மார்க்சியமும் ஹோமியோபதியும் ஒன்றுக்கொன்று
எதிரானவை. ஒன்றுக்கொன்று முரண்பட்டவை.
இவ்விரண்டுக்கும் இடையிலான முரண்பாடு பகைத்
தன்மை வாய்ந்த முரண்பாடு (antagonistic contradiction).
பகை முரண்பாடாக இருக்கின்ற காரணத்தால்,
இவை இரண்டும், அதாவது, மார்க்சியமும்
ஹோமியோபதியும் ஒன்றையொன்று அழிக்க
முனையும். இவ்விரண்டில் எது சரியானதா, எது
அறிவியல்பூர்வமானதோ அது மட்டுமே வெல்லும்.
மற்றது அழிந்து ஒழிந்து போய்விடும்.
மார்க்சியம் நூறு சதமும் அறிவியல்பூர்வமானது.
ஹோமியோபதி ஒரு போலி அறிவியல். எனவே
மார்க்சியத்துக்கும் ஹோமியோபதிக்குமான இந்தச்
சண்டையில் மார்க்சியம் வெல்லும்; ஹோமியோபதி
தோற்று அழியும். ஏனெனில் போலி அறிவியலால்
சரியான அறிவியலான மார்க்சியத்தை ஒருபோதும்
வெல்ல இயலாது. மார்க்சியம் ஒருபோதும் தோற்காது.
ஜெர்மானியத் தத்துவப் பேரறிஞர் ஹெக்கல் என்பவர்
(Hegel 1770-1831) இயங்கியல் (அல்லது முரண்தர்க்கவியல்)
என்னும் கோட்பாட்டை உருவாக்கினார். எந்த ஒரு
விஷயத்திலும் உண்மை என்ன என்று கண்டறியப்
பயன்படும் முறையே இயங்கியல் (dialectics) ஆகும்.
ஹெக்கலின் இயங்கியலைத் திருத்தியும் செப்பனிட்டும்
மேம்படுத்தியும் மார்க்சிய இயங்கியலை உருவாக்கினர்
மார்க்சும் எங்கல்சும். ஹோமியோபதி மார்க்சிய
இயங்கியலுக்கு எதிரானது. நோயும் மருந்தும்
முரண்பட்டவை என்ற அடிப்படை உண்மையையே
ஏற்றுக் கொள்ள ஹோமியோபதி மறுக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக