வியாழன், 18 நவம்பர், 2021


chess chess

---------------------------------------------------

கால்பந்து என்பது உடல் சார்ந்த விளையாட்டு.

அது போல, சதுரங்கம் என்பது மூளை சார்ந்த 

விளையாட்டு (brain game). மேலும் சதுரங்கம் 

கணித விதிகளால் ஆளப்படும் விளையாட்டு.

எனவே சதுரங்கம் ஆட அறிவுத் திறன் தேவை. 


எனவே, சதுரங்கம் விளையாடினால் மேதாவியா 

என்ற கேள்வி பெருத்த அறியாமையை வெளிப்படுத்தும் 

கேள்வியாகும்.. எப்படி கால்பந்து விளையாட 

உடல் வலிமை தேவையோ, அதைப்போல சதுரங்கம் 

விளையாட மூளை தேவை; அறிவுத்திறன் தேவை.

எனவே சதுரங்கம் விளையாடினாள் மேதாவியா 

என்றால், ஆம், மேதாவிதான் என்று நியூட்டன் 

அறிவியல் மன்றம் அடித்துக் கூறுகிறது.

இதை உணர்ந்து கொள்ள M.Sc படிக்க வேண்டியதில்லை.

காமன் சென்ஸ் இருந்தாலே போதும்.  


சதுரங்கம் என்றால் என்ன என்று லெனின் 

வரையறுத்தார். Chess is the gymnasium of mind 

என்றார் லெனின். மூளைக்குப் பயிற்சி அளிக்கும் 

விளையாட்டு என்றார் லெனின். லெனின் சொன்னதே 

சரியென்று அன்றும் இன்றும் அறிவியல் ஏற்றுக் 

கொண்டுள்ளது..


ஓஷோ என்பவர் என்ன சொல்கிறார்? சதுரங்கம் 

டைம்பாஸ் பண்ண உதவும் ஒரு விளையாட்டு,

அவ்வளவுதான் என்கிறார். இது முற்றிலும் தவறு. 

தவறு மட்டுமல்ல பெரும் அறியாமையை

வெளிப்படுத்துகிற ஒரு கூற்று ஆகும். 


ஓஷோ என்பவர் எவ்விதத்திலும் பொருட்படுத்தத் 

தக்கவர் அல்லர். பகுத்தும் தொகுத்தும் அலசி 

ஆராய்ந்தும் ஒரு கருத்தைச் சொல்பவர் அல்லர் 

அவர். போகிற போக்கில் வாயில் வந்ததை உளறி 

வைத்து விட்டு ஓடிப்போகும் ஒரு பொறுப்பற்றவர் அவர்.


நான் பெரிதும் முயன்றும் உழைத்தும் சமூகத்தில் 

இளைஞர்களிடையே மாணவர்களிடையே 

தன்னம்பிக்கையை ஊக்கத்தை உற்சாகத்தை 

படிப்பில் கல்வியில் ஆர்வத்தை ஏற்படுத்தும் 

விதத்தில் பதிவுகளை எழுதுகிறேன். அது பலருக்கு 

ஒரு inspirationஆக இருக்க வேண்டும் என்ற 

நோக்கத்துடன். கிடைக்கிற feedback எனது 

நோக்கம் நன்றாக நிறை உள்ளது என்று காட்டுகிறது.


ஆனால், மதிப்புக்குரிய டிராட்ஸ்கி ஓஷோ அவர்களே,

உங்களின் பின்னூட்டங்களும் ஓஷோ என்பவரின் 

அறியாமை நிறைந்த கூற்றுகளும் சமூகத்தில் 

அவநம்பிக்கையை விதைக்கக் கூடியவை. 

இளைஞர்களையும் மாணவர்களையும் சோர்வடையச் 

செய்பவை. எதிர்மறைத் தன்மை வாய்ந்தவை.

எள்ளளவும் பயனற்றவை. எனவே இத்தகைய 

பிற்போக்குக்  கருத்துக்களை ஏற்க இயலாது.

அனுமதிக்க இயலாது. நன்றி. வணக்கம்.


 

 




 



  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக