சனி, 30 ஏப்ரல், 2016

மேதினத்தன்று நுழைவுத் தேர்வு!
--------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
மே 1 அன்று திட்டமிட்டபடி NEET முதல் கட்டத்
தேர்வு நடைபெறும் என்றும் அதைத் தள்ளி வைக்க
முடியாது என்றும் இன்று சனிக்கிழமை (30.04.2016)
காலை 12 மணியளவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ் தாக்கூர்,
ஏ.கே சிக்ரி, ஆர் பானுமதி ஆகியோர் அடங்கிய மூவர்
அமர்வு இத்தீர்ப்பை வழங்கியது.

எனவே நாடு முழுவதும் திட்டமிட்டபடி, மே 1, 2016
அன்று காலை 10 மணிக்கு NEET தேர்வு நடைபெறுகிறது.
மொத்தம் 6,67,637 பேர் இத்தேர்வை எழுத உள்ளனர்.

தமிழ்நாட்டிலும் இத்தேர்வு நடைபெறுகிறது. மொத்தத்
தமிழ்நாட்டுக்கும் ஒரே மையம்தான். அது சென்னைதான்.
சற்றேறக்குறைய 29,000 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட AIPMT 2016 தேர்வுதான்
NEET என்ற பெயரில் நடக்கிறது.

தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி
வழக்குத் தொடுத்தவர்கள் மகாராஷ்டிர மாநிலத்து
மாணவர்கள்.

நமது கருத்து:
--------------------------
மே 1 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். இரண்டு கட்டத்
தேர்வு என்பது அபத்தம். ஜூலை 24 தேர்வை விரும்பும்
அனைவரும் எழுத அனுமதிக்கப் பட வேண்டும்.
நாளை நடக்கும் முதல் கட்டத் தேர்வு உச்சநீதி மன்றம்
விரும்பியபடி நடக்கட்டும். ஆனால் பின்னர் இத்தேர்வு
ரத்து செய்யப்பட்டே ஆக வேண்டும்.
******************************************************************மே   
சீமானுக்கு வந்துள்ள குஷ்டரோகம்
குணப்படுத்தக் கூடியதே!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
நாம் தமிழர் கட்சியின் தலைவர் திரு சீமான்
அவர்கள் குஷ்டரோகத்தால் அவதிப் படுகிறார்
என்ற செய்தி கேள்வியுற்று வருந்துகிறோம்.

என்றாலும், குஷ்டரோகம் குணப்படுத்தக் கூடியதே.
அதற்கான கூட்டு மருந்து சிகிச்சை மேற்கொண்டால்
குணமாகி விடும்.

செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள பொலம்பாக்கம்
தொழுநோய் மருத்துவமனையில் சீமான்
சிகிச்சை மேற்கொள்ளலாம். 

குஷ்டரோகம் ஆதிகாலம் முதலே இருந்து வரும்
ஒரு நோய். பைபிளில் குஷ்டரோகிகள் பற்றி
எழுதப் பட்டு இருப்பதை, மலையாளக்
கிறிஸ்துவரான சீமான் தெரிந்து இருக்கக் கூடும்.

ஆரம்பத்தில், அனேகமாக 1960 வரை, குஷ்ட
ரோகத்திற்கு DAPSONE என்ற மாத்திரை மட்டுமே
கொடுக்கப் பட்டு வந்தது. இன்று கூட்டு மருந்து
சிகிச்சையில் ஆறு மாதத்தில் தொழுநோயை
விரட்டி விடலாம்.

நிற்க. இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும்போதே
இன்னொரு துயரச் செய்தி வந்திருக்கிறது.
வில்லன் நடிகர் ஆனந்தராஜ் இறந்து விட்டாராமே!
அன்னார் குடும்பத்திற்கும் இரங்கலைத்
தெரிவிப்போமே.
******************************************************************   
தொகுதிவாரியான கருத்துக் கணிப்பு!
நியூட்டன் அறிவியல் மன்றம் வெளியிடுகிறது!
---------------------------------------------------------------------------------------
கருத்துக் கணிப்புகளை வெளியிடத் தடையில்லை
என்று தேர்தல் அதிகாரி திரு ராஜேஷ் லக்கானி
கூறியுள்ளார் என்பது வாசகர்கள் அறிந்ததே.

எனவே, 234 தொகுதிகளுக்கும் களப்பணியாளர்களை
அனுப்பி, வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை
அறிவியல் ரீதியாக ஆராய்ந்து முடிவுகளை
வெளியிட இருக்கிறது நியூட்டன் அறிவியல் மன்றம்.

முதல் கட்டமாக பின்வரும் மூன்று தொகுதிகளுக்கு
களப்பணியாளர்கள் அனுப்பப் பட்டுள்ளனர். நேற்று
நெல்லை எக்ஸ்பிரசில் அவர்களை அனுப்பி
வைத்துள்ளது நியூட்டன் அறிவியல் மன்றம்.

1) அம்பாசமுத்திரம் (நெல்லை மாவட்டம்)
2) திருநெல்வேலி
3) ராதாபுரம்

வேட்பு மனு வாபஸ் முடிந்த பின்னர் கருத்துக்
கணிப்பு வெளியிடப்படும்.
********************************************************************* 
2016 சட்டமன்றத் தேர்தல் வாக்காளர்கள்
-------------------------------------------------------------------------
ஆங்கில இந்து ஏடு (30.04.2016 பக்கம்-7) செய்தி:

தமிழக வாக்காளர்கள்: 5.82 கோடி

2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது
வாக்காளர்கள்: 5.50 கோடி

ஆக, இந்த இடைப்பட்ட காலத்தில், புதிய
வாக்காளர்கள் 32 லட்சம் பேர். சராசரியாக
ஆண்டுக்கு 16 லட்சம் பேர் என்ற வீதத்தில்
வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.
----------------------------------------------------------------------------------------
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை பெற
ஜேப்பியாரும் பாரிவேந்தரும் முயற்சி!
---------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------------
ஒரே உத்தரவில் தனியார் சுயநிதிக் கல்லூரிகள்
"நடத்தி"வந்த போலியான கண்துடைப்பு நுழைவுத்
தேர்வை ரத்து செய்து விட்டது உச்சநீதி மன்றம்.

இனி NEET தேர்வு எழுதி, அதில் தேறியவர்களை
மட்டுமே இந்த சுயநிதிக் கல்லூரிகளும் நிகர்நிலைப்
பல்கலைக் கழகங்களும் MBBS படிப்பில்
சேர்க்க முடியும்.

ஒரு சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் முதல் 10 கோடி
ரூபாய் வரை காசு பார்த்த கயமை முடிவுக்கு
வந்து விட்டது.

எனவே உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை (ஸ்டே)
பெறுவதற்கு சுயநிதி முதலைகள் முயற்சி
செய்து வருகின்றன.

ஜேப்பியாரும் பாரிவேந்தரும் இதில் முழுமூச்சாக
ஈடுபட்டுள்ளனர்.
****************************************************************   
1) இந்தப் பதிவுக்குப் பிறகு இரண்டு கட்டுரைகள்
விளக்கமாக எழுதப் பட்டுள்ளன. அருள்கூர்ந்து
அவற்றைப் படிக்குமாறு வேண்டுகிறேன்.
**
2) இந்தியா முழுவதும் இதுவரையிலான எல்லா
நுழைவுத் தேர்வுகளையும் உச்சநீதிமன்றம் ரத்து
செய்து விட்டது. மாநில அரசுகளோ, தனியார்
சுயநிதிக் கல்லூரிகளோ, நிகர்நிலைப் பல்கலைகளோ
இனி யாரும் எந்த நுழைவுத் தேர்வையும் நடத்த
முடியாது. 
**
3) இனி  ஒரே ஒரு நுழைவுத் தேர்வுதான். அதன் பெயர்
NEET.
**
4) இந்த நுழைவுத் தேர்வு குறித்த விவாதம்
கல்வித்துறை சார்ந்த குறிப்பாக மருத்துவக்
கல்வி சார்ந்த விஷயங்களில் ஒரு ஆழமான
பரிச்சயத்தைக் கோருகிறது. அப்போதுதான்
இதில் உள்ள நுட்பங்களை, சிக்கல்களை,
எதிர்கொள்ள வேண்டிய சவால்களைப் புரிந்து
கொள்ள முடியும். அருள்கூர்ந்து இந்தப்
பதிவுக்குப் பின் எழுதப்பட்ட பதிவுகளைப்
படிக்கவும். 

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

Maharashtra: The State has requested the Indian Medical Council not to conduct the admissions to medical and dental courses through NEET and instead continue with MH-CET this year. Medical Education Minister Vinod Tawde said: “Since the NEET is based on CBSE syllabus, the government will have to upgrade its HSC syllabus and then Maharashtra can join the NEET from 2017.”
அரசுக் கல்லூரி, தனியார் கல்லூரி அனைத்திலும்
உள்ள மொத்த இடங்களுக்கும்தான் இந்த நுழைவுத்
தேர்வு. இந்தத் தீர்ப்புத்தான் முதன் முதலாக,
தனியார்  சுயநிதிக் கல்லூரிகளின் இடங்களையும்
அரசே நிரப்ப வழி செய்கிறது.
தனியார் கல்லூரிகளின் இடங்களையும் சேர்த்து
தமிழக  அரசே கலந்தாய்வு (COUNSELLING) மூலமாக
நிரப்பலாம். இதை உங்களைப் போலவே நானும்
வரவேற்கிறேன். ஆனால் இதைச் செய்ய முடியாது.
ஏனெனில் அதற்கான சட்டம் இல்லை. தமிழக அரசு
இப்படி ஒரு அறிவிப்பைச் செய்தால் போதும், அடுத்த
நிமிடமே இதை எதிர்த்து வழக்குத் தொடுத்து
தடையாணை (STAY) வாங்கி விடுவார்கள். ஒரு
சட்டமோ அல்லது நீதிமன்றத் தீர்ப்போ இல்லாமல்
எந்த அரசாலும் தனியார் கல்லூரி இடங்களை
நிரப்ப முடியாது.
**
உணமியில் இப்போது வந்துள்ள இந்தத் தீர்ப்புத்தான்
தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் இடங்களை
அரசே நிரப்ப வழி செய்கிறது, NEET மூலமாக.
எனவே இதை ஆதரிப்பதன் மூலமே பெரும்
விஷ விருட்சமாக வளர்ந்து விட்ட சுயநிதித்
திமிங்கலங்களின் தொண்டையில் கத்தியைப்
பாய்ச்ச முடியும்.     
கள நிலவரத்தைத் துளியும் அறியாமல், அறிய
முயற்சி செய்யாமல் பேசுகிற பேச்சு இது.
MBBS இடங்களுக்கு ஒரு லட்சம் பேர் போட்டியிட்டால்,
ஒரு லட்சம் இடங்களை உருவாக்கு என்பது போகாத
ஊருக்கு வழிகாட்டும் வேலை. சுயநிதித்
திமிங்கலங்களின் கைக்கூலிகளாக மாறிக்
கொண்டு இருக்கிறோமே என்ற பிரக்ஞையே
இல்லாமல் பேசுகிறார்களே என்பதுதான்
வேதனையாக இருக்கிறது.  .    
ஒரு சோஷலிச நாட்டின் அதிபராகத் தங்களைத்
தாங்களே வரித்துக் கொண்டு சோஷலிசத்துக்கு
வரையறை கூற முற்படுவது நகைப்பிற்கு
இடமானதாகப் போய்விடும். நிற்க.
**
நுழைவுத் தேர்வு என்பது சர்வரோக நிவாரணி அல்ல.
பெரும் புரட்சிக்குப் பின்னர் உருவாக்கப்பட உள்ள
சோஷலிசக் கட்டுமானம் தீர்த்து வைக்க வேண்டிய
சிக்கல்களை எல்லாம் ஒற்றை நுழைவுத் தேர்வு
தீர்த்து விடுமா என்ற கேள்வி படு அபத்தமானது.
**
நுழைவுத் தேர்வு என்பது ஒரு ஏற்பாடு. ஆயிரம் MBBS
இடங்களுக்கு லட்சம் பேர் போட்டியிடும் போது,
அந்தப் போட்டியை முறைப்படுத்த வேண்டும்.
அதில் ஊழல், NEPOTISM ஆகிய முறைகேடுகள்
இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதில்
வெளிப்படைத் தன்மை வேண்டும். அதற்காகத்தான்
நுழைவுத் தேர்வு தேவைப் படுகிறது.
**
நுழைவுத் தேர்வு வேண்டாம் என்றால், அதற்கு
மாற்று என்ன?
**
நுழைவுத் தேர்வு வேண்டாம் என்பது சுயநிதி
முதலைகளின் கோஷம். ஒரு சீட்டுக்கு ஒரு கோடி
சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் சுயநிதித்
திமிங்கலங்கள் நுழைவுத் தேர்வை எதிர்க்கின்றன.
தங்களைப் போன்றவர்கள் சுயநிதித்  திமிங்கலங்களின்
ஆதரவாளர்களாக உடைவாளை உருவிக் கொண்டு
வருகிறீர்கள்.     
மருத்துவப்படிப்பிற்கான மொத்த இடங்கள்,
அவற்றுக்கான போட்டிகள், 1000 இடங்களுக்கு
லட்சத்திற்கும் மேற்பட்டோர் போட்டியிடுவது
ஆகிய இவையெல்லாம் புறநிலை யதார்த்தம்
(objective reality). இது பற்றிய எந்த விதமான புறவய
மதிப்பீடும் இல்லாமல் (without an objective assessment)
வெறும் அகநிலையில் பதிந்துள்ள பழைய
கருத்துக்களைக் கூறுகிறீர்கள், ஐயா. நடைமுறையில்
பரிசீலிக்கப் படாத முன் காலத்திய முன் முடிவுகளை
விவாதத்தில் வைப்பது பற்றி நான் என்ன கூற இயலும்?
**
நுழைவுத் தேர்வு என்பது ஒரு சோஷலிசக்
கோட்பாடு என்று குறிப்பிட்டுள்ள எமது முந்தைய
கட்டுரையையும் படிக்குமாறு வேண்டுகிறேன்.       

நுழைவுத் தேர்வு குறித்த எனது இரண்டாவது
கட்டுரையைப் படித்து ஆதரிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

நுழைவுத் தேர்வு வேண்டாம் என்றால்,
கடவுள் சந்நிதியில் திருவுளச் சீட்டு போட்டு எடுக்கலாம்
----------------------------------------------------------  
தாக்கல் செய்த மனுவின் Prayer பகுதியில் என்ன
உள்ளதோ, அதை மட்டுமே பரிசீலித்துத் தீர்ப்பு
அளிக்கும் நீதிமன்றம். நீதிமன்றத் தீர்ப்பைத்
தொடர்ந்து மத்திய அரசும் மருத்துவக் கவுன்சிலும்
எமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள விஷயங்களைச்
செய்ய வேண்டும். அதற்கு மத்திய அரசை மக்கள்
வலியுறுத்த வேண்டும்.
**
ஒரே ஒரு நீதிமன்றத் தீர்ப்பு சர்வரோக நிவாரணி
ஆகி விடாது. தீர்ப்பு ஏற்படுத்தி உள்ள சாதகமான
சூழலைப் பயன்படுத்தி, அரசு நடவடிக்கை
எடுக்கும்போதுதான் முழுமையான தீர்வு கிட்டும்.
அரசை வலியுர்த்துவது மக்கள் கடமை.

1) தனியார் கல்லூரி இடங்களுக்கு மட்டும்
பொது நுழைவுத் தேர்வு என்று செயல்படுத்த
முடியாது. இது தெளிவான பாரபட்சம் (clear discrimination)
என்று நீதிமன்றம் சென்று அதை ரத்து செய்து விடுவார்கள்.
2) எய்ம்ஸ், ஜிப்மர் ஆகியவை தனிச் சட்டத்தின்படி
உருவாக்கப் பட்டவை. பிரத்தியேகச் சட்டங்கள்
கொண்டு வருவதன் மூலமாகவே அவற்றையும்
NEETஇல் இணைக்க முடியும்.   


ஜிப்மர் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உண்டாக்கப்
பட்டது. எனவே அதையும் NEETஇல் உள்ளடக்க
தனிச்சட்டம் தேவை என்று கருதுகிறேன். எனினும்
இதற்கு சட்ட நிபுணர்களே தெளிவான விளக்கம்
சொல்ல முடியும்.

சமூகநீதிக் காவலரும் பொது நுழைவுத் தேர்வின்
தந்தையுமான குலாம் நபி ஆசாத் வாழ்க!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------
நாடு முழுவதும் உள்ள மருத்துவப் படிப்பு இடங்களுக்கு
ஒரே பொதுத் தேர்வு நடத்துவது என்ற முடிவு காங்கிரஸ்
ஆட்சிக் காலத்தில் (UPA-II, 2009-2014) எடுக்கப் பட்டது.
இதுதான் நீட் தேர்வு என்று அழைக்கப் படுகிறது.
டாக்டர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில்
சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத்
எடுத்த முடிவு இது.

2009 மே முதல் 2014 மே வரை மத்திய சுகாதாரத்துறை
அமைச்சராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். இவர்
காஷ்மீர் மாநில முதல்வராகவும் இருந்துள்ளார்.

குலாம் நபி ஆசாத்துக்கு முன்பு 2009 மே வரை சுகாதார
அமைச்சராக இருந்தவர் டாக்டர் அன்புமணி. இவரின்
காலத்தில் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள்
புற்றீசல் போல் வளர்ந்தன.MBBS இடங்கள் விற்பனைப்
பண்டங்கள் ஆயின.

பதவியேற்ற முதல் ஆண்டிலேயே, வணிக மயமாகிப்
போன மருத்துவக் கல்வியை மீட்டெடுத்து, மருத்துவக்
கல்வியின் தரத்தைப் பேண  உறுதி பூண்டார் குலாம்
நபி ஆசாத். அதற்காக NEET எனப்படும் பொது நுழைவுத்
தேர்வை முன்மொழிந்தார்  குலாம் நபி ஆசாத்.
இது குறித்து டாக்டர் மன்மோகன்சிங், சோனியா காந்தி ஆகியோரின் ஒப்புதலைப்பெற்றிருந்தார் என்பது
குறிப்பிடத் தக்கது.

இதற்கான அறிவிக்கை டிசம்பர் 21, 2010இல் மருத்துவக்
கவுன்சிலால் (MCI) வெளியிடப்பட்டது. இதுதான் மூல
ஆவணம். நன்கு கவனிக்கவும்: இந்த உத்தரவு
பிறப்பிக்கப்பட்ட   ஆண்டு 2010, காங்கிரஸ்
ஆட்சியின்போது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு,
தற்போது, 2016 ஏப்ரலில் இந்த மூல ஆவணம்
செல்லும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.

2010ஆம் ஆண்டிலேயே அறிவிக்கை வெளியிட்ட
போதிலும், சம்பந்தப்பட்ட அனைவருக்கும்
(all stake holders)  போதிய அவகாசம் கொடுத்து
2012 கல்வியாண்டு முதல் NEET தேர்வை  நடத்துவது
என்று முடிவு செய்யப் பட்டது.

இருப்பினும் தேர்வு நடத்தும் பொறுப்பில் உள்ள
CBSE மேலும் ஒரு ஆண்டு அவகாசம் கொடுத்து,
2013 கல்வியாண்டில் இருந்து  மட்டுமே NEET தேர்வை
நடத்தியது. இதன்படி, முதல் NEET தேர்வு 2013 மே
மாதம் முதல் ஞாயிறு அன்று (5 மே 2013) நடந்தது.

அவ்வளவுதான்! நாட்டில் பிரளயமே ஏற்பட்டு
விட்டது. சுயநிதிக் கல்லூரி முதலைகள் வெறியாட்டம்
ஆடின. இந்தத் தேர்வை எதிர்த்து ஏற்கனவே
நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் நீதிமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இவற்றுள் ஆகப்
பெரும்பான்மை மனுக்கள் சுயநிதி முதலைகள்
தாக்கல் செய்தவை ஆகும்.

ஒரு MBBS சீட்டுக்கு குறைந்தது ஒரு கோடி ரூபாய்
வாங்கி ருசி கண்ட சுயநிதி முதலைகள், குலாம் நபி
ஆசாத்தும் மன்மோகன் சிங்கும் சேர்ந்து தாங்கள்
அடிக்கும் கொள்ளைக்கு முற்றுப் புள்ளி
வைப்பதை அனுமதிப்பார்களா?

ஆக, சுயநிதி முதலைகளுக்குச் சாதகமாகவே
உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு
வழங்கியவர் அன்றைய தலைமை நீதிபதி
அல்டாமஸ் கபீர். அதாவது இவர்  தலைமையிலான
மூவர் கொண்ட அமர்வு. தீர்ப்பு வழங்கப்பட்ட தேதி
ஜூலை 18, 2013.

மே 5இல் முதன் முதலாக NEET தேர்வு.
ஜூலை 18இல் NEET செல்லாது என்று  தீர்ப்பு.
73 நாட்களுக்குள் NEET தேர்வின் வாழ்வு முடிவுக்கு
வந்தது.

தீர்ப்பு வந்த தேதியான ஜூலை 18 இந்திய நீதித்
துறையில் ஒரு முக்கியமான நாள். அன்றுதான்
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்டாமஸ்
கபீர் பணிநிறைவு (retirement) பெறுகிறார். ஒருநாள்
தள்ளிப் போனால், அவரால் இந்தத் தீர்ப்பை--
சுயநிதி முதலைகளுக்குச் சாதகமான தீர்ப்பை
வழங்கி இருக்க முடியாது.

தீர்ப்பு வழங்குகிற அவசரத்தில், தமது அமர்வில்
உள்ள மூன்றாவது நீதிபதியான அனில் தவே
அவர்களைக்கூடக் கலந்து ஆலோசிக்காமல்
நீதியரசர் அல்டாமஸ் கபீர் தீர்ப்பை வழங்கினார்.

அவசர கோலத்தில் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு
சுயநிதி முதலைகள் தங்கு தடையின்றி தங்கள்
கொள்ளையைத் தொடர்வதற்கு வழி செய்தது.

இந்தத் தவறான தீர்ப்பை இதே உச்சநீதி மன்றம்
அண்மையில் இதே மாதம் ஏப்ரல் 11, 2016 அன்று
திருத்தி எழுதியது. ஆக ஜூலை 18, 2013இல்
வெளியான தவறான தீர்ப்பைத் திருத்த
மூன்று ஆண்டுகள் அவகாசம் எடுத்துக் கொண்டது
உச்சநீதிமன்றம்.

சுயநிதிக் கொள்ளையர்களின் மண்டையில் ஓங்கி
அடிக்கும் இந்த பொது நுழைவுத் தேர்வு குலாம் நபி
ஆசாத் அவர்களின் மூளையில் உதித்த திட்டம்
ஆகும்.  ஆசாத்-மன்மோகன்-சோனியா ஆகிய
இம்மூவரும் இந்துத்துவவாதிகள் அல்ல. இவர்கள்
சமூகநீதிக்கு எதிரானவர்களும் அல்ல. குலாம் நபி
ஆசாத் சமூகநீதிக்கு எதிராகவே பொது நுழைவுத்
தேர்வைக் கொண்டு வந்தார் என்று புத்தி
பேதலித்தவன் கூடச் சொல்ல மாட்டான்.

மேலும், இக்காலக் கட்டத்தில் காங்கிரசின்
அமைச்சரவையில் திமுக இடம் பெற்று இருந்தது.
மு.க.அழகிரி உட்படப் பலர் மன்மோகன்
அமைச்சரவையில் பங்கேற்று இருந்தார்கள்.

எனவே, பொது நுழைவுத் தேர்வு என்பது சமூகநீதிக்கு
எதிரானது என்பது சிந்தனைக் குள்ளர்களின் வாதமே
தவிர, உண்மை அல்ல.

உண்மையில், சுயநிதி முதலைகளிடம் இருந்து
ஏழை மாணவர்களைக் காக்க வல்லது பொது
நுழைவுத் தேர்வே.
***************************************************************







     
தனியார் மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் நிரப்பப்
படுவதில்லை; விற்கப் படுகின்றன. ஒரு கோடி
ரூபாய் கொடுத்து ப்ளஸ் டூவில் வெறும் 50 சதம்
மதிப்பெண்கள் எடுத்த பையனுக்கு MBBS இடம்
கிடைக்கிறது. தற்போதைய தீர்ப்பின் மூலம்
இந்தப் பையன் NEET தேர்வை எழுத வேண்டும்.
எழுதித் தேறினால்தான் இடம் கிடைக்கும்.
அவனால் ஒருநாளும் இந்தத் தேர்வை எழுதித்
தேற முடியாது.
**
இதன் விளைவாக தனியார் மருத்துவக் கல்லூரி
நிர்வாகம் கோடி கோடியாகக் கொள்ளை அடிக்க
முடியாது. எனவே தனியார் மருத்துவக் கல்விக்
கொள்ளையர்கள் இதை எதிர்க்கிறார்கள். உச்ச நீதி
மன்றத்தின் தீர்ப்பு சுயநிதிக் கொள்ளையர்களின்
கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதே. இதை
எப்படி வரவேற்காமல் இருக்க இயலும்?


பல்லாயிரம் ஆண்டு காலமாக நின்று நிலைத்து
நீடித்துக் கொண்டிருக்கும் சாதியை ஒழிக்கிற
அல்லது பலவீனப் படுத்துகிற பெரும் பொறுப்பை
திரு மு க ஸ்டாலின் அவர்களின் தோள்களில்
சுமத்துவது எப்படிச் சரியாகும்?

வியாழன், 28 ஏப்ரல், 2016

இந்த நுழைவுத் தேர்வு இல்லாவிட்டால், மருத்துவக்
கல்வி நூறு சதமும் வணிகமாகி விடும். ஒரு கோடி ரூபாய்
கேப்பிடேஷன் கட்டணம் செலுத்தி, மருத்துவக் கல்லூரியில்
தனது மக்குப் பிள்ளைகளைச் சேர்த்த பல தகப்பன்களை
நான் நேரடியாக அறிவேன். தனியார்  முதலாளிகளிடம்
கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு, பணிஓய்வு
பெறுகிற நாளில் காரியத்தை முடித்துக் கொடுத்த
சான்றோர்களை இந்த நாடு அறியும்.
**
நுழைவுத் தேர்வு எழுதுகிற மாணவ மாணவிகளின்
கருத்தைக் கேளுங்கள். துறைசார்ந்த விஷயங்களில்
நல்ல பரிச்சயம் உள்ளவர்களின் கருத்தைக் கேளுங்கள்.
பொத்தாம் பொதுவாக மாநில உரிமை என்று பேசுவதில்
பயனில்லை.


கட்டுரை மிகத் தெளிவாக, தேங்காயை உடைத்தது
போல விஷயத்தைக் கூறுகிறது. அதை அருள்கூர்ந்து
நன்கு படிக்குமாறு வேண்டுகிறேன்.


அறிவியல் சார்ந்த ஒரு விஷயத்தை அறிவியல் சாராமல்
பார்ப்பதால் பல தோற்றப் பிழைகள் ஏற்படுவது
இயற்கையே. தமிழ்நாடு எக்ஸ்பிரசில் டெல்லிக்குப்
போக வேண்டும். இருக்கை, படுக்கை வசதிகளை
முன்பதிவு செய்து கொள்கிறோம். அந்த முன்பதிவு
வெளிப்படையாக, நேர்மையாக, ஊழல் இல்லாமல்
இருக்க வேண்டும். இது ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பு.
**
அது போலவே, மருத்துவக் கல்லூரி இடங்களை
நிரப்பும்போது, ஊழல் இல்லாமல் வெளிப்படைத்
தன்மையுடன், நேர்மையாக நிரப்ப வேண்டும்.
அதற்குத்தான் இந்த நுழைவுத் தேர்வு.
**
அறிவியலும் கணிதமும் பிரபஞ்சத் தன்மை
உடையவை (universal). அவை மாநிலத்துக்கு
மாநிலம் மாறுபடுவதில்லை. எனவே மாநில
உரிமை பறிப்பு என்ற கற்பனைக்கு இடமில்லை.
நியூட்டனின் இயக்க விதிகள் (laws of motion)
மாநிலத்துக்கு மாநிலம் மாறுவதில்லை.


நான் கடந்த கால் நூற்றாண்டு காலத்துக்கும்
மேலாக CBSE, TN state board அமைப்புகளின் 10,11,12
வகுப்புகளுக்கான அறிவியல், கணிதம்
பாடங்களுடன் நெருங்கிய பரிச்சயம் உடையவன்.
மருத்துவக் கல்லூரி சேர்க்கை, பொறியியல் சேர்க்கை ஆகியவற்றை கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும்
மேலாக தொடர்ந்து கவனித்து வருபவன். பல்வேறு
போட்டித் தேர்வுகள் குறித்து தகவல் திரட்டி,
அவற்றின் குறை நிறைகளை அறிந்தவன்.
**
எனக்குத் தெரியாத விஷயத்தில் நான் கருத்துச்
சொல்வதில். நுழைவுத் தேர்வை ரத்து செய்ததால்
நாம் அடைந்த  நன்மை பூஜ்யமே. ஏற்பட்ட
நஷ்டம் ஏராளம்.



பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்ற
உத்தரவு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு
வரப்பட்டது. அதை எதிர்த்து வழக்குத் தொடுத்தது
தனியார் சுயநிதிக் கல்லூரிக் கொள்ளையர்களே.
தங்களின் பிழைப்பில் மன்மோகன்சிங் மண்ணள்ளிப்
போட்டு விட்டாரே என்ற ஆத்திரத்தில், சுயநிதி
முதலைகள் என்னவெல்லாம் செய்தன, தமக்குச்
சாதகமான தீர்ப்பைப்பெற என்னவெல்லாம் செய்தன
என்பது மக்களுக்குத் தெரியாது.   
நுழைவுத் தேர்வு மூலமே
சமூகநீதியைக் காக்க முடியும்!
இதுதான் உண்மை!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார்
கல்லூரிகளில் உள்ள மருத்துவப் படிப்புகளுக்கு
நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை
நடைபெற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்
தீர்ப்பை கோட்பாட்டு அடிப்படையில் (in principle)
நியூட்டன் அறிவியல் மன்றம் வரவேற்கிறது.

என்றாலும் இத்தீர்ப்பை நடைமுறைப் படுத்தும்போது
இத்தீர்ப்பால் எழுந்துள்ள நடைமுறைச்
சிக்கல்களுக்குத்தீர்வு காண வேண்டும்.

உண்மையில் நுழைவுத் தேர்வு என்பது ஒரு
சோஷலிசக் கோட்பாடு. அது சமூக நீதியைப்
பாதுகாக்கும் ஒரு கோட்பாடு.

இந்திய சமூகமும் சரி, தமிழ்ச் சமூகமும் சரி
பல்வேறு மூட நம்பிக்கைகளின் பிடியில்
சிக்கி இருக்கின்றன.  நுழைவுத் தேர்வை ரத்து
செய்வது  சமூக நீதியைக் காக்கும் என்பது
அப்படிப்பட்ட ஒரு மூட நம்பிக்கையே.

கிராமப்புற மாணவர்களுக்குப் பாதிப்பு, SC,ST,BC
மாணவர்களுக்குப் பாதிப்பு என்பதெல்லாம்
உண்மையான கள நிலவரத்தை அறியாமல்
கிளிப்பிள்ளைத் தனமாகக் கூறப்படுபவை ஆகும்.

அதே நேரத்தில் இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து
மத்திய அரசு சில உறுதியான நடவடிக்கைகளை
எடுக்க வேண்டும். அப்போதுதான் இத்தீர்ப்பின்
பலனைப் பெற முடியும்.

1) அரசு தனியார் மருத்துவக் கல்லூரிகள்,
நிகர்நிலைப் பல்கலைகள்,சிறப்பு அந்தஸ்து
பெற்றுள்ள ஜிப்மர், எய்ம்ஸ் உள்ளிட்ட அனைத்து
மருத்துவ இடங்களும் இந்தப் பொது நுழைவுத்
தேர்வுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.

2) நுழைவுத் தேர்வு என்பது 3 மணி நேரம் கொண்ட
ஒரே ஒரு தேர்வாக இருக்க வேண்டும். தேர்வு
அறையில் நடைபெறும் தேர்வாக இருத்தல்
வேண்டும். ஆன்லைன் தேர்வு கூடாது. DESCRIPTIVE
type கூடாது. Objective typeஆக இருத்தல் வேண்டும்.

3) மாணவர்கள் எந்தப் பாடத்திட்டத்தில்
படித்தார்களோ, அந்தப் பாடத் திட்டத்தின்
அடிப்படையில் மட்டுமே கேள்வித்தாள் அமைய
வேண்டும்.

4) காலப்போக்கில், எல்லா மாநிலங்களிலும்
ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை
அறிவியல் பாடங்களில் CBSE பாடத்திட்டம்
கொண்டு வரப்பட வேண்டும். மொழிப்பாடங்கள்,
வரலாறு, பூகோளம் ஆகியவை அந்தந்த மாநிலத்தின்
தன்மைக்கு ஏற்ப, மாநில அரசு தீர்மானித்தபடி
இருக்கலாம். ஆனால் Maths, Physics,Chemistry, Biology
ஆகிய பிரதான பாடங்கள் (core subjects) CBSE பாடத்
திட்டத்தில் உள்ள பாடங்களாகவே இருக்க வேண்டும்.

5) வரலாறும் பூகோளமும் மாநிலத்துக்கு மாநிலம்
நாட்டுக்கு நாடு  மாறும். ஆனால் Maths, Physics மாறாது.
sin xஐ differentiate பண்ணினால் ஜார்க்கண்டிலும்
cos x தான்; சத்திரப்பட்டியிலும் cos x தான்.

6) பொது நுழைவுத் தேர்வால் அந்தந்த மாநிலத்தில்
உள்ள இடஒதுக்கீட்டின் அளவுக்குத் துளியும் பாதிப்பு
இல்லாமல் பாதுகாக்க வேண்டும்.

7) மேற்கூறிய அனைத்தும் நடைமுறை சாத்தியம்
உடையவைதான்.

********************************************************************
இந்திய அரசின் ரயில்களை நம்பிப் பயணம் செய்கிறோம்;
விமானங்களை நம்பிப் பயணம் செய்கிறோம். இந்திய
அரசின் அஞ்சல் துறையை நம்பித்தான் ஆவணங்களை
அஞ்சலில் அனுப்புகிறோம்; தொலைபேசியில் பேசுகிறோம்.
அது போலத்தான் இதுவும்.
**
இங்கு பேசப்படும் விஷயம் கல்வித்துறை சார்ந்தது.
துறை சார்ந்த அறிவை, புலமையைக் கோருகிறது.
மாணவர்களின் கஷ்ட நஷ்டங்களைப் பற்றிய புரிதலுடனும்
பெற்றோர்களின் அலைக்கழிப்பு துயரங்களைப்
பற்றிய புரிதலுடனும் இந்த விஷயத்தைப்
பார்க்க வேண்டும்.
**
நியூட்டன் அறிவியல் மன்றம் இக்கட்டுரையில்
கூறியவை அனைத்தும் வெறும் கருத்துகள் அல்ல.
இவை அனைத்தும் தேற்றங்கள் (theorems) ஆகும்.
ஏனெனில் கூறியவை அனைத்தும் நிரூபிக்கப் பட்டவை.
In maths, statements with proof are called theorems.


மாணவர்கள் தங்கள் விருப்பத்தை (விரும்பும் கல்லூரியை)
தெரிவிக்க வேண்டும். அதன்படி counsellingஇல் இடம்
ஒதுக்கப்படும்.

மாநில அளவில் நடைபெற்றுக் கொண்டிருந்த நுழைவுத்
தேர்வை (TNPCEE) 2007இல் கலைஞர் ரத்து செய்தார்.
இன்று வரை எந்தக் கட்சியாவது நுழைவுத் தேர்வை
மீண்டும் கொண்டு வருவோம் என்று சொல்லி
இருக்கிறதா?  எந்தக் கட்சியின் தேர்தல்
அறிக்கையிலாவது இப்படி உள்ளதா? எனவே மாநில
அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப் படுவதற்கு
தமிழ்நாட்டில் வாய்ப்பே இல்லை. மத்திய அரசு
தலியிட்டால்தான் முடியும். 
பொது நுழைவுத் தேர்வு!
----------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கு பொது
நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று
உச்சநீதி மன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.

அரசுக் கல்லூரிகளை மட்டுமல்ல தனியார்
கல்லூரிகளையும் இத்தீர்ப்பு கட்டுப் படுத்தும்.

இதற்கு இரண்டு கட்டமாகத் தேர்வு நடக்குமாம்.
நுழைவுத் தேர்வை ஏன் இரண்டு கட்டமாக
நடத்த வேண்டும்?

ஏற்கனவே AIPMT 2016க்கு விண்ணப்பித்த மாணவர்கள்
வரும் மே 1 அன்று தேர்வு எழுதுவார்கள். இத்தேர்வை
எழுதியவர்கள் ஏன் மீண்டும்  ஜூலை 24இல்
இன்னொரு தேர்வை எழுத வேண்டும்?

தேர்வுக்கான பாடத்திட்டம் என்ன? AIPMTக்கான
அதே பாடத்திட்டம் என்றால் அது 11, 12 வகுப்புகளுக்கான
CBSE பாடத்திட்டம் அல்லவா?

எங்கெங்குக் காணினும் குழப்பமடா என்பதாக
அல்லவா நிலைமை  இருக்கிறது? MCI, CBSE ஆகிய
இரு அமைப்புகளும் ஒரு தெளிவை உடனடியாக
ஏற்படுத்த வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------
முதல் பத்தி ஏற்கத் தக்கதாக உள்ளது. அது திரு ஜெகதீசன்
எழுதியது. இரண்டாம் பத்தி திரு மனுஷ்ய புத்திரன்
(அப்துல் ஹமீது) அவர்கள் எழுதியது. அது முட்டாள்
தனமாக உள்ளது. தகுதி-திறமை என்பதையும்
சமூகநீதி என்பதையும் எதிர் எதிர் துருவங்களாக
நிறுத்துகிறார். இது முழுத் தவறு.
**
சமூகநீதிக் கொள்கை முட்டாள்களுக்கு வக்காலத்து
வாங்கும் கொள்கை அல்ல. சமூகநீதிக்  கொள்கையின்
செயலாக்கத்தால் மருத்துவப் படிப்பில் இடம்
கிடைக்கப் பெற்றவர்கள் முட்டாள்கள் அல்ல.
**
வள்ளுவர் காலத்தில் இருந்தே அரங்கின்றி வட்டாடும்
கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. நீதிமன்றத்
தீர்ப்பையோ அதன் வரலாற்றையோ
பின்விளைவுகளையோ எவ்வளவு தூரம் கவிஞர் புரிந்து
கொண்டிருப்பார் என்பது கேள்விக்குறியே.
மருத்துவப் படிப்பு: பொது நுழைவுத் தேர்வு!
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------
LATEST NEWS !

இன்று காலை (28.04.2016 வியாழன்) உச்சநீதிமன்றத்தில்,
NEET தேர்வை இரண்டு கட்டமாக நடத்துவதாக
CBSE மற்றும் மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப் பட்டது.
மேலும் AIPMT தேர்வை ரத்து செய்வதாகவும்
நீதிமன்றத்தில் CBSEயும் மத்திய அரசும்
தெரிவித்தன.

AIPMT தேர்வு ரத்து செய்யப் படுவதாக அறிவிக்கப்
பட்டுள்ளதால், AIPMT குறித்த எமது முந்தைய இரு
பதிவுகளும்   நீக்கப்பட்டு விட்டன. மாணவர்கள்
குழம்பாமல் இருக்கவே இந்த நீக்கம்.

தீர்ப்பு குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்கப்
பெற்றவுடன் இது குறித்த கட்டுரை வெளிவரும்.
**************************************************************
மாறுபட்ட வாதமே ஐநூறு
வாயில் நீள ஓதுவாய்!
-----------------------------------------------
ரேகையில் கனிகொள் என்பதன் மூலம் பாரதியார் என்ன சொன்னார் என்பதை உணர மற்போர் தேவையில்லை.
"பாடுபட்டுப் பலன் பெறு" என்று சொல்கிறார், அவ்வளவுதான்.
**
பாடுபட்டால் பலன் கிடைக்கும் என்று நம்பிக்கையை
ஊட்டுகிறார். என்னதான் பாடுபட்டாலும் தலையெழுத்து அல்லவா  தீர்மானிக்கும் என்ற அவநம்பிக்கை நிலவிய
காலம் அது. அதற்கு மாற்றாக உழைப்பு உயர்வு தரும்
என்று கூறுவதன் மூலம், அதிர்ஷ்டத்தின் மீதான
நம்பிக்கையைத் தகர்க்கிறார். சோதிடம் கோலோச்சிய
ஒரு காலத்தில், சோதிடத்துக்கு எதிரான கருத்துகளை
வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் விதைக்கிறார்.
**
பாரதியாரின் தத்துவம் வாழ்வேந்தல் தத்துவம் ஆகும்.
(Life affirmation philosophy). சோதிடமும் தலைவிதியும்
அதிர்ஷ்டமும் வாழ்வு மறுப்புத் தத்துவங்கள் ஆகும்.
(Life negation philosophy). அவற்றுக்கு எதிராக, வாழ்வின்
மீதான நம்பிக்கையை மழலைகளுக்கு ஊட்டுகிறார்.
**
கைத்தொழில் போற்று (21) மேழி போற்று (82), யவனர்
போல் முயற்சி கொள் (86) என்றெல்லாம் பிற இடங்களில்
உழைப்பின் மேன்மையை யாப்புறுத்துகிறார்.
**
எனவே ரேகையில் கனிகொள் என்பது பாடுபாட்டுப்
பலன் பெறு என்பதாகும். மற்றவை அனைத்தும்
மாறுபட்ட வாதமே ஆகும்.

எவ்வாற்றானும் ஏற்புடைத்தன்று தங்கள் கூற்று.
விரிவான விடை சற்றுப் பொறுத்து எழுதுகிறேன்.

புதன், 27 ஏப்ரல், 2016

அகில இந்திய மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு!
AIPMT  2016.
-------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------------
1) இந்தத் தேர்வின் பெயர் AIPMT.
(ALL INDIA PRE MEDICAL AND DENTAL TEST.

2) இத்தேர்வை நடத்துவது CBSE.

3) ஆண்டுதோறும் பொதுவாக மே மாதம்
முதலாவது  ஞாயிற்றுக் கிழமையில் இத்தேர்வு
நடைபெறும். இவ்வாண்டு மே 1, 2016 தேதியில்
நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டு இருந்தது.

4) ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அரசுக் கல்லூரிகளில்
அகில இந்திய ஒதுக்கீட்டில் வரும் 15 சதம்  இடங்களை
நிரப்புவது இத்தேர்வின் நோக்கம். கடந்த ஆண்டு (2015)
MBBS = 3179 இடங்கள் மற்றும் BDS = 250 இடங்கள். இந்த
ஆண்டிற்கான இடங்கள்  அறிவிக்கப்படும்.

5) வயது வரம்பு: 31.12.2015 அன்று குறைந்தது 17 வயது
ஆகியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது: 25 (OC);
SC, ST,OBC: 30 வயது.

6) 11, 12 வகுப்புகளின் பாடங்களில் இருந்து கேள்விகள்
கேட்கப்படும்.

7) இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்
ஆகிய 4 பாடங்களில், ஒவ்வொரு பாடத்தில் இருந்தும்
45 கேள்விகள் வீதம் மொத்தம் 180 கேள்விகளைக்
கொண்டது இந்தத் தேர்வு. தேர்வு நேரம் 3 மணி நேரம்.
மொத்த மதிப்பெண்கள் 45X 4= 180. கேள்வித்தாள்
OBJECTIVE TYPE வகையிலானது. தேர்வு மையத்திற்குச்
சென்றுதான் தேர்வு எழுத வேண்டும். ஆன்லைன் தேர்வு
கிடையாது.

8) Negative marking உண்டு. ஒவ்வொரு தவறான விடைக்கும்
ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். 
 
தேர்வு நடப்பது உறுதியாகி விட்டது என்பதால் மாணவர்கள்
தேர்வுக்குப் படிப்பதில் முழுமூச்சில் ஈடுபட வேண்டும்
என்று நியூட்டன் அறிவியல் மன்றம் மாணவர்களைக்
கேட்டுக் கொள்கிறது.
********************************************************************



மருத்துவ நுழைவுத் தேர்வு!
மாணவர்களுக்கு வேண்டுகோள்!
-------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
உச்சநீதி மன்றம் இந்த ஆண்டே மருத்துவ நுழைவுத்
தேர்வை நடத்த வேண்டும் என்று தீர்ப்புக் கூறி உள்ளது.
நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதால் இந்த ஆண்டு
நடத்த இயலாது என்று மத்திய அரசும் மருத்துவ
கவுன்சிலும் முன்வைத்த வாதத்தை மேதகு
நீதியரசர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

நாளை தேர்வுக்கான கால அட்டவணை இறுதி
செய்யப்பட்டு விடும்.

நுழைவுத் தேர்வு சரியா தவறா என்றெல்லாம்
விவாதித்துக் கொண்டிருக்க இப்போது நேரமில்லை.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இறுதியானதும்
கட்டுப்படுத்தக் கூடியதும் (final and binding) ஆகும்.

எனவே மாணவர்கள் அனைவரும் நுழைவுத் தேர்வுக்கு
உடனடியாகத் தயாரகும் விதத்தில் பாடங்களைப்
படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துமாறு
நியூட்டன் அறிவியல் மன்றம் கேட்டுக் கொள்கிறது.
********************************************************************* 
கடவுள் இருக்கிறாரா?
------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------
இக்கேள்விக்கு நீண்ட காலமாக ஆன்மிகம் பதில்
அளித்துக் கொண்டு இருந்தது. பின்னர் தத்துவம்
பதிலளிக்க ஆரம்பித்தது. தத்துவமும் இதற்குப்
பதிலளிக்கும் அருகதையை இழந்தபின், தற்போது
அறிவியல் இக்கேள்விக்குப் பதில் அளித்து வருகிறது.

கடவுள் இருக்கிறார் என்றால் அவர் எங்கே இருக்கிறார்
என்று சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
கடவுளின் நிலையிடம் (position) என்ன? மூன்று அச்சுகளை
உடைய  ஒரு அச்சு முறையில் (x,y,z அச்சுகள்)
கடவுளின் இடத்தைக்  குறிப்பிட வேண்டும்.
இது கார்ட்டீஷியன் குறிப்புச் சட்டகம் (Cartesian coordinate system) எனப்படும்.

ஆனால் நவீன அறிவியலானது கார்ட்டீஷியன்
முறை மூலம் ஒரு பொருளை முழுவதுமாக
வர்ணிக்க முடியாது என்று சொல்கிறது. எனவே
உந்தம் (momentum) என்பதையும் கணக்கில் கொள்ள
வேண்டும் என்கிறது அறிவியல்.

இதனால், மேலும் மூன்று அச்சுகளைக் கணக்கில்
கொள்ள வேண்டியதாகிறது. ஆக, position அச்சுகள் 3,
momentum அச்சுகள் 3 என்று மொத்தம் 6 அச்சுகளை
உடைய ஒரு புதிய சட்டகத்தில்  கடவுளை
நிறுத்த வேண்டி உள்ளது. இந்த ஆறு அச்சுச்சட்டகம் 
phase space எனப்படுகிறது. இது இயக்கத்தில் உள்ள,
அதாவது இயங்குகிற சட்டகம் (dynamical system)
ஆகும். x,y,z  அச்சுகளை மட்டும் கொண்ட
கார்ட்டீஷியன் சட்டகம் இயங்காத சட்டகம்
(static system) ஆகும்.

என்றாலும், இயற்கையில் பொருட்களுக்கு மேலும்
சுதந்திர நிலைகள் (degrees of freedom) உண்டு என்று
அறிவியல் கருதுகிறது. phase space என்பது position,
velocity  ஆகிய இரண்டு சுதந்திர நிலைகளை
மட்டுமே குறிப்பிடுவதால், இந்த அச்சு முறையை
வைத்துக் கொண்டு ஒரு பொருளை முழுவதுமாக
விவரிக்க முடியாது என்று அறிவியல் கருதுகிறது.

சாத்தியமான அனைத்து சுதந்திர நிலைகளையும்
( n degrees of freedom) உள்ளடக்கிய,  இயற்கையை
முழுவதுமாக விவரிக்கக் கூடிய ஒரு அச்சு முறையை
(coordinate system)  உருவாக்க வேண்டியதன் தேவையை
அறிவியல் உணர்ந்துள்ளது.

நமது பிரபஞ்சம் முப்பரிமாணம் உடையது என்ற
பத்தாம் பசலித் தனமான கருத்தெல்லாம் இன்று
பஞ்சு பஞ்சாய்ப் பறந்து விட்டது. சார்பியல்
கோட்பாட்டில் காலம் என்பதும் ஒரு பரிமாணம்
என்றும் இடமும் காலமும் பிரிக்க முடியாமல்
ஒன்றிணைந்து இருப்பதாகவும் ஐன்ஸ்டீன்
கூறினார்.

அதன் பின்னர் வந்த இழைக் கொள்கை (sting theory)
இப்பிரபஞ்சம் மேலும் பல பரிமாணங்களைக்
கொண்டது என்று கூறியது. இறுதியாக M Theoryயில்
பதினோரு பரிமாணங்கள் சுட்டப் படுகிறது. 

எனவே n degrees of freedom உடைய ஒரு குறிப்புச்
சட்டகத்தில் (frame of reference) கடவுளைக் கொண்டு
வந்து நிறுத்த வேண்டும். இது ஒருநாளும்
சாத்தியப் படாத ஒன்று. ஏனெனில், இதுவரை
மிகச் சாதாரணமான, பள்ளி மாணவன் கூட
நன்கறிந்த கார்த்டீஷியன் சட்டகத்தில்
ஏதேனும் ஒரு அச்சில் கூட, கடவுளைக் கொண்டு
வந்து நிறுத்த முடியவில்லை. ஏனெனில் கடவுள்
இல்லை. இருந்தால்தானே கொண்டு வந்து
நிறுத்த முடியும்!
*******************************************************************     


   
கனிகொள் என்பது பலனைப் பெறு என்று பொருள் தரும்.
பாடுபடு, பாடுபட்டு அதன் பலனைப் பெறு என்பது
மட்டுமே பாரதி கூறியது.  

அடையாள அரசியல் மிகவும்
வெளிப்படையாகக் கொடிகட்டிப் பறக்கும் ஒரு
சமூகத்தில், சாதி மதம் போன்ற அடையாளங்கள்
ஒரு வேட்பாளரின் வெற்றி தோல்வியை  நிர்ணயிப்பதில்
குறிப்பிடத் தக்க பங்கு வகிக்கின்றன. என்றாலும்,
ஒரு கட்சியின் அல்லது ஒரு வேட்பாளரின் வெற்றி என்பது
சாதி என்னும் ஒற்றைக் காரணியை மட்டும்
சார்ந்தது அல்ல. பல்வேறு காரணிகளின் கூட்டின்
விளைவாகவே ஒரு வேட்பாளர் வெற்றி பெற இயலும்.

சாதி என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றுபடுத்தும்
காரணியாக (unifying factor) இருப்பதால், கட்சிகளால்
அது தேவையான அளவுக்குப் பயன்படுத்தப்
படுகிறது. மேலும் ஒரு சாதிய சமூகத்தில்,
சாதியைப் பொருட்படுத்தாமல் எவரும் செயல்பட்டு
விட முடியாது. அவ்வாறு கூறுவது, பூனை கண்ணை
மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டு விடும்
என்பது போன்ற கற்பனை ஆகும்.

என்னதான் எதிர்த்தாலும் அல்லது புறக்கணித்தாலும்
சாதியானது தன்னுடைய பாத்திரத்தை வகித்தே தீரும்.
சாதி எதிர்ப்பாளர்களால் அதிகபட்சம் என்ன செய்யக்
கூடும் என்றால், தனது வரம்பை மீறி சாதியானது
முக்கியத்துவம் பெற்று விடாமல் பார்த்துக் கொள்ள
முடியும். அவ்வளவே.  
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்!
-----------------------------------------------------------------------
ரேகையில் கனிகொள் என்பதன் மூலம் பாரதியார் 
கடல் வழி வணிகத்தை, ஆழ்கடல் மீன்பிடித்தலை,
கனிமவளம் பெருக்குதலைக் குறிப்பிடுகிறார் 
என்று திரு வீர இராச வில்லவன்கோதை அவர்கள் 
வலிந்து பொருள் கொள்கிறார். இது ஏற்புடைத்தன்று.
**
பாரதியாரின் "புதிய ஆத்திசூடி"யை  பாரதியார் 
வாழ்ந்த காலத்திலேயே பரலி சு நெல்லையப்பர் 
அவர்கள் 1917இல் பாப்பாப் பாட்டு என்ற நூலாக 
வெளியிட்டார். ஆத்திசூடி என்றாலே அது 
குழந்தைகளுக்கானது என்பது  சொல்லாமலே 
விளங்கும். குழந்தைகளுக்காக எழுதப்பட்ட ஒரு 
நூலில் எளிதில் பொருள் விளங்கும் வண்ணமே 
எவரும் எழுதுவர். நுண்மாண்  நுழைபுலம் மிக்கோர் 
மட்டுமே பொருள் உரைக்க இயலும் எனும் விதத்தில் 
எவரும் குழந்தைகளுக்கு எழுதுவது இல்லை. 
சுருங்கக் கூறின் ஆத்திசூடிக்கு உரையாசிரியர்கள் 
தேவையில்லை.
**
இவ்விடத்தில் குயில்பாட்டைக் கருதவும். ஆழ்ந்த 
தத்துவப் பொருள் அடங்கிய குயில்பாட்டின் 
நடை, ஆத்திசூடியின் நடை ஆகிய இவ்விரண்டையும் 
ஒப்பு நோக்குவார் ஆத்திசூடி எளிமையானது 
என்பதை உணர இயலும்.
**
இந்தியா வழியாக பூமத்திய ரேகை செல்லவில்லை 
என்பதும், அது கடல் வழியே செல்கிறது என்பதும் 
அனைவரும் அறிந்ததே. ரேகை என்பது கடலைக் 
குறிக்கும் என்றும் அதன் வாயிலாக கடல்வழி 
வணிகத்தை மேற்கொள்ள அறிவுறுத்துகிறார் 
பாரதியார் என்பதும் சுற்றி வளைத்து மூக்கைத் 
தொடுதல் ஆகும். இது ஏற்புடைத்தன்று.
**
ரேகை என்பது கையைக் குறிக்கும். ரேகையில் 
கனிகொள் என்பது கைகால்கள் மூலம் 
பாடுபட்டுச் சாப்பிடுவதைக் குறிக்கும். சுருங்கக் 
கூறின் உழைப்பைக் குறிக்கும். ரேகை என்பதில் 
உழைப்பு தொக்கி நிற்கவில்லை. விரிந்து 
நிற்கிறது. அதாவது வெளிப்படையாக நிற்கிறது.
**
நெல்லை மாவட்டத்தில் ரேகை சரியில்லை என்பது 
உழைப்பு சரியில்லை என்ற பொருளில் ஆளப்பட்டதை 
நான் நேரடியாக அறிவேன். நெல்லை மாவட்டத்தைச் 
சேர்ந்தவன் என்பதாலும் பாரதியார் படித்த அதே 
இந்துக்கல்லூரியில் படித்தவன் என்பதாலும் 
பாரதி அன்பர்கள் மற்றும் பாரதி ஆய்வாளர்கள் 
பலருடன் பழகிய வாய்ப்புப் பெற்றவன் என்பதாலும்
என்னால் அறுதியிட்டுக் கூற இயலும்.
**
எனவே, ரேகையில் கனிகொள் என்பதன் பொருள் 
"பாடுபட்டு உண்" என்பதாகும். ஏய்த்துப் 
பிழைக்காதே, பிச்சை எடுத்து உண்ணாதே,
சோம்பித் திரியாதே என்பதாகும்.
**
இன்றும்கூட, எவனேனும் ஓர் இளைஞன் பிச்சை 
கேட்டால், கை கால் நல்லாத்தானே இருக்குது,
உழைத்துச் சாப்பிட வேண்டியதுதானே  என்று
கண்டிக்கிறோம் அல்லவா, இதைத்தான் பாரதியார் 
குறிப்பிடுகிறார்.
**
எனவே, ரேகையில் கனிகொள் என்ற பாரதி 
கூற்றின் பொருள் "பாடுபட்டு  உண்" என்பதாகும்.
இவ்வுரை மட்டுமே மெய்யுரை என்க.
---------------------------------------------------------------------------------                 
அது உத்தரவா, பரிந்துரையா? பொதுவாக, தங்களின்
தீர்ப்புகளில் நீதியரசர்கள் பல்வேறு கருத்துக்களைச்
சொல்வார்கள். இவை observations எனப்படும். நீதியரசர்களின்
இந்த observations கட்டுப்படுத்தும் தன்மை உடையவை அல்ல
(not binding). கருத்துக் கூறுவது வேறு. உத்தரவு
பிறப்பிப்பது வேறு.
**
பத்திரிகைச் செய்திகளின்படி,
மதுரை நீதிபதி அவர்கள் அரசுக்கு உத்தரவு
பிறப்பித்து உள்ளார் என்று தெரிய வருகிறது.
இது அத்துமீறல் ஆகும். இப்படி உத்தரவு
பிறப்பிக்க நீதிபதிக்கு உரிமை இல்லை.
திருக்குறளுக்கு மட்டுமல்ல, பகவத் கீதைக்கும்
இது பொருந்தும்.

இந்த ஒற்றை நிகழ்வை வைத்துக் கொண்டு
உருவானது அல்ல நீதிபதிகள் பற்றிய கருத்து.
பல ஆண்டுகளுக்கு முன்பே,  இந்திய நீதித்துறை
ஆற்றல் குறைந்த IQ குறைந்த (substandard talents)
நபர்களால் ஆனது என்பது புலப்பட்டது. பல
ஆண்டுகளாகவே இக்கருத்தைச் சொல்லி வருகிறேன்.
**
கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பானது என்ற
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எடுத்துக் கொள்வோம்.
இவ்வாறு தீர்ப்புச் சொல்ல இந்த நீதிபதிகளுக்கு
என்ன அருகதை உள்ளது? உச்சநீதிமன்ற நீதிபதி
என்றால் அறிவியல் மேதை ஆகி விடுவாரா?
அணு உலை பாதுகாப்பற்றது என்று தீர்ப்பு
வழங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
அதைச் சொல்லுவதற்கும் அவர்களுக்கு அருகதை
கிடையாது.
**
சமூகத்தின் அறிவியலில் இருந்து முற்றிலுமாகத்
தங்களைத் துண்டித்துக் கொண்டு நிற்கும்
நீதியரசர்களைக் கொண்ட நீதித்துறை மாற்றி
அமைக்கப்பட வேண்டும்.      

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

தீர்ப்புகளில் அத்துமீறும் நீதிபதிகள்!
-------------------------------------------------------------------
மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் நீதிபதி
திரு மகாதேவன் அண்மையில் ஒரு வழக்கில்
தீர்ப்புக் கூறியபோது, திருக்குறளை பள்ளிகளில்
கண்டிப்பாகக் கற்பிக்க வேண்டும் என்று
உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வெறும் மனப்பாடப் பகுதியாக மட்டுமின்றி,
ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை
 திருக்குறளை விளக்கத்துடன் கற்பிக்க வேண்டும்
என்று அவர் உத்தரவில் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் காலங்காலமாக  ஆறாம் வகுப்பில்
இருந்து மட்டுமல்ல, இன்னும் கீழ் வகுப்புகளில்
இருந்து திருக்குறள், விளக்கத்துடன் கற்பிக்கப்
பட்டு வருகிறது. வெறும் மனப்பாடப் பகுதியாக
மட்டுமல்ல. நீதிபதி இதை அறியாமல் இருக்கக் கூடும்.

நீதிபதி அவர்கள் திருப்தி அடையும் அளவுக்கு,
திருக்குறள் பாடப்பகுதியில் இல்லை என்றே
வைத்துக் கொள்வோம். அப்போதும்கூட,
பாடப் பகுதியில் எதைஎல்லாம்  வைக்க வேண்டும்
என்று அரசுக்கு உத்தரவு பிறப்பிப்பது நீதிபதியின்
வேலை அல்ல. இந்த உத்தரவு மேதகு நீதிபதியின்
அத்துமீறல் ஆகும்.

பாடத்திட்டங்களை உருவாக்குவது கல்வியாளர்களின்
கடமை. அதற்கென நியமிக்கப்பட்ட வல்லுனர்களைக்
கொண்டு குறிப்பிட்ட கால இடைவெளியில்,
பாடத்திட்டம் (சிலபஸ்) உருவாக்கப் படுகிறது.
இதில் அதைச் சேர், இதைச் சேர்க்காதே என்று
உத்தரவு போடுவது நிச்சயம் அத்துமீறல் ஆகும்.

இந்திய நீதித்துறையின் சாபக்கேடு என்னவெனில்,
சமூகத்தின் தரக்குறைவான ஆற்றல்களே
(substandard talents) நீதித்துறைக்கு வந்து சேர்கின்றன.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும், அறிவுக்கூர்மை
மிக்க மாணவர்கள், IQ அதிகமான மாணவர்கள்
பொறியியல் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்து
விடுகிறார்கள். அடிப்படை அறிவியலில் ஆர்வமுள்ள
மாணவர்கள் B.Sc படிப்பில் சேர்ந்து விடுகிறார்கள்.

கணக்கு வராது, சயன்ஸ் வராது, என்னால் Labஇல்
நிற்க முடியாது, மலைமலையாக ரெகார்டு நோட்டு
எழுத முடியாது என்ற நிலையில் உள்ள IQ குறைந்த
மாணவர்களே சட்டம் பயில்கிறார்கள். நீதிபதியாக
வருகிறார்கள். இதுதான் உண்மை.

எனவே இவ்வாறு நீதித்துறைக்கு வரும் IQ குறைந்த
நீதிபதிகள், மாணவர்களின் கல்வியில், பாடத்
திட்டத்தில் அத்துமீறித் தலையிடுவது மூடத்தனம்
மட்டுமல்ல வன்மையான கண்டனத்துக்கு
உரியதும் ஆகும்.

இதைப் படித்ததும் எந்த நீதிபதிக்காவது ரோஷம்
பொத்துக் கொண்டு வந்தால், அவர் இந்தக்
கட்டுரையின் ஆசிரியரோடு IQ TESTக்கு வரலாம்.
-------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: திருக்குறள் நீதிபதிகளின் தயவில்
உயிர் வாழவில்லை.
*************************************************************           
தேர்தல் ஆணையத்தின் மூடத்தனமும்
மக்கள் விரோதக் கட்டுப்பாடுகளும்!
---------------------------------------------------------------------
1) இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் கூட்டமும்
பரப்புரையும் கூடாது என்பது சரியல்ல.
மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நகர்ப்புறங்களில்
மட்டும் இதைச் செயல்படுத்தலாம். சகட்டுமேனிக்கு
கிராமப்ப்புறங்களிலும் இதைச் செயல்படுத்துவது
மூடத்தனம். கிராமங்களில் ஊர்த் திருவிழாவின்
கலை நிகழ்ச்சிகள், கதா காலட்சேபங்கள்,
இராமாயண உபந்நியாசங்கள் இவையெல்லாம்
இரவு நேரங்களில் நிகழ்வதுதான் நமது பண்பாடு.

2) சுவர் எழுத்துக்களைத் தடை செய்ததால் தங்கள்
தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரைக்கூட
மக்கள் அறிந்து கொள்ள முடியவில்லை.

3) ஆரத்தி எடுத்தால் தட்டில் காசு போடுவது
இந்த மண்ணின் பண்பாடாக உள்ளது.
வாக்காளர்கள் அத்தனை பேரும் வேட்பாளருக்கு
ஆரத்தி எடுக்கப் போவதில்லை. இதை தடுப்பது
படுமூடத்தனம்.

4) தேர்தல் ஆணையத்தின் அர்த்தமற்ற கட்டுப்பாடுகளால்
தங்கள் கொள்கையைச் சொல்லி வாக்குக் கேட்க
முடியாது என்ற நிலைக்கு அரசியல் கட்சிகள்
தள்ளப் படுகின்றன. எனவே வாக்காளர்களுக்கு
பணம் கொடுத்து வாக்குக் கேட்பது என்ற
பாதையைத் தேர்ந்து எடுக்கின்றன.

5) அரசியல் கட்சிகளின் இந்த சீரழிவுக்குத் தேர்தல்
ஆணையத்தின் மூடத்தனமான கட்டுப்பாடுகளும்
ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
********************************************************************
         

திங்கள், 25 ஏப்ரல், 2016

தருமபுரி, தளி தொகுதியில் மநகூ சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் ராமச்சந்திரன். வரகானப்பள்ளி மலைக் கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இன்றைக்குத் தமிழகத்தின் செல்வந்த சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர். நம்முடைய அரசியல், அதிகார, ஊடக மையங்களின் பார்வையிலிருந்து வெகுவாக விலகியிருக்கும் தமிழக-கர்நாடக எல்லையோரப் பகுதி இவருடைய தொகுதி. மலையோரக் கிராமங்கள் சூழ்ந்த தளி தொகுதியில் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கிக்கொண்டிருப்பவர் ராமச்சந்திரன்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதியில் ராமச்சந்திரனைப் பகைத்துக்கொண்டு எவரும் அரசியல் நடத்த முடியாது என்கிறார்கள். அவர் நினைப்பவரே ஊராட்சித் தலைவர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஒன்றியத் தலைவர்கள், மாவட்டக் குழுப் பிரதிநிதிகள்; அவரை மீறி ஜெயிக்க முடியாது; ஜெயித்தால் செயல்பட முடியாது என்கிறார்கள். சுரங்கத் தொழிலில் திளைக்கும் ராமச்சந்திரனின் அத்துமீறல்களை எழுத எவரும் உள்ளே நுழைய முடியாது; அப்படி நுழைந்தால் ஊர் திரும்ப முடியாது என்கிறார்கள். கட்சியையும் சரி, மக்களையும் சரி; பணத்தையும் பயத்தையும் வைத்து அடித்துவிடலாம் என்று நம்புபவர் என்கிறார்கள்.
ராமச்சந்திரனின் மிக முக்கியமான பின்புலம் இந்தப் பகுதியில் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் வலுவான சக்திகளில் ஒன்றாக இருந்த லகுமையா. ராமச்சந்திரனின் மாமனார். மூன்றாண்டுகளுக்கு முன் பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் பழனி துப்பாக்கியால் சுடப்பட்டும் கழுத்து அறுக்கப்பட்டும் கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கிடந்தபோது தமிழகம் ராமச்சந்திரனைக் கவனிக்க ஆரம்பித்தது. அடுத்து, மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் பாஸ்கர் கடத்திக் கொல்லப்பட்டார்.
மூன்று கொலை வழக்குகள், 15-க்கும் மேற்பட்ட கொலை முயற்சி, அடிதடி, கிரானைட் குவாரி முறைகேடு வழக்குகள் என்று ராமச்சந்திரன் மீது அடுத்தடுத்து வழக்குகள் விரிந்தன. ராமச்சந்திரன், லகுமையா, அவரது அடிப்பொடிகள் என 17 பேர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தருமபுரி ஆட்சியர் கிரானைட் மோசடி தொடர்பாக ஆய்வு நடத்தியபோது, ரூ.100 கோடி மதிப்பிலான முறைகேடு குற்றச்சாட்டு ராமச்சந்திரன் மீது சுமத்தப்பட்டது. அவரது குவாரிகள், சொத்துகள், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் ரௌடிகள் பட்டியலில் ராமச்சந்திரன் பெயர் இடம்பெற்றது.
இந்த ராமச்சந்திரன் தன் வளர்ச்சிக்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் பயன்படுத்திக்கொண்ட கதை முக்கியமானது. முதலில் மார்க்ஸிஸ்ட் கட்சியில் இருந்தார். அப்போதே அடாவடிகள் தொடங்கிவிட்டன என்றாலும், இவ்வளவு மோசமாக அவர் மாறவில்லை. 2006 தேர்தலில் தளி தொகுதியை ராமச்சந்திரன் கேட்டிருந்தார். மாறாக, கூட்டணியில் அந்தத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த ராமச்சந்திரன் சுயேச்சையாக போட்டியிட்டார்.
அந்தத் தேர்தலில் தமிழகத்தில் வென்ற ஒரே சுயேச்சை வேட்பாளர் ராமச்சந்திரன். தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல்களிலும் தன் கைவரிசையைக் காட்டினார் ராமச்சந்திரன். மார்க்ஸிஸ்ட் கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் அவரை நீக்கியது. அதேசமயம், எந்தக் கட்சி வேட்பாளரை ராமச்சந்திரன் தோற்கடித்தாரோ அந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராமச்சந்திரனை சுவீகரித்துக்கொண்டது. தா. பாண்டியனின் அணுக்கத் தொண்டரானார் ராமச்சந்திரன்.
இந்த விசுவாசத்துக்கான பரிசாக 2011 தேர்தலில் ராமச்சந்திரனுக்கு மீண்டும் தளி தொகுதி கிடைத்தது. ராமச்சந்திரன் வென்றார். தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் வழக்கம்போல் ராமச்சந்திரனின் ஆளுகை தொடர்ந்தது. தொடர்ந்துவந்த காலத்தில் ராமச்சந்திரன் கடுமையாக அம்பலப்பட்டுவிட்ட சூழலில், இந்தத் தேர்தலில் நிச்சயம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அவரைத் தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக, எல்லா விமர்சனங்களையும் கடந்து அவருக்கு தொகுதியை அளித்திருக்கிறார்கள்.
இரு நபர்கள் ஒரு கேள்வி
வசந்திதேவியின் அரை நூற்றாண்டு பொது வாழ்க்கையில் அரசியல்ரீதியாக அவர் இணைந்து செயல்பட்ட பல ஆளுமைகள் கம்யூனிஸ்ட் இயக்கங்களைச் சார்ந்தவர்கள். கல்வி உரிமை, மனித உரிமைகள், ஒடுக்கப்பட்டோர் உரிமைகள் என்று வசந்திதேவி பேசிய மேடைகளில் பெரும் பாலானவை இடதுசாரி அமைப்புகளைச் சார்ந்தவை. வசந்தி தேவியைத் தேர்தலில் போட்டியிட சம்மதிக்க வைத்ததில் ஜி.ராமகிருஷ்ணனுக்கும் முத்தரசனுக்கும் பங்கு உண்டு என்றாலும், திருமாவளவனின் விசிக சார்பிலேயே அவர் போட்டியிடுகிறார். அடிப்படையில் செயல்பாட்டில் ஒரு இடதுசாரியான வசந்திதேவியை ஏன் கம்யூனிஸ்ட் இயக்கங் களால் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை? அடிப் படையில் இடதுசாரிக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணான ராமச்சந்திரனை எது கம்யூனிஸ்ட் இயக்கங்களால் வெளியே தள்ள முடியாமல் பிணைத்துவைத்திருக்கிறது?
இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகளின் பின்னடைவுக்கும் இந்தக் கேள்விக்கும் மிக முக்கியமான தொடர்பு இருப்பதாகத் தோன்றுகிறது!
-சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
2
Type in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். 
1.  நெறியாளர் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும்.2.  இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
3.  கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நெறியாளருக்கு முழு உரிமை உண்டு.
4.  தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
5.  இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
6.  தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
Click Here!

வைகோ விளக்கம் எத்தகையது?

சாதி மோதலைத் தவிர்ப்பதற்காக தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அளித்துள்ள விளக்கம் காட்டுவது...
மக்கள் மீதான அக்கறை
குழப்பமான மனநிலை
பரபரப்பு அரசியல்
அதிகம் வாசித்தவை

தேர்தலில் போட்டியிடவில்லை: வைகோ திடீர் அறிவிப்பு

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் சம்பளம் எவ்வளவு?: ஆர்பிஐ தகவல்

'விடிவி'யில் சிம்பு வந்தது முதல் இந்தி பட வாய்ப்பு கிடைத்தது வரை: தனுஷ் பகிர்ந்த தகவல்கள்

உடலமைப்பு மாற்றம்: பின்னணி பகிர்கிறார் ஆர்யா

வைகோ முடிவால் திருமாவளவன் அதிர்ச்சி: மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்

அஜித் ப்ளஸ்? மைனஸ்? - பட்டியலிடத் தயாரா?

ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல்

சாலையில் செல்லும் போது திடீரென்று தீப்பிடித்து எரிவதை தடுக்க கார்களில் ஏசி பயன்பாட்டை குறைக்க தீயணைப்புத் துறை அறிவுரை

இது 8-வது முறை: கும்பகோணம் அதிமுக வேட்பாளர் மாற்றம்