Council of India Notification dtd 21.12.2010
------------------------------------------------------------------
6. In chapter II, clause 5, sub clause 5under the heading "Procedure for
selection to MBBS course shall be as follows" shall be substituted
as under
ii....... provided when sufficient number of candidates belonging to respective
categories fail to secure minimum marks as prescribed in NEET in any
academic year for admission to MBBS course, the central govt in
consultation with the MCI may, at its discretion, lower the minimum marks
required for admission to MBBS course for candidates belonging to
respective categories and marks so lowered by the central govt shall be applicable
for the said year only.
--------------------------------------------------------------------------------------------------
This is quoted in Justice Ravichandra Babus verdict on allocation of MBBS seats
for CBSE and state board stream. judgement dtd 14.07.2017 

வெள்ளி, 14 ஜூலை, 2017

CBSE ஒதுக்கீடு ரத்து என்ற தீர்ப்பால்
மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு
பாதிப்பு ஏற்படுமா? எமது கட்டுரை
படித்து விட்டீர்களா?

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று!

சிப்ஸ் 5

CBSE 15% மற்றும் மாநிலப் பாடத்திட்டம் 85%
என்ற ஒதுக்கீட்டை சட்டமன்றத்தில் ஒரு
சட்டமாக நிறைவேற்றி இருந்தால்
அது நீதிமன்றத்தில் தோற்று இருக்காது.
நீதியரசர் ரவிச்சந்திர பாபு அவர்கள் தமது
தீர்ப்பில் கூறியுள்ளது: "அமைச்சரவைக் கூட்டத்தைக்
கூட்டி இந்த முடிவை எடுக்கவில்லை. இது வெறும்
கூடுதல் இயக்குனரின் முடிவு (Addl Director of Health services)"
என்கிறார். 

நீதிமன்றத்தில்  வெற்றி பெற்று இருக்க வேண்டிய
15% மற்றும் 85% ஒதுக்கீடு தோற்று விட்டது. இதற்கு
காரணம் அமைச்சர் விஜயபாஸ்கரும் முதல்வர்
எடப்பாடியுமே. அவர்களின் கவனக் குறைவே காரணம்.
ஒரு அடிஷனல் டைரக்டர் எப்படி அரசின் கொள்கை
முடிவைத்  தீர்மானிக்க முடியும் என்கிறார்
நீதியரசர் ரவிச்சந்திர பாபு.

அப்படிச் சொல்ல முடியாது. அக்கறை கிடையாது.
மூளையும் கிடையாது. நீதியரசர் தமது தீர்ப்பில்
மிக்கது தெளிவாக இந்தக் குறைபாட்டைச்
சுட்டி காட்டுகிறார். அமைச்சரவையின் முடிவாகக்
கூட இது இல்லையே என்கிறார். எனவே அதை ரத்து
செய்கிறார்.
எது?

நீதியரசரின் தீர்ப்பை நான் முழுவதுமாகப் படித்துப்
பார்த்தேன். அதில ஒன்றுக்கு மேற்பட்ட பத்திகளில்
நீதியரசர் ரவிச்சந்திர பாபு இப்படிக் கூறுகிறார்.
1) அடிஷனல் டைரக்டரின் முடிவுதான் இது.
2) அமைச்சரவை கூடி விவாதிக்கவில்லை.
3) அடிஷனல் டைரக்டர் அரசின் கொள்கை முடிவை
எடுக்க இயலாது.
4) அடிஷனல் டைரக்டர் இந்தப் பரிந்துரையை
(15% மற்றும் 85%) கூறியுள்ள அதே தேதியில்
அரசாணையும் வெளியிடப் படுகிறது. எனவே
did not apply their mind.
5) இவை தீர்ப்புரையில் உள்ள வாசகங்கள்.


மருத்துவப் படிப்பில் CBSEக்கான 15 சத ஒதுக்கீட்டை
நீதிமன்றம் ரத்து செய்ததால் பாதிப்பு இருக்குமா?
------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------------
1) தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள்
மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு
இடங்களில், CBSE பாடத்திட்ட மாணவர்க்கு 15 சதமும்
தமிழக மாநிலப் பாடத்திட்ட மாணவர்க்கு 85 சதமும்
ஒதுக்கி, தமிழக அரசு ஆணையிட்டது (பார்க்க:
ஜூன் 22, 2017 அரசாணை)
2) இந்த அரசாணை செல்லாது என்று சென்னை
உயர்நீதிமன்றம் இன்று ( ஜூலை 14, 2017) தீர்ப்பு
கூறியுள்ளது.
3) இதன் மூலம் மொத்தமுள்ள 3377 MBBS இடங்களில்
(அரசு+தனியாரின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள்)
மாநிலப் பாடத்திட்டத்திற்கு 2867 இடங்கள் மற்றும்
CBSEக்கு 510 இடங்கள் என்ற பாகுபாடு ரத்தாகிறது.
4)அதே போல, BDS மொத்த இடங்கள் 1190இல்,
மாநிலப் பாடத்திட்டம்+CBSE = 1011+179 என்ற
பாகுபாடும் முடிவுக்கு வருகிறது. 
5) எனவே மொத்தமுள்ள MBBS+BDS = 4567 இடங்களிலும்
CBSE, State Board என்னும் பாகுபாடு செயல்படாது.
6) மேற்கூறிய 4567 இடங்களிலும் 69 சத இட ஒதுக்கீடு
மட்டுமே செயல்படும். (மாற்றுத் திறனாளி ஒதுக்கீடு
உள் ஒதுக்கீடாக அமையும். விளையாட்டு ஒதுக்கீடு
அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு வழங்கப்படும்.)
7) உயர்நீதிமன்றத் தீர்ப்பால் ஏற்படும் சாதக
பாதகம் என்ன என்று பார்ப்போம்.
8) CBSE மாணவர்கள் பொதுவாக மருத்துவப் படிப்பை
நாடுவதில்லை. விதிவிலக்காகவே ஒரு சிலர்
மட்டும் MBBSக்கு விண்ணப்பம் செய்வர். தமிழத்தில்
நீட் தேர்வு எழுதியவர்கள் 88431 பேர். இதில் CBSE
மாணவர்கள் வெறும் 4675 பேர் மட்டுமே. இது 5.3 சதம்
ஆகும்.
9) இந்த 4675 பேரில் எத்தனை பேர் தேறியுள்ளனர் என்ற
புள்ளி விவரத்தை இன்னும் அரசு வெளியிடவில்லை. 
தேறி இருந்தாலும், முற்பட்ட மற்றும் BC மாணவர்கள்
என்றால், 200க்கு கீழ் மதிப்பெண் பெற்றுத் தேறி
இருந்தால், அதனால் பயனில்லை. அவர்களுக்கு
MBBS, BDS இடம் கிடைக்காது.

10) CBSEக்கு தமிழக அரசு ஒதுக்கிய 15 சதம் இடங்கள்
மிகவும் RATIONALஆன ஒரு மதிப்பீடு. அதில் தவறு
காண இடமில்லை.
11) தற்போது இந்த ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து
செய்தாலும், அதனால் மாநிலப் பாடத்திட்ட
மாணவர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும்
என்று கருத இடமில்லை. அதிகபட்சமாக, CBSE
மாணவர்கள் 20 சதம் இடங்களை மட்டுமே
பிடிக்கக் கூடும் என்று கருத இடமுண்டு.

12) என்றாலும், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்
பட்டு, CBSE மாணவர்கள் எத்தனை பேர் 350க்கு
மேல் மதிப்பெண் எடுத்துள்ளனர் என்ற எண்ணிக்கை
தெரிந்த பின்பே, அவர்கள் எத்தனை இடங்களைப்
பெறுவார்கள் என்று கூற முடியும்.

13) தற்போதைய நிலையில் யார் என்ன  கருத்தைக்
கூறினாலும், அது துல்லியமான மதிப்பீடாக
இருக்காது; இருக்கவும் முடியாது. இது நியூட்டன்
அறிவியல் மன்றத்தின் கணிப்புக்கும் பொருந்தும்.

14) கிடைத்துள்ள புள்ளி விவரங்களின்படி, CBSE
மாணவர்களால் பெரும்பகுதி இடங்களைக் கைப்பற்ற
முடியாது என்பதே எங்களின் கணிப்பு.

15) தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று
என்பது போல, தமிழகப் பாடத்திட்ட மாணவர்கள்
மிகப் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி
விடுவார்கள் என்றே நாங்கள் கருதுகிறோம்.
----------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: தரவரிசைப் பட்டியல் வெளியான பிறகே
துல்லியமாகக் கணிக்க முடியும். மேற்கூறிய
எமது கணிப்பு தோராயமானதே.
***************************************************************
  

மாநில அரசுக்கான 15 சதம் இடங்கள் தமிழகம்
உள்ளிட்ட 26 மாநிலங்களுக்கு ஏற்கனவே
அனுமதிக்கப்பட்டு விட்டன. அகில இந்திய
ஒதுக்கீட்டுக்கான 15 சதம் இடங்களுக்கான
கவுன்சலிங் ஆன்லைன் கவுன்சலிங் ஆகும்.
இதற்கான பதிவு(registration) ஏற்கனவே தொடங்கி விட்டது.
**
தமிழக அரசின் 85 சத இடங்களுக்கான
rank list வெளிப்பட்டதும் கவுன்சலிங் தொடங்கும். 
இதில் 69 சத இட ஒதுக்கீட்டின்படி, மாணவர் சேர்க்கை
நடைபெறும். CBSE, STATE BOARD என்ற பாகுபாடு மற்றும்
ஒதுக்கீடு இல்லாமல்  சேர்க்கை நடைபெறும்.

DIG திருமதி ரூபா அவர்கள் கர்நாடக மாநில
DGPக்கு அளித்த அறிக்கையில் சசிகலாவுக்கான
வசதிகள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அக்கடிதத்தின்
பல்வேறு பகுதிகள் கன்னட ஏடுகளில் வெளியாகி உள்ளன.

சசிகலா இளவரசி இருவரும் சிறையில்
கைதிச் சீருடை அணியவில்லை.
உயர்வகை சேலை மற்றும் சுடிதார்
அணிகின்றனர். இது சட்ட விரோதம்.

மன்மோகன்சிங் மீண்டும் பிரதமரானால் மட்டுமே
இவர் தூக்கத்தில் இருந்து விழிப்பார்.

சசிகலா இளவரசி பயன்படுத்தும் சிறையில்
ஆப்பிள் i phone விலை ரூ 1.5 லட்சம்.
மேலும் டாப்லெட்டும் பயன்படுத்துகின்றனர்.
 
வைத்துள்ளனர்.
இங்கு டாப்லெட் (tablet) என்பது மாத்திரையைக்
குறிக்காது. கையடக்கக் கணினியைக் குறிக்கும்.

Candy crash விளையாட
சசிகலாவிடம் இருந்து நேற்று எனக்கு
அழைப்பு வந்தது. நேரமின்மையால் 
பணிவுடன் மறுத்து விட்டேன்.

"நாங்கள் என்ன செய்ய முடியும்? மாணவர்களின்
நன்மைக்காக நாங்கள் அரசாணை (GO)கொண்டு
வந்தோம். நீதிமன்றம் அதை செல்லாது என்று
சொல்லி விட்டது. இதற்கு நாங்கள் என்ன செய்ய
முடியும்?" என்று அதிமுக அரசு சொல்வதற்கு இது
ஒரு வாய்ப்பு.  

புதிய தரவரிசைப் பட்டியலை மாநில அரசு
வெளியிடும். அநேகமாக ஓரிரு தினங்களில் வெளியிடும்.
அதன் பேரில் கலந்தாய்வு வழக்கம் போல
நடைபெறும். தரவரிசைப் பட்டியல் வெளியானால்தான்
ஒரு கணிப்புக்கே வர முடியும்.

24 மணி நேரமும் சசிகலா
சிறையில் இல்லை.
அவரின் சிறைவாசம் 60% மட்டுமே.
40% சிறைக்கு வெளியிலுள்ள
ஒரு உல்லாச விடுதியில் கழித்தார்

பெங்களூரு சிறையில்
முத்திரைத்தாள் மோசடிக் குற்றவாளி
அப்துல் கரீம் தெல்ஜியும் சசிகலாவும்
நல்ல நண்பர்களாகப் பழகி வருகின்றனர்.

ஏசி வசதி, மாடுலர் கிச்சன்,
5 ஸ்டார் ஓட்டல் தரத்தில் உணவு,
கால் பிடிக்க உடம்பு பிடிக்க 
பெண் கைதிகள்,
சிறையை விட்டு வெளியேற
ஏசி கார்! மகாராணியாய் சிறையில் சசிகலா ! 

வியாழன், 13 ஜூலை, 2017

சிறை சொகுசுக்கு 2 கோடி
லஞ்சம் கொடுத்த சசிகலாவை
ஆதரிக்க வேண்டும் என்று
கூறியவர்கள் எங்கே? எங்கே?


1) சங்கராச்சாரி ஜெயேந்திரர் தலைமையிலான
கல்வித் தந்தைகளான பச்சமுத்து, ஜேப்பியார்,
பங்காரு அடிகள் போன்ற கொடிய கல்விக்
கொள்ளையர்களே நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்.
அவர்களின் சேவகர்களான போலி முற்போக்குகளின்
நீட் எதிர்ப்பு ஜெயேந்திரருக்குச் செய்யும் சேவையே
தவிர வேறொன்றும் இல்லை.
2) மோடி அரசை வரிந்து கட்டிக்க கொண்டு எதிர்க்கும்
கேரளா மார்க்சிஸ்ட் அரசு, மேற்கு வங்க மமதா அரசு
உள்ளிட்ட தீவிர மோடி எதிர்ப்பு அரசுகள் நீட் தேர்வை எதிர்க்கவில்லை. இந்தியாவின் 29 மாநிலங்களில்
28 மாநிலங்களில் நீட்டுக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை.
3) சட்டப்படிப்பில் சேர பல பத்தாண்டுகளாக
நுழைவுத் தேர்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் சட்டப் படிப்பில்
சேர்க்கை நடைபெற வேண்டும் என்று நீட்
எதிர்ப்பாளர்கள் என்றாவது கோரி இருக்கிறார்களா?
இல்லை. ஏனெனில் சங்கராச்சாரி ஜெயேந்திரர்
சட்டக் கல்லூரி நடத்தவில்லை.
4) திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் BA படிப்பில்
சேர நுழைவுத் தேர்வு நடத்தித்தான் மாணவர்களை
சேர்க்கிறார்கள். காலங்காலமாக இது நடக்கிறது.
நீட் எதிர்ப்பாளர்கள் இந்த நுழைவுத் தேர்வை
எதிர்க்கவில்லை.
5) தமிழ்நாட்டில் எத்தனை நுழைவுத் தேர்வுகள்
நடந்தாலும் அவற்றைக் கண்டு கொள்ளாதவர்கள்,
நீட் தேர்வை மட்டும் எதிர்ப்பது ஏன்?
6) தமிழ்நாட்டில் மட்டும் எதிர்ப்பது ஏன்?
7) காரணம் இதுதான்! இங்குள்ள கல்வித் தந்தைகள்
(ஜெயேந்திரர், பச்சமுத்து, ஜேப்பியார், பங்காரு )
என்ன கட்டளை இடுகிறார்களோ, அதை
நிறைவேற்றும் வேலையை மிக்க விசுவாசத்துடன்
செய்கிறார்கள் இந்த நீட் எதிர்ப்பாளர்கள் என்னும்
ஜெயேந்திரர் கைக்கூலிகள்.
-------------------------------------------------------------------------------------
இந்த ஆண்டு 2017இல்  நீட் தேறிய ஆண்கள் = 2,66,221
பெண்கள்= 3,45,313.
ஆண்களை விட பெண்களே அதிகம் தேறியுள்ளனர்.
89,000 பேர் அதிகம்.
**
கடந்த ஆண்டு 2016இல் நீட் தேறிய ஆண்கள் =1,83,424
பெண்கள்= 2,26,049.
பெண்களே அதிகம் தேறியுள்ளனர். 42000 பேர் அதிகம்.
**
உண்மை நிலை இப்படியிருக்க பெண்களை
ஒடுக்க வந்தது நீட் என்று தாங்கள் கூறுவது
புத்தி பேதலித்த நிலையில் கூறுவதாகும்.
**
முட்டாள்தனத்தை 100 சத்தமும் மொத்தமாக
திரு பூவண்ணன் கணபதி குத்தகை எடுத்திருக்கும்போது,
வேறு யார்தான் என்ன செய்ய முடியும்?
**
சங்கராச்சாரி கைக்கூலிகள் பொய்கள் உடனடியாகவே
சாயம் வெளுத்துப் போகும்.

ஆரம்ப காலத்தில் பெண்கள் மருத்துவக் கல்வி
பெற்றது குறைவு. டாக்டர் முத்துலட்சுமி ஒரே ஒரு
மாணவியாக அவர் மட்டுமே படித்தார் என்று
கேள்விப்பட்டுஉள்ளேன். இன்று நிலைமை
படிப்படியாக மாறி வருகிறது. இந்த ஆண்டு
அட்மிஷன் முடிந்த பிறகு கிடைக்கும் புள்ளி
விவரங்கள் அடிப்படையில் பெண்கல்வியின்
முன்னேற்றத்தை அளவிடலாம்.
**
சட்டமன்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு
பங்கு மகளிருக்கான ஒதுக்கீடு இன்னும்
சட்டம் ஆகாத இந்தியாவில், அதற்காகப்
போராடுவது வேறு எதையும் விட அதிக
முக்கியத்துவம் வாய்ந்தது என்பது என்
தாழ்மையான கருத்து. சட்டம் இயற்றும் இடத்தில்
பெண்களைக் கொண்டு சேர்க்க வேண்டும்
அல்லவா? அதில் கருத்துக் செலுத்தாமல் இருப்பது
முட்டாள்தனம் அல்லவா?

90,000 இடங்கள் உள்ள அரசு மற்றும் தனியார்
கல்லூரிகளின் மருத்துவப் படிப்பு இடங்களே
மொத்த மருத்துவ இடங்களில் 95%க்கும் மேல்.
எனவே மிகக்குறைவான இடங்கள் உள்ள AIIMSஐ
அஜெண்டாவில் இப்போது சேர்ப்பது தேவையில்லை. 
 


கோபால கிருஷ்ண காந்தியும்
ராஜ்மோகன் காந்தியும்!
------------------------------------------------------
1) காந்தி-ராஜாஜியின் பேரனாக தற்போதும்
வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் இருவர்.
ஒருவர் ராஜ்மோகன் காந்தி; மற்றவர்
கோபாலகிருஷ்ண காந்தி.

2) இருவரும் அண்ணன் தம்பிகள். ராஜ்மோகன்
அண்ணன் ஆவார்.இருவரின் தந்தையும் காந்தியின்
புதல்வர் தேவதாஸ்.

3) ராஜ்மோகன் காந்தி பேராசிரியராகப் பணியாற்றியவர்.
கோபாலகிருஷ்ண காந்தி ஒய்வு பெற்ற ஐஏஎஸ்
அதிகாரி.

4) அண்ணனான ராஜ்மோகன் காந்தி பல்வேறு
கட்சிகளில் இருந்தவர். 2014இல் ஆம் ஆத்மி கட்சி
வேட்பாளராக கிழக்கு டெல்லி தொகுதியில்
போட்டியிட்டுத் தோற்றவர்.

5) தம்பியான கோபாலகிருஷ்ண காந்தி
மேற்கு வங்க ஆளுநராக இருந்தவர்.

6) கோபாலகிருஷ்ண காந்தி தற்போது காங்கிரஸ்
உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் வேட்பாளராக
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டி இடுகிறார்.

7) மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள்
மட்டுமே வாக்களித்து துணை ஜனாதிபதி
தேர்ந்து எடுக்கப் படுகிறார். அதாவது மொத்த
வாக்காளர் எண்ணிக்கையே சுமார் 800தான்.

8) ராஜ்மோகன் காந்தி, கோபாலகிருஷ்ண காந்தி
ஆகிய இருவருக்கும் இடையிலான வேறுபாட்டை
கவனம் கொள்ளாமல் எழுதப்பட்ட எமது
முந்திய பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. எனவே
வாசகர்கள் இந்தப் பதிவில் உள்ள சரிபார்க்கப் பட்ட விவரங்களையே கருத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.        

9) தவறுக்கு வருந்துகிறோம்.
*****************************************************

புதன், 12 ஜூலை, 2017

நீங்கள் முன்முடிவுகளை எடுத்துக் கொண்டு
பேசுகிறீர்கள். எனவே தங்களின் கூற்று ஒரு பக்கச்
சார்பாக (biased) .உள்ளது. நான் சூரஜ், மனிஷ்
இருவரிடமும் பேசவில்லை. இருவரும் மருத்துவ
சிகிச்சையில் இருப்பதாக மாணவர்கள் என்னிடம்
கூறினார்கள். தாங்கள் மனிஷிடம் பேசினீர்களா?
இக்கேள்விக்கு நீங்கள் பதில் கூற வேண்டும்.
**
தீர விசாரித்து அறிவதே மெய் என்கிறது தமிழ் மரபு.
அந்த அடிப்படையில் தீர விசாரித்தேன். உண்மையை
அறிந்தேன். எழுதுகிறேன்.
**
இனிமேல் சூரஜ், மனிஷ் இருவரிடமும் பேசுவது
பயன் தராது. ஏனெனில் இருவரும் இனிமேல்
உண்மையைப் பேச  மாட்டார்கள். தங்கள் தங்கள்
ஆதரவாளர்களால், மற்றவர்கள் கேட்டால்
என்ன சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்
பட்டுள்ளதோ அதைத்தான் இனி இருவரும்
பேசுவார்கள்.
**
ஐஐடி வளாகத்தில் செயல்படும் என்ஜிஓ கும்பல்
பற்றி எதுவும் அறியாமல், என்ஜிஓக்களின்
கயமையைப் பற்றிப் பேசாமல், இந்த விவகாரத்தில்
உண்மையைக் கண்டறிய  .முடியாது. இந்த
விவகாரம் என்ஜிஓக்களால் ஊதிப்  பெருக்கப்
படுகிறது.   

பொறுப்புத் துறப்பு-2
(DISCLAIMER)
எமது கட்டுரைகளைப்
படிக்காதவர்களை
சமூகம் இளக்காரமாகப் பார்க்கும்.
இதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

பெண் நாவலாசிரியைக்கு எதிர்ப்பு!
ஐஐடி கரக்பூரில் நாவலின் கருத்துக்கு எதிர்ப்பு!
கவிஞர் மனுஷ்ய புத்திரன் அதிர்ச்சி!
-----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------
மேற்கு வங்கத்தில் உள்ள கரக்பூர் ஐஐடியில்
கட்டிடக்கலை  படிப்பில் (B.Arch) வாஸ்து சாஸ்திரம்
ஒரு பாடமாக வைக்கப்பட இருக்கிறது. இது
அதிகாரபூர்வமான செய்தி!

இது குறித்துக் கண்டித்தும், இந்த முயற்சியை
முறியடிக்கக் கோரியும் நியூட்டன் அறிவியல்
மன்றம் அறிவியல் சமூகத்திற்கு (scientific community)
ஒரு வேண்டுகோள் விடுத்து இருந்தது. என்றாலும்
இது குறித்த எமது முகநூல் பதிவு பலராலும்
சீந்தப் படவில்லை.

ஐஐடி மாணவர்கள், குறிப்பாக B.Arch படிப்பில் சேரும்
கட்டிடக்கலை மாணவர்கள் அனைவரும்,
அயன் ராண்ட் (Ayn Rand) எனப்படும் சோவியத்
ரஷ்ய-அமெரிக்க பெண் எழுத்தாளரான (1905-1982)
அயன் ராண்ட் எழுதிய "FOUNTAINHEAD" என்ற ஆங்கில
நாவலைப் படிப்பார்கள். அநேகமாக இந்த நாவலைப்
படிக்காத ஐஐடி B.Arch மாணவர் இருக்க முடியாது.
பிற பிரிவுகளின் (mechanical electrical) மாணவர்களும்
அயன் ராண்டைப் படிப்பது வாடிக்கை.
(இங்கு மாணவர் என்ற சொல் மாணவியையும்
குறிக்கும்).

ஆக, ஒரு பக்கம் அயன் ராண்டின் "fountainhead".
மற்றோரு பக்கம் வாஸ்து சாஸ்திரம்.
சேமியாப் பாயாசத்துடன் மிளகாயப்பழ ஜுசை
சேர்த்து, ஒரு காக்டெயில் பானத்தை ஐஐடி
மாணவர்கள் அருந்த வேண்டியது இருக்கிறது.
வாஸ்து சாஸ்திரம் versus அயன் ராண்ட் என்ற
பைனரி முரண் ஐஐடி கரக்பூரில் கட்டமைக்கப்
பட்டுள்ளதை எவரும் எளிதில் உணரலாம்.

எனினும், நாம் என்னதான் கரடியாகக் கத்தினாலும்
பேஸ்புக் பொறுக்கிகள் (தொடர் (phrase)  உபயம்:
திமுகவின்மனுஷ்ய புத்திரன்) இது போன்ற முக்கிய
விஷயங்களைக் காதிலேயே போட்டுக்
கொள்வதில்லை. பாகுபலி அவர்களின் சிந்தையைச்
சிறை செய்து இருக்கக் கூடும்.

நிற்க. அயன் ராண்டின் fountainhead நாவலைப்
படித்து இருக்கிறீர்களா? இல்லையென்றால்
படிக்கலாம். சற்று நீண்ட நாவல். 600 அல்லது 700
பக்கம் உள்ள நாவல். கதாநாயகன் பெயர் ரோர்க்.
(Howard Roark). இவன் ஒரு B.Arch மாணவன். நாவலைப்
படியுங்கள். அது ஒரு முதலாளித்துவ நாவல்தான்.
என்றாலும் படிக்க வேண்டிய ஒரு நாவல்.

அதைப்படித்த பிறகாவது, வாஸ்து சாஸ்திரம் என்ற
புராதனப் பொய்யை எதிர்க்க வேண்டும் என்ற
சிந்தனையை நீங்கள் பெறலாம்!  
***************************************************************

இந்தப் பதிவில் குறிப்பிடப் படுகிற, ஐஐடியில்
வாஸ்து சாஸ்திரம் பற்றிய எமது முந்திய பத்திவைப் படிக்காதவர்கள் இப்போதாவது படிப்பது நலம்.


       

செவ்வாய், 11 ஜூலை, 2017

பஸ் கண்டக்டர்களுக்கு மோடி வைத்த ஆப்பு!
வசூல் குறைந்தால் டிஸ்மிஸ்! எடப்பாடி அறிவிப்பு!
-----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------------
ஒரு  பேருந்தில் முதல் வாரத்தில் ரூ27,432ம் இரண்டாவது
வாரத்தில் ரூ 16,758ம்  வசூலாகிறது. முதல் வாரத்துடன்
ஒப்பிடுகையில், இரண்டாவது வாரத்தின் வசூல்
எவ்வளவு குறைவு?

சரியான விடையைத் தேர்வு செய்க.
A) ரூ 9674 B) ரூ 8674 C) ரூ 10,674 D) ரூ 12,674

இது ஆசிரியர் தகுதித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி.
TET 2017 PAPER-I, MATHS PORTION, கேள்வி எண்: 101.

இதை விட எளிமையாக கேட்க முடியுமா?
இருந்தும் தேர்ச்சி 4,64% மட்டுமே.

வாசகர்கள் விடையளிக்க வேண்டும்.
*********************************************************   


உங்களது டிரைவிங் லைசென்ஸ் ரத்தாகும் அபாயம்!
போக்குவரத்து போலீஸ் கமிஷனர் அறிவிப்பு!
-----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------------
ஒரு கார் 25 லிட்டர் பெட்ரோலில் 150 கி.மீ தூரம்
செல்லும் என்றால், 30 லிட்டர் பெட்ரோலில்
செல்லும் தொலைவு என்ன?
சரியான விடையைத் தேர்வு செய்க
A) 160 km B) 190 km C) 180 km D) 200 km

ஆசிரியர் தகுதித்தேர்வு TET 2017 PAPER-I
MATHS PORTIONஇல் கேட்கப்பட்ட கேள்வி.
கேள்வி எண்: 93.

இதை விட எளிமையாகக் கேட்க முடியுமா?
இருந்தும் 7,53 லட்சம் பேர் தேர்வு எழுதியதில்
4,64% மட்டுமே தேறியுள்ளனர்.

சரியான விடை எழுதாதவர்களின் டிரைவிங்
லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்கிறார்
போக்குவரத்து போலீஸ் கமிஷனர்.
**************************************************8
         
உங்களால் முடியுமா?
இந்தக் கேள்விக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா?
----------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------------
ஒரு நபர் தன்னிடம் உள்ள பணத்தில் மூன்றில்
ஒரு பங்கைக் கொண்டு ஒரு பொருளை வாங்குகிறார்.
அப்பொருளின் விலை ரூ 100 எனில் அவரிடம் இருந்த
மொத்தப்பணம் எவ்வளவு?
A) ரூ 1000 B) ரூ 300 C) ரூ 3000 D) ரூ 100.

ஆசிரியர் தகுதித் தேர்வு TET 2017 PAPER-Iஇல்
கேட்கப்பட்ட கேள்வி. கேள்வி எண்: 120. 

சரியான விடைகள் வரவேற்கப் படுகின்றன.
**************************************************************

சரியான விடை: B) ரூ 300. இவ்வளவு எளிய கேள்விதான்
தேர்வில் கேட்கப்படுகிறது. இது கணிதப்பிரிவில்
உள்ள கேள்வி (PAPER-I, MATHS)   

குழந்தைகளுக்குத் தேவையான பால் எவ்வளவு?
இக்கேள்விக்கு விடை அளிக்க முடியாதவர்களை
பிளாக் செய்யப் போகிறேன்!
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------
ஒரு குழந்தைக்கு 200 மி.லி பால் வீதம் 40 குழந்தைகள்
கொண்ட வகுப்பில் எல்லாக் குழந்தைகளுக்கும்
தேவையான பாலின் அளவு ...................
சரியான விடையைத் தேர்வு செய்க.
A) 10 லிட்டர் B) 11 லிட்டர் C) 12 லிட்டர் D) 8 லிட்டர்.

(ஆசிரியர் தகுதித் தேர்வு TET 2017 PAPER-I MATHS PORTION
கேள்வி எண்: 94)

விடை அளிக்க இயலாதவர்களை முகநூலில்
நட்புப்பட்டியலில் இருந்து BLOCK செய்யப் போகிறேன்.

ஆசிரியர் தகுதி தேர்வில் இவ்வளவு எளிமையாகக்
கேட்டும் தேர்ச்சி 5 சதத்திற்கும் குறைவே.
**************************************************   
      

திங்கள், 10 ஜூலை, 2017

தோழர் காலன்துரை அவர்களுக்கு,
----------------------------------------------------------------
1) தங்களுடன் "தத்துவப் போராட்டம்"நடத்த
யார் எவரும் என்னை நியமிக்கவில்லை.
"தத்துவப் போராட்டம்" நடத்தும் பொறுப்பையும்
யார் எவரும் என்னிடம் ஒப்படைக்கவில்லை.
2) தனிநபர்களை மையப்படுத்தி நடைபெறும்
 சர்ச்சைகளில் எனக்குப் பங்கில்லை. அவற்றில்
இருந்து துண்டித்துக் கொண்டு இருப்பவன் நான்.
3) அத்வைதம் பொருள்முதல்வாதமே என்று தாங்கள்
 முன்வைத்த விஷயம் மட்டுமே என் அக்கறைக்கு
 உரியது, அது தீமையை விளைவிக்கும் கருத்து என்பதால்.  
4) ஒரு கருத்தைப் பொதுவெளியில் முன்வைக்கிற
எவரும் அதன் மீதான எதிர்வினையைச் சந்திக்கச்
சித்தமாக இருக்க வேண்டும்.
5) அனைவருக்கும் நன்றி.
------------------------------------------------------------------------------------------
1) அரசியலில் ஏற்பும் மறுப்பும் பிரதான பங்கு வகிப்பவை.
ஏற்றுக்கொண்ட ஒரு கொள்கை குறித்து எதிர்மறையாக
ஒரு கருத்து பொதுவெளியில் முன்வைக்கப் படுமென்றால்,
ஒன்று அதை ஏற்க வேண்டும் அல்லது அதை மறுக்க
வேண்டும். இது மார்க்சியர்களின் கடமை ஆகும்.
**
2) தோழர் காலன்துரை அவர்கள்  "அத்வைதம்
பொருள்முதல்வாதமே"  என்ற ஒரு கருத்தைப்
பொதுவெளியில் முன்வைத்துள்ளார்.
**
3) இது சரியென்றால் அதை ஏற்பதும், தவறு என்றால்
அதை மறுப்பதும் மார்க்சியத்தை ஏற்றுக் கொண்ட
ஒவ்வொருவரின் கடமை ஆகும்.
**
4) தோழர் காலன்துரையின் மேற்கூறிய கருத்து
அடிப்படையிலேயே தவறானது. அத்வைதம்
பொருள்முதல் வாதம் அல்ல. இதை நிலைநாட்டுவது
ஒவ்வொரு மார்க்சியரின் கடமை ஆகும். எனவே
என்னுடைய கடமையும் ஆகும்.
**
5) அடுத்து, விரைவில் இது குறித்து அனைவரின் ஒத்துழைப்புடனும் எழுத உள்ளேன். நன்றி.
    

சற்றுமுன்தான் தங்களின் "மறுவிசாரணை தத்துவத்தில்"
என்பது கிடைக்கப் பெற்றது. எனினும் எனக்கு எவ்வித
அவசரமும் இல்லை. மருத்துவ அட்மிஷன் தொடங்கிய
பிறகுதான் எழுத உள்ளேன். எனவே தங்களுடன்
விவாதித்த பின்னரே எழுதலாம் என்று உள்ளேன்.

தோழர் உறவு பாலா அவர்களுக்கு,
தங்களின் கூற்றில் உண்மை இல்லை. அத்வைதம்
கருத்துமுதல்வாதமே என்று கூற எந்த அமைப்பும்
அஞ்சப்போவதில்லை. மார்க்சியம் அந்த அளவு
பலவீனமான தத்துவம் அல்ல. எந்தவொரு மார்க்சிய
லெனினிய அமைப்பும் பதில் சொல்லும் பொறுப்பை மற்றவர்களிடம் தள்ளி விட்டு ஒதுங்கக் கூடிய
அமைப்பு அல்ல. சந்தர்ப்பவாதம் என்பதெல்லாம்
தங்களின் கற்பனையே. தாங்கள் அதீதமான
மனக்கிளர்ச்சிக்கு ஆளாகிறீர்கள் என்பது என்
தாழ்மையான கருத்து. மிக இயல்பாகவும்
எளிமையாகவும் இந்த ஒட்டு மொத்த
விவகாரத்தையும் அனைவரும் கையாளலாம்
என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்.



தோழர் ரவீந்திரன் அவர்களுக்கும் தோழர் உறவு பாலா அவர்களுக்கும் நன்றி. இந்தக் கணக்கின் விடையை
அவரவர்கள் தாங்களாகவே சரிபார்த்துக் கொள்ளலாம்.

சரியான விடை இதுதான். வாங்கிய பேனாக்கள்= 12.

சனி, 8 ஜூலை, 2017

ஜூலை 1ஆம் தேதியன்றே தேர்வு முடிவுகள்
வெளியாகி விட்டன. சற்றுமுன்தான் result analysis
செய்து முடித்தேன். 

தேர்வுமுறையில் எந்தக் கோளாறும் இல்லை.
இதற்கு முன்பு நடந்த (2013) TET தேர்விலும்
இதே ரிசல்ட்தான். இது முற்றிலும் மாநிலப்
பாடத்திட்டத்தில் நடைபெறும் தேர்வு.

வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ
என்று கருத்துக் கூறுவது அறிவியலுக்கு
எதிரானது. 2013, 2017 TET தேர்வு முடிவுகள்
பற்றிய பகுப்பாய்வு மேற்கொண்டு வருகிறேன்.
அதைப் பொதுத்தளத்தில் வெளியிட்டால்
எத்தனை பேர் புரிந்து கொள்ள இயலும்?
TET தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளைக்கூட
இங்கு வெளியிட நான் தயார். எத்தனை பேரால்
புரிந்து கொள்ள இயலும்? நமது அறிவியல்
பதிவுகளுக்கு வரவேற்பே இல்லையே!
இன்று காலை கூட, ஒரு எளிய கணக்கு
கொண்ட ஒரு மீள்பதிவு உள்ளது. அதைச்
சீந்துவோர் மிகவும் குறைவு.  

கல்வித்தரம் பிரச்சினை இல்லை. இருக்கிற
கல்வியில்தான் (அதாவது பாடத்திட்டத்தில்தான்)
தேர்வு. இங்கு பிரச்சினை ஆசிரியர்களின்
தரம்தான்!

அவரவர்கள் நடத்துகிற பாடத்தில்தான் தேர்வு!
வரலாறு பாடம் எடுக்கிற ஆசிரியருக்கு
கணிதத்தில் தேர்வு கிடையாது. வயதாகி விட்டது
என்பதை ஏற்றுக்கொண்டால். வயதான ஆசிரியர்
எப்படி பாடம் நடத்த இயலும்?

தோழர் ஜெயமோகன் எங்களின் தொழிற்சங்கத்தில்
தீவிரமாகச் செயல்பட்டவர். அவரின் பங்களிப்பை
நான் அறிவேன். தாங்கள் மிகவும் பொதுப்படையாக
ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டாம். சதம் சரியான கருத்து.


முக்கிய அறிவிப்பு!
-----------------------------------
கணிதத்தில் உள்ள TET கேள்விகள் எவ்வளவு
எளியவை என்பதை இங்கு எடுத்துக்காட்டுகளுடன்
விளக்கியுள்ளேன். அதிர்ஷ்ட வசமாக கணிதத்தில்
M Sc பயின்ற தோழர் பிரகாஷ் பொற்செழியன் இங்கு
இந்தப் பதிவில் வந்துள்ளார். கேள்விகள் எவ்வளவு
எளிமையானவை என்பதை திரு பொற்செழியன்
மனச்சாட்ச்சியுடன் பேச வேண்டும்.


CBSE சிலபஸ் 
நீட்டில் பாஸ் 39%
ஸ்டேட் போர்ட் சிலபஸ்
TETல் பாஸ் 4.6%
இதற்கு என்ன பதில்? விளக்கம்

இதில் என்ன கஷ்டம்? அவர்கள் கணிதத்தில் தேர்வு
எழுத வேண்டியதில்லையே. அதே போல, Science Teacher
என்றால் அறிவியலின் எல்லாப் பிரிவுகளுக்கும்
பாடம் எடுக்க வேண்டுமே! 10 வரையிலான
வகுப்புகளில் science teacher என்றால் physics, chemistry, biology
ஆகிய மூன்று பாடங்களை எடுக்க வேண்டும்.  

அது கணக்கு அல்ல. அது mainly elementary arithmetic

TET கேள்வி எவ்வளவு கடினம் பாருங்கள்!!!
மாநிலங்களவைக் கூட்டங்களுக்கு தலைமையேற்று
நடத்துபவர் யார்?
அ) சட்ட அமைச்சர் ஆ) துணை குடியரசுத் தலைவர்
இ) குடியரசுத் தலைவர் ஈ) பிரதமர்

TET தேர்வில் கேட்ட மிகவும் கடினமான கேள்வி
இதுதான்:
அரசியல் நிர்ணய சபையின் வரைவுக்குழு
தலைவர் யார்?
அ) ராஜாஜி ஆ) நேரு இ) ராஜேந்திர பிரசாத்
ஈ) டாக்டர் அம்பேத்கார்
  

அறியாமையை நியாயப் படுத்துவதும் அறியாமைக்கு
வக்காலத்து வாங்குவதும் சரியல்ல. ஒரு ஆசிரியர்
எந்தப்பாடம் எடுத்தாலும் அவருக்கு பொதுஅறிவு,
தமிழறிவு இருக்க வேண்டியது அவசியம். எல்லாப்
பாடங்களிலும் குறைந்தபட்ச பரிச்சயம் இருக்க
வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பே.
TET தேர்வு கடினம் என்று சொல்ல இயலாது.


BSc Maths Physics என்று எந்தப் பாடத்தில் டிகிரி
வாங்கினாலும் language ஒரு பாடமாக இருக்கிறது.
மேலும் B.Ed அல்லது ஆசிரியப் பட்டயம் வாங்கினாலும்
language உண்டு. அதில் கேள்வி வரும்.


SUBJECT தெரிந்தால்தானே கற்பிக்க முடியும்?
MATHS பாடத்தில் வீக்காக இருப்பவர் எப்படி
இன்டெக்ரல் கால்குலஸ் கற்பிக்க முடியும்?
கற்பிக்கும் முறைகளை BEdல் சொல்லிக்
கொடுக்கிறார்கள். சரி. அதற்கு subject knowledge
வேண்டாமா? ஆசிரியர்கள் கிளார்க்குகள் அல்ல.
அவர்களுக்கு அறிவார்ந்த தலைமுறையை
உருவாக்கும் பொறுப்பு உள்ளது. ஒரு VAO
தேர்வுக்கான கேள்வித்தாளை விட எளிமையாக
இருக்கிறது TET. அதற்கு ஆயிரம் ஆட்சேபம்
தெரிவித்துக் கொண்டு இருப்பது நியாயமல்ல.







   

வெள்ளி, 7 ஜூலை, 2017

தோழர். சுந்தரனார் எழுதிய "மனோன்மணீயம்" நாடகத்தின் பாயிரமாக 'தமிழ் தெய்வ வணக்கம்' என்ற தலைப்பில் எழுதியது முப்பத்தாறு வரிகள் கொண்டது. மேலே உள்ளது போக மீதி......
"" கடல்குடித்த குடமுனியுன் கரைகாணக் குருநாடில்
தொடுகடலை யுனக்குவமை சொல்லுவதும் புகழாமே.ஒரு
பிழைக்கா அரனார்முன் னுரையிழந்து விழிப்பாரேல்
அரியதுன திலக்கணமென் றறைவதுமற் புதமாமே. (2)
சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழிநீ யநாதியென மொழிகுவதும் வியப்பாமே. (3)
வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு
காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே. (4)
கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையாருன் வாசகத்தி லொருபிரதி கருதினதே (5)
தக்கவழி விரிந்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை
மிக்கநலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே. (6)
வடமொழிதென் மொழியெனவே வந்தவிருவிழியவற்றுள்
கெடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே (7)
வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்
கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார். (8)
கலைமகடன் பூர்வதிசை காணுங்கா லவள்விழியுள்
வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார். (9)
பத்துப்பாட்டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையு மிலக்கணமில்கற்பனையே. (10)
வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக் கொருநீதி. (11)
மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ."""
LikeShow more reactions
Reply
2
5 hrs


தகவல் பிழை ஏதும் இல்லை!
---------------------------------------------------
நான் இங்கு குறிப்பிடுவது செங்கை அண்ணா
மாவட்டத்தை. செங்கை அண்ணா மாவட்டத்தில்
காஞ்சிபுரம் அடக்கம். ஜெயேந்திரர் கண்டித்தவுடன்
மேனன் திண்டுக்கல் அண்ணா மாவட்டம்
உருவாக்கினார். கலைஞர் அதை ஏற்காமல்
செங்கை அண்ணா மாவட்டம் என்றே குறிப்பிட்டு
வந்தார். திண்டுக்கல் அண்ணா மாவட்டம் என்று
மேனனின் அரசு குறிப்பிட, செங்கை அண்ணா
மாவட்டம் என்று கலைஞர் குறிப்பிட்ட, அஞ்சல்கள்
இவ்வாறே இரு பிரிவுகளாய் அமைந்து குழப்பத்தை
ஏற்படுத்தின.
**
இதனால் அஞ்சல் துறை பெரிதும் பாதிக்கப் பட்டது.
நான் அப்போது மத்திய அரசின் தொலைத்தொடர்புத்
துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
என் அலுவலகம் அருகிலேயே சென்னை GPO
இருந்தது. அஞ்சல் பிரிப்புப் பணியில் (SORTING)
இது பெரிய அளவு இடர்ப்பாட்டை ஏற்படுத்தியது.
**
இக்கட்டுரை முழுவதும் குறிப்பிடப் படுவது
செங்கை அண்ணா மாவட்டமே ஆகும்.
சென்னை காஞ்சியைச் சேர்ந்த மூத்த தோழர்களில்
யாரை வேண்டுமானாலும் கேட்டு இந்த உண்மையை
உறுதி செய்து கொள்ளலாம்.

தமிழக கியூ பிரிவோ அல்லது ஆந்திர போலீசோ
தோழர் பத்மா அவர்களைக் கைது செய்யவில்லை
என்ற செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது.
அப்படியானால் தோழர் பத்மா அவர்கள் நலமாக
இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா?

ஆசிரியர் தகுதித் தேர்வு TET:
எழுதியவர்கள்: 7.53 லட்சம்
தேர்ச்சி: 34,979 (4.65%)
மாநிலப் பாடத்திட்டத்தில்
நடந்த தேர்வு இது!  



வியாழன், 6 ஜூலை, 2017

திராவிட இந்துத்துவம்!
--------------------------------------------
இறைவன் சந்நிதியில் பிரிந்தவர் கூடினர்!
தம்பிதுரையும் மாஃபா பாண்டியராஜனும்
ஆவடி செல்லாத்தம்மன் கோவில் திருவிழாவில்
அருகருகே நின்று தேர் இழுக்கும் முனைப்பில்!
இதுதான் திராவிட இந்துத்துவம்!

திராவிட இந்துத்துவம் பற்றி இதுவரை யாம்
தெரிவித்த  கருத்துக்களுக்கு எவராலும்
மறுப்பு கூற இயலவில்லை!

(நன்றி: படம்: T P Jeyaraman  
----------------------------------------------------------------
தமிழகத்தில் இரண்டு வகையான
இந்துத்துவம் செயல்படுகிறது.
(1) ஆரிய இந்துத்துவம்
(2) திராவிட இந்துத்துவம்.

அதிமுக முழுமையான
திராவிட இந்துத்துவக் கட்சி!
இதை ஆயிரம் முறை கூறினேன்..
மறுக்க நாதியில்லை.
மறுத்துப்பார்,சவால்!

ஆரிய இந்துத்துவம் யக்ஞம் செய்யும்.
திராவிட இந்துத்துவம்
ஜெயா குணமடைய வேண்டி
மண்சோறு தின்னும்!
வளர்மதி சரஸ்வதி மண்சோறு தின்றனரே

ஆரிய இந்துத்துவம்
மாட்டை (பசுவை) வணங்கும்!
திராவிட இந்துத்துவம்
கார் டயரை வணங்கும்!

"திராவிட இந்துத்துவம்" (Dravidian Hindutva) என்பது
நான் முன்மொழியும் ஒரு கோட்பாடு. இதன்
சரித்தன்மை நடைமுறையில் நிரூபிக்கப் பட்ட
ஒன்று. திராவிட இந்துத்துவத்தை கொள்கையாகக்
கொண்டு ஒழுகும் பல்வேறு திராவிடக் கட்சிகள்
உள்ளன. என்றாலும் அவற்றுள் திராவிட இந்துத்துவக்
கோட்பாட்டுக்கு மிகவும் நெருக்கமான கட்சி
அதிமுக.
  

இல்லை.

திரு ஆனந்த கணேஷ் அவர்களே,
எமது பதிவுகள் வெறும் கருத்துகள் அல்ல.
அவை நிரூபிக்கப்பட்ட தேற்றங்கள்!
இவை பொழுதுபோக்கிற்காக எழுதப்
படுவதில்லை. எமது எழுத்தில் உள்ள
ஒரு கமாவுக்கு கூட திட்டவட்ட நோக்கம் உண்டு.
சமூகம் இப்படித்தான் சிந்திக்க வேண்டும் என்ற
நோக்கில், சமூகத்தின் சிந்தனையின் திசைவழியைத்
தீர்மானிப்பவை எமது எழுத்துக்கள். இவை
ஏனோதானோ என்றோ, வாய் புளித்ததோ
மாங்காய் புளித்ததோ என்றோ எழுதப் படுவதில்லை.
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை!
  
BA BL படித்த வழக்கறிஞர்
கோகுல இந்திரா
ஜெயா நலம் பெற
மண்சோறு தின்கிறார்!
இது வெறும் பிரார்த்தனையா
திராவிட இந்துத்துவமா?

சீமான் ஸ்திரத்தன்மை அற்றவர்.
ஈழ விஷயத்தில் ஜெயாவை ஆதரித்தவர்.
புலம் பெயர்ந்த தமிழர்களின் பணத்தில்
அரசியல் செய்ப்பவர். அவரின் அரசியல்
கருநிலை வடிவிலேயே உள்ளது. இன்னும்
முதிரவில்லை. எப்படி வேண்டுமானாலும்
கொள்கையை மாற்றிக் கொள்ளத் தயாராக
இருப்பவர். தேர்தல் அரசியலில்  சற்று முன்புதான்
(2016 சட்டமன்றத் தேர்தல்) குதித்துள்ளார்.
எனவே  பொறுத்திருந்து பார்த்து, அவர் ஒரு
 வடிவத்திற்கு வந்த பிறகுதான் அவரைப்
பற்றிக் கணிக்க முடியும். மதில்மேல் பூனையை
எப்படி கணிக்க முடியும்?  அவருக்குப் பணம்
தருவோர்தான் அவரின் கொள்கையை முடிவு
செய்வார்கள். 


சமூகத்தில் பெரும்பான்மையினரின் நாவில்
புழங்குகிற இந்துத்துவத்தை.... மக்கள் இந்துத்துவம்
என்றால் என்ன அர்த்தம்  கொள்கின்றனரோ
அந்த  அர்த்தத்தில் இங்கு பயன்படுத்தி உள்ளேன்.
எமது  கோட்பாட்டு ஆவணம் (திராவிட இந்துத்துவம்
என்றால் என்ன?) விரைவில் வெளியாகும்.
இது காலரிக்கு வாசிக்கிற இடம் என்பதை அறிக.


புதன், 5 ஜூலை, 2017

காதலின் இயற்பியல் 
--------------------------------------- 
வீரை பி இளஞ்சேட்சென்னி 
-----------------------------------------------------
உன் இளமூங்கில் தோளில் 
துப்பட்டா 
தொங்கும் அழகில் லயித்து 
கச்சிதமான பேரபோலா என்று 
உறுத்து உறுத்துப் பார்த்தேன் 
வசவு உமிழ்ந்து நகர்ந்தாய்.

உன் தங்கையைக் கண்டதும் 
உன் ஐசோடோப் 
உன்னினும் அழகு என்றேன்
கோபத்தில் சிவந்தாய்.

உன் மேனியின் அபாய வளைவுகளில் 
திரும்புவதற்குத் தேவையான 
'டார்க்'கை அளக்க விரும்பினேன் 
அனுமதி மறுத்தாய்.

மின்னி மறையும் உன் இடை 
பல்லாயிரம் மெகாவாட் மின்சாரத்தை 
எவ்வளவு வோல்ட்டேஜில்
தயாரிக்கிறது என்று அறிந்திட 
மல்டிமீட்டரை உன் இடையில் 
பொருத்த முற்பட்டேன்
கண்டிப்புடன் தடுத்தாய்.

நம் காதல் 
அசிம்ப்டோட் ஆகவே நீள்கிறதே 
தொடுபுள்ளியில் சங்கமிக்கும் 
பொன்பொழுது எப்போது என்றேன்.

துருத்திக்கொண்டு 
என்னுடன் கூடவே வரும் 
இயற்பியலைக் கைவிட்டால் 
கைத்தலம் பற்றலாம் என்றாய்.

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து 
அப்பாலுக்கு அப்பாலும் 
உச்சம் தரும் இயற்பியலைக்  
கைவிடுதல் எங்ஙனம்?

நியூட்டனும் கலாமும் 
வெளிச்சம் பாய்ச்ச 
ஒரு நானோ நொடியில் 
நான் தெளிந்தேன்.
**********************************************