வியாழன், 8 அக்டோபர், 2015

யாரோ ஒரு எழுத்தாளர் எங்கோ ஓர் இடத்தில் விருதைத்
திருப்பிக் கொடுத்துள்ளார் என்பது போல அல்ல இந்த நிகழ்வுகள்.
எழுத்தாளர்கள் மத்தியில் எழுந்துள்ள ஒரு போராட்ட வடிவம் இது.
இது போல் பட்டங்களையும் விருதுகளையும் திருப்பிக்
கொடுப்பது ஒரு செயலூக்கம் உள்ள போராட்ட வடிவம் ஆகும்.
**
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், தங்களுக்கு வழங்கப்பட்ட
சர் (SIR) பட்டங்களையும், திவான் பகதூர் பட்டங்களையும்
திருப்பிக் கொடுத்தார்கள் பல தேச பக்தர்கள்.  அந்தப் போராட்ட
பாரம்பரியத்தைப் பயன்படுத்தித்தான் இன்று எழுத்தாளர்கள்
விருதுகளைத் திரும்ப ஒப்படைக்கிறார்கள்.
**
வீறு கொண்டு எழுந்து வருகிற இந்தப் பொது நீரோட்டத்தில்
தமிழ் எழுத்தாளர்களின் பங்கு என்ன? தங்களின் சக
எழுத்தாளர்களுடன் ஒன்றிணைந்து (showing solidarity) நிற்க
வேண்டாமா இவர்கள்?
**
தமிழ் எழுத்தாளர்களுக்கு யாரும் கட்டளை இடவில்லை
(Nobody dictates). அவர்கள் விருதுகளைத் திருப்பிக்
கொடுக்க வேண்டும் என்பது சமூக நிர்ப்பந்தம்.
**
மூத்த பத்திரிகையாளர் ஞானி தமிழ் எழுத்தாளர்கள்
தங்கள் விருதுகளைத் திருபிக்  கொடுக்க வேண்டும்
என்று உரத்து முழங்கி உள்ளார். பெண் கவிஞர்
சுகிர்தராணி இது போன்று வலியுறுத்தி வருகிறார்.
எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்றும் எழுத்தாளர்கள்
ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது
என்றும் விருதுகளைத் திருப்பிக் கொடுத்த எழுத்தாளர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
**
இதற்கு அப்புறமும் பெருமாள் முருகனும் பொன்னீலனும்
கள்ள மௌனம் காப்பது ஏன்? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக