சனி, 8 ஆகஸ்ட், 2020


மகஇக ஊழல் பேர்வழிகள் வெளிநாடு தப்பி
ஓடியது எப்போது?
========================================
மகஇகவின் ரியல் எஸ்டேட் ஊழல் அரசுக்கும்
போலீசுக்கும் 10 மாதத்திற்கு முன்பே தெரியும்.
நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு வந்தவுடனே
மாவட்ட கலெக்டர் இந்த ஊழல் நிலங்களுக்கு
பட்டா கொடுத்து வந்த பழக்கத்தை  நிறுத்துமாறு
உத்தரவு போட்டார்.

கலக்டரின் உத்தரவைத் தொடர்ந்து, போலிசானது
மகஇக ஊழல் பேர்வழிகளைக் கைது செய்யத்
தயார் ஆனது. தமிழக அரசின் சக்தி மிக்க
இடத்தில் இருந்து வந்த உத்தரவு காரணமாக
மகஇக ஊழல் பேர்வழிகள் கைது செய்யப் படவில்லை.

இன்றில்லாவிட்டாலும் நாளை நம்மைக் கைது செய்து
விடுவார்கள் என்பதை உணர்ந்த மகஇக ஊழல்
பேர்வழிகள் பாதுகாப்புத் தேட ஆரம்பித்தனர்.
மார்ச் மாதக் கடைசியிலேயே மகஇக ஊழல்
பேர்வழிகளில் ஒரு சிலர் வெளிநாடு தப்பி
ஓடி விட்டனர்.

ஊழல் நடந்து 8 மாதம் கழித்துத்தான் சராசரிப்
பொதுமக்களுக்கு அதுபற்றித் தெரிய வருகிறது.
காரணம் அதிமுக ஆடசி. ரியல் எஸ்டேட்
புரோக்கர்களில் முக்கியமானவர்கள் அதிமுக
ஆசாமிகள்.

           அமைவதாலும்   அதிர்ச்சி தருவதாலும்

அஃது யாப்பே என மொழிவர யாப்பறி புலவர்.   என்றமைந்து   று



தனக்கும் தன் மருமகனுக்கும் என்று 2 மனைக்கு
ரூ 1.15 கோடியை மகஇக ஊழல் பேர்வழியிடம்
கொடுத்து ஏமாந்த retired BHEL ஊழியர் தற்கொலை!

ஏ தேவடியாப் பசங்களா, நீங்களெல்லாம்
விளங்குவீங்களாடா என்று சபித்துக் கொண்டே
மண்ணை வாரித் தூற்றுகின்றனர் லட்சக் கணக்கில்
பணம் கொடுத்து ஏமாந்த ராணிப்பேட்டை BHEL
ரிட்டயர்டு ஊழியர்கள்.


ரிட்டயர்டு ஆனதும் வந்த பணம் முழுவதும் போச்சு
மருமகன் எங்கெங்கோ லோன் போட்டுத் தன்னிடம்
ஒப்படைத்த ரூ 60 லட்சமும் போச்சு. தன் பணம்
மட்டும் போயிருந்தாலும் அந்த முதியவர் சமாளித்துக்
கொள்வார். இப்போது மருமகனின் பணத்துக்கு என்ன
பதில் சொல்ல முடியும் அவரால்?

வேறு வழி தெரியாத நிலையில், தற்கொலை செய்து
உயிரைப் போக்கிக் கொண்டார். உண்மையில்
தற்கொலை செய்து கொண்டு சாக வேண்டியவன்
வெளிநாட்டில் பணத்தைப் பதுக்கிப் பாதுகாப்பாக
சந்ததிக்கு சொத்து சேர்த்து வைத்து விட்டு,
தெனாவெட்டாகத் திரிகிறான். பணத்தைப் பறி
கொடுத்த ஏழை முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

  

 

  

 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக