புதன், 7 அக்டோபர், 2015

இந்தியாவும் சீனாவும் இந்த ஒப்பந்தத்தில் இல்லை.
எனவே இது இந்தியா சீனாவை நேரடியாகக் கட்டுப் படுத்தாது.
ஆனால், TPP  நாடுகளுடன் இந்திய அரசோ, அல்லது,
இந்தியாவின் ஒரு நிறுவனமோ வணிக ஒப்பந்தம் செய்து 
கொள்ள நேரும்போது, அந்த ஒப்பந்தத்தைப் பொறுத்த மட்டில்,
TPP ஷரத்துகள் ஒப்பந்ததாரர்களைக் கட்டுப்படுத்தும்.  
**
ஒரு குறிப்பிட்ட வர்த்தகத்தில் இந்தியச் சட்டங்களுக்கும் 
TPP ஷரத்துகளுக்கும் முரண்பாடு வரும்போது, 
இது தாவா (dispute) மற்றும் சர்வதேச வழக்காடுதலுக்கு 
(litigation) இட்டுச் செல்லும். இந்த வழக்கின் இறுதியில், 
TPP ஷரத்துகளே மேலாண்மை பெறும் வகையில் 
தீர்ப்பு வரும்.  
**
இதையெல்லாம் தவிர்க்கும் விதத்தில் இந்தியாவின் 
வர்த்தக அமைச்சகம் தீர்க்க தரிசனத்துடன் செயல்படாமல் 
இருந்தால், இந்தியா நஷ்டம் அடையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக