வெள்ளி, 14 ஜனவரி, 2022

 இந்தியா முழுவதும் பொங்கல் கொண்டாடும்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

--------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-----------------------------------------------------------------

இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் 

மிகவும் தொன்மையானது பொங்கல். தமிழ்நாட்டில் 

பொங்கல் என்று பெயர்பெற்றுள்ள இந்தப் பண்டிகை 

நாட்டின் ஏனைய மாநிலங்களில் வெவ்வேறு

பெயர் பெற்றுள்ளது. உயிர்களுக்கு வாழ்வளிக்கும்

சூரியனை வணங்கும் பண்டிகையே பொங்கல் ஆகும்.


தமிழ்நாட்டிலும் சரி, இந்தியாவின் பிற 

மாநிலங்களிலும் சரி, நிலவுடைமைச் சமூக 

அமைப்பு தோன்றி முழுமையடையும் முன்னரே 

பொங்கல் பண்டிகை தோன்றியது. தொல்காப்பியர் 

காலச் சமூகம் அதாவது சங்க காலச் சமூகமானது

இனக்குழுச் சமூகம் ஆகும்.


பூகோள ரீதியாக ஒரே சீர்மை உடைய (homogeneous)

சமூக அமைப்பு தமிழ்நாட்டில் இல்லை. ஐந்திணை 

வாழ்வியல் அமையப் பெற்றது தமிழ்நாடு.

குறிஞ்சி, முல்லை,மருதம்,நெய்தல், பாலை என்று 

ஐந்திணை பொருந்தியது தமிழ்நாடு. எனினும் 

தமிழ்நாட்டில் பாலை நிலம் என்பது ஆப்பிரிக்காவின் 

சஹாரா பாலைவனம் போன்றதோ அல்லது இந்தியாவின் 

தார் பாலைவனம் போன்றதோ அல்ல. வளங்குன்றிய 

மழை குன்றிய பிரதேசனமே தமிழ்நாட்டில் பாலை 

எனப்பட்டது. இதை இளங்கோவடிகள் அழகாக 

விளக்குவார்.



கால்நடை வளர்ப்பும் வேளாண்மையும் செறிந்திருந்த 

முல்லை மருதம் என்னும் இரண்டு திணைகளில் 

மட்டுமே பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு 

வந்தது. (ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடுகயல் உகள... 

திருப்பாவை).குறிஞ்சியிலும் நெய்தலிலும் பாலையிலும் 

பொங்கல் பண்டிகை முக்கியத்துவம் பெறவில்லை.


பொங்கல் பண்டிகை ஒரு ஆன்மிகப் பண்டிகை 

அல்ல என்றும் தமிழ்ச் சமூகத்தின் பொருள் 

உற்பத்தியே பொங்கல் பண்டிகையைத் தோற்றுவித்தது 

என்பதையும் நிரூபிக்கும் ஒரு கட்டுரையை 

எழுதி உள்ளேன். அக்கட்டுரை அறிவியல் ஒளி 

என்னும் அறிவியல் மாதப்பத்திரிகையில் 

2021 பெப்ரவரி ஆண்டு மலரில் பிரசுரமானது.


அக்கட்டுரையை வாசகர்கள் படிக்கலாம்.

*****************************************************  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக