ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

பூமியைப் படம் எடுத்த சந்திரயான்-2.
------------------------------------------------------------
தற்போது பூமியைச் சுற்றி வரும் சந்திரயான்-2
பூமியாய் புகைப்படம் எடுத்துள்ளது.
அவற்றை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது.
அப்படங்களைப் பாருங்கள்.
3 ஆகஸ்ட  2019ல் எடுத்த படங்கள் அவை

பூமி உருண்டையா தட்டையா?
------------------------------------------------
கணக்கற்ற படங்களை எடுத்துத் தள்ளுகிறது
சந்திரயான்-2. பூமி உருண்டையாக இருப்பதை
இப்படங்கள் நிரூபிக்கின்றன.

இதற்குப் பிறகும் கூட, தமிழ்நாட்டில் சிலர்
குறிப்பாக தமிழ் தேசியம் பேசும் சில மூடர்கள்
பூமி தட்டை என்று பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

சகல மூடநம்பிக்கைகளையும் அறிவியல்
உடைத்து நொறுக்குகிறது.
-------------------------------------------------------------

இது அறிவியல் பதிவு. இதில் உங்களின் அனுமானங்களுக்கு
இடமில்லை. கடந்த ஆண்டு வாசகர்களின் வேண்டுகோளுக்கு
இணங்க பூமி உருண்டை என்று நிரூபிக்கும் பல
கட்டுரைகளை இங்கு வெளியிட்டோம். திரு பாரிசாலன்
என்பவர் பூமி தட்டை என்று தொடர்ந்து எழுதி வந்தார்; பேசி
வந்தார். அவர் பரப்பி வந்த பிற்போக்குக் கருத்துக்கு எதிராக
பல கட்டுரைகள் மூலம் மறுப்புத் தெரிவித்தோம்.

திரு பாரிசாலன் என்பவர் பரப்பி வந்த இந்த மூட நம்பிக்கை
பற்றித் தாங்கள் அறிந்திருக்கக் கூடும் என்று
கருதுகிறோம்.

இது அறிவியல் பதிவு. இங்கு அரசியல் என்ற பெயரில்
புரட்சிகரமற்ற குட்டி முதலாளிய அரசியலைப் பேசுவது
அனுமதிக்கப் பட மாட்டாது.


மாபெரும் அறிவியல் பேரணி!
----------------------------------------------
நாள்: ஆகஸ்ட் 9, வெள்ளி மாலை 4.30 மணி முதல்
இடம்: எலியர்ட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர்.

அனைவரும் வருக!


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக