புதன், 4 நவம்பர், 2020

ஐன்ஸ்டைனின் தீர்க்க தரிசனத்தை மெய்யாக்கி

கருந்துளைகள் எப்படி உருவாகின்றன என்று 

கண்டுபிடித்து, நடப்பாண்டின் நோபல் பரிசை 

வென்ற ரோகர் பென்ரோஸ்!

----------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------------------------------   

ரோகர் பென்ரோஸ்! 

வரலாறு இப்படி ஒரு அதிமானுடனைப் (superman) 

படைத்துள்ளது. நீட்சே உருவாக்கிய அதிமானுடன்!  

ஐன்ஸ்டைன், ஸ்டீபன் ஹாக்கிங்கைத் தொடர்ந்து  

மானுடத்தின் மடியில் தவழும் மற்றொரு 

அதிமானுடன் பென்ரோஸ்!      


நீட்சேவைப் படித்திராதவர்கள், படிக்க இயலாதவர்கள் 

குறைந்தது பெர்னார்ட் ஷாவைப் படித்திருக்க வேண்டும்.

அவரின் Man and Superman படித்திருக்க வேண்டும்.

இதையெல்லாம் படித்திராவிட்டால் பென்ரோஸ் பற்றிய 

என்னுடைய கட்டுரை புரியாது.பென்ரோசையும் 

புரியாது.


ரோகர் பென்ரோசுக்கு 90 வயது ஆகிறது. அவரின் 90ஆம் 

வயதில் நோபல் பரிசின் தேவதை அவரை முத்தமிடுகிறாள்.

90 ஆண்டுகள் காத்திருந்து பெற்ற முத்தம்!


ஒரு 90 வயதுக் கிழவரிடம், குடுகுடு கிழவரிடம் 

என்ன இருக்கும்?  பெரும் மேதைமையுடன் வீரியம் மிக்க

சிந்தனை அவரிடம் இருந்து வெளிப்படுமா? தர்க்க 

முறைமைப்படி சிந்தனையை coherentஆக வெளிப்படுத்தும் 

ஆற்றல் புலப்படுமா? வாய்ப்பே இல்லை என்று 

பலரும் கருதக் கூடும்!  


ஆனால் அப்படிக் கருதுவது பேதைமையுள் எல்லாம் 

பேதைமை ஆகும். பென்ரோஸ் ஒரு அதிமானுடன்

என்ற உண்மையை மறந்து விடுதல் ஆகும்.


வயது எவ்வளவுதான் ஆனாலும், வயதாகுதலால் 

கிளியோபட்ராவின் அழகு எள்முனையேனும் 

மங்காமல் இருந்ததை காவியமாக்கி இருப்பார் 

ஷேக்ஸ்பியர்.


Age can not wither her beauty 

Nor custom stale her infinite variety.

(Antony and Cleopatra Act ii scene ii)


ஷேக்ஸ்பியரின் பிரசித்தி பெற்ற இந்த எழில் கொஞ்சும் 

மேற்கோளை உங்களின் வாழ்க்கையில் என்றாவது 

எதிர்கொள்ள நேர்ந்தது உண்டா? மகோன்னதத்தின் 

சிகரத்தில் மானுடத்தின் இலக்கிய அறிவை வைத்த அந்த 

ஷேக்ஸ்பியர் பற்றி எதுவும் அறிவீர்களா?


"Nor custom stale her infinite variety" என்ற காவிய வரியின் 

கருத்தாழம் சிறிதேனும் புரியுமா?


பென்ரோசும் கிளியோபட்ரா போன்றவரே. 90 வயதிலும் 

பெரும் மேதாவிலாசத்தின் வெளிச்சத்துடன் வெளிப்படும் 

அவரின் மூளைச்சுரப்பு உலகின் மூச்சை ஸ்தம்பிக்க 

வைத்து விடுகிறது.


காவியங்களின் உள்ளடக்கத்துடன் எழுதப்படும் 

அலங்கரிக்கப்பட்ட அறிவியல் கட்டுரைகளை 

நீங்கள் வாசித்து உண்டா? என்னுடைய கட்டுரைகள் 

மட்டுமே காவிய அனுபவத்தைத் தருபவை. அவற்றை 

வேட்கையுடன் படியுங்கள்.


எனது கட்டுரைகளின் textual pleasureஐ வேறு யார் எவரின் 

கட்டுரையிலும் உங்களால் பெற இயலாது. எனவே 

இதன் மகிமையை உணருங்கள். இல்லாவிடில் 

"பன்றிக் கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்"

என்றார் நாலடியார் கூறுவது போன்றே நான் எழுதுவது 

அமையும்.

--------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு:

பாடப் புத்தகத் தரத்துடன் கறாராகவும் அறிவியல் 

துல்லியத்துடனும் எழுதப்பட்ட ரோகர் பென்ரோஸ் 

பற்றிய கட்டுரையை அறிவியல் ஒளி ஏட்டின் 

ஆசிரியருக்கு நேற்றே அனுப்பி விட்டேன். இம்மாத 

இதழிலேயே அக்கட்டுரை வெளியாகும்.


இந்தக் கட்டுரை சற்று relaxedஆன மனநிலையுடன் 

வாசிக்க விரும்பும் முகநூல் வாசகர்களுக்கானது. 


வாசகர்களின் பெருத்த ஆதரவு இருந்தால் மட்டுமே 

இக்கட்டுரையின் அடுத்தடுத்த பகுதிகள் வெளியாகும்.

***********************************************************************          

    


 

   

           .  


 



  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக