ஞாயிறு, 5 ஜனவரி, 2025

குற்றவாளி ஞானசேகரனின் தொழில்நுட்ப அறிவு!
------------------------------------------------------------------------------
குற்றவாளி ஞானசேகரன் தனது மொபைல் 
போனை ஃபிளைட் மோடில் வைத்திருந்தார் 
என்று காவல் ஆணையர் பொதுவெளியில் 
தெரிவித்தார்.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட 
மூன்று பெண் அதிகாரிகளின் தலைமையிலான 
சிறப்புப் புலனாய்வுக்குழு பாதிக்கப்பட்ட 
மாணவியை விசாரித்தது. சம்பவம் நடந்தபோது  
குற்றவாளி ஞானசேகரன் தனது மொபைல் 
போனில் பேசியதை மாணவி பெண் போலீஸ் 
அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தினார். 

காவல் ஆணையரின் வெர்ஷனும் பாதிக்கப்பட்ட 
பெண்ணின் வெர்ஷனும் வேறுபடுகிறது.
இரண்டுக்கும் இடையிலான முரண்பாடு 
பாரதூரமாக உள்ளது. 

ஒரு மொபைல் போன் ஃபிளைட் மோடில் வைக்கப் 
பட்டிருந்தால் அதில் பேச முடியாது. Outgoing and 
incoming calls ஃபிளைட் மோடில் கிடைக்காது.
ஏனெனில் ஃபிளைட் மோட் என்பது Wireless Disabled
நிலை ஆகும்.

மொபைல் ஃபோன் என்பது முற்றிலும் ஒரு 
வயர்லெஸ் கருவி. Wireless Enabled நிலையில்தான் 
அதில் பேச முடியும்  Wireless Disabled நிலையில் அதில் 
அழைப்புகளைப் பெறவோ பேசவோ முடியாது.

ஞானசேகரன் தனது மொபைல் ஃபோனில் 
பேசினான் என்பதை மாணவி உறுதிப் படுத்துவதால் 
அவன் தனது மொபைல் ஃபோனை ஏரோப்பிளேன் 
மோடில் வைத்திருக்கவில்லை என்பது நிரூபணம் 
ஆகிறது. 

ஃபிளைட் மோட் பற்றியும் Wireless Disabled கண்டிஷன் 
பற்றியும் தொழில்நுட்ப அறிவைப் பெற்றவன் 
தள்ளு வண்டியில் பிரியாணி விற்கும்  ஞானசேகரன் 
என்று வர்ணிப்பது பித்தலாட்டம் ஆகும்.
***********************************************    



                
மாக்னஸ் கார்ல்சன்னும் டி  எம் கிருஷ்ணாவும்! 
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------------
2024ஆம் ஆண்டிற்கான மின்னல்வேக சதுரங்கப் 
போட்டி (Rapid and Blitz format) நியூயார்க்கில் (வால் ஸ்டிரீட்)  
டிசம்பர் 26 முதல் 31 வரை நடைபெற்றது.

இதில் பங்கேற்று ஆடிய உலக சாம்பியன் மாக்னஸ் 
கார்ல்சன் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து வந்ததால் 
அவருக்கு அபராதம் விதிக்கப் பட்டது. அதைச் 
செலுத்த மறுத்ததால் அவர் தகுதிநீக்கம் 
(disqualified) செய்யப்பட்டார். ஒன்பதாவது சுற்றில் 
விளையாட அவரை FIDE நிர்வாகம் 
அனுமதிக்கவில்லை.

நம்மூர் போலி முற்போக்குகளுக்கு இந்தச் செய்தி 
பெரும் ஆச்சரியத்தைத் தரலாம். தாராளவாத 
அமெரிக்காவில்  கூட ஜீன்ஸ் அணியத் தடையா 
என்று அதிர்ச்சி அடையலாம். FIDE விதிகளின்படி 
(Dress code)  ஜீன்ஸ் பேன்ட் முறையான உடை அல்ல.
எனவே உலக சாம்பியனுக்கே அனுமதி மறுக்கப் 
பட்டு அவர் தகுதிநீக்கம் செய்யப் பட்டார். (பின்னர் 
சமரசம் ஏற்பட்டு கார்ல்சன் பங்கேற்க 
அனுமதிக்கப்பட்டு  2024ஆம் ஆண்டின் உலக 
சாம்பியன் பட்டத்தை  அவர் அயான் நெப்போவுடன்
பகிர்ந்து கொண்டார்..

நம் ஊரிலும் ஒரு பூர்ஷ்வா இசைமேதை 
உடைப்புரட்சி செய்தார். 2024 டிசம்பர் சங்கீத 
சீசனில் லுங்கி அணிந்து வந்து கச்சேரி செய்தார்.
டி எம் கிருஷ்ணா.  

லுங்கி முரளியான உடை அல்ல. சபாக்களில் 
கச்சேரி செய்யும் ஒரு வித்துவான் முறையான 
உடையை அணிந்திருக்க வே ண்டும் என்று 
ரசிகர்கள் எதிர்பார்ப்பர். இது நியாயமே.

இந்த சீசனில் லுங்கி அணிந்து வந்து புரட்சி
செய்த பூர்ஷ்வா இசைமேதை அடுத்த சீசனில் 
பாவாடை தாவணி அணிந்து வந்து கச்சேரி
செய்து ஆண்-பெண் சமத்துவத்தை 
நிலைநாட்ட முற்படலாம்.

ஜீன்ஸ் அணிந்து வந்ததால் உலக சாம்பியன் 
கார்ல்சனுக்கே  அமெரிக்காவில் தடை என்ற 
செய்தியைப் படித்து அரண்டு போயிருக்கக்
கூடும் நமது பூர்ஷ்வா இசைமேதை. 
***************************************************

   

 
  
 

       

சனி, 4 ஜனவரி, 2025

உலகப்புகழ் பெற்ற இந்தியப் பெண்மணி!
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------
Indian woman's Rapid CHESS champion) 
சதுரங்க வீராங்கனை கோனேரு ஹம்பியை 
அழைத்துப் பாராட்டி உள்ளார் பிரதமர் மோடி.
உலக சதுரங்க சம்மேளனம் (FIDE) நடத்தும் 
அதிவிரைவு சதுரங்கப் போட்டியில் (Rapid Chess Tournament)  
பெண்கள் பிரிவில் 2024ஆம் ஆண்டிற்கான உலக 
சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் ஹம்பி. 

இவ்வாறு கோனேரு ஹம்பி உலகப்புகழ் பெற்ற 
பெண்மணியாகி விட்டார். இதனால் பிரதமரின் 
பாராட்டு என்ற கெளரவத்தைப் பெறுகிறார்.

ஆத்திர மாநிலம் குடிவாடா நகரைச் சேர்ந்த
தெலுங்குப் பெண்மணியே கோனேரு ஹம்பி.  
இவரின் தந்தையார் வேதியியல் பேராசிரியர்.
ஹம்பிக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் 
இவரின் கணவர் ஒரு software professional.  

இந்திய சதுரங்க வீராங்கனைகளில் முதலிடத்தில்  
இருப்பவர் கோனேரு ஹம்பி. நியூயார்க்கில் 
அண்மையில் டிசம்பர் 2024ல் நடைபெற்ற 
அதிவிரைவு சதுரங்கப் போட்டியில்  பெண்கள் 
பிரிவில் (Rapid Chess World Champion Women) 
உலக சாம்பியன் பட்டம் வென்றார் கோனேரு 
ஹம்பி. உலக சாம்பியன் பட்டத்தை இவர்
இரண்டாவது முறையாக வெல்கிறார். 2019ல் 
ஏற்கனவே Rapid Chess சாம்பியனாக வெற்றி 
பெற்றவர் ஹம்பி. பிரசவம், குழந்தைப்பேறு
காரணமாக சில ஆண்டுகள் விளையாடாமல் 
இருந்த அவர் மீண்டும் விளையாடத் தொடங்கி 
சாம்பியன் ஆகி உள்ளார். 
    
உலக சதுரங்க சம்மேளனம் சதுரங்கப் போட்டிகளை  
மூன்று வகையாக  (Three Formats) நடத்துகிறது.
1) Classical 2) Rapid 3) Blitz.

இமமூன்று வகைப் போட்டிகளிலும் ஆட்டத்திற்கு  
அனுமதிக்கப்படும் நேரம் மாறுபடும்.
கிளாசிக்கல்: ஒவ்வொரு பிளேயருக்கும் 
முதல் 40 நகர்த்தல்களுக்கு 90 நிமிடங்கள் 
வழங்கப்படும். தொடர்ந்து 30 நிமிடங்கள் 
வழங்கப்படும். அதற்குள் ஆட்டத்தை முடிக்க 
வேண்டும்.அத்துடன் ஒரு நகர்த்தலுக்கு 
30 வினாடி இன்கிரிமெட் வழங்கப்படும்.

Rapid: ஒவ்வொரு பிளேயருக்கும் 15 நிமிடங்கள் 
வழங்கப்படும். அத்துடன் ஒவ்வொரு பிளேயருக்கும் 
ஒரு நகர்த்தலுக்கு 10 வினாடி இன்கிரிமென்ட் 
வழங்கப்படும்.

Blitz: ஒவ்வொரு பிளேயருக்கும் 3 நிமிடங்கள் 
வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு பிளேயருக்கும் 
ஒரு நகர்த்தலுக்கு 2 வினாடி இன்கிரிஎண்ட் 
வழங்கப்படும்.      

2013ல் சென்னையில் நடைபெற்ற உலக சாம்பியன் 
போட்டியில் விஸ்வநாதன் ஆனந்தைத் தோற்கடித்து 
மாக்னஸ் கார்ல்சன் சாம்பியன் ஆனார். இதுதான் 
கிளாசிக்கல் ஃபார்மட்.    

அன்மையில் டிசம்பர் 2024ல் சிங்கப்பூரில் நடைபெற்ற 
உலக சாம்பியன் போட்டியில் சீன வீரர் 
டிங்  லிரென்-ஐ (Ding Liren) தோற்கடித்து இந்திய 
வீரர் குகேஷ் தொம்மராஜ் (Gukesh Dommaraju)  
வெற்றி பெற்றாரே, அது Classical Format.

Rapid Chess formatல் பொதுப்பிரிவில் (open) ரஷ்ய 
இளம் வீரர் பதினெட்டே வயதான வோலோடர் 
முர்சின் (Volodar Murzin) சாம்பியன் ஆகி உள்ளார். 
பெண்கள் பிரிவில் 37 வயதிலும் தனது ஆட்டத் 
திறனைத் தக்க வைத்துக் கொண்டு சாம்பியனாகி 
உள்ளார் கோனேரு ஹம்பி.  

உலக Blitz Chess  போட்டியில் மாக்னஸ் கார்ல்சன், 
ரஷ்ய வீரர் அயான் நெப்போ ஆகிய இருவரும் 
கூட்டாக உலக சாம்பியன் பட்டத்தைப் பெற்றனர்.
இது பொதுப்பிரிவு (open section) சாம்பியன் போட்டியின் 
முடிவு.
        
Blitz Chess மகளிர் பிரிவில்  சீன வீராங்கனை 
ஜூ வெஞ்சன் ( Ju Wenjun)  உலக சாம்பியன் 
ஆகியுள்ளார்.

மோடி அரசுக்கும் தமிழகப் பெண்கள் 
அமைப்புகளுக்கும் நியூட்டன் அறிவியல் மன்றம் 
பின்வரும் வேண்டுகோளை விடுக்கிறது. 

பெண்களும் பெண்ணுரிமை அமைப்புகளும் 
கோனேரு ஹம்பியை ஒரு iconic figureஆக 
பெண்களிடமும் மக்களிடமும் எடுத்துச் 
செல்ல வேண்டும்.

கோனேரி ஹம்பி 2007ல் பத்மஸ்ரீ விருது பெற்றார்.
மோடி அரசு அவருக்கு பத்மபூஷண் விருது  
வழங்க வேண்டும்.
************************************************



வியாழன், 2 ஜனவரி, 2025

கேம் தியரி என்னவெல்லாம் செய்யும்?
தமிழக அரசியலில் முதன் முதலாக 
கேம் தியரியைப் பிரயோகித்த அண்ணாமலை!
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------------------
ஜவகர்லால் நேரு, சாஸ்திரி போன்ற பிரதமர்கள் 
காலத்தில் இந்தியத் தேர்தலானது பத்தாம் 
பசலித் தனமாகவே இருந்து வந்தது.

இந்தியத் தேர்தல்களை அறிவியல்படுத்த 
வேண்டும் என்று முயன்றவர் இந்திரா காந்தி 
அம்மையார்.EVM எனப்படும் மின்னணு 
வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாகத் தேர்தல் 
நடத்தும் முறையைக் கொண்டு வந்தவர் அவர். 1982ல் 
கேரளத்தில் பரவூர் சட்ட மன்றத் தொகுதிக்கு
நடந்த இடைத்தேர்தலில் முதன் முதலாக EVM 
பயன்படுத்தப் பட்டது. 

இந்தியத் தேர்தல்களை அறிவியல்மயம் ஆக்கும் 
செயல்களைத் தொடங்கி வைத்த இந்திராகாந்தி 
அம்மையாரின் காலில் விழுந்து வணங்குகிறேன். 

1984ல் இந்தியாவில் மக்களவைத் தேர்தல்கள் 
நடந்தன. இந்திரா காந்தி படுகொலைக்குப் 
 பின்னர் நடந்த இத்தேர்தலில் காங்கிரஸ்
வரலாறு காணாத பெருவெற்றியைப் பெற்றது.
இந்தத் தேர்தலில் இந்திய வாக்காளர்களுக்கு 
Psephologyஐ அறிமுகப் படுத்தினார் பிரணாய் ராய். 
ஸெபாலலஜி என்பது தேர்தல் முடிவுகளை 
முன்கூட்டிக் கணிக்கும் ஒரு அறிவியல். 

இந்தியத் தேர்தல்களில் பிரயோகிக்கப் பட்ட 
ஸெபாலஜி இரண்டாவது அறிவியல் 
நடவடிக்கை ஆகும். Opinion pollம் Exit pollம்   
இல்லாத இன்றைய தேர்தல்களை நாம் 
நினைத்துப் பார்க்க முடியுமா?

இந்தியத் தேர்தல்களில் மேற்கொள்ளப்பட்ட 
மூன்றாவது அறிவியல் நடவடிக்கை என்ன?
அரசியல் கட்சிகளின் சார்பாக தேர்தல் வியூக 
நிபுணர்கள் தேர்தல்களை பற்றி முடிவு 
செய்வது. பிரசாந்த் கிஷோர் என்னும் 
தேர்தல் வியூக நிபுணர் திமுகவுக்கு தேர்தல் 
வியூகம் அமைத்துக் கொடுத்ததை நாம் அறிவோம்.   

மேற்கூறிய  மூன்று பிரதான அறிவியல் 
நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்தியத் 
தேர்தல் அரசியலில் நான்காவதாக Game theoryஐப் 
பிரயோகிக்கிறார் பாஜக தலைவர் 
அண்ணாமலை.

அண்ணா பல்கலை மாணவிக்கு இழைக்கப்பட்ட 
பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து   

தன்னை சவுக்கால் அடித்துக் கொள்ளும் போராட்டம், 
செருப்பு அணியாமல் இருத்த ஆகிய தொடர் 
அதிரடிகளை அறிவித்தார் அண்ணாமலை.
இது சரியா, தப்பா? அண்ணாமலை அவர்கள் 
இப்போராட்டங்களலின் மீது Game theoryயைப் 
பிரயோகித்து நாஷ் சமநிலை கண்டறிந்து 
optimum benefit கிடைப்பது உறுதி செய்து 
அப்போராட்டங்களை அறிவித்துள்ளார் அண்ணாமலை.    


1) EVMகள் (இந்திரா காந்தி) 
2) opinion polls (பிரணாய் ராய்) 
3) தேர்தல்களின் வெற்றி தோல்வியை கட்சித் 
தலைவர்களுக்குப் பதிலாக தேர்தல் வியூக 
நிபுணர்கள் முடிவு செய்வது (பிரசாந்த் கிஷோர்) 
4) Game theory (அண்ணாமலை)
ஆகிய நான்கும்  இல்லாமல் இந்தியத் தேர்தல்கள் 
இனி இல்லை.

Game theory என்ற ஒன்றை உருவாக்கி அதை
 நிரூபித்துக் காட்டியவர் ஜான் வான் நியூமேன் 
என்னும் அமெரிக்க இயற்பியலாளர். 
Game theoryயை துல்லியப் படுத்தும் பொருட்டு 
நாஷ் சமநிலை (Nash equilibrium) என்பதை  
உருவாக்கியவர் அமெரிக்க கணித நிபுணர் 
ஜான் நாஷ். Gametheroy பற்றியும் நாஷ் சமநிலை 
பற்றியும் ஒன்றும் தெரியாதவர்களால் 
இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள இயலாது.
(நாஷ் சமநிலை குறித்தும் Game theory குறித்தும் 
அறிவியல் ஒளி ஏட்டில் முன்பு நான் எழுதிய 
கட்டுரைகளைப் படிக்கலாம்).

அறிவியல் சிக்கல்களுக்கு மட்டுமே அறிவியலால் 
தீர்வு வழங்க முடியும் என்றும் சமூகவியல் 
சிக்கல்களுக்கு அறிவியலால் தீர்வு வழங்க 
இயலாது என்றும் ஒரு தப்பெண்ணம் (prejudice)
சமூகத்தில் நிலவுகிறது. Game theoryயின் 
பிரயோகத்தைத் தொடர்ந்து மேற்குறித்த 
தப்பெண்ணம் மறையத் தொடங்கி விட்டது.

சமூகவியல் சிக்கல்களுக்கும் துல்லியமான 
தீர்வுகளை சமகால அறிவியல் வழங்குகிறது.    

மூன்றாம் உலகப்போர் வருமா?
அணுஆயுதப்போர் வருமா?
உக்ரைன் மீது ரஷ்யா அணுகுண்டு வீசுமா?
போன்ற பல்வேறு கேள்விகள் சமூகவியல் 
சிக்கல்களை உணர்த்துபவை. இவற்றுக்கு 
Game theory மூலம் அறிவியல் தீர்வு வழங்குகிறது.

அண்ணாமலையின் கேம் தியரி பிரயோகத்தை 
அடுத்து நான் மூன்று கட்டுரைகளை எழுதி 
உள்ளேன். அவற்றை போலி முற்போக்குகள்,
போலி நக்சல்பாரிகள், திராவிடக் கசடுகள் 
ஆகியோரால் புரிந்து கொள்ள முடியவில்லை 
என்பதை நான் உணர்கிறேன்.    

 தமிழ் வாசகச் சூழலில் Game theory, நாஷ் சமநிலை 
குறித்து வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவன் 
நான் மட்டுமே; நான் ஒருவனே.

1984ல் Psephology குறித்து நாபி பேசியபோது யாராலும் 
புரிந்து கொள்ள உடியவில்லை. கிட்டத்தட்ட 
அதே நிலைதான் தற்போது Game theoryயிலும் 
நீடிக்கிறது. 
****************************************************