வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

போலி அறிவியலுக்கு சம்மட்டி அடி!
வானிலை ஆய்வு மையத்தின் வரவேற்கத்தக்க முடிவு!
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் முயற்சி வெற்றி!
போலி வானியல் ஆய்வாளர்களை அரசே கைது செய்!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------
எஸ் எஸ் எல் சி பெயிலாகிப் போன துலுக்காணம்
சென்னை GHல் மேல் நர்சிங் ஆர்டர்லியாக இருந்தான்.
சில ஆண்டுகள் ஆர்டர்லியாக வேலை பார்த்த அவனுக்கு
டாக்டராக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது.
உடனே வேலையைத் துறந்து விட்டு போலி டாக்டராகி
விட்டான். தமிழ்நாட்டின் ஒரு சிறு நகரத்தில்,
டாக்டர் துலுக்காணம் MBBS,MD என்று போர்டு
மாட்டிக் கொண்டு கிளினிக் திறந்து விட்டான்.

புழுவினும் இழிந்த துலுக்காணத்தைப் போல, தமிழ்நாடு
முழுவதும் ஆயிரக் கணக்கான போலி டாக்டர்கள்
இன்றும் உள்ளனர். டாக்டர்கள் மட்டுமல்ல, தற்போது
தமிழ்நாட்டில் ஆயிரக் கணக்கான போலி வக்கீல்கள்
இருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

இந்த வரிசையில் தற்போது தமிழ்நாட்டிலும்
இந்தியாவிலும் போலியான வானிலை அறிவிப்பாளர்கள்
மக்களை ஏய்த்துக் கொண்டிருப்பது முன்னணிக்கு
வந்துள்ளது. அது பற்றியதே இந்தக் கட்டுரை.

IMD எனப்படும் இந்திய வானிலை ஆய்வு மையம்
அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின்
கீழ் வருவது. தற்போது Earth Science துறையின் கீழ்
செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மொத்தம்
ஆறு மண்டல வானிலை ஆய்வு மையங்கள் உள்ளன.
இவை நாட்டின் தலைசிறந்த அறிவியல் நிறுவனங்கள்
(premier scientific institutions) ஆகும்.


IMDயில் (Indian Meteorological Dept) Observer, Scientific Assistant,
Scientific Officer, Asst Meteorologist என்றெல்லாம்
கேடர்கள் உண்டு. இங்கே வேலைக்குச்சேர
இயற்பியலில் (BSc Physics) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் MSc Physics படித்தவர்களே வேலைக்குத்
தேர்வாகிறார்கள்.

பிரசித்தி பெற்ற ரமணன் அவர்களை தமிழ்நாடு
நன்கறியும். சென்னை வானிலை ஆய்வு மைய
இயக்குனராக இருந்த இவர் 2016ல் பணி  ஒய்வு
பெற்றார். இவர் இயற்பியலில் டாக்டர் பட்டம்
பெற்றவர்.

இணைய தளத்தின் புண்ணியத்தால் தற்போது
நாடெங்கும் புற்றீசல் போல உதிரி உதிரியாக
போலி வானிலை முன்னறிவிப்பாளர்கள்
முளைத்துள்ளனர். இவர்கள் யாரும் வானிலை
முன்னறிவிப்புக்கான கல்வித் தகுதி உடையவர்கள்
அல்லர். அதற்கான பயிற்சிகள் எதுவும் பெற்றவர்கள்
அல்லர். இவர்களிடம் எந்த விதமான கருவிகளும்
கிடையாது. குறைந்தபட்சம் ஒரு மழைமானி
(rain gauge) கூட இவர்களில் பலரிடம் கிடையாது.

PUC பெயிலானவர்கள், BA Tourism படித்தவர்கள்,
தமிழ் வித்துவான் கோர்ஸ் படித்த தமிழ்ப்
பண்டிட்டுகள், ஹோமியோபதி ஆசாமிகள் என்று
பலரும் இன்று தங்களைத் தாங்களே வெதர்மேன்
என்று அழைத்துக் கொண்டு வானிலை
முன்னறிவிப்பு என்ற பெயரில் மக்களை ஏய்த்துக்
கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் ஊடகங்கள் தற்குறிகளால் நிரம்பி வழிகின்றன.
அறிவியலில் இருந்து முற்றிலும் தங்களைத் துண்டித்துக்
கொண்டவர்களே ஊடகங்களில் பெரும் புள்ளிகளாகப்
பவனி வருகிறார்கள். போலி வெதர்மேன்கள்
எந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில்
வானிலையைக் கணிக்கிறார்கள் என்று கேள்வி
கேட்க இந்த ஊடகத் தற்குறிகளுக்கு மூளை கிடையாது.
மாறாக, இந்தப் போலி வெதர்மேன்களை மக்களிடம்
பிரபலம் அடையச் செய்வதே  இவர்களின் வேலை.

இந்த இடத்தில் IMD எவ்வாறு வானிலையைக்
கணிக்கிறது என்று குறைந்த பட்ச அளவிலாவது
அறிந்து கொள்ள வேண்டும். IMD பயன்படுத்தும்
தொழில்நுட்பம் மற்றும் அவர்களின்  modus operandi
குறித்தெல்லாம் இந்தக் கட்டுரையில் எழுத இயலாது.
உரிய நூல்களைப் படித்து அறிந்து கொள்க.

வானிலைக் கணிப்பில் பல்வேறு அறிவியல் மாடல்கள்
உள்ளன. தேவைக்கேற்ப உரிய மாடல்களைப்
பயன்படுத்துகிறது IMD. ஒரு குறிப்பிட்ட மாடலை
எடுத்துக் கொண்டு, அதில் உரிய தரவுகளை
உள்ளிடுகிறது. உதாரணமாக Pressure, velocity போன்ற
variables குறித்த தரவுகள்.

தரவுகளின் உள்ளீட்டுக்குப் பிறகு, Partial differentiation
செய்யப்பட்டு தேவையான ரிசல்ட் கிடைக்கிறது.
Partial differentiation என்பது கால்குலஸ் கணிதத்தில்
உள்ள ஒரு முறை.

கால்குலஸ் அறிந்தவர்கள் ஏன் Partial differentiation செய்ய
வேண்டும் என்று கேட்கலாம். அவர்களுக்காக மட்டும்
இந்தப் பத்தி. Weather is a function of  more than one independent
variable of which at a particular instant some may change and some
may not.Therefore partial differentiation is required. புரிந்ததா?

நமது போலி வெதர்மேன்கள் தங்களுக்குத் தேவையான
எல்லாத் தரவுகளையும் IMDயின் இணையதளத்தில்
இருந்தே எடுக்கிறார்கள். செயற்கைக் கோள்
புகைப்படங்கள், ரேடார் படங்கள், காற்றின் திசை
குறித்த விவரங்கள், வெப்பநிலை விவரங்கள் இன்னும்
தேவையான அனைத்துத் தரவுகளையும் IMDயின்
இணையதளத்தில் இருந்து எடுத்துக் கொண்டு
தாங்களே சொந்தமாக வானிலையைக் கணித்தது
போல குத்து மதிப்பாக எதையாவது கூறுகிறார்கள்.
இவர்களுக்கு சமூகப் பொறுப்பு எள்ளவும் கிடையாது.
வெறும் சுயமோகம் பீடித்த தற்குறிகள்.

தற்போது இவர்களின் கொட்டத்தை அடங்குகிறது IMD.
எப்படி? இந்தப் போலி வெதர்மேன்கள் IMDயின் இணைய
தளத்தைப் பார்க்க இயலாதவாறு தடை விதிக்கப்
பட்டுள்ளது. அதாவது எவர் வேண்டுமானாலும்
பார்க்க வசதியாக open networkஆக IMDயின் இணையதளம்
இப்போது password networkஆக மாற்றப்பட்டு, IMD
ஊழியர்களைத் தவிர மற்றவர்கள் எவரும் பார்க்க
இயலாதவாறு ஆக்கப் பட்டுள்ளது.

நியூட்டன் அறிவியல் மன்றம் உள்ளிட்ட பல்வேறு
அறிவியல் அமைப்புகள், அறிவியலாளர்கள் அளித்த
புகாரின் பேரில் IMD இந்த நடவடிக்கையை
மேற்கொண்டுள்ளது.

போலி வெதர்மேன்களால், புழுவினும் இழிந்த இந்த
ஈனத் தற்குறிகளால் பொதுமக்களின் பார்வைக்கு
உரியதாக இருந்த IMD இணையதளம் இப்போது
IMD ஊழியர்களுக்கு மட்டுமானதாக ஆகிப்போனது.
போலிகளால் சமூகத்துக்கு ஏற்பட்ட தீங்கு இது.

மத்திய அரசும் மாநில அரசும் போலி வெதர்மேன்களைத்
தடுக்க நடவடிக்கை எதுவும் எடுக்க முன்வராத நிலையில்
IMD இந்த harsh decisionஐ எடுத்துள்ளது.

உரிய கல்வித் தகுதியுடன் வானிலைக் கணிப்புக்கான
தங்களின் (theoretical model) மாடலை அரசிடம்
சமர்ப்பித்து ஒப்புதல் பெற்றவர்கள் மட்டுமே
வானிலையைக் கணிக்க இயலும் என்று ஒரு
சட்டத்தை மாநில அரசுகள் உடனடியாக இயற்ற
வேண்டும். அச்சட்டம் இயற்றிய பிறகு IMDயின்
இணையதளத்தை முன்போல் அனைவருக்கும்
திறந்து விட வேண்டும். போலியான வானிலைக்
கணிப்பாளர்களைத் தண்டிக்கும் உரிய சட்டத்தை
அரசுகள் இயற்ற வேண்டும். போலி டாக்டர்கள்
சிறையில் அடைக்கப் படுவது போல போலி
வெதர்மேன்களும் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.

நியூட்டன் அறிவியல் மன்றத்தின் இந்தக் கோரிக்கையை
அனைவரும் ஆதரிக்க வேண்டும்.
--------------------------------------------------------------
பின்குறிப்பு:
இக்கட்டுரை ஆசிரியர் 1980களில் சில ஆண்டுகள்
மற்றும் 2005-2010 காலத்தில் சில ஆண்டுகள் 
சென்னை வானிலை ஆய்வு மையத்தில் மத்திய அரசின்
தொலைதொடர்புத்துறை சார்பிலும் BSNL சார்பிலும்
பணியாற்றியவர். IMD staff ஆக அல்ல.
******************************************************  
  


              




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக