ஞாயிறு, 26 ஜூன், 2022

 நாடாளுமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்!

-----------------------------------------------------------------

இன்று (ஜூன் 26, 2002) நாடாளுமன்ற மக்களவைக்கு 

முன்பு நடந்து முடிந்த இடைத்தேர்தலின் முடிவுகள் 

வெளியாகின.


தேர்தல் நடந்தது மொத்தம் 3 MP இடங்களுக்கு.

உபியில் 2 இடங்களுக்கும் பஞ்சாப்பில் ஒரு 

இடத்துக்கும் ஆக மொத்தம் 3 இடங்களுக்கு 

நடந்த தேர்தல் முடிவுகள் வருமாறு-


பாஜக = 2 இடங்களில் வெற்றி. (இரண்டும் உபி).

அகாலிதளம் (மான் பிரிவு) 1 இடத்தில் வெற்றி.(பஞ்சாப்).

காங்கிரஸ் = 0

சமாஜ்வாதி = 0

ஆம் ஆத்மி = 0.


பஞ்சாப்பில் ஆம் ஆத்மி படுதோல்வி அடைந்தது.

தற்போது பஞ்சாபில் முதல்வராக இருப்பவர் 

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவத் மான்.

முதல்வராவதற்கு முன் இவர் எம்பியாக 

இருந்தார். முதல்வரான பின் எம்பி பதவியை 

ராஜினாமா செய்தார். இந்த இடத்திற்குத்தான் 

(சங்ரூர் தொகுதி) இப்போது இடைத்தேர்தல் நடந்தது.


இதில் முதல்வர் வெற்றி பெற்ற தொகுதியை 

அகாலிதளம் (மான்) வேட்பாளரிடம் ஆம் ஆத்மி  

இழந்தது.      


அடுத்து உபியில் அசம்கார், ராம்பூர் என்ற இரண்டு 

இடங்களுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இந்த 

இரண்டுமே சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள்

வெற்றி பெற்ற இடங்கள். இந்த இரண்டு 

தொகுதிகளையும் பாஜக கைப்பற்றிக் கொண்டது.

இரண்டையும் பரிதாபமாக  சமாஜ்வாதி கட்சி இழந்தது.


இதில் ராம்பூர் தொகுதியானது சமாஜ்வாதி தலைவர் 

அசம்கானின் கோட்டையாகும். இத்தொகுதியில் 

50 சதத்திற்கும் மேலாக இஸ்லாமியப் பெருமக்கள் 

வாழ்ந்து வருகின்றனர். இத்தொகுதியில் 

அனாயாசமாக பாஜக வெற்றி பெற்றுள்ளது. 


அடுத்த தொகுதியான அசம்கார் தொகுதி 

முலாயம்சிங் முன்பு போட்டியிட்டு வென்ற

தொகுதியாகும். இதிலும் சமாஜ்வாதி கட்சி 

பாஜகவிடம் தோற்றுப் போனது.


ரௌடிகளின் ராஜ்யமான உபியில் சட்டம் 

ஒழுங்கை நிலைநாட்டும் யோகி ஆதித்யநாத்தின்

முயற்சிகளுக்கு மக்களின் வரவேற்பு இருக்கிறது 

என்பதே பாஜகவின் வெற்றிக்குக் காரணம் ஆகும்.


7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும்

3 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும்  

ஆக மொத்தம் 10 தொகுதிகளுக்கு நடந்த 

இடைத்தேர்தலில் முடிவுகள் இன்று 

வெளியாயின. மேற்கொற்றிய 10 தொகுதிகளும் 

டெல்லி உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ளவை.

-----------------------------------------------------------------

பி.கு: சட்ட மன்றத் தேர்தல் குறித்து அடுத்த 

கட்டுரையில் பார்ப்போம்.

***************************************

        

  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக