செவ்வாய், 10 செப்டம்பர், 2019

எடப்பாடிக்கும் தினகரனுக்கும் உள்ள தூரம் என்ன?
இந்தக் கேள்விக்கு விடை காண்போம்!
-------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------------
பல்லாவரம் மலையின் மீது இரு வேறு இடங்களில்
நின்று கொண்டு இருக்கின்றனர் எடப்பாடியும்
தினகரனும். மேலே வானத்தில் ஒரு விமானம்
1960 மீட்டர் உயரத்தில் மணிக்கு 600 கி.மீ வேகத்தில்
கிடைமட்டமாகப் பறந்து கொண்டு இருக்கிறது.
விமானத்தில் அமித்ஷா இருக்கிறார். விமானம்
சரியாக எடப்பாடியின் தலைக்கு நேரே வந்ததும்,
விமானத்தில் இருந்து கொண்டு, ஒரு பொருளை
எடப்பாடியை நோக்கி கீழே போடுகிறார் அமித் ஷா.
அந்தப் பொருளோ தினகரன் இருந்த இடத்தில்போய்
விழுகிறது. அப்படியானால், எடப்பாடிக்கும்
தினகரனுக்கும் உள்ள தூரம் என்ன?
An aeroplane is flying horizontally with a speed of 600 km per hour
at a height of 1960 m.When it is vertically above the point A on the
ground, a body is dropped from it.The body strikes the ground at
point B. Calculate the distance AB.
இது IIT தேர்வில் பலமுறை கேட்கப்பட்ட ஒரு கேள்வி
---------------------------
சரியான விடையும் விளக்கமும்!
---------------------------------------------------------
சரியான விடை: AB = 3.33 km.

விளக்கம்:
-------------------
எடப்பாடியும் தினகரனும் தரையில் உள்ள
இரண்டு புள்ளிகள். அவற்றை முறையே A, B என்க.
தற்போது AB எவ்வளவு என்று கண்டுபிடிக்க வேண்டும்.
AB என்ற தூரத்தை விமானம் எவ்வளவு வேகத்தில்,
எவ்வளவு நேரத்தில் கடந்தது என்பது நமக்குத் தெரிய
வேண்டும். தெரிந்தால். தூரம், வேகம்,நேரம் மூன்றையும்
இணைக்கும் universal formulaஆன distance =speed x time என்ற
சூத்திரத்தைப் பயன்படுத்தி விடை காணலாம்.
**
வேகம்= 600 கி.மீ /மணி என்பது கணக்கில் உள்ளது.
நேரம் மட்டுமே கண்டு பிடிக்க வேண்டும்.
இதற்கு ஒரு சூத்திரம் உள்ளது. விமானத்தில் இருந்து
ஒரு பொருளை கீழே எறியும்போது, அது parabola
வடிவத்திலான பாதையில் செல்லும் என்பது
அடிப்படை எந்திரவியல். (The path of the projectile is a parabola).
**
எனவே, if T is the time taken by the particle (projectile) to reach the ground,
then T= square root of 2h/g
Now, time and speed are known. Multiplying these two, one gets the distance.
time = square root of 2x1960 divided by 9.8 (g= 9.8 on earth)
= 20 s.
distance AB= speed x time
= 600 x 20 s
= 600 x 20 x(5/18)
= 3.33 km.
====================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக