வியாழன், 1 மார்ச், 2018

காந்தி எப்போதும் கீதையை கையில் வைத்துக் கொண்டு, எப்போதும் வருணாஸ்ரமத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு, தீண்டாமையைக் கடைபிடித்து வாழ்ந்தார். இப்படித்தான் நிறைய பேர் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
காந்தி தீண்டாமையைக் கடைபிடிக்கவில்லை என்று அந்தக் காலத்திலே மறுப்பு சொல்லியாயிற்று.
காந்தியை முழுக்கப் படித்தவர்களுக்கும் தெரியும்.காந்தி தீண்டாமையை கடைபிடித்தவர் அல்ல என்று.
எனினும், நான் காந்தி வருணாஸ்சிரமத்தை ஆதாரித்தார். வருணாஸ்சிரமம் மூலம் தலித் மக்களையும் மேலே உயர்த்தலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தார் என்றே அறிகிறேன்.
ஆனால் இந்த வருணாஸ்சிரமம் விடயத்தில் காந்தி போகப் போக மாற்றம் அடைந்துள்ளார் என்று, காந்திய ஆய்வாளர், மார்க் லிண்ட்லே எழுதியிருப்பதாக, ஜெயமோகன் கூறுகிறார்.
மேலும் ஜெயமோகன், இந்த மாற்றம் காந்தியினுள் வருவதற்கான காரணமாயிருந்தவர் அம்பேத்கர் என்கிறார். நானும் ஜெயமோகன் சொன்னதை ஏற்கிறேன்.
ஆனால் இந்தக் கருத்துக்கு தோழர் ஒருவர் மறுப்புத் தெரிவித்து பின்னூட்டம் செய்துள்ளார். அதை இங்கே பதிகிறேன்.
தவறு.
1898 ல் காந்தியின் குமஸ்தாவான வின்சென்ட் லாரன்ஸின் (கிருத்துவப் பறையர்) மூத்திரச் சட்டியை சுத்தம் செய்யமறுத்த மனைவியை வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னார்.
1916 ல் ஆசிரமத்தில் பட்டியல் சாதியைச் சார்ந்தவரை சேர்த்ததால் எதிர்ப்பை சந்தித்தார். ஆசிரமத்திற்கு நிதியளிக்க மறுத்தார்கள்.
கஸ்தூரிபாவையே ஆசிரமத்தைவிட்டு வெளியேறச்சொன்னார்.
1917 ல் ஆசிரமத்தில் பட்டியல் சாதியினருடன் ஒன்றாக உணவருந்தி வசித்ததை காட்டமாக விமர்சித்த குடும்பத்தின் மூத்த உறுப்பினருக்கு ஆசிரமத்தில் வர்ணாஸ்ரமத்தை ஒரு போதும் கடைபிடிக்க மாட்டோம் என பதில் அளித்தார் காந்தி.
1917 முதல் பார்ப்பனரான வினோபாவே மற்றும் அவரது சகோதரரும் மலமள்ளும் பணியைச் செய்ய ஆரம்பித்தார்கள்.
1920 ஆசிரமத்தில் தங்கிய பட்டியல் சாதியினரின் குழந்தையை தத்து எடுத்தார்.
1921 ல் தன்னுடைய வர்ணாஸ்ரமத்தில் பட்டியல் சாதியினருடன் ஒன்றாக உணவருந்தவும், வசிக்கவும் இயலுமென்றார்.
1921 ல் குஜராத் வித்யாபீடத்தின் தலைவரான காந்தி பட்டியல் இனமக்களை சேர்க்காத பள்ளிகளை வித்யாபீடத்தில் இருந்து வெளியேற்ற தீர்மானம் கொண்டுவந்தார்.
1927 ல் பஜாஜின் குடும்பக் கோவிலை அனைவருக்கும் திறந்துவிட்டவர் காந்தி.
1927 லேயே பஜாஜ் தலைமையில் தீண்டாமை ஒழிப்பதற்கென தனியாக ஒரு அமைப்பையே உருவாக்கினார். (பின்னாளில் இதுவே ஹரிஜன் சேவா சங்கமாக மாற்றப்பட்டது)
1927 முதல் ஆசிரமத்தில் ஓரே சாதியில் திருமணம் நடத்தப்படாது என்றார்.
1927 ல் தீண்டாமை ஓழிப்பு,இந்துமுஸ்லீம் ஒற்றுமை, கதர் மூன்றை மட்டுமே காங்கிரசின் செயல்திட்டத்தில் வைத்தேன், வர்ணாஸ்ரமத்தை தான் வைக்கவில்லை என தெளிவுபடுத்தினார்.
1927 ல் காஞ்சி சங்கராச்சரியர் காந்தியை சந்தித்து பட்டியல் இனமக்களை கோவிலுக்குள் அனுமதிக்க போராடக்கூடாதென்றார். காந்தி மயிரளவேனும் அவரை மதிக்கவில்லை. காந்தியையும் காங்கிரசையும் எதிர்க்க வர்ணாஸ்ரம சபையைத் தொடங்கினார்கள்.
விதவை மறுமணம், தேவதாசி ஒழிப்பு, பெண்ணின் திருமண வயதை உயர்த்தும் சாரதா சட்டத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் காந்தி.
1931 ல் தனது வளர்ப்பு மகளை உயர்சாதியைச் சார்ந்த வரனுக்கு மணமுடிக்கவிரும்புவதாகவும் அதற்கு அனுமதியளிக்கும் படிக் கேட்டு அவரது தந்தைக்கு கடிதம் எழுதினார். 1933 ல் ஒரு பார்ப்பனருக்கு அவரை மணமுடித்து வைத்தார்.
இவையெல்லாம் அம்பேத்கரை சந்திப்பதற்கு முன் நடைபெற்றவை.
==========
கவுதம் சாம் பதிவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக