வியாழன், 18 ஜனவரி, 2024

யூரி ககாரினும் குருச்சேவும் கடவுளும்!
குருச்சேவின் காலில் விழுந்து வணங்குகிறேன்!
குருச்சேவுடன் அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சனை 
ஒப்பிட்டுப் பார்க்கிறேன்!
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------
அண்டவெளியில் வலம் வந்த முதல் மனிதர் யார்?
யூரி ககாரின் (Yuri Gagarin) என்னும் சோவியத் 
ஒன்றியத்தைச் சேர்ந்தவர். இந்நாடு இன்று ரஷ்யா 
என அழைக்கப் படுகிறது.

இவர் விண்வெளியில் (outer space) வலம் வந்து 
பூமியைச் சுற்றி வந்த நாள் 12 ஏப்ரல் 1961.
மனித குல வரலாற்றில் இந்த நாள் தங்க 
ஜரிகைகளால் வேயப்பட்டு ஒளி சிந்தும் 
நாளாகும்.

இவரின் விண்வெளிப் பயணம் மொத்தம் 
108 நிமிடங்கள் நீடித்தது (from launch to landing) . 
வோஸ்டாக்-1 என்ற விண்கலத்தில் இவர் 
விண்வெளியைச் சுற்றி வந்தார்.   

1961 ஏப்ரல் 12 அன்று காலையில் 06:07 UTC நேரத்தில் 
இவரின் விண்கலம்  விண்ணில் பறந்தது. பூமியின் 
சுற்றுப்பாதையில் ஒரு முழுச் சுற்று சுற்றி முடித்ததும் 
இவரின் capsule விண்கலத்தில் இருந்து எஜெக்ட் ஆனது.
தொடர்ந்து தமது பாரச்சூட்டில் பறந்து தரையிறங்கினார் 
ககாரின். விண்வெளியில் பூமியின் சுற்றுப் பாதையில் 
(orbit) 108 நிமிடங்கள் பறந்தார் ககாரின்.

யூரி ககாரினை விண்வெளிக்கு அனுப்பியவர் அன்றைய
சோவியத் அதிபர் நிகிதா குருச்சேவ் ஆவார். யூரி 
ககாரினின் விண்வெளிப் பயணம் குறித்து, சோவியத்
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் (Plenum of the CPSU)  
பேசிய குருச்சேவ் பின்வருமாறு குறிப்பிட்டார்:
"ககாரின் விண்வெளிக்குச் சென்னார்; ஆனால் அங்கு 
அவர் எந்தக் கடவுளையும் காணவில்லை".   

குருச்சேவ் சொன்னார் அல்லாவா< இதுதான் நாத்திகம்!
இதுதான் போர்க்குணமிக்க பொருள்முதல்வாதம்.
நான் குருச்சேவின் காலில் விழுந்து வணங்குகிறேன்.
இறுதி மூச்சு வரை சமரசமற்ற பொருள்முதல்வாதியாக 
போர்க்குணமிக்க பொருள்முதல்வாதியாக இருந்தார் 
குருச்சேவ்.  

இதே காலக்கட்டத்தில் சோசலிச சோவியத் ஒன்றியத்துடன் 
போட்டியிட்டுக் கொண்டிருந்த ஏகாதிபத்திய 
அமெரிக்காவை அப்போது (நவம்பர் 1963- ஜனவரி 1969) 
ஆண்டு கொண்டிருந்த லிண்டன் ஜான்சனை நான் 
குருச்சேவுடன் ஒப்பிட்டுப்  பார்க்கிறேன்.

அப்பல்லோ 11 என்ற விண்கலத்தில் சென்ற நெயில் 
ஆர்ம்ஸ்டிராங்  குழுவினர் 1969 ஜூலையில் நிலவில் 
தரையிறங்கினர். முன்னதாக அமெரிக்கா அப்பல்லோ 8
என்ற விண்கலத்தை நிலவை நோக்கி அனுப்பியது. 
நிலவுக்கு மனிதர்களை ஏற்றிக் கொண்டு முதன் 
முதலில் சென்ற விண்கலம் அமெரிக்காவின் 
அப்பல்லோ 8 மட்டுமே.

1968 டிசம்பர் 21-27ல் மூன்று விண்வெளி வீரர்களுடன் 
( ஃபிராங்க் போர்மென், ஜேம்ஸ் லோவெல், வில்லியம் ஆண்டர்ஸ்)
நிலவுக்குச் சென்ற அப்பல்லோ 8 அங்கு 
தரையிறங்கவில்லை. ஒரு கோள்சுற்றியாக 
(orbiter)  நிலவைச் சுற்றி மட்டுமே வந்தது.  
நிலவைச் சென்றடைய 68 மணி நேரம் ஆனது 
அப்பல்லோ 8 விண்கலத்திற்கு.

அப்பல்லோ 8ன் விண்வெளி வீரர்கள் மூவரும் 
பத்து முறை நிலவைச் சுற்றி வந்தனர். இதற்கு 
அவர்களுக்கு 20 மணி நேரம் ஆனது.

இம்மூன்று வீரர்களும் நிலவைச் சுற்றி வந்தபோது 
1968 டிசம்பர் 24ஆம் தேதி குறுக்கிடுகிறது. அந்நாள் 
கிறிஸ்துமஸ் ஈவ் பண்டிகை நாளாகும். அதை 
முன்னிட்டு அமெரிக்க அரசின் ஆணைப்படி, 
இம்மூன்று வீரர்களும் ஜேம்ஸ் அரசர் எழுதிய 
(King James Bible)  பைபிளில் உள்ள 
ஆதி ஆகமம் (Book of Genesis ) அத்தியாயத்தின் 
முதல் பத்து செய்யுட்களை (first ten verses) வாசித்தனர். 

வில்லியம் ஆண்டர்ஸ் ஆதி ஆகமத்தின் 1 முதல் 
4 வரையிலான செய்யுட்களையும், ஜேம்ஸ் லோவெல்
5 முதல் 8 வரையிலான செய்யுட்களையம், ஃபிராங்க் 
போர்மென் 9, 10 செய்யுட்களையும் வாசித்தனர்.
இது உலகெங்கும் ஒளிபரப்பப்பட்டது.

அக்காலக் கட்டத்தில் உலகம் முழுவதிலும் அதிகமாகப் 
பார்க்கப்பட்ட தொலைக்காட்சி ஒளிபரப்பு 
நிகழ்ச்சியாக இது இருந்தது. 64 நாடுகளில் உள்ள 
100 கோடி மக்கள் இந்நிகழ்ச்சியைப் பார்த்தனர்.

யூரி ககாரின் விண்வெளியைச் சுற்றி வலம் வந்தது
ஒரு மகத்தான அறிவியல் நிகழ்வு. அது போலவே 
அப்பல்லோ 8ன் மூன்று விண்வெளி வீரர்களும் 
நிலவைச் சுற்றி வளம் வந்ததும் ஒரு மகத்தான 
அறிவியல் நிகழ்வு.

இந்த அறிவியல் சாதனைகளை சாலிசா ரஷ்யாவும் 
ஏகாதிபத்திய அமெரிக்காவும் எப்படி எடுத்துக் 
கொண்டன? இந்நிகழ்வு குறித்து உலகின் 
பல நூறு கோடி மக்களுக்கு அவர்கள் சொன்னது என்ன?

கடவுள் இல்லை என்கிற உண்மையை சோவியத் 
சோஷலிச நாடு சொல்கிறது. இது போர்க்குணமிக்க 
பொருள்முதல்வாதத்தை மக்களிடம் பரப்புகிறது.

ஆனால் பிற்போக்கான கடவுள் சிந்தனையை, 
மக்களிடம் கொண்டு செல்கிறது ஏகாதிபத்திய 
அமெரிக்கா. இழிந்த கருத்துமுதல்வாத மூடத்தனத்தை 
மக்களிடம் பரப்பியது அமெரிக்கா!

தலையில் ஒளி சிந்தும் விளக்கைச் சுமந்து கொண்டு 
பெருமை பொங்க நிகிதா குருச்சேவ் நிற்கிறார்.
அழுக்கும் துர்நாற்றமும் நிறைந்த அடர்ந்த இருட்டின் 
நடுவில் நிற்கிறார் ஜான் கென்னடியின் சீடர் 
லிண்டன் ஜான்சன்!

ஏகாதிபத்தியம் பிற்போக்கானது!
சோசலிசம் முற்போக்கானது!
சமரசமற்ற பொருள்முதல்வாதி குருச்சேவ் வாழ்க!
-------------------------------------------------------------------------
பொருள்முதல்வாதம் (materialism), கருத்துமுதல்வாதம் 
(idealism) என்றால் என்ன என்று தெரிந்து கொண்ட பிறகு 
இக்கட்டுரை மீது கருத்துக் கூறலாம். அதற்கு முன் கூற 
வேண்டாம்!   
***************************************************  
:
      


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக