செவ்வாய், 19 ஏப்ரல், 2016

உலகம் போற்றும் முக்கோணக் கணக்கு!
சரியான விடை எழுதுவோர் ஆசீர்வதிக்கப் படுவர்!
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------------
ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்களும் ஒன்றுக்கொன்று 
சமமல்ல. ஒரு பக்கம் முழு எண்ணாக உள்ளது. இன்னொரு
பக்கம் அதைவிட ஒன்று பெரிது. மூன்றாவது பக்கம் அதைவிட
ஒன்று பெரிது. மிகச் சிறிய பக்கம் 1ஐ விடப்பெரிது.

கோணங்களைப் பொறுத்தமட்டில் மிகச்சிறிய கோணமானது
மிகப்பெரிய கோணத்தில் சரிபாதி. அப்படியானால்,
அந்த முக்கோணத்தின் பக்கங்களைக் காண்க.

இந்தக் கணக்கின் official English version:
---------------------------------------------------------
The sides of a triangle are three consecutive natural numbers greater than
1 and its largest angle is twice the smallest one.Determine the sides of
the triangle.

பலமுறை தேர்வுகளில் கேட்கப்பட்ட கணக்கு.
சரியான விடைக்குப் பரிசு உண்டு.
(Terms and conditions apply. நிபந்தனைகளுக்கு உட்பட்டது) 
விடைகள் மழையாய்ப் பொழியட்டும்.
********************************************************************
பக்கங்கள் என்ன என்பதுதான் கேட்கப் பட்டுள்ளது.
எனவே அருள் கூர்ந்து பக்கங்களைக் கூறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக